Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நடிகை சமந்தாவும் சித்தார்த்தும் ரகசிய திருமணமா? பட வாய்ப்புக்காக மறைக்கிறார்களா!

Posted: 12 May 2014 05:44 AM PDT

siddharth-samantha

siddharth-samanthaநடிகை சமந்தாவும் சித்தார்த்தும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் படங்கள் மூலம் பிரபலமான சமந்தா இப்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சூர்யா, விஜய் நடிக்கும் அடுத்த படங்களின் நாயகி இவர்தான். சித்தார்த்தும் சமந்தாவும் 'ஜபர்தஸ்த்' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது. காளஹஸ்தி உள்ளிட்ட கோவில்களில் இருவரும் ஜோடியாக சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். இதன் மூலம் அவர்கள் காதல் விவகாரம் பகிரங்கமானது. ஆனாலும் காதலை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியம் காத்து வந்தனர். இந்த நிலையில்தான் சமந்தா தற்போது சித்தார்த் வீட்டில் குடியேறியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதுவரை சமந்தா நடிக்கும் படங்களின் கால்ஷீட் விவகாரங்களை அவரது பெற்றோர் கவனித்து வந்தனர். தற்போது அது சித்தார்த் குடும்பத்தார் கைக்கு மாறிவிட்டதாம். சித்தார்த்தின் தந்தைதான் இப்போது சமந்தாவின் கால்ஷீட் மேனேஜராக செயல்படுவதாக, அவரை ஒப்பந்தம் செய்யப் போனவர்கள் தெரிவித்துள்ளனர். சித்தார்த்தும் சமந்தாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், வெளியில் தெரிந்தால் பெரிய பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்பதால் இருவரும் மறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேச்சுவார்த்தையில் உண்டான சமரசம்! பிரகாஷ்ராஜ் மீதான தடை ரத்து

Posted: 12 May 2014 05:34 AM PDT

prakash-raj

prakash-rajபேச்சுவார்த்தையில் உண்டான சமரசத்தைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான தடையை தெலுங்கு பட உலகம் ரத்து செய்துள்ளது 'ஆவடு' என்ற தெலுங்கு பட ஷூட்டிங்கின் போது, கதையை மாற்றச் சொல்லி பிரகாஷ்ராஜ் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்படத்தின் டைரக்டருக்கும், பிரகாஷ்ராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது, பிரகாஷ்ராஜ் தகாத வார்த்தைகள் கூறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இயக்குநர் சங்கத்தில் புகார் அளிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து பிரகாஷ்ராஜுக்கு ஒரு வருடம் படங்களில் நடிக்க தடை விதிக்க டைரக்டர் சங்கம் முடிவு எடுத்தது. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, ''இருபது வருடம் சினிமாவில் இருக்கும் எனக்கு ஒரு வருடம் தடை விதிப்பது துரதிர்ஷ்டவசமானது. நான் எந்த தப்பும் செய்யவில்லை'' என விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சங்கம், டைரக்டர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி பிரகாஷ்ராஜ் விவகாரம் குறித்து ஆலாசனை நடத்தினர். இதில் 'ஆவடு' பட டைரக்டர் ஸ்ரீனு வைத்லா மற்றும் பிரகாஷ்ராஜும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்குமிடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து பிரகாஷ்ராஜுக்கு விதிக்கப் பட்ட தடை வாபஸ் பெறப்பட்டது. மேலும், அவருக்கு எதிரான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்கா படத்தில் வரும் லாபத்தில் ஒரு பங்கு ரஜினி அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட்டுக்கு!

Posted: 12 May 2014 05:28 AM PDT

rajini-and-sathyanarayana-rao

rajini-and-sathyanarayana-raoலிங்கா படத்தில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை, தன் தந்தைக்கு சமமாகக் கருதும் அண்ணன் சத்தியநாராயணா கெய்க்வாட்டுக்கு தருமாறு கூறியுள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. நட்புக்கும் நன்றிக்கும் மறுபெயர் ரஜினி என்றால் மிகையல்ல. தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் என்பதற்காகவே கே.பாலசந்தருக்கு ஏராளமான படங்கள் செய்து கொடுத்தார். அதுவும் அவர் சூப்பர் ஸ்டாரான பிறகு வெளியான ஏராளமான வெற்றிப் படங்களில் பல கே பாலச்சந்தருக்காக ரஜினி நடித்தவைதான். தில்லுமுல்லு, நெற்றிக் கண், புதுக்கவிதை, சிவா, வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, குசேலன் என பல படங்களில் நடித்துக்கொடுத்தார் ரஜினி. குசேலனில் விநியோகஸ்தர்கள் பிரச்சினை செய்தபோது, குருவுக்காக தன் சொந்தப் பணத்திலிருந்து 3.5 கோடி கொடுத்து தீர்த்து வைத்தார். தன்னுடைய சென்னை அண்ணன் என்று ரஜினியே வர்ணிக்கும் எஸ்பி முத்துராமனுக்காக 'பாண்டியன்' என்ற படம் நடித்தார். இந்தப் படத்துக்காக அவர் பணம் ஏதும் வாங்கவில்லை. மறைந்த வி.கே.ராமசாமி மற்றும் பண்டரிபாய்க்காக 'அருணாச்சலம்' படத்தில் நடித்தார். லாபத்தை பகிர்ந்து தந்தார். பழைய நண்பர்களுக்காக 'வள்ளி', 'படையப்பா' என இரு படங்களில் நடித்து, பலருக்கும் வாழ்க்கை தந்தார். சிவாஜி கணேசன் குடும்பம் பெரும் பிரச்சினையில் இருந்த நேரத்தில், அவர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்ததுதான் சந்திரமுகி. இப்போது தன் இளைய மகளுக்காக 'கோச்சடையான்' நடித்துக் கொடுத்துவிட்டார். வரும் மே 23-ல் அந்தப் படம் வெளியாகிறது. சில சிக்கல்கள் இருந்தாலும், படம் நல்ல லாபம் தரும் என நம்புகிறார்கள். அடுத்து, இன்னும் கூட பெங்களூரில் சாதாரண வீட்டில் நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் சத்தியநாராயணா கெய்க்வாடுக்கும் உதவ முடிவு செய்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வரும் தனது அடுத்த படமான 'லிங்கா'வில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை அண்ணன், சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்டுக்குத் தருமாறு கூறியுள்ளாராம். இதற்கு முன் பல முறை ரஜினி உதவ முன்வந்தும், அப்போதெல்லாம் எதுவும் வேண்டாம் என்று மறுத்து வந்த சத்தியநாராயணா கெய்க்வாடும், இந்த முறை மறுப்பேதும் சொல்லவில்லையாம், தம்பியின் அன்பு வேண்டுகோளுக்கு! உடன் பிறந்த அண்ணன் என்றாலும், சத்யநாயணா கெய்க்வாடை தன் தந்தைக்கு நிகராகவும், அவர் மனைவியை தன் தாயினும் மேலாகவும் மதிப்பவர் ரஜினி. பல மேடைகளில் தன் அண்ணனும், அண்ணியும் தன்னை வளர்த்த விதத்தை சொல்லி கண்கலங்குவார் ரஜினி. ஆனால் அப்பேர்ப்பட்ட இருவருக்கும் தன்னால் உதவ முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு வந்தார். இப்போது அந்த ஆதங்கம் தீர்ந்துள்ளது. ரஜினி பிறந்த ஊரான கிருஷ்ணகிரி நாச்சிக் குப்பத்தில் பல்வேறு நலப் பணிகள் செய்ய தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார் சத்தியநாராயணராவ்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Posted: 12 May 2014 05:09 AM PDT

Koiya-pazham

Koiya-pazhamகொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது. இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது

This posting includes an audio/video/photo media file: Download Now

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

Posted: 12 May 2014 05:00 AM PDT

malligai

malligaiமண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா? தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம். சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும். புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும். பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம். இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்னாப்ட்ராகன் 801 உடன் சோனி எக்ஸ்பீரியா Z2 ரூ.49,990 விலையில் அறிமுகம்!

Posted: 12 May 2014 04:51 AM PDT

sony-xeperia-z2

sony-xeperia-z2சோனி நிறுவனம் அதன் 2014 தலைமை ஸ்மார்ட்போனான எக்ஸ்பெரிய Z2 ஸ்மார்ட்போனை ரூ.49,990 விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொடக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன் உடன் சோனி ஸ்மார்ட் பேண்ட் பிட்நெஸ் ட்ரக்கர் பேண்ட் தொகுப்பாக இணைந்து இலவசமாக வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் எக்ஸ்பீரியா Z2, எக்ஸ்பெரிய Z1 பின்தோன்றலாக வந்தது, மே 12ம் தேதி முதல் இந்தியாவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் சோனி நிறுவனம், பதிவிறக்கத்திற்காக 6 இலவச எச்டி திரைப்படம், ஒரு முழு எச்டி கிரிக்கெட் விளையாட்டு, மற்றும் 3 மாதங்களுக்கு Bigflix சந்தா, தவிர ரூ. 2.990 மதிப்புடைய சோனி ஒரிஜினல் கேஸ், இலவசமாக தொகுக்கப்பட்டு வருகிறது. . சோனி எக்ஸ்பீரியா Z2, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. மற்றும் எக்ஸ் ரியாலிட்டி என்ஜின் கொண்ட 5.2 இன்ச் (1080x1920 பிக்சல்கள்) Triluminos டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் Adreno 330 ஜி.பீ. யூ உடன் 2.3GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 801 (MSM8974AB) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது, எக்ஸ்பெரிய Z2 ஸ்மார்ட்போனில் ரேம் 3GB கொண்டுள்ளது. குறிப்பாக எக்ஸ்பெரிய Z2 ஸ்மார்ட்போனில், 4K (அல்ட்ரா HD) வீடியோ ரெக்கார்டிங் திறனுடைய Exmor ஆர் சென்சார் கொண்ட 20.7 மெகாபிக்சல் பின்புற கேமரா, 2.2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்கள் 4 ஜி LTE, எச்எஸ்பிஏ +, Wi-Fi, மற்றும் Wi-Fi ஹாட்ஸ்பாட் செயல்பாடு, DLNA, எ -ஜி.பி. எஸ் உடன் ஜி.பி. எஸ், ப்ளூடூத் v4.0, NFC, எஃப்எம் ரேடியோ உடன் RDS, மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். எக்ஸ்பெரிய Z2 ஸ்மார்ட்போனில், 3200mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா Z2 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: எக்ஸ் ரியாலிட்டி என்ஜின் கொண்ட 5.2 இன்ச் (1080x1920 பிக்சல்கள்) Triluminos டிஸ்ப்ளே, Adreno 330 ஜி.பீ. யூ உடன் 2.3GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 801 (MSM8974AB) பிராசசர், ரேம் 3GB, Exmor ஆர் சென்சார் கொண்ட 20.7 மெகாபிக்சல் பின்புற கேமரா, 2.2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 16GB சேமிப்பு, 4 ஜி LTE, எச்எஸ்பிஏ +, Wi-Fi, மற்றும் Wi-Fi ஹாட்ஸ்பாட் செயல்பாடு, DLNA, எ-ஜி.பி. எஸ் உடன் ஜி.பி. எஸ், ப்ளூடூத் v4.0, NFC, எஃப்எம் ரேடியோ உடன் RDS, 3.5mm ஆடியோ ஜாக், ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது 3200mAh பேட்டரி.  

This posting includes an audio/video/photo media file: Download Now

உள்நாட்டு போரில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்க இலங்கை தடை!

Posted: 12 May 2014 04:20 AM PDT

Srilanka-war

Srilanka-warஉள்நாட்டு போரில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தை அனுசரித்தால் தீவிரவாத தடுப்பு சட்டம் பாயும் என்று இலங்கை ராணுவம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் நடந்த 37 ஆண்டுகால உள்நாட்டு போர் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம், 18ம்தேதி, பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் முடிவுக்கு வந்தது. அதன் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் வரும் 18ம்தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர், ரூவான் வணிகசூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போரில் உயிர் நீத்த தமிழர்களின் நினைவு தினத்தை வெளிப்படையாக அனுசரிக்க கூடாது. கறுப்பு கொடி ஏற்றுதல், பேனர்கள் வைத்தல், விடுதலை புலிகளின் கொடிகளை பறக்கவிடுதல் உள்ளிட்ட வகையில் நினைவு தினத்தை அனுசரிப்பவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் பாயும். அதே நேரம் போரில் இறந்த உறவினர்களுக்கு மதச்சடங்குகள் செய்துகொள்ளவும், வீட்டுக்குள் நினைவு தினத்தை அனுசரிக்க எந்த தடையும் இல்லை. சிங்கள ராணுவம் போர் வெற்றி தின அணிவகுப்பை 18ம்தேதி தென் இலங்கையின் மட்டாரா பகுதியில் நடத்த உள்ளது. எந்த பேதமும் இன்றி நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் இந்த போர்வெற்றி சாரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதி நவீன போர்க் கப்பல்களை பார்வையிட்ட அவுஸ்ரேலிய பாதுகாப்புத் தளபதி

Posted: 12 May 2014 04:13 AM PDT

Aus-Admiral

Aus-Admiralஅவுஸ்ரேலியாவுக்குப் படகுகளில் அகதிகள் செல்வதைத் தடுப்பது தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்கான சிறிலங்கா சென்ற அவர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகளையும் பார்வையிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதி, றியர் அட்மிரல் மிச்சேல் நூனன் கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7ம் நாள், திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குச் சென்ற றியர் அட்மிரல் மிச்சேலர் நூனன், தருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், கடற்படைத் தளத்தில் வைக்கப்பட்டுள்ள கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகுகளையும், போர்ப்படகுகளையும் பார்வையிட்டுள்ளார். திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள், கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகளைத் தவறாமல் பார்வையிட்டு வருகின்றனர். ஏற்கனவே சீன பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரும் அவற்றைப் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தோஷ் சிவன் நடித்த மலையாளப் படம் “மகர மஞ்சு” விரைவில் தமிழில் வெளியீடு!

Posted: 12 May 2014 04:07 AM PDT

Makara-manju

Makara-manjuஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடித்த மலையாளப் படம் தமிழில் வெளிவர இருக்கின்றது. இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஓவியர் ரவிவர்மாவாக நடித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ராதா மகள் கார்த்திகா இணைந்து நடித்த படம் மகரமஞ்சு. இது பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மனுக்கும் அவருடைய ஓவியங்களுக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்ட படம். இதில் சந்தோஷ் சிவன், ராஜா ரவிவர்மனாகவும், கார்த்திகா, ஊர்வசியாகவும் நடித்திருந்தனர். கார்த்திகாக படு கவர்ச்சியாகவும், சந்தோஷ் சிவனுடன் நெருக்கமாகவும் நடித்திருந்த படம் இது. இவர்களுடன் நித்யாமேனன், மல்லிகா கபூர், பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். லெனின் ராஜேந்திரன் என்பவர் இயக்கி இருந்தார். மதுஅம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தை தமிழுக்கு கொண்டு வருகிறார்கள். மாணக்யா பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் இதனை அப்ரசஸ் என்ற பெயரில் தமிழில் டப் செய்திருக்கிறது. வருகிற 23 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே இனம் படத்தின் மூலம் தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள சந்தோஷ் சிவன், இந்தப் படத்தின் மூலம் அதனை சரிக்கட்ட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையானைச் சுற்றியுள்ள பெரும் சிக்கல் தீருமா? மே 23-ல் வெளிவருமா கோச்சடையான்!

Posted: 12 May 2014 04:03 AM PDT

kochadaiyaan

kochadaiyaanரஜினியின் கோச்சடையான் படம் வரும் 23-ம் தேதி வெளியாகும் என்று உறுதியாக, இறுதியாக அறிவித்துள்ளனர். இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன. இந்தப் பத்து நாட்களுக்குள் கோச்சடையானைச் சுற்றியுள்ள பெரும் சிக்கல் தீருமா? எந்த தடங்களுமின்றி படம் வெளியாகுமா? என்ற கேள்விகள் இன்றும் தொடர்கின்றன. இந்தக் கேள்விகளுக்கான உண்மையான காரணங்களைப் பார்ப்போம்... கோச்சடையானை எந்த அளவு தூக்கிப் பிடித்தார்களோ, அதைவிட பல மடங்கு வேகத்தில் அதற்கு பின்னடைவை ஏற்படுத்தியதில் 99 சதவீதப் பங்கு மீடியாவுக்கே உண்டு. "இது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான 3டி படம்.. முழுக்க முழுக்க ரஜினி படம்,!'' என படத்தின் இயக்குநர் சவுந்தர்யா அஸ்வின் ரஜினி மீண்டும் மீண்டும் சொன்ன பிறகும் கூட, இது பொம்மைப் படம் என்ற பதத்தை விடாமல் பயன்படுத்தியது மீடியா. 'ஆமா.. நான்தான் நடிச்சேன். ஆனா அது வழக்கமான ஷூட்டிங் இல்ல. லண்டன்ல மொத்தமே பத்து நாட்கள்ல முடிஞ்சிருச்சி. அப்புறம் திருவனந்தபுரத்துல ஒரு வாரம் ஷூட்டிங்," என்று தெளிவாகக் கூறினார். ஆனால் அதை யாரும் காதில் வாங்கவில்லை. ரஜினிக்கு பதில் டூப் போட்டுவிட்டார்கள் என்ற வதந்தியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். அதை பெரிய செய்தியாகப் போட்டு கோச்சடையான் இமேஜைச் சிதைக்கும் வேலையில் இறங்கினார்கள். அதுவரை கோச்சடையானுக்கான எதிர்ப்பார்ப்பு, மற்ற ரஜினி படங்களுக்கு நிகராகவே இருந்தது. அதுவும் உலக அளவில் 6000 அரங்குகளில் படம் வெளியாகிறது என்ற செய்தி வந்தபோது, கோச்சடையான் ரேஞ்சே வேறு லெவலில் இருந்தது. ஆனால் பொம்மைப் படம் என்ற கிண்டலும், ரஜினி நடிக்கவில்லை என்ற வதந்தியும் கோச்சடையானை ரொம்பவே பாதித்தது. இதன் விளைவு, விநியோகஸ்தர்கள் மத்தியில் ஒரு தயக்கம் நிலவ ஆரம்பித்துவிட்டது. பணிகளுக்காக ஆகும் செலவு தெரிய வாய்ப்பில்லை. அவதார் படத்தின் தயாரிப்பு செலவு 237 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பு தெரிய அப்படியே அறுபதால் பெருக்கிக் கொள்ளுங்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது வெறும் 30 நாட்கள்தான். அனிமேஷன் வேலைகள் நடந்தது 5 ஆண்டுகளுக்கும் மேல்... ஒவ்வொரு புது தொழில்நுட்பமும் வர வர அதைப் பயன்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் கேமரூன். சவுந்தர்யாவுக்கு அந்த சவால் இல்லை. இருக்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கினார். அதனால்தான் இந்த செலவில் ஒரு முழுப்படம் சாத்தியமானது என்பதையும் சவுந்தர்யா விளக்கியிருந்தார். இந்தப் படத்துக்காக தயாரிப்பாளர் பலரிடம் பல கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன்கள் வட்டியுடன் சேர்த்து பெரும் தொகையாகிவிட்டது. படத்தை விற்று இந்தக் கடனைக் கட்டிவிட முரளி மனோகர் நினைத்தார். எனவே வழக்கமான ரஜினி படத்தை விட, கோச்சடையானை அதிக விலைக்கு விற்க முயன்றார் தயாரிப்பாளர். சிலர் ஒப்புக் கொண்டனர், சிலர் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியில் அவர்களே ஒரு சிண்டிகேட் மாதிரி அமைத்துக் கொண்டு (அபிராமி ராமநாதன் தலைமையில்), விலையைக் குறைத்துக் கொடுங்கள் என தயாரிப்பாளருக்கு நெருக்கடி தந்தனர். அல்லது படத்தை ஷேர் அடிப்படையில் வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். இங்குதான் தயாரிப்பாளர் நெருக்கடிக்கு உள்ளானார். ஏற்கெனவே அவருக்கு பழைய கடன்கள் வேறு. கடன்காரர்களுக்கு அவர் கொடுத்த காசோலைகளில் சில திரும்பிவிட்டன. இதையெல்லாம் கூட சமாளிக்கப் பார்த்தார்கள். ஆனால் இந்தப் படத்துக்காக ரூ 11 கோடி வரை கடன் தந்த ஓரியண்டல் வங்கி, தன் கடனை திருப்பித்தரும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்று கடிதம் தந்துவிட, கோச்சடையான் மே 9-ம் தேதி அறிவித்தபடி வெளிவரவில்லை. தமிழகத்தில் மட்டும் கோச்சடையான் ரூ 100 கோடிக்கு வியாபாரம் ஆகிவிடும் என்று எதிர்ப்பார்த்தனர். நிலைமையும் அதற்கு சாதகமாகத்தான் இருந்தது, மார்ச் மாதம் வரை. ஆனால் எதிர்மறைச் செய்திகள், அதை வைத்து விநியோகஸ்தர்கள் காட்டிய தயக்கம் படத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தின. "இது பொம்மைப் படம்' என பேசிய பாக்ஸ் ஆபீஸ் வாய்கள், ஆச்சர்யத்தில் அடைத்துப் போனது, மே 6-ம் தேதி. அன்றுதான் படத்துக்கு முன்பதிவு ஆரம்பித்தது. ஆரம்பித்த 6 மணி நேரத்தில், அடுத்த நான்கு நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அபிராமியில் நான்கு அரங்குகளிலும் ஒரு வாரத்துக்கு ஃபுல். அடுத்த இரு தினங்கள் முன்பதிவு நடந்திருந்தால், அட்லீஸ்ட் 15 நாட்களுக்கு டிக்கெட் கிடைத்திருக்காது. அதேபோல, திரையரங்குகளில் முன்பதிவுக்காக காத்திருந்த பெரும் ரசிகர் கூட்டம் தியேட்டர்களை ஆச்சர்யப்பட வைத்தது. சென்னையில் சத்யம் தியேட்டர் கட்டுப்பாட்டில் உள்ள 18 தியேட்டர்களிலும் 'கோச்சடையான்' புக்கிங் பிரமிக்க வைத்தது. இப்போது கோச்சடையான் படத்தை வரும் 23-ம் தேதி வெளியிடுவதை உறுதியாக அறிவித்துள்ள ஈராஸ் நிறுவனம். கிட்டத்தட்ட ரூ 20 கோடியை அதற்குள் செட்டில் செய்ய வேண்டும் மீடியா ஒன்னும் ஈராஸும். விநியோகஸ்தர்களிடம் திட்டமிட்ட தொகையைப் பெற வேண்டும். இதற்கு அவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம்.. கோச்சடையானுக்கு முன்பதிவு செய்ய ரசிகர்கள் காட்டிய ஆர்வம் மற்றும் முன்பதிவில் தியேட்டர்கள் குவித்த வசூல்தான். விநியோகஸ்தர்கள் தரப்பிலும் முன்பிருந்த தயக்கம் இப்போது விலக ஆரம்பித்துள்ளது. சரி, படத்தை சொன்ன விலைக்கு வாங்கி வெளியிடலாம். எதற்கும் ஒரு உத்தரவாதம் மட்டும் தந்தால் போதும், என இறங்கி வந்திருக்கிறார்கள்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை காவ்யா மாதவனோடு திருமணமா? ட்விட்டரில் செய்தி வெளியிட்டவருக்கு எதிராக திலீப் புகார்!

Posted: 12 May 2014 03:49 AM PDT

dileep-with-kavya-madhavan

dileep-with-kavya-madhavanதனக்கும் நடிகை காவ்யா மாதவனுக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பரப்பிய நபருக்கு எதிராக சைபர் கிரைமில் புகார் தந்துள்ளார் நடிகர் திலீப். திலீப்பும் அவர் மனைவி மஞ்சு வாரியரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து கோரி இருவருமே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவருக்கும் பிறந்த ஒரே மகள் மீனாட்சி, இப்போது திலீப்புடன் வசிக்க, மஞ்சு வாரியர் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போய்விட்டார். இன்னொரு பக்கம் திலீப்பும், அவருடன் 25 படங்களுக்கும் மேல் நடித்தவருமான காவ்யா மாதவனும் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும், இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காவ்யா மாதவன் ஏற்கெனவே திருமணமாகி, துபாயில் கொஞ்ச நாள் இருந்து, கணவனின் சித்திரவதை தாங்காமல், விவாகரத்து பெற்று மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில், திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் வரும் மே 25-ம் தேதி திருமணம் என்று ஒருவர் ட்விட்டரில் செய்தி பரப்பியிருந்தார். அதுவும் நடிகர் திலீப் என்ற ஐடியிலிருந்து. இதைப் பார்த்த மீடியா, உடனே அதை பெரிய செய்தியாக வெளியிட்டது. உண்மையில் திலீப் இன்னும் ட்விட்டருக்கே வரவில்லையாம். யாரோ ஒருவர் போலி ஐடி மூலம் இப்படி செய்தி பரப்பியதால் கடுப்பான திலீப், உடனடியாக சைபர் க்ரைமில் இதுகுறித்துப் புகார் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வற்றிபோன கண்ணீருடன் வாழ்வை இழக்கும் சிறுமியின் கதை!

Posted: 12 May 2014 03:44 AM PDT

The-Girl-Who-Couldn't-Cry---Water-is-Life

The-Girl-Who-Couldn't-Cry---Water-is-Life

This posting includes an audio/video/photo media file: Download Now

பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவரின் நிலையைப் பார்த்தீர்களா?

Posted: 12 May 2014 03:39 AM PDT

very-funny-clips

very-funny-clips

This posting includes an audio/video/photo media file: Download Now

திருநங்கைகளின் வித்தியாச முயற்சி…. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயம்!

Posted: 12 May 2014 03:34 AM PDT

seatbelt-crew

seatbelt-crew

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த வயசுல இம்புட்டு கோபம் உடம்புக்கு ஆகாதுப்பா

Posted: 12 May 2014 03:24 AM PDT

Jordanian-TV-guests-destroy-studio-in-on-air-brawl

Jordanian-TV-guests-destroy-studio-in-on-air-brawl

This posting includes an audio/video/photo media file: Download Now

கார் சாரதியை பயத்தினால் புரட்டி எடுத்த பாம்பு

Posted: 12 May 2014 03:20 AM PDT

Stickboy-Bangkok

Stickboy-Bangkok

This posting includes an audio/video/photo media file: Download Now

நாம விரும்பி சாப்பிடுற முட்டை எப்படி உற்பத்தியாகுதுனு தெரியுமா?

Posted: 12 May 2014 03:15 AM PDT

Eggs

Eggs

This posting includes an audio/video/photo media file: Download Now

இறுதிப் போட்டியை திடீரென பெங்களூருக்கு மாற்றியது ஏன்? மும்பை கிரிக்கெட் சங்கம் எதிர்ப்பு!

Posted: 12 May 2014 02:59 AM PDT

ground-cricket

ground-cricket7வது ஐ.பி.எல். இறுதிப் போட்டியை திடீரென பெங்களூருக்கு மாற்றியதற்கு மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடப்பு ஐ.பி.எல். போட்டிகளின் இறுதி ஆட்டம் ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் முதலில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பாக திடீரென இந்த ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்துக்கு மாற்றப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. கிரிக்கெட் வாரியத்தின் இந்த திடீர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மும்பை கிரிக்கெட் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. மேலும் எந்த ஒரு காரணத்தையும் தெரிவிக்காமல் திடீரென இறுதி ஆட்டத்தை மும்பையில் இருந்து மாற்றியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐ.பி.எல். நிர்வாகம் கொடுத்த அடையாள அட்டைகளை மும்பை கிரிக்கெட் சங்கத்தினர் திரும்ப ஒப்படைத்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை கிரிக்கெட் சங்கத்தின் ஊடக மேலாளர் வினோத் தேஷ்பாண்டே, கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.பி.எல் ரன் அவுட் சர்ச்சை: நடுவர் சஞ்சய் ஹசாரே நீக்கம்!

Posted: 12 May 2014 02:49 AM PDT

sanjay-hazare

sanjay-hazareஐ.பி.எல். போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சஞ்சய் ஹசாரே அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் மே 3-ந் தேதியன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் இடையிலான ஆட்டத்தின் போது டெல்லி கேப்டன் கெவின் பீட்டர்சனுக்கு ரன்-அவுட் கேட்டு அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் மூன்றாவது நடுவரின் ஆலோசனை பெறாமலேயே வீரர்களின் அப்பீலை நடுவர் சஞ்சய் ஹசாரே நிராகரித்தார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பீட்டர்சன் ரன்-அவுட் ஆகியிருப்பது தெளிவாக தெரிந்தது. இந்த தவறுக்காக அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிபியாவில் சகாராஅருகே படகு விபத்து: கடலில் மூழ்கியதில் 40 பேர் பலி!

Posted: 12 May 2014 02:36 AM PDT

costa-concordia

costa-concordiaலிபியா கடற்பகுதி வழியே ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிக்கு மக்கள் பயணம் செய்த படகு,நேற்று கடலில் மூழ்கியதில் 40 பேர் பலியானதாகவும், 51 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும் அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் திரிபோலியிலிருந்து 37 மைல் கிழக்கே உள்ள ரமி கால் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக லிபியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™