Tamil News | Online Tamil News |
- இன்னும் சில மணி நேரத்தில் 'ரிசல்ட்!' நாடு முழுவதும் உச்சகட்ட அரசியல் பரபரப்பு
- எம்.பி.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்யும் தற்காலிக சபாநாயகர் யார்? 16வது லோக்சபா உறுப்பினர்களை வரவேற்க தயாராகிறது பார்லி.,
- தள்ளாடும் வயதில் திவாரி இரண்டாவது திருமணம்: இளமையில் காதலித்து கைவிட்டவரை மணந்தார்
- வெற்றி ஊர்வலம், கங்கையில் சிறப்பு வழிபாடு: அடுத்த சில தினங்களில் அசத்தப்போகும் மோடி
- பெரியாறு அணையில் 3,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு: மத்தியில் புது அரசு அமைந்த பின் அகற்ற முடிவு
- காங்கிரசுக்கு பத்து சதவீதம் ஓட்டு கிடைத்தால் தொண்டர்களுக்கு 'லட்டு'
- பத்மனாபபுரம் அரண்மனைக்கு பெருமை: பாரம்பரிய நினைவுச் சின்னமாகும் வாய்ப்பு
- தினமும் 16 மணி நேரம் வேலை செய்தேன்: உணர்ச்சி பெருக்குடன் விடைபெற்ற சிதம்பரம்
- தேர்தல் கொண்டாட்டத்துக்கு ரூ.100 கோடி சரக்கு பதுக்கல்
| இன்னும் சில மணி நேரத்தில் 'ரிசல்ட்!' நாடு முழுவதும் உச்சகட்ட அரசியல் பரபரப்பு Posted: புதுடில்லி: நாடு முழுவதும், 543 லோக்சபா தொகுதி களில், ஒன்பது கட்டமாக நடந்த தேர்தலில், பதிவான ஓட்டுகள், இன்று காலை, 8:00 மணி முதல் எண்ணப்பட்டு, இன்னும் சில மணி நேரங்களில் முடிவுகள் வெளியாக உள்ளன. அதனால், மத்தியில், அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற உச்சகட்ட அரசியல் பரபரப்பு உருவாகி உள்ளது.நாட்டின், 16வது லோக்சபாவுக்கான, 543 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, லோக்சபா தேர்தல் ஏப்ரல், 7ம் தேதி துவங்கி, மே,12ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடந்தது. இந்தத் தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல், ஆம் ஆத்மி தலைவர் ... |
| Posted: ''பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர், பாசுதேவ் ஆச்சார்யா, காங்கிரசை சேர்ந்த கமல்நாத் மற்றும் மாணிக்ராவ் கெய்வாட் ஆகியோர், அதிக முறை, எம்.பி.,க்களாக இருந்துள்ளனர். எனவே, தேர்தலில் வெற்றி பெறும் இவர்களில் யாராவது ஒருவர், தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்று, அனைத்து புதிய எம்.பி.,க்களுக்கும், பதவிப் பிரமாணம் செய்து வைக்க வாய்ப்புள்ளது,'' என, லோக்சபா செகரட்டரி ஜெனரல் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.மத்தியில், புதிய அரசு அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு, உச்ச கட்டத்திற்கு வந்துள்ளது. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கைகளில், அதிகாரிகள் ... |
| தள்ளாடும் வயதில் திவாரி இரண்டாவது திருமணம்: இளமையில் காதலித்து கைவிட்டவரை மணந்தார் Posted: புதுடில்லி: காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, என்.டி.திவாரி, இளம் வயதில் காதலித்து, பின் கைவிட்ட பெண்ணை, தற்போது, மனம் மாறி திருமணம் செய்துள்ளார்.காங்., மூத்த தலைவர்களில் ஒருவர் என்.டி.திவாரி, 88. உ.பி., முன்னாள் முதல்வர், ஆந்திர கவர்னர் போன்ற உயர் பதவிகளை வகித்தவர். ஆந்திர மாநில கவர்னராக இருந்தபோது, இளம் பெண்களுடன், இவர், உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானது. இதையடுத்து, பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.சந்திக்க விடாமல்...: இவருக்கு, சுசிலா என்ற பெண்ணுடன் திருமணமானது. 1993ல், சுசிலா இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ... |
| வெற்றி ஊர்வலம், கங்கையில் சிறப்பு வழிபாடு: அடுத்த சில தினங்களில் அசத்தப்போகும் மோடி Posted: புதுடில்லி: 'நரேந்திர மோடி தான், அடுத்த பிரதமர்' என, கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த சில தினங்களில், குஜராத், டில்லி, உ.பி., மாநிலங்களில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க, மோடி திட்டமிட்டு உள்ளார்.மும்முரம்: லோக்சபா தேர்தல் முடிவுகள், இன்று வெளியாகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், 'பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி, பிரதமராவார்' என, தெரிவித்து உள்ளன. இதனால், ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில், பா.ஜ., தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், அடுத்த சில தினங்களில், ... |
| பெரியாறு அணையில் 3,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு: மத்தியில் புது அரசு அமைந்த பின் அகற்ற முடிவு Posted: சென்னை: தென் மாவட்ட மக்களின் பாசனத்திற்கு முக்கிய ஆதாரமான முல்லை பெரியாறு அணையில், 3,000 ஏக்கரில், கேரள தரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் புதிய அரசு அமைந்த பின், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த தகவல் சேகரிப்பில், தமிழக பொதுப்பணித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.திருவிதாங்கூர் சமஸ்தானம் சென்னை மாகாண அரசு இடையே, 1886ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள, 8,391 ஏக்கர், 999 ஆண்டிற்கு தமிழகத்திற்கு குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை, 142 அடிக்கு உயர்த்திக் ... |
| காங்கிரசுக்கு பத்து சதவீதம் ஓட்டு கிடைத்தால் தொண்டர்களுக்கு 'லட்டு' Posted: தனித்து போட்டியிடுவதால், 8 முதல் 10 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்தால், லட்டு வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என, கட்சியினருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் நேற்று, உத்தரவிட்டார்.கருத்துக் கணிப்பில், ஒரேயொரு தொகுதி காங்கிரசுக்கு கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக காங்கிரசார் அது எந்த தொகுதி என, அறிந்து கொள்ளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி ஆகிய மூன்று தொகுதியில் ஒரு தொகுதி வெற்றி உறுதி என, தமிழக காங்கிரசார் கருதுகின்றனர். கடந்த, 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமைத்து ... |
| பத்மனாபபுரம் அரண்மனைக்கு பெருமை: பாரம்பரிய நினைவுச் சின்னமாகும் வாய்ப்பு Posted: நாகர்கோவில்: ''ஐ.நா.,வின் 'யுனெஸ்கோ' வெளியிட்டுள்ள உலகப் பாரம்பரிய நினைவு சின்னங்களின் மாதிரி பட்டியலில், பத்மனாபபுரம் அரண்மைனயும் இடம் பெற்றுள்ளது,'' என, கேரள கலாசாரத்துறை அமைச்சர் கே.சி. ஜோசப் தெரிவித்தார்.கன்னியாகுமரி தக்கலை அருகே பத்மனாபபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனை உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மனாபபுரம் இருந்த போது, மன்னர்களால் கட்டப்பட்டது. நான்கரை ஏக்கரில் உள்ள அரண்மனை, பெரும்பாலும் மர வேலைப்பாடுகளை கொண்டது. இதன் தரைப்பகுதி சிரட்டைக்கரி, முட்டை வெள்ளைக்கரு, பச்சிலைச்சாறு, சுண்ணாம்பு கொண்ட கலவையால் ... |
| தினமும் 16 மணி நேரம் வேலை செய்தேன்: உணர்ச்சி பெருக்குடன் விடைபெற்ற சிதம்பரம் Posted: புதுடில்லி: ''பல ஆண்டுகளாக, தினமும், 16 மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றினேன்,'' என, மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அமைச்சக ஊழியர்களிடம், உணர்ச்சி வசத்துடன் கூறி, விடைபெற்றார்.இரண்டு முறையும்...: லோக்சபா தேர்தல் முடிவுகள், இன்று வெளியாகின்றன. இந்த தேர்தலில், மத்திய நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான சிதம்பரம், போட்டியிடவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி யின் 2004ம் ஆண்டு அமைந்த அமைச்சரவையில், நிதி அமைச்சராக பதவி வகித்தார். மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணியின் இரண்டாவது அமைச்சரவை பதவியேற்றபோது, உள்துறை அமைச்சராக பதவி ... |
| தேர்தல் கொண்டாட்டத்துக்கு ரூ.100 கோடி சரக்கு பதுக்கல் Posted: டாஸ்மாக் கடைகளுக்கு விடுப்பு, முன்னரே அறிவிக்கப்பட்டதால், கடந்த இரு நாளில், 100 கோடி ரூபாய் அளவுக்கு சரக்குகளை, குடிமகன்கள், திருட்டு வியாபாரிகள் வாங்கி பதுக்கி உள்ளனர்.தமிழகத்தில், வழக்கமான நாட்களில் சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கும், ஞாயிறு, விசேஷ தினங்களில், 100 கோடி ரூபாயை தாண்டியும் மது விற்பனை நடப்பது வழக்கம். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு, மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், 150 கோடி ரூபாய் வரையில், கூடுதல் மது விற்பனை நடந்தது. ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது. குடிமகன்கள், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 16,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |