மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சீமாந்திரா புதிய தலைநகரை ஒரு வருடத்தில் உருவாக்குவேன்: சந்திரபாபுநாயுடு
- பிரணாப்முகர்ஜியுடன் மோடி 20–ந்தேதி சந்திப்பு
- மோடிக்கு டெல்லியில் பங்களா தயார்
- கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவு பெருகி உள்ளது: அச்சுதானந்தன்
- திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்
- 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு 2ம் தேதி பதவியேற்பு
- பா.ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவி உண்டா?
- 125 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி: மோடி பெருமிதம்
- மோடிக்கு பிரியாவிடை: 21ம் தேதி குஜராத் சட்டசபை சிறப்புக் கூட்டம்
- தேர்தல் தோல்வி எதிரொலி: குஜராத்தில் காங்கிரஸ் அமைப்புகள் கூண்டோடு கலைப்பு
- வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மோடி வழிபாடு
- நிதிஷ் குமாரின் ராஜினாமாவை பீகார் கவர்னர் ஏற்றார்
- பிரதமருக்கு ஜனாதிபதி அளித்த பிரியாவிடை விருந்து
- நிதிஷ் குமார் ராஜினாமாவுக்கு எதிர்ப்பு: தீக்குளிப்பதாக மிரட்டிய எம்.எல்.ஏ.
- ஒரு வாரத்திற்குள் ராஜினாமா செய்கிறார் அசாம் முதல்வர் தருண் கோகாய்
- வங்காளதேச படகு விபத்தில் பலி 54 ஆக உயர்வு
- மக்களவைத் தேர்தலில் கடும் சரிவை சந்தித்த இடதுசாரிகள்
- பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி: நிதிஷ் குமார் ராஜினாமா
- ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் எடியூரப்பா சந்திப்பு
- மோடியை தலைவராக தேர்வு செய்ய செவ்வாய்க்கிழமை எம்.பி.க்கள் கூட்டம்
| சீமாந்திரா புதிய தலைநகரை ஒரு வருடத்தில் உருவாக்குவேன்: சந்திரபாபுநாயுடு Posted: 17 May 2014 11:20 PM PDT சீமாந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் இணைக்கப்பட்டதால் அங்கு பதவி ஏற்க சந்திரபாபு நாயுடு விரும்பவில்லை. சீமாந்திராவில் உள்ள ஒரு நகரில் பதவி ஏற்க அவர் முடிவு செய்தார். திருப்பதியில் பதவி ஏற்பு |
| பிரணாப்முகர்ஜியுடன் மோடி 20–ந்தேதி சந்திப்பு Posted: 17 May 2014 11:00 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் அல்லாத கட்சி மத்தியில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறையாகும். பா.ஜனதா மட்டும் தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகள் 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் |
| மோடிக்கு டெல்லியில் பங்களா தயார் Posted: 17 May 2014 10:42 PM PDT புதுடெல்லியில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பங்களாக்கள் தான் பிரதமர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 3–ம் எண் இல்லத்தில் தங்கியுள்ளார். பதவி விலகியதும் முன்னாள் பிரதமர் என்ற முறையில் அவருக்கு மோதிலால் நேரு மார்க்கில் உள்ள 3–ம் எண் இல்லத்தில் குடியேறுகிறார். அந்த வீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. |
| கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவு பெருகி உள்ளது: அச்சுதானந்தன் Posted: 17 May 2014 10:14 PM PDT பாராளுமன்ற தேர்தலில் மோடி அலை காரணமாக பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் கேரளாவில் மட்டும் பாரதிய ஜனதாவின் வெற்றி பறி போய் விட்டது. அங்குள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதியை காங்கிரசும், 8 தொகுதியை கம்யூ. கட்சியும் கைப்பற்றியது. |
| திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள் Posted: 17 May 2014 09:57 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தால் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் வரை ஆனது. கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி, நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி |
| 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு 2ம் தேதி பதவியேற்பு Posted: 17 May 2014 02:51 PM PDT பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி பல தொகுதிகளை கைப்பற்றியது. சீமாந்திரா பகுதிக்குட்பட்ட 175 சட்டமன்ற தொகுதிகளில் 106-ஐ கைப்பற்றியதையடுத்து |
| பா.ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவி உண்டா? Posted: 17 May 2014 02:40 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 335 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு பாரதீய ஜனதாவுக்கு 282 இடங்கள் கிடைத்து உள்ளன |
| 125 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி: மோடி பெருமிதம் Posted: 17 May 2014 12:56 PM PDT தேர்தல் வெற்றிக்கு பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம், டெல்லி அசோகா சாலையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி |
| மோடிக்கு பிரியாவிடை: 21ம் தேதி குஜராத் சட்டசபை சிறப்புக் கூட்டம் Posted: 17 May 2014 11:53 AM PDT பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் அமோக வெற்றிப் பெற்ற நரேந்திர மோடி, விரைவில் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் வதோதரா தொகுதி |
| தேர்தல் தோல்வி எதிரொலி: குஜராத்தில் காங்கிரஸ் அமைப்புகள் கூண்டோடு கலைப்பு Posted: 17 May 2014 11:25 AM PDT பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக குஜராத் தலைநகர் அகமதாபாத் மற்றும் ராஜ்கோட், வதோதரா, சூரத் ஆகிய நகரங்களுக்குட்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கிளைகள் கலைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது |
| வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மோடி வழிபாடு Posted: 17 May 2014 11:01 AM PDT பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் அமோக வெற்றிப் பெற்ற நரேந்திர மோடி, இன்று வாரணாசி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார் |
| நிதிஷ் குமாரின் ராஜினாமாவை பீகார் கவர்னர் ஏற்றார் Posted: 17 May 2014 10:29 AM PDT மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பீகாரில் படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 2 தொகுதிளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார் |
| பிரதமருக்கு ஜனாதிபதி அளித்த பிரியாவிடை விருந்து Posted: 17 May 2014 10:19 AM PDT பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிரதான எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார் |
| நிதிஷ் குமார் ராஜினாமாவுக்கு எதிர்ப்பு: தீக்குளிப்பதாக மிரட்டிய எம்.எல்.ஏ. Posted: 17 May 2014 08:45 AM PDT பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசு அமைக்கப்படும் என்று கட்சியின் தலைவர் சரத் யாதவ் தெரிவித்தார். நிதிஷ் குமாரின் இந்த அதிரடி முடிவினால் அதிர்ச்சியடைந்த அக்கட்சியின் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஒரு வாரத்திற்குள் ராஜினாமா செய்கிறார் அசாம் முதல்வர் தருண் கோகாய் Posted: 17 May 2014 08:06 AM PDT மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி அனைத்து பகுதிகளிலும் பின்தங்கியிருந்தது. அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில், காங்கிரஸ் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளுக்கும் குறைவாக வெற்றி பெற்றால், பதவி விலகுவதாக முதல்வர் தருண் கோகாய் கூறியிருந்தார். அதன்படி, இன்னும் ஒரு வாரத்திற்குள் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று கூறினார். |
| வங்காளதேச படகு விபத்தில் பலி 54 ஆக உயர்வு Posted: 17 May 2014 07:51 AM PDT வங்காளதேசத்தில் மூழ்கிய படகில் இருந்து இதுவரை 54 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் இறந்து கிடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வங்காளதேசத்தின் டாக்கா புறநகர்ப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு மேக்னா நதியில் கடந்த வியாழக்கிழமை மூழ்கியது. அப்போது உயிர் தப்புவதற்காக ஆற்றில் குதித்தவர்களில் சுமார் 50 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. |
| மக்களவைத் தேர்தலில் கடும் சரிவை சந்தித்த இடதுசாரிகள் Posted: 17 May 2014 06:39 AM PDT நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர். நாடு முழுவதும் வேட்பாளர்களை களமிறங்கிய இடதுசாரிகளால் வெறும் 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கேரளாவில் 6 தொகுதிகளும், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு தொகுதிகளும் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் 24 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர். |
| பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி: நிதிஷ் குமார் ராஜினாமா Posted: 17 May 2014 05:05 AM PDT மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பீகாரில் படுதோல்வியைச் சந்தித்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 2 தொகுகிளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். |
| ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் எடியூரப்பா சந்திப்பு Posted: 17 May 2014 03:58 AM PDT கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 3.63 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத்தை தோற்கடித்தார். வெற்றி பெற்ற எடியூரப்பா இன்று டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், நரேந்திர மோடி பிரதமராக |
| மோடியை தலைவராக தேர்வு செய்ய செவ்வாய்க்கிழமை எம்.பி.க்கள் கூட்டம் Posted: 17 May 2014 03:09 AM PDT பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கட்சி இதுவரை இல்லாத வகையில் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 330க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். முன்னதாக, புதிதாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், நரேந்திர மோடி பாராளுமன்ற கட்சி தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார். யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று ராஜ்நாத் சிங் கூறினார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |