Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மோடி பதவியேற்புக்கு 'சார்க்' தலைவர்களை அழைத்தது ஏன்? பா.ஜ., மூத்த தலைவர் விளக்கம்

Posted:

புதுடில்லி: ''நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, 'சார்க்' நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது, இந்திய ஜனநாயகத்தின் வலிமையை காட்டவே. இருதரப்பு பிரச்னைகள் அடிப்படையில், அதை உருவகப்படுத்தி பார்க்கக் கூடாது,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.'சார்க்' நாடுகள்: தெற்கு ஆசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கமான - சார்க் அமைப்பில், இந்தியா தவிர, பாகிஸ்தான், பூடான், இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நரேந்திர மோடி தலைமையிலான, புதிய அரசின் பதவியேற்பு ...

கிரண் பேடிக்கு பா.ஜ.,வில் கடும் எதிர்ப்பு

Posted:

புதுடில்லி: 'டில்லி முதல்வராக, நாட்டின் முதல் பெண், ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடியை தேர்ந்தெடுக்கக் கூடாது' என, டில்லி மாநில, பா.ஜ.,வில் எதிர்ப்புக்குரல் வலுத்துள்ளது.அனைத்தையும் அள்ளியது: சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 70 இடங்களில், 31ல் வெற்றி பெற்றிருந்த பா.ஜ., ஆட்சி அமைக்கவில்லை. மிகக் குறைவாக, 27 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருந்த ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால், முதல்வரானார்; 49 நாட்களிலேயே, பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பா.ஜ., ...

மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு 'கட் - ஆப்' உயரும்: கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி

Posted:

சென்னை: ''நடப்பாண்டில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என, கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:இன்ஜினியரிங்: இன்ஜினியரிங் படிப்பிற்கு, கணிதம், 100; வேதியியல், 50; இயற்பியல், 50 என, மொத்தம், 'கட் - ஆப்' மதிப்பெண், 200. தமிழகத்தில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இன்ஜினியரிங், கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க, இம்மாதம், 27ம் தேதி கடைசி தேதி. அதன்பின், அனைத்து விண்ணப்பங்களும் ஆய்வு செய்து, முதலாவதாக, 'ரேண்டம்' எண் வெளியிடப்படும். ஒரே, ...

கட்சியை பா.ஜ.,வில் இணைப்பாரா விஜயகாந்த்?நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பு

Posted:

தே.மு.தி.க.,வை கைகழுவி விட்டு, விஜயகாந்த், பா.ஜ., தலைமையை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.கடந்த, 2005ல் துவங்கப்பட்ட, தே.மு.தி.க., 2006ல் சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலையும், 2009ல் லோக்சபா தேர்லையும், பல சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலையும் தனியாக சந்தித்தது.இதன் மூலம், ஓட்டு வங்கி பலத்தை, அரசியல் களத்தில் உணர்த்தி, அ.தி.மு.க., - -தி.மு.க.,விற்கு அடுத்து, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையைப் பெற்றது. 2011 சட்டசபை தேர்தலில், முதல் முறையாக அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து ...

பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தும் விவகாரம்: மோடியை சந்திப்பாரா ஜெ.,

Posted:

சென்னை:ஜூன் மாத துவக்கத்தில், தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. அதற்கு முன், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. இந்த அணை தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட், கடந்த, 7ம்தேதி தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. 'அணையின் நீர்மட்டத்தை, 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம். கேரளா ...

தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் ஏன்? மாவட்ட அமைப்புகள் கலைக்கப்படுமா?

Posted:

தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்கு, அடுத்த மாதம், 2ம் தேதி சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூடுகிறது. அக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட, 24 பேர் பங்கேற்க உள்ளனர். அனைத்து மாவட்ட நிர்வாகத்தையும், கூண்டோடு கலைத்து விட்டு, உட்கட்சி தேர்தல் மூலம் புதிய நிர்வாகத்தை கொண்டு வரும் வகையில், அதிரடி முடிவு எடுக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.சரிவுக்கான காரணங்களை: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற ஓட்டு சதவீதத்தை விட, 20 சதவீதம் ஓட்டு, தி.மு.க.,வுக்கு குறைந்துள்ளது. பெரும் சரிவுக்கான காரணங்களை ...

ஆளும் கட்சிக்கு ஒத்துழைக்காத போலீஸ் அதிகாரிகள் மாற்றம்?

Posted:

தேர்தல் பணியின் போது, ஆளும் கட்சிக்கு ஒத்துழைக்காத, போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு, சரியாக பணி செய்யாத அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை, முதல்வர் ஜெ., பதவி நீக்கம் செய்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் கமிஷனின் உத்தரவுபடி, லோக்சபா தேர்தலின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சில போலீசார், ஆளும் கட்சி அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என, கட்சியினர், தலைமைக்கு புகார் அனுப்பி உள்ளனர். இவர்கள் பற்றிய பட்டியலையும், தேர்தலில், ஆளும்கட்சிக்கு ...

ஆம் ஆத்மியிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகல்: அரவிந்த் கெஜ்ரிவால் மீது சரமாரி குற்றச்சாட்டு

Posted:

''ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி ஜனநாயகமே இல்லை. அரவிந்த் கெஜ்ரி வாலைச் சுற்றி, ஜால்ரா கூட்டம் தான் உள்ளது. இந்த கூட்டத்தை தாண்டி, அவரைச் சந்திக்கவோ, பேசவோ, முறையிடவோ, இயலாத காரணத்தால், இனியும் கட்சியில் நீடிப்பது, அர்த்தமில்லாத செயல்,'' என கூறி, அக்கட்சியை விட்டு, ஷாஜியா இல்மி என்ற பெண் பிரமுகரும், கேப்டன் கோபிநாத்தும் வெளியேறியுள்ளனர். அந்த கட்சியின், மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான, ஷாஜியா இல்மி, நேற்று, கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். சந்திக்க முடியவில்லை: டில்லியில், நிருபர்களை சந்தித்த இல்மி ...

காங்., பார்லிமென்ட் கட்சி தலைவராக சோனியா மீண்டும் தேர்வு: பலமான எதிர்க்கட்சியாக செயல்பட போவதாக உறுதி

Posted:

புதுடில்லி: காங்கிரஸ் பார்லிமென்ட் கட்சித் தலைவராக சோனியா நேற்று தேர்வு செய்யப்பட்டார். ''காங்கிரஸ் இம்முறை தோல்வி அடைந்துள்ளது; தோல்வி அடைவது, காங்கிரசுக்கு இது முதல் முறையல்ல. இதற்கு முன், தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், அதிலிருந்து, மீண்டெழுந்து வந்துள்ளது,'' என, பார்லிமென்டரி கட்சித் தலைவராக தேர்வான பின் பேசிய, சோனியா தெரிவித்தார்.சமீபத்தில் நடந்த, 16வது லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், இதற்கு முன் இல்லாத வகையில் படுதோல்வி அடைந்தது. 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க முடியாத சூழ்நிலை ...

மோடி அரசு சந்திக்கும் சவால்கள் அதிகம்: முந்தைய அரசின் பாதிப்பு நிறைய உண்டு

Posted:

புதுடில்லி: முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையை பெற்றுள்ள பா.ஜ.,வின் நரேந்திர மோடி, நாளை நாட்டின், 14வது பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அவர் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டிஉள்ளது.பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த மன்மோகன் அரசு ஏற்படுத்தியிருந்த பல குழப்பங்களை சீர் செய்வது, புதிய திட்டங்களை செயல்படுத்துவது போன்றவை, 'பிரதமர்' மோடியின் முக்கிய சவால்களாக இருக்கும் என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.பலத்த வெற்றி: கடந்த 2009ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், 206 இடங்களில் வெற்றி ...

மோடி அழைப்புக்கு நவாஸ் ஷெரீப் சம்மதம்: பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறார்

Posted:

புதுடில்லி:நாட்டின், 14வது பிரதமராக, பாரதிய ஜனதாவை சேர்ந்த, நரேந்திர மோடி நாளை பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். 'சார்க்' நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தரப்பில், அதன் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் பங்கேற்கின்றனர்.சமீபத்தில் நடந்த, 16வது லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ., மட்டும், 282 இடங்களைப் பிடித்து, தனிப்பெரும்பான்மை பெற்றது.இதையடுத்து, பா.ஜ., பார்லிமென்டரி கட்சித் தலைவராக, நரேந்திர மோடி தேர்வு ...

பொய்யான வாக்குறுதி கொடுத்தால் தோல்வி அடையச் செய்யும் காந்தி ஆஸ்ரமம்

Posted:

பீகார் மாநிலம் மேற்கு சம்ப்ரான் மாவட்டம், வால்மீகி நகர் லோக்சபா தொகுதி்க்குட்பட்ட பிடிஹார்வா கிராமத்தில் உள்ளது ஒரு காந்தி ஆஸ்ரமம். சமீபத்திய லோக்சபா தேர்தலின்போது, கிராமம் கிராமமாக பிரசாரத்துக்கு சென்ற அரசியல் கட்சித் தலைவர் எவரும் இந்த ஆஸ்ரமத்துக்கு மட்டும் செல்லவில்லை. இவ்வளவுக்கும் சாதாரண நாட்களில் அரசியல் தலைவர்கள் இங்கு வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்த தொகுதியில் தற்போது பிரசாரம் செய்த நரேந்திர மோடி, சோனியா, லாலு, சபாநாயகர் மீரா குமரா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட எவருமே பிரசாரத்தின்போது இந்த ஆஸ்ரமத்திற்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™