Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிப்பார்!

Posted: 13 May 2014 11:02 PM PDT

Navanitham-pillai

Navanitham-pillaiஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இந்த மாத இறுதியில் இலங்கை தொடர்பிலான விசாரணை நடத்தும் ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக இந்த மாத இறுதியில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை, நவனீதம்பிள்ளை பெயரிடவுள்ளார். எதிர்வரும் மாத முதல் வாரமளவில் விசாரணைப் பணிகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது. ஆணைக்குழு தொடர்பிலான சகல தகவல்களையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு விரைவில் அனுப்பி வைக்க உள்ளது. விசாரணைகள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு முன்னதாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு நியமிக்கப்படவுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் மூவர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினை நியமிப்பார் என சிங்கள ஊடகமொன்று ஊகம் வெளியிட்டுள்ளது. விசாரணைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் உள்ள தொலைபேசிக் சிக்னல் தனுஷ்கோடி வரை நீட்டிப்பு: கடத்தல் கும்பல்களுக்கு சாதகம்?

Posted: 13 May 2014 10:55 PM PDT

Thanushkodi-tower

Thanushkodi-towerஇலங்கையில் உள்ள தொலைபேசிக் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால் கடத்தல் கும்பல்களுக்கு கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. பின்னர் 1988-ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றபோது மீண்டும் அந்த கோபுரங்கள் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொலைதொடர்பு துறை தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், பிரபல இந்திய தனியார் தொலைபேசி நிறுவனங்கள் பல இலங்கையில் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன. தற்போது இலங்கையிலுள்ள தலைமன்னார் துறைமுகத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களின் செல்போன் சேவை 30 கி.மீ. தூரம் வரை துல்லியமாக கிடைக்கிறது. இதனால் கடத்தல்காரர்களுக்கு இவை பெரும் உதவியாக உள்ளதாம். கச்சத்தீவு, இந்திய - இலங்கை மணற்தீடைகள் மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் இலங்கை செல்போன் நிறுவனங்களின் சேவை எட்டுவதால் கடத்தல் கும்பல்கள் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரின் நடமாட்டத்தை அறிந்து கொண்டு படையினரிடம் இருந்து டிமிக்கி கொடுத்து விட்டு எளிதாக தப்பி விடுவதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட 100 கிலோவிற்கும் அதிகமான தங்கக் கடத்தலை காவல்துறையினர் பறிமுதல் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியில் கலந்துக் கொள்வதை தடுக்க வேண்டும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை!

Posted: 13 May 2014 10:48 PM PDT

Rajabaksha

Rajabakshaஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பங்குபற்றுவதன் மூலம் ஸ்கொட்லாந்து – கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டி களங்கமடையவிருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு, பொதுநலவாய போட்டிகளின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ மீது பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் வகுக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் அவர் எந்த நட்டஈட்டையும் வழங்கவில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்கள் அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை இன்னும் இலங்கையில் நீடிக்கிறது. இவ்வாறான நிலையில் மகிந்த ராஜபக்ஷ பொதுநலவாய போட்டிகளில் கலந்துக் கொண்டால், அது இந்த போட்டிகளை களங்கப்படுத்தும். எனவே பிரித்தானியா இந்த விடயத்தில் தலையிட்டு மகிந்தவின் வருகையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு, பொதுநலவாய நாடுகள் செயலகத்தையும், விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவையும் பணிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

டொரண்டோ மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணிபுரியும் 63 வயது பெண்ணுக்கு $50 மில்லியன் லாட்டரி பரிசு!

Posted: 13 May 2014 10:37 PM PDT

lottery-winner

lottery-winnerகனடா டொரண்டோவில் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணிபுரியும் 63 வயது பெண் ஒருவருக்கு லாட்டரியில் $50 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. கடந்த அன்னையர் தினத்தில் டொரண்டோவை சேர்ந்த 63 வயது Sophie Rizavas அவர்கள் தனது இரண்டு மகள்களுடன் ஜாலியாக ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லாட்டரிக்கு நேற்று $50 மில்லியன் பரிசு விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்தவுடன் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளார் Sophie Rizavas அவர்கள். 44 வருடங்களுக்கு முன்னர் கிரீஸ் நாட்டில் இருந்து கனடாவிற்கு வந்ததாகவும், தனது இரண்டு மகள்களுடன் வாழும் தனக்கு கிடைத்த இந்த லாட்டரி பரிசு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளதாகவும் கூறினார். தற்போது மருத்துவமனையை சுத்தப்படுத்தும் தொழில்புரியும் Sophie Rizavas, தனது வேலையை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், தனது மகள்களின் சிறந்த எதிர்காலத்தை இப்பொழுது முதல் திட்டமிட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியப் பெட்டகம்: தேங்காய்

Posted: 13 May 2014 05:23 AM PDT

coconut

coconutதேங்காய் நல்லதா, கெட்டதா என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேங்காய் இல்லாமல் சமையல் ருசிப்பதே இல்லை. சாம்பாரோ, ரசமோ, கூட்டோ, பொரியலோ, வேறு எந்த உணவோ... அதில் பிரதானமாக இடம் பெறுவது தேங்காய். அவர்களுடன் ஒப்பிடும் போது, நம்மூரில் தேங்காயின் உபயோகம் சற்று குறைவுதான். அதிக தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்... 'கேரளாலயும் இலங்கைலயும் தேங்காய் சாப்பிடறவங்க எல்லாம் வியாதிக்காரங்களாகவா இருக்காங்க? அதெல்லாம் ஒண்ணும் செய்யாது' என்று அதைச் சேர்த்துக் கொள்கிறவர்கள் இன்னொரு பக்கம்... உண்மையில் தேங்காய் நல்லதா? கெட்டதா? தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல் 40 கிராம் தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்னையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள் கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக ருசிப்பதுண்டு. அந்தக் கொப்பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரையாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. கூடிய வரை கொப்பரையை சமையலில் சேர்க்காமலிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காயானது எல்லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோகிக்கிற போது, அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து விடுகிறோம். வெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும். தேங்காய்க்கு வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால்தான் வாயில் புண் வந்தால்கூட, தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடச் சொல்வார்கள். அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய் பால் சேர்த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதன் பின்னணியும் இதுதான். தேங்காய் ஏன் கூடாது? சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் எனப்படுகிற கெட்ட கொழுப்பு அதில் அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம். மற்றபடி குழந்தைகளுக்கு புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க வேண்டும் என்கிற நிலையில், தேங்காய் சேர்த்த பர்பி, தேங்காயும் வெல்லமும் சேர்த்த இனிப்புகளும் அதிகம் தரலாம். எடை குறைவான குழந்தைகளுக்கு கொப்பரையில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கலோரி உதவும். அவர்களுக்கு கொப்பரையில் செய்த பொடி, கொப்பரை மிக்சர் போன்றவற்றை அடிக்கடி கொடுக்கலாம். கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாய், உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும். எடை குறைவான குழந்தைகளுக்கு சூடான சாதத்தில் இந்தப் பொடி சேர்த்துப் பிசைந்து கொடுத்தால், உடல் பூசின வாகு பெறும். தேங்காயே சேர்க்கக் கூடாது என்பவர்களுக்குக்கூட மருத்துவர்களும் உணவு ஆலோசகர்களும் இளநீர் எடுத்துக் கொள்ளச் சொல்வதுண்டு. இளநீர் அத்தனை இதமான ஒரு உணவு. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடலிலுள்ள நீர் சத்தெல்லாம் வறண்டு, மருத்துவமனையில் சேர்கிற அளவுக்கு மோசமான உடல்நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு இளநீர் கொடுத்தால் போதும்... இன்ஸ்டன்ட் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ளும். இளநீரில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு வேறெந்த உணவிலும் இல்லாத அளவுக்கு அபரிமிதமானது. இதய நோயாளிகளுக்கு இளநீர் பரிந்துரைக்கப்படும். அவர்களுக்குத் தேவையான சுத்தமான பொட்டாசியம் இளநீரில் மட்டும்தான் கிடைக்கும். அதுவே அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு இருந்தால், இளநீர் கொடுக்கக் கூடாது. அப்படி மீறிக் கொடுத்தால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். காலையில் இளநீர்? காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் நல்லது என்கிற தவறான அபிப்ராயம் நிறைய பேருக்கு உண்டு. அதைத் தவிர்த்து, காலை உணவுக்கும், மதிய உணவுக்குமான இடைவெளியில் இளநீர் குடிப்பதே சிறந்தது. வெறும் வயிற்றில் குடிப்பதால், அதில் உள்ள சிறிதளவு கார்போஹைட்ரேட்கூட, நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தலாம். இளநீர் குடிப்பதால் உடல் சூடு தணியும். அதிலுள்ள கனிமங்கள் உடலுக்கு நல்லது. விளையாட்டு வீரர்கள், தீவிர உடற்பயிற்சியாளர்கள் போன்றோர், விளையாடி முடித்ததும், பயிற்சி முடித்ததும் உடனே இளநீர் குடித்தால், இன்ஸ்டன்ட்டாக சக்தியைப் பெறுவார்கள். டயட் செய்கிறவர்கள், எப்போதும் களைப்பாகவே உணர்கிறவர்களுக்கும் இளநீர் அருமையான உணவு. தினம் ஒரு இளநீர் குடிக்கிறவர்கள் என்றும் இளமையாகவே காட்சியளிப்பார்கள். வெளியில் செல்கிற போது, தாகத்துக்கு ஏரியேட்டட் குளிர்பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து, இளநீர் குடிக்கிற பழக்கத்துக்கு மாறலாம்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

தினமும் ஒரு பேரீச்சம்பழம்!

Posted: 13 May 2014 05:15 AM PDT

lion-dates

lion-datesஉலகின் பழமையான நாகரிகமான "மெசபடோமியா"வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம்பழம் கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் "சத்துணவுப்பழமாக" உலக மக்களால் உண்ணப்பட்டு வருகின்றது. ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம். தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும். இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும். எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம். வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும். பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும். பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, "காபி" போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது. பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும்போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும். தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அ மிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது. முடி பராமரிப்புக்கு பேரீச்சம் 1. 100 கிராம் உயர்ரக பேரீச்சம் பழத்தை எடுங்கள். 2. இதைக் கொட்டையுடன் தட்டி, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். 3. ஒரு நாள் இதை அப்படியே விடுங்கள். 4. ஊறிய பேரீச்சம் பழத்தை அரைத்து வடிகட்டுங்கள். 5. இதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சுங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோக்கியா எக்ஸ்எல் தற்போது அதிகாரப்பூர்வமாக APAC மற்றும் IMEA பகுதிகளில் கிடைக்கும்

Posted: 13 May 2014 05:01 AM PDT

Nokia-Xl

Nokia-Xlநோக்கியா நிறுவனம் அதன் நோக்கியா எக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரம்பில், நோக்கியா எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நோக்கியா எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் APAC (ஆசிய பசிபிக்) மற்றும் IMEA (இந்தியா, மத்திய கிழக்கு - ஆப்ரிக்கா) பகுதிகளில் புதன் கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கும் என்று அறிவித்துள்ளது. எனினும், நோக்கியா எக்ஸ்எல் இந்திய சந்தையில் தற்போது இல்லை. குறிப்பாக, நோக்கியா ஆன்லைன் ஸ்டோர் கடைகளில், இந்தியாவில் நோக்கியா எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் இரட்டை சிம் வேரியன்ட் கொண்டுள்ளது என்று பட்டியலிடப்பட்டு வருகிறது. நோக்கியா எக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் குடும்பத்தில் இருந்து நோக்கியா எக்ஸ்எல் 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. நோக்கியா எக்ஸ்எல் ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ப்ராஜெட் (AOSP) அடிப்படையாக கொண்ட நோக்கியா எக்ஸ் சாஃப்ட்வேர் ப்ளாட்ஃபார்மான (வெர்ஷன் 1.0) இயங்குகிறது. ஸ்மார்ட்போனில் WVGA 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மற்றும் 187ppi பிக்சல் அடர்த்தி வழங்குகிறது. நோக்கியா எக்ஸ்எல் ரேம் 768MB உடன் இணைந்து 1GHz டூயல் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் S4 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. எக்ஸ்எல், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. நோக்கியா எக்ஸ்எல் பிரைட் கிரீன், ஆரஞ்சு, சியான், மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை வண்ண வகைகளில் கிடைக்கும். நோக்கியா எக்ஸ்எல் இரட்டை சிம் ஸ்மார்ட்போன், நோக்கியா MixRadio மற்றும் பேஸ்புக், ட்விட்டர், WeChat, Viber, மற்றும் ஸ்கைப் போன்ற மற்ற சமூக பயன்பாடுகள் உடன் ஏற்றப்பட்டு வருகிறது. நோக்கியா எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்: WVGA 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எல்சிடி, 187ppi பிக்சல் அடர்த்தி, ரேம் 768MB, 1GHz டூயல் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் S4 ப்ராசசர், இரட்டை சிம், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, நோக்கியா எக்ஸ் ப்ளாட்ஃபார்ம் 1.0, 2000mAh பேட்டரி.

This posting includes an audio/video/photo media file: Download Now

கால்பந்து ரசிகர்களே!… பெக்காமின் இந்த ஷாட்டை மிஸ் பண்ணிடாதீங்க!

Posted: 13 May 2014 04:55 AM PDT

Unbelievable-David-Beckham

Unbelievable-David-Beckham

This posting includes an audio/video/photo media file: Download Now

பார்க்க அழகாதான் இருக்காங்க… ஆனா செய்ற காரியத்தை பாருங்க!

Posted: 13 May 2014 04:50 AM PDT

Russian-Girl-Burps-Like-A-Monster

Russian-Girl-Burps-Like-A-Monster

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்கா நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கும், நடிகர் ஷாஹித் கபூருக்கும் இடையே காதல்?

Posted: 13 May 2014 04:45 AM PDT

sonakshi-sinha

sonakshi-sinhaநடிகர் ஷாஹித் கபூருக்கும், நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் ஆர்....ராஜ்குமார் படத்தில் ஷாஹித் கபூரும், சோனாக்ஷி சின்ஹாவும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிவிட்டது என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சோனாக்ஷி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடிக்க வந்துவிட்டார். ஒரு நாள் படிப்பிடிப்பு இல்லாததால் மும்பைக்கு விமானம் மூலம் சென்றார் சோனாக்ஷி. இந்நிலையில் சனிக்கிழமை இரவு சோனா ஷாஹித் கபூருடன் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் தனித் தனியாக கிளம்பி சென்றுள்ளனர். இரவு 12.45 மணிக்கு சோனாக்ஷி மும்பை ஜுஹுவில் உள்ள ஷாஹிதின் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் வந்த பிறகு சில நண்பர்களும் அங்கு வந்துள்ளனர். ஷாஹித்தின் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த புகைப்படக்காரர்களை அவர் அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ம்ம்ம்ம் என்னமோ நடக்குது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஸ்வரூபம் 2… மீண்டும் டிடிஎச் தள்ளிப் போன உலகநாயகனின் கனவுப் படம்!!

Posted: 13 May 2014 04:40 AM PDT

vishwaroopam

vishwaroopamஇன்னார் படம் என்றில்லாமல்... உச்ச நட்சத்திரம் தொடங்கி, மிச்ச நட்சத்திரங்கள் வரை அத்தனைப் பேரும் படங்களும் சிக்கலுக்குள்ளாகின்றன. இன்றைய சினிமா சூழல் அந்த அளவு நச்சுத்தன்மை மிக்கதாகிவிட்டது. நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர், பைனான்ஸியர் என எல்லோருக்குமே அவரவர் பாதுகாப்பு முக்கியம்தான், மறுப்பதற்கில்லை! ஆனால் இப்படி எல்லோரது பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டிருக்கும் போது, படம் வெளியாக முடியாமல் நீண்டகாலம் கிடப்பில் போடப்படுகிறது. இதற்கு ஒரு பொதுவான தீர்வு வரும்வரை இந்த சிக்கல் தீர வழியில்லை போலிருக்கிறது. சமீப நாட்களாக ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் சிக்கல் பற்றியே பேசிக் கொண்டிருந்ததில், மறந்து போன விஷயம் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2. இந்தப் படமும் இதோ அதோ என இழுத்துக் கொண்டே இருக்கிறது. எப்போது வரும் என்று கமலுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. விஸ்வரூபத்தை விட, அதன் இரண்டாம் பாகம் வெளியாவதில்தான் பெரும் சிக்கல் இருக்கிறது என்கிறார்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள். கடந்த ஜூலை மாதமே இந்தப் படம் வெளியாகும் என்று கூறினர். ஜூலை செப்டம்பரானது... அக்டோபரில் என்றார்கள், தீபாவளிக்கு நிச்சயம் என்றார்கள். கிறிஸ்துமஸுக்கு வருவதாக ஒரு தரப்பு சொன்னது. பொங்கல் அல்லது ஜனவரி 26-ம் தேதி நிச்சய ரிலீஸ் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. பின்னர் பிப்ரவரி 26-க்கு தள்ளிப் போனது. கடைசியாக மே 9 அல்லது கடைசி வாரம் ரிலீஸ் என்றார்கள். என்ன சோதனை என்றால், இதுவரை படத்தின் இசை கூட வெளியிடப்படவில்லை. அட படத்துக்கே, ஒரே ஒரு டிசைனைத்தான் இதுவரை வெளியிட்டிருக்கிறார்கள். வேறு புகைப்படங்களே வெளியாகவில்லை. படம் முடிந்துவிட்டது என்று சிலர் சொன்னாலும், உண்மை நிலவரம்.. இன்னும் பத்து சதவீத படம் பாக்கியுள்ளதாம். இந்திப் பதிப்புக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை என்கிறார்கள். இதெல்லாம் கூட கமல் நினைத்தால் ஒரு மாதத்துக்குள் முடிந்துவிடக்கூடிய பிரச்சினைதான். ஆனால் முக்கிய தடங்கலாக இருப்பது, அமெரிக்காவில் படத்தை டிடிஎச்சில் வெளியிட கமல் எடுத்திருக்கும் உறுதியான முடிவுதானாம். இதற்கு ஒரு சிலர் ஓகே சொன்னாலும், முக்கியமான வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒருசேர எதிர்க்கிறார்கள். ஆஸ்கர் ரவிச்சந்திரன்தான் படத்தின் தயாரிப்பாளர் என்றாலும், கோ புரொட்யூசர் என்ற வகையில் கமலின் முடிவை அவரால் மீற முடியவில்லை. வெளிநாட்டு உரிமை எனப்படும் எப்எம்எஸ் தொகையாக விஸ்வரூபத்துக்கு ரூ 14 கோடி வரை கிடைத்ததாம். விஸ்வரூபம் 2-க்கு இதைவிட அதிகமாக எதிர்ப்பார்க்கிறார்கள். டிடிஎச்சில் வெளியிட்டால் இதனை வசூலிப்பது சுலபம் என்பது கமல் கணக்கு. இன்னொன்று, விஸ்வரூபம் 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை மொத்தமாக விற்காமல், ஏரியா வாரியாக விற்கலாம் என்பது கமல் முடிவு. ஏற்கெனவே இப்படிச் செய்தவர்தான் கமல். அதாவது அமெரிக்காவில் மட்டும் டிடிஎச்சில் போட்டுவிட்டு, மற்ற நாடுகளுக்கான உரிமையை விநியோகஸ்தர்களுக்கு தரலாம் என்கிறாராம். இதை நிச்சயம் ஏற்க முடியாது என்கிறார்கள் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள். அப்படியெனில் கமல் எதிர்ப்பார்க்கும் தொகையைக் கொடுத்தால், அமெரிக்க உரிமையையும் சேர்த்துத் தருவாரா என்றால்... அது யோசிக்கக் கூடிய விஷயம் என்று பதில் வந்ததால் கமல் தரப்பிலிருந்து! அந்த விநியோக பிரச்சினை, நிதிப் பிரச்சினை, டிடிஎச் விவகாரம் எல்லாம் முடிந்து, விஸ்வரூபம் 2 வெளிவர ஆகஸ்ட் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார் சென்னை விநியோகஸ்தர் ஒருவர். ஆனால் செப்டம்பர் 10-ம் தேதி கமல் நடித்து வரும் உத்தம வில்லன் படம் வெளியாகும் என லிங்குசாமி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்!

This posting includes an audio/video/photo media file: Download Now

புறநானூற்று வரிகளை வைத்து ஒரு பாடல் உருவாகும் 'உறுமீன்' படம்

Posted: 13 May 2014 04:30 AM PDT

urumeen

urumeenபொருளாதார குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி வரும் உறுமீன் படத்தில், புறநானூற்று வரிகளை வைத்து ஒரு பாடல் உருவாக்கியுள்ளார்கள். ஜீரோரூல்ஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்கும் படம் உறுமீன். இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயனாக நடிக்கிறார். இவர்களுடன் புதுமுக நடிகை ஆராதனா, காளி, அனுபமா குமார், கலையரசன், மூடர்கூடம் மகேஷ்வரன், ஆண்டனிதாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஒரு முன்னணி கதாநாயகர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அச்சு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, பாண்டிச்சேரி, கோவை, கேரளா, ஹைதராபாத்,பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' புறநானுற்றின் 13 வரிகளை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இசையமைக்கப்பட்டுள்ளது. மும்பையில் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது. இத் திரைப்படம் 1990 - 2014 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு பொருளதார குற்றங்களின் விசாரணகள், நடப்புகள் மற்றும் குற்றப் பின்னணியை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் திரில்லராக உருவாக்கப்படுகிறது. அப்போ, அமலாக்கப் பிரிவெல்லாம் வருமே... பக்கா அரசியல் படம்னு சொல்லுங்க!  

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரான்ஸ் கேன்ஸ் பட விழாவில் கமல் ஹாஸன்!

Posted: 13 May 2014 04:25 AM PDT

Kamal

Kamalபிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார் நடிகர் கமல்ஹாஸன். பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் உலகத் திரைப்பட விழா நடக்கிறது. சர்வதேச அளவில் மிக முக்கியமான திரைப்பட விழா இது. உலக அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து திரைக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இதை ஒரு பெருமையாக அவர்கள் கருதுகிறார்கள். இந்த விழாவுக்கு ஆண்டுதோறும் பாலிவுட்டிலிருந்து முக்கிய நடிகர் நடிகைகள் அழைக்கப்பட்டு, அங்கு நடக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் மரியாதை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்த டிட்லி என்ற இந்திப் படம் மட்டும் விழாவில் கலந்து கொள்கிறது. கவுரவப் பிரிவில் இந்தப் படத்துக்கு இடம் கிடைத்துள்ளது. போட்டிப் பிரிவுக்கோ, போட்டியில்லாத பிரிவுக்கோ எந்த இந்தியப் படமும் போகவில்லை. நாளை தொடங்கி, வரும் மே 25 வரை நடக்கும் இந்த விழாவில் தமிழகத்திலிருந்து நடிகர் கமல்ஹாஸன் சென்று கலந்து கொள்கிறார். அவருடன் பிலிம்சேம்பர் நிர்வாகிகளும் செல்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தாயின் கருப்பையிலிருந்து கைகோர்த்தபடி வெளிவந்த இரட்டைக் குழந்தைகள்!

Posted: 13 May 2014 04:11 AM PDT

frienship_twins

frienship_twins

This posting includes an audio/video/photo media file: Download Now

உறவுகளை மறக்கடிக்கும் தொழில்நுட்பம்!.. உண்மையான சந்தோஷத்தை இழக்கும் மக்கள்!

Posted: 13 May 2014 04:06 AM PDT

I-Forgot-My-Phone

I-Forgot-My-Phone

This posting includes an audio/video/photo media file: Download Now

எமனை எப்படியெல்லாம் அழைச்சிட்டு வாராங்கனு பாருங்கள்!

Posted: 13 May 2014 04:03 AM PDT

Utah-semi-truck-accident

Utah-semi-truck-accident

This posting includes an audio/video/photo media file: Download Now

அன்னையர்தினத்தில் அம்மாவை கௌரவிக்கச் சென்ற சிறுவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Posted: 13 May 2014 03:49 AM PDT

Disastrous-Mothers-Day-Breakfast-in-bed

Disastrous-Mothers-Day-Breakfast-in-bed

This posting includes an audio/video/photo media file: Download Now

முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

Posted: 13 May 2014 03:44 AM PDT

Chennai-Super-Kings

Chennai-Super-Kingsஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசன் புள்ளிப் பட்டியலில், முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜாஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. டோனி தலைமையிலான சென்னை அணி, இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 14 புள்ளிகள் பெற்றிருந்தாலும், அந்த அணி ரரேட் அடிப்படையில் முன்னிலை வகிப்பதால் முதல் இடத்தில் உள்ளது. ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டியில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்றால், சென்னை அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஸ்மித், மெக்கல்லம் நல்ல பார்மில் உள்ளனர். ரெய்னா, டுபிளெஸ்சிஸ், டோனி, ஜடேஜா என அடுத்து வரும் வீரர்களும் அதிரடியில் வல்லவர்கள் என்பதால், சென்னை அணி உற்சாகமாக உள்ளது. ஹில்பென்ஹாஸ், மோகித் வேகமும், ஜடேஜா - அஷ்வின் சுழல் கூட்டணியும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. கேப்டன் டோனியின் சொந்த ஊர் ராஞ்சி என்பதால், இந்த மைதானத்தில் சென்னை அணிக்கு ரசிகர்கள் அளிக்கும் அமோக ஆதரவு கூடுதல் சாதகமாக இருக்கும். அதே சமயம், ராஜஸ்தான் அணியும் சமபலம் வாய்ந்தது என்பதால் ஆட்டத்தில் கடைசி வரை அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்பெயின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நம்பர் 1 வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம்

Posted: 13 May 2014 03:37 AM PDT

Tennis-Rafael-Nadal

Tennis-Rafael-Nadalஸ்பெயின் நாட்டில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரியுடன் மோதிய நடால் 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய நடால் 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது செட்டில் அவர் 3-0 என முன்னிலை பெற்ற நிலையில், முதுகு வலியால் அவதிப்பட்ட நிஷிகோரி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நடால், மாட்ரிட் ஓபனில் 4 முறை கோப்பை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரோமானியாவின் சிமோனா ஹாலெப் - நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா) மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ஷரபோவா 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அனுபவ ஆட்டத்தை வெளிப்பட்டுத்தி ஹாலெப்பை திணறடித்த அவர் 1-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றினார்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.நா சபையின் அமைதி பாதுகாப்புப் பணிக்கு முதல் பெண் தளபதி கிறிஸ்டின் லுண்ட்

Posted: 13 May 2014 02:38 AM PDT

Christian-loond

Christian-loondசைப்ரஸ் பகுதியில் நடைபெறும் அமைதி பாதுகாப்புப் பணிக்கு முதல் பெண் தளபதியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் நேற்று தகவல் வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதிகாக்கும் படைக்கு பெண் தளபதியை நியமிப்பது இதுவே முதல் முறையாகும். நார்வேயைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கிறிஸ்டின் லுண்ட் வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதல் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ கட்டளை மற்றும் ஊழியர்களுடனான பணி நிர்வாகத்தில் லுண்ட் 34 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தினைக் கொண்டவர் என்று பான்-கி-மூன் தனது அறிக்கையில் கூறிய அவர், துருக்கியின் சைப்ரஸ் பிரிவுக்கும், கிரீசிற்கும் இடையில் உள்ள 112 மைல் நிலப்பரப்பும், 900 ராணுவத்துருப்புகள் அடங்கிய காவல்துறையும் இவரது கண்காணிப்பின் கீழ் செயல்படும் என கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™