Tamil News | Online Tamil News |
- இந்தியாவின் 15வது பிரதமரானார் மோடி: 'நிறைந்த நிர்வாகம்' கோஷத்துடன் பதவியேற்பு: 45 உறுப்பினர்களுடன் புதிய அமைச்சரவை துவக்கம்
- மோடி பதவியேற்பு விழாவுக்கு வந்த தலைவர்கள் உற்சாகம்: அண்டை நாடுகளுடன் உறவு பலப்பட வாய்ப்பு
- இரட்டை இலக்கமாக இருந்தது ஒன்றானது: மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் பங்கு
- மைத்துனருக்கு இல்லாவிட்டால் மனைவிக்கு பதவி: காரியம் சாதிக்க விஜயகாந்த் டில்லியில் முகாம்
- அன்புமணிக்கு அமைச்சர் பதவி இல்லை: வழக்கை காட்டி தள்ளிவைத்தது பா.ஜ.,
- பதவியேற்பு விழா புறக்கணிப்பு: பிரதமரை சந்திக்க ஜெ., முடிவு
- கலைஞர் 'டிவி'க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்: கனிமொழி உட்பட ஒன்பது பேர் ஜாமின் கோரி மனு
- அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம்
- புதிய அமைச்சர்கள்: ஒரு பார்வை
| Posted: புதுடில்லி: நாடே வியக்கும் வகையில், லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு, அமோக வெற்றியைப் பெற்றுத் தந்த, நரேந்திர மோடி, 'சிறிய அரசு, நிறைந்த நிர்வாகம்' என்ற கோஷத்துடன், நாட்டின், 15வது பிரதமராக நேற்று பதவியேற்றார். அவருடன் அமைச்சர்கள், 45 பேரும் பதவியேற்றனர். இவர்களில், 23 பேர் கேபினட் அமைச்சர்கள்; 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்; 12 பேர் இணை அமைச்சர்கள். தமிழகத்தைச் சேர்ந்த, பொன். ராதாகிருஷ்ணனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அந்தக் கட்சி சார்பில், 16வது லோக்சபாவுக்கு ... |
| மோடி பதவியேற்பு விழாவுக்கு வந்த தலைவர்கள் உற்சாகம்: அண்டை நாடுகளுடன் உறவு பலப்பட வாய்ப்பு Posted: புதுடில்லி: நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில், 'சார்க்' நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்?ஷே ஆகியோர் பங்கேற்பதற்கு, கடும் எதிர்ப்பு இருந்த போதும், அதை பொருட்படுத்தாமல், அவர்கள் விழாவில் பங்கேற்றனர். இதனால், அண்டை நாடுகளுடனான உறவு, பலப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.தே.ஜ., கூட்டணி அமோகம்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ... |
| இரட்டை இலக்கமாக இருந்தது ஒன்றானது: மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் பங்கு Posted: கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேல், மத்திய அமைச்சரவையில், இரண்டு இலக்கத்தில் இருந்த தமிழகத்தின் பிரதிநிதித்துவம், ஒன்றாகக் குறைந்துள்ளது.மோடி தலைமையில், நேற்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில், தமிழகத்தைச் சேர்ந்த, பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே, மத்திய அமைச்சராகி உள்ளார்.தேசிய கூட்டணி: மத்தியில், ஒரு கட்சி ஆட்சி முடிவுக்கு வந்து, கூட்டணி கட்சிகளின் ஆட்சி, 1989ல் ஏற்பட்டது. வி.பி.சிங் தலைமையில் அமைந்த அமைச்சரவையில், தி.மு.க.,வின் முரசொலி மாறன், கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார். 1989 லோக்சபா தேர்தலில், தி.மு.க., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ... |
| மைத்துனருக்கு இல்லாவிட்டால் மனைவிக்கு பதவி: காரியம் சாதிக்க விஜயகாந்த் டில்லியில் முகாம் Posted: மைத்துனருக்கு பதவி கிடைக்காத பட்சத்தில், மனைவிக்காவது பதவியை பெற்று, கட்சியை காப்பாற்றும் நோக்குடன் விஜயகாந்த் டில்லி சென்றுள்ளார். மூன்று நாட்கள்? வரை அங்கு தங்கியிருந்து, காரியம் சாதித்து முடித்து சென்னை திரும்ப, அவர் திட்டமிட்டு உள்ளார்.தமிழக அரசியலில், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விற்கு மாற்று சக்தி என்று கூறி வந்த தே.மு.தி.க.,வின் நிலைமை, லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின் மோசமடைந்துள்ளது. லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், 14 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துள்ளதன் மூலம், தே.மு.தி.க.,வின் தமிழக ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் கனவும் தவிடுபொடி ... |
| அன்புமணிக்கு அமைச்சர் பதவி இல்லை: வழக்கை காட்டி தள்ளிவைத்தது பா.ஜ., Posted: சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் இருப்பதால், பா.ம.க.,வின் அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளிக்க பா.ஜ., முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.அன்புமணி, ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்தவர் என்பதால், மோடி அமைச்சரவையில் இடம் பெற முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி அனந்தராமன் ஆகியோருடன், டில்லியில் முகாமிட்டிருந்தார்.இணை அமைச்சர் பதவியாவது...: அமைச்சர் பதவி வேண்டி, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை, பா.ம.க., குழு சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அப்போது, கேபினட் அமைச்சர் இல்லையென்றாலும், இணை அமைச்சர் ... |
| பதவியேற்பு விழா புறக்கணிப்பு: பிரதமரை சந்திக்க ஜெ., முடிவு Posted: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை, அ.தி.மு.க., புறக்கணித்தது. பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும், நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தமிழகத்தில் ஏற்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. பா.ஜ., சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்தது. தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு, பெரும்பான்மை கிடைக்காது என, முதல்வர் எதிர்பார்த்தார். ஆனால், பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெற்று, ஆட்சியை பிடித்தது. இதனால், தமிழகத்தில் அதிக இடங்களை பிடித்தும் பலனில்லாத நிலை, அ.தி.மு.க.,விற்கு ... |
| கலைஞர் 'டிவி'க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்: கனிமொழி உட்பட ஒன்பது பேர் ஜாமின் கோரி மனு Posted: புதுடில்லி: கலைஞர், 'டிவி'க்கு சட்ட விரோதமாக, 200 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உட்பட, ஒன்பது பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனு மீதான விசாரணை, நாளை நடைபெறும் என, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் குற்றம் சாட்டியது. இதுதொடர்பான வழக்கு ... |
| அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் Posted: கோல்கட்டா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. நவீன சொகுசு கார்களின் வருகையால், விற்பனை டல்லடித்ததால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.கடந்த 1950ல், இந்தியாவில் அறிமுகமானது, அம்பாசிடர் கார். இந்திய சாலைகளின் தரத்துக்கு ஈடுகொடுத்து, இயங்கக் கூடிய வகையில் இருந்ததாலும், பிரிட்டனில் தயாராகிய 'மோரிஸ் ஆக்ஸ்போர்டு' காரைப் போன்ற வடிவமைப்பில் ... |
| Posted: புதுடில்லி: டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள வளாகத்தில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாட்டின், 15வது பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களான, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே உள்ளிட்டோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். மோடி அமைச்சரவை சகாக்கள் குறித்த ஒரு பார்வை (இலாக்காக்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 27,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |