Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரமிக்க வைக்கும் அஜீத்தின் பைக் ரேஸ் காட்சிகள்!

Posted:

அஜீத் நடித்த பல படங்களில் சண்டை காட்சிகளின்போது பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். இதனால், அவரது காலில்கூட அறுவை சிகிச்சை செய்தார். ஆனபோதும், தொடர்ந்து ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆரம்பம், வீரம் படங்களில் சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்தாத அஜீத், இப்போது ...

இஸ்லாம் மதத்திற்கு மாறினார் மோனிகா - நடிப்புக்கும் முழுக்கு!!

Posted:

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. அழகி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பகவதி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், சிலந்தி படத்தின் மூலம் கவர்ச்சி நாயகியாகவும் உருவெடுத்தார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த மோனிகா, திடீரென இஸ்லாம் மதத்திற்கு ...

சண்டைப் பயிற்சி எடுக்கும் தமன்னா…!

Posted:

தென்னிந்திய திரை உலகத்தைப் பொறுத்த வரை லேடி ஆக்ஷன் ஸ்டாராக இருந்த ஒரே நடிகை விஜயசாந்தி மட்டுமே. அவருக்கு அடுத்து கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்த மாலாஸ்ரீயை ஆக்ஷன் நடிகை என்பார்கள். அதன் பின் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அப்படி ஒரு பட்டத்தை எந்த ஒரு நடிகையுமே பெறவில்லை. அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதத்தில் 'ராணி ருத்ரம்மா, ...

லாரா தத்தாவும் மீண்டும் நடிக்க வருகிறார்…!

Posted:

2000ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டம் வென்றவர் லாரா தத்தா. மற்ற அழகி பட்டம் வென்றவர்களைப் போலவே இவரும் நடிகையாக இந்தித் திரையுலகில் அறிமுகமானார். 2003ம் ஆண்டு வெளிவந்த 'அந்தாஸ்' இந்திப் படம் மூலும் நாயகியாக அறிமுகமான லாரா, தொடர்ந்து பல இந்திப் படங்களில் நாயகியாக நடித்தார். 2004ம் ஆண்டு வெளிவந்த 'அரசாட்சி' படத்திலும் அர்ஜுன் ...

பார்வதிமேனனின் கனவை நனவாக்கிய உத்தமவில்லன்!

Posted:

சசி இயக்கிய பூ படத்தில் தமிழுக்கு வந்தவர் பார்வதிமேனன். கேரளத்து நடிகையான இவர் அந்த படத்தில் அற்புதமாக பர்பாமென்ஸ் பண்ணியிருநந்த போதும் அதையடுதது கோடம்பாக்கத்தில் அவருக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. அதனால், மலையாள படங்களில் நடித்து வந்த பார்வதி, டிராபிக் படத்தின் தமிழ் ரீ-மேக்கான சென்னையில் ஒருநாள் படத்தில் ஒரு ...

இளையராஜா பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடப்படுகிறது!

Posted:

இளையராஜா சினிமாவில் பிசியாக இசையமைத்து வந்தபோது, அவருக்கு ரசிகர் மன்றம் வைப்பதற்கு பலர் நான் நீயென்று போட்டி போட்டனர். ஆனால், அப்படி வந்த யாருக்கும அவர் அனுமதி கொடுக்கவில்லை. அதையும மீறி மன்றம் திறந்தவர்கள் மீது வழக்குப்போட்டு அந்த மன்றங்களை மூட வைத்தார். அந்த அளவுக்கு ரசிகர் மன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு காட்டி வந்தார் ...

கே.வி.ஆனந்த், வெற்றிமாறனை டீலில் விட்ட தனுஷ்!

Posted:

ராஞ்சனா படத்தில் நடித்து விட்டு வந்த தனுஷ், ஒரே நேரத்தில் வேலையில்லா பட்டதாரி, அனேகன், வெற்றிமாறன் இயக்கும் படம் என மூன்று படங்களில் கமிட்டானார். ஆனால், இந்த படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இந்தியில் பால்கி இயக்கும் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் இதுபோன்ற வாய்ப்பு இதன்பிறகு கிடைப்பது அரிது ...

அனுஷ்காவுக்கு பிடித்த ஒரே தமிழ்ப்பாட்டு!

Posted:

ரெண்டு படத்தில் மாதவனுடன் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் அனுஷ்கா, அதையடுத்து விஜய்யுடன் வேட்டைக்காரன், விக்ரமுடன் தெய்வத்திருமகள், தாண்டவம், சிம்புவுடன் வானம், சூர்யாவுடன் சிங்கம், சிங்கம்-2, கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் என பல படங்களில் நடித்து விட்டார்.

ஆனால், எந்த படத்திலும் பாடல்களை ...

கங்கனாவைப் பாராட்டும் தீபிகா படுகோனே….!

Posted:

தீபிகா படுகோனே, யாரென்பது இப்போதாவது தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். 'கோச்சடையான்' படத்தில் அனிமேஷன் தோற்றத்தில் வந்தாலும் கவர்ச்சியாக நடித்த நடிகை?. கங்கனாவை நாம்தான் கொஞ்சம் ஞாபகப்படுத்த வேண்டும். ஜெயம் ரவி நாயகனாக நடித்த 'தாம் தூம்' படத்தில் நாயகியாக நடித்தவர். இப்போது இந்தித் திரையுலகைக் கலக்கி வரும் ...

முத்தக்காட்சியில் நடித்த அஜித் ஹீரோயின்…!

Posted:

பார்வதி ஓமனக்குட்டன் என்றால் யார் என்று தெரிகிறதா ? ஆனால், அஜித்தின் ஹீரோயின் என்று சொன்னால் ஞாபகம் வந்து விடும். அஜித் நடித்த 'பில்லா 2' படத்தில் நாயகியாக நடித்தவர்தான் பார்வதி ஓமனக்குட்டன். 'பில்லா 2' பாக்ஸ் ஆபீசில் பப்படமாகிப் போனதால் பார்வதியை ஓரம்கட்டி விட்டார்கள் தமிழ்த் திரையுலகினர். அதன் பின் அவர் நடித்த மலையாளப் ...

விவசாயம் பார்க்கப் போன இயக்குனர்…!

Posted:

தமிழ் சினிமா மட்டுமின்றி சினிமா உலகத்திலேயே வெற்றி ஒன்றுதான் ஒருவரை இந்த தொழிலில் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. ஒவ்வொரு வருடத்திலும் 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேருக்கு அடுத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதுதான் கேள்விக்குறி. அதே சமயம், புதுமுக ...

அரை சதம் அடித்தார் சிவப்பு மனிதன்!

Posted:

பாண்டியநாடு ஹிட்டான சூட்டோடு விஷால், லட்சுமிமேனன் கூட்டணியில் வெளியான படம் நான் சிவப்பு மனிதன். முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி சுமார் என்ற விமர்சனங்கள் வந்தாலும் விஷால், லட்சுமிமேனன் லிப் லாக் முத்தக் காட்சி. படத்தின் வித்தியாசமான கதை இவற்றின் காரணமாக பெரிய அளவில் லாபம் சம்பாதிக்காமலும், பெரிய நஷ்டத்தை கொடுக்காமலும் ...

ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் தீபிகா படுகோனேவுக்கு முதல் இடம்: 4ம் இடம் பிடித்தார் நீலப்பட நடிகை சன்னி

Posted:

இந்தியாவில் இருந்து வெளியாகும் பிரபரல ஆங்கில நாளேடு தனது வாசகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடம் கத்ரினா கைபுக்கு, மூன்றாவது இடம் ஜாக்குலின் ...

ஐஸ்வர்யாராவை இயக்குகிறார் ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டர்

Posted:

ஜஸ்வர்யாராய் அடுத்து நடிக்க இருக்கும் இந்திப் படம் ஜாஸ்பா. இதனை சஞ்சய்குப்தா இயக்குகிறார். இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம். ஐஸ்வர்யாராய் முதன் முறையா இதில் ஆக்ஷன் ஹீரோயினாக அதிரடியாக களம் இறங்குகிறார். இந்தப் படத்தில் சண்டை காட்சிகளை இயக்க இருப்பவர் ஹாலிவுட் ஆக்ஷன் டைரக்டர் ஸ்பைரோ ரத்தாஸ். விரைவில் இந்தியா வரும் இவர் ...

பொதிகை தயாரிக்கும் முதல் மெகா தொடர்

Posted:

சென்னை தொலைக்காட்சியான பொதிகை தொடங்கப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிறது. இன்றைக்கு ஒளிபரப்பாகும் திரைப்படப் பாடல்கள், சினிமா, குறும்படம், நெடுந்தொடர் எல்லாவற்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது பொதிகைதான். எல்லா நிகழ்ச்சிகளையுமே பெரும்பாலும் பிற தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கியோ அல்லது நேரம் ஒதுக்கி (சிலாட்) ...

தாத்தா - பேரன் உறவை சொல்லும் மஞ்சப்பை!

Posted:

இயக்குநர் சற்குணத்திடம் உதவியாளராக பணியாற்றிய ராகவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் மஞ்சப்பை. விமல், லட்சுமிமேனன் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டக்கோழி படத்திற்கு பிறகு திருப்பதி பிரதர்ஸ் உடன் ...

கோடையின் கடைசியில் டப்பிங் படங்களின் ஆதிக்கம்

Posted:

கோடைவிடுமுறையின் கடைசி வெள்ளிக்கிழமையான (மே 30) இன்று வெளியான படங்களில் டப்பிங் படங்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கிறது. கோச்சடையான் வெளியாகி ஒரு வாரம் முடிந்து, இந்த வாரமும் அதே தியேட்டர்களில் கோச்சடையானின் பயணம் தொடர்வதால் பெரிய படங்கள் எதுவும் வெளியாக வில்லை. பூவரசம் பீப்பீ, இது வேற அது வேற, அம்மா அம்மம்மா, ஒக்கேனக்கல் ...

அனுமதி பெறாமல் அஜீத் படப்பிடிப்பு: 3 பேர் கைது!

Posted:

கவுதம் மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதமாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் பிறகு சென்னை அண்ணா சாலை நந்தனம் சிக்னல் பகுதியில் நடந்தது. தற்போது சென்னை கிழக்கு கடற்கரைசாலையையை ஒட்டியுள்ள பாலவாக்கத்தில் நடந்து ...

10 எண்றதுக்குள்ளே - விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பெயர்!

Posted:

சுமார் இரண்டு வருடங்களாக ஐ படத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விக்ரம் வேறு எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. எத்தனையோ படங்கள் தேடி வந்தபோதும் அவர் ஏற்காமல் இருந்தார். கடந்த மாதம் ஐ படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து வேறு படங்களில் நடிக்கலாம் என்று விக்ரமுக்கு அனுமதி கொடுத்தார் இயக்குநர் ஷங்கர். அதன் பிறகு கதை கேட்க ...

வர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவியதா கோச்சடையான்?

Posted:

150 கோடியில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கோச்சடையான் படம், கடந்த வாரம் வெளியாகி முதல் வாரத்தில் உலகம் முழுக்க சுமார் 50 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்கிறார்கள். 6000 தியேட்டர்களுக்கு மேல் கோச்சடையான் படம் வெளியானதாகவும் சொல்லப்பட்டது. சென்னையில் உள்ள பல மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அத்தனை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™