Tamil News | Online Tamil News |
- நவாஸ் ஷெரீப், கர்சாய், ராஜபக்ஷேவுக்கு அழைப்பு: மோடி பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்: அன்புமணி, வைகோ பங்கேற்பார்களா?
- ஒரு சில மாதங்களில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள்: பிரதமராக பொறுப்பேற்றதும் அறிவிக்கிறார் மோடி
- பா.ஜ., கூட்டணியில் யாருக்கு பதவி? ஜெயித்தவர் - தோற்றவர் இடையே கடும் போட்டி
- மோடி அறிவுத்திறன், உழைப்பு: கருணாநிதி வாழ்த்து
- அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்: சங்கர் சிங் வகேலா வலியுறுத்தல்
- பிணைத்தொகை செலுத்த மறுத்த கெஜ்ரிவாலுக்கு சிறை: அவதூறு வழக்கில் டில்லி கோர்ட் அதிரடி உத்தரவு
- ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே பணிபுரியும் அரசு ஊழியர்கள்: விடுமுறையை குறைக்க வழக்கு
- பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு: முதல்வர் நிகழ்ச்சி ரத்தால் சர்ச்சை
- அரசு ஊழியர்களிடம் தி.மு.க., செல்வாக்கு சரிவு: லோக்சபா தேர்தலில் வெட்ட வெளிச்சம்
| Posted: புதுடில்லி: நாட்டின், 15வது பிரதமராக, பா.ஜ.,வின் நரேந்திர மோடி, வரும் திங்கள் கிழமை பொறுப்பேற்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கன் அதிபர் கர்சாய், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்ஷே உறுதி தெரிவித்துஉள்ளதால், இலங்கை தமிழர் விவகாரத்தை காரணம் காட்டி, பா.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்களான, ம.தி.மு.க.,வின் வைகோ, பா.ம.க.,வின் அன்புமணி ஆகியோர் அந்தநிகழ்ச்சியில் பங்கேற்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.டில்லி, பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த, பா.ஜ., - ... |
| ஒரு சில மாதங்களில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள்: பிரதமராக பொறுப்பேற்றதும் அறிவிக்கிறார் மோடி Posted: புதுடில்லி: நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களை, ஒரு சில மாதங்களில் அறிவிக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், சொல்லிக் கொள்ளும் வகையில், பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஏராளமான ஊழல்களும், முறைகேடுகளும் அம்பலமான தால், புதிய திட்டங்களை வடிவமைக்கவும், செயல்படுத்தவும் அதிகாரிகள் முன்வரவில்லை. இம்மாதம் 26ல், பிரதமராக பொறுப்பேற்க உள்ள, பா.ஜ.,வின் மோடி, மத்திய அரசின் தலைமை செயலராக கருதப்படும் ... |
| பா.ஜ., கூட்டணியில் யாருக்கு பதவி? ஜெயித்தவர் - தோற்றவர் இடையே கடும் போட்டி Posted: தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி; தோற்றவர்களும் மத்தியில் அமைச்சராவதற்கு முயற்சிப்பதால், பா.ஜ., கூட்டணியில் யாருக்கு பதவி என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைக்கப்பட்ட, தேசிய ஜனநாயக கூட்டணியில், இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற்று, எம்.பி., ஆகி உள்ளனர். மற்ற கட்சிகளும், அதன் தலைவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே பா.ஜ., எம்.பி, என்ற அடிப் படையிலும், கட்சியின் மாநில தலைவர் என்ற முறையிலும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, பா.ஜ., வட்டாரத்தில் ... |
| மோடி அறிவுத்திறன், உழைப்பு: கருணாநிதி வாழ்த்து Posted: சென்னை: புதிய பிரதமராக, பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, வாழ்த்து தெரிவித்து உள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி, வரும் 26ம் தேதி, பதவி ஏற்கவுள்ளார். அவருக்கு, கருணாநிதி நேற்று அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: பா.ஜ., கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டத்தில், ஒரு மனதாக, நீங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். குஜராத்தில் வியக்கத்தக்க பணிகளை மேற்கொண்ட நீங்கள், இன்று நாட்டின் உயர்ந்த நிலையை அடைந்து ... |
| அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்: சங்கர் சிங் வகேலா வலியுறுத்தல் Posted: காந்திநகர்: ''அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்; அதற்கு மோடி முயற்சிக்க வேண்டும்,'' என, குஜராத் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர், சங்கர் சிங் வகேலா, 73, பேசினார்.குஜராத் சட்டசபையில் நேற்று, மோடிக்கு நடந்த பிரிவுபசார விழாவிற்காகவும், புதிய முதல்வர் தேர்வுக்காகவும் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தில், சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவரும், பா.ஜ., முன்னாள் முதல்வருமான சங்கர் சிங் வகேலா, மனம் திறந்து பேசியதாவது: குஜராத்திலிருந்து இரண்டு பேர் பிரதமராகியுள்ளனர். அவர்களில் ஒருவர் மொரார்ஜி தேசாய், மற்றொருவர் மோடி. இருவருக்கும், கோத்ரா நகருடன் தொடர்பு உண்டு. ... |
| பிணைத்தொகை செலுத்த மறுத்த கெஜ்ரிவாலுக்கு சிறை: அவதூறு வழக்கில் டில்லி கோர்ட் அதிரடி உத்தரவு Posted: புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த, அவதூறு வழக்கில், பிணைத்தொகை செலுத்த மறுத்ததை அடுத்து, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இரண்டு நாள் சிறைத் தண்டனை விதித்து, டில்லி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.ஊழல் பட்டியல்: ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சில மாதங்களுக்கு முன், 'இந்தியாவில், ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள்' என்ற பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில், பா.ஜ., மூத்த தலைவர் நிதின் கட்காரியின் பெயரும், இடம் பெற்று இருந்தது. அதிருப்தி ... |
| ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே பணிபுரியும் அரசு ஊழியர்கள்: விடுமுறையை குறைக்க வழக்கு Posted: மதுரை: அரசு அலுவலர்கள் விடுமுறை நாட்கள் தவிர்த்து, ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டும் பணிபுரிவதாகவும், சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி விடுமுறை நாட்களை குறைக்க கோரியும் தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.திருச்சி வயலூர் வக்கீல் இளமுகில் தாக்கல் செய்த பொது நல மனு: அரசு ஊழியர்கள் சனி, ஞாயிறு 104 நாட்கள், தேசிய மற்றும் பிற விடுமுறைகள் (மத்திய மற்றும் மாநில அரசு) 18, தற்செயல் விடுப்பு 15, ஈட்டிய விடுப்பு 15, மருத்துவ விடுப்பு 12, என மொத்தம் 164 நாட்கள் விடுமுறையை அனுபவிக்கின்றனர். அனைத்து அரசு அலுவலர்களும் ஆண்டுக்கு 196 நாட்கள்தான் பணிபுரிகின்றனர். பள்ளிகள் 220 ... |
| பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு: முதல்வர் நிகழ்ச்சி ரத்தால் சர்ச்சை Posted: சென்னை: தலைமைச் செயலகத்தில், ராஜீவ் நினைவு தினத்தன்று, முதல்வர் தலைமையில் நடக்கும், பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ராஜீவ் நினைவு தினமான, மே 21ம் தேதி, அரசு சார்பில், பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கும். தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்கள் முதல்வர் தலைமையிலும், மாவட்டங்களில், அரசு ஊழியர்கள், கலெக்டர் தலைமையிலும், போலீசார் எஸ்.பி., தலைமையிலும், உறுதிமொழி ஏற்பர். இந்தாண்டு, ராஜீவின் 23வது ஆண்டு நினைவு தினம், நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது.காலை 11:00 மணிக்கு: ... |
| அரசு ஊழியர்களிடம் தி.மு.க., செல்வாக்கு சரிவு: லோக்சபா தேர்தலில் வெட்ட வெளிச்சம் Posted: அரசு ஊழியர்களிடமும், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருவது, தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். காலம் காலமாக இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தது. ஆனால், அது தற்போதைய தேர்தல் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது.சரிவு: அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சி மாறி, மாறி வந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், பெரும்பாலானோர் தி.மு.க., ஆதரவாளர்களாக இருந்து வந்தனர். போலீசாரில் அ.தி.மு.க., விற்கு ஆதரவு அதிகம். சமீப காலமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 22,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |