ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எனது அறிமுகம்
- ஈகரை தமிழ் எழுதி!
- ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...
- 100 நாட்களில் மோடி என்ன செய்ய வேண்டும் ? நிபுணர்கள் கருத்து
- 17000 ஆயிரம் பதிவுகள் கடந்த வை.பா...
- தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!!
- புதுமைப் பெண் ராஜேஸ்வரி !!
- ஆண்களை விட பெண்கள் மன அழுத்ததிற்கு ஆளாவது ஏன்?
- ஏழரைச் சனி என்ன செய்யும்?
- இங்க கோச்சடையான் இருக்குதுன்னு சொல்லுறாங்க , நாங்க(ஈகரை) சொல்லலங்க
- அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள்.
- சிட்டுக்குருவி sittukkuruvi தமிழ் காதல் கவிதை tamil kathal kavithai
- நிலவில் ஒர் ஒற்றை ரோஜா tamil pookkal kathal kavithai
- நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்)
- அந்தி மல்லி பூ பூக்கள் pookkal tamil kavithai
- வாடா மல்லி பூ pookkal tamil kavithai
- மனை மடித் தூக்கம்!
- விசும்பி அழலாமா?
- காதல் ! கவிஞர் இரா .இரவி !
- “டாக்டர் மு.வ. ஆய்வுக்கோவை “ பதிப்பாசிரியர்கள் : முனைவர் பா. கந்தசாமி முனைவர் வா.மு.சே. ஆண்டவர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
- முல்லைவாசன் கவிதைகள்
- வைகைப் புயல் வடிவேலு
- வழி காட்டும் ஜோதிடம்
- மோடிக்குள்ள கடமை
- கஷ்டம்
- மௌனத்தின் நாவுகள்
- ஜூன் 1-இல் அஞ்சல் துறை பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு !
- படித்ததில் பிடித்தது :) - மாணவர்களின் சத்தியம்!
- கோச்சடையானும் என் ஏளனப் பார்வையும்! - சினிமா பித்தன்
- பி.இ பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் பணி !
- கண்ணீர் இனித்தால் ...!
- மேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
- சித்த மருத்துவம் (வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர!)
- (LAN) உதவி தேவை
- ஸ்மார்ட்போன்: தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்!
- ஸ்மார்ட்போன் S DUOS 2 S7582 APPS.......
- நீலகிரியில் நடைபெற்ற 56வது பழக்கண்காட்சி - சிறப்பு ஆல்பம் !
- குன்னூர் பழ கண்காட்சி !
- கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை!
| Posted: 27 May 2014 02:35 PM PDT பெயர்: sivamsenthil சொந்த ஊர்: திருவண்ணாமலை அருகில் மணலுர்பேட் ஆண்/பெண்: Male ஈகரையை அறிந்த விதம்: வலைதள தேடலில் கண்டேன். பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது மற்றும் இசை கேட்பது. தொழில்: வரைகலை வடிவமைப்பாளர் மேலும் என்னைப் பற்றி: நான் யார்? (searching) |
| Posted: 27 May 2014 01:41 PM PDT இப்பொழுது ஈகரையில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுதியில் சில குறைபாடுகள் உள்ளது, இவற்றை விரைவில் சரி செய்ய முயல்கிறேன், இல்லையெனில் எடிட்டர் தான் மாற்ற வேண்டும். உறவுகளுக்கு எளிதான வகையில் மாற்றியமைப்பேன்! |
| ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Posted: 27 May 2014 01:38 PM PDT ஹலோ...ஈகரை நிர்வாக மக்களே...எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்...இந்த போட்டோல இருக்காங்களே இந்த அம்மா...ஆமா...இவங்க யாரு?...இவங்க யேபாரம்தான் என்ன?...எப்ப பாரு...எங்க போனாலும்...ஒரு மைக் புடிச்சிகினு மேடைல பேசிக்கினே இருக்காங்க...அதெல்லாம் சரி...இங்க பாருங்க ஒரு அநியாயம்...போட்டோவுக்கு போஸ் குடுக்கறப்ப கூட மைக்கோடயே போஸ் குடுக்குறாங்க...ஏம்ப்பா...இத ஏன்னு கேட்க ஆளே இல்லையா?...என்ன கொடும சார் இது?... அப்றம்...இன்னோரு சேதி...இவரு சமாச்சாரம்தான் என்ன?...எப்ப பாரு...இருட்டுக் காட்டுல ஒரு ... |
| 100 நாட்களில் மோடி என்ன செய்ய வேண்டும் ? நிபுணர்கள் கருத்து Posted: 27 May 2014 01:18 PM PDT இந்தியா வென்றது. இனி நல்ல நாட்கள் எதிர்நோக்கி உள்ளது எனத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ட்விட் செய்தார் மோடி. பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும், வட்டி விகிதத்தையும் குறைக்க வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பல்வேறு அரசு மற்றும் தனியார் திட்டங்களை முடுக்கிவிட வேண்டும் எனப் பல்வேறு சவால்கள் மோடியின் முன்பு உள்ளது. இந்த நிலையில், மோடி தலைமை யிலான புதிய அரசாங்கம் அடுத்த 100 நாட்களில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். மத்திய அரசாங்கம் ... |
| 17000 ஆயிரம் பதிவுகள் கடந்த வை.பா... Posted: 27 May 2014 12:37 PM PDT 17000 ஆயிரம் பதிவுகள் கடந்த நம்ம ஈகரையின் தலைமை நடத்துனர் பாலாஜி அவர்களை அன்போடு வாழ்த்துவோம் வாங்க மனமார்ந்த வாழ்த்துகள் பாலாஜி |
| தோல்குறித்த நோயிருந்தால் நாம் - கவிதை!!! Posted: 27 May 2014 12:19 PM PDT இருக்க உடையணிந்து இம்சையடை யாது பருத்தி உடையுடுத்தி பாங்காய் இருந்திடு நாளுக் கிருமுறை நன்னீரில் நீராடு ஆளுக்காள் சொல்லும் அறிவுரை கேளாதே ஏழில் இருநாட்கள் எண்ணையோடு நீராடு ஆழி உணவுகளை ஆகாரம் ஆக்காது கோழி இடும்முட்டை கொள்ளாது நின்றிடு கத்தரிக் காயையும் கீரை அகத்தியையும் கொத்தி எறிந்துவிட்டு கொஞ்ச தினத்திற்கு மேல்சொன்ன மந்திரத்தை மேற்கொள்ள வேண்டுமே தோல்குறித்த நோயிருந்தால் நாம் |
| Posted: 27 May 2014 12:06 PM PDT அந்த வீட்டில் ஒருவகைப் பரபரப்பு ஒவ்வொருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌன மொழி பேசிக் கொண்டிருந்தனர்.சரஸ்வதி அழுது கொண்டே கணவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.கணவன் மணியன் வீட்டின் முகட்டை வெறித்தவராக உற்காந்திருந்தார். எப்பொழுதம் கலகலப்பாக இருக்கும் அக்குடும்ப குளத்தில் யாரோ கல்லெறிந்துவிட்டார்களொ தெரியவில்லை.அக்கம் பக்கத்தினரெல்லாம் சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போன்று இல்லாத பொல்லாததெல்லாம் கதைக்கத்தொடங்கிவிட்டனர். மணியனுக்கு நான்கு பிள்ளைகள் மூத்தவள் ... |
| ஆண்களை விட பெண்கள் மன அழுத்ததிற்கு ஆளாவது ஏன்? Posted: 27 May 2014 11:55 AM PDT ஆண்களை விடவும் இளம்பெண்கள் அதிகமான மன அழுத்ததிற்கு உள்ளாவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு காரணம், ஆஸ்ட்ரோஜென் என்னும் பாலியல் ஹார்மோன் பெண்களின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தால், அதிகமான ரத்தம் செலுத்தபட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற பாலியல் மாற்றங்கள், இளம்பெண்கள் பருவத்தை எட்டும்போது, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், முரண்மூளை நோய் (schizophrenia), நரம்பியல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் போன்ற நோய்கள் ஏற்படுவதாக, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ... |
| Posted: 27 May 2014 11:43 AM PDT காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது. இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது ... |
| இங்க கோச்சடையான் இருக்குதுன்னு சொல்லுறாங்க , நாங்க(ஈகரை) சொல்லலங்க Posted: 27 May 2014 11:43 AM PDT இங்க கோச்சடையான் இருக்குதுன்னு சொல்லுறாங்க நாங்க(ஈகரை) சொல்லலங்க யாராவது !! பார்த்து உண்மை தானான்னு சொல்லுங்க http://amirthetriplec.blogspot.com/2014/05/watch-kochadaiyaan-2014-full-movie-for.html |
| அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள். Posted: 27 May 2014 11:39 AM PDT கேபினட் அமைச்சர்கள்: 1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம். 2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை 3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு அமைச்சகம். 4.வெங்கய்ய நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை. 5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள் 6.ராம் விலாஸ் பாஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை. 7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து ... |
| சிட்டுக்குருவி sittukkuruvi தமிழ் காதல் கவிதை tamil kathal kavithai Posted: 27 May 2014 11:36 AM PDT " சிட்டுக்குருவியாய் சிறகடிக்கின்றாய் !! " கன்று குட்டியாய் அலையுதடி என் மனம் உன் மீது !! " சாலையோரம் எதையே தேடுவதைப்போல் அலையுதடி உன் கண்கள் !! " நான் நிற்பதையே கண்டும் கானாமலும் போகுதடி உன் கால்கள் !!! ! " sittukkuruviyaay siRakadikkinRay !! " kanRu kuttiyaay alaiyuthadi en manam un meethu !! " saalaiyeoram ethaiyee theduvathai Pool alaiyuthadi un kangal !! " naan niRpathaiyee kaNdum kaanaamalum pookuthadi un kaalgal !!! ! post % எழுதியவர் % by manoranjan ... |
| நிலவில் ஒர் ஒற்றை ரோஜா tamil pookkal kathal kavithai Posted: 27 May 2014 11:25 AM PDT "ஒற்றை ரோஜா பூ " " எதையும் உன் தலையில் சூடிக்கொள்ளாத போதே உன் கூந்தலை பற்றி பேசுவதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் !! " இது என்ன ஒற்றை ரோஜா உன் அழகை மெழுகேற்றும் பூவா இல்லை பார்ப்பவர்களை கட்டி இழுக்கும் பூவா !! " இதையே நான் இரவு முழுவதும் யோசித்தேன் !! " இன்று என்ன மீண்டும் ஒற்றை ரோஜாவா !! " நேற்றே தவித்தேன் இரவு முழுவதும் இன்றுமா !!! ! post % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை |
| நான் பெற்ற நற் பலன்.... (வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம்) Posted: 27 May 2014 11:20 AM PDT வீட்டில் உள்ள / வீடு அமைப்பு/ உள்ள தோஷம் குறைகள் நீங்க எளிய பரிகாரம் என் குரு அருளிய பரிகாரம் வாஸ்து தோஷம் , முச்சந்தி வீடு , இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும் , எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது , எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் எதாவது குறையோ தோஷமோஇருந்து கொண்டே இருக்கும். இப்படிபட்ட தோஷங்கள் / குறைகள் ... |
| அந்தி மல்லி பூ பூக்கள் pookkal tamil kavithai Posted: 27 May 2014 11:13 AM PDT " அந்தி மல்லி பூ காலையில் பூத்தால் சூரிய ஒலி பட்டு வாடி விடுவாய் என்று தானே நீ மட்டும் மாலையில் மலர்கிறாய் !!! ! " anthi malli poo Kaalaiyil pooththaal Suriya oli pattu vaadi viduvaay enRu thaanee nee mattum maalaiyil malarkiRaay !!! ! post % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை |
| வாடா மல்லி பூ pookkal tamil kavithai Posted: 27 May 2014 11:11 AM PDT " தினமும் பார்க்கிறேன் உன்னை பார்த்த பிறகு தான் மனதில் ஒரு புத்துணர்ச்சி !! " காலையில் பார்க்கிறேன் மாலையில் பார்க்கிறேன் !! " ஏன் இறவில் கூட பார்க்கிறேன் எப்பவும் அப்படியே இருக்கிறாய் !! " வாடா மல்லியாய் பத்திரமாய் வைத்துல்லேன் என் வீட்டுத்தோட்டத்தில் !!! ! post % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை |
| Posted: 27 May 2014 11:04 AM PDT உன் அழகு எனை ஈர்க்கும் பார்க்கும் பலரும் பொறாமை கொள்ளும் அழகில் வீழும் பலரைக்காண பயம் கொள்வேன் சில வேளை உன் தெகிட்டாத அழகில் வீழும் கோடிப் பணமுடையான் உன் உளம் மாற்றி எனை அகற்றி உன் அகம் நிரப்ப வந்திட்டால் என் செய்வேன் என்னவளே உன் அழகு சில வேளை எனக் கெதிரி எனக் கருதி உன் ஒப்பனைக்கெதிரியாய் கதிரவன் ஔியாய் வந்து ஒப்பனை களைத்து உனை மீட்பேன் நீ காணும் காட்சி நானாக வேண்டும் நான் காணும் காட்சி நீயாக வேண்டும் என்றும் எதிலும் உனைக் காண வேண்டும் நீ இல்லா மணம் மனமில்லா ... |
| Posted: 27 May 2014 10:36 AM PDT நீ மட்டும் என்னவாம்? என்னை விரல் நீட்டுகிறாயே நட்பின் அடர்த்தி அறியாமல் கழிவின் புகழ் பேசினாய் அடர் அன்பை நீதானே கசாப்புக் கத்திக்கு இரை ஆக்கினாய் விட்டுக்கொடுத்தல் விட்டுப்பிடித்தல் இரண்டின் அர்த்தமும் உன்னால் இடறி விழுந்து கிடக்கிறது மண்ணில் புதைந்து அட போடா... தொலைத்த பின்னர் தூரத்தில் இருந்து விசும்பி என்ன செய்ய? வேரில் நீர் ஊற்றலாம் ஆனால் நீ ஊற்றியது வெந்நீர் |
| Posted: 27 May 2014 08:45 AM PDT காதல் ! கவிஞர் இரா .இரவி ! கவிதை வழங்கும் அட்சயப் பாத்திரம் காதல் ! முக்காலமும் பாடு பொருள் காதல் ! மூன்றெழுத்து முத்தாய்ப்பு மூச்சு இருக்கும்வரை நினைப்பு காதல் ! ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல ஒன்று காதல் ! கவிதை வரும் விதையென வளரும் காதல் ! நினைவலை தொடரும் மகிழ்ச்சி பரவும் காதல் ! முகம் மலரும் அகம் குளிரும் காதல் ! சிறகுகள் முளைக்கும் சிந்தனை பறக்கும் காதல் ! சொல்லில் அடங்காது சொன்னால் புரியாது காதல் ! ஊடல் இன்றி ஒருவரும் ... |
| Posted: 27 May 2014 07:54 AM PDT "டாக்டர் மு.வ. ஆய்வுக்கோவை " பதிப்பாசிரியர்கள் : முனைவர் பா. கந்தசாமி முனைவர் வா.மு.சே. ஆண்டவர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி சேதுச்செல்வி பதிப்பகம், 26/2, நேரு நகர் முதன்மைச் சாலை, சாலிக்கிராமம், சென்னை-93. அலைபேசி : 94445 51750, vimalananda@gmail.com விலை : ரூ. 150 ***** இலக்கிய இமயம் மு. வரதராசன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது. இந்த நூலை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் முனைவர் ... |
| Posted: 27 May 2014 07:07 AM PDT நொண்டிக் கனவுகள் இலைசீவி இலைசீவி சுருள்வதற்கு வடிவெடுக்கும் பீடியின் அவதாரத்தில் கூலியின் சேதாரம் கண்டுபிடிப்பது யாரோ? துண்டுபீடி காலில் மிதிபடும் போது அணையும் நெருப்புக்கு அடுப்பின் முன்கதைச் சுருக்கம் சொல்வது யாரோ? டீ யில் தொடங்கி டீ யில் முடியும் எல்லா நாள்களிலும் பீடி கணக்கில் ஏறும் எல்லா கணக்கும் சமன்பாடுகளில் அடங்குவதில்லை ஆற்றை சுருட்டியவர்கள் காட்டை சுருட்டியவர்கள் மலையை சுருட்டியவர்கள் ஆல்போல் பெருகினார்கள் அருகுபோல் தழைத்தார்கள் சருகுகளை சுருட்டிய நாங்கள்? நழுவாமல் ... |
| Posted: 27 May 2014 05:36 AM PDT வைகைப் புயல் வடிவேலு தமிழ்கூறும் நல்லுலகுக்கு 'வைகைப் புயல் வடிவேலு' வின் அளப்பெரிய உண்மையான சாதனை என்ன? " நம்முடைய உயிர் எழுத்துக்கள் 12 ல் அதிகம் பயன்படுத்தாத ஒரே எழுத்து 'ஔ'. ஏனெனில், 'ஔ' என்ற எழுத்தில் நம்மிடம் அதிகமான சொற்கள் இல்லை. அதனால், அந்த எழுத்தை நாம் பன்னெடுங்காலமாக அதிகம் பயன்படுத்துவதே இல்லை. அவ்வளவு ஏன்... திருவள்ளுவரே 1,330 குறள்களில், 'ஔ' என்ற இந்த உயிர் எழுத்தை ஒரு முறைகூடப் பயன்படுத்தவில்லை. அப்படியிருந்தும் இந்த 21 -ம் நூற்றாண்டில் 'ஔ' க்கு வடிவேலுவின் தயவால் விமோசனம் ... |
| Posted: 27 May 2014 04:49 AM PDT வேதத்தின் அங்கமாகக் கருதப்படும் ஜோதிடம் ஒரு வழிகாட்டும் கலையாகும். இதனுடன் ஆன்மீகம் சேரும் போது, அது மேலும் பொலிவு பெற்று, பலவிதங்களிலும் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஆதலால்தான் ஆய கலைகள் அறுபத்து நான்கில், ஜோதிடமும் சேர்க்கப்பட்டுள்ளது. வாழ்வை வளம் பெறச் செய்யும் ஜோதிடத்தில் பல பிரிவுகள் உண்டு. அவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம். கணிதம்: இது பெரும்பாலும், ஜாதகத்தோடு தொடர்பு கொண்டு, ஜாதகக் கணிதம் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மக்கள் இதற்காவே ஜோதிடரை அணுகுவதுண்டு. ... |
| Posted: 27 May 2014 04:42 AM PDT இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் எந்த அரசுக்கும் இல்லாத வகையில் மக்கள் தந்துள்ள அமோக ஆதரவுடன் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடிக்கு, நாட்டின் எதிர்காலத்தைச் சிறப்படையச் செய்ய வரலாறு வாய்ப்பை அளித்திருக்கிறது. பெரும்பாலான இந்தியர்களும் இந்தியாவின் நண்பர்களும் மோடியுடன் முன்னேறவே விரும்புகின்றனர். 'கடந்த காலத்தை' மறந்துவிட்டு எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் 'கடந்த காலம்', மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த வகுப்புக் கலவரத்தில் ... |
| Posted: 27 May 2014 04:10 AM PDT காய் அரியும் வேளை விரலும் சேர்ந்து அரிகையில் தடித்து வரும் கணவன் குரல் பார்த்து செய்யக் கூடாது... எதை.... எப்போ....? கேட்க நினைத்தும் வார்த்தை விழுங்கும் மனசு. எப்படிச் சொல்ல ஒவ்வொரு அரிதல் காயத்தின் பின்னும் இருக்கிறது கஷ்ட நினைவுகள் வாய்த்தது தொடங்கி வலிந்து புணர்தல் வரை... |
| Posted: 27 May 2014 04:07 AM PDT இருக்கலாம் வேர்களின் மரங்களின் பேச்சு வலி குறித்து. செடிகளும் கொடிகளும் சல்லாபிக்குமோ? தண்டும் தண்ணீரும் பற்றி. பூவுக்கும் வண்டுக்கும் மொழி சங்கீதமாய் தொடர பாழும் மனிதர்களுக்கிடையே மட்டும் நீளும் மௌனத்தின் நாவுகள் |
| ஜூன் 1-இல் அஞ்சல் துறை பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு ! Posted: 27 May 2014 03:47 AM PDT அஞ்சல் துறையின் பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது. தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர்களை நியமிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டன. இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. ... |
| படித்ததில் பிடித்தது :) - மாணவர்களின் சத்தியம்! Posted: 27 May 2014 03:44 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| கோச்சடையானும் என் ஏளனப் பார்வையும்! - சினிமா பித்தன் Posted: 27 May 2014 03:16 AM PDT ரஜினி படம் பார்ப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. முதற் காரணம்... ரஜினி. "ஒரு பொம்மை படம் பார்ப்பதற்கு திரையரங்கிற்குச் செல்ல வேண்டாம். ட்ரைலர் பார்க்கையில்- கார்ட்டூன் நெட்வொர்க்கில் போடப்பட்ட பாண்டவாஸ் படம்கூட இதைவிட நன்றாக அமைந்திருந்ததே!" "ஒரு குறும்படம் கூட இயக்காமல் முதல் படத்துலையே ரியல் டைம் மோஷன் கேப்சர் அணுகுமுறையை யாராவது கையாளுவார்களா?" "இப்படிப்பட்ட விஷப் பரீச்சைக்கு சூப்பர் ஸ்டார் இரையாகப் போகிறார்... இதை வேறு தியேட்டரில் பார்த்துத்தான் உணர வேண்டுமா?" "ஹாலிவுட்டில் ... |
| பி.இ பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் பணி ! Posted: 27 May 2014 03:06 AM PDT பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இந்திய அளவில் காலியாக உள்ள 200 பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 200 பணி: Probationary Engineer துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Electronics - 100 2. Mechanical - 75 3. Computer Science - 20 4. Civil - 03 5. Electrical - 02 கல்வி தகுதி: விண்ணப்பத்தாரர்கள் முதல் வகுப்பில் BE / B.Tech / B.Sc பட்டம் பெற்றிருக்க ... |
| Posted: 27 May 2014 03:02 AM PDT கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் தலைமுறையும் கெட்டுவிடும் மென்று சொல்கிறது கலிகாலம் ...! எண்ணீர் புஞ்சையில் பாயிந்தாலும் கண்ணீர் இல்லா விளைச்சலைக் கண்டு வந்த காலாம் போய் பண்ணீர் கொண்டு பாயிச்சினாலும் பஞ்சம் பஞ்சமே என்று பாட்டுப்பாடப்போகிறது பஞ்சாங்கம் இனி கஞ்சும் நஞ்சாகும் கற்பமும் பிஞ்சாகும் கொஞ்சும் மொழிகள் மட்டும் உடலாகும் உலகில் உயிர்கள் இன்றி மரமாகும் எங்கும் மயானமாகும் முன் விழித்துக்கொள் ... |
| மேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! Posted: 27 May 2014 02:44 AM PDT இந்தியச் சாலைகளில் கோலோச்சிய வாகன ராஜா விடைபெறும் நேரம் இது! இந்தியச் சாலைகளையும் அம்பாசிடர் கார்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா? அப்படி ஒரு காலமும் வந்துவிடும்போல இருக்கிறது. ஆம், இந்தியச் சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் தயாரிப்பை நிறுத்திவிட்டது இந்துஸ்தான் நிறுவனம். இது தற்காலிகமான நடவடிக்கைதான் என்று கூறப்பட்டாலும் அம்பாசிடர்களின் காலம் நெருங்கிவிட்டது என்பதே உண்மை. ஒரு காலத்தில் ஆண்டுக்கு 24,000 கார்கள் விற்றுக்கொண்டிருந்த அம்பாசிடர் கார்கள் இப்போது அதில் பத்தில் ஒரு பங்குகூட ... |
| சித்த மருத்துவம் (வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர!) Posted: 27 May 2014 02:40 AM PDT உ சித்த மருத்துவம் வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர! 1.வயிற்றுவலி தீருவதற்கு:-மருதம் இலையை அரைத்து ஒரு கிராம் அளவிற்கு பாலில் கலக்கி உண்டு வர நாட்பட்ட வயிற்று வலி தீரும். 2.இரத்தபேதி வயிற்றுக் கடுப்பு நிற்க:-மாந்துளிர் இலையும்,மாதுளை இலையும் சம அளவு எடுத்து (ஒரு கிராம் ) அரைத்து மோரில் கலக்கி குடித்து வர இரத்தபேதி வயிற்றுக் கடுப்பு முதலியன தீரும். 3.வயிற்றுக் கோளாறுகள் வாயு தீர:-புதினாவை அரைத்து துவையல் செய்து உண்டு வர வுயிற்றுக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லைகள் ... |
| Posted: 27 May 2014 01:04 AM PDT இரண்டு கம்ப்யூட்டர் ஐ ஷேரிங் (LAN ) செய்வது எப்படி?. தமிழில் எதாவது விளக்கம் அல்லது தரவிறக்கம் இருந்தால் தரவும். Please ..... |
| ஸ்மார்ட்போன்: தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்! Posted: 27 May 2014 12:57 AM PDT இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அதில் பதிந்து வைத்திருக்கின்றனர். மின்னஞ்சல் முகவரியில் இருந்து வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை அத்தனை விஷயங்களும் இதில் அடங்கும். இந்தத் தேவைக்கெல்லாம் ஸ்மார்ட் போனில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்களைத்தான். சாதாரணமாக கேமில் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்களைத் தரும் ஆப்ஸ்கள் வரை பல ஆப்ஸ்கள் ஆஃப் மார்க்கெட்டில் இலவசமாகவும், சிறிய கட்டணத்துடனும் கிடைக்கின்றன. இவையெல்லாம் பாதுகாப்பானவை தானா, ... |
| ஸ்மார்ட்போன் S DUOS 2 S7582 APPS....... Posted: 27 May 2014 12:53 AM PDT அன்பு உறவுகளே , நான் SAMSUNG GALAXY S DUOS 2 S7582 வாங்கி உள்ளேன் இதற்கு தேவையான APPS களை கூறவும் |
| நீலகிரியில் நடைபெற்ற 56வது பழக்கண்காட்சி - சிறப்பு ஆல்பம் ! Posted: 26 May 2014 11:14 PM PDT தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை சார்பில், 56வது பழக்கண்காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 17ம் தேதி துவங்கியது. இரு தினங்கள் நடந்த இந்த கண்காட்சியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் பழங்களை கொண்டு பல்வேறு உருவங்களை உருவாக்கி கண்காட்சியில் இடம்பெறச்செய்திருந்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கண்காட்சி படங்களின் தொகுப்பு. படங்கள் : தி.விஜய், |
| Posted: 26 May 2014 11:13 PM PDT 20 ஆயிரம் சாத்துக்குடி பழங்களை கொண்டு உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மகால் வடிவமைக்கப்பட்டிருந்தது, சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்தது. கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலை துறையினர் சார்பில் பல்வேறு பழங்களால் ஆன அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. |
| கோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்த 3 வயது தேவதை! Posted: 26 May 2014 11:09 PM PDT நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்? பிறக்கிறோம், படிக்கிறோம், வேலை செய்கிறோம், வீட்டுக்கு வருகிறோம். தூங்கிவிடுகிறோம். அடுத்த நாளும் இதே வேலைதான், இதே உலகம்தான். இடையில் எத்தனை பேரை நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம்? ஆனால், இரண்டே நிமிஷத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பேரை மகிழ்ச்சியடையச் செய்த, (செய்துகொண்டிருக்கும்) ஒரு வயதே ஆன மேடி டிப்பெட் (Maddie Tippett) என்ற குழந்தை அப்படியில்லை. என்ன செய்தாள் மேடி? முதலில் மேடி டிப்பெட்டும், அவள் தந்தையும் உரையாடிக்கொள்ளும் இந்த வீடியோவைப் பாருங்கள் - ஆஸ்திரேலியாவைச் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |