Tamil News | Online Tamil News |
- 'அரசியல் செல்வாக்கிற்கு அடிபணியோம்' : கருப்பு பண மீட்பு குழு தலைவர் திட்டவட்டம்
- பா.ஜ., புதிய தலைவராக ஓம் மாத்தூர் வர வாய்ப்பு
- ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் யார்? காங்கிரசில் எழுந்தது புதிய குழப்பம்
- தே.மு.தி.க.,வினரை தக்க வைக்க கடைசி முயற்சி: டில்லியில் விஜயகாந்த் காத்திருப்பு ரகசியம்
- ஜூன் முதல் மின் தடை தளர்வு சாத்தியமா: அரசு உத்தரவை செயல்படுத்துவதில் சந்தேகம்
- மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு
- ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அதிகார விவகாரத்தில் சர்ச்சை : மாநில முதல்வர், எதிர்க்கட்சியினர் கண்டனம்
- சோனியாவின் கல்வி தகுதி என்ன?
- ஓட்டமெடுக்கும் 'மாஜி'க்கள்: 'கிரீன் சிக்னலு'க்காக காத்திருப்பு
- தொடருது அதிரடி; கிழியுது 'சீட்' : அ.தி.மு.க.,வில் உச்சக்கட்ட பரபரப்பு
- முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
- கோவை மேயர் பதவியில் இருந்து செ.ம.வேலுச்சாமி தூக்கியடிப்பு: ஜெயலலிதா அதிரடியால் அ.தி.மு.க.,வில் பரபரப்பு
| 'அரசியல் செல்வாக்கிற்கு அடிபணியோம்' : கருப்பு பண மீட்பு குழு தலைவர் திட்டவட்டம் Posted: ஆமதாபாத்:''வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதில், பல சிக்கல்கள் உள்ளன. ஆனாலும், இது தொடர்பான விசாரணையை, கூடிய விரைவில் முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அரசியல் செல்வாக்கிற்கு அடிபணியாமல், விசாரணை நடத்தப்படும்,'' என, சிறப்பு புலனாய்வு குழு தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான எம்.பி.ஷா கூறியுள்ளார்.சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்களால், ஏராளமான கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை மீட்டு, இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை ... |
| பா.ஜ., புதிய தலைவராக ஓம் மாத்தூர் வர வாய்ப்பு Posted: புதுடில்லி:பா.ஜ., தேசிய தலைவரான ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சராகியுள்ளதால், அவருக்கு பதிலாக, கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இது தொடர்பாக, ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ்., தலைவருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.பா.ஜ., தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் பதவி வகிக்கிறார். மோடி தலைமையிலான மத்திய அரசில் அவர், உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், பா.ஜ.,வுக்கு புதிய தலைவரை நியமிக்க, அந்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள், நேற்று துவங்கின.ராஜ்நாத் சிங், டில்லியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் மற்றும் அந்த ... |
| ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் யார்? காங்கிரசில் எழுந்தது புதிய குழப்பம் Posted: புதுடில்லி:ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட, காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் விஷயத்தில், அந்த கட்சிக்குள் குழப்பம் எழுந்துள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதை அடுத்து, லோக்சபாவில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ராஜ்யசாபவில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான பலம் உள்ளதால், அங்கு எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில், அக்கட்சிக்கு சிக்கல் ஏற்படாது என ... |
| தே.மு.தி.க.,வினரை தக்க வைக்க கடைசி முயற்சி: டில்லியில் விஜயகாந்த் காத்திருப்பு ரகசியம் Posted: தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை, கட்சியில் தக்க வைக்கும் கடைசி கட்ட முயற்சியில், விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட, பா.ஜ., மேலிட தலைவர்களை சந்திப்பதற்காக, மூன்றாம் நாளாக அவர் டில்லியில் காத்திருக்கிறார்.வெற்றிக்காக...லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு, தி.மு.க., - -காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து மிகப்பெரிய வரவேற்பு இருந்தும், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தது. பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க.,- - தி.மு.க.,விற்கு மாற்றாக தமிழகத்தில் உருவானது.இக்கூட்டணிக்கு, தமிழக மக்களிடம் ஆதரவு கிடைக்கும் என, நம்பியே, ... |
| ஜூன் முதல் மின் தடை தளர்வு சாத்தியமா: அரசு உத்தரவை செயல்படுத்துவதில் சந்தேகம் Posted: சென்னை:காற்றாலைகளில், அதிக மின்சாரம் கிடைத்தும், சில தினங்களாக, மின் பற்றாக்குறை ஏற்பட்டு, பல இடங்களில், மின் தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், 'ஜூன் முதல், மின் தடை இருக்காது' என்ற அரசு உத்தரவு செயல்பாட்டிற்கு வருவதில், சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில், கடந்த, 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதையடுத்து, தொழிற்சாலைகள், குடியிருப்புகள், உயர் அழுத்த மின் நுகர்வோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன், மின் தடை அமல்படுத்தப்பட்டது.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடன், 2011ல், வார மின் விடுமுறை ரத்து செய்யப்பட்டது; மற்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. கடந்த ஆண்டு, ... |
| மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு Posted: புதுடில்லி: 'மாநிலங்களில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு வரும் கோரிக்கைகள், புகார்கள் மீது உடனுக்குடன் விரைந்து தகுந்த முடிவெடுக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.நேற்று முன்தினம், பிரதமர் அலுவலகம் வந்து பணிகளை மேற்கொண்ட மோடிக்கு, பிரதமர் அலுவலகத்தின் செயல்பாடு, அதன் முந்தைய சிறப்புகள் குறித்து, அதிகாரிகள் விளக்கினர்.பின், அவர்களுக்கு மோடி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:கூட்டாட்சி தத்துவத்தின் அடையாளங்களாக திகழும் மாநிலங்கள் தான், நாட்டின் வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளன. எனவே, மாநிலங்களில் இருந்து ... |
| ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அதிகார விவகாரத்தில் சர்ச்சை : மாநில முதல்வர், எதிர்க்கட்சியினர் கண்டனம் Posted: புதுடில்லி : 'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு, 370ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது' என, நேற்று முன்தினம், பிரதமர் அலுவலக இணையமைச்சராக பொறுப்பேற்ற, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த, முதல் முறையாக, எம்.பி.,யாகியுள்ள ஜிதேந்திர சிங் தெரிவித்தது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு கண்டனம் தெரிவித்து, அம்மாநில, ஆளும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த முதல்வர், ஒமர் அப்துல்லா கூறியதாவது:ஜம்மு - காஷ்மீ?ர் மாநிலத்திற்கு, அரசியல் சட்ட நிர்ணய சபை, சிறப்பு ... |
| Posted: புதுடில்லி : நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக, பா.ஜ.,வைச் ?ர்ந்தவரும், 'டிவி' நடிகையுமான ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றுள்ளார். காங்., தலைவர்களில் ஒருவரான அஜய் மாக்கேன் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'பட்டப்படிப்பு கூட முடிக்காத ஸ்மிருதி இரானியை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமித்துள்ளது, வேடிக்கையாக உள்ளது' என, கூறியிருந்தார். இதற்கு, பா.ஜ., தரப்பில், நேற்று பதிலடி கொடுக்கப்பட்டது.ஸ்மிருதியின் கல்வித் தகுதி குறித்து, கேள்வி எழுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும்; சோனியாவின் கல்வித் தகுதி ... |
| ஓட்டமெடுக்கும் 'மாஜி'க்கள்: 'கிரீன் சிக்னலு'க்காக காத்திருப்பு Posted: லோக்சபா தேர்தலில், படுதோல்வியை தி.மு.க., சந்தித்துள்ளது. அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க., வுக்கும், 20 சதவீத ஓட்டுகள் வித்தியாசம் ஏற்பட்டு உள்ளது.சில தொகுதிகளில், மூன்றாம் இடத்திற்கு தி.மு.க., தள்ளப்பட்டுள்ளதால், அக்கட்சியின் எதிர்காலம் குறித்து, கட்சியினர் கவலை அடைந்து உள்ளனர். இதிலிருந்து, மீண்டும் தி.மு.க., புத்துயிர் பெறுமா என்ற கேள்வி, அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.எண்ணிக்கை குறையும்அடுத்த சட்டசபை தேர்தலில், வெற்றி யடைய வேண்டும் என்றால், ஓட்டு சதவீதம் அதிகமாக இருக்கும் கட்சிகளோடு, 'மெகா' கூட்டணி அமைக்க ... |
| தொடருது அதிரடி; கிழியுது 'சீட்' : அ.தி.மு.க.,வில் உச்சக்கட்ட பரபரப்பு Posted: சென்னை:அ.தி.மு.க.,வில் அடுத்தடுத்து நடைபெறும் அதிரடிகள், நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மேயர் ராஜினாமாவை தொடர்ந்து, மேலும் பல உள்ளாட்சி பிரதிநிதிகள், ராஜினாமா செய்யலாம் என்ற தகவல், கட்சி வட்டாரத்தில் கடும் சூட்டை கிளப்பி உள்ளது.லோக்சபா தேர்தலில், தோல்வி அடைந்த கட்சிகள் எல்லாம், மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல், தவித்து கொண்டிருக்கின்றன. யாரும் எதிர்பாராத வகையில், 37 தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க.,வில், அதிரடி நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.தேர்தலில், 37 இடங்களை பெற்றும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு ... |
| முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல் Posted: டில்லியில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து, கடுமையான தொனியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.முதல் சந்திப்பிலேயே, மோடி உறுதிபட பேசியதால், அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை தரப்பு, பிரச்னைகளைத் தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனி ஈழத்திற்கு ஆதரவாக, எந்த கருத்தையும் மோடி தெரிவிக்கவில்லை என்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மீள் ... |
| Posted: கோவை மேயர் பதவியில் இருந்து, செ.ம.வேலுச்சாமியை தூக்கியடித்ததுடன், அவரது மாவட்டச் செயலர் பதவியையும் பறித்துள்ள, முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை, அ.தி.மு.க.,வில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாநகராட்சி மேயராக இருந்தவர், செ.ம.வேலுச்சாமி, 61; இவரே, கோவை மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலராகவும் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலையில், இவரிடமிருந்து மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டு, புறநகர் மாவட்டச் செயலரும், அமைச்சருமான வேலுமணியிடம் ஒப்படைப்பதாக, அ.தி.மு.க., தலைமை அறிவித்தது.காரணம் என்ன?இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கு வதற்குள், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 29,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |