Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பிரபாகரனின் நினைவாக எவ்வித நிகழ்வுகளையும் மேற்கொள்ளக்கூடாது: இலங்கை அகதிகளுக்கு அறிவுரை!

Posted: 14 May 2014 11:15 PM PDT

police-public-meeting

police-public-meetingபாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் இந்திய கரையோர காவல்துறையினர் நேற்று தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர். இதன்போது எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவாக எவ்வித நிகழ்வுகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. அவ்வாறான நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுமானால் அது எதிர்காலத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்று கரையோர காவல்துறையினர் குறிப்பிட்டனர் என்று தெ ஹிந்து தெரிவித்துள்ளது. இதேவேளை, புதிதாக எவரினதும் நடமாட்டங்கள் இருக்குமானால் அது தொடர்பில் போலிஸாருக்கு அறிவிக்குமாறும் கரையோர காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் 454 குடும்பங்கள் வசிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெசாக் பண்டிகையையொட்டி கல்குடா போலிஸ் வறிய மாணவர்களுக்கு உதவி!

Posted: 14 May 2014 11:07 PM PDT

vesak_police

vesak_policeவெசாக் பண்டிகையையொட்டி கல்குடா போலிஸ் நிலைய பிரதேசத்தில் வறிய மக்களுக்கான உணவுப் பொதிகளும், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வும், விசேட வழிபாட்டு நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. கல்குடா போலிஸ் நிலைய அதிகாரி தர்மிக்க நவரட்ன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சிரேஸ்ட போலிஸ் அத்தியட்சகர் மேர்வின் சில்வா, வாழைச்சேனை உதவி போலிஸ் அத்தியட்சகர் லால் சேனவிரட்ன, மதகுருமார்களும் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகஸ்த்தர்களும், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மக்களுக்கான தாகசாந்தி நிலையம் சிரேஸ்ட போலிஸ் அத்தியட்சகரினால் திறந்து வைக்கப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர் பாதுகாப்பு குழுவினர் சீனக்குடா விஜயம்!

Posted: 14 May 2014 11:02 PM PDT

xin

xinஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர் பாதுகாப்பு தரப்பினர், சீனக்குடா முகாமிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். அந்தக் குழுவினர் கடற்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், தெற்காசிய நாடுகளில் கடற்படைத் தளங்களை அமைப்பதில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டிகள் வலுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சீன அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, அதனை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், அதனை சீனாவின் கடற்படைத் தளமாகவே இந்தியா கருதுகிறது. இந்த நிலையில் மாலைதீவில் துறைமுகம் ஒன்றை அமைத்து, அதில் தமது கடற்படைத் தளத்தையும் அமைத்துவிடலாம் என்ற திட்டத்தில் இந்தியா தற்போது இருப்பதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தற்போது சீனாவின் உயர்மட்ட பாதுகாப்பு தரப்பினர் திடீரென இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதும்ää அவர்கள் சீனக்குடாவுக்கு சென்றிருப்பதும், இந்தியாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்பேர்ட்டாவைச் சேர்ந்த இரு இளம் சகோதரிகள் குறித்து அம்பர் எச்சரிக்கை: தாயார் மீது சந்தேகம்!

Posted: 14 May 2014 10:48 PM PDT

baby-missing

baby-missingஅல்பேர்ட்டாவைச் சேர்ந்த இரு இளம் சகோதரிகள் காணாமல் போனதை அடுத்து ஆர்சிஎம்பி பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பேர்ட்டா ஆகிய இரு இடங்களிலும் குழந்தை கடத்தல் சம்பந்தப் பட்ட அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதே நேரம் இவர்கள் இருவரையும் சிறுமிகளின் தாயார் கடத்தியிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. 12-வயதுடைய ரலிஸ்சா, 6-வயதுடைய ராயா மிசெல் ஆகிய இரு சகோதரிகளும் அல்பேர்ட்டா வுல்கன் என்ற இடத்தில் உள்ள பாடசாலையில் இருந்து திங்கள் கிழமை காணாமல் போய் உள்ளனர். இவர்களின் தாயார்  திங்கள்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியாவில் கோல்டன் என்ற இடத்தில் காணப்பட்டதாக ஆர்சிஎம்பியினர்  உறுதியளித்துள்ளதோடு பிள்ளைகள் ஆபத்தில் மாட்டியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தகவல்கள், ஆதாரங்கள் அடிப்படையில் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று காலை அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஆர்சிஎம்பி தெரிவித்துள்ளனர். இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் படி இருவருக்கும் மோசமான பாதிப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம் என நம்பபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரலிஸ்சா நீண்ட மஞ்சள் நிற அலை அலையான முடியுயைவரெனவும் நீர்த்த பச்சை நிற சுவெட்டர், கிறே கலர் ரி-சேட், நீல நிற ஜீன்சும் அணிந்திருந்தார். ராயா நீண்ட மஞ்சள் நிற முடியும், கண்ணாடியும் அணிந்திருந்தார். 48-வயதுடைய இவர்களது தாயாரான றினா மிசெல் என்பவரை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. பெண் சிறுமிகள் இருவரும் தாயாருடன் 2007 கறுப்பு நிற ஹொண்டா CR-V. அல்பேர்ட்டா  ORNRSE தகட்டுடன் கூடிய வாகனத்தில் பயணம்செய்து கொண்டிருப்பதாக நம்பபடுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு!

Posted: 14 May 2014 02:55 AM PDT

orulai-kizhanku

orulai-kizhankuசாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும். 100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம், நார்ச்சத்து 0.41%ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமமும், கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் 'ஏ'யும் வைட்டமின் 'பி' முதலியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன. ஒரு மனிதன் தினமும் பாலும், உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட்டுகள் (மாவுப்பொருளும் சர்க்கரையும்) உருளைக்கிழங்கில் அபரிதமாய் உள்ளன. வேகவைத்தோ, பொரித்து வறுவலாகவோ, நீண்ட நாள்களுக்கு வைத்திருந்தோ சாப்பிடப்பயன்படும் காய்கறி இதுதான். மத்திய அமெரிக்கப் பழங்குடிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நூறுவகையான உருளைக் கிழங்கு வகைகளைப் பயிர்செய்து தினமும் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். சிலி நாட்டிலிருந்து ஈக்வடார் நாடு வரை ஆய்வுப்பயணம் செய்த ஸ்பானியர்களின் மூலமே உருளைக்கிழங்கு எல்லாக் கண்டங்களுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டில் பரவியது அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம் சாப்பிடப்படுவது, உருளைக்கிழங்கு. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் இது இருக்கிறது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் இதைப்பார்க்கலாம். 'சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக்கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும், மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான். உருளைக் கிழங்கைச் சாப்பிட்டதும் அதில் உள்ள ஓர் இரசாயனப் பொருள் உடனடியாக உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தரவரிசைப்படி ஒழுங்குப்படுத்தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி ஆகியவற்றிற்கும் முதலில் இருப்பது உருளைக்கிழங்குதான். சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது. பாலைவிடப் புரதச்சத்து இதில் அதிகமாய் இருக்கிறது. பாலுக்குப் பதிலாக உருளைக்கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது இரவில் 'திடீர் திடீர்' என்று பசியினால் அலறாது. நிம்மதியாகத் தூங்கும். அரிசி, கோதுமை, ஜவ்வரிசி முதலியவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் அழிந்தநிலையில் தான் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு மாவுப் பொருள். அதனால் இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது. உருளைக்கிழங்கில் தோலுக்கு அருகில் தான் அதிக அளவு ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம். உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியும். உலகில் பல்வேறு காலகட்டங்களில் பஞ்ச காலத்தில் பட்டினியைத் தவிர்த்துக் கோதுமைக்குப் பதிலாக உருளைக்கிழங்கைச் சாப்பிட்ட வரலாறும் உண்டு. புரதம், மாவுப்பொருள், சர்க்கரை என அனைத்து சத்துணவும் இதிலேயே கிடைத்துவிடுவதால்தான் பசியைப் பொறுத்துக்கொள்ளமுடிகிறது. வாயுப்பொருள் என்று ஒதுக்காமல் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடாமல் மற்றவகைகளில் உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வைத் தொடர்ந்து பெறுங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்கள் தயாரிப்பு!

Posted: 14 May 2014 02:47 AM PDT

google-car

google-carஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களின் சோதனை ஓட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. பிரபல இடையதள நிறுவனம் கூகுள்லின் தயாரிப்பான இந்த கார்கள் சாலைகளில் பயணித்து பிரமிப்பை ஏற்படுத்தின. கலிபோர்னியா பகுதியில் மௌன்டைன் வியுவ் பகுதியில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் நான்கு கார்கள் பங்கேற்றன. முற்றிலும் லேசர், சென்சார் தொழில்நுட்பத்துடன் இயங்கும் கார்களில் முன்கூட்டியே நாம் செல்ல திட்டமிட்ட இடங்களை கணினியில் பதிவு செய்யப்படும். அதன் பின் கார்கள் பொறப்பட்டு சாலைகளில் உள்ள சிக்னல்களில் நின்றும் வாகனத்துடன் பயின்றும் திட்டமிட்ட இடங்களுக்கு செல்கின்றன. ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களின் சோதனை ஓட்டம் தங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறிய கூகுல் நிறுவனம், எதிர்காலத்தில் இது போன்ற கார்களை தயாரித்து விற்பனை செய்யப்படுமா என்ற தகவலை கூற மறுத்துவிட்டது. அதே நேரம் இதைப்பற்றிய தொழில்நுட்பம் வரும் 2017ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கார் வைச்சிருக்கவங்க கண்டிப்பா இத மிஸ் பண்ண மாட்டாங்க!

Posted: 14 May 2014 02:35 AM PDT

Free-jet

Free-jet

This posting includes an audio/video/photo media file: Download Now

உயிரை விட முக்கியமான வேலையைப் பார்த்தீர்களா?

Posted: 14 May 2014 02:09 AM PDT

Video-clip-more-important-than-life

Video-clip-more-important-than-life

This posting includes an audio/video/photo media file: Download Now

அடக்கொடுமையே!… இவங்க கொமடி பண்றதுக்கு இப்படியொரு ஐடியாவா?

Posted: 14 May 2014 02:05 AM PDT

Crazy-Bird-Prank

Crazy-Bird-Prank

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரம்பத்தில் தூள் பறக்கும் இந்த ஹீரோவோட முடிவை நீங்கள் காண வேண்டாமா?

Posted: 14 May 2014 02:01 AM PDT

Biker---hero-of-asphalt

Biker---hero-of-asphalt

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓவரா சீன் போட்ட பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்!

Posted: 14 May 2014 01:58 AM PDT

girls-seen

girls-seen

This posting includes an audio/video/photo media file: Download Now

ராட்சத பாம்பை உணவாக்க போராடும் சிறுத்தை…. கடைசியில இப்படியாகிடுச்சே!

Posted: 14 May 2014 01:49 AM PDT

Leopard-Attacks-Python-in-Kruger

Leopard-Attacks-Python-in-Kruger

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்புவும் செல்வராகவனும் இணையவிருந்த படம் திடீர் நிறுத்தம்!

Posted: 14 May 2014 01:38 AM PDT

simbu-selvaragavan

simbu-selvaragavanசிம்புவும் செல்வராகவனும் இணையவிருந்த புதிய படம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு, சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கவிருந்தார் செல்வராகன். இந்தப் படத்தை வருண் மணியன் என்பவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, படம் விரைவில் தொடங்கும் என்ற நிலையில், படத்துக்கு திடீர் முட்டுக் கட்டை விழுந்துள்ளது. இரண்டாம் உலகம் படம் வெளியான போது, அதன் தயாரிப்பாளர்கள் பிவிபி சினிமாவுக்கும் செல்வராகவனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய பிரச்சினை எழுந்தது. படமும் தோல்வியைத் தழுவியது. பல கோடி ரூபாயை செல்வராகவன் திருப்பித் தந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் பிரச்சினை இன்னும் தொடர்கிறது. எனவே பிவிபி சினிமா நிறுவனத்துடனான பிரச்சினைகளை செல்வராகவன் முற்றாகத் தீர்த்துக் கொண்டு வரும் வரை இந்தப் படம் தொடங்கப்படாது என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மாலிக் பென்ட்ஜொலல் 36 வயதில் மர்ம மரணம்!

Posted: 14 May 2014 01:31 AM PDT

malik-bendjelloul

malik-bendjelloulசுவீடனைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மாலிக் பென்ட்ஜொலல் தனது 36 வயதில் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கான காரணம் இதுதான் என தெளிவாகத் தெரியவில்லை. சர்ச்சிங் பார் சுகர் மேன் என்ற தனது இசை வீடியோ ஆவணப் படத்துக்காக 2013-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்றவர் பென்ட்ஜொலல். 1977-ல் பிறந்த பென்ட்ஜொலல், தொன்னூறுகளில் டிவி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஸ்வீடன் வானொலியில் பணியாற்றினார். ஒரு பயணத்தின்போதுதான் சர்ச்சிங் பார் சுகர் மேன் என்ற படத்துக்கான கதைக்கரு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படத்தை முடிக்க அவருக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் அதற்கான பலன் கிடைத்துவிட்டது. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்கர் வென்ற ஸ்வீடிஷ்காரர் என்ற பெருமையைப் பெற்றார் பென்ட்ஜொலல். அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பென்ட்ஜொலல் மரணம் அனைவரையும் உறைய வைத்துள்ளது என்று ஸ்வீடிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது. திருமணமாகாத அவர், தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலா – மிஷ்கினின் பிசாசு பட பூஜை!

Posted: 14 May 2014 01:22 AM PDT

pisaasu--movie-launch

pisaasu--movie-launchபாலாவின் சொந்தப் பட நிறுவனமான பி ஸ்டுடியோஸுக்காக மிஷ்கின் இயக்கும் புதிய படம் பிசாசு பூஜை இன்று நடந்தது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் இந்தப் படம், அதிரடி த்ரில்லராக உருவாகிறது. சென்னையில் உள்ள பாலாவின் அலுவலகத்திலேயே இந்த பூஜையை எளிமையாக நடத்தி, படத்தை ஆரம்பித்திருக்கிறார் மிஷ்கின். வழக்கமாக இந்த மாதிரி பூஜைகளை அதிகாலையில் நடத்துவார்கள். ஆனால் இது பிசாசு சமாச்சாரமாச்சே.. அதனால் நேற்று நள்ளிரவு (இன்று அதிகாலை) பூஜையை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மிஷ்கினுடன் இயக்குநர் பாலாவும் பங்கேற்றார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். பிசாசு படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறார் இயக்குநர் மிஷ்கின். 19-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. பெரும்பாலும் நள்ளிரவில்தான் இந்த பிசாசை படம் 'பிடிக்க'ப் போகிறார்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்!

This posting includes an audio/video/photo media file: Download Now

புரட்சித் திலகம் என்ற அடைமொழியைப் பயன்படுத்த சரத்குமார் முடிவு!

Posted: 14 May 2014 01:05 AM PDT

sarathkumar

sarathkumarஇனி தன் பெயருக்கு முன்னால் சுப்ரீம் ஸ்டாருக்கு பதில், புரட்சித் திலகம் என்ற அடைமொழியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார் சரத்குமார்.

சரத்குமார் இதற்கு முன் தான் நடிக்கும் படங்களில் தன் பெயருக்கு முன் சுப்ரீம் ஸ்டார் என்று போட்டுக் கொள்வது வழக்கம். அவரது பிஆர்ஓ, இன்னும் ஒரு படி மேலேபோய், 'சுப்ரீம் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்க ஆரம்பித்தார்.

இப்படியெல்லாம் அடைமொழி போட்டுக் கொண்ட நேரமோ என்னமோ... பிஸியாக இருந்த சரத்குமார், சினிமாவில் நடிப்பது படிப்படியாகக் குறைந்து போனது.

சினிமா அரசியல் மற்றும் சட்டமன்ற அரசியலில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இப்போது அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதில் அவர் இரு வேடங்களில் நடிக்கும் சண்டமாருதம் என்ற படத்துக்கான பூஜை இன்று மயிலை சிவன் கோயிலில் தொடங்கியது.

சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் தனது பெயருக்கு முன் புரட்சித் திலகம் என்ற அடைமொழியைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் சரத்குமார். இனி சுப்ரீம் ஸ்டார் என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாக்யராஜ் மேல என்ன கோவமோ? இதற்கு முன் புரட்சித் திலகம் என்ற பட்டப் பெயரைப் பயன்படுத்தி வந்தவர் கே பாக்யராஜ். புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என அழைக்கப்பட்ட எம்ஜிஆரின் கலையுலக வாரிசு என்ற முறையில், அவரது பட்டப்பெயர்களின் பாதியை எடுத்து புரட்சித் திலகம் எனப் பயன்படுத்தி வந்தார்.

இப்போதும் அவரை, அவரது ரசிகர்கள் புரட்சித் திலகம் பாக்யராஜ் என்றே போஸ்டர்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சரத்குமார் புரட்சித் திலகம் பட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே விஜயகாந்தை சினிமாவில் புரட்சிக் கலைஞர் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுவது நினைவிருக்கலாம்.

இதில் ஹைலைட், "இந்த அடைமொழி சூடிக் கொள்ள மேலிடத்தில் அனுமதி பெற்றுவிட்டாரா சரத்குமார்?" என கோலிவுட் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதுதான்!

This posting includes an audio/video/photo media file: Download Now

ராஜஸ்தானை வீழ்த்தி 8–வது வெற்றி பெற்ற சென்னை அணி!

Posted: 14 May 2014 12:52 AM PDT

dhoni-winning-moment

dhoni-winning-momentஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8-வது வெற்றியை பெற்றது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் தொடர் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளன. ராஞ்சியில் நேற்று மாலை நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. சென்னை அணியில் மிதுன் மன்ஹாஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நெல்லையில் பிறந்தவரான 23 வயதான விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சஞ்சு சாம்சன், கனே ரிச்சர்ட்சன், திவாதியா கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் திஷாந்த் யாக்னிக், கெவோன் கூப்பர், அங்கித் ஷர்மா ஆகியோர் இடம் பிடித்தனர். டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. வழக்கமாக 2-வது விக்கெட்டுக்கு ஆடும் கேப்டன் ஷேன் வாட்சன் இந்த ஆட்டத்தில் அங்கித் ஷர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்தார். இருவரும் அவசரமின்றி நிதானமாக ஆடினார்கள். அஸ்வின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டியடித்த அங்கித் ஷர்மா, அவரது அடுத்த ஓவரில் கேட்ச் ஆனார். அங்கித் ஷர்மா 30 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து ரஹானே இறங்கினார். மறுமுனையில் ரன்சேகரிப்பில் கவனம் செலுத்திய ஷேன் வாட்சன், அறிமுக வீரரான தமிழகத்தின் விஜய் சங்கரின் ஒரே ஓவரில் பவுண்டரியும், 2 சிக்சரும் பறக்க விட்டு அசத்தினார். முதல் 10 ஓவர்களில் ராஜஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 84 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. ரஹானே தேவையில்லாமல் ரன்-அவுட் ஆக அந்த அணியின் ரன்வேகம் சரிவுக்குள்ளானது. அரைசதத்தை கடந்த ஷேன் வாட்சன் 51 ரன்களில் மொகித் ஷர்மாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். ஒரு கட்டத்தில் 160 ரன்களை எளிதில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் 150 ரன்களை கூட தொட முடியாமல் போனது. 20 ஓவர்களில் அந்த அணியால் 8 விக்கெட்டுக்கு 148 ரன்களே எடுக்க முடிந்தது. சென்னை தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். அடுத்து சென்னை அணியின் இன்னிங்சை வெய்ன் சுமித்தும், பிரன்டன் மெக்கல்லமும் தொடங்கினர். ரெய்னா 2 ரன்னிலும் வெய்ன் சுமித் 44 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஸ்மித் வெளியேறிய பிறகு, 9-வது ஓவரில் இருந்து 15-வது ஓவர் வரை பந்து ஒரு தடவை மட்டுமே எல்லைக்கோட்டை முத்தமிட்டது. இதனால் ரன் தேவை அதிகமாகி, நெருக்கடி உருவானது. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டதால, பரபரப்பு உண்டானது. கேப்டன் டோணியும் ஜடேஜாவும் களத்தில் நின்றனர். 19-வது ஓவரை வீசிய கெவோன் கூப்பரின் ஓவரில் ஜடேஜா ஒரு சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 13 ரன்கள் வந்தது. இதையடுத்து கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டன. உச்சக்கட்ட டென்ஷன்குக்கு மத்தியில், 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பவுல்க்னெர் வீசினார். இதில் முதல் பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தை டோணி சிக்சருக்கு அனுப்பி, பதற்றத்தை தணித்தார். 3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த டோணி, அடுத்த பந்தில் ராஜஸ்தானின் மோசமான பீல்டிங்கை பயன்படுத்தி 3 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை பெற்றது. சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 8-வது வெற்றியாகும். இதன் மூலம் 16 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் லீக் சுற்றை தாண்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் தான். இதில் இரண்டு முறை சாம்பியன், மூன்று முறை 2-வது இடம் ஆகியவையும் அடங்கும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரேசிலில் சூனியக்காரியை போன்ற முகச்சாயலில் இருந்த பெண் அடித்துக் கொலை: பேஸ்புக்கில் வெளியான ஒரு படத்தால் விபரீதம்!

Posted: 14 May 2014 12:44 AM PDT

brazil-woman-murder

brazil-woman-murderரியோ டி ஜெனிரோ: பேஸ்புக்கில் வெளியான சூனியக்காரியை போன்ற முகச்சாயலில் இருந்ததால் பிரேசிலில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் கவுர்ஜா நகரை அடுத்த சவ்பலோவை சேர்ந்த பேபினோ மரியா (33) என்ற பெண் மீது குழந்தைகளை கடத்துகிறார் என்ற குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவர் சூனியக்காரி என சந்தேகித்த அக்கம்பக்கத்தார், கடந்த வாரம் கும்பலாகச் சென்று மரியாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் பேஸ்புக்கில் வெளியான ஒரு படத்தில் 'இவர் சூனியக்காரி குழந்தைகளை கடத்துபவர் எச்சரிக்கையாக இருங்கள்' எனக் கூறப்பட்டு இருந்துள்ளது. அப்படத்தில் இருந்த பெண்ணின் முகம் மரியாவின் உருவத்தை ஒத்து இருந்ததால் சந்தேகத்தின் பேரில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும், மரியாவின் மீது குற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை என போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு தங்கள் தளத்தில் வெளியிட்ட தகவல் காரணம் அல்ல என பேஸ்புக் நிர்வாகம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி 2வது சுற்றில் சாரா எர்ரானி!

Posted: 14 May 2014 12:30 AM PDT

SARA-ERRANI

SARA-ERRANIஇத்தாலியில் நடைபெறும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, உள்ளூர் வீராங்கனை சாரா எர்ரானி தகுதி பெற்றார்.

முதல் சுற்றில் தகுதி நிலை வீராங்கனை ஷீப்பர்சுடன் (தென் ஆப்ரிக்கா) நேற்று மோதிய எர்ரானி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டெல்லிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!

Posted: 14 May 2014 12:26 AM PDT

royal-challengers-bangalore

royal-challengers-bangaloreடெல்லிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பீட்டர்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™