Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


உலகக்கோப்பை கால்பந்து -ஒரு பார்வை

Posted: 29 May 2014 08:46 AM PDT

ரியோடி ஜெனிரோ,

உலகிலேயே அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து போட்டியாகும்.  உலகக்கோப்பை கால்பந்து 1930ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர்  நான்காண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலககோப்பை போட்டி நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் 2014ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டி பிரேசிலில் வருகிற ஜுன் மாதம் 12ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 13ம் தேரதி வரை நடைபெறவுள்ளது. பிரேசிலில் உள்ள ரியோ டிஜெனிரோவில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய ஸ்டேடியங்கள் மற்றும் வீரர்கள், ரசிகர்கள் தங்குவதற்கான உள்கட்டமைப்புகள் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடந்து வருகிறது. பிரிவுக்கு 4 அணிகள் வீதம் 8 பிரிவுகளில் மொத்தம்  32 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டித்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதற்பரிசாக 35மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் மூன்றாம் இடம்பிடிக்கும் அணிக்கு 22 மில்லியின் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

image: 

category:

News Group Category:

கருப்பு பண விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் வரும் ஜூன் 4 ஆம் தேதி ஆரம்பம்

Posted: 29 May 2014 07:14 AM PDT

புதுடெல்லி,

மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு நேற்று முன்தினம் புதுடெல்லியில் நடந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கருப்பு பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான இந்த குழுவில் சி.பி.ஐ. இயக்குனர், வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனர், ரிசர்வ் வங்கியி்ன் துணை இயக்குனர், திட்ட அமுலாக்க துறையின் இயக்குனர், அன்னிய வரி மற்றும் வரி ஆய்வுத்துறையின் செயலாளர், மத்திய போதை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வாரியத்தின் இயக்குனர் மற்றும் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவின் துணைத் தலைவராக அர்ஜித் பசாயத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே விசாரணை துவங்கிவிட்டதாகவும், ஆனால் அவை முழுமை பெறாமல் நிலுவையில் இருப்பதாகவும், தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு நிலுவையில் உள்ள அந்த விசாரணையை முடுக்கிவிட்டு நீதிமன்றத்திற்கு அதுகுறித்த அறிக்கையை அவ்வப்போது காலந்தவறாமல் தெரிவிக்கும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், புதிய சிறப்பு புலனாய்வுக்குழுவின் முதல் கூட்டம் வரும் ஜூன் 4 ஆம் தேதி துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

category:

News Group Category:

தெலுங்கானாவில் ஆட்சியமைக்க சந்திரசேகர ராவுக்கு அழைப்பு: ஜூன் 2 ஆம் தேதி பதவியேற்பு

Posted: 29 May 2014 06:45 AM PDT

ஐதராபாத்,

ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஆளுநர் நரசிம்மன் இன்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் கே. சந்திர சேகர ராவை தெலுங்கானாவில் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் 29-வது மாநிலமாக  வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் தெலுங்கானா உதயமாக உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானாவின் 119 இடங்களில் 63 இடங்களை டி.ஆர்.எஸ். கட்சி வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவராக சந்திர சேகரராவ் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து வரும் ஜூன் 2 ஆம் தேதி அங்கு சந்திர சேகர ராவ் தலைமையில் ஆட்சி அமைகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், ''தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.கே.சந்திர சேகர ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். குடியரசுத் தலைவரும் தனித்தனியாக அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

category:

News Group Category:

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என்று கூறிய நஜ்மா ஹெப்துல்லாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்

Posted: 29 May 2014 06:17 AM PDT

சென்னை,

மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ளவர் நஜ்மா ஹெப்துல்லா. இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களின் பேட்டி ஒன்றில்  முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. உண்மையில், பார்சிஸ்கள் தான் சிறுபான்மையினர். நாங்கள் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இடஒதுக்கீடு வாக்குறுதி கொடுத்தது கிடையாது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்நிலையில், முஸ்லிம்கள் குறித்த அவரது கருத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து அது தன்னுடைய கண்டனச் செய்தியில், ''நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்து தற்போது நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு விரோதமாக உள்ளது. அவரது கருத்து முஸ்லிம்கள் குறித்த அவருடைய தவறான பார்வையை தெளிவாக காட்டுகிறது. தமிழ்நாட்டில் 3.5 விழுக்காடு சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது அவர்களது பின்தங்கிய நிலை காரணமாக, அவர்களை உயர்த்தவே வழங்கப்படுகிறது.

சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் வேளையில், நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்து சமூக நீதியை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும், சிறுபான்மையினரின் சலுகைகளும் பறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

category:

News Group Category:

போர்ப்ஸ் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்

Posted: 29 May 2014 05:49 AM PDT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முண்ணனி பத்திரிக்கையான போர்ப்ஸ் உலகின் 100 அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளறது. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில், இந்தியாவிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவுக்கு 36வது இடம் கிடைத்துள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சர் 43வது இடத்தில் உள்ளார். பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் 92வது இடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் அமெரிக்க வாழ் இந்தியரான, பெப்சிகோ நிறுவனத் தலைவர் இந்திரா நூயி 13வது இடத்தில் இருக்கிறார். 100 அதிகாரம் மிக்க பெண்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் பில்கேட்சின் மனைவி மெலிண்டா, அமெரிக்க அதிபர் ஒபாமா மனைவி மிச்செல், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
 

image: 

category:

News Group Category:

பிரசாந்துடன் இணைந்து இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி நடனம்

Posted: 29 May 2014 05:36 AM PDT

பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களை அடுத்து பிரஷாந்த், 'சாஹசம்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நடந்தது.

இதில், வேலை தேடும் இளைஞராக பிரஷாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரஷாந்தின் அம்மாவாக துளசியும், அப்பாவாக நாசரும், தங்கையாக லீமாவும் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், சோனுசூது, கோட்டா சீனிவாசராவ், தேவதர்ஷினி ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

'ஸ்பை' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் நர்கீஸ் பக்ரி, பிரஷாந்துடன் இணைந்து ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆடுகிறார். இவர் ஏற்கனவே ரன்பீர்கபூருடன் இணைந்து 'ராக் ஸ்டார்,' ஜான் ஆபிரகாமுடன் இணைந்து 'மெட்ராஸ் கபே,' ஷாகித் கபூருடன் இணைந்து 'பட்டா போஸ்டர் நிக்லா ஹீரோ,' வருணுடன் இணைந்து 'தேரா ஹீரோ' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

இந்த பாடல் நடன காட்சிக்காக சென்னையில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்படுகிறது. வேகமாக வளர்ந்து வரும் 'சாஹசம்' படத்துக்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். அருண்ராஜ்வர்மா டைரக்டு செய்கிறார். இவர், டைரக்டர் மேஜர் ரவியிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.

ஸ்டார் மூவீஸ் சார்பில் நடிகர் தியாகராஜன், இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

image: 

category:

News Group Category:

குஜராத் சிறையில் இருந்த 32 பாகிஸ்தான் மீனவர்களை இந்தியா விடுவித்தது

Posted: 29 May 2014 05:27 AM PDT

அகமதாபாத்,

நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் வந்த போது நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவை சேர்ந்த 151 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். அவர்கள் அனைவரும் இந்தியா திரும்பி உள்ளனர்.

 இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கடந்த 6 மாதங்களுக்கு முன் 32 பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டு குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

பாகிஸ்தானை தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் 32 பேரையும் விடுதலை செய்ய இந்தியா உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீனவர்கள் 32 பேரையும் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் இன்று ஒப்படைத்தனர்.

category:

News Group Category:

ஷாருக்கானின் ஆதரவுக்கு நன்றி :காம்பீர் நெகிழ்ச்சி

Posted: 29 May 2014 05:23 AM PDT

கொல்கத்தா,

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐ.பி.எல் குவாலிபையர் சுற்றில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி பலமான பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெற்றி பெற்ற பின்னர் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கூறுகையில் "இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முழு காரணமும் எங்கள் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தான். அவர் தான் எங்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் தந்து எங்களை வழி நடத்தினார். இத்தொடரின் தொடக்கத்தில் நான் ஒழுங்காக விளையாடாமல் பல முறை ஆட்டமிழந்த போது ஷாருக்கான் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

நாளை பஞ்சாப்பிற்கும் சென்னைக்கும் நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.  

image: 

category:

News Group Category:

சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூன்-8ல் இந்தியா வருகை

Posted: 29 May 2014 05:17 AM PDT

பீஜிங்,

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ஜூன் மாதம் 8ம் தேதி இந்தியா வர உள்ளதாக சீனா வெளியுறத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பயணத்தின் போது வாங் யி, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேச உள்ளதாக வெளியுறத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இன்று சீன பிரதமர் லீ கெகியாங், போன் மூலம் இந்திய பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, இரு நாட்டு உறவு குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட இந்த முதல் அழைப்பு சுமார் 25 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த தொலைபேசி உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன பிரதமர் ஆகியோர் உரையாடினர்.
 

category:

News Group Category:

அரசியல் சாசனப்பிரிவு 370 விவகாரம்: காஷ்மீரில் அப்துல் ரஷீத் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு

Posted: 29 May 2014 05:12 AM PDT

ஸ்ரீநகர்,

அவாமி இதிகாத் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல் ரஷீத் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப்பிரிவு 370–ஐ முழுமையாக புதுப்பிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சிறப்பு கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு காஷ்மீரின் லங்காட் தொகுதியில் இருந்து தனிச்சுதந்திரம் பெற்ற எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் ஷேக் அப்துல் ரஷீத். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப்பிரிவு 370 படிப்படியாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், அதனால் காஷ்மீர் சட்டப்பேரவை அதை மீண்டும் முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என்றும் ரஷீத் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ரஷீத் கூறுகையில், ''முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளேன். அதில், சட்டப்பேரவையை கூட்டி சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அரசியல் சாசனப்பிரிவு 370-ஐ முழுமையாக புதுப்பிக்கும் கோரிக்கையை வலியுறுத்தும் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமையை வழங்குவது மட்டுமே இறுதியான தீர்வாக அமைந்து விட முடியாது என்பதையும் காஷ்மீர் சட்டப்பேரவை தெளிவுபடுத்த வேண்டும்'' என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ரஷீத் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் பிரதான எதிர்கட்சியான பி.டி.பி யையும் ஒன்றிணைத்து ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™