Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மான் கராத்தே

Posted: 27 May 2014 01:45 PM PDT

Top Five Cinema Priority: 
5

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

Posted: 27 May 2014 01:44 PM PDT

Top Five Cinema Priority: 
4

x-மேன்

Posted: 27 May 2014 01:43 PM PDT

Top Five Cinema Priority: 
3

யாமிருக்க பயமே

Posted: 27 May 2014 01:40 PM PDT

Top Five Cinema Priority: 
2

கோச்சடையான்

Posted: 27 May 2014 01:39 PM PDT

Top Five Cinema Priority: 
1

தமிழக அரசின் தீவிர முயற்சியால் தேவையான மின்சாரம் கிடைக்கிறது 1-ந்தேதி முதல் மின்வெட்டு அடியோடு ரத்து ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 27 May 2014 12:56 PM PDT

தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆய்வு கூட்டம்

தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் 27-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் கு.ஞானதேசிகன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி, வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, எரிசக்தி துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தேவையும் உற்பத்தியும்

பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்சிக்கும் இன்றியமையாததாக விளங்குவது மின்சாரமே ஆகும். 2011-ம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருந்தது. ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8 ஆயிரம் மெகாவாட் தான். அதாவது கிடைத்த மின்சாரத்திற்கும், தேவைப்பட்ட மின்சாரத்திற்குமான இடைவெளி 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வந்தது.

நீண்டகால ஒப்பந்தம்

இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய நடுத்தர கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. இது தவிர, 3 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து படிப்படியாக பெறப்படும்.

புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமாகவும் நமக்கு தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கப்பெற்று வருகிறது.

ஜூன் 1-ந் தேதி முதல்

எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

வரும் ஜூன் மாதம் முதல் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் பயன்படுத்திட வேண்டும் என்று நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளேன். ஜூன் மாதம் முதல் கிடைக்கப்பெறும் காற்றாலை மின்சாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1-ந் தேதி முதல் அறவே நீக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மின் கட்டுப்பாடு நீக்கப்படும்

இதன்படி, தற்போது உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90 சதவீதம் மின் கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் நீக்கப்படும். இதே போன்று, உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 சதவீதம் மின் கட்டுப்பாடும் 1-ந் தேதி முதல் நீக்கப்படும்.

பெருமிதம்

இதன் மூலம் 1.11.08 முதல் தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும். நான் ஏற்கனவே உறுதி அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி

Posted: 27 May 2014 12:37 PM PDT

மன்னார்குடி,

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

சூறைகாற்றுடன் மழை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ராம்ஜி என்கிற மணிகண்டன் (வயது 30). அதே பகுதியைச்சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சிவா(24). இரு வரும் நண்பர்கள். நேற்று முன்தினம் நள்ளிரவில் நண்பர்கள் இருவரும் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தபோது திடீரென்று மழை பெய்தது.

சூறைக்காற்றும் வீசியதால் அந்த பகுதியில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து கீழே கிடந்தது. அந்த நேரத்தில் அங்கு தெரு விளக்கு களும் எரியவில்லை. இந்த நிலையில் நடந்து சென்று கொண்டிருந்த நண்பர்கள் இருவரும், அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்து விட்டனர். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இதுதொடர் பான தகவலின்பேரில் மின் சார வாரியத்தினர் உடனடி யாக மின்சாரத்தை துண்டித்த னர். இதையடுத்து மன்னார் குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ராம்ஜி, சிவா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி, மன் னார்குடி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரி சோத னைக்காக அனுப்பி வைத்த னர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

image: 

நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு நிலவரங்கள் கண்காணிக்கப்படும் மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

Posted: 27 May 2014 11:58 AM PDT

புதுடெல்லி

உலக பொருளாதாரம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. எனவே, அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையே உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் ரூபாய் வெளிமதிப்பு நிலவரங்கள் கண்காணிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில்...

கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3,240 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதமாகும். 2012–13–ஆம் நிதி ஆண்டில் இது 4.7 சதவீதமாக இருந்தது.

நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் இது குறித்து கூறுகையில், ''நடப்பு கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது. எனினும், சர்வதேச பொருளாதார நிலவரம் தெளிவற்ற நிலையில் உள்ளதால் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கண்காணிக்க வேண்டியது அவசியம்'' என்று தெரிவித்தார்.

120 கோடி டாலர்

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 120 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதமாக மட்டுமே உள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் இது 3.6 சதவீதமாக இருந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வந்திருப்பது நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். இது பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி என்று நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் வெளிமதிப்பு சரிவடையும். இதன் காரணமாக சமையல் எண்ணெய், பருப்பு, உரம், கச்சா எண்ணெய் போன்றவற்றின் இறக்குமதி செலவினம் அதிகரித்து பணவீக்கம் உயரும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைப்பாட்டில் சுமார் 80 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.

ரூபாய் வெளிமதிப்பு

2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து இருந்தது. இதன் காரணமாக 2013 ஆகஸ்டு மாதத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 68.85–ஆக சரிவடைந்தது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இது தற்போது 59–ஆக உயர்ந்துள்ளது. எனினும், ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்துவதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அரவிந்த் மாயாராம் கூறினார்.

2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் உயர்ந்ததையடுத்து தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஜூலை மாதத்தில் ரிசர்வ் வங்கியும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரணங்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ரிசர்வ் வங்கி விதித்தது.

ஆபரண ஏற்றுமதி

இதனையடுத்து, உள்நாட்டில் போதுமான அளவிற்கு தங்கம் கிடைக்காததால் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி குறைந்து நவரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி துறைக்கு பாதிப்பு ஏற்பட்டது. நடப்பு கணக்கு பற்றாக்குறை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால் தங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அண்மையில் தளர்த்தியது. சில தனியார் வங்கிகளுக்கு தங்கம் இறக்குமதி செய்ய ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தது. தற்போது சில வர்த்தக அமைப்புகளுக்கும் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

வர்த்தக பற்றாக்குறை

சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையே உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் 14,760 கோடி டாலராக குறைந்தது. இது, 2012–13–ஆம் நிதி ஆண்டில் 19,570 கோடி டாலராக உயர்ந்து இருந்தது.

category:

ஆக்கி வீரர்கள் 2 பேர் விபத்தில் பலி நாற்கர சாலையில் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்

Posted: 27 May 2014 11:58 AM PDT

கோவில்பட்டி,

கோவில்பட்டி நாற்கர சாலையில் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆக்கி வீரர்கள் 2 பேர் பலியானார்கள்.

இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

ஆக்கி வீரர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மகன் வசந்தகுமார் (வயது 21). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சிவகுமார் (21). ஆக்கி வீரர்கள். 2 பேரும் நண்பர்கள்.

இவர்கள் 2 பேரும் நேற்று காலை 6.30 மணியளவில் ஆக்கி விளையாட்டு பயிற்சிக்காக கோவில்பட்டி அடுத்த நாலாட்டின்புத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவில்பட்டி சாலைப்புதூர் நாற்கர சாலையில் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோவும், மோட்டார் சைக்கிளிலும் மோதிக் கொண்டன.

2 பேர் பலி

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட வசந்தகுமார், சிவகுமார் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாகுல் அமீது, சப்- இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிவகுமார் பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த வசந்தகுமாரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

டிரைவர் கைது

இதுதொடர்பாக ஆட்டோவை ஓட்டி வந்த, கோவில்பட்டி வக்கீல் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சங்கரநாராயணன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வசந்தகுமார் சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை பாலமுருகன் இறந்து விட்டார். அவருக்கு வனிதா என்ற தங்கை உள்ளார். அவர்கள் 2 பேரையும் தாயார் மீனா வளர்த்து வந்தார்.

சிவகுமாரின் தந்தை ராஜகோபால் கூலி தொழிலாளி. சிவகுமாரின் தாயார் பொன்னுத்தாய், அக்காள் மஞ்சு. இறந்த வாலிபர்களின் உடல்களைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

image: 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: வெளியேற்றுதல் சுற்றில் சென்னை–மும்பை இன்று பலப்பரீட்சை

Posted: 27 May 2014 11:57 AM PDT

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் சென்னை– மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை–மும்பை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது இறுதிப்போட்டியை நிர்ணயிக்கும் 'பிளே–ஆப்' சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இதில் புள்ளி பட்டியலில் 3–வது இடத்தை பிடித்த முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், 4–வது இடத்தை பெற்ற நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும் 'எலிமினேட்டர்' என்று அழைக்கப்படும் வெளியேற்றுதல் சுற்றில் இன்றிரவு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி மூட்டையை கட்டும்.

ஆரம்பத்தில் அசத்திய சென்னை அணி இறுதிகட்டத்தில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்றதால் பின்னடைவை சந்தித்தது. அதாவது புள்ளி பட்டியலில் டாப்–2–ஐ விட்டு இறங்க வேண்டியதாகி விட்டது. லீக் போட்டிகளில் 9–ல் வெற்றியும், 5–ல் தோல்வியையும் எதிர்கொண்ட சென்னை அணி கடைசி லீக்கில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்ததால் மீண்டும் புது நம்பிக்கையை பெற்றுள்ளது.

சுமித்–ரெய்னா

தாயகம் திரும்பியிருந்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் நியூசிலாந்தை சேர்ந்த பிரன்டன் மெக்கல்லம் மீண்டும் அணியுடன் இணைந்து இருப்பது மகிழ்ச்சிகரமான தகவலாகும். மெக்கல்லம், வெய்ன் சுமித், பாப் டு பிளிஸ்சிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரைத் தான் சென்னை அணி மலைபோல் நம்பியுள்ளது. இவர்களில் யாராவது நிலைத்து நின்றால் மட்டுமே கணிசமான ஸ்கோரை குவிக்க முடியும். இதனால் இவர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது முக்கியமாகும். வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா உடல்தகுதி பெற்றதுடன், பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு பலமாகும்.

அது மட்டுமின்றி லீக் சுற்றில் மும்பை அணியை இரண்டு முறையும் 7 விக்கெட் மற்றும் 4 விக்கெட் வித்தியாசங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்திருந்தது. இதனால் சென்னை அணி கூடுதல் உத்வேகத்துடன் களம் காணும் என்பதில் சந்தேகமில்லை.

அதிசய அணி

அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அந்த அணி பிளே–ஆப் சுற்றுக்கு வந்தது அதிசயம்..ஆச்சரியம் என்று வர்ணிப்பதே சாலப்பொருத்தமாக இருக்கும். அரபு நாட்டில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்லி கண்ட மும்பை அணி, ஒரு கட்டத்தில் போட்டியை விட்டு வெளியேறிய வேண்டிய விளிம்பில் தொங்கி கொண்டிருந்தது.

அப்போது தான் அவர்களின் மீது அதிர்ஷ்ட தேவதையின் கருணை பார்வை விழுந்தது. ராஜஸ்தான் அணி தங்களது கடைசி 3 ஆட்டங்களிலும் மடிய வேண்டும், ஐதராபாத் அணி கடைசி லீக்கில் மண்ணை கவ்வ வேண்டும், ரன்ரேட்டில் முன்னிலை பெற வேண்டும். இந்த மூன்று விஷயங்களுக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே மும்பைக்கு அடுத்த சுற்று என்ற நிலை இருந்தது. சொல்லி வைத்தாற் போல் இவை எல்லாம் நடந்து மும்பை அணியும் 7 வெற்றி, 7 தோல்வியுடன் பிளே–ஆப் சுற்றுக்குள் அடியடுத்து வைத்து விட்டது.

குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான இறுதி லீக்கில் 14.3 ஓவருக்குள் 190 ரன்களை 'சேசிங்' செய்ய வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில் இந்த இலக்கை மும்பை அணி எட்டிய விதம் உண்மையில் அனைவரையும் மயிர்கூச்செரிய வைத்து விட்டது. 44 பந்துகளில் 95 ரன்கள் விளாசிய கோரி ஆண்டர்சன் ஒரே நாளில் மும்பை ரசிகர்களின் மனதில் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டார். இதே ஆக்ரோஷத்துடன், சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவதற்கு மும்பை வீரர்கள் வரிந்து கட்டி ஆயத்தமாவதால், இன்றைய ஆட்டத்திலும் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

 லென்டில் சிமோன்ஸ், மைக் ஹஸ்சி, கேப்டன் ரோகித் ஷர்மா, கோரி ஆண்டர்சன், அம்பத்தி ராயுடு, பொல்லார்ட் சரியான நேரத்தில் பார்முக்கு வந்திருப்பது சென்னை பவுலர்களுக்கு நிச்சயம் 'தலைவலி'யாக அமையும் என்பதை மறுக்க முடியாது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

சென்னை: வெய்ன் சுமித், பிரன்டன் மெக்கல்லம், ரெய்னா, டோனி (கேப்டன்), டு பிளிஸ்சிஸ் அல்லது டேவிட் ஹஸ்சி, ரவீந்திர ஜடேஜா, மிதுன் மன்ஹாஸ், அஸ்வின், நெஹரா, மொகித் ஷர்மா, பத்ரீ அல்லது ஹில்பனாஸ்.

மும்பை: லென்டில் சிமோன்ஸ், மைக் ஹஸ்சி, கோரி ஆண்டர்சன், ரோகித் ஷர்மா, அம்பத்தி ராயுடு, ஆதித்ய தாரே, பொல்லார்ட், ஹர்பஜன்சிங், பிரக்யான் ஓஜா, ஸ்ரீரியாஸ் கோபால், பிரக்யான் ஓஜா, பம்ரா.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் மற்றும் சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™