Tamil News | Online Tamil News |
- நரேந்திரமோடி பதவியேற்கும் நாள் பலன் எப்படி? ஆற்காடு ஜோதிடர் கணிப்பு
- பல மாநில கவர்னர் பதவிகள் காலியாகின்றன
- பிரதமராகும் முன் மோடியின் ராஜதந்திரத்திற்கு வெற்றி : இலங்கை, பாக்., சிறைகளில் மீனவர்கள் விடுதலை
- தி.மு.க., - மார்க்சிஸ்ட் தொழிற்சங்கங்கள் குடுமிப்பிடி: 27 ஆயிரம் 'நோக்கியா' தொழிலாளர் வெளியேற்றம்
- சுதீஷுக்கு பதவியை எதிர்பார்க்கும் விஜயகாந்த்: மோடி பதவியேற்பில் பங்கேற்கும் பின்னணி
- ராஜபக் ஷேவுக்கு எதிர்ப்பு: மோடியின் ராஜதந்திரம் புரியாமல் நடக்கும் கூத்து
- அரவிந்த் கெஜ்ரிவாலின் 96 சதவீத வேட்பாளர்களின் 'டிபாசிட்' காலி
- நரேந்திர மோடி பதவியேற்பு விழா புறக்கணிக்கிறார் தமிழக முதல்வர்?
- மோடி தலைமையில் பலமிக்க அரசு இன்று பதவியேற்பு: குறைந்த எண்ணிக்கையில் அமைச்சர்கள் நியமிக்க திட்டம்
- குறைந்த அமைச்சர்கள், சிறந்த ஆட்சி நிர்வாகம்: மோடியின் திட்டம்
- சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு டில்லி கோர்ட்டில் தயாளு இன்று ஆஜர்
- ஓட்டளிக்காத கிராமங்களுக்கு குடி தண்ணீர் மறுப்பு
| நரேந்திரமோடி பதவியேற்கும் நாள் பலன் எப்படி? ஆற்காடு ஜோதிடர் கணிப்பு Posted: நரேந்திர மோடி பதவியேற்கும் தினத்தின் பலன் அடிப்படையில், நாட்டில் விவசாய புரட்சி ஏற்படும்' என, ஆற்காடு ஜோதிடர் சோமசேகரன் கணித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:நரேந்திர மோடி, 1950 செப்டம்பர், 17ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சுக்லபட்ஷ சஷ்டியில், அனுஷம் நட்சத்திரத்தில், காலை, 11:00 மணிக்கு பிறந்துள்ளார். சனியின் ஆதிக்கத்தில், சனி மகா திசையில் பிறந்த, இவருக்கு தற்சமயம், சூரிய தசையில் சுக்ர புத்தி நடைபெறுகிறது.இவருடைய ஜாதகத்தில், கஜகேசரி யோகம், சந்திர மங்கள யோகம், வசுமதி யோகம், நீசபங்க ராஜயோகம், வலசி யோகம், லட்சுமி யோகம், எக்காள யோகம், பிரம்ம யோகம், ராஜயோகம் ... |
| பல மாநில கவர்னர் பதவிகள் காலியாகின்றன Posted: புதுடில்லி : மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான, புதிய அரசு பதவியேற்க உள்ளதால், கர்நாடக கவர்னர் பரத்வாஜ், பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல் உட்பட, பல மாநில கவர்னர்களின் நிலைமை, கேள்விக்குறியாக உள்ளது.மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இன்று பதவியேற்க உள்ளதால், கடந்த, காங்., ஆட்சியில் நியமிக்கப்பட்ட, மாநில கவர்னர்களின் நிலை, கேள்விக்குறியாகி உள்ளது.இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:தற்போதுள்ள கவர்னர்களில், கர்நாடக கவர்னர் பரத்வாஜ், அரியானா கவர்னர் ஜெகந்நாத் பகாடியா, திரிபுரா கவர்னர் தேவானந்த் கொன்வர், ... |
| பிரதமராகும் முன் மோடியின் ராஜதந்திரத்திற்கு வெற்றி : இலங்கை, பாக்., சிறைகளில் மீனவர்கள் விடுதலை Posted: புதுடில்லி:நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்கும் முன்பே, அவர் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கையாக, இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களை, தன் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்ததன் மூலம், சிறையில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்க வழி ஏற்படுத்தி உள்ளார்.அந்த இரு நாடுகளின் தலைவர்களும், இந்திய மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டுஉள்ளதால், மீனவர்களின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.'சார்க்' தலைவர்கள்குஜராத் முதல்வராக இருந்த, பா.ஜ.,வைச் சேர்ந்த நரேந்திர மோடி, இன்று பிரதமராக பொறுப்பேற்கிறார். பதவியேற்பு விழாவில் ... |
| தி.மு.க., - மார்க்சிஸ்ட் தொழிற்சங்கங்கள் குடுமிப்பிடி: 27 ஆயிரம் 'நோக்கியா' தொழிலாளர் வெளியேற்றம் Posted: சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா மொபைல்போன் உற்பத்தி நிறுவனத்தின், 27 ஆயிரம் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் சென்று விட்ட நிலையில், ஆலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம் என்பதில், தி.மு.க.,வின், எல்.பி.எப்., தொழிற்சங்கத்துக்கும், மார்க்சிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., சங்கத்துக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது.20 பேருக்காக போராட்டம்நோக்கியா ஆலையில், தி.மு.க.,வின், எல்.பி.எப்., தொழிற்சங்கத்தை செயல்பட விடாமல் தடுத்து, ஆளுங்கட்சி உதவியுடன், மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத்தை உருவாக்கிய பின், 27 ஆயிரம் தொழிலாளர்கள் ... |
| சுதீஷுக்கு பதவியை எதிர்பார்க்கும் விஜயகாந்த்: மோடி பதவியேற்பில் பங்கேற்கும் பின்னணி Posted: பொள்ளாச்சியில் தங்கி, சினிமா படபிடிப்பில் கவனம் செலுத்திய விஜயகாந்த், நேற்று முன்தினம் இரவு, சென்னை திரும்பினார். டில்லி யில், இன்று நடக்கும் மோடி பதவி யேற்பு விழாவில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளில், அவர் கவனம் செலுத்தினார்.எதிர்பார்ப்புதேர்தல் முடிவுகள் குறித்து எந்த கவலையும் கொள்ளாமல், தன் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும், 'சகாப்தம்' படவேலைகளை கவனிப்பதற்காக, கடந்த 10ம் தேதி, விஜயகாந்த் பொள்ளாச்சி சென்றார். அவருடன், மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோரும் சென்றனர். அங்கு தங்கி, படபிடிப்புகளை கவனித்து வந்த விஜயகாந்த், ... |
| ராஜபக் ஷேவுக்கு எதிர்ப்பு: மோடியின் ராஜதந்திரம் புரியாமல் நடக்கும் கூத்து Posted: இந்தியாவின் புதிய பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்ளும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக் ஷேவை அழைத்திருப்பது, ஏதோ செய்யக் கூடாத காரியத்தை, மோடி தரப்பினர் செய்துவிட்டது போல், தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூச்சலிடுகின்றனர். அதுமுழுக்க முழுக்க தவறான விஷயம் என்பதை தெரிந்திருந்தும், அவர்கள் ஏன் அப்படி கூக்குரலிடுகின்றனர் என்பது புரியவில்லை.சற்றும் பொருந்தாத விஷயம்அதுவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று, மோடி ஆதரவு அலை, பா.ஜ.,வுக்கான ஓட்டு களையெல்லாம் பெற்றிருக்கும் ம.தி.மு.க.,வின் வைகோ, இந்த விஷயத்தில் மிகத் தீவிரமாக ... |
| அரவிந்த் கெஜ்ரிவாலின் 96 சதவீத வேட்பாளர்களின் 'டிபாசிட்' காலி Posted: புதுடில்லி : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 434 தொகுதிகளில் போட்டியிட்ட, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின், 96 சதவீத வேட்பாளர்கள், 'டிபாசிட்'டை இழந்துள்ளனர்.ஊழல்வாதிகள் பட்டியல்பிற அரசியல்வாதிகளை, 'ஊழல்வாதிகள்' என பட்டியல் ெவளியிட்ட வழக்கில், 10 ஆயிரம் ரூபாய் பிணை செலுத்த மறுத்து, சிறையில் தொடர்ந்து இருக்கும் கெஜ்ரிவால், இன்று விடுதலை செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.பணம் அவருக்கு ஒரு தடையே இல்லை. அவரின் கட்சிக்கு நிதி, கோடிக்கணக்கில் உள்ளது. மாதம், 85 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தும் அவர், 10 ஆயிரம் ரூபாய் ... |
| நரேந்திர மோடி பதவியேற்பு விழா புறக்கணிக்கிறார் தமிழக முதல்வர்? Posted: சென்னை:மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் விழாவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா புறக்கணிக்கிறார். லோக்சபா தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் அமைக்கப்பட்ட, பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவை இடம் பெற்றன.தேர்தலில், இந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தாலும், பல தொகுதிகளில், இரண்டாம் இடத்தை பிடித்ததோடு, தி.மு.க.,வை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது. தமிழகத்தின், 39 தொகுதிகளில், பா.ஜ., அணி, இரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், திராவிட கட்சிகளுக்கு மாற்று அணியாக ... |
| மோடி தலைமையில் பலமிக்க அரசு இன்று பதவியேற்பு: குறைந்த எண்ணிக்கையில் அமைச்சர்கள் நியமிக்க திட்டம் Posted: புதுடில்லி: லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு பிரமிக்கத்தக்க வெற்றியைத் தேடித் தந்த நரேந்திர மோடி, 63, நாட்டின், 14வது பிரதமராக இன்று மாலை பதவியேற்கிறார். ஜனாதிபதி மாளிகை முன் உள்ள வளாகத்தில் நடைபெறும், கோலாகல பதவியேற்பு விழாவில், மோடியுடன், அமைச்சர்கள் சிலரும் பதவியேற்கின்றனர்.இருப்பினும், முந்தைய அரசில் இருந்ததை விட, குறைவான அளவிலேயே அமைச்சர்கள் எண்ணிக்கை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு வசதியாக, சில அமைச்சரவைகளை இணைத்து ஒன்றிணைக்கும் முயற்சிகளின் முதல்கட்ட நடவடிக்கைகள் துவங்கி விட்டன.'பதவியேற்பு விழாவை ஒட்டி, ஜனாதிபதி ... |
| குறைந்த அமைச்சர்கள், சிறந்த ஆட்சி நிர்வாகம்: மோடியின் திட்டம் Posted: புதுடில்லி:நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இன்று மாலை பதவியேற்க உள்ளது.'அமைச்சரவை மிகவும் சிறியாக இருக்கும். முந்தைய ஆட்சியில் இருந்தது போன்று, பெரியளவில் இருக்காது' என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.'அமைச்சர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல, சிறந்த ஆட்சி தான் முக்கியம். சிறிய அளவில் அமைச்சரவை இருந்தால் தான், நல்ல ஆட்சியை வழங்கமுடியும். இதற்காக பல்வேறு துறைகள் ஒன்றாக இணைக்கப்படும்' என மோடி கருதுகிறார்.ஆட்சி நிர்வாக நடைமுறையிலும் மாற்றங்களை மோடி செயல்படுத்த உள்ளார். உதாரணமாக போக்குவரத்து துறையின் கீழ் கப்பல், நெடுஞ்சாலை, ரயில்வே ... |
| சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு டில்லி கோர்ட்டில் தயாளு இன்று ஆஜர் Posted: புதுடில்லி:'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு மோசடியுடன் தொடர்புடைய, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் கருணாநிதியின் மனைவி தயாளு ஆகியோர், இன்று டில்லி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ராஜா பதவி வகித்த காலத்தில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற, ஸ்வான் டெலிகாம் நிறுவனம், 'கலைஞர் டிவி'க்கு, 200 கோடி ரூபாய் பணம் வழங்கியது தெரியவந்தது.தொலைத்தொடர்பு சேவைக்கான, அதாவது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதற்காக, லஞ்சமாகக் கொடுக் கப்பட்டதாக ... |
| ஓட்டளிக்காத கிராமங்களுக்கு குடி தண்ணீர் மறுப்பு Posted: மும்பை:காங்கிரசை சேர்ந்த முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, மகாராஷ்டிர மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்காத ஏராளமான கிராமங்களுக்கு, தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவித்து உள்ளனர்.மொத்தம், 48 லோக்சபா தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில், மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதில், ஆளும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.காங்கிரஸ் - 2, தேசியவாத காங்கிரஸ் - 4, பா.ஜ., - 23, சிவசேனா - 18 இடங்களில் வெற்றி பெற்றது.தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, தேசியவாத காங்கிரசை சேர்ந்த, துணை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 26,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |