Tamil News | Online Tamil News |
- சொத்து விபரம் தராத வேட்பாளர் தகுதி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- காங்கிரசை கைகழுவுகிறது பவார் கட்சி:நிலையான ஆட்சிக்கே ஆதரவு என்கிறது
- புதிய தளபதியாக தல்பீர் சிங் நியமனம்
- ஐ.பி.எஸ்., அதிகாரி அர்ச்சனா 'சஸ்பெண்ட்' உத்தரவு செல்லுமா?
- தேசிய அரசியலுக்கு செல்லும் ஜெயலலிதா: தேடி வருகிறது வாய்ப்பு?
- நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கைக்கு தேர்தல் கமிஷன் ஆயத்தம்: காலை 10 மணிக்கு முதல் நிலவரம் தெரிய வரும்
- லோக்சபா தேர்தலுக்கு ரூ.3,426 கோடி செலவு
- ராகுல் இமேஜை காப்பாற்ற காங்., தலைவர்கள் முயற்சி
- மோடி பிரதமராவதை தடுக்க காங்கிரஸ் 'பி' பிளான்: மம்தா, மாயாவதியுடன் பேச்சு துவக்கம்
- குஜராத் புது முதல்வர் யார்? ஆமதாபாத்தில் ஆலோசனை
- பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மன்மோகன் சிங்
- நரேந்திர மோடியை நெருங்குகிறார் ஒபாமா: பா.ஜ., வரவேற்பு
| சொத்து விபரம் தராத வேட்பாளர் தகுதி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: புதுடில்லி:'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தன் பெயரிலும், தன் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரிலும் உள்ள சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விபரங்களை தரவில்லை எனில், அவரை தகுதி நீக்கம் செய்யலாம்' என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த, 2004 அக்டோபரில் நடந்த தேர்தலில், தானே மாவட்டம், அம்பேர்நாத் தொகுதியில் இருந்து, மகாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர், கிஷான் சங்கர் கத்தோர். இவர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, அர்ஜூன் சவந்த் என்பவர், மும்பை உயர்நீதிமன்றத்தில், வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ... |
| காங்கிரசை கைகழுவுகிறது பவார் கட்சி:நிலையான ஆட்சிக்கே ஆதரவு என்கிறது Posted: மும்பை:கடந்த 15 ஆண்டாக, காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும், தேசியவாத காங்., கட்சியின் அணுகுமுறையில், தற்போது மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.,வுக்கு ஆதரவாக, அக்கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.சமரசம்:காங்கிரசும், மத்திய விவசாய அமைச்சர், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும், மகாராஷ்டிரா மாநிலத்தில், 15 ஆண்டாக, கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. இருகட்சி தலைவர்களுக்கும் இடையே, அவ்வப்போது மோதல் ஏற்பட்டாலும், மூத்த தலைவர்கள் தலையிட்டு, சமரசம் செய்வது வழக்கமாக உள்ளது.இந்த லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, தேசியவாத காங்., பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க பேச்சு ... |
| புதிய தளபதியாக தல்பீர் சிங் நியமனம் Posted: புதுடில்லி:பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டத்தில், ராணுவ புதிய தளபதியாக தல்பீர்சிங் சுஹாவை, 59, மத்திய அரசு நியமித்துள்ளது.ராணுவ தளபதியாகவுள்ள விக்ரம் சிங்கின் பதவி காலம், வரும், ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. வழக்கமாக, ராணுவ தளபதி ஓய்வு பெறுவதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பே, புதிய தளபதியின் பெயர் அறிவிக்கப்படும்.இதுபோல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசும், புதிய தளபதியின் பெயரை அறிவிப்பதற்கு முயற்சித்தது. ஆனால், 'தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, புதிய தளபதியை நியமிக்க கூடாது' என, பா.ஜ., ... |
| ஐ.பி.எஸ்., அதிகாரி அர்ச்சனா 'சஸ்பெண்ட்' உத்தரவு செல்லுமா? Posted: தமிழகத்தை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான, சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர் பொறுப்பை ஏற்ற நிலையில், அவரை தமிழக அரசு, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. இந்த சஸ்பெண்ட் செல்லுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சரியானதா? சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை அர்ச்சனா பெற்றாலும், பொறுப்பேற்ற, 24 மணி நேரத்திற்குள், அப்பதவியில் அவர் செயல்பட, உச்ச நீதிமன்றமும் இடைக் காலத் தடை விதித்துள்ளது.அர்ச்சனாவிற்கு எதிரான, தமிழக அரசின், சஸ்பெண்ட் நடவடிக்கை சரியானதா என்பது ... |
| தேசிய அரசியலுக்கு செல்லும் ஜெயலலிதா: தேடி வருகிறது வாய்ப்பு? Posted: மத்தியில் புதிய அரசு அமைந்த பின், தீவிரமாக, தேசிய அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ராஜ்யசபா மூலம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, எம்.பி.,யாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியொரு தகவல் டில்லியில் பரவ, தேசிய அளவிலான அரசியலில், புதிய பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.கட்டாயம் ஏற்படும்நடந்து முடிந்த, லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, வரும் 16ம் தேதி அன்று, காலையில் துவங்கும். அன்று இரவுக்குள்ளாகவே, பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், 17ம் தேதியில் இருந்து, டில்லியில் புதிய ஆட்சி ... |
| நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கைக்கு தேர்தல் கமிஷன் ஆயத்தம்: காலை 10 மணிக்கு முதல் நிலவரம் தெரிய வரும் Posted: சென்னை: தமிழகத்தில், நாளை மறுநாள், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு, தேவையான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. அதிக ஓட்டுச்சாவடிகள் உள்ள தொகுதிகளில், கூடுதல் ஆட்களை நியமித்து, கூடுதல் மேஜைகளில், ஓட்டுகளை எண்ணவும், தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. எனவே, காலை, 10:00 மணிக்கே முதல் நிலவரம் தெரிய வரும்.நாடு முழுவதும், கடந்த, 12ம் தேதி, லோக்சபா தேர்தல் நிறைவு பெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மாதம், 24ம் தேதி, தேர்தல் நடந்தது.ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில், பாதுகாப்பாக ... |
| லோக்சபா தேர்தலுக்கு ரூ.3,426 கோடி செலவு Posted: புதுடில்லி"தற்போதைய லோக்சபா தேர்தலுக்காக, மத்திய அரசு, 3,426 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இது, 2009 தேர்தல் செலவை விட, 131 சதவீதம் அதிகம்.இதுதொடர்பாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டில் முதல் லோக்சபா தேர்தல், 1952ல் நடந்தது. அப்போது, வாக்காளர் ஒருவருக்கு, 60 காசுகள் என்ற அளவில், மத்திய அரசுக்கு, 10.45 கோடி ரூபாய் தேர்தல் செலவு ஏற்பட்டது. ஆனால், 2009ல், இந்தச் செலவு, 20 மடங்கு அதிகரித்து, வாக்காளர் ஒருவருக்கு, 12 ரூபாய் அளவில் செலவானது. மொத்தத்தில், 1,483 கோடி ரூபாய் செலவானது.தற்போதைய லோக்சபா தேர்தலில், மத்திய அரசுக்கு, 3,426 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இது, 2009 தேர்தலை செலவை ... |
| ராகுல் இமேஜை காப்பாற்ற காங்., தலைவர்கள் முயற்சி Posted: புதுடில்லி:'லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அதற்கு ராகுல் பொறுப்பல்ல' என, காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.லோக்சபா தேர்தலில், ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், நேற்று முன்தினம் வெளியாகின. அவற்றில்,'பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவு பெரும் தோல்வியை சந்திக்கும்' என கூறப்பட்டது. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காங்., கட்சி, இந்தமுறை, துணை தலைவர் ராகுல் தலைமையில் தேர்தலை சந்தித்தது. அவர், தேர்தல் பிரசாரக் குழு ... |
| மோடி பிரதமராவதை தடுக்க காங்கிரஸ் 'பி' பிளான்: மம்தா, மாயாவதியுடன் பேச்சு துவக்கம் Posted: லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 220 இடங்களுக்கும் குறைவாக கிடைத்தால், அந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. 'பி' பிளான் என்ற பெயரில், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட, முக்கிய தலைவர்களுடன், காங்., தலைவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.கருத்து கணிப்பு முடிவுலோக்சபா தேர்தல் முடிவுகள், நாளை மறுநாள் வெளியாகவுள்ளன. ஆனாலும், 'எக்சிட் போல்' என, அழைக்கப்படும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.அவற்றில், 'பா.ஜ., தலைமையிலான தே,ஜ., ... |
| குஜராத் புது முதல்வர் யார்? ஆமதாபாத்தில் ஆலோசனை Posted: ஆமதாபாத்: ஓட்டுப்பதிவுக்கு பிந்தையகருத்துக்கணிப்புகளில், 'பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ., தலைவர்களும், அந்தக் கட்சி நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர்.உயர்மட்டக் குழு கூட்டம்அதேநேரத்தில், மோடி பிரதமராகி விட்டால், குஜராத் முதல்வராக யார் தேர்வு செய்யப்படலாம் என்ற யூகங்களும் கிளம்பி உள்ளன.இந்த சூழ்நிலையில், குஜராத் பா.ஜ.,வின் உயர்மட்டக் குழு கூட்டம், நேற்று ஆமதாபாத்தில் நடந்தது. மாநில பா.ஜ., தலைவர், ஆர்.சி.பால்டு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மோடி ... |
| பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மன்மோகன் சிங் Posted: புதுடில்லி : பிரதமராக பதவி வகித்த காலத்தில், தன்னுடன் பணிபுரிந்த, தன் தனி அலுவலர்களுக்கு, நேற்று நன்றி கூறினார், மன்மோகன் சிங்.கடந்த 2004ல், பிரதமராக பதவியேற்ற மன்மோகன் சிங், தொடர்ந்து, 10 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். வரும் 16ம் தேதி, லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதும், புதிய பிரதமர் பதவியேற்கும் வகையில், அவர் தன் பதவியை ராஜினாமா செய்வார்.வாழ்த்துஅதனால், தற்போதே பிரிவு உபசார நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, டில்லியில் உள்ள தன் அலுவலகத்தில் பணிபுரிந்த, 110 அலுவலர்களை, நேற்று மன்மோகன் சிங் சந்தித்தார்.அப்போது, தன் பதவிக் ... |
| நரேந்திர மோடியை நெருங்குகிறார் ஒபாமா: பா.ஜ., வரவேற்பு Posted: புதுடில்லி:இந்தியாவில், புதிதாக அமையும் அரசுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளதை, பா.ஜ., வரவேற்று உள்ளது.லோக்சபா தேர்தல் முடிவுகள், இம்மாதம், 16ல் வெளியாகவுள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளன. இதனால், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பிரதமராவதற்கு வாய்ப்புள்ளதாக, ஊடகங்கள் கூறுகின்றன.கூர்ந்து கவனிக்கிறேன்இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியாவில், புதிய அரசு அமைவதை, ஆர்வத்துடன், கூர்ந்து கவனித்து வருகிறேன். புதிதாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |