மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நகரியில் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: ரோஜா
- மேல்சபையில் பாஜக-வுக்கு மெஜாரிட்டி இல்லை: புதிய சட்டம் இயற்றுவதில் சிக்கல்
- வாரணாசி தொகுதிக்கு மோடி 17–ந்தேதி செல்கிறார்
- ராகுலுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி: காங்கிரஸ் தலைவர்கள் முடிவு
- பாராளுமன்ற தேர்தல்: நாளை ஓட்டு எண்ணிக்கை
- பஞ்சாயத்து தேர்தல்: சீமாந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி
- மோடிக்கு ஆதரவு இல்லை: திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
- திருப்பதியில் பஸ் விபத்து: கர்நாடக நீதிபதி பலி
- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுடன் ராகுல் இன்று ஆலோசனை
- மோடிக்கு விசா வழங்கும் பிரச்சினை: அமெரிக்கா விளக்கம்
- ராஜ்நாத் சிங் தலைமையில் 17-ம் தேதி பா.ஜ.க. பாராளுமன்றக் குழு கூட்டம்
- தேசிய ஜனநாயகக் கூட்டணி 279-அ.தி.மு.க. 32 இடங்களை கைப்பற்றும்: புதிய தகவல்
- மத்தியில் ஆட்சி அமைக்க கட்சித் தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் பா.ஜ.க.,
- போக்குவரத்து விதிகளை மீறிய ராகுல் காந்திக்கு ரூ.500 அபராதம்
- பிரதமருக்கு சோனியா அளித்த விருந்தை ராகுல் புறக்கணித்தார்
- ஐதராபாத்தில் மதக்கலவரம்: 3 பேர் பலி
- கொழிஞ்சாம்பாறை அருகே ஆட்டோ மீது கார் மோதி 1½ வயது குழந்தை சாவு
- மத்தியில் புதிய அரசு பதவி ஏற்றதும் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரிக்கும்: உளவுத்துறை
| நகரியில் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: ரோஜா Posted: 14 May 2014 11:46 PM PDT ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார். நகரி நகராட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு நடிகை ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். வடமால் பேட்டை மண்டலத்தில் ஒன்பது மண்டல பரிஷத் இடங்களில் ஆறு |
| மேல்சபையில் பாஜக-வுக்கு மெஜாரிட்டி இல்லை: புதிய சட்டம் இயற்றுவதில் சிக்கல் Posted: 14 May 2014 11:35 PM PDT நமது பாராளுமன்றம் லோக்சபா (மக்களவை) ராஜ்யசபா (மாநிலங்களவை) என இரு சபைகளைக் கொண்டது. பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் எண்ணிக்கை 543, அதே போல் ராஜ்ய சபா (மேல் சபை) எம்.பிக்கள் எண்ணிக்கை 240. பாராளுமன்ற எம்.பிக்களை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்வு செய்கிறார்கள். மேல்–சபை எம்.பிக்களை மாநில வாரியாக 9 எம்.எல்.ஏக்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்கிறார்கள். |
| வாரணாசி தொகுதிக்கு மோடி 17–ந்தேதி செல்கிறார் Posted: 14 May 2014 11:31 PM PDT வதோதரா, வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இரண்டிலும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வாரணாசி தொகுதியை வைத்துக் கொண்டு வதோதரா தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க 17–ந்தேதியே மோடி அங்கு |
| ராகுலுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி: காங்கிரஸ் தலைவர்கள் முடிவு Posted: 14 May 2014 11:25 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. கருத்து கணிப்புகளை ஏற்க முடியாது. கடந்த 2 தேர்தல்களில் கருத்து கணிப்புகளை மீறி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த முறையும் ஆட்சியை பிடிப்போம் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் ஓரளவு இடம் பிடித்தால் மற்ற கட்சிகளை சேர்த்து ஆட்சி அமைக்கலாமா? என்று காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. என்றாலும் எதிர்க்கட்சி வரிசையில் உட்காரலாம் என்றே பெரும்பாலோனார் கருத்து கூறியதாக சொல்லப்படுகிறது. |
| பாராளுமன்ற தேர்தல்: நாளை ஓட்டு எண்ணிக்கை Posted: 14 May 2014 11:11 PM PDT 16–வது பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 7–ந் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடந்தது. இறுதி கட்ட வாக்குப்பதிவு கடந்த 12–ந் தேதி முடிந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதற்காக 989 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 42 மையங்களிலும், புதுச்சேரியில் 4 மையங்களிலும் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. |
| பஞ்சாயத்து தேர்தல்: சீமாந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி Posted: 14 May 2014 10:43 PM PDT ஆந்திராவில் கடந்த மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. பாராளுமன்றம், சட்டசபை தேர்தலை முன்னிட்டு இதன் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 9 கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் சீமாந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 2–வது இடம்தான் கிடைத்தது. இதேபோல் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அதிக நகராட்சிகளை |
| மோடிக்கு ஆதரவு இல்லை: திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு Posted: 14 May 2014 10:37 PM PDT பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவுக்கு பின் நடத்திய கருத்து கணிப்பில் பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கும என்று கூறப்பட்டுள்ளன. பா.ஜனதா தலைவர்களும் வெற்றி நம்பிக்கையில் நேற்று காந்தி நகரில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினார்கள். |
| திருப்பதியில் பஸ் விபத்து: கர்நாடக நீதிபதி பலி Posted: 14 May 2014 10:37 PM PDT கர்நாடக மாநிலம் வெல்லாரியைச் சேர்ந்தவர் ருத்ரமணி (45). மைசூர் மாவட்ட நீதிபதியாக இருந்தார். இவர் குடும்பத்துடன் திருப்பதி வந்தார். ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக அலிபிரி வழியாக நடந்து சென்றனர். திருமலை நுழைவு வாயில் அருகே சாலையை கடந்தார். அப்போது திருமலையில் இருந்து திருப்பதி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ருத்ரமணி கீழ் திருப்பதி ஆஸ்பத்திரிக்கு கொண்டு |
| காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுடன் ராகுல் இன்று ஆலோசனை Posted: 14 May 2014 08:32 PM PDT பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று ஓட்டுப்பதிவுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்து கணிப்பு முடிவுகளை பற்றி காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக கருத்து தெரிவிக்கும்போது, அவை நம்பத்தகுந்தவை அல்ல என்று கூறியுள்ளது. |
| மோடிக்கு விசா வழங்கும் பிரச்சினை: அமெரிக்கா விளக்கம் Posted: 14 May 2014 01:38 PM PDT குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மூண்ட இனக்கலவரங்களை முதல்-மந்திரி நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார், இது மனித உரிமை மீறல் என கூறி அமெரிக்கா அவருக்கான விசாவை 2005-ம் ஆண்டு ரத்து செய்தது. |
| ராஜ்நாத் சிங் தலைமையில் 17-ம் தேதி பா.ஜ.க. பாராளுமன்றக் குழு கூட்டம் Posted: 14 May 2014 12:21 PM PDT தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளான வரும் 17-ம் தேதி பா.ஜ.க. பாராளுமன்றக் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர், புதிய பிரதமராக நரேந்திர மோடியின் பெயரை முறைப்படி எம்.பி.க்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| தேசிய ஜனநாயகக் கூட்டணி 279-அ.தி.மு.க. 32 இடங்களை கைப்பற்றும்: புதிய தகவல் Posted: 14 May 2014 12:05 PM PDT பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 279 இடங்களை கைப்பற்றி மத்தியில் ஆட்சியமைக்கும் என்று புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கள நிலவரத்தை சுட்டிக் காட்டும் இந்த கருத்துக் கணிப்பின்படி, பா.ஜ.க. மட்டும் தனித்து 235 இடங்களையும், |
| மத்தியில் ஆட்சி அமைக்க கட்சித் தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் பா.ஜ.க., Posted: 14 May 2014 11:58 AM PDT பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆட்சி அமைக்க மேலும் சில கட்சிகள் ஆதரவு தரலாம் என்றும் கூறப்படுகிறது. |
| போக்குவரத்து விதிகளை மீறிய ராகுல் காந்திக்கு ரூ.500 அபராதம் Posted: 14 May 2014 11:18 AM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 10-ம் தேதி மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, குவாலியர் நகரில் ஒரு காரின் மேற்கூறையின் மீது ஏறி அமர்ந்தபடி அவர் ஊர்வலமாக சென்றார். இந்த செயலுக்கு எதிர்ப்பு |
| பிரதமருக்கு சோனியா அளித்த விருந்தை ராகுல் புறக்கணித்தார் Posted: 14 May 2014 10:04 AM PDT பத்தாண்டு காலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பிரிவு உபசார விருந்து அளித்தார். சோனியா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லமான '10, ஜன்பத்'தில் |
| ஐதராபாத்தில் மதக்கலவரம்: 3 பேர் பலி Posted: 14 May 2014 06:47 AM PDT ஐதராபாத்தில் ஒரு மதத்தை சேர்ந்தவர்களின் கொடி எரிக்கப்பட்டதால் மதக்கலவரம் மூண்டது. அதில் மூன்று பேர் பலியானார்கள். மேலும் 10 காவலர்கள் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். ஐதராபாத் அருகேயுள்ள கிஷன்பாக் பகுதியில் ஒரு மதத்தை சார்ந்தவர்களின் கொடி எரிக்கப்பட்டதால் கலவரம் மூண்டது. கொடி எரிக்கப்பட்டது தெரிந்தவுடன் அந்த மதத்தை சார்ந்த |
| கொழிஞ்சாம்பாறை அருகே ஆட்டோ மீது கார் மோதி 1½ வயது குழந்தை சாவு Posted: 14 May 2014 02:38 AM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள எலப்புள்ளிபாறை பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி ரஷிதா. இவர்களது 1½ வயது மகள் அனிஷ்மா. கடந்த சில நாட்களாக அனிஷ்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. எனவே அனிஷ்மா தனது உறவினர்களான உஷா, பிரேமா ஆகியோருடன் குழந்தையை அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் அருகில் உள்ள |
| மத்தியில் புதிய அரசு பதவி ஏற்றதும் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரிக்கும்: உளவுத்துறை Posted: 14 May 2014 12:37 AM PDT இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையில் பாகிஸ்தான் மறைமுகமாக இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்தன. குண்டு வெடிப்பு சம்பவங்களை பாரதீய ஜனதா கட்சி கடுமையாக கண்டித்ததுடன் பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது. இந்த நிலையில் 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந் தேதி மும்பைக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் உலகையே அதிர வைத்தது. இதில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தொடர்பு அம்பலமானதால் தனது நடவடிக்கையை குறைத்துக் கொண்டது. என்றாலும் மற்ற தீவிரவாத இயக்கங்கள் மூலமும், உள்நாட்டு தீவிரவாதிகள் மூலமும் தாக்குதலை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |