மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 2–வது மனைவிக்காக அசம்கரில் முலாயம்சிங் போட்டி: மாயாவதி தாக்கு
- அசாம் தாக்குதலில் பலியான பிணங்களுடன் உறவினர்கள் போராட்டம்
- தாமரை சின்னம் காண்பித்த விவகாரத்தில் மோடி வரம்பு மீறவில்லை: போலீஸ் விளக்கம்
- ராகுல் போட்டியிடும் அமேதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது
- கேரளாவை சேர்ந்த லாரி டிரைவருக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு
- குற்றம் நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க தயார்: ஆ.ராசா
- ஒடிசாவில் வெயிலின் தாக்கத்துக்கு 10 பேர் பலி
- பெண்பயணிக்கான இலவச கழிப்பறை சேவையை மறுத்த ரயில்வேக்கு அபராதம்
- அசாமில் ஊரடங்கு உத்தரவு: ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்
- ராஜஸ்தானில் விரைவில் தொடங்க இருக்கும் விமான டாக்சி சேவை
- கேரளாவில் கனமழை: மின்கம்பி விழுந்து லாரி டிரைவர் பலி
- ஆந்திராவில் கணக்கில் வராத 140 கோடி ரூபாய் பறிமுதல்: தேர்தல் ஆணையம்
- மத்தியில் உள்ள கொள்ளைகார அரசை தூக்கி எறியுங்கள்: மோடி
- பா.ஜ.க.வுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது: மம்தா திட்டவட்டம்
- குஜராத்தில் சாலை விபத்து: 9 பேர் பலி
- அசாமில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் பலி
- காங்கிரசின் இழப்பை தடுக்கவே 3வது அணிக்கு ஆதரவில்லை என ராகுல் பிதற்றுகிறார்: மோடி
- மோடி பிரதமராக வேண்டும்: கனவுக்கன்னி ஹேமமாலினி பேச்சு
- பாடலாசிரியர் குல்சாருக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரணாப் முகர்ஜி வழங்கினார்
- மோடியை தடுக்க எங்களிடம் பல பயில்வான்கள் உள்ளனர்: அகிலேஷ்
| 2–வது மனைவிக்காக அசம்கரில் முலாயம்சிங் போட்டி: மாயாவதி தாக்கு Posted: 03 May 2014 11:12 PM PDT பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் மைன்புரி மற்றும் அசம்கர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அசம்கர் தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அவர் தேர்தலில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:– |
| அசாம் தாக்குதலில் பலியான பிணங்களுடன் உறவினர்கள் போராட்டம் Posted: 03 May 2014 11:00 PM PDT அசாம் மாநிலம் கோக்ரஜ்கார், பக்சா ஆகிய மாவட்டங்களில் தீவிரவாதிகள் வீடுகளுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 32 பேர் பலியாகினர். இதையடுத்து, கோக்ரஜ்கார், பக்சா, சிராங்க் ஆகிய 3 மாவட்டங்களில் ஊரடங்கு ஊத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலில் ஈடுபடும் தீவிரவாதிகளை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. |
| தாமரை சின்னம் காண்பித்த விவகாரத்தில் மோடி வரம்பு மீறவில்லை: போலீஸ் விளக்கம் Posted: 03 May 2014 10:54 PM PDT பாராளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 30–ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. மாநில முதல்–மந்திரியும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி காந்தி நகர் தொகுதிக்கு உட்பட்ட ஆமதாபாத் நகர் ரானில் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார். |
| ராகுல் போட்டியிடும் அமேதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது Posted: 03 May 2014 10:44 PM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். ராகுல் போட்டியிடுவதால் இது நாடு முழுவதும் எதிர்பார்க்கப் படும் வி.ஐ.பி. தொகுதியாக திகழ்கிறது. |
| கேரளாவை சேர்ந்த லாரி டிரைவருக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு Posted: 03 May 2014 10:44 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் சாபு (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். ஏழை குடும்பத்தை சேர்ந்த சாபு லாரி கிளீனராக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது வீடு உள்பட உடமைகளை விற்று சொந்தமாக லாரி |
| குற்றம் நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க தயார்: ஆ.ராசா Posted: 03 May 2014 10:37 PM PDT 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தற்போது ஜாமீனில் உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் டெல்லியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது– ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கடந்த 2011–ம் ஆண்டு ரூ.3 ஆயிரம் |
| ஒடிசாவில் வெயிலின் தாக்கத்துக்கு 10 பேர் பலி Posted: 03 May 2014 10:30 PM PDT ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளை கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. மாநிலத்திலேயே உச்சகட்ட வெப்பமாக, கலஹண்டி மாவட்ட தலைநகர் பவானிபட்னாவை நேற்று 48.2 டிகிரி செல்சியஸ் (109.04 டிகிரி பாரன்ஹீட்) வெயில் சுட்டெரித்தது. |
| பெண்பயணிக்கான இலவச கழிப்பறை சேவையை மறுத்த ரயில்வேக்கு அபராதம் Posted: 03 May 2014 10:10 PM PDT கடந்த 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி மும்பையின் முலுன்ட் பகுதியிலிருந்து மலடுக்கு ஒரு பெண் வக்கீல் ரயிலில் பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் நடுவில் அவர் தாதர் நிலையத்தில் இறங்கி மற்றொரு ரயிலுக்கு மாறவேண்டியிருந்தது. அப்போது அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டதன் விளைவாக கழிப்பறையை உபயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. |
| அசாமில் ஊரடங்கு உத்தரவு: ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர் Posted: 03 May 2014 10:04 PM PDT அசாமில் கோக் ரஜ்கர், பக்ஷா, சிராங், உதால்குரி ஆகிய மாவட்டங்களில் பூர்வீக பழங்குடி இனத்தவரான போடோ இன மக்களுக்கும், வங்காளதேசத்தில் இருந்து குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது |
| ராஜஸ்தானில் விரைவில் தொடங்க இருக்கும் விமான டாக்சி சேவை Posted: 03 May 2014 10:00 PM PDT இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் அதன் பாரம்பரியம், கலாச்சாரம், சபாரி. மணல்குன்றுகள், பசுமையான காடுகள் மற்றும் வனப் பிரதேசங்களுக்கு உலகளவில் சுற்றுலாப் பிரிவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில வருடங்களில் இங்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியன் என்றும், உள்நாட்டுப் பயணிகளின் |
| கேரளாவில் கனமழை: மின்கம்பி விழுந்து லாரி டிரைவர் பலி Posted: 03 May 2014 09:21 PM PDT கேரளாவில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 10–ந் தேதிக்கு பிறகு வெயில் குறைந்து கனமழை பெய்தது. இந்த மழை தொடர் மழையாக நீடித்ததால் வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை நிலவி வருகிறது. |
| ஆந்திராவில் கணக்கில் வராத 140 கோடி ரூபாய் பறிமுதல்: தேர்தல் ஆணையம் Posted: 03 May 2014 05:20 PM PDT ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறுவதையொட்டி பணபரிமாற்றத்தை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. இதன் பலனாக இது வரை கணக்கில் வராத 140 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 272 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆந்திராவில் மட்டும் அதில் பாதி தொகை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள அம்மாநில தேர்தல் ஆணையர் பன்வார்லால், இத்தேர்தல் பணப்பறிமாற்றம் அதிக அளவில் நடைபெற்று வருவதாக கூறினார். இதை தடுக்கும் வகையில் பறக்கும் படையின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். |
| மத்தியில் உள்ள கொள்ளைகார அரசை தூக்கி எறியுங்கள்: மோடி Posted: 03 May 2014 04:05 PM PDT உத்தரகாண்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட பா. ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, மத்தியில் அமைந்துள்ள கொள்ளையர்களின் அரசை தூக்கி எறியுங்கள் என ஆவேசமாக கூறினார். உத்தரகாண்ட் மாநிலம், பாவுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீநகர் என்ற இடத்தில் நேற்று பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் அமைந்துள்ள தாய், மகன் (சோனியா, ராகுல்) அரசாங்கம், நாட்டை சீரழித்து விட்டது. ஆனால் இதில் என்ன வேதனை என்றால், இதில் அவர்கள் பாதிக்கப்படவும் இல்லை. கவலைப்படவும் இல்லை. மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள். |
| பா.ஜ.க.வுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது: மம்தா திட்டவட்டம் Posted: 03 May 2014 02:58 PM PDT திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் கூறியிருந்த நிலையில், நேற்று வடக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி இனி எக்காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என தெரிவித்துள்ளார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியதாவது: மதம் மற்றும் மொழியை பயன்படுத்தி வங்கத்தில் உள்நாட்டு கலவரத்தை தூண்டி மக்களை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். வங்கத்தில் வசிக்கும் உ.பி. மற்றும் பீகார் மாநில மக்கள் இம்மாநிலத்தின் ஒரு அங்கமாக தான் கருதப்பட்டு வருகின்றனர். அரசியலுக்காக மக்களை நாங்கள் பிரிக்கமாட்டோம். மதம் மற்றும் சாதி பற்றிய நம்பிக்கை கொள்ளலாமல் |
| குஜராத்தில் சாலை விபத்து: 9 பேர் பலி Posted: 03 May 2014 01:59 PM PDT குஜராத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் ஜீப் மீது டேங்கர் லாரி மோதியதில் 9 பேர் பலியானதுடன் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அம்மாவட்டத்தில் உள்ள தீசா-தனேரா நெடுஞ்சாலையில் டெட்டோடா கிராமம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு ஜீப்பில் ஒரு கும்பல் டெட்டோடா நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த |
| அசாமில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் பலி Posted: 03 May 2014 01:30 PM PDT ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது இந்தியா முழுவதும் அடிக்கடி நடக்கிறது. இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஹடிகார்க் சரியாலி என்ற இடத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் பலியான செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அஃபிருள் என்ற பெயர் கொண்ட அந்த சிறுவன், அங்குள்ள கட்டுமான தொழில் நடக்கும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே இருந்த 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றை கவனிக்காமல் அதில் அவன் தவறி விழுந்து விட்டான். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். |
| காங்கிரசின் இழப்பை தடுக்கவே 3வது அணிக்கு ஆதரவில்லை என ராகுல் பிதற்றுகிறார்: மோடி Posted: 03 May 2014 12:53 PM PDT காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித், பா.ஜனதா அல்லாத மாற்று அணி ஆட்சி அமைய காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு, அக்கட்சிக்கு மக்களவை தேர்தலில் ஏற்படும் தோல்வியை பறைசாற்றுவதாக பா.ஜ.கட்சி கருத்து தெரிவித்தது. எனவே தான் மாற்று அணிக்கு ஆதரவு என்று காங்கிரஸ் கூறி வருவதாக பா.ஜனதா கட்சி கூறியது. உடனே காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவர் மாற்று அணிக்கு ஆதரவு |
| மோடி பிரதமராக வேண்டும்: கனவுக்கன்னி ஹேமமாலினி பேச்சு Posted: 03 May 2014 12:10 PM PDT இந்தி திரையுலகில் கனவுக்கன்னி என்று அழைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஹேமமாலினி இன்று பா.ஜ.க சார்பில் போட்டியிடும் ராதா மோகன் சிங்கை ஆதரித்து மோதிஹாரியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் ஊழல் ஆட்சியாலும், சமூக தீமைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்தால் மட்டுமே இதற்கெல்லாம் நல்ல தீர்வு காண முடியும் என மோதிஹாரி கூட்டத்தில் அவர் பேசினார். |
| பாடலாசிரியர் குல்சாருக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரணாப் முகர்ஜி வழங்கினார் Posted: 03 May 2014 10:43 AM PDT புகழ்பெற்ற பாடலாசிரியரும், இயக்குனருமான குல்சாருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தார். இன்று நடைபெற்ற 61வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பிரணாப் இந்த விருதை 79 வயதான குல்சாருக்கு வழங்கினார். தனது மகளுடன் விக்யான் பவனுக்கு வந்து சினிமாவுக்கான இந்த உயரிய விருதை குல்சார் பெற்றுக்கொண்டார். அப்போது அவரது மகள் சந்தோஷ மிகுதியால் உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டார். விருதை பெற்ற பின் குல்சார் கூறுகையில், "வார்த்தைகளை வைத்து விளையாடும் ஒருவருக்கு இது போன்ற சம்பவம் அரிதாக நிகழும்" என்றார். மேலும் அவர் பேசுகையில்: |
| மோடியை தடுக்க எங்களிடம் பல பயில்வான்கள் உள்ளனர்: அகிலேஷ் Posted: 03 May 2014 08:31 AM PDT 56 அங்குலம் (இஞ்ச்) மார்பளவுடைய மோடியை கட்டுப்படுத்த எங்கள் கட்சியில் பல பயில்வான்கள் உள்ளனர் என்று உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். கலிலாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:- 56 அங்குலம் மார்பளவுடன் சுற்றும் மோடியை கட்டுப்படுத்த சமாஜ்வாடி கட்சியின் தொண்டர்களால் மட்டுமே முடியும். அவரை கட்டுப்படுத்த எங்கள் கட்சியில் பல பயில்வான்கள் உள்ளனர். சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் உத்தரபிரதேசம் குஜராத்தை விட வளர்ச்சி அடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தை விட குஜராத்தில் நலத்திட்டங்கள் இல்லை. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |