மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சரத்யாதவ் மீண்டும் பா.ஜ.கூட்டணியில் சேருவார்: ராம்விலாஸ் பஸ்வான் கட்சி தகவல்
- நரேந்திர மோடிக்கு ராஜபக்சே நன்றி
- ஆப்கான் தூதரகம் தாக்குதல்: இந்திய தூதரிடம் நிலைமையை கேட்டறிந்தார் மோடி
- மோடி பதவி ஏற்பு விழாவில் நவாஸ் செரீப் பங்கேற்பு
- ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: ராஜ்நாத் சிங்குடன் வைகோ அவசர சந்திப்பு
- கருப்பு பண வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு 1 வாரம் அவகாசம்
- ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் ஓட்டு வாங்கிய கபில்சிபல்
- பாராளுமன்ற கட்டிடத்தில் திடீர் தீ
- காங்கிரஸ் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து: பா.ஜனதா முடிவு
- தெலுங்கானாவில் சீமாந்திரா அரசு ஊழியர்களுக்கு இடமில்லை: சந்திரசேகர ராவ்
- சபாநாயகர் பதவியை ஏற்க அத்வானி தயக்கம்
- கெஜ்ரிவால் இன்று விடுதலை ஆவாரா?
- பட்டப்பகலில் ரூ.25 லட்சம் கொள்ளை: வங்கிக்கு தீ வைப்பு
- அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் ராஜினாமாவை சோனியா நிராகரித்தார்
- தேர்தலில் தோல்வி: ராகுல் விசுவாசிகள் மீது காங். தலைவர்கள் பாய்ச்சல்
- டெல்லியில் நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்
- மோடி பதவி ஏற்பு விழாவுக்கு தீவிரவாதிகள் குறியா?
- சோனியா காந்தியுடன் லல்லு பிரசாத் சந்திப்பு
- நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி வாழ்த்து
- சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் ஐரோன் சர்மிளா மோடியை சந்திக்க விருப்பம்
| சரத்யாதவ் மீண்டும் பா.ஜ.கூட்டணியில் சேருவார்: ராம்விலாஸ் பஸ்வான் கட்சி தகவல் Posted: 23 May 2014 12:15 AM PDT பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பா.ஜனதா– ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிந்தது. பாராளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்து தனித்து நின்ற பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நிதிஷ்குமார் முதல்–மந்திரி பதவியை |
| நரேந்திர மோடிக்கு ராஜபக்சே நன்றி Posted: 23 May 2014 12:10 AM PDT மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 26-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்காக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் |
| ஆப்கான் தூதரகம் தாக்குதல்: இந்திய தூதரிடம் நிலைமையை கேட்டறிந்தார் மோடி Posted: 23 May 2014 12:07 AM PDT ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் 'திடீர்' தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் தூதரகம் மீது சரமாரியாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், தூதரகப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக |
| மோடி பதவி ஏற்பு விழாவில் நவாஸ் செரீப் பங்கேற்பு Posted: 23 May 2014 12:06 AM PDT நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நவாஸ்செரீப் தரப்பில் அதற்கு உடனடியாக எந்த பதிலும் சொல்லப்படவில்லை. எனவே நவாஸ் செரீப் இந்தியா வருவாரா மாட்டாரா என்பதில் சந்தேகம் நிலவியது. |
| ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: ராஜ்நாத் சிங்குடன் வைகோ அவசர சந்திப்பு Posted: 22 May 2014 11:28 PM PDT மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 26-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்காக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. |
| கருப்பு பண வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு 1 வாரம் அவகாசம் Posted: 22 May 2014 11:26 PM PDT கருப்பு பண வழக்குகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு விசாரணைக்குழு அமைக்க மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்து |
| ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் ஓட்டு வாங்கிய கபில்சிபல் Posted: 22 May 2014 11:21 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது. இதனால் ஆ.ராசாவுக்குப் பதில் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக பொறுப்பேற்ற கபில் சிபல் மத்திய அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று மறுத்தார். ஆனால் அதன்பிறகு தான் சி.பி.ஐ. விசாரணையில் பல ஆதாரங்கள் சிக்கி |
| பாராளுமன்ற கட்டிடத்தில் திடீர் தீ Posted: 22 May 2014 11:13 PM PDT புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள ஏ.சி. இயந்திரத்தில் இருந்து உருவான தீயை உடனடியாக மீட்புப் படையினர் அணைத்து, கட்டுப்படுத்தியதால் தீ மற்ற இடங்களுக்கு பரவுவது தவிர்க்கப்பட்டது. |
| காங்கிரஸ் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து: பா.ஜனதா முடிவு Posted: 22 May 2014 10:52 PM PDT பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் இண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் அது எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற சட்டவிதிகள்படி மொத்த எம்.பி.க்களில் 10 சதவீதம் பேர் இருந்தால்தான் அதாவது 54 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.பி.க்களே |
| தெலுங்கானாவில் சீமாந்திரா அரசு ஊழியர்களுக்கு இடமில்லை: சந்திரசேகர ராவ் Posted: 22 May 2014 10:44 PM PDT ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2–ந்தேதி அதிகார பூர்வமாக நாட்டின் 29–வது மாநிலமாக தெலுங்கானா செயல்பட உள்ளது. பிற பகுதியான ராயலசீமா, கடலோர ஆந்திரா இணைந்து சீமாந்திரா மாநிலம் என அமைக்கப்படும். மாநில பிரிவினருக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிர மாக நடந்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகம் உள்பட அரசு ஊழியர்கள் 2 ஆக |
| சபாநாயகர் பதவியை ஏற்க அத்வானி தயக்கம் Posted: 22 May 2014 10:34 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து நரேந்திர மோடி வருகிற 26–ந்தேதி பிரதமராக பதவி ஏற்கிறார். அவருடன் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர், மத்திய மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர். மோடி மந்திரிசபையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ் ஆகிய மூவருக்கும் என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்ற |
| கெஜ்ரிவால் இன்று விடுதலை ஆவாரா? Posted: 22 May 2014 10:26 PM PDT ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த கெஜ்ரிவால் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தியதாக கூறி பா.ஜ.க முன்னாள் தலைவரான நிதின் கட்காரி, அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம் டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, |
| பட்டப்பகலில் ரூ.25 லட்சம் கொள்ளை: வங்கிக்கு தீ வைப்பு Posted: 22 May 2014 09:32 PM PDT யமுனை நதிக்கரையில் உள்ள ஆக்ரா நகரில் 'விஜயா வங்கி'யின் கிளை ஒன்று உள்ளது. நேற்று உணவு இடைவேளைக்குப் பிறகு இந்த வங்கிக்குள் 6 மர்ம ஆசாமிகள் நுழைந்தனர். மானேஜரை அடித்து, உதைத்து ஒரு அறைக்குள் அடைத்து வைத்த அவர்கள், வங்கியின் இதர பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அசையவிடாமல் செய்தனர். |
| அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் ராஜினாமாவை சோனியா நிராகரித்தார் Posted: 22 May 2014 04:15 PM PDT பாராளுமன்ற தேர்தலில் அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 3 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில முதல்-மந்திரி தருண் கோகாய், தனது பதவியை ராஜினாமா |
| தேர்தலில் தோல்வி: ராகுல் விசுவாசிகள் மீது காங். தலைவர்கள் பாய்ச்சல் Posted: 22 May 2014 03:58 PM PDT பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், துணைத்தலைவர் ராகுல்காந்தியும் பதவி விலக முன்வந்தனர். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி அதை நிராகரித்தது |
| டெல்லியில் நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் Posted: 22 May 2014 02:47 PM PDT நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை அதன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. 543 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தில், அந்தக் கட்சிக்கு 44 எம்.பி.க்கள் மட்டுமே தேர்வாகி உள்ளனர் |
| மோடி பதவி ஏற்பு விழாவுக்கு தீவிரவாதிகள் குறியா? Posted: 22 May 2014 01:43 PM PDT பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த போத் கயா குண்டு வெடிப்பு மற்றும் அக்டோபர் மாதம் பாட்னாவில் நடந்த நரேந்திரமோடி பொதுக்கூட்ட குண்டு வெடிப்பு ஆகியவற்றில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள், நேற்று முன்தினம் ஜார்கண்ட் மாநிலத்தில் பிடிபட்டனர். |
| சோனியா காந்தியுடன் லல்லு பிரசாத் சந்திப்பு Posted: 22 May 2014 12:15 PM PDT பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் நேற்று சந்தித்து பேசினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது |
| நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி வாழ்த்து Posted: 22 May 2014 09:11 AM PDT அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் தற்போது ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்ய ஒருமனதாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அதைத்தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை நரேந்திர மோடி நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கிறார். |
| சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் ஐரோன் சர்மிளா மோடியை சந்திக்க விருப்பம் Posted: 22 May 2014 07:06 AM PDT மணிப்பூர் மாநிலத்தின் இரும்பு பெண்மணி என்றழைக்கப்படும் ஐரோன் சர்மிளா ஆயுதப்படை சிறப்பு சட்டம் குறித்து மோடியை சந்தித்து முறையிட விருப்பம் தெரிவித்துள்ளார். இச்சட்டத்தின் காரணமாக வட கிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சல்களை அனுபவித்து வருவதாக ஷர்மிளாவின் வழக்கறிஞரான காய்தேம் மணி கூறியுள்ளார். இது குறித்து மோடியை சந்தித்து ஷர்மிளா முறையிட உள்ளதாகவும், மோடி அவரது பேச்சுக்கு மதிப்பளிப்பார் என்று நம்புவதாகவும் மணி நம்பிக்கை தெரிவித்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |