Daily Thanthi |
- ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி இன்று பதவி ஏற்கிறார் 7 நாட்டு தலைவர்கள் பங்கேற்பதால் வரலாறு காணாத பாதுகாப்பு
- ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி இன்று பதவி ஏற்கிறார் 7 நாட்டு தலைவர்கள் பங்கேற்பதால் வரலாறு காணாத பாதுகாப்பு
- நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, ஏப்ரலில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
- டாலர் வெளியேற்றம் குறைந்துள்ளதால் வெளிநாடுகளில் தனிநபர் செலவின உச்சவரம்பை உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டம்
- நிதிப்பற்றாக்குறை உயர்ந்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் அரவிந்த் பனாகரியா ஆலோசனை
- சென்ற வார வர்த்தகத்தில் ஐந்து ‘புளூசிப்’ நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.98,170 கோடி உயர்வு
- வி.ஐ.பி. இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.20 கோடி
- மத்தியில் வலுவான ஆட்சி அமைந்துள்ளதால் அன்னிய நிதி நிறுவன பங்கு முதலீடு ரூ.14,000 கோடியை தாண்டியது
- அன்னிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம்
- ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் டாலருக்கு நிகரான கரன்சி மதிப்பு அதிகரிப்பில் இந்தியா முதலிடம்
| Posted: 25 May 2014 01:29 PM PDT ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்கிறார். இந்த விழாவில் 7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. புதுடெல்லி, 9 கட்டங்களாக நடந்து முடிந்த பாரா ளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பிரதமராக நரேந்திர மோடி தேர்வு இந்த வெற்றிக்கு கட்சியை வழிநடத்திய 63 வயதான நரேந்திர மோடி, டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் கடந்த 20-ந் தேதி நடந்த பாராளுமன்ற பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்வானி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து இது குறித்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது ஜனாதிபதி வழக்கத்துக்கு மாறாக பிரதமர், துணை ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள் மட்டுமே அமர வழங்குகிற தனது வலதுபுற இருக்கையில், மோடியை அமரச்செய்தார். இன்று பதவி ஏற்பு அப்போது நரேந்திர மோடியை பிரதமராக நியமனம் செய்து அதற்கான அதிகாரபூர்வ உத்தரவை வழங்கினார். 26-ந் தேதி மாலை 6 மணிக்கு நரேந்திர மோடியும், அவரது மந்திரிசபை சகாக்களும் ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடக்கிறவிழாவில் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. அதன்படி நரேந்திர மோடி, நாட்டின் 15-வது பிரதமராக இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபை சகாக்களுக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பதவி ஏற்று முடிந்ததும் நரேந்திர மோடியும், அவரது மந்திரிசபை சகாக்களும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். முன்னதாக, நரேந்திர மோடி இன்று காலை 7 மணிக்கு டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். 'சார்க்' தலைவர்கள் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் முதல்முறையாக 'சார்க்' என்னும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் வங்காள தேச பிரதமர், வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதால் அவரது சார்பில் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி பங்கேற்கிறார். பிற 'சார்க்' தலைவர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள். சோனியா காந்தி மேலும் விழாவில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவே கவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 1,000 முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர் கள் 150 பேர், 1,200 உயர் அதிகாரிகள் பாராளுமன்ற இரு அவைகளின் 777 உறுப்பினர் கள், புதிய மந்திரிகளின் குடும்பத்தினர், மோடியின் தனிப்பட்ட விருந்தினர்கள் 20 பேர், ஊடகத்தினர் என 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். ஜனாதிபதி மாளிகையில் விழா நடக்கிற முற்றத்தினை அலங்கரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வரலாறு காணாத பாதுகாப்பு உலக நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், பல்வேறு துறைகளின் பிரபலங் கள் என 4 ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்பதால், மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், துணை ராணுவத்தினர், டெல்லி போலீஸ் கமாண்டோக்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஜனாதிபதி மாளிகையின் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களுக்கு தடை இப்போது, ரேடாரில் சிக்காத படிக்கு, தாழ்வாக ஆளில்லாத விமானங்கள், பொம்மை விமானங்கள் கூட பறந்து விடாதபடிக்கு இந்திய விமானப்படையின் வான்பாதுகாப்பு பிரிவு தீவிர கண்காணிப்பில் ஈடுபடும். அதுமட்டுமின்றி விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் முக்கிய இடங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டு உள்ளன. ஜனாதிபதி மாளிகை பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களில், குறிபார்த்து சுடுவதில் தேர்ச்சி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பதவி ஏற்பு விழாவுக்கு வருபவர்கள் பைகள், சென்போன்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. பதவி ஏற்பு விழாவுக்கு வரும் மிகமிக முக்கிய பிரமுகர்கள் சிரமம் இன்றி வருவதற்காக, ஜனாதிபதி மாளிகையை நோக்கி வரும் சாலைகள் அனைத்திலும் பிற்பகல் 3 மணியில் இருந்து பிற வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். தடுப்பு வேலிகள் இது கோடை காலம் என்பதால் வட மாநிலங்களில் சில இடங்களில் அவ்வப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்கிறது. அப்படி டெல்லியில் திடீரென்று இன்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தால், பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்துக்கு மாற்றுவதற்கு வசதியாக அங்கு உரிய முன்னேற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மேலும் ஏராளமான குடைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ஜனாதிபதி மாளிகையையொட்டிய அலுவலகங்கள் இன்று பகல் 1 மணிக்கு மூடப்படும். ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள ரெய்சினா ல்ஸ் பகுதியில் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்பு கருதி, டெல்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. News Category:Hot Topic Icon : News Group Category: |
| Posted: 25 May 2014 01:23 PM PDT ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்கிறார். இந்த விழாவில் 7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. புதுடெல்லி, 9 கட்டங்களாக நடந்து முடிந்த பாரா ளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பிரதமராக நரேந்திர மோடி தேர்வு இந்த வெற்றிக்கு கட்சியை வழிநடத்திய 63 வயதான நரேந்திர மோடி, டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் கடந்த 20-ந் தேதி நடந்த பாராளுமன்ற பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்வானி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து இது குறித்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது ஜனாதிபதி வழக்கத்துக்கு மாறாக பிரதமர், துணை ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள் மட்டுமே அமர வழங்குகிற தனது வலதுபுற இருக்கையில், மோடியை அமரச்செய்தார். இன்று பதவி ஏற்பு அப்போது நரேந்திர மோடியை பிரதமராக நியமனம் செய்து அதற்கான அதிகாரபூர்வ உத்தரவை வழங்கினார். 26-ந் தேதி மாலை 6 மணிக்கு நரேந்திர மோடியும், அவரது மந்திரிசபை சகாக்களும் ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடக்கிறவிழாவில் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. அதன்படி நரேந்திர மோடி, நாட்டின் 15-வது பிரதமராக இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபை சகாக்களுக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பதவி ஏற்று முடிந்ததும் நரேந்திர மோடியும், அவரது மந்திரிசபை சகாக்களும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். முன்னதாக, நரேந்திர மோடி இன்று காலை 7 மணிக்கு டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். 'சார்க்' தலைவர்கள் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் முதல்முறையாக 'சார்க்' என்னும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் வங்காள தேச பிரதமர், வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதால் அவரது சார்பில் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி பங்கேற்கிறார். பிற 'சார்க்' தலைவர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள். சோனியா காந்தி மேலும் விழாவில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவே கவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 1,000 முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர் கள் 150 பேர், 1,200 உயர் அதிகாரிகள் பாராளுமன்ற இரு அவைகளின் 777 உறுப்பினர் கள், புதிய மந்திரிகளின் குடும்பத்தினர், மோடியின் தனிப்பட்ட விருந்தினர்கள் 20 பேர், ஊடகத்தினர் என 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். ஜனாதிபதி மாளிகையில் விழா நடக்கிற முற்றத்தினை அலங்கரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வரலாறு காணாத பாதுகாப்பு உலக நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், பல்வேறு துறைகளின் பிரபலங் கள் என 4 ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்பதால், மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், துணை ராணுவத்தினர், டெல்லி போலீஸ் கமாண்டோக்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஜனாதிபதி மாளிகையின் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களுக்கு தடை இப்போது, ரேடாரில் சிக்காத படிக்கு, தாழ்வாக ஆளில்லாத விமானங்கள், பொம்மை விமானங்கள் கூட பறந்து விடாதபடிக்கு இந்திய விமானப்படையின் வான்பாதுகாப்பு பிரிவு தீவிர கண்காணிப்பில் ஈடுபடும். அதுமட்டுமின்றி விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் முக்கிய இடங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டு உள்ளன. ஜனாதிபதி மாளிகை பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களில், குறிபார்த்து சுடுவதில் தேர்ச்சி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பதவி ஏற்பு விழாவுக்கு வருபவர்கள் பைகள், சென்போன்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. பதவி ஏற்பு விழாவுக்கு வரும் மிகமிக முக்கிய பிரமுகர்கள் சிரமம் இன்றி வருவதற்காக, ஜனாதிபதி மாளிகையை நோக்கி வரும் சாலைகள் அனைத்திலும் பிற்பகல் 3 மணியில் இருந்து பிற வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். தடுப்பு வேலிகள் இது கோடை காலம் என்பதால் வட மாநிலங்களில் சில இடங்களில் அவ்வப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்கிறது. அப்படி டெல்லியில் திடீரென்று இன்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தால், பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்துக்கு மாற்றுவதற்கு வசதியாக அங்கு உரிய முன்னேற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மேலும் ஏராளமான குடைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ஜனாதிபதி மாளிகையையொட்டிய அலுவலகங்கள் இன்று பகல் 1 மணிக்கு மூடப்படும். ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள ரெய்சினா ல்ஸ் பகுதியில் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்பு கருதி, டெல்லியில் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. image: category: |
| Posted: 25 May 2014 01:07 PM PDT புதுடெல்லி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ஏப்ரல் மாதத்தில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டம் முதலீட்டாளர் கணக்குகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அம்மாதத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்டிருந்த எழுச்சியே இதற்கு காரணமாகும். இவ்வாண்டு மார்ச் 31–ந் தேதி நிலவரப்படி பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளர் கணக்குகள் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சமாக இருந்தது. இது ஏப்ரல் 31–ந் தேதி நிலவரப்படி 4 லட்சம் அதிகரித்து 2 கோடியே 96 லட்சமாக உயர்ந்துள்ளது. 'செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது. பங்கு வர்த்தகம் கடந்த 2007–ஆம் ஆண்டில் நாட்டின் பங்கு வர்த்தகத்தில் வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், 2008–ஆம் ஆண்டில் அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால் உலக பொருளாதாரம் உருக்குலைந்தது. 2009–ஆம் ஆண்டிலிருந்து இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட தொடங்கியது. அந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறையத் தொடங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளர் கணக்குகள் எண்ணிக்கை 1.50 கோடி குறைந்துள்ளது. கடந்த 2008 மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்தத்தில் பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளர் கணக்குகள் எண்ணிக்கை 3.77 கோடியாக இருந்தது. இது, 2009 மார்ச் மாத இறுதியில் 4.11 கோடியாக உயர்ந்தது. இதன் பிறகு முதலீட்டாளர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டின் இறுதியில் இது 3.95 கோடியாக குறைந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்நிலையில், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2012–13–ஆம் நிதி ஆண்டில் 8,820 கோடி டாலராக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2013–14–ஆம் நிதி ஆண்டில் 3,200 கோடி டாலராக குறைந்து இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிதிப்பற்றாக்குறையும் குறைந்துள்ளது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதுபோன்ற காரணங்களால் ஏப்ரல் மாதத்தில் பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது. அம்மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஈர்த்த நிகர முதலீடு மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.1.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 14.6 சதவீதம் அதிகரித்து எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.9.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வரிச்சலுகை பரஸ்பர நிதி திட்டங்கள், நிறுவனப் பங்குகளில் பொதுமக்களின் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் 'செபி' பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக பரஸ்பர நிதி துறையின் ஓய்வூதிய திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்காக ரூ.50,000–க்கு வருமான வரிச்சலுகை வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை 'செபி' தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளதால் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தங்குதடையின்றி மேற்கொள்ள முடியும். இதன் காரணமாக பங்கு வர்த்தகத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. எனவே, இனிவரும் மாதங்களிலும் பரஸ்பர நிதி திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு மிகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் பரஸ்பர நிதி திறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி எஸ்.நரேன் இது குறித்து கூறுகையில், ''பங்கு சார்ந்த எம்.எஃப். திட்டங்களில் முதலீட்டாளர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து எழுச்சி ஏற்பட்டு வருவதால் முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பை தவற விட்டு விட்டதாக கருதுகின்றனர்'' என்று தெரிவித்தார். பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் புதிதாக கணக்கு தொடங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரிக்கும் என ஆக்சிஸ் பரஸ்பர நிதி நிறுவனத்தின் மூத்த மேலாளர் (பங்குகள்) பங்கஜ் முரார்கா தெரிவித்துள்ளார். பங்குகளில் முதலீடு செய்வதில் சில்லறை முதலீட்டாளர்கள் மீண்டும் விருப்பம் கொண்டுள்ளனர் என ஜே.பி. மார்கன் அசெட் மேனேஜ்மென்ட் (இந்தியா) நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தில் முகேஷ் அம்பானி நிறுவனம் மேற்கொண்ட முதலீடு இரண்டு மடங்காக உயர்ந்தது அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தில் அவரது சகோதரர் முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) மேற்கொண்ட முதலீடு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2013 மார்ச் 31–ந் தேதி அன்று ரிலையன்ஸ் எம்.எஃப். நிறுவனத்தின் பரஸ்பர நிதி திட்டங்களில் ஆர்.ஐ.எல். மேற்கொண்டிருந்த முதலீடு ரூ.691 கோடியாக இருந்தது. இது, இவ்வாண்டு மார்ச் 31–ந் தேதியில் ரூ.1,290 கோடியாக உயர்ந்துள்ளது. ஆர்.ஐ.எல். நிறுவனத்திடம் அதிக ரொக்க கையிருப்பு உள்ளது. இதனை பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் இந்நிறுவனம் முதலீடு செய்கிறது. ரிலையன்ஸ் எம்.எஃப். நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டும் நிதியை பங்குகள், கடன்பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கிறது. இந்நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் ரூ.400 கோடி முதலீடு செய்துள்ளது. image: category:Tagging: |
| Posted: 25 May 2014 01:03 PM PDT வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் தனிநபர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி தனிநபர்கள் வெளிநாடுகளில் ஓர் ஆண்டிற்கு செலவிடும் உச்சவரம்பை 2 லட்சம் டாலராக உயர்த்த வாய்ப்புள்ளது. இது தற்போது 75,000 டாலராக உள்ளது. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி உயர்ந்ததால் 2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக (8,820 கோடி டாலர்) உயர்ந்து இருந்தது. எனவே, டாலர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இந்தியர்கள் செலவிடும் தொகைக்கான உச்சவரம்பை 75,000 டாலராக ரிசர்வ் வங்கி குறைத்து இருந்தது. மேலும் இதில் சில கட்டுப்பாடுகளையும் ரிசர்வ் வங்கி விதித்தது. அதாவது இவ்வழியில் மேற்கொள்ளப்படும் செலவினத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித அசையா சொத்துகளையும் வெளிநாடுகளில் வாங்க கூடாது. அதேசமயம் வெளிநாடுகளில் உள்ள கூட்டு வர்த்தகத்தில் மற்றும் சொந்த துணை நிறுவனங்களில் இந்த தொகையை செலவிட எந்த வித தடையும் கிடையாது. மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் சென்ற நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3,200 கோடி டாலராக குறைந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே பாரத ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளது. வெளிநாட்டு செலவின உச்சவரம்பை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. image: category:Tagging: |
| Posted: 25 May 2014 01:00 PM PDT புதுடெல்லி நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு இவ்வாண்டு ஜூலை மாதத்தில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அப்போது நிதிப்பற்றாக்குறை உயர்ந்தாலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என வெளிநாட்டில் வசிக்கும் இந்திய பொருளியல் வல்லுனர் அரவிந்த் பனாகரியா தெரிவித்துள்ளார். ஆசிய மேம்பாட்டு வங்கி ஆசிய மேம்பாட்டு வங்கியின் முன்னாள் தலைமை பொருளியல் வல்லுனரும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமாக உள்ள அரவிந்த் பனாகரியா பிரதம மந்திரியாக பதவி ஏற்கும் நரேந்திர மோடியின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முயற்சிக்கும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.5 சதவீதமாக இருப்பது சரியானதுதான் என்று பனாகரியா தெரிவித்துள்ளார். இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் (4.1 சதவீதம்) 0.40 சதவீதம் அதிகமாகும். மத்திய அரசு, நிதிப்பற்றாக்குறையை 3.8 சதவீதமாக குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வரும் நிலையில், பனாகரியாவின் ஆலோசனை வித்தியாசமாக உள்ளது என நிபுணர் ஒருவர் தெரிவித்தார். மூலதனச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விரிவாக்கத் திட்டங்களுக்கான மூலதனச் செலவினம் தற்போது 1.76 சதவீதமாக உள்ளது. இதை 2 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பனாகரியா ஆலோசனை தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சாலை போக்குவத்து, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக அதிக செலவினம் மேற்கொள்ளப்படும் என பாரதீய ஜனதா அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. பனாகரியாவின் அறிவுரை இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேசமயம், நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பதால் சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்தியாவின் கடன் பெறும் தகுதியை குறைக்க வாய்ப்புள்ளது என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகளின் வாராக்கடனை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வரி விதிப்பு முறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பனாகரியா மேலும் தெரிவித்துள்ளார். image: category:Tagging: |
| சென்ற வார வர்த்தகத்தில் ஐந்து ‘புளூசிப்’ நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.98,170 கோடி உயர்வு Posted: 25 May 2014 12:57 PM PDT மும்பை சென்ற வார வர்த்தகத்தில், ஐந்து 'புளூசிப்' நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.98,170 கோடி அதிகரித்துள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய அரசு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக சென்ற வார வர்த்தகம் நன்றாக இருந்தது. கோல் இந்தியா நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.32,782 கோடி உயர்ந்து ரூ.2,51,107 கோடியாக அதிகரித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.25,454 கோடி அதிகரித்து ரூ.2,05,700 கோடியாக உயாந்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.19,293 கோடி உயர்ந்து ரூ.3,48,636 கோடியாக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.15,305 கோடி அதிகரித்து ரூ.3,64,551 கோடியாக உயர்ந்துள்ளது. எச்.டீ.எஃப்.சி. நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.5,337 கோடி உயர்ந்து ரூ.1,43,514 கோடியாக அதிகரித்துள்ளது. இன்போசிஸ் அதே சமயம் ஐந்து நிறுவன பங்குகளின் மதிப்பு சரிவடைந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.12,248 கோடி சரிந்து ரூ.2,72,118 கோடியாக குறைந்துள்ளது. இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.6,394 கோடி குறைந்து ரூ.1,76,090 கோடியாக சரிவடைந்துள்ளது. டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு ரூ.5,906 கோடி சரிந்து ரூ.4,16,700 கோடியாக குறைந்துள்ளது. எச்.டீ.எஃப்.சி. வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.3,650 கோடி குறைந்து ரூ.1,89,562 கோடியாக சரிவடைந்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.440 கோடி சரிந்து ரூ.1,68,790 கோடியாக குறைந்துள்ளது. பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு அடிப்படையில் டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஒ.என்.ஜி.சி. மற்றும் ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்கள் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளன. கோல் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டீ.எஃப்.சி. வங்கி ஆகியன முறையே ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது இடங்களை பிடித்துள்ளன. இன்ஃபோசிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. எச்.டீ.எஃப்.சி. நிறுவனம் பத்தாவது இடத்தில் உள்ளது. image: category:Tagging: |
| வி.ஐ.பி. இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.20 கோடி Posted: 25 May 2014 12:55 PM PDT மும்பை வி.ஐ.பி. இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் ரூ.20 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.6 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. நிகர வருவாய் 22 சதவீதம் அதிகரித்து ரூ.187 கோடியிலிருந்து ரூ.227 கோடியாக உயர்ந்துள்ளது. image: category:Tagging: |
| மத்தியில் வலுவான ஆட்சி அமைந்துள்ளதால் அன்னிய நிதி நிறுவன பங்கு முதலீடு ரூ.14,000 கோடியை தாண்டியது Posted: 25 May 2014 12:48 PM PDT புதுடெல்லி பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையால், மே மாதத்தில் இதுவரையிலான காலத்தில் (2 முதல் 23–ந் தேதி வரை) அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் மேற்கொண்ட முதலீடு ரூ.14,224 கோடியாக உள்ளது. நிகர முதலீடு கணக்கீட்டு காலத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.84,777 கோடிக்கு பங்குகளை வாங்கின. ரூ.70,553 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தன. இதனையடுத்து இந்நிறுவனங்கள் பங்குகளில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.14,224 கோடியாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்து வருவது மற்றும் மத்தியில் வலுவான–நிலையான ஆட்சி அமைந்துள்ளது போன்ற காரணங்களால் அன்னிய நிதி நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டை அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.84,000 கோடியை நிறுவன பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் இந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சியில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அன்னிய நிதி நிறுவனங்களின் தொடர் முதலீட்டு நடவடிக்கையால் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் மே மாதத்தில் இதுவரை 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. மே 16–ந் தேதி வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் அதிகரித்து 25,000 புள்ளிகளை கடந்தது. நடப்பு ஆண்டில் இது வரை அன்னிய நிறுவனங்கள் பங்குகளில் மேற்கொண்ட முதலீடு ரூ.46,000 கோடியாக உள்ளது. ஜனவரியில் ரூ.714 கோடியும், பிப்ரவரியில் ரூ.1,404 கோடியும், மார்ச்சில் 20,077 கோடியும், ஏப்ரலில் 9,602 கோடியும் முதலீடு செய்துள்ளன. கடன்பத்திரங்கள் பங்குகளில் முதலீட்டை அதிகரித்துள்ள அதே வேளையில் கடன்பத்திரங்களிலும் முதலீட்டை அதிகரித்துள்ளன. மே மாதத்தில் இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.12,037 கோடிக்கு கடன்பத்திரங்களை வாங்கியுள்ளன. இதனையடுத்து, நடப்பு ஆண்டில் இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு 38,000 கோடியாக உள்ளது. image: category:Tagging: |
| அன்னிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம் Posted: 25 May 2014 12:45 PM PDT சென்ற நிதி ஆண்டில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொண்ட நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூரின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது. 2013–14–ஆம் நிதி ஆண்டில் சிங்கப்பூர் இந்தியாவில் 598 கோடி டாலரை அன்னிய நேரடி முதலீடாக மேற்கொண்டுள்ளது. ஆக, முந்தைய ஆண்டு வரை முதலிடத்தில் இருந்து வந்த மொரிஷியசை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. மொரியஷியஸ் 485 கோடி டாலரை நம்நாட்டில் அன்னிய நேரடி முதலீடாக மேற்கொண்டுள்ளது. 'கார்' எனப்படும் பொது வரி தவிர்ப்பு எதிர் சட்டம் அமல்படுத்த உள்ளதால், மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு மேற்கொள்வதில் ஆர்வம் குறைந்துள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் அதிகளவில் அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொள்வதில் மொரியஷியஸ் நாடு இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளது. image: category:Tagging: |
| ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் டாலருக்கு நிகரான கரன்சி மதிப்பு அதிகரிப்பில் இந்தியா முதலிடம் Posted: 25 May 2014 12:42 PM PDT புதுடெல்லி ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான செலாவணி மதிப்பு அதிகரிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பங்குச் சந்தைகள் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு சீர்திருத்த நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையால் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு உயர்ந்து வருகிறது. நடப்பு ஆண்டில் இந்த முதலீடு 2,000 கோடி டாலராக (ரூ.1.20 லட்சம் கோடி) உயரும் என கோட்டக் மகிந்திரா வங்கியின் தலைமை பொருளியல் நிபுணர் முன்னறிவிப்பு செய்துள்ளார். இந்நிலையில், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் கட்டுக்குள் வந்துள்ளது. ஆக, டாலர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தேவைப்பாடும் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இம்மாதம் 23–ந் தேதி அன்று 58.51–ஆக உயர்ந்தது. இது, இவ்வாண்டு தொடக்கத்தில் 61.80–ஆக இருந்தது. ஆக, சுமார் ஐந்து மாதங்களில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 329 காசு உயர்ந்துள்ளது. அதாவது 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜப்பான் இதே காலத்தில் இந்தோனேசியாவின் ரூபியா மதிப்பு 4.6 சதவீதமும், நியூசிலாந்து நாட்டின் கரன்சி மதிப்பு 3.75 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா கரன்சி மதிப்பில் 3.5 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் யென், தென் கொரியாவின் ஒன், மலேசியாவின் ரிங்கிட் ஆகிய செலாவணிகள் மதிப்பு 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் டாலர் மதிப்பு 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து இருந்ததால் கடந்த 2013 ஆகஸ்டு 28–ந் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு அதுவரை கண்டிராத வகையில் 68.85–ஆக வீழ்ச்சி அடைந்தது. பாரத ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், நரேந்திர மோடி அலையால் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது. ஆக, ஒன்பது மாதங்களில் ரூபாய் வெளிமதிப்பு 15 சதவீதம் உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பு சற்று குறைய வாய்ப்புள்ளது என்றும், இந்த நிதி ஆண்டில் இது 60 என்ற அளவில் இருக்கும் என்றும் வர்த்தக நிபுணர் ஒருவர் தெரிவித்தார். ரூபாய் மதிப்பு உயர்வதால் இறக்குமதி செலவினம் குறைந்து பணவீக்கம் குறையும். அதேசமயம், ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |