Daily Thanthi |
- மந்திரிசபை குறித்த யூக செய்திகள் எதிரொலி: டெலிவிஷன் சேனல்கள் பற்றி மோடி கிண்டல்
- சென்னை, டெல்லி , கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் லேசான நிலநடுக்கம்
- அரசியல் ஆதாயம் தேட கெஜ்ரிவால் நாடகம் ஆடுகிறார்: பா.ஜனதா-காங்கிரஸ் கண்டனம்
- நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக்கூடாது:வைகோ அறிக்கை
- வட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்; சென்னையிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்
- கறுப்பு பண வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை மாற்றி அமைக்க மேலும் காலஅவகாசம்
- ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சப் அணி 156 ரன்கள் குவிப்பு
- நரேந்திரமோடிக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- நரேந்திர மோடிக்கு பீகார் முன்னாள் முதல் மந்திரி நிதிஷ் குமார் வாழ்த்து
- ஒரு கோப்பையும் நிலுவையில் வைக்காத நரேந்திர மோடி
| மந்திரிசபை குறித்த யூக செய்திகள் எதிரொலி: டெலிவிஷன் சேனல்கள் பற்றி மோடி கிண்டல் Posted: 21 May 2014 10:27 AM PDT காந்திநகர், மத்திய மந்திரிசபையில் இடம் பெறுபவர்கள் பற்றி டெலிவிஷன் செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டு வருவதை நரேந்திர மோடி கிண்டல் செய்தார். குஜராத் புதிய முதல்&மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட ஆனந்தி படேலை வரவேற்று பேசுகையில் அவர் அவ்வாறு பேசினார். மந்திரிசபையை நானே இன்னும் அமைக்கவில்லை. அதற்குள் ஒவ்வொரு டெலிவிஷன் சேனலும் தங்கள் சொந்த மந்திரிசபையை அமைத்து விட்டன. இதுவரை 20 மந்திரிசபைவரை அமைத்து விட்டன. அத்தனையையும் கூட்டிப் பார்த்தால் கூட கணக்கு துல்லியமாக இருக்காது. சில சேனல்கள் ஒருபடி மேலே போய், இலாகாக்களையும் ஒதுக்கி விட்டன. இதனால் எனக்கு வேலை எளிதாகி விட்டது. அந்த பட்டியலில் எனக்கு ஒரு பிரதி தருமாறு அந்த சேனல்களை கேட்டுக்கொள்கிறேன் என்று சிரித்தவாறே நரேந்திர மோடி பேசினார். category:Tagging:News Group Category: |
| சென்னை, டெல்லி , கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் லேசான நிலநடுக்கம் Posted: 21 May 2014 10:16 AM PDT புதுடெல்லி, டெல்லி கொல்கத்தா, ராஞ்சி உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் சென்னையிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானதாக கூறப்படுகிறது.வங்க கடலில் ஐரோப்பிய மத்திய தரைக்கடலில் 30 கீமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது. அடையாறு, தி நகர் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி சூளை மேடு, எக்மோர் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனினும் இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. image: category:Tagging:News Group Category: |
| அரசியல் ஆதாயம் தேட கெஜ்ரிவால் நாடகம் ஆடுகிறார்: பா.ஜனதா-காங்கிரஸ் கண்டனம் Posted: 21 May 2014 10:05 AM PDT புதுடெல்லி, அரசியல் ஆதாயம் தேட கெஜ்ரிவால் நாடகம் ஆடுகிறார் என்று பா.ஜனதா, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. காங்கிரஸ் கண்டனம் கோர்ட்டில் ஜாமீன் பத்திரம் எழுதித்தர மறுத்ததால், கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜனதா கருத்து பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஹர்சவர்த்தன், கெஜ்ரிவால் தொடர்ந்து நடத்தி வருகிற அரசியல், நாட்டு மக்களால் மொத்தமாக, முழுமையாக நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. இப்படிப்பட்ட நாடகங்கள் அவருக்கு பலன் தராது என நான் கருதுகிறேன் என்று கூறினார்.பாரதீய ஜனதாவின் மற்றொரு மூத்த தலைவர் விஜேந்தர் குப்தா, கெஜ்ரிவாலின் செயல், அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதற்கான விளம்பர நாடகம். அவர் கலகக்காரர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்தளவுக்கு போவார் என கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என கருத்து தெரிவித்தார். நியாயப்படுத்துகிறார்கள் ஆனால் ஆம் ஆத்மி கட்சி, கெஜ்ரிவாலின் செயலை நியாயப்படுத்தி உள்ளது.இது குறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அசுதோஷ், ஊழலுக்கு எதிராக எங்கள் கட்சி போராடுகிறது. ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவதே குற்றமா? ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். நாங்கள் ஜாமீன் பத்திரம் எழுதித் தரமாட்டோம். இது எங்கள் நிலைப்பாடு என கூறினார். category:Tagging:News Group Category: |
| நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக்கூடாது:வைகோ அறிக்கை Posted: 21 May 2014 09:54 AM PDT சென்னை, நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்று வைகோ கூறினார். பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பு ஏற்க இருக்கின்ற விழா, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக, டெல்லியில் நடைபெற இருக்கிறது. இனப்படுகொலை தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீள முடியாத படுதோல்வியைச் சந்தித்தது. ராஜபக்சேவுக்கு அழைப்பு தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டனர். எனவே, இலங்கை அரசுக்கு எதிராக, தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத ரணம் ஏற்பட்டு உள்ளது.இந்த சூழ்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாக தாக்குகிறது. தமிழர்கள் சகித்து கொள்ளமாட்டார்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் ரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபக்சே நுழைவதை எந்த விதத்திலும் தமிழர்களால் சகித்துக்கொள்ள இயலாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டு குடிமக்கள், இன்னொரு நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக்கொள்கிறது.எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1998&99ம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவி பிரமாணம் செய்துகொண்டபோது, 2004, 09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி பிரமாணம் செய்துகொண்டபோதும் இலங்கை அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். ராஜபக்சேவை அனுமதிக்க வேண்டாம் எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த ராஜபக்சே, டெல்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.எனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, ராஜபக்சே கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, இலங்கை அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப்போகின்ற நரேந்திர மோடியிடமும், பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிடமும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| வட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்; சென்னையிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் Posted: 21 May 2014 09:46 AM PDT புதுடெல்லி, வடமாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி, ராஞ்சி, புவனேஷ்வர் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரபட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.மேலும் , சென்னையிலும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடையாறு, திருவல்லிக்கேணி, எக்மோர், உள்ளிட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. image: category:Tagging:News Group Category: |
| கறுப்பு பண வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை மாற்றி அமைக்க மேலும் காலஅவகாசம் Posted: 21 May 2014 09:29 AM PDT புதுடெல்லி, கறுப்பு பண விவகாரம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை மாற்றி அமைக்கும்படி மத்திய அரசுக்கு 3 வார காலஅவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு இந்த மாதம் 1-ந் தேதி உத்தரவிட்டது. இந்த குழுவுக்கு முன்னாள் நீதிபதி எம்.பி.ஷாவை தலைவராகவும் கோர்ட்டு நியமித்தது. இந்த நிலையில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், புதிய மத்திய அரசு அமைய உள்ளதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த மேலும் காலஅவகாசம் தேவைப்படுவதாக கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. image: category:Tagging:News Group Category: |
| ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சப் அணி 156 ரன்கள் குவிப்பு Posted: 21 May 2014 09:16 AM PDT மொகாலி, 7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நடைபெறும் 48வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்க் செய்தது. பஞ்சாப் அணியில் தொடக்கா ஆட்டக்காரராக களம் இறங்கிய அதிரடி ஆட்டக்காரர் சேவாக் 17 ரன்களில் ரன் அவுட் ஆகி ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வகோரா 36 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மில்லர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக களம் இறங்கிய மார்ஷ் 17 பந்துகளில் 30 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 2 ரன்களிலும் பெய்லி 39 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்தது. இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு மும்பை அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| நரேந்திரமோடிக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து Posted: 21 May 2014 08:46 AM PDT சென்னை, பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26-ந்தேதி பதவியேற்க உள்ளார். பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திர மோடிக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது நரேந்திர மோடி தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். image: category:Tagging:News Group Category: |
| நரேந்திர மோடிக்கு பீகார் முன்னாள் முதல் மந்திரி நிதிஷ் குமார் வாழ்த்து Posted: 21 May 2014 08:41 AM PDT பாட்னா, பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் பெற்ற படுதோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிய நிதிஷ் குமார், இன்று பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு தனது வாழத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக்கில் அவர் கூறியுள்ளதாவது: அவர் பெற்ற வெற்றிக்கு எனது பாரட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். பிரதமராக சிறப்பாக பணியாற்ற எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மோடி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கபட்ட பிறகு 17 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. category:Tagging:News Group Category: |
| ஒரு கோப்பையும் நிலுவையில் வைக்காத நரேந்திர மோடி Posted: 21 May 2014 08:00 AM PDT காந்திநகர், 9 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். அவர் 25 மாநிலங்களில் 3 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, 437 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், நான் முதல்&மந்திரி பதவியை விட்டு விலகிவிட்டேன். இப்போது நான் முன்னாள் முதல்&மந்திரி ஆகிவிட்டேன். ஆனால் ஒரு கோப்பைக்கூட (பைல்) பார்க்காமல் விட்டு வைக்கவில்லை. தேர்தலின்போது பிரசாரத்தில் தீவிரமாக இருந்தபோதும்கூட, இரவில் எனக்கு எப்போதெல்லாம் சமயம் வாய்த்ததோ, அப்போதெல்லாம் அதிகாரிகளை அழைத்து பைல்களை பார்த்து என் வேலைகளை நிறைவு செய்து விட்டேன் என கூறினார். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |