மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மோடியை சந்திக்க படையெடுக்கும் தலைவர்கள்
- தேர்தல் கருத்துக்கணிப்பு: ராகுல் இமேஜை காப்பாற்ற போராடும் காங்கிரஸ் தலைவர்கள்
- குஜராத் புதிய முதல்–மந்திரியை தேர்வு செய்ய இன்று ஆலோசனை
- ஒடிசா சட்டசபை தேர்தல்: நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியை பிடிப்பார்
- வாரணாசி தொகுதியில் 12 சதவீத ஓட்டுப்பதிவு அதிகரிப்பு
- தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு
- கருத்து கணிப்பு முடிவுகளால் பதற்றம் அடையாத மன்மோகன்சிங்
- கருத்து கணிப்பு முடிவு எதிரொலி: காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி சந்திப்பு
- கேரளாவில் லாரி– மோட்டார் சைக்கிள் மோதி பிளஸ்–2 மாணவர் பலி
- பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு: தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை
- முல்லைபெரியாறு அணை பலமாக உள்ளது: முன்னாள் நீதிபதி தாமஸ் பேட்டி
- நாடு முழுவதும் மாற்றத்துக்கான அலை வீசுகிறது: முரளி மனோகர் ஜோஷி
- மோடி பிரசார வீடியோ விதிமீறல்: தேர்தல் கமிஷனிடம் காங். புகார்
- பா.ஜனதாவுக்கு எதிரான பேச்சு: ராகுல் விளக்கம் அளிக்க 3 நாட்கள் அவகாசம்
- மோடி பிரதமர் ஆவதற்கு பி.ஏ.சங்மா ஆதரவு
- டெல்லியில் முன்னாள் எம்.எல்.ஏ. மகனின் சொகுசு கார் தீப்பிடித்து எரிந்தது
- இந்தியாவில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம்
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் அதிமுக முதலிடம்
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் என தகவல்
- நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தது
| மோடியை சந்திக்க படையெடுக்கும் தலைவர்கள் Posted: 12 May 2014 10:56 PM PDT நரேந்திர மோடி பிரதமர் பதவியை ஏற்க போவது உறுதியாகி விட்டதால், அவரை சந்திக்க வரும் பிரபலங்கள் எண்ணிக்கை இன்று திடீரென அதிகரித்தது. கடந்த 2 மாதமாக நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் சுற்றுப் பயணம் செய்து 430 பொதுக் கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி, தற்போது |
| தேர்தல் கருத்துக்கணிப்பு: ராகுல் இமேஜை காப்பாற்ற போராடும் காங்கிரஸ் தலைவர்கள் Posted: 12 May 2014 10:53 PM PDT பாராளுமன்ற தேர்தலில் தோல்வியே கிடைக்கும் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் எப்போதோ உணர்ந்து விட்டனர். 16–ந்தேதி வரப்போகும் தேர்தல் முடிவு காங்கிரசை எந்த நிலைக்கு கொண்டு போகும் என்பதே இப்போது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில்தான் வெற்றி கிடைக்கும் என்று எல்லா கருத்து கணிப்புகளும் தகவல் வெளியிட்டுள்ளதால் காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் சோர்வு ஏற்பட்டுள்ளது. இந்த படுதோல்வியில் இருந்து கட்சியை எப்படி மீட்டெடுப்பது என்று இப்போதே காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசிக்க தொடங்கிவிட்டனர். |
| குஜராத் புதிய முதல்–மந்திரியை தேர்வு செய்ய இன்று ஆலோசனை Posted: 12 May 2014 10:51 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி தனித்து ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் அவர் அடுத்த வாரமே புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக நரேந்திரமோடி குஜராத் முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகுவார். இதனால் குஜராத் மாநிலத்துக்கு புதிய முதல்–மந்திரியை தேர்வு |
| ஒடிசா சட்டசபை தேர்தல்: நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் Posted: 12 May 2014 10:46 PM PDT சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. அங்கு பிஜூ ஜனதா தள கட்சி தலைவர் நவீன்பட்நாயக் (67) ஏற்கனவே தொடர்ந்து 3 முறை ஆட்சி அமைத்து முதல்– மந்திரி ஆக பதவி வகிக்கிறார். இந்த நிலையில், ஒடிசாவில் தற்போது நடந்துள்ள சட்டசபை தேர்தலிலும் பிஜூ ஜனதா தளம் ஆட்சி அமைக்கும். நவீன்பட்நாயக் மீண்டும் முதல் மந்திரி ஆவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. |
| வாரணாசி தொகுதியில் 12 சதவீத ஓட்டுப்பதிவு அதிகரிப்பு Posted: 12 May 2014 10:36 PM PDT பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் நேற்றுதான் தேர்தல் நடந்தது. இந்த தொகுதியின் தேர்தல் முடிவு நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் |
| தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு Posted: 12 May 2014 10:26 PM PDT ஆந்திராவில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானாவில் கடந்த மாதம் 30–ந்தேதியும், சீமாந்திராவில் கடந்த 7–ந்தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்தனியாக தேர்தலை சந்தித்தது. |
| கருத்து கணிப்பு முடிவுகளால் பதற்றம் அடையாத மன்மோகன்சிங் Posted: 12 May 2014 10:22 PM PDT பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று தொலைக்காட்சிகளில் வெளியானபோது அரசியல்வாதிகளிடம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. குறிப்பாக நாடெங்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கருத்து கணிப்பு முடிவுகள் சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்தின. பிரதமர் மன்மோகன்சிங் இத்தகைய பரபரப்புக்குள் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல் நேற்று வழக்கமான இயல்பான மன நிலையில் இருந்தார். தனது ஓய்வு முடிவை கடந்த ஜனவரி மாதமே அறிவித்து விட்ட அவர் எந்த படபடப்புமின்றி காணப்பட்டார். |
| கருத்து கணிப்பு முடிவு எதிரொலி: காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி சந்திப்பு Posted: 12 May 2014 09:59 PM PDT பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று கருத்து கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. எல்லா தொலைக்காட்சிகளும் அடுத்து பா.ஜ.க. உறுதியாக ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகின்றன. இது காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. |
| கேரளாவில் லாரி– மோட்டார் சைக்கிள் மோதி பிளஸ்–2 மாணவர் பலி Posted: 12 May 2014 09:43 PM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்தவர் ஜோய். இவர்களது மகன்கள் யுகல் (வயது 16). பிளஸ்–2 தேர்வு எழுதியுள்ளார். இன்று பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இவரது தம்பி ஜூவல் (14). இருவரும் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் அதரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றனர். அருவில் ஆனந்தமாக குளித்து விட்டு |
| பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு: தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை Posted: 12 May 2014 09:34 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் அருகே உள்ளது வளந்தாயவலம். இங்கு வசிப்பவர் கிதார் முகமது. இவரது மகள் ஆன்சியா (வயது 18). இவர் பிளஸ்–2 தேர்வு எழுதியுள்ளார். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. நேற்று இரவு ஆன்சியா வீட்டில் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த கிதார் |
| முல்லைபெரியாறு அணை பலமாக உள்ளது: முன்னாள் நீதிபதி தாமஸ் பேட்டி Posted: 12 May 2014 09:28 PM PDT முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு கேரளாவில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி |
| நாடு முழுவதும் மாற்றத்துக்கான அலை வீசுகிறது: முரளி மனோகர் ஜோஷி Posted: 12 May 2014 08:20 PM PDT உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பா.ஜனதா சார்பில் முரளி மனோகர் ஜோஷி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். அவர் இந்த தேர்தலிலும் அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் அந்த தொகுதியை பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு, கட்சி மேலிடம் ஒதுக்கியது. இது முரளி மனோகர் ஜோஷிக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அவர் கட்சி கேட்டுக்கொண்டதன்பேரில் |
| மோடி பிரசார வீடியோ விதிமீறல்: தேர்தல் கமிஷனிடம் காங். புகார் Posted: 12 May 2014 08:07 PM PDT பாராளுமன்றத் தேர்தலில் இறுதிக் கட்ட ஓட்டுப்பதிவு 41 தொகுதிகளில் நேற்று நடந்தது. இதையொட்டி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனது வாரணாசி தொகுதி உள்பட 41 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்த ஒரு வீடியோ கேசட் வெளியிடப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் செயலாளரும், சட்டப்பிரிவு |
| பா.ஜனதாவுக்கு எதிரான பேச்சு: ராகுல் விளக்கம் அளிக்க 3 நாட்கள் அவகாசம் Posted: 12 May 2014 08:02 PM PDT கடந்த 9-ந்தேதி இமாச்சலபிரதேச மாநிலம் சோலன் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது, ''மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பெரும் வன்முறை ஏற்படும். மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள். இந்த வன்முறைக்கு 22 ஆயிரம் பேர் பலி ஆவார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு மக்களிடையே அவர்கள் |
| மோடி பிரதமர் ஆவதற்கு பி.ஏ.சங்மா ஆதரவு Posted: 12 May 2014 03:18 PM PDT மக்களவைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை 16-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், மக்களவை முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா இன்று பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்தார். காந்தி நகரில் உள்ள மோடியின் இல்லத்தின் நடந்த இந்த சந்திப்பின்போது சங்மாவின் மகள் அகதா சங்மா எம்.பி.யும் உடனிருந்தார். |
| டெல்லியில் முன்னாள் எம்.எல்.ஏ. மகனின் சொகுசு கார் தீப்பிடித்து எரிந்தது Posted: 12 May 2014 01:36 PM PDT டெல்லியின் ஜாம்ருத்பூர் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் வந்த சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதர்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகனான அமோத் நேற்று பிற்பகல் ஜாம்ருத்பூர் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு சென்றார். |
| இந்தியாவில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம் Posted: 12 May 2014 01:26 PM PDT இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மக்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும், 32 சதவீத ஆண்களும் 10.6 சதவீத பெண்களும் மது அருந்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
| தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் அதிமுக முதலிடம் Posted: 12 May 2014 06:49 AM PDT நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளை வெளியிட்டுவருகின்றன. அதில் சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுகவுக்கு 27 தொகுதிகளும், திமுவுக்கு 6 தொகுதிகளும், பா.ஜ.க கூட்டணிக்கு 5 தொகுதிகளும், |
| தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் என தகவல் Posted: 12 May 2014 06:23 AM PDT நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளை வெளியிட்டுவருகின்றன. அதில் சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கு 289 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 தொகுதிகளும், |
| நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தது Posted: 12 May 2014 06:02 AM PDT நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி, முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் அசம்கார் தொகுதி ஆகியவற்றில் இன்று வாக்குபதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |