Tamil News | Online Tamil News |
- 'நான் ராஜிவ் மகள்': மோடிக்கு பிரியங்கா பதிலடி
- மோடி மீது வழக்கு பதிவு செய்வதில் தேர்தல் கமிஷன் அவசரப்பட்டது ஏன்? அருண் ஜெட்லி விளாசல்
- ஏடாகூடமா பேசி அடிக்கடி தப்பு பண்றீங்க: பெனிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
- நன்கொடை கேட்டதால் சிக்கல்: பஞ்சாப் முதல்வருக்கு 'நோட்டீஸ்'
- வாரணாசி தொகுதி வேட்பாளர்கள் சொத்து விபரம்: ரூ.3.35 கோடியுடன் முதலிடம் பிடித்துள்ள சுயேச்சை
- நடிகைகள் நமீதா, தேவயானிக்கு காங்கிரஸ் திடீர் வலை
- தே.மு.தி.க.,விற்கு எத்தனை 'சீட்' கிடைக்கும்?விஜயகாந்த் கேள்வி; நிர்வாகிகள் 'கப்சிப்'
- 'ஊழல் காங்கிரசை தூக்கி வீசுங்கள்': திருப்பதியில் நரேந்திர மோடி ஆவேசம்
- காவல் துறையினர் விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும்: கருணாநிதி கருத்து
- கவுகாத்தி ரயிலுக்கு 'எஸ்காட்' பாதுகாப்பு இல்லாதது ஏன்? மோப்ப நாய்கள், நவீன கருவிகள் பற்றாக்குறை
- அசம்பாவிதம் நடந்தால் மட்டும் 'அலர்ட்' ஆகும் போலீசார்
- எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை: கோட்டை விட்ட போலீஸ்
- ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் பயங்கரவாதிகள் கைவரிசை:சென்னை சென்ட்ரலில் குண்டு வெடிப்பு: ஆந்திராவை சேர்ந்த பெண் பலி
- குறைந்த சக்தி கொண்ட 'டைம் பாம்'
| 'நான் ராஜிவ் மகள்': மோடிக்கு பிரியங்கா பதிலடி Posted: அமேதி: பிரியங்கா என் மகள் போன்றவர்' என்ற, நரேந்திர மோடியின் பேட்டிக்கு, ''நான் ராஜிவ் மகள்,'' என, பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சமீபத்தில், தூர்தர்ஷன் பேட்டி ஒன்றில், பிரியங்காவை தன் மகள் போல கருதுவதாக தெரிவித்தார். மோடி பேட்டியின் இந்தக் குறிப்பிட்ட பகுதி, தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகவில்லை. 'எடிட்' செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த, நிதி அமைச்சர் சிதம்பரம், 'பிரியங்கா தன் மகள் போன்றவர் என, மோடி கூறியதில் மகிழ்ச்சியே. அதே நேரத்தில், மோடியை தன் தந்தையைப் போன்றவராக, பிரியங்கா நினைப்பார் என, நான் ... |
| மோடி மீது வழக்கு பதிவு செய்வதில் தேர்தல் கமிஷன் அவசரப்பட்டது ஏன்? அருண் ஜெட்லி விளாசல் Posted: புதுடில்லி: ''நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்வதில், தேர்தல் கமிஷன் அவசரப்பட்டது ஏன் என்பது தெரியவில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறினார்.நரேந்திர மோடி, நேற்று முன்தினம், ஓட்டளித்து விட்டு, வெளியில் வந்தபோது, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தாமரைச் சின்னத்தை தூக்கி காட்டியதோடு, அதை, தன், மொபைல் போனில் புகைப்படமும் எடுத்தார். இதுகுறித்து, தேர்தல் கமிஷனில், காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அடுத்த சில மணி நேரத்திலேயே, அவர் மீது, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு, பா.ஜ., மூத்த ... |
| ஏடாகூடமா பேசி அடிக்கடி தப்பு பண்றீங்க: பெனிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் Posted: புதுடில்லி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியை, மிகவும் தரக்குறைவாக விமர்சித்த, மத்திய உருக்குத் துறை அமைச்சர், பெனி பிரசாத் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'தேர்தல் நன்னடத்தை விதிகளை அடிக்கடி மீறுவது சரியல்ல' என்றும் எச்சரித்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், உருக்குத் துறை அமைச்சராக இருப்பவர், பெனி பிரசாத் வர்மா. காங்கிரசை சேர்ந்த இவர், ஏப்ரல், 1ம் தேதி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மிகப்பெரிய குண்டர், மோடி. பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங் அவரின் அடிமை' ... |
| நன்கொடை கேட்டதால் சிக்கல்: பஞ்சாப் முதல்வருக்கு 'நோட்டீஸ்' Posted: சண்டிகார்: தேர்தல் செலவுக்கான நன்கொடையை, ரகசியமாக தரும்படி, பஞ்சாப் முதல்வரும், சிரோன்மணி அகாலி தளம் கட்சி தலைவருமான, பிரகாஷ் சிங் பாதல் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன், அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 13 லோக்சபா தொகுதிகளுக்கும், சமீபத்தில், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சில நாட்களுக்கு முன், ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரகாஷ் சிங் பாதல் பேசியதாவது: தேர்தல் பிரசாரத்துக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்க ... |
| வாரணாசி தொகுதி வேட்பாளர்கள் சொத்து விபரம்: ரூ.3.35 கோடியுடன் முதலிடம் பிடித்துள்ள சுயேச்சை Posted: வாரணாசி: வாரணாசி லோக்சபா தொகுதியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே நேரடி போட்டி நிலவினாலும், வேட்பாளர்களின் சொத்து விபரங்களில், சுயேச்சை வேட்பாளரே முன்னணியில் உள்ளார்.சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ், முதல்வராக உள்ள, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது, வாரணாசி லோக்சபா தொகுதி. வரும், 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ள, இந்தத் தொகுதியில் போட்டியிட, 79 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தாலும், வேட்பு மனுக்கள் வாபஸ் மற்றும் தள்ளுபடிக்குப் பிறகு, தற்போது நரேந்திர மோடி உட்பட, 42 வேட்பாளர்களே ... |
| நடிகைகள் நமீதா, தேவயானிக்கு காங்கிரஸ் திடீர் வலை Posted: சென்னை : தமிழக காங்கிரஸ், 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் என, அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் அறிவித்து விட்டதால், கட்சியை பலப்படுத்தவும், கவர்ச்சி அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், நடிகர்கள் கார்த்திக், பாண்டு, நடிகைகள் நமீதா, தேவயானியை காங்கிரசில் சேர்ப்பதற்கான பேச்சு நடந்து வருகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலில், தமிழக காங்கிரஸ், 39 தொகுதிகளில், தனித்து போட்டியிட்டது. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக், சமூக சமத்துவ படையின் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவளித்து, ... |
| தே.மு.தி.க.,விற்கு எத்தனை 'சீட்' கிடைக்கும்?விஜயகாந்த் கேள்வி; நிர்வாகிகள் 'கப்சிப்' Posted: லோக்சபா தேர்தலில் எத்தனை இடங்களில், தே.மு.தி.க.,விற்கு வெற்றி கிடைக்கும் என, விஜய காந்த் கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளிக்காமல், அக்கட்சி நிர்வாகிகள் பலரும் நழுவியுள்ளனர்.இறங்கு முகம்தான்:தமிழகத்தில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இணைந்து, லோக்சபா தேர்தலை தே.மு.தி.க., சந்தித்தது. மத்திய சென்னை, வடசென்னை உட்பட, 14 தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட்டது. ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும், தே.மு.தி.க., போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் தே.மு.தி.க.,விற்கு எவ்வாறு அமைய போகிறது என்ற கேள்வி, அரசியல் அரங்கில் ... |
| 'ஊழல் காங்கிரசை தூக்கி வீசுங்கள்': திருப்பதியில் நரேந்திர மோடி ஆவேசம் Posted: திருப்பதி: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான 'தாய் மகன்' அரசு, நாட்டை ஊழல் மிகுந்த தேசமாக மாற்றிவிட்டது. 'ஊழல் ஆந்திரா'வுக்கு பதில், 'சுவர்ண ஆந்திரா' அமைய பா.ஜ., தெலுங்கு தேசம் கூட்டணிக்கு வாக்களியுங்கள்,'' என, திருப்பதியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.திருப்பதியில் நடந்த பிரசாரத்தில் மோடி பேசியதாவது: ஆந்திர மக்களின் சம்மதமின்றி, மத்திய அரசு தெலுங்கானா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தெலுங்கு பேசும் மக்களை, காங்கிரஸ் அவமதித்துள்ளது. தெலுங்கானா மாநிலம், ஜூன் 2ம் தேதி உதயமாகவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே ... |
| காவல் துறையினர் விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும்: கருணாநிதி கருத்து Posted: சென்னை: பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தமிழக காவல் துறை விரைந்து செயல்பட்டிருந்தால், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பை தவிர்த்திருக்கலாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இரண்டு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ., உளவாளி என்று கூறப்படும் ஜாகீர் உசேனை, தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. இந்த கைதுக்கு பின் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகவும், துல்லியமாகவும் எடுக்காத காரணத்தால் தான், சென்ட்ரல் ரயில் ... |
| கவுகாத்தி ரயிலுக்கு 'எஸ்காட்' பாதுகாப்பு இல்லாதது ஏன்? மோப்ப நாய்கள், நவீன கருவிகள் பற்றாக்குறை Posted: சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட, 11 ஆயிரம் ரயில்களுக்கு பிரத்யேக, 'எஸ்காட்' பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.நாட்டில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு வசதிகளை 355 கோடி ரூபாய் செலவில், ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. எதுவுமே நடக்கவில்லை: 'அதிகமாக பாதிக்கப்படும் பகுதிகள்' என, வகைப்படுத்தப்பட்ட, 202 ரயில் நிலையங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டன. அவற்றில், வெடிகுண்டு கண்டு பிடித்து, செயலிழக்க செய்வதற்கான கருவிகள் அமைக்கப்பட வேண்டும்; ... |
| அசம்பாவிதம் நடந்தால் மட்டும் 'அலர்ட்' ஆகும் போலீசார் Posted: குண்டுவெடிப்பு, விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே, பரபரப்பாக இயங்கும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் போலீசார், மற்ற நேரங்களில் அலட்சியப்போக்கில் பணியாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்லும் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பாதுகாப்பு என்பது, பெயரளவில் மட்டுமே உள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவோர் அல்லது பயங்கரவாதிகள், அந்த நிலையத்திற்குள், சர்வ சாதாரணமாக வந்து செல்ல முடியும்.* நுழைவாயில்களில் காவல் பணியில் இருக்கும் போலீசார் யாரையும் சோதிப்பதில்லை.* தீபாவளி ... |
| எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை: கோட்டை விட்ட போலீஸ் Posted: சென்னை:சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நடக்க வாய்ப்பிருப்பதாகவும், உஷாராக இருக்கும்படியும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், தமிழக போலீசார் கோட்டை விட்ட தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஏப்., 8ல், தமிழக உளவுத்துறை, சென்னை நுண்ணறிவுப் பிரிவு இணை கமிஷனர், அனைத்து போலீஸ் கமிஷனர்கள், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:இலங்கையில், பாகிஸ்தானியர்களால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட, 20 முதல் 25 வயதிலான நான்கு இஸ்லாமியர்கள், தமிழகத்தில் ... |
| Posted: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று நடந்த இரட்டை குண்டு வெடிப்பில், ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார்; 14 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யின் ஆதரவு பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படை யில், விசாரணையை துவக்கிய தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், கண்காணிப்பு கேமராவில் சிக்கிய, ஐந்து பேரை தேடி வருகின்றனர்.பெங்களூரில் இருந்து சென்னை வழியாக, அசாம் மாநிலம், கவுகாத்தி செல்லும், கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12509) நேற்று ... |
| குறைந்த சக்தி கொண்ட 'டைம் பாம்' Posted: சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்தது, மிக குறைந்த சக்தி கொண்ட, 'டைம் பாம்' என, தெரியவந்துள்ளது.சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கவுகாத்தி ரயிலின் இரண்டு பெட்டிகளில், குண்டுகள் வெடித்ததில், ஒரு பெண் பலியானார்; 14 பேர் காயமடைந்தனர்.சம்பவ இடத்தில் கிடைத்த, வெடிகுண்டுகளின் பாகங்களை, வெடிகுண்டு நிபுணர்கள் சேகரித்து, ஆய்வு மேற்கொண்டனர்.முதல் கட்ட ஆய்வில், அது குறைந்த சக்தி கொண்ட, 'டைம் பாம்' என்பது தெரியவந்துள்ளது.நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும், 'அமோனியம் நைட்ரேட்' கலந்த வெடிமருந்துடன், சில ரசாயன பொருட்களையும், இரும்பு துகள்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 02,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |