Tamil Star |
- பிஸியான தயாரிப்பாளர் பாலா: அடுத்து சற்குணம் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார்!
- அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு! விவாகரத்து கேட்கிறார் ஐஸ்வர்யா ராய்?
- கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்க்காக மீண்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு!
- கமல் சாருடன் ஒரு படத்தில் முழு நீள காமெடி வேடத்தில் நடிக்க ஆசை சந்தானம் பேட்டி!
- மோடியும், ஜெயலலிதாவும் உலக அளவில் மிகப்பெரிய சக்திகள்: நடிகர் விஜய் அறிக்கை!
- கல்யாணத்துல பொண்ணுங்க கண்ல தான் கண்ணீர் வரும்… ஆனால் இங்க தலைகீழா நடக்குது!
- இந்த கண்கொள்ளாக் காட்சியை ரசிக்க இரு கண் போதுமா?
- Slow Motion-ல் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!
- இந்த மாதிரி நீங்க எப்போதாவது யோசித்தது உண்டா?…. ஆச்சரியப்படுவீங்க!
- அழிந்து கொண்டே வரும் மனிதநேயம்…. உதவி என்ற வார்த்தையை மறந்து செல்லும் மக்கள்!
- கண்காணிப்பு கமெராவில் பதிவான பாட்டியின் கொடூர செயல்….. பெற்றோர்களுக்கு இது ஒரு பாடம்!
- மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் வாழ்த்து
| பிஸியான தயாரிப்பாளர் பாலா: அடுத்து சற்குணம் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார்! Posted: 17 May 2014 12:54 AM PDT
இயக்குநர் பாலாதான் இப்போது கோடம்பாக்கத்தில் பிஸியான தயாரிப்பாளர். லிங்குசாமி பாணியில் அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்கிறார். பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிக்க, அவரது இயக்கத்தில் வந்த படம் பரதேசி. இந்தப் படத்துக்குப் பிறகு பாலா தயாரிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குகிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்டது. இப்போது தனது நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் ஏ சற்குணம் இயக்குகிறார். களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி படத்திற்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் இது. அதர்வா நாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஜூலை மாதம் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு படத்தையும் தயாரிக்கவிருக்கிறார் பாலா. இதில் விஜய் சேதுபதி நடிப்பார் என்று தெரிகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு! விவாகரத்து கேட்கிறார் ஐஸ்வர்யா ராய்? Posted: 17 May 2014 12:49 AM PDT
கணவர் அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார் ஐஸ்வர்யா ராய் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார். ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால் மாமியார் ஜெயா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்க்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் நிலவி வந்ததாம். இதனை அபிஷேக் பச்சன் கண்டு கொள்ளாததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டதாக பாலிவுட்டில் செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து கணவரைப் பிரிய ஐஸ்வர்யா ராய் முடிவெடுத்திருப்பதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒருவழியாக எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து பெற்றுக் கொடுத்துவிட்டீர்கள். அப்படியே அடுத்த திருமணம் எப்போது என்றும் சொல்லிவிடுங்கள்!" என்று கிண்டலாகக் கூறியுள்ளார். விரைவில் இருவரும் சேர்ந்து மே 22-ம் தேதி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச விழாவில் பங்கேற்கவிருப்பதைக் குறிப்பிட்டு, இந்த செய்தி பொய்யானது என மறுப்பு தெரிவித்துள்ளது அமெரிக்க எய்ட்ஸ் ஆராய்ச்சி அமைப்பு.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்க்காக மீண்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு! Posted: 17 May 2014 12:44 AM PDT
விமான தாமதம் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழாவின் புகழ்பெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியைத் தவறவிட்டார் ஐஸ்வர்யா ராய். இதனால் அவருக்காகவே மீண்டும் அந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது சர்வதேச திரைப்பட விழாக் குழு. பிரான்ஸ் நாட்டின் பாரிஸிலிருந்து வெளிவரும் லோரியல் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரத் தூதுவராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராய். கடந்த 13 வருடங்களாக அவர் கேன்ஸ் நகரத்தில் நடைபெறும் திரைப்பட விருது விழாவில் பங்கேற்று வருகிறார். சிவப்புக் கம்பள வரவேற்பு இந்த விழாவில் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பிரபல நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். சிவப்பு கம்பளத்தில் அவர்கள் அழகாக நடந்து வருவதைக் காண ஏராளமான ரசிகர்களும் புகைப்படக்காரர்களும் காத்திருப்பார்கள். விமான தாமதம் இந்த ஆண்டு கேன்ஸ் விழாவுக்கான சிவப்புக் கம்பள வரவேற்பு நேற்று நடந்தது. ஆனால் இதில் ஐஸ்வர்யா ராயால் கலந்து கொள்ள முடியவில்லை. லண்டனிலிருந்து நைஸ் நகரத்திற்கு செல்லும் இணைப்பு விமானத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவரால் குறிப்பிட்டபடி கேன்ஸ் வந்துசேர முடியவில்லை. அறிக்கை இது குறித்து சர்வதேச திரைப்பட நிர்வாக மேலாளர் மனஷி குஹா வெளியிட்டு உள்ள அறிக்கையில், "நேற்று நடந்த நிகழ்ச்சியில் துரதிருஷ்டவசமாக ஐஸ்வர்யா ராயால் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, அவருக்காக இந்நிகழ்ச்சியை வேறொரு நாளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார். 21-ம் தேதி அதன்படி வரும் 21-ம் தேதி மீண்டும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அதில் ஐஸ்வர்யா ராய் கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக நடந்து வருகிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கமல் சாருடன் ஒரு படத்தில் முழு நீள காமெடி வேடத்தில் நடிக்க ஆசை சந்தானம் பேட்டி! Posted: 17 May 2014 12:40 AM PDT
ரஜினி சாருடன் இரண்டு படங்களில் நடித்துவிட்டேன். அடுத்து கமல் சாருடன் ஒரு படத்தில் முழு நீள காமெடி வேடத்தில் நடிக்க ஆசை என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். தான் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தைப் புரமோட் செய்ய தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் சந்தானம். நேற்று திருச்சிக்கு வந்திருந்த சந்தானம், அங்கு தியேட்டர் விசிட் முடித்துவிட்டு செய்தியாளர்களுடன் பேசுகையில், "அடுத்த படத்திலும் நான் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளேன். அந்தப் படம் ஜூலையில் தொடங்குகிறது. நான் ஹீரோவாக நடித்தாலும், அதில் ஹீரோயிசம், பஞ்ச் டயலாக் இல்லாமல் பார்த்துக் கொள்வேன். நகைச்சுவைதான் பிரதானமாக இருக்கும். இந்தப் புதுப் படத்திலும் எனக்கு ஜோடி அஸ்னா ஜவேரிதான். இதை வைத்து எதுவும் கதை கட்டிவிட வேண்டாம். நான் வீட்டிலிருந்து கிளம்பினா வேலை.. வேலை முடிஞ்சா வீடுன்னு இருக்கும் ஆள். எந்த கிசுகிசுவிலும் மாட்ட மாட்டேன். ரஜினி சாருடன் இணைந்து இரு படங்களில் நடித்து விட்டேன். அடுத்து கமல்ஹாசனுடன் இணைந்து முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது," என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோடியும், ஜெயலலிதாவும் உலக அளவில் மிகப்பெரிய சக்திகள்: நடிகர் விஜய் அறிக்கை! Posted: 17 May 2014 12:34 AM PDT
மோடியும், ஜெயலலிதாவும் உலக அளவில் மிகப்பெரிய சக்திகள் என்று நடிகர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து நடிகர் விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய நரேந்திரமோடிக்கும், தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலக அளவில் பெரும் சக்தியாக திகழும் இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றி காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி சந்தோஷமடைகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கல்யாணத்துல பொண்ணுங்க கண்ல தான் கண்ணீர் வரும்… ஆனால் இங்க தலைகீழா நடக்குது! Posted: 17 May 2014 12:17 AM PDT |
| இந்த கண்கொள்ளாக் காட்சியை ரசிக்க இரு கண் போதுமா? Posted: 17 May 2014 12:10 AM PDT |
| Slow Motion-ல் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி! Posted: 17 May 2014 12:04 AM PDT |
| இந்த மாதிரி நீங்க எப்போதாவது யோசித்தது உண்டா?…. ஆச்சரியப்படுவீங்க! Posted: 17 May 2014 12:01 AM PDT |
| அழிந்து கொண்டே வரும் மனிதநேயம்…. உதவி என்ற வார்த்தையை மறந்து செல்லும் மக்கள்! Posted: 16 May 2014 11:58 PM PDT |
| கண்காணிப்பு கமெராவில் பதிவான பாட்டியின் கொடூர செயல்….. பெற்றோர்களுக்கு இது ஒரு பாடம்! Posted: 16 May 2014 11:55 PM PDT |
| மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் வாழ்த்து Posted: 16 May 2014 11:51 PM PDT
பா.ஜ.க மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










