Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காங்கிரஸ் உறவால் வினை: தோல்வியால் மாயாவதி விரக்தி

Posted:

லக்னோ: ''காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுடன் உறவு வைத்திருந்த அனைத்து கட்சிகளும், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளன. இந்த வரிசையில், எங்கள் கட்சியும் இணைந்து விட்டது,'' என, தேர்தல் தோல்விக்கு, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, விரக்தியுடன் விளக்கம் அளித்தார்.

உ.பி.,யில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள, மாயாவதியின் பகுஜன் சமாஜ், இந்த தேர்தலில், அங்கு, ஒரு தொகுதியில் கூட, வெற்றி பெறவில்லை. இதுகுறித்து, மாயாவதி நேற்று கூறியதாவது: காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசின் ஊழல்களால், நாடு முழுவதும் உள்ள மக்கள், அந்த கூட்டணி மீது, கடும் கோபத்திலும், அதிருப்தியிலும் ...

சீமந்திராவில் தெ.தே., - பா.ஜ., வெற்றி: புனர்வாழ்வு பெற்ற பிரபலங்கள்

Posted:

ஐதராபாத்: ஆந்திராவில், கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களில் தோல்வியை சந்தித்த, அரசியல் பிரபலங்கள் பலர், இம்முறை, சட்டசபைக்கு தேர்வாகி உள்ளனர். இவர்கள் புதிய சீமந்திரா மாநிலத்தில், தங்களின் சட்டசபை கடமைகளை நிறைவேற்ற உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை, சீமந்திரா, தெலுங்கானா என, இரண்டாகப் பிரிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும், அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளன. சீமந்திரா பகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் இரண்டாம் இடம் ...

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா? தேர்தல் தோல்வி எதிரொலி

Posted:

பாட்னா: பீகாரில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று, மாநில முதல்வர், நிதிஷ்குமார் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கிய அவர், அடுத்த அரசு பதவியேற்க ஏதுவாக, சட்டசபையை கலைக்க வலியுறுத்தவில்லை. இதையடுத்து, புதிய அரசு அமைக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் ஓரணியாகவும், பா.ஜ., மற்றும் அதிருப்தி ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து மற்றொரு அணியாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.17 ஆண்டு கால ...

காங்கிரஸ் எதிர்ப்பு அலையால் பாதிக்காத கேரளா: முதல்வர் உம்மன் சாண்டியின் கை ஓங்கியது

Posted:

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 20 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி, 12 இடங்களைப் பிடித்துள்ளதால், முதல்வர் உம்மன் சாண்டியின் கை ஓங்கியுள்ளது. அத்துடன், காங்கிரசுக்கு எதிரான அலையிலிருந்து தப்பிய மாநிலம் என்ற பெயரையும் கேரளா பெற்றுள்ளது.
நூற்றுக்கு நூறு வெற்றி:
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ஆறு மாநிலங்களில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளையும், பா.ஜ., பிடித்ததன் மூலம், அங்கு, நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன், காங்கிரஸ் உட்பட, இதர கட்சிகள் ஆளும், பீகார் ...

தலைநகர் டில்லி வந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு: பிரதமராக 20ம் தேதி பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் தேர்வு

Posted:

புதுடில்லி,:லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று, நாடு முழுவதும் அந்தக் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தி வரும் நிலையில், நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள, நரேந்திர மோடி, நேற்று, குஜராத் மாநிலத்திலிருந்து, தலைநகர் டில்லி வந்தார்.இதுவரை நடந்த லோக்சபா தேர்தல்களில் இல்லாத வகையில், பா.ஜ., வரலாற்று சாதனை படைக்க காரணமாக இருந்த மோடி, டில்லி விமான நிலையம் வந்திறங்கியதும், விமான நிலைய வளாகத்தில், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் உட்பட, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.பின், விமான நிலையத்திற்கு ...

கங்கையை சுத்தப்படுத்துவேன்: மோடி

Posted:

வாரணாசி:''வாரணாசி, புனித நகரம்; இங்கு உள்ள கங்கை நதியை சுத்தப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்; அதை கட்டாயம் செய்வேன்,'' என, பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி பேசினார்.உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, நேற்று அங்கு சென்று, காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதன்பின், கங்கை நதிக்கரையில் நடந்த கங்கா ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.அங்கு, அவர் பேசியதாவது:என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த வாரணாசி தொகுதி மக்களுக்கு, தலை வணங்குகிறேன்; அவர்களுக்கு நன்றி. இந்த தொகுதியில் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் ...

காங்., தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் ராஜினாமா?தேர்தல் தோல்விக்காக பதவிகளை துறக்க திட்டம்

Posted:

புதுடில்லி: நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதால், தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, பதவிகளை ராஜினாமா செய்ய, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகனும், கட்சியின் துணைத் தலைவர் ராகுலும் முடிவு செய்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தோல்விக்கு பொறுப்புலோக்சபா தேர்தல் தோல்வியால், காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 206 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள், 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. நடந்து முடிந்த லோக்சபா ...

ராஜினாமா செய்தார் மன்மோகன்: முடிவுக்கு வந்தது காங்., ஆட்சி

Posted:

பிரதமர் மன்மோகன் சிங், தன் அமைச்சரவையின், ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம், நேற்று அளித்தார். இதையடுத்து, காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசின், 10 ஆண்டு பதவி காலம் முடிவுக்கு வந்துள்ளது.புதிய அரசு பணி தீவிரம்நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு அமைப்பதற்கான பணிகள், தீவிரமாக நடக்கின்றன.இதையடுத்து, தற்போதைய மத்திய அரசு, முறைப்படி விடை பெறுவதற்காக, நேற்று, டில்லியில், மன்மோகன் சிங் தலைமையிலான, மத்திய அமைச்சவையின் கடைசி கூட்டம் ...

எந்த கட்சிக்கு எவ்வளவு ஓட்டு?அ.தி.மு.க., - 44.3%; தி.மு.க., - 23.6%

Posted:

தமிழகத்தில், 16வது லோக்சபாவுக்கான தேர்தல், கடந்த ஏப்ரல், 24ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள, 5.3 கோடி வாக்காளர்களில், 73.82 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. 39 தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம், நான்கு கோடியே, 3 லட்சத்து 93 ஆயிரத்து 657 ஓட்டுகள் பதிவாகி இருந்தன.அவற்றில், 44.3 சதவீத ஓட்டுகளை பெற்ற, அ.தி.மு.க., 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, 23.6 சதவீத ஓட்டுகள் பெற்ற தி.மு.க.,வால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. வெறும் 5.5 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ள பா.ஜ., ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், 4.4 சதவீத ஓட்டுகள் ...

மோடியின் 10: வெற்றிக்கு பின்னால்...

Posted:

காங்கிரசை வீழ்த்தி, தனிப்பெரும்பான்மையோடு மாபெரும் வெற்றியை வசமாக்கியிருக்கிறார் மோடி.தேசத்தின் எதிர்காலத்தை நரேந்திர மோடியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் மக்கள். மோடியின் மாபெரும் வெற்றிக்கு பின், பக்கபலமாக, நம்பிக்கைக்கு உரியவர்கள், நலன்விரும்பிகள் பலர் உள்ளனர். அவர்களில் முதல் பத்து நபர்கள் பற்றிய சிறுகுறிப்பு... 'மாயாஜால' வித்தகர்கள் கிரண்ஜோஷிமோடியின் 'ஹ டெக்' பிரசாரத்தின் 'ஹைலைட்' டான, 3டி பிரசாரத்தின் பின்புலத்தில், தேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு இயங்கியது. கிரண்ஜோஷி தலைமையில் ராஜேஸ்ஜெயின், மகேஷ் ஆகியோரின் ...

தவிடு பொடியான விஜயகாந்தின் முதல்வர் கனவு: பா.ஜ., ஏற்றம்; இனி தே.மு.தி.க., கரையேறுவது கடினம்

Posted:

முதல்வர் பதவிக்கு குறி வைத்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டு வந்த திட்டங்கள், லோக்சபா தேர்தல் படுதோல்வி மூலம் தவிடு பொடியாகியுள்ளது. இனி, தே.மு.தி.க., கரையேறுவது கடினம் என்ப தால், அக்கட்சியில் இருந்து, வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.தனித்தே போட்டிகடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்டது, தே.மு.தி.க., 2006ல் சட்டசபை, 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தல்கள் உட்பட பல சட்டசபை இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் தனித்தே போட்டியிட்டது.இதன் மூலம், அக்கட்சிக்கு எட்டு சதவீதம் முதல் 10 சதவீத ஓட்டு வங்கி இருப்பதை அக்கட்சி ...

அதிக ஓட்டு வித்தியாசத்தில் மோடி வென்றது எப்படி: சபதத்தை நிறைவேற்றிய வதோதரா மக்கள்

Posted:

வதோதரா: 'இந்தியாவிலேயே அதிகம் ஓட்டு வித்தியாசத்தில் மோடியை வெற்றி பெற வைப்போம்' என்ற வதோதரா மக்களின் சபதம் வென்றது.மோடி, 'பா.ஜ.,வின் கோட்டையான' வதோதராவில் போட்டியிடுவதாக அறிவித்ததும், அத்தொகுதி மக்கள், நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்வது என முடிவு செய்து விட்டனர். அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக வேண்டும். 2009 தேர்தலில் வெறும் 49 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்த தொகுதி இது. எனவே ஓட்டுப்பதிவை அதிகரிக்க கூட்டு முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.,வினர் அல்ல; ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™