Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பதவியேற்கும் நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பங்கேற்பது உறுதி: மோடியுடன் தனியாகவும் சந்திப்பு!

Posted: 22 May 2014 11:59 PM PDT

Rajabaksa

Rajabaksaநரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. வரும் 26ம் திகதி நடக்கவுள்ள நிகழ்வில் மகிந்த ராஜபக்ச தாம் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இந்த அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்கவில்லை. அதேவேளை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க வைக்கும் முயற்சிகளில் பாஜக தலைமைப்பீடம் ஈடுபட்டுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, நரேந்திர மோடி வரும் 26ம் திகதி இராப்போசன விருந்தளிக்கவுள்ளார். பதவியேற்புக்கு மறுநாளான, வரும் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை, வெளிநாட்டுத் தலைவர்களுடன் நரேந்திர மோடி தனித்தனியாக சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். சம்பிரதாயபூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை விஜயம் செய்ய தயாராக இருக்கும் சீன ஜனாதிபதி!

Posted: 22 May 2014 11:53 PM PDT

she-jinpin

she-jinpinசீன ஜனாதிபதி ஷி ஜின்பின் இலங்கை விஜயம் செய்ய தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார். சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீன ஜனாதிபதியை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார். கடந்த 28 வருடங்களில் சீனாவின் எந்த ஆட்சித் தலைவரும் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை எனவும் இறுதியாக 1986 ஆம் ஆண்டு சீன அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீன ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பில் இருக்கும் நேர்மையை தான் உணர்ந்து கொண்டதால், விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக சீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விசா­ரணை நடத்­து­வ­தற்­கான குழு­வினை நிய­மிக்கும் பணியில் நவி­பிள்ளை தீவிரம்!

Posted: 22 May 2014 11:49 PM PDT

navi_pillay

navi_pillayஇலங்கை தொடர்பில் ஐநா. மனித உரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமைய விசா­ரணை நடத்­து­வ­தற்­கான குழு­வினை நிய­மிக்கும் பணியில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ளார். அடுத்­த­ மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் விசா­ரணை குழு தொடர்­பான அறி­விப்பை நவ­நீ­தம்­பிள்ளை வெளியி­ட­வுள்­ள­தாக இரா­ஜ­தந்­தி­ர­ வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்கு இலங்கை ஒத்­து­ழைக்­க ­வேண்­டு­மென்று மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் சில தினங்­க­ளுக்கு முன்னர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. இதேபோல் விசா­ரணை குழு தொடர்­பான அறி­விப்பை நவ­நீ­தம்­பிள்ளை வெளியிட்­டதும், இந்த விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு அமெ­ரிக்கா, கனடா, பிரிட்டன் உட்­பட ஐரோப்­பிய நாடுகள் இலங்­கை­யிடம் கோர­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இலங்கை மீதான விசா­ர­ணைக்கு தேவை­யான நிதி­யினை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை பெற்­றுக்­கொண்­டுள்ளார். இத­னை­ய­டுத்தே விசா­ர­ணைக்­கான குழு­வினை நிய­மிக்கும் நட­வ­டிக்­கையில் அவர் ஈடு­பட்­டுள்ளார். விசா­ர­ணைக்­கு­ழுவில் இடம்பெற­வுள்ள உறுப்­பி­னர்­களை தெரி­வு­ செய்யும் நட­வ­டிக்கை தற்­போது இடம் பெற்று வரு­வ­தாக இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. இதே­வேளை யுத்­தத்தின் இறு­திக் ­கட்­டத்தில் இரண்­டு­ த­ரப்­பி­ன­ராலும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. விசா­ரணை யோச­னைக்கு இணங்க முடி­யாது என்ற அர­சாங்­கத்தின் முடிவு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யென்று மனித உரிமை பேரவை தெரி­வித்­துள்­ளது. ஆனாலும் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் உரை­யாற்­றிய அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அறிவித்தமையே எமது நிலைப்பாடாகும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

போலிஸ் வேடமிட்டு மக்களிடம் பணம் கொள்ளையிட்ட நபர்கள் கைது!

Posted: 22 May 2014 11:44 PM PDT

arrest

arrestபோலிஸ் வேடமிட்டு மக்களிடம் பாரியளவில் பணம் கொள்ளையிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடீஸ்வர வர்த்தகர்களின் மகன்கள் இருவரும் முன்னாள் போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பணத்தைக் கொள்ளையிட்டு கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு கோடீஸ்வர வர்த்தகரின் மகன் கொள்ளையிடுவது தொடர்பில் அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் அவரது தாய் அறிந்து கொண்டு அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக உயர் போலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். செல்வந்த வர்த்தகர்களை அச்சுறுத்தி பல லட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று அடையாள அணி வகுப்பில் நிறுத்தப்பட உள்ளனர். சந்தேக நபர்களின் வீடுகளிலிருந்து பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியலில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி சென்று மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களை ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பரமக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மீனவர்கள் கன்னியாகுமரி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டு, போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்படடுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் வாக்குரிமை ரத்து செய்ய சாத்தியம்?

Posted: 22 May 2014 11:38 PM PDT

Sarath-pon-seko

Sarath-pon-sekoஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் வாக்குரிமை ரத்து செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா உறவினர் ஒருவரின் விலாசத்தின் ஊடாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொண்டுள்ளார். கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள விலாசத்தில் சரத் பொன்சேகா வாக்காளர் பட்டியலில் தம்மை பதிவு செய்து கொள்ளவில்லை. இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறான நிலைமைகளின் போது நடவடிக்கை எடுக்க போதியளவு அதிகாரம் தமக்கு கிடையாது என மஹிந்த தேசப்பிரிய நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நேபாள நாட்டின் இமயமலை பகுதியில் பனிப்பாறைகளுக்கு இடையே சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!

Posted: 22 May 2014 11:32 PM PDT

Mount-Lhotse

Mount-Lhotseஅமெரிக்காவை சேர்ந்த மலையேறும் வீரர் ஒருவர் நேபாள நாட்டின் இமயமலை பகுதியில் பனிப்பாறைகளுக்கு இடையே சிக்கி ஆறுமணி நேரம் உயிருக்கு போராடி உள்ளார். அவரை நேபாள நாட்டு மீட்புப்படையினர் பலத்த காயங்களுடன் மீட்டுள்ளனர். அமெரிக்காவின் Western Kentucky University என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த John All என்ற மலையேறும் பயிற்சி பெற்ற வீரர் நேற்று காலை நேபாள நாட்டின் இமயமலை பகுதியில் மலையேறினார். அப்போது எதிர்பாராத வகையில் 22 மீட்டர் ஆழமுள்ள ஒரு பொந்தில் சிக்கிக்கொண்டார். கை மற்றும் கால்களில் எலும்புகள் உடைந்து உருக்குலைந்த கிடந்த அவர் ஆறு மணிநேரத்திற்கு பின்னர் மீட்புப்படையினர்களின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்டார். தான் உயிரோடு மீட்கப்படுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்றும், கூறினார். கடந்த மாதம் 16 மலையேறும் வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும்போது ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்ததால், நேபாள அரசு எவரெஸ் சிகரத்திற்கு செல்லும் வழியை மூடிவிட்டது. இதனால் John All, மற்றும் அவரது குழுவினர் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள Mount Lhotse என்ற மற்றொரு சிகரத்தில் ஏற முயற்சித்தனர். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்றாரியோவின் பெரும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்கும்படி கனடா பரிந்துரை!

Posted: 22 May 2014 11:25 PM PDT

traffic

trafficஒன்றாரியோவின் பெரும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை அதிகரிப்பது வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்கு பெரிதும் வழிவகுக்கும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது 100 கிலோ மீற்றராகவிருக்கின்ற வேகத்தின் அளவினை 120 அல்லது 130 கிலோ மீற்றராக மாற்றும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட விடையம் சம்பந்தமாக வியாழக்கிழமை , கிட்டத்தட்ட 23,000 கையொப்பங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று தயாராகியிருப்பதாகவும் தெரிகிறது. கைத்தொழில் மயமாக்கப்பட்டிருக்கின்ற நாடுகளில் கனடாவில் மட்டுமே குறைந்தளவு வேகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது எனவும், இத்தாலி, பெல்ஜியம், சுவிடன், மற்றும் அமெரிக்காவிலுள்ள ரெக்சஸ் பகுதிகள் ஆகிய இடங் களில் ஒன்றாரியோவிலும் பார்க்க அதிகளவில் வாகனங்களின் வேகங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிகிறது. ஜேர்மனியில் 100,000 கார்களுக்கு மரணமடைபவர்கள் 4.7 சதவீதமாக இருக்கின்றது எனவும், கனடாவில் 100,000 கார்களுக்க 4.7 சதவீதமான மரணங்கள் நிகழ்கின்றன WHO என தெரிவிக்கின்றது. ஓன்றாரியோவில் வருடாவருடம் 750,000 வாகனச் சாரதிகள் வேகமாக வாகனத்தைச் செலுத்தியமைக்காக ரிக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடிய சிறுவர்கள் செயற்பாட்டு நடவடிக்கையில் D- மதிப்பை பெற்றுள்ளது!

Posted: 22 May 2014 11:14 PM PDT

children

childrenகனடிய சிறுவர்கள் போதிய அளவு உடற்செயற்பாடுகளை பெறுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு நேரத்தை திரையை பார்ப்பதில் செலவிடுவதால் உடற்பருமன் விகிதங்கள் உயரந்து கொண்டு போகின்றன. உடற்செயற்பாட்டை பொறுத்தமட்டில் கனடா D- பெறுகின்றதென Active Healthy Kids Canada வைச் சேர்ந்த ஜென் கொயிவ் தெரிவித்துள்ளார். கனடிய உடற்செயற்பாட்டு வழிகாட்டிகள் 12-17வயதிற்குட்பட்ட பிள்ளைகள் தினமும் 60 நிமிடங்கள் வரை பயற்சி செய்ய வேண்டும் ஆனால் சராசரியாக குறைவாகவே காணப்படுவதாக கூறியுள்ளனர். மேலும் 4-சதவிகிதமான பிள்ளைகளே தேவையை பூர்த்தி செய்கின்றனரெனவும் தெரியவந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

250-க்கும் அதிகமான அமெரிக்கா அரங்குகளில் கோச்சடையான்: 100 அரங்குகளில் இன்று சிறப்புக்காட்சி!

Posted: 22 May 2014 02:07 AM PDT

kochadaiyaan

kochadaiyaanஅமெரிக்காவில் 250க்கும் அதிகமான அரங்குகளில் ரஜினியின் கோச்சடையான் படம் நாளை வெளியாகிறது. இவற்றில் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் ஒரு நாள் முன்பாக, இன்று இரவே சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதுவரை எந்த வெளிநாட்டு பிறமொழிப் படங்களும் அமெரிக்காவில் இவ்வளவு அரங்குகளில் வெளியானதில்லை என்று கோச்சடையானை வெளியிடும் அட்மஸ் எண்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த 9-ம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டபோது கோச்சடையான் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளுக்கு 200 திரையரங்குகள் வரை ஒதுக்கியிருந்தனர். ரிலீஸ் தேதி தள்ளிப் போய், நாளை வெளியாகும் கோச்சடையானுக்கு கூடுதல் அரங்குகள் கிடைத்துள்ளன பல நாடுகளில் குறிப்பாக நாளை எக்ஸ் மேன் ஹாலிவுட் படம் வெளியாக உள்ளநிலையில் இவ்வளவு கூடுதல் அரங்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரு வெளிநாட்டுப் படத்துக்கு 200 தியேட்டர்கள் கிடைத்ததே அதிகம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 250-ஐத் தாண்டியிருப்பது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஷாருக்கான் உலகின் இரண்டாவது பணக்கார நடிகர் ! வெல்த் எக்ஸ் நிறுவனம் பட்டியல் வெளியீடு

Posted: 22 May 2014 01:56 AM PDT

shahrukh-khan

shahrukh-khanஉலகின் இரண்டாவது பெரிய பணக்கார நடிகர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்றுள்ளார். வெல்த் எக்ஸ் நிறுவனம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களில் பணக்காரர்களாக உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் தான். அந்த பட்டியலின் விவரத்தை பார்ப்போம், ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ஜெர்ரி சீன்ஃபீல்டு தான் உலகின் பணக்கார நடிகர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு 820 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். உலகின் இரண்டாவது பணக்கார நடிகர் ஷாருக்கான். நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர் என்று பல முகம் கொண்ட ஷாருக்கின் சொத்து மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஹாலிவுட் ஹீரோ டாம் க்ரூஸ் உலகின் மூன்றாவது பணக்கார நடிகர். அவரிடம் 480 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. ஹாலிவுட் நடிகர்களான டெய்லர் பெர்ரி மற்றும் ஜானி டெப் ஆகியோர் உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் 4 மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்கள் இருவரிடமும் தலா 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. ஹாலிவுட் நடிகர்களான ஜாக் நிக்கோல்சன்(400 மில்லியன் டாலர்), டாம் ஹேன்க்ஸ்(390 மில்லியன் டாலர்) மற்றும் கிளின்ட் ஈஸ்ட்வுட்(370 மில்லியன் டாலர்) ஆகியோர் 6, 7 மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் சம்மன்: மான் கராத்தே அவதூறு வழக்கு!

Posted: 22 May 2014 01:46 AM PDT

sivakarthikeyan

sivakarthikeyanமான் கராத்தே படத்தில் குத்துச்சண்டைப் போட்டியை அவதூறாகச் சித்தரித்ததாகக் கூறி தொடரப்பட்டுள்ள வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது, தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி வருகின்றேன். பல கட்டுப்பாடுகள், விதிமுறைகள், மரபுகளைப் பின்பற்றித்தான் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளியான 'மான் கராத்தே' என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அதில், இந்த கவுரவமிக்க குத்துச்சண்டைப் போட்டியை கேலி செய்யும் விதமாக படமாக்கியுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனும், நடிகர் வம்சி கிருஷ்ணாவும் குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வருகின்றன. அதில், இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்றால், உன் தோழியை என்னுடன் அனுப்பிவைக்க வேண்டும் என்ற வசனமும், வெற்றி பெறுவதற்காக எதிராளியிடம் கெஞ்சுவது போல காட்சியும் இடம் பெற்றுள்ளன. அதேபோல சர்வதேச அளவில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பவர் போதை மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிகள் உள்ளன. ஆனால், இந்தப் படத்தில் குத்துச் சண்டைப் போட்டியையே மிக மோசமாகச் சித்தரித்துள்ளனர். எனவே, இந்த படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ், வசனம் எழுதி இயக்கிய திருமுருகன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், வம்சி கிருஷ்ணா ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, வருகிற 30-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகயேன், திருகுமரன், வம்சி கிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்! தமிழ் சினிமா தலைப்புதாங்க!!

Posted: 22 May 2014 01:40 AM PDT

tamiluku-en-ondrai-azhuthavum

tamiluku-en-ondrai-azhuthavumதமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகிறது. வி.எல்.எஸ். ராக் சினிமா சார்பாக வி.சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ராம் பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணனிடம் இணை இயக்குனராய் பணிபுரிந்து, பல விளம்பர படங்களை இயக்கியவர் ராம் பிரகாஷ் ராயப்பா. இப்படத்திற்கு தமன் இசையமைக்க, தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்கிறார். இப் படம் குறித்து இயக்குனர் பிரகாஷ் நம்மிடம் கூறியதாவது: "பூமியை நோக்கி வரும் காந்த புயலால் தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இதில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பில் இருந்து அனைவரும் எவ்வாறு மீண்டு வந்தனர் என்பதுதான் படத்தின் கதை. இன்று நாம் முழுக்க முழுக்க தகவல் தொடர்பை மட்டும்தான் நம்பியுள்ளனர். அது எப்படி நம்மை பாதிக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன். கதாநாயகனாக அட்டக்கத்தி தினேஷ், நகுல் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக பிந்து மாதவி, ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா கொல்கத்தாவைச் சேர்ந்த புதுமுகம். எதிர்நீச்சலில் சிவகார்த்தியேன் நண்பனாக வரும் சதீஷ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதல், த்ரில்லர், சஸ்பென்ஸ், ஆக்சன் என ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து கலவைகளும் படத்தில் உள்ளது. ஆனாலும் மற்ற கமர்சியல் படங்களை போல் அல்லாது இப்படம் சிறிது வித்தியாசப்படும். இந்தப் படத்தில் எனக்கு சவாலாக இருந்ததே, இரண்டு நாயகர்களைச் சேர்த்து படம் பண்ணுவதுதான். இந்த மாதிரி படம் பண்ணும்போது இவர் இருந்தால் அவர் இல்லை, அவர் இருந்தால் இவர் இல்லை என்று சிக்கலாகப் போய்விடும். பல ஹீரோக்களிடம் பேசி, கடைசியில் நகுலும் தினேஷூம் செட் ஆனார்கள். தினேஷ் இந்தப் படத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். காரணம், இந்த ஷூட்டிங்கின்போதுதான் அவர் காலில் அடிபட்டு பத்து நாட்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டி வந்தது", என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு!

Posted: 22 May 2014 01:32 AM PDT

Nartham-pazham

Nartham-pazhamபழங்கள் மனிதனுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கக்கூடியது. இயற்கையின் கொடைகளில் பழங்கள்தான் உணவுவகைகளில் முதலிடம் வகிக்கிறது. அடியார்கள் பலர் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். சமைத்தால் சில சத்துக்கள் அழிந்துபோகும். ஆனால் பழங்கள் மூலம் சத்துக்கள் அனைத்தும் மனித உடலுக்கு அப்படியே கிடைக்கின்றன. வளரும் குழந்தைகள் முதல் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பழங்களை அதிகம் சாப்பிட்டே ஆகவேண்டும். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் நார்த்தம் பழம் பற்றி அறிந்துகொள் வோம். எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக சாத்துகுடி அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். பழத்தின் உள்ளே 8 அல்லது 10 சுளைகள் காணப்படும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது. பழங்காலத்தில் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் கொல்லைப்புறத்திலும் நார்த்தை, முருங்கை, எலுமிச்சை, தென்னை மரங்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்குமேல் வாழக்கூடியவை. நார்த்தம் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம். பித்தம் தணிய பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். உடல் சூடு தணிய உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இரத்தம் சுத்தமடைய இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். உடல் வலுப்பெற நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். நோயுற்றவர்கள் தேற நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது. இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும். வயிற்றுப்பொருமல் நீங்க சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். சுகமான பிரசவம் ஆக காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் ஆகும். · களைப்பு நீங்கும் · வாந்தி, மயக்கத்தைப் போக்கும். · மூலத்தைக் கட்டுப்படுத்தும். · சீரண சக்தியை அதிகரித்து அஜீரணக் கோளாறுகளை நீக்கும். · தாது கெட்டிப்படும். · வாய் கசப்பைப் போக்கும். · உடல் நமைச்சலைப் போக்கும். · மலச்சிக்கல் நீங்கும் · நீர்க்கடுப்பு குணமாகும். · கண்பார்வை தெளிவுபெறும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சுகம் தரும் சோம்பு!!

Posted: 22 May 2014 01:24 AM PDT

Sombu

Sombuஅறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.கடந்த இதழில் சீரகத்தின் மருத்துவப் பயன்களை அறிந்தோம். இந்த இதழில் சோம்பின் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.சோம்புபொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. யோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்போனமுறு காசம் பீலிகமிரைப்-பீன உரைசேர்க்கின்ற வாதமு போஞ் சீர்பெரிய சீரகத்தால்மூக்குநோ யில்லை மொழி- அகத்தியர் குணபாடம்செரிமான சக்தியைத் தூண்டஎளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.குடல்புண் ஆறசாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.வயிற்றுவலி, வயிற்று பொருமல்அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.கருப்பை பலம்பெறகருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.ஈரல் பாதிப்பு நீங்கஉடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும். இருமல் இரைப்பு மாறநாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும். சுரக் காய்ச்சல்அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பசியைத் தூண்டபசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.இப்போது தெரிகிறதா சோம்பின் மகத்துவம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

லெனோவா வைப் எக்ஸ் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு!

Posted: 22 May 2014 01:15 AM PDT

lenovo-vibe-x

lenovo-vibe-xலெனோவா நிறுவனம் தனது இடைப்பட்ட ஸ்மார்ட்போனான வைப் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைத்து தற்போது ரூ.22,999 விலையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லெனோவா தனது முதல் வைப் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் ரூ.25,999 (ரூ. 3,000 விலை குறைப்பு) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போனில் பிரீமியம் பாலிகார்பனேட் உடற்பாகங்கள் மற்றும் ஒரு மேம்பட்ட மோல்ட், லேசர் என்க்ரேவ்ட் (engraved) 3D டேக்டில் ஃபினிஸ் (tactile finish) கொண்டுள்ளது. சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக 6.9mm அளவிடும் சூப்பர் தின் ஃப்ரேம் (thin frame) உள்ளது. இது 121 கிராம் எடையுடையது. வைப் எக்ஸ் முனைகளில் கார்னிங் கொரில்லா கண்ணாடி 3, 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் 440ppi பிக்சல் அடர்த்தி உள்ளது. போனில் 1.5GHz குவாட் கோர் மீடியாடெக் ( MTK 6589T) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, ரேம் 2GB உள்ளது மற்றும் 16GB உள்ளடிக்கிய சேமிப்பு வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ் இயங்குகின்றது. லெனோவா வைப் எக்ஸ் எல்இடி ப்ளாஷ் மற்றும் பேக் இலுமினேடட் (back illuminated) சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா கொண்டுள்ளது. வைட் ஆங்கிள் 84 டிகிரி லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இது Wi-Fi, ப்ளூடூத், AGPS மற்றும் 3G இணைப்பு விருப்பங்கள் உள்ளன. வைப் எக்ஸ் 2,000 mAh பேட்டரி ஆதரவு உள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் வழக்கமான சிம் அளவுக்கு பதிலாக மைக்ரோ சிம் கார்டு துணைபுரிகிறது. இது 144x74x6.9mm மெஷர்ஸ் உள்ளது. செவ்வாய்க்கிழமை, லெனோவா மேலும் வைப் எக்ஸ் மற்றும் வைப் இசட் ஸ்மார்ட்ஃபோன்களில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் அப்டேட் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. லெனோவா வைப் எக்ஸ் முக்கிய குறிப்புகள்: 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே, 440ppi பிக்சல் அடர்த்தி, 1.5GHz குவாட் கோர் மீடியா டெக் ( MTK 6589T) ப்ராசசர், ரேம் 2GB, 16GB உள்ளடிக்கிய சேமிப்பு, 13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற எதிர்கொள்ளும் கேமரா, வைட் ஆங்கிள் 84 டிகிரி லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, Wi-Fi, ப்ளூடூத், AGPS, 3G, 121 கிராம் எடை, ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ், 2,000 mAh பேட்டரி.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: அனுப்பியவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை !

Posted: 22 May 2014 12:45 AM PDT

obama

obamaஅமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பியை சேர்ந்த ஜேம்ஸ் எவரெட் டட்ஸ்கி (41) என்பவர் அதிபர் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விஷதன்மை வாய்ந்த 'ரிஷின்' என்ற ரசாயன பொருள் தடவிய கடிதத்தை அனுப்பியிருந்தார். ஆனால் இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார். ஜேம்ஸ் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் குற்றவாளி என கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முந்தினம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை என ஜேம்ஸ்க்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விமானத்தில் First Class எப்படி இருக்கும் தெரியுமா?

Posted: 22 May 2014 12:39 AM PDT

emirates-first-class

emirates-first-class

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐந்தறிவு ஜீவன்களின் மெய்சிலிர்க்க வைக்கும் நட்பு!

Posted: 22 May 2014 12:33 AM PDT

Blue-The-Kangaroo-Plays

Blue-The-Kangaroo-Plays

This posting includes an audio/video/photo media file: Download Now

பாட்டை நிறுத்த பூனை படும் அவஸ்தையைப் பாருங்க… சிரித்து சிரித்து நொந்துடுவீங்க!

Posted: 22 May 2014 12:28 AM PDT

Demon-cat-interfering-let-it-go-act!

Demon-cat-interfering-let-it-go-act!

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓடும் காருக்கு மேலாக ஸ்கேட் போட்டில் அசத்தும் இளைஞர்!

Posted: 22 May 2014 12:25 AM PDT

Tony-Hawk-Jumps-Moving-MINI-Hardtop

Tony-Hawk-Jumps-Moving-MINI-Hardtop

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™