Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காங்கிரஸ் கோட்டையில் விழுந்தது ஓட்டை; சீமாந்திரா தேர்தலில் கட்சிக்கு கடும் நெருக்கடி

Posted:

விஜயவாடா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்த, ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில், தற்போது, அந்த கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தெலுங்கானா மாநில அறிவிப்பால், அங்கு நடக்கவுள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ், படுதோல்வியை சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் ஒன்றாக, ஆந்திரா திகழ்ந்தது. கடைசியாக நடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.33 பேர்: கடந்த லோக்சபா ...

முஸ்லிம்களுக்கு சலுகை தொடரும் என்கிறார் மோடி

Posted:

புதுடில்லி : முஸ்லிம்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள், திட்டங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.உத்தர பிரதேசத்தில் நேற்று பல இடங்களில், லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி, உருது மொழி பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:மதச்சார்பின்மை என்பது, மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வார்த்தை. இந்தியா நீண்ட காலமாகவே, மதச்சார்புடன் தான் இருந்து வந்துள்ளது. அனைத்து மதத்தினருக்கும் சமமான சட்டம் கொண்டு வரப்படும் என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் ...

'மாஜி' அமைச்சர் ராஜாவின் வாக்குமூலம் பதிவு

Posted:

'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை, பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது. முதல் நபராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ராஜா, மூன்று மணி நேரத்திற்குள், 1,200 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கின் விசாரணை, டில்லியில் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில், ஏற்கனவே, சி.பி.ஐ., தரப்பில், இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சி.பி.ஐ., அதிகாரிகள் சார்பிலான வாக்குமூலங்களும், பதிவு செய்யப்பட்டு விட்டன.153 ...

அமேதியிலிருந்து நாட்டை நிர்மாணிக்க போவதாக மோடி அறைகூவல்: பிரசாரத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மீது கடும் சாடல்

Posted:

அமேதி:''காலம் காலமாக, இந்திரா குடும்பத்தினர் வசம் இருந்த போதிலும், துளி கூட முன்னேற்றம் அடையாத இந்த அமேதி தொகுதியிலிருந்து, நாட்டை மறுகட்டமைப்பு செய்யும் நடவடிக்கையை துவங்குவேன். மத்தியில் ஆட்சியில் அமர்ந்த, 60 மாதங்களில், உ.பி.,யை முழுமையாக மாற்றிக் காட்டுவேன்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார்.ஒன்பது கட்டங்களாக நடத்தப்படும், 16வது லோக்சபா தேர்தல், நாளை எட்டாவது கட்டத்தை அடைகிறது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின் அமேதி தொகுதியில், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் போட்டியிடுகிறார்; ...

தவறாக கணக்கு காட்டினால் எம்.பி., - எம்.எல்.ஏ., பதவி பறிப்பு: தேர்தல் கமிஷன் விசாரித்து முடிவு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted:

புதுடில்லி : 'தேர்தல் செலவு குறித்து, தவறாக கணக்கு காட்டுவோரின், எம்.பி., - எம்.எல்.ஏ., பதவியைப் பறிக்க, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. இதுகுறித்து, தேர்தல் கமிஷன் விசாரித்து முடிவு செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான், கடந்த சட்டசபை தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலம், பொகார் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதாக, அவருக்கு எதிராக புகார் எழுந்தது.தேர்தல் கமிஷனில் புகார்இதற்கான செலவு கணக்கை, தேர்தல் கமிஷனில், அவர் தாக்கல் ...

அனைத்து மாநிலங்களும் வளம் பெற தேசிய அதி திறன் நீர்வழிச்சாலை வேண்டும்

Posted:

ஐந்தாண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக, பல்வேறு பாதைகள் பின்பற்றப்பட்டன. அவற்றில் வேளாண்மைக்கும், நீர் மேலாண்மைக்கும் இரண்டு அடிப்படையான பாதைகள் பின்பற்றப்பட்டன. அவற்றில், முதலாவது பாதையில், சுதந்திர இந்தியாவின் முதல் 30 ஆண்டுகளில் நாம் பயணித்தோம். அதன்படி மிகப் பெரிய அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் ஆகியவை உருவாக்கப்பட்டன. 84 பெரிய அணைகளும், நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன. நீர் மேலாண்மையும், நீர்மின்சக்தி வசதிகளும் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றின் மூலம், ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி கன அடி தண்ணீரையே ...

தமிழ் அமைப்புகளுக்கு தடை : மத்திய அரசுக்கு கண்டனம்

Posted:

சென்னை: 'தமிழர்களுக்கு எதிராக, இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற கோரிக்கையை, இந்திய அரசு ஏற்று இருப்பது, கடும் கண்டனத்துக்குரியது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'குதிரை குப்புறத் தள்ளியதோடு, குழியும் பறித்ததாக' கூறுவரே, அதுபோல, ராஜபக்சே அரசு, தமிழர்கள் என்றால், ஏன் தான் இப்படித் தொடர்ந்து, பகை நெருப்பை அள்ளிக் கொட்டுகிறதோ தெரியவில்லை.'பயங்கரவாதத்துக்கு ஆதரவாக, செயல்பட்டதாக குற்றம்சாட்டி, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள், 424 பேர் மீது தடை விதிக்க வேண்டும்' என, இலங்கை அரசு, உலக நாடுகளுக்கு வேண்டுகோள் ...

அ.தி.மு.க.,வினரை மிஞ்சிய அதிகாரிகள்

Posted:

சென்னை: அ.தி.மு.க.,வினரை தொடர்ந்து, செய்தித் துறை அதிகாரிகளும் முதல்வரை, 'அம்மா' என, அழைக்க துவங்கி உள்ளனர்.தலைமைச் செயலக, செய்திப் பிரிவில் இருந்து வெளியிடப்படும் செய்திக் குறிப்பில், முதல்வர் பெயரை குறிப்பிடும்போது, 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா' என, குறிப்பிடுவர்.நேற்று, தமிழ் அறிஞர், கார்டுவெல் 200ம் ஆண்டு நிறைவு விழாவை, அரசு விழாவாக கொண்டாட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது தொடர்பாக வெளியிடப்பட்ட, செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா' என்ற வாசகம், மூன்று இடத்தில் இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதா ...

சென்னையில் திடீர் மின் தடையால் பெரும் பாதிப்பு: மின்சார ரயில்கள் ஓடவில்லை; நோயாளி இறந்ததால் பதற்றம்

Posted:

சென்னையில், நேற்று அதிகாலை பெய்த கனமழையால், பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது; இதனால், மின்சார ரயில் சேவை பாதிப்படைந்ததுடன், அரசு பொது மருத்துவமனையில், செயற்கை சுவாச கருவி செயலிழந்து, ஒருவர் உயிரிழந்தார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல நாட்களாக அனல் வீசிய, சென்னையிலும், நேற்று முன்தினம் முதல், மழை பெய்து வருகிறது.மின் தடைநேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், வட சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், மிதமான மழை பெய்தது. மழை ...

இலங்கையில் தமிழர்கள் மீது 'என்கவுன்டர்': தனுஷ்கோடி வந்த அகதிகள் கண்ணீர் பேட்டி

Posted:

ராமேஸ்வரம்: 'இலங்கை ராணுவம், தமிழர்களை விரட்டி பிடித்து 'என்கவுன்டர்' செய்து வருவதால், இனி அங்கு வாழ முடியாது' என, தனுஷ்கோடிக்கு தப்பி வந்த அகதிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.கடந்த 2009ல், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டபின் தமிழர்கள் முள்வேலி சிறையில் அடைக்கப்பட்டனர். சர்வதேச நாடுகள் வலியுறுத்தியதால், தமிழர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுதலைபுலி ஆதரவாளர்கள், மீண்டும் ஒன்று திரண்டு அரசியல் கட்சி, தொண்டு அமைப்புகள் உருவாக்குவதாக இலங்கை அரசு கூறிவந்தது.இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம், முல்லைதீவை சேர்ந்த தயாபரராஜ், 34, மனைவி உதயகலா, ...

கூடங்குளம் மின்உற்பத்தி 900 மெகாவாட்டை எட்டியது: இதுவரையிலும் 1581 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி

Posted:

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில், நேற்று மாலை மின் உற்பத்தி, 900 மெகாவாட்டை எட்டியது. கூடங்குளம் மின்உற்பத்தி நிகழ்வில் இது ஒரு மைல்கல்லாகும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முதலாவது அணு உலையில், மின்உற்பத்தி துவங்கிய பிறகு, அவ்வப்போது, ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டு, மின் உற்பத்தி நடக்கிறது. கடந்த, அக்.,22ல் மின் உற்பத்தி துவங்கியது. துவக்கத்தில் 160 மெகாவாட் ஆக இருந்த மின்உற்பத்தி, அக்., இறுதியில் 280 மெகாவாட்டை எட்டியது. ஜனவரி 25ம் தேதி 680 மெகாவாட்டை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™