Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 29 May 2014 05:28 PM PDT

மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?

Posted: 29 May 2014 05:25 PM PDT

வருகிற ஜூன் 15 ஆம் தேதிக்கு பின்னர் மத்திய அமைச்சரவையை விஸ்தரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த முறை தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவே டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 26 ஆம் தேதியன்று பதவியேற்றபோது தங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் டெல்லி சென்றிருந்தார். தேர்தல் ...

அந்தரத்தில் தொங்கும் அழகான வீடு - அது என்ன? - விடுகதைகள்

Posted: 29 May 2014 05:19 PM PDT

- 1) அந்தரத்தில் தொங்கும் அழகான வீடு - அது என்ன? - 2) ஓடையிலே ஓடாத நீர், உப்புக் கரிக்கும் நீர் - அது என்ன? - 3) கண்கவர் மாளிகை கண்பட்டால், கண்டவருக்கும் விருந்தாகும் - அது என்ன? - 4) ஊரெல்லாம் மூடியிருக்கும், உரிப்பானை திறந்தே இருக்கும் - அது என்ன? - 5) உப்பை விழுங்கியவன் உறங்காமல் ஓடித் திரிகிறான் - அது என்ன? - 6) நூல் நூற்கும், இராட்டை அல்ல - அது என்ன? - 7) மூடி வைத்த முத்துக்கோர்வையைத் திறந்து பார்த்தாலும் கவலை இல்லை- அது என்ன? - 8) அறிவிற்கும் அதுவே, வெளிச்சத்திற்கும் ...

நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன?

Posted: 29 May 2014 05:15 PM PDT

- 1) நேற்று கருப்பு இன்று வெள்ளை -அது என்ன? - 2) மேஜை மீது வைத்து வெட்டுவான், ஆனால் உயிர் போகாது - அது என்ன? - 3) வேலியைத் தாண்டி வெள்ளைக்குதிரை பறக்கிறது - அது என்ன? - 4) தண்ணீருக்குள் இடம் பிடிப்பான், தடுக்கி விழவும் வைப்பான் - அது என்ன? - 5) உதைத்தால் உருளுவான், வேகமாய் கொண்டு சேர்ப்பான் - அது என்ன? - 6) வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு, வயிறில்லை - அது என்ன? - 7) ஓங்கி எறிந்தால், உடைபடுவனான், உள்ளே புதைத்தால் உயரந்திடுவான் - அது என்ன? - 8) அழுது கொண்டே ஒளி தருவான் - அது என்ன? - 9) ...

ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு!

Posted: 29 May 2014 05:14 PM PDT

ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! - காரணங்களை அடுக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி [noguest]''மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும். அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது. இந்திய ரத்தத்தில் ஊறிப்போய் உள்ள பாரம்பரியப் பழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமே இதைப் பார்க்க ...

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

Posted: 29 May 2014 05:10 PM PDT

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் பணத்தை சுரண்டும் அரசு மதுக்கடைகளை வரைவில் மூடுவேன் என தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மக்களவை தேர்தலில் தருமபுரி தொகுதியில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இதையடுத்து, தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இதில், வியாழக்கிழமை தருமபுரி ஒன்றியத்துக்குள்பட்ட ஏமகுட்டியூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு ...

தைரியமானவர், வெளிப்படையானவர்.. மனதளவில் இஸ்ரேலியர்.. இது யார் தெரியுமா?

Posted: 29 May 2014 03:44 PM PDT

டெல்லி: நரேந்திர மோடியும் நம்மவர்தான்.. வெளிப்படையானவர், தைரியமானவர், எதையும் துணிச்சலாக செய்பவர்.. அவரும் இஸ்ரேலியர் போலத்தான்.. இப்படிப் பாராட்டித் தள்ளியுள்ளனர் இஸ்ரேலியர்கள். அதுவும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில். இஸ்ரேலியின் புதிய சிறந்த நண்பராக மோடி இருப்பார் என்றும் அந்த நிகழ்ச்சியின்போது சிலாகித்துப் பேசப்பட்டுள்ளது. உறுதியான மனப் போக்குக் கொண்டவர், திடமான முடிவெடுப்பவர், புத்திசாலியானவர், நேரடியாக பேசக் கூடியவர், எடுத்த முடிவில் பின்வாங்காதவர் என்றெல்லாம் ...

உங்களுக்கு தொப்பை இருக்கா? நீங்க பணக்காராம்!

Posted: 29 May 2014 03:39 PM PDT

வருமானத்துக்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு உள்ளதாம். பணக்காரத் தன்மை கொண்டவர்களின் வயிறும் பெரிதாகிவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது உலகில் மூன்றில் ஒரு பங்கினர் இப்போது உடல் பருமனாக உள்ளனர். 2 பில்லியன் மக்கள் உடல் எடையால் அவதிப்பட்டு வரும் நிலையில் 925 மில்லியன் மக்கள் கடும் பசியினால் அவதிப்பட்டு வருகின்றனர். உலகில் எந்த ஒரு நாடும் கடந்த மூன்று தலைமுறைகளாக உடல் பருமனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என்று உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன் ...

காதல்: ஏன்? எதற்கு? எப்படி?

Posted: 29 May 2014 03:32 PM PDT

உலக மக்கள் மனதில் காதல் என்ற உணர்ச்சிக்கு தனியானதொரு இடமுண்டு. கிட்டத்தட்ட சுவாசம் போன்றே ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கும் உணர்ச்சி அது. அதனால்தான் நவீன காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்படும் திரைப்படங்களிலும், திரையிசை பாடல்களிலும் காதலுக்குப் பிரதான இடம் உள்ளது. காதல் உணர்ச்சிக்கு இலக்கியங்கள் கூடத் தப்பவில்லை. "காதலாகி கசிந்து உள்ளுருகி" சிவனை போற்றுகிறது ஒரு பக்தி இலக்கியம். மகாகவியான பாரதியோ, "காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல்" என்று அழுத்தமாகக் ...

மோடியின் முத்தான முதல் முடிவு!

Posted: 29 May 2014 03:30 PM PDT

இந்தியாவின் 15–வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திரமோடி, பல நம்பிக்கைகளையும், ஆச்சரியங்களையும் நாட்டுக்கு அளித்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு, தெற்கு ஆசிய கூட்டமைப்பில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 நாடுகளின் தலைவர்களை அழைத்து இந்தியாவின் அண்டை நாடுகளோடு உள்ள உறவில் புதிய அத்தியாயத்துக்கு முதல் பக்கத்தை எழுதிவிட்டார். 8 நாடுகளின் தலைவர்களும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டதும் இல்லாமல், தங்கள் நாடுகளுக்கு வர வேண்டும் என்று நரேந்திரமோடிக்கும் அழைப்பு விடுத்து, அவரும் மகிழ்ச்சியோடு ...

தண்ணீர் குடிப்பதும் ஓர் மருத்துவம் தான்

Posted: 29 May 2014 03:29 PM PDT

பலருக்கும் பல உடல் உபாதைகள் இருக்கும். அவற்றுக்கு சிகிச்சை பெறுவோரும் உண்டு. ஆனால், பல நோய்களை தண்ணீர் குடிப்பதன் மூலமாகவே சரி செய்ய முடியும். அதாவது, * காலையில் தூங்கி எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். * பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு எந்தவிதமான உணவும் உட்கொள்ளக் கூடாது.( உணவு, நீர் ஆகாரம்) * 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம். * காலை உணவிற்கு பின் 15 நிமிஷங்களுக்கும், மதியம் மற்றும் இரவு உணவிற்கு ...

அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்!

Posted: 29 May 2014 03:28 PM PDT

பகவத் கீதையின் மோட்ச சந்யாச யோகம் 61வது சுலோகம். அதில், "இறைவனே மனிதனின் உள்ளிருந்து இயக்குகிறான்" என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அதைக் கேட்டு அர்ஜூனன் அறிவு மயக்கம் கொள்கிறான். அப்போது,"செயலைச் செய்யும் சுதந்திரன் நீ அல்லன்" என்கிறார். "குந்தி புத்திரனே! உனக்குள் எழுந்துள்ள மோகத்தால், நீ எதைச் செய்ய விரும்பவில்லையோ, அதையே உடன் பிறந்த உன் கருமத்தால், அதற்குக் கட்டுப் பட்டவனாய், உன் வசம் இல்லாதவனாய் நீ செய்வாய்" என்று தெளிவு படுத்துகிறார் கிருஷ்ணர். "அர்ஜூனா! உடலாகிய இயந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட ...

மாதா, பிதா, கூகுள், தெய்வம்!

Posted: 29 May 2014 03:27 PM PDT

அந்தத் தனியார் பேருந்து, ஒரு புகழ்பெற்ற ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் நின்று பெரியவர் சிவசண்முகத்தை இறக்கிவிட்டுப் போகும்போது நண்பகல். நல்ல சித்திரை மாதம் கத்திரி வெயில். தூய வெண்ணிற வேட்டி, பருத்திச் சட்டை, துண்டு அணிந்திருந்தபோதிலும் வியர்வை ஆறாகப் பெருகி ஓடியது அவருக்கு. குடை ஒரு கையிலும் மதிய உணவடங்கிய துணிப் பை மறுகையிலுமாக மெல்ல அந்தப் பள்ளியின் முகப்பில் நின்ற பாதுகாவலரிடம் அடையாள அட்டையினைக் காண்பித்து, அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார். இடப் புறத்தில் அழகிய பாலமுருகன் ...

உலகச் செய்திகள்!

Posted: 29 May 2014 03:20 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஆண்களுடன் பெண்கள் மனம் விட்டு பேசலாமா

Posted: 29 May 2014 03:19 PM PDT

தினமும் நாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களை மட்டுமே காண முடியாது. ஆண்களும்தான் இருப்பார்கள். எனவே அவர்களிடம் எப்படி அணுக வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள சில டிப்ஸ்கள் இதோ…. • ஆண்களின் மத்தியில் நம்முடைய நடையும், நிற்கும் ஸ்டைலும், எந்த அளவிற்கு நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம் என்பதைக் வெளிக்காட்டும். எனவே எப்பொழுதும் முதுகை நிமிர்த்தி, கழுத்தை நேராக வைத்து இருந்தால், அது தன்னம்பிக்கையுடன் இருக்கும் தோற்றத்தைத் தரும். • ஆண்களை ...

கோவா தனி மாநிலமான நாள்: மே 30- 1987

Posted: 29 May 2014 03:16 PM PDT

கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலமாகவும் திகழ்கின்றது.இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது. இது வடக்கு திசையில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் மற்றும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. பனாஜி இம்மாநிலத் தலைநகரம் ஆகும். வாஸ்கோடகாமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும். இதன் வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரமாகத் திகழ்கின்ற மார்கோ 16-ம் ...

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Posted: 29 May 2014 03:11 PM PDT

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ? அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் ...

தங்கவயலில் தவிக்கும் தமிழர்கள் - 'குடும்பத்தோடு சாவதைத் தவிர வேற வழி தெரியலை!'

Posted: 29 May 2014 03:02 PM PDT

உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய தங்கச் சுரங்கம் உள்ள பகுதி கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயல். அந்த தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியது. [noguest]'தங்கவயல் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை மூன்று மாதத்துக்குள் காலிசெய்ய வேண்டும்' என்று பி.ஜி.எம்.எல் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்தவரும், ...

கோச்சடையான் - விமர்சனம்

Posted: 29 May 2014 02:48 PM PDT

நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், நாசர், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஷோபனா, நாகேஷ், ருக்மணி, ஆதி இசை: ஏ ஆர் ரஹ்மான் பாடல்கள்: கவிஞர் வாலி, வைரமுத்து தயாரிப்பு: ஈராஸ் - மீடியா ஒன் கதை, திரைக்கதை, வசனம்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கம்: சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' '3டி' அனிமேஷன் திரைப்படம், ஒருவழியாக தடை பல கடந்து, உலகமெங்கும் இன்று முதல் கோலோச்ச களம் இறங்கியுள்ளது! கறுப்பு வெள்ளை காலத்தில், ...

முகம் வசீகரமாக இருக்க...

Posted: 29 May 2014 01:52 PM PDT

முகம் எப்போதும் பளபளப்பாக, வசீகரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இவைகளை கடைபிடியுங்கள். * புதினாவை, தயிரில் சேர்த்து அரைத்து, தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால், முகம் பளிச்சென மாறும். * முட்டையின் வெள்ளைக்கரு, வெள்ளை வெங்காயம், மருதாணி ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூசினால், முக வசீகரம் அதிகரிக்கும். * தக்காளியை நறுக்கி, முகத்தில் அடிக்கடி தேய்த்தால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். * வெள்ளரிக்காயை சிப்ஸ் போல சீவி, கண்களுக்கு கீழே வைத்தால், கருவளையம் நீங்கும். * ...

பருவ வயது பிரச்னைகள்!

Posted: 29 May 2014 01:49 PM PDT

பதினாறு வயதில், பெண்களுக்கு அதிக கவலை ஏற்படும். குட்டையான பெண்களுக்கு, தாங்கள் உயரமாக இல்லை என்பது, எப்போதும் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். அடுத்தது, முகப்பரு; இது குறித்த கவலை அதிகமாகி, அவர்களை குறித்த, ஒரு தாழ்ந்த சுயமதிப்பீட்டுக்கு ஆளாகின்றனர். இது, மனச்சோர்வை ஏற்படுத்தும். விளைவு, படிப்பில் கவனம் குறைந்து, தனிமையை விரும்பி, மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கத் துவங்குவர். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், பரவசமும் ஏற்படும் இக்காலத்தில் தான், உடல் ரீதியாக பல மாற்றங்களும் ஏற்படுகின்றன. ...

மாயா ஏஞ்சலோவின் 10 பொன்மொழிகள்

Posted: 29 May 2014 01:48 PM PDT

ஏழு சுயசரிதைகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பல கவிதைத் தொகுப்புகள் என கடந்த 50 ஆண்டு காலமாக தனது எழுத்துகள் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் மாயா ஏஞ்சலோ. மண்ணை விட்டுச் சென்ற அந்த மாய மனுஷி மனிதத்துக்காக விட்டுச் சென்றவை அனைத்தும் உன்னதப் படைப்புகள். இவ்வேளையில் அவரை நினைவுகூரும் வகையில், அவர் உதிர்த்தவற்றில் நம்மைச் செதுக்கக் கூடிய 10 பொன்மொழிகளின் தொகுப்பு இங்கே: 1. "மக்கள் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மறந்துவிடுவர்; நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்துவிடுவர்; ஆனால், ...

கவலை! - சிறுவர்கதை

Posted: 29 May 2014 01:45 PM PDT

மன்னர் கிருஷ்ண தேவராயரும், மதியூகி அப்பாஜியும் அடிக்கடி நகர்வலம் செல்வர். அப்போது மாறுவேடம் அணிந்தே செல்வர். ஒருநாள் காலை வேளையில் இருவரும் வீதி வழிச் சென்று கொண்டிருந்தபோது, பள்ளிச் சிறுவர்கள் சிலர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள், "சடுகுடு' விளையாட்டில் தீவிரமாக அக்கறை காட்டிக் கொண்டிருந்த போது, கோவில் யானை ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அது பழக்கப்பட்ட யானையானதால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் யாருமே பயப்படமாட்டார்கள். அன்று அந்தப் பிள்ளைகள் சடுகுடு ...

நரேந்திரமோடியின் 10 முக்கிய திட்டங்கள்

Posted: 29 May 2014 01:41 PM PDT

புதுடில்லி: நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில், முக்கியமான 10 திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், இது குறித்து அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என டில்லி தகவல்கள் கூறுகின்றன. பிரதமராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே நரேந்திரமோடி பரபரப்பாக செயலாற்ற துவங்கிவிட்டார். தனது தேர்தல் பிரசாரத்தின் போது, நாட்டு மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ, அதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் கவனம் செலுத்தி ...

42,000 ஆண்டுகள் பழமையான யானைக்குட்டியின் உடல் கண்டெடுப்பு

Posted: 29 May 2014 01:38 PM PDT

அகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்தக் குட்டியானையின் உடல் இப்போது லண்டனிலுள்ள இயற்கை உயிரின அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சைபீரியாவில் பனிப்பகுதிகளில் அலைந்து திரியும் ...

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்

Posted: 29 May 2014 01:34 PM PDT

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியை சேர்ந்த அரசியல்வாதியான ஏஞ்சலா மேர்கல் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. பெப்சிகோ இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி 13வது இடத்தையும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக பணிபுரியும் அருந்ததி பட்டாச்சார்யா 36வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதே போல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ...

ஆல் இந்தியா ரேடியோ. (அகில இந்திய வானொலி)

Posted: 29 May 2014 01:32 PM PDT

இன்று இந்த ஆல் இந்திய வானொலியின் தொடக்க இசையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது, எனது சிறு வயதில் எங்கள் வீட்டில் சிற்றலை வானொலி மட்டுமே இருந்தது, எனது தந்தைக்கு பிடித்த இந்த இனிய இசை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அப்பொழுது ரசிக்கத் தொடங்கிய இந்த இசையை இன்று கேட்கும் போது எனது கண்களில் கண்ணீர், இசைஇருக்கிறது, ஆனால் என் தந்தை இல்லை. நீங்களும் கேட்டுப் பாருங்க. http://www.youtube.com/watch?v=97bpv2qdvu0 அகில இந்திய வானொலியின் அடையாள இசை [ signature Music ] சிவரஞ்சனி ராகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

எனது அறிமுகம்

Posted: 29 May 2014 01:27 PM PDT

பெயர்:சம்பத்
சொந்த ஊர்:பெங்களூர்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:surf
பொழுதுபோக்கு:Blogging,கரோகே,painting
தொழில்:Professor
மேலும் என்னைப் பற்றி:ஆங்கிலத்தில் நான் எழுதிய மூன்று புஸ்தகம் பிரசுரம் ஆகி உள்ளது.

காதல் சிறை - தமிழ் காதல் கவிதை

Posted: 29 May 2014 01:23 PM PDT

" உன் இமைய கண்ட பிறகே
என் இமை ஏனோ உறங்க
மறுக்கிறது !!
" காதலை சொல்லி
கண்களை தூது விடலாம் என்றேன்
கண்களும் இமைக்க மறுக்கிறது !!
" இப்ப தான் புரிகிறது
உன்னால் கண்களும்
சிறை பிடிக்கப்பட்டது என்று !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழித்து கொலை

Posted: 29 May 2014 01:19 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இரண்டு மைனர் பெண்களை கும்பலாக சேர்ந்து கற்பழித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கா, தங்கைகளான அவர்களில் ஒருவருக்கு 14 வயதும் மற்றொருவருக்கு 15 வயதும் நடைபெறுகிறது. இந்த மைனர் பெண்களை கற்பழித்த பின் அவர்களை கொலை செய்து அங்குள்ள மாமரத்தில் அவர்களது உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். நேற்று மாலை காணாமல் போன தங்களது பெண்கள் தூக்கில் தொங்கியதை பார்த்து அவர்களது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த ...

என் மகள்

Posted: 29 May 2014 01:11 PM PDT

என் வயிற்றில் ஏழு மாத சிசுவாய் நீ இருக்கையில் உன் பிஞ்சு காலில் உதைத்ததை அப்பாவிடம் சொல்லி மகிழ்ந்தேன்!! முதன் முதலாய் புரண்டு படுக்கையில் புகைப்படம் எடுத்து வைத்தேன்!! நீ சிரித்த அந்த முதல் சிரிப்பு என் ஜீவன் உதிரும் வரை மறையாது என் நெஞ்சை விட்டு!! கஞ்சிக்கு வழியில்லை ஆனாலும் ஆங்கில வழி கல்வி உனக்கு!! பள்ளிப் படிப்பு முடித்து நீ கல்லூரி சென்றால் ஆகுமே நிறைய செலவு, அடுத்த குழந்தை வேண்டாமென்று என் கற்பத்தை தடை செய்தேன்!! இப்படி உனக்காகவே வாழ்ந்த என்னை ஏனடி பெண்ணே மறந்து ...

காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

Posted: 29 May 2014 12:46 PM PDT

" உண்மையான காதல்
தொடங்கும் இடமும்
தெரியாது முடியும் இடமும் தெரியாது !!!
!
" uNmaiyaana kaathal
thodankum edamum
theriyadhu mudiyum edamum theriyaadhu!!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

Posted: 29 May 2014 12:44 PM PDT

" காதல் என்பது கண்கள் மாதிரி
கண்களை மூடிக்கொண்டாலும்
காதல் சிறகடித்துப்பறக்கும் காதல் வானில் !!!
!
" kaathal enpathu kaNkal maathiri
kaNkalai moodikkoNdaalum
kaathal siRakadiththuppaRakkum
kaathal vaanil !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

Posted: 29 May 2014 12:43 PM PDT

1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் ) 2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா., அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க.. 3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..! ( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க ) 4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!" இந்த டயலாக் சொல்லுவாங்க.. 5. Friend-ஐ ...

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா?

Posted: 29 May 2014 11:38 AM PDT

பெண் மனது கடலை விட ஆழம் அதனால் அவர்கள் மனதை புரிந்துகொள்ளமுடியாது என்கிறார்கள்.உண்மையிலேயே பெண்கள் மனதை புரிந்துகொள்ள முடியாதா.., பொதுவாக பெண்ணின் குணம் சார்ந்து வாழுதல் ஆகும்.ஆண்களுக்கு ஒவ்வொரு பருவத்திலும் உடல் ரீதியான மாற்றங்கள் குறைவு ஆனால் பெண்களுக்கு ஒவ்வொரு பருவத்தில் உடல் ரீதியாக மாற்றங்கள் அதிகம்.இதற்கு அடிப்படை காரணம் அவர்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் தான்.அவர்களின் மனநிலையை நிர்ணயிக்கும் பங்கு ஹார்மோன்களுக்கு அதிகம். பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் காரணம் ...

நான் யார்?...நீ யார்?...

Posted: 29 May 2014 11:03 AM PDT

நம்புங்கள் நம்புங்கள்...நீங்கள் நம்புகிறபடி ஆவீர்கள். அவரை விதையா முளைக்கிறது...அல்ல அல்ல...ஆர்வம் முளைக்கிறது... நான் இப்படி ஆவேன்...இப்படி ஆவேன்...என்று நீங்கள் நம்பினால் நீங்கள் அப்படியே ஆவீர்கள்...எனவே... நம்புங்கள் நம்புங்கள்...நீங்கள் நம்புகிறபடி ஆவீர்கள்.... அருளியது : வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான்

மத்திய அமைச்சர்களுக்கு மோடி வைக்கும் ஆப்பு...

Posted: 29 May 2014 10:25 AM PDT

மத்திய மந்திரிகள் தங்களது உறவினர்களை தனிப்பட்ட அதிகாரிகளை, அந்தரங்க செயலாளர்களாக, சிறப்பு பணி அதிகாரிகளாக நியமிப்பது வழக்கம். இதில் பிரதமர் தலையிடுவது இல்லை. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில், 2012-13 ஆண்டில் ரெயில்வே மந்திரியாக இருந்த பவன்குமார் பன்சால், தனது சொந்த மருமகன் விதுல் குமாரை சிறப்பு பணி அதிகாரியாக நியமித்திருந்தார். அதுமட்டுமின்றி தனது சகோதரி மருமகன் ராகுல் பண்டாரியை தனது அந்தரங்க செயலாளராக நியமனம் செய்திருந்தார். தனது சகோதரி மகன் விஜய் சிங்லாவையும் அந்தரங்க செயலாளராக வைத்திருந்தார். ...

எப்போதும் காதலில்...

Posted: 29 May 2014 10:12 AM PDT

வருவதும் போவதும் மீள்வதும் நீள்வதும் எழுவதும் விழுவதும் அழுவதும் சிரிப்பதும் வாழ்வதும் சாவதும் சாவதும் வாழ்வதும் இயல்பு திரிதலும் இடறி விழுதலும் இயல்புதானடி எப்போதும் காதலில் எரித்துவிட்டும் போய்விடாதே சிறகுகளுடன் எழுந்துவிடுவேன் புதைத்துவிட்டும் போய்விடாதே புதியதளிராய் முளைத்துவிடுவேன் பிறகென்ன... நீதான் அவஸ்தைப்படுவாய் என்காதல் சிலிர்ப்புகளில் காதோரப் பேச்சுவார்த்தைகளில் எனக்கென்ன எப்போதும் போல உன் மடித்தூளியில் விழிகள் திறந்த உறக்கத்தில் சொன்னால் ...

பிள்ளை முகம்

Posted: 29 May 2014 10:11 AM PDT

ஏதேனும் ஒன்று வம்புக்கு இழுக்க மூணாவதாய் பெறந்ததும் பொட்டக்கட்டையா... வம்சமே அப்படி... பாவம் அவன் என்ன வரம் வாங்கினானோ அவனுக்கு இவளால இப்படியாகுது... இன்னும் எத்தனையோ சொல்லில் அடங்கா மாமியின் சீண்டல் நாத்தியின் கிண்டல் கணவனின் ஏச்சு சுற்றம் சொல்லும் குற்றம் கூட்டும் சுமை கணக்கிடும் மனசு எல்லாவற்றையும் நொடிகளில் மறக்கச் செய்யும் பாலுண்டு முலைக்கனமிறக்கி சிரிக்கும் அப்பழுக்கில்லா பிள்ளை முகம்

சிறுநீரக செயலிழப்பிற்கு தீர்வாக இது உதவுமா?...

Posted: 29 May 2014 09:58 AM PDT

என் மாமனாருக்கு சிறுநீரக செயலிழப்பால் கடந்த ஒண்ணரை ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வருகிறோம். சென்னை விஜய ஹெல்த் சென்டரில்தான்.இது மிகப் பெரும் பொருட்செலவை உண்டாக்கும் ஒரு உடல் இயலாமை. இந்த வீடியோவைப் பார்த்ததும் இது வேறு யாருக்கேனும் உதவும் என்பதால் இங்கும் முகநூலிலும் பகிர்ந்துள்ளேன். http://youtu.be/ymsg0kS-0pQ தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் இதை அவர்களுக்கும் சொல்லுங்கள்.இதில் உட்கொள்ளும் வாய்வழி மருந்துகள் எதுவும் இல்லை என்பதால் பயம் இல்லாமல் செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறோம்.

காஷ்மீரில் 370வது அரசியல் சட்டம் ஏன்?

Posted: 29 May 2014 09:38 AM PDT

நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் பதவியேற்ற 2 நாட்களுக்குள் அந்த கட்சியின் நீண்டநாள் செயல்திட்டங்களில் ஒன்றான காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழத்தொடங்கிவிட்டன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. ஆனால், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், அப்பிரிவை நீக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரிலிருந்து ...

கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ காலமானார்

Posted: 29 May 2014 09:32 AM PDT

- கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ (86 வயது) அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை மரணமடைந்தார் - ஆசிரியையாக, கலைஞராக, களப் போராளியாகப் பன் முகங்களோடு வாழ்ந் தவர் மாயா. சம உரிமை, அமைதிக்கான போராட்டத்தில் எப்போதும் முன்னணியில் இருந்தவர். கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும் என்று பெயரிடப்பட்ட தனது சுயசரிதையின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற மாயா ஏஞ்சலோ ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். - தனது சுயசரிதையின் மூலம் கறுப்பின மக்களின், ...

யோசி...பின்பு நேசி...!

Posted: 29 May 2014 09:26 AM PDT

- - நீ யாரையாவது நேசிக்கின்றாயா...! ஒரு நிமிடம் யோசி.. மறு நிமிடம் நேசி..! - உன்னை முதலில் தகுதியாக்கிக்கொள் - பின்பு உன் தகுதிக்கேற்ற துணையைத் தேடு.. - காதல் என்பது கண நேரத்தில் தோன்றி மறையும் நீர்க்குமிழி அல்ல... - அது உள்ளக்கடலில் என்றும் அழியாமல் வாழும் அலையைப் போன்றது.. - காதல் என்பது வார்த்தைகளால் பரிமாறப்பட்டால் அதை உதறிவிடு - அன்று மனதால் பரிமாறப்பட்டால் அட்டையென ஒட்டிக்கொள்.. - ஆனால் அதிலே ஒட்டி நின்று உலகத்தையும் உன்னையும் மறந்து விடாதே.. - யோசி...பின்பு ...

குடியிருந்த கோவில்

Posted: 29 May 2014 09:19 AM PDT


அதிர்ந்து ஒரு வார்த்தை
அவள் பேசி நான் கண்டதில்லை,
அப்பாவின் பேச்சுக்கும் மறு பேச்சு
அவள் சொன்னதில்லை,
அண்ணன் ஒருநாள் குடித்து வந்தான்
அன்றும் கூட திட்டவில்லை,
ஆனாலும் அம்மா....,
அதெப்படி முடிகிறது
அத்தனையும் சகித்துக் கொள்ள?
அவளிடமே கேட்டு விட்டேன்!
அன்பு என்றால் பெண்மை என்று - என்
அம்மா எனக்கு சொல்லித் தந்தாள்
அதன் வழியே நானும் என்றாள்!!

முல்லைவாசன் கவிதைகள்

Posted: 29 May 2014 09:14 AM PDT

வேர்கள் பாகுபாடுகள் பார்க்காமல் பரவி விடுகின்றன வேர்கள் வேர் பற்றை நம்மால் பின்பற்ற முடியவில்லை அடையாளங்களை விரும்பாமலேயே வேர்கள் வியாபித்து வியாபித்து காற்றையும் நிழலையும் வாரி வழங்குகின்றன. திசைகளை பிரிக்காமல் வேர்கள் திண்மையோடு இருக்கின்றன விதவிதமான பிரிவினைகளால் நமது வானத்திலும் பூமியிலும் விரிசல்கள். மண் பிடிக்கும் வேராய் மலர் பிடிக்கும் கிளையாய் பூச்சுக்கள் அற்று இருப்போம் மெருகுகள் எப்போதும் கருகும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™