Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பசுமை வீடுகளாக உருவெடுக்கும் குடிசைகள்!

Posted: 21 May 2014 12:50 PM PDT

குடிசைகளே இல்லாத மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

வேலைவாய்ப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் மாணவர்கள் பதிவு

Posted: 21 May 2014 12:48 PM PDT

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட முதல் நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்தனர்.

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

Posted: 21 May 2014 12:46 PM PDT

சென்னை, மே 21: 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

ஐ.சி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: தமிழகத்தில் 99.59% பேர் தேர்ச்சி

Posted: 21 May 2014 12:41 PM PDT

ஐ.சி.எஸ்.இ. (இந்தியன் சர்ட்டிபிகேட் ஆஃப் செகண்டரி எஜுகேஷன்) பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழகத்தில் 99.59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி சதவீதப் பட்டியல்: அண்ணா பல்கலை இணைய தளங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 21 May 2014 12:34 PM PDT

அனைத்து பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடுகள் மற்றும் 2002 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான மாணவர் தேர்ச்சி சதவீதப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் பதவியேற்பு விழாவில் ராஜபட்சவை அனுமதிக்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்

Posted: 21 May 2014 12:32 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்சவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: இதுவரை 26,208

Posted: 21 May 2014 12:31 PM PDT

சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் கடந்த புதன்கிழமை (மே 14) தொடங்கியது.

மோடிக்கு கருணாநிதி வாழ்த்து

Posted: 21 May 2014 12:29 PM PDT

நரேந்திர மோடிக்கு, கருணாநிதி புதன்கிழமை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:

காலமானார் ஆர்.வி.குமார் (56)

Posted: 21 May 2014 12:26 PM PDT

தஞ்சாவூர் வெங்கடேசபுரம் திருநகர் - சீனிவாசபுரம் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த ஆர்.வி. குமார் (56) உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை (மே 21) அவரது இல்லத்தில் காலமானார்.

படகு அலங்கார அணிவகுப்பு: வனத்துறைக்கு முதல் பரிசு

Posted: 21 May 2014 12:24 PM PDT

உதகையில் கோடை விழாவையொட்டி நடைபெற்ற படகு அலங்கார அணிவகுப்பில் சிறப்பிடம் பெற்ற அரசுத் துறைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் பரிசளித்தார்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 21 May 2014 12:23 PM PDT

திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக சுமார் 300-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுடன் காளை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோடியக்கரையில் தரை தட்டிய கேரள படகு: போலீஸார் விசாரணை

Posted: 21 May 2014 12:20 PM PDT

நாகை மாவட்டம், கோடியக்கரையில் புதன்கிழமை அதிகாலை கேரளப் படகு ஒன்று தரை தட்டிக் கவிழ்ந்தது. இதிலிருந்து கரை சேர்ந்த 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லங்கோடு அருகே முதியவர் சடலம் மீட்பு

Posted: 21 May 2014 12:18 PM PDT

கொல்லங்கோடு அருகேயுள்ள நீரோடி பேருந்து நிறுத்தத்தில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸார் புதன்கிழமை மீட்டனர்.

காவல் நிலையத்தில் விஷம் குடித்த கைதி சாவு

Posted: 21 May 2014 12:18 PM PDT

களியக்காவிளை அருகே கேரளம் பாறசாலை காவல் நிலையத்தில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கைதி புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்ட மதிமுக பொறுப்பாளர் நியமனம்

Posted: 21 May 2014 12:18 PM PDT

மதிமுகவின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளராக ஆர்.சோமசுந்தரத்தை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

பார்வதிபுரம் தண்டவாளத்தில் இளைஞர் சடலம் மீட்பு

Posted: 21 May 2014 12:17 PM PDT

நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே ரயில் தண்டவாளம் அருகே இளைஞர்  சடலத்தை புதன்கிழமை போலீஸார் மீட்டனர்.

கைதான இலங்கை மீனவர்கள் 14 பேரும் சிறையில் அடைப்பு

Posted: 21 May 2014 12:17 PM PDT

இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக செவ்வாய்க்கிழமை கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேரும் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

Posted: 21 May 2014 12:17 PM PDT

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

இந்து இளைஞர் இயக்க ஆண்டு விழா

Posted: 21 May 2014 12:17 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த வெள்ளயந்தோப்பு இந்து இளைஞர் இயக்கத்தின் 10 ஆம் ஆண்டு விழா தென்தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலர் ஜோதிரன் தலைமையில் நடைபெற்றது.

நள்ளிரவில் காருக்கு தீவைப்பு

Posted: 21 May 2014 12:17 PM PDT

குளச்சல் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கார் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது

Posted: 21 May 2014 12:16 PM PDT

இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.

வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: டிரைவர் சாவு

Posted: 21 May 2014 12:16 PM PDT

தக்கலை அருகே வேன், மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர் பலத்த காயமடைந்தார்.

உமாநாத் மறைவு குலசேகரத்தில் இரங்கல் ஊர்வலம்

Posted: 21 May 2014 12:16 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான உமாநாத் மறைவையொட்டி குலசேகரத்தில் புதன்கிழமை இரங்கல் ஊர்வலம் நடத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் ராஜீவ் காந்தி நினைவு தினம்

Posted: 21 May 2014 12:16 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 23 ஆவது நினைவு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மழலையர், ஆரம்பக் கல்வியில் தமிழ் கட்டாய பயிற்று மொழியை வலியுறுத்தி 26-இல் ஆர்ப்பாட்டம்

Posted: 21 May 2014 12:16 PM PDT

மழலையர் மற்றும் ஆரம்பக் கல்வியில் வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பயிற்று மொழியாகக் கொண்டு வர வலியுறுத்தி,

பிளஸ் 2 மாணவர்களுக்கு நன்னடத்தை சான்றிதழைத் திருத்தி வழங்கக் கேட்டு பெற்றோர்கள் தர்னா

Posted: 21 May 2014 12:15 PM PDT

திருவட்டாறு அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் 7 மாணவர்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழை திருத்தி வழங்கக் கேட்டு பெற்றோர்கள், மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை இரவு வரை தர்னாவில் ஈடுபட்டனர்.

பேச்சிப்பாறை அருகேபுறம்போக்கு பகுதியில் இருந்த மரங்களை வெட்டிக் கடத்த முயற்சி

Posted: 21 May 2014 12:15 PM PDT

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே வருவாய் புறம்போக்குப் பகுதியில் நின்ற பலா மரங்களை வெட்டியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவிலில் மாநில எறிபந்து போட்டி தொடக்கம்

Posted: 21 May 2014 12:15 PM PDT

தமிழ்நாடு எறிபந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான 12-வது இளையோருக்கான ஆண், பெண் இரு பாலாருக்கான எறிபந்து விளையாட்டுப் போட்டிகள் நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொற

தறிப் பட்டறையில் மின்சாரம் பாய்ந்து உரிமையாளர் உள்பட 2 பேர் சாவு

Posted: 21 May 2014 12:15 PM PDT

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விசைத்தறி உரிமையாளரும், அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது சித்தியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

Posted: 21 May 2014 12:15 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்வையற்ற, ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை 135 பேர் எழுதினர்.

வடலூர் அருகே தலை இல்லாமல் சடலமாக கிடந்தவர் பாமக பிரமுகர்

Posted: 21 May 2014 12:15 PM PDT

வடலூர் அருகேயுள்ள பரவனாற்றில் தலை இல்லாமல் சடலமாக கிடந்தவர் அரியலூர் மாவட்டம், கரடிக்குளத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் சரத்குமார் எனத் தெரியவந்தது.

பள்ளிகளில் பிளஸ் 2சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

Posted: 21 May 2014 12:14 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளில் பிளஸ் 2 சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9 ஆம் தேதி வெளியானது

செஞ்சி அருகே எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு: காணாமல்போன காதல் ஜோடியா?

Posted: 21 May 2014 12:14 PM PDT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, இரு எலும்புக் கூடுகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன. அவை காணாமல் போன காதலர்களின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

Posted: 21 May 2014 12:14 PM PDT

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

Posted: 21 May 2014 12:14 PM PDT

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: 74 பேர் எழுதினர்

Posted: 21 May 2014 12:13 PM PDT

தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 74 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

ஆஸாத் கால்பந்து: திருவனந்தபுரம் அணி காலிறுதிக்கு தகுதி

Posted: 21 May 2014 12:13 PM PDT

காயல்பட்டினத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற அகில இந்திய கால்பந்தாட்டப் போட்டியில் திருவனந்தபுரம் எஸ்.எம்.ஆர்.சி. அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஜூன் 10-க்குள் துப்பாக்கி விவரங்களை தெரிவிக்காவிடில்  உரிமம் ரத்து

Posted: 21 May 2014 12:13 PM PDT

 தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய துப்பாக்கி உரிமதாரர்கள் தங்களது விவரங்களை ஜூன் 10ஆம் தேதிக்குள் வழங்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் ம. ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ்காந்தி நினைவு தினம்: கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

Posted: 21 May 2014 12:13 PM PDT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயலுக்கு எதிரான உறுதிமொழியை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை ஏற்றுக்கொண்டனர்.

கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Posted: 21 May 2014 12:12 PM PDT

கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த வேன், பேருந்து

கழுகுமலை அருகே தகராறு: போலீஸ்காரர் உள்பட 3 பேர் காயம்

Posted: 21 May 2014 12:12 PM PDT

கழுகுமலை அருகே புதிய கோயில் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

தொழிலாளி தற்கொலை

Posted: 21 May 2014 12:12 PM PDT

கோவில்பட்டியில் தொழிலாளி புதன்கிழமை  மின்சாரத்தை உடலில் பாய்த்து தற்கொலை செய்துகொண்டார். கோவில்பட்டி நடராஜபுரம் தெரு பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (30). தொழி

திருச்செந்தூரில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி

Posted: 21 May 2014 12:12 PM PDT

திருச்செந்தூர் பகுதியில் சாலைப்பணியால் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மே 26 முதல் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம்

Posted: 21 May 2014 12:11 PM PDT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 26 ஆம் தேதி முதல் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

28 இல் தூத்துக்குடியில் முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

Posted: 21 May 2014 12:11 PM PDT

தூத்துக்குடியில் வரும் 28 ஆம் தேதி முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்டத் தலைவர்  பி.மீராசா மரைக்காயர்  தலைமை வகிக்கிறார்

நாகர்கோவில்

Posted: 21 May 2014 12:11 PM PDT

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் காலமானார்

Posted: 21 May 2014 12:07 PM PDT

பிகார் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சீதாராம் பிரசாத் (93) உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை இறந்தார்.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா- இலங்கை இடையே பரஸ்பர ஒத்துழைப்பு தேவை: சுப்ரமணியன் சுவாமி

Posted: 21 May 2014 12:06 PM PDT

இந்திய துணைக்கண்டத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

மன்மோகன் பதவிக்கால தகவல் தொடர்புகள்: ஆர்டிஐ மூலம் பராமரிக்க நடவடிக்கை

Posted: 21 May 2014 12:05 PM PDT

"மன்மோகன் சிங்கின் அலுவல்பூர்வ கடிதங்கள், "டுவிட்டர்' சமூக வலைதள செயல்பாடு உள்ளிட்ட தகவல் தொடர்புகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி பராமரிக்கப்படும்' என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்?

Posted: 21 May 2014 12:05 PM PDT

நரேந்திர மோடி தலைமையில் வரும் 26ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ள மத்திய அமைச்சரவையில் தில்லி பாஜக தலைவரும், சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஹர்ஷ் வர்தனை சுகாதார அமைச்சராக சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்ய பாஜக மேலிடம் பரிசீலித்து

மெளல்வி ஃபாரூக் 25-வது நினைவு தினம்

Posted: 21 May 2014 12:05 PM PDT

மறைந்த காஷ்மீர் அரசியல் தலைவரும், அவாமி ஆக்ஷன் கமிட்டி தலைவருமான மீர்வாய்ஸ் மெüல்வி ஃபாரூக்கின் 25ஆவது நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சாஸ்திரி பவனில் தீ விபத்து

Posted: 21 May 2014 12:04 PM PDT

தில்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சில ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது.

வடக்கு தில்லி மாநகராட்சி: நிலைக் குழு நிர்வாகிகள் தேர்வு

Posted: 21 May 2014 12:04 PM PDT

வடக்கு தில்லி மாநகராட்சியின் நிலைக் குழுத் தேர்தல் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆம் ஆத்மி கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பர்

Posted: 21 May 2014 12:04 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் மோசமான அரசியல் செயல்பாடுகளால் அக்கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பர் என்று தில்லி பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லி தமிழ்ச் சங்கத்தில் நாளை கால்டுவெல் பிறந்த நாள் விழா

Posted: 21 May 2014 12:04 PM PDT

 தில்லி தமிழ்ச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை (மே 23), அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல், தமிழுக்கு அளப்பறிய பங்களிப்பு நல்கியிருக்கும் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோரின் 200ஆவது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.

துணிச்சலாக நடவடிக்கை எடுப்பவர் மன்மோகன் சிங்: ஒபாமா புகழாரம்

Posted: 21 May 2014 12:03 PM PDT

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் சிங்கை துணிச்சலாக நடவடிக்கை எடுப்பவர் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டியுள்ளார்.

மன்னிப்புக் கேட்டார் கேஜரிவால்

Posted: 21 May 2014 12:03 PM PDT

"முதல்வர் பதவியில் இருந்து விலகியதற்காக தில்லிவாசிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்' என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால் அறிக்கை

பிகாரில் கடத்தப்பட்ட 70 சிறார்கள் தில்லியில் மீட்பு

Posted: 21 May 2014 12:03 PM PDT

பிகாரில் கடத்தப்பட்ட 70 சிறார்கள், பழைய தில்லி ரயில் நிலையத்தில் புதன்கிழமை போலீஸாரால் மீட்கப்பட்டனர்.

குறைந்து வரும் நிலத்தடி நீர்: கவலையில் தில்லி அரசு

Posted: 21 May 2014 12:03 PM PDT

தில்லியில் சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நீர் ஆதாரம் குறைந்து வருவது தில்லி அரசை கவலையுறச் செய்துள்ளது. இதையடுத்து, இதுபோன்ற சட்டவிரோத

துணிச்சலாக நடவடிக்கை எடுப்பவர் மன்மோகன் சிங்

Posted: 21 May 2014 12:03 PM PDT

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் சிங்கை துணிச்சலாக நடவடிக்கை எடுப்பவர் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டியுள்ளார்.

அருணாசலப் பிரதேசம்: ஜுன் 19இல் மாநிலங்களவை தேர்தல்

Posted: 21 May 2014 12:02 PM PDT

அருணாசலப் பிரதேசத்தின் சார்பில் மாநிலங்களவையின் ஓரு உறுப்பினருக்கான தேர்தல் ஜுன் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

தில்லி பாஜக முதல்வர் வேட்பாளராக போட்டியிடத் தயார்: கிரண் பேடி

Posted: 21 May 2014 12:02 PM PDT

"தில்லி முதல்வராக என்னை பாஜக முன்னிறுத்தினால் அந்த வாய்ப்பை ஏற்கத் தயாராக இருக்கிறேன்' என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலருமான கிரண் பேடி தெரிவித்துள்ளார். தில்லி பேரவைத் தேர்தலில் 28 தொகுதிகளைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி

விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.36 லட்சம் இழப்பீடு

Posted: 21 May 2014 12:02 PM PDT

வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரின் மனைவி, இரு குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.36 லட்சத்தை காப்பீடு செய்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டு

வீடுகளில் கொள்ளை: 3 இளைஞர்கள் கைது

Posted: 21 May 2014 12:02 PM PDT

தில்லி அருகே வீடுகளில் கொள்ளையடித்தும், கார்களைத் திருடியும் வந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து டி.வி., கம்ப்யூட்டர், காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட

தில்லி பாஜக முதல்வர்வேட்பாளராக போட்டியிடத் தயார்: கிரண் பேடி

Posted: 21 May 2014 12:02 PM PDT

"தில்லி முதல்வராக என்னை பாஜக முன்னிறுத்தினால் அந்த வாய்ப்பை ஏற்கத் தயாராக இருக்கிறேன்' என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலருமான கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா- இலங்கை இடையே பரஸ்பர ஒத்துழைப்பு தேவை

Posted: 21 May 2014 12:02 PM PDT

இந்திய துணைக்கண்டத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

"ஜண்டேவாலான் கோயிலைச் சுற்றியுள்ள காஸ் கிடங்குகள் விரைவில் மாற்றப்படும்

Posted: 21 May 2014 12:01 PM PDT

தில்லி ஜண்டேவாலான் கோயிலைச் சுற்றியுள்ள காஸ் கிடங்குகள் விரைவில் வேறு பகுதிக்கு மாற்றப்படும் என்று வடக்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி நினைவு நாள்: கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

Posted: 21 May 2014 12:00 PM PDT

ராஜீவ்காந்தி நினைவுநாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்

Posted: 21 May 2014 12:00 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவை புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

ஏ.டி.எம். கொள்ளையனைப் பிடித்த சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

Posted: 21 May 2014 11:59 AM PDT

திருப்போரூர் ஏ.டி.எம். மையத்தில் வெடிகுண்டு வைத்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனைப் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரனை எஸ்.பி. விஜயகுமார் பாராட்டி வெகுமதி அளித்தார்.

30-இல் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்

Posted: 21 May 2014 11:59 AM PDT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் மே 30-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

11 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து

Posted: 21 May 2014 11:59 AM PDT

காஞ்சிபுரத்தில் அரசு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் உள்ள 11 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

Posted: 21 May 2014 11:59 AM PDT

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது.

ரூ.10 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல்: 2 பேர் கைது

Posted: 21 May 2014 11:58 AM PDT

மதுராந்தகத்தை அடுத்த ஆத்தூர் சமத்துவபுரம் அருகே ஆற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

போராட்டம் நடத்த காங்கிரஸார் தயாராக இருக்க வேண்டும்: ராகுல் காந்தி

Posted: 21 May 2014 11:58 AM PDT

""பொது நலனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும். போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும்'' என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

ரூ.2 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது

Posted: 21 May 2014 11:58 AM PDT

செங்கல்பட்டு அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளரை போலீஸார் கைது செய்தனர்.

மேல்நிலைக் கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 21 May 2014 11:58 AM PDT

திருவள்ளூர் மாவட்டதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மேல்நிலைப் படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கும் திட்டம்

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

Posted: 21 May 2014 11:57 AM PDT

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் (பொறுப்பு) செல்வமணி தலைமையில் புதன்கிழமை அனைத்து அலுவலர்களும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை ஏற்றனர்.

தணிகாசலம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

Posted: 21 May 2014 11:57 AM PDT

தணிகாசலம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற 108 சங்காபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றுகள் விநியோகம்

Posted: 21 May 2014 11:57 AM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானதைத் தொடர்ந்து புகைப்படத்துடன் கூடிய மதிபெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு புதன்கிழமை

அதிக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம்: குன்றத்தூர் ஆர்.டி.ஓ. நடவடிக்கை

Posted: 21 May 2014 11:57 AM PDT

குன்றத்தூரில் அதிக அளவில் பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் குன்றத்தூர் ஆர்.டி.ஓ. மாதவன் தலைமையில்

பொறியியல் மாணவர்களுக்கு பணி ஆணை

Posted: 21 May 2014 11:56 AM PDT

திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பணி பணி நியமன ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

வயதான தம்பதியினரைக் கத்தியால் தாக்கி கொள்ளை முயற்சி

Posted: 21 May 2014 11:56 AM PDT

அம்பத்தூர் அருகே வயதான தம்பதிகளைக் கத்தியால் தாக்கி நகைப் பறிக்க முயன்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் அருகே திருமுல்லைவாயலில் உள்ள ஸ்ரீநகரில் அடுக்குமாடி குடியிரு

பொன்னேரியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?

Posted: 21 May 2014 11:56 AM PDT

பொன்னேரியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் அங்குள்ள கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரியில் குரங்குகள் தொல்லை

Posted: 21 May 2014 11:55 AM PDT

பொன்னேரியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் மனு

Posted: 21 May 2014 11:55 AM PDT

திருத்தணி அருகே உள்ள மேல்முருகம்பட்டு காலனியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

Posted: 21 May 2014 11:55 AM PDT

குன்றத்தூர் அருகே பழுதடைந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து வயரை திருட முயற்சி செய்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

ஆற்றில் மணல் எடுப்பு: கிராம மக்கள் புகார்

Posted: 21 May 2014 11:55 AM PDT

திருவள்ளூர் அருகே அரசு அனுமதியின்றி ஆற்றில் மணல் எடுப்பதாக கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு: 192 பேர் பங்கேற்பு

Posted: 21 May 2014 11:54 AM PDT

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்று மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித்தேர்வை 192 பேர் எழுதினர்.

திருவெறும்பூரில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 8 பேர் கைது

Posted: 21 May 2014 11:54 AM PDT

திருச்சி திருவெறும்பூர் பகுதிகளில் பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.மேலும் தலைமறைவான 3 பேரை தேடிவருகின்றனர்.

கொட்டப்பட்டு குளத்தில் பால் வியாபாரி சடலம்

Posted: 21 May 2014 11:53 AM PDT

திருச்சி விமானம் நிலையம் அருகேயுள்ள கொட்டப்பட்டு குளத்தில் கிடந்த பால் வியாபாரி சடலம் மீட்கப்பட்டது.

சூறைக் காற்றால் சாய்ந்த மரங்கள்: நவலூர் குட்டப்பட்டில் 60 மி.மீ. மழை

Posted: 21 May 2014 11:53 AM PDT

திருச்சி மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றால் சாய்ந்த மரங்கள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

ஆட்டோ திருட்டு: 3 பேர் கைது

Posted: 21 May 2014 11:53 AM PDT

திருச்சி வரகனேரி அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தி ஆட்டோவை திருடிச் சென்ற மூன்று பேர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியை கொலை

Posted: 21 May 2014 11:53 AM PDT

திருச்சி புத்தூர் அருகே புதன்கிழமை வீட்டினுள் ஓய்வு பெற்ற ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

கொடைக்கானலில் வால் பேரிக்காய் விளைச்சல் குறைவு: விலை அதிகம்

Posted: 21 May 2014 11:52 AM PDT

கொடைக்கானலில் பருவமழை பெய்யாததால், வால் பேரிக்காய் விளைச்சல் வெகுவாகக் குறைந்தது. இதனால், விலை அதிகரித்துள்ளது.

மக்களவைக்கு செல்லும் எம்.பி. தம்பதி

Posted: 21 May 2014 11:51 AM PDT

பிகாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எதிரெதிர் கட்சி சார்பில் போட்டியிட்ட கணவரும், மனைவியும் வெற்றி பெற்று ஒரே சமயத்தில் மக்களவைக்கு செல்லவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் விஷயமாகியுள்ளது.

திண்டுக்கல் பகுதியில் மழை: வெப்பம் தணிந்தது

Posted: 21 May 2014 11:51 AM PDT

திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழையால், வெப்பம் தணிந்தது.

கேரளத்துக்கு கடத்தப்படவிருந்த 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 21 May 2014 11:51 AM PDT

கேரளத்துக்கு கடத்துவதற்காக கம்பத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், செவ்வாய்க்கிழமை இருவரை கைது செய்தனர்.

மோடியை குறிவைத்தே பாட்னா குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப்பு

Posted: 21 May 2014 11:51 AM PDT

பிகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர்குண்டு வெடிப்பு, தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கூறியுள்ளது.

ஆலமரம் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதி

Posted: 21 May 2014 11:51 AM PDT

கம்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆலமரம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த 5 பேரது குடும்பத்தினரை, புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் முதல்வர் நிவாரண நிதியை வழங்கினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™