ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிறை பிடிக்கிறது அலை sirai pidikkiradhu alai tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
- கனவு என் அருகில் நீ tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
- என் மௌனம் சிதருதடி உன்னால் en maunamum sitharuthadi unnaal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
- உன் மேல் மோதும் தென்றல் un Mel moodhum thenRal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
- இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம்
- ஆப்பிள் ஏன் விழுந்தது? - நியூட்டன் ‘பரபரப்பு’ பேட்டி!
- விருந்தும் மருந்தும் மூன்று நாள்
- முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
- தமிழன்னையை வாழ்த்தும் தமிழரசிக் குறவஞ்சி
- கோச்சடையான் விமர்சனம்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (28)
- தந்தையின் ஏக்கம் thanthaiyin Ekkam
- பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா?
- ஏற்றமிகு வாழ்வினி நமக்கில்லை!
- நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும்
- அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன்
- நீர்நிலைகளைப் பாதுகாக்க தனி துறை!
- கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?
- "மங்கலம்' பலவிதம்!
- திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர்
- புதுமைப் பெண் ராஜேஸ்வரி !!
| சிறை பிடிக்கிறது அலை sirai pidikkiradhu alai tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை Posted: 25 May 2014 11:52 AM PDT " நீ கடற்கறைக்கு சென்றாய் என்றால் அலையுடன் மோதுவதை நிருத்திக்கொள் !! " ஏன் என்றால் உன்னை இந்த அலைகள் சிறை பிடிக்கிறது !! " இது உனக்கே தெரியவில்லை நீ நீண்ட நேரம் அலையுடனே செலவுடுகிறாய் !!! ! " Ne kadaRkaRaikku senRaai enRal alaiyudan Moodhuvathai niruththikkol !! en enRaal " unnai intha alaikal sirai pidikkiradhu !! " idhu unakke theriyavillai nee neenda neeram alaiyudanee selavudukiraay !!! ! post % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை ... |
| கனவு என் அருகில் நீ tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை Posted: 25 May 2014 11:44 AM PDT " என் அருகில் நீ அடிக்கடி நடந்தாய் !! " எனக்கே உன் மீது கனவு காணும் நேரம் இப்ப தான் பார்த்தேன் உன் கண்களில் ஒரு கோபம் !! " ஏன் என்று புரியவில்லை எப்போழுதும் உன் நினைவுடன் இருக்கும் என்னிடத்தில் நீ என் அருகில் நடப்பதையே பார்க்காமல் நீ என் அருகில் இருப்பதை போல் கனவு !! " இதுவும் ஒரு கனவு என்று தான் கற்பனையில் இருக்கிறேன் என் அன்பானவள் உன் மீது காதலாய் !! " விழிக்கிறேன் " நீ கோபமாய் நிற்பதை " நினைவா கனவா " என்று குழம்புகிறேன் !!! ! post % எழுதியவர் % by manoranjan ulundurpet ... |
| என் மௌனம் சிதருதடி உன்னால் en maunamum sitharuthadi unnaal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை Posted: 25 May 2014 11:38 AM PDT " என் மௌனம் சிதருதடி உன்னால் உன் கண்ணும் உன் உதடும் மௌனமாய் இருக்கிறது !! " என் மௌனத்தை உன் கண்ணாலையே கலைத்தாயடி !! " இதை கண்டும் கானாமலும் சிரிக்குதடி உன் உதடு இது நாயமா !!! ! "en maunamum sitharuthadi unnaal un kaNNUm un uthadum un ithayamum maunamaay irukkiRadhu !! " en maunaththai un naNnaalaiye kalaiththaayadi !! " ithai kaNdum kaanaamalum sirikkuthadi un uthadu ithu naayamaa !!! ! post % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை |
| உன் மேல் மோதும் தென்றல் un Mel moodhum thenRal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை Posted: 25 May 2014 11:32 AM PDT " உன் மேல் மோதும் தென்றல் எப்பொழுதும் திலையாய் இருப்பது இல்லை !! " ஏன் என்றால் நீ பார்க்க முடியாத தொலைவில் நான் இருந்தாலும் சற்றே யோசிக்காமல் " என்னிடம் வந்து சேர்கிறது !! " அலைப்பாயும் உன் கண்கள் இதனாலையே நான் எங்கு இருந்தாலும் கண்டு பிடித்து விடுகிறது !!! ! " un Mel moodhum thenRal eppoozuthum nilaiyaai eruppadhu illai !! " een enRaal nee paarkka mudiyaatha tholaivil naan irunthaalum sartree yeosikkaamaL ennidam vanthu seerkiRadhu !! " alaippaayum un kangal ithanaalaiye ... |
| இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Posted: 25 May 2014 11:28 AM PDT இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ் இலங்கையில் பிரிவினையை எதிர்ப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மும்பாய் வாழ் தமிழர் சேஷாத்ரி சாரி கூறியுள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தளபதிகளில் முக்கியமானவர் சேஷாத்ரி சாரி. இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான 'ஓர்கனைசர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்பதுடன் பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து ... |
| ஆப்பிள் ஏன் விழுந்தது? - நியூட்டன் ‘பரபரப்பு’ பேட்டி! Posted: 25 May 2014 11:20 AM PDT நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை உரையாடல்! நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா? நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன். நிருபர்: அப்போதுதான் ... |
| விருந்தும் மருந்தும் மூன்று நாள் Posted: 25 May 2014 08:20 AM PDT ஒருவீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறோம் என்றால், காலையில் போய் விட்டு மாலைக்குள் திரும்பி விடுவது தான் மரியாதை. அங்கேயே ஒருவாரம், பத்துநாள் "டேரா' போடுவது என்பதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்துவராது. மீறி தங்கினால், தேவையற்ற கருத்து வேறுபாடுதான் வரும். பெற்றவர்கள் கூட, பிள்ளைகள் வீட்டில் குறைந்த நாள் தான் தங்க வேண்டிய சூழல் இருக்கிறது. விலைவாசி மற்றும் குடும்பச்சூழல் அப்படி! ஒரு கதையைக் கேளுங்க! ஒரு வாத்து முட்டைகளை குஞ்சு பொரித்தது. எப்படியோ, அன்னப்பறவையின் முட்டை ஒன்றும் அதனுள் கலந்து விட்டது. ... |
| முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Posted: 25 May 2014 08:16 AM PDT மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதன் பின்னணி என்னவென்று தெரியுமா? கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான். தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் ... |
| தமிழன்னையை வாழ்த்தும் தமிழரசிக் குறவஞ்சி Posted: 25 May 2014 08:03 AM PDT தமிழின் பிரபந்த இலக்கிய வகைகளுள் ஒன்று குறவஞ்சி. குறத்தி குறி சொல்லுதல் முதன்மையானதால் இது குறவஞ்சியாயிற்று. இது பாட்டுடைத் தலைவியின் பெயரால் தமிழரசி குறவஞ்சியாயிற்று. தலைவன் பவனி வரும்போது தோழியருடன் சென்ற தலைவி அவனைக் கண்டு காதலுற்று வருந்துவாள். அவள் வருத்தத்தைப் போக்க தோழியர் குறத்தி ஒருத்தியை அழைத்து குறி கேட்டிருப்பார்கள். குறத்தி தன் நாடு, மலை, ஊர் வளங்களைக் கூறி, பின் தலைவன் விரைந்து வந்து தலைவியை மணந்து கொள்வான் என்று குறி சொல்வாள். தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் அ.வரதநஞ்சைய ... |
| Posted: 25 May 2014 07:59 AM PDT ஈகரையில் இது என் முதல் விமர்சனம் வார்த்தைகளில் பிழை இருந்தால் மன்னிக்கவும் நன்றி. இரண்டு நாடுகள் - கோட்டையபட்டினம், கலிங்கபுரி. கோட்டயபட்டினத்தின் நாட்டின் அரசர் (நாசர்), அவரின் படைத்தளபதி கோச்சடையான் (ரஜினி), கோச்சடையான் நாட்டின் சிறந்த வீரர் மற்றும் படைத்தளபதியாய் பல நாடுகளை கைபற்றி அவரது நல்ல உள்ளம் மற்றும் வீரத்தினால் நாட்டின் மக்கள் மற்றும் அனைவரின் உள்ளத்தில் இடம் பிடிக்கிறார். இது அரசராகிய நாசருக்கு பிடிக்கவில்லை, கோச்சடையான் மீது பொறாமை கொள்கிறார். தக்க சமயத்தில் எதிர் நோக்கி ... |
| Posted: 25 May 2014 07:56 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| தந்தையின் ஏக்கம் thanthaiyin Ekkam Posted: 25 May 2014 04:43 AM PDT " தூக்கிக்கொஞ்ச சொல்கிறது கைகள் !! " உனக்கு தாவணி வயது வந்ததையே மறந்து !!! " தந்தையின் ஏக்கம் " ! " thookkikkonja solkirathu kaikal !! " unakku thaavaNI vayadhu vanthathaiyee maRanthu !!! " thanthaiyin eekkam " ! post % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை |
| Posted: 25 May 2014 04:34 AM PDT தமிழக அரசு சின்னங்களில் மாநில மரமாக இடம்பெற்றிருக்கும் பனை மரம் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக வெட்டப்பட்டு அழிவின் விளிம்பினை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும். மாநில அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், மாநில மலர் செங்காந்தள், மாநில பறவை மரகதப் புறா, மாநில விலங்கு வரையாடு, மாநில விளையாட்டு சடுகுடு, மாநில நாள்காட்டி திருவள்ளுவர் ஆண்டு, மாநிலத் திருநாள் தைப் பொங்கல் போன்ற மாநில சின்னங்களின் வரிசையில் மாநில ... |
| Posted: 25 May 2014 01:01 AM PDT மனிதத்தை மதியாதவர் இருக்குவரை மதவாதப் பித்தருக்கும் மதிப்பிருக்கும் இனவாதம் பேசுகின்ற மூடர்க்கும்தான் இன்பமான வாழ்வுக்கு இடமிருக்கும்! அன்பினிலே தழைத்திடுமே இவ்வையம் ஆன்றோர் மொழிந்திட்டார் அந்நாளே! பண்பிலே சிறந்தவர்க்குப் பதவியெனும் பேருண்மை நிலைப்பதுவும் எந்நாளோ! வில்லினின்று புறப்பட்ட தீயம்பு நல்லறத்தை வீழ்த்திச் சாய்த்ததுவே பொல்லாதவர் விரித்த வலையினிலே ஜனநாயகம் மாய்ந்து போனதுவே! கல்லாரும் கயவரும் வாழ்த்துரைக்கப் புல்லருக்குப் புகழ்மாலை சேர்ந்ததிங்கே நல்லார் வாழ்வினி ... |
| நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும் Posted: 25 May 2014 12:05 AM PDT ''தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் அல்ல.. உள்நாட்டுக்குள்ளேயே யுத்தம் தொடங்கிவிட்டது. ஆனாலும், நாம் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறிக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார் பியூஷ் மானுஷ். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது பியூஷ் மானுஷின் குடும்பம். பியூஷ் பிறந்தது சேலம் என்பதால் அவர் தமிழராகவே மாறிவிட்டார். முற்போக்கு சிந்தனை கொண்ட பியூஷ் கல்லூரியில் படிக்கும்போதே கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். விளைவு, இரண்டாம் ஆண்டிலேயே வீட்டுக்கு வழியனுப்பப்பட்டார். படித்தது போதும் என முடிவுக்கு ... |
| அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன் Posted: 24 May 2014 11:54 PM PDT தமிழ்த்திரை உலகப் பின்னணிப் பாடகர்களில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் அவர்கள் குரலின் சாயலில் அற்புதமாக பாடி இவர் சாதனை படைத்தார். 'டி.எம்.எஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை. தந்தை மீனாட்சி அய்யங்கார். தாயார் வெங்கடம்மாள். சவுந்தர்ராஜனுக்கு சிறு வயது முதலே பாடுவதிலும், நடிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. சினிமாவில் எப்படியாவது நடித்து பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாய்ப்பு கேட்டு, ... |
| நீர்நிலைகளைப் பாதுகாக்க தனி துறை! Posted: 24 May 2014 11:34 PM PDT தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாத நிலையில், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் தமிழகம் மீண்டும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. கோடைகாலத்தில் குளங்கள், கிணறுகளில் இருக்கும் தண்ணீரும் வறண்டு, நதிகள் மணற்பாங்காய் காட்சி தருகின்றன. தமிழகம், தனது தண்ணீர் தேவைகளுக்காக ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு நாம் நமது நீர்நிலைகளைப் பாதுகாக்க தவறியதே காரணம். ஆறுகள், கால்வாய்கள்தான் ... |
| கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Posted: 24 May 2014 08:43 PM PDT ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூவம் சுத்தமாக இருந்ததாகவும், அதில் படகுகள் சென்றதாகவும் ஒரு கற்பனையான நம்பிக்கை சமீபகாலமாக வலுவடைந்து வருகிறது. கூவத்தைச் சுத்தப்படுத்த ரூ. 3,833 கோடியில் மற்றுமொரு புதிய திட்டத்தை அரசு இப்போது தொடங்கியுள்ள நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூவம் ஆறு எப்படி இருந்தது என்று சிந்திக்க இது நல்ல தருணம்தான். கூவம் கடைசியாக எப்பொழுது சுத்தப்படுத்தப்பட்டு, நல்ல தண்ணீர் ஓடியது என்று தேடினால், ஆதாரங்கள் மிகவும் குழப்பமாக உள்ளன. 1780-களை ஒட்டி காஞ்சீவரம் பச்சையப்ப வள்ளல், ... |
| Posted: 24 May 2014 08:28 PM PDT அரசர்களது வாழ்வில் திருமணம் என்பது முக்கியமான ஒன்று. அது சுயம்வரமாகவோ, காந்தர்வமாகவோ இருக்கலாம். மணப்பெண் ஒருத்தி, தான் காதலிக்கும் மன்னனுக்கு மாலையிட்டு அவனைத் தன் மணாளனாக ஏற்றுக்கொள்கிறாள். இதை "மணமங்கலம்' என்பர். அரசனின் பிறந்த நாளன்று அவன் அரியணையில் வீற்றிருந்து ஆடல் பாடல்களைக் கேட்டு ரசிப்பான். புலவர்களும், ஆடல் மகளிரும் அவனிடம் பரிசில் பெற்றுச் செல்வர். இப்பிறந்த நாள் "நாள்மங்கலம்' எனப்படும். அரசன் நீராடுவதே ஒரு திருவிழாவைப் போல இருக்கும். பெண்கள் தங்கள் கைகளால் பொற்குடங்களில் ... |
| திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் Posted: 24 May 2014 08:26 PM PDT ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்றவுடன் அதைப் பொறுப்பாக திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையில் சேர்த்துவிடுகிறார் திருச்சி புள்ளம்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தயாபரன். மொத்தமாகச் சேரும் தொகை அந்த ஆண்டில் திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது. நேற்று, இன்றல்ல.. 17 ஆண்டுகளாக இதை ஒரு கடமையாக நினைத்துச் செய்கிறார் தயாபரன். ''எனக்கு தமிழ்ப் பற்று அதிகம். ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முன்பே, அதாவது 20 வயதிலிருந்தே கிராமத்து மாணவர்களுக்கு திருக்குறள், மூதுரை, ... |
| Posted: 24 May 2014 07:44 PM PDT அந்த வீட்டில் ஒருவகைப் பரபரப்பு ஒவ்வொருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌன மொழி பேசிக் கொண்டிருந்தனர்.சரஸ்வதி அழுது கொண்டே கணவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.கணவன் மணியன் வீட்டின் முகட்டை வெறித்தவராக உற்காந்திருந்தார். எப்பொழுதம் கலகலப்பாக இருக்கும் அக்குடும்ப குளத்தில் யாரோ கல்லெறிந்துவிட்டார்களொ தெரியவில்லை.அக்கம் பக்கத்தினரெல்லாம் சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போன்று இல்லாத பொல்லாததெல்லாம் கதைக்கத்தொடங்கிவிட்டனர். மணியனுக்கு நான்கு பிள்ளைகள் மூத்தவள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |