மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- மோடி–கெஜ்ரிவால் மோதும் வாரணாசியில் 20,000 ராணுவ வீரர்கள் குவிப்பு
- நிதிஷ்குமார் மீது அதிருப்தி: ஐக்கிய ஜனதா தளம் உடைகிறது?
- 8–வது கட்ட தேர்தல்: அமேதி உள்பட 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு
- ராணுவ வாகன முறைகேடு: ஏ.கே.அந்தோணியிடம் சிபிஐ விசாரணை
- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு
- இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோடி
- சிறுபான்மை பள்ளிகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு பொருந்தாது: சுப்ரீம் கோர்ட்
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா?: சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
- நாடாளுமன்றத்துக்கான 8 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது
- எந்த வகையிலும் மம்தாவுடன் கூட்டணியில்லை: சி.பி.எம்
- நிலம் கையகப்படுத்தும் முறை குஜராத்தில் பிரமாதம்: மத்திய வர்த்தக அமைச்சகம்
- மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்ததேவ்
- வேவு பார்த்ததற்கு நன்றி: உச்சநீதிமன்றத்தில் ஸ்நூப்கேட் பெண் தகவல்
- பின் தங்கிய ஜாதி என்று மோடி கூறுவது அரசியல் விளையாட்டு: மாயாவதி
- கருவில் இருக்கும்போதே குழந்தையை ரூ.30 ஆயிரத்துக்கு விற்ற தம்பதியர்
- எல்லைப் பகுதியில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு
- மோடியின் பிரச்சாரத்தில் மேடை சரிந்து 3 பேர் படுகாயம்
- பிரிவினை அரசியல் செய்வது காங்கிரஸ் தான்; மோடி அல்ல- ராகுல் காந்திக்கு ராஜ்நாத் பதிலடி
- முல்லைப் பெரியாறு அணை வழக்கில் நாளை தீர்ப்பு
| முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 06 May 2014 10:52 PM PDT முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக - கேரள அரசுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2006–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை |
| மோடி–கெஜ்ரிவால் மோதும் வாரணாசியில் 20,000 ராணுவ வீரர்கள் குவிப்பு Posted: 06 May 2014 10:46 PM PDT பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதராவிலும், உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதில் வதோதராவில் கடந்த 30–ந் தேதி ஓட்டுப் பதிவு முடிந்து விட்டது. வாரணாசியில் இறுதி கட்டமாக 12–ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. |
| நிதிஷ்குமார் மீது அதிருப்தி: ஐக்கிய ஜனதா தளம் உடைகிறது? Posted: 06 May 2014 10:40 PM PDT ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 17 ஆண்டுகள் அங்கம் வகித்தது. பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி முன் நிறுத்தப்படுவதற்கு பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகுவதாக அவர் அறிவித்தார். இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையே இருந்த உறவு முறிந்தது. ஆனால் இந்த முடிவை எடுப்பதற்கான கட்சி கூட்டம் நடந்தபோது ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத்யாதவ் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போதும் அதேநிலை நீடிப்பதாக அந்த கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. |
| 8–வது கட்ட தேர்தல்: அமேதி உள்பட 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு Posted: 06 May 2014 10:39 PM PDT பாராளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7–ந்தேதி தொடங்கி வருகிற 12–ந்தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 7 கட்டங்களாக 438 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. தமிழகம், புதுவையில் கடந்த 24–ந்தேதி 40 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடந்தது. மற்ற மாநிலங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு கட்டங்களாக பிரித்து ஓட்டுப்பதிவு |
| ராணுவ வாகன முறைகேடு: ஏ.கே.அந்தோணியிடம் சிபிஐ விசாரணை Posted: 06 May 2014 08:56 PM PDT கடந்த 2010-ம் ஆண்டு இந்திய ராணுவத்துக்கு 'பி.இ.எம்.எல்.' என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து 1,600 தத்ரா டிரக்குகள் வாங்க திட்டமிடப்பட்டது. இதற்கான ஆர்டருக்கு ஒப்புதல் அளிக்க ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரி தேஜிந்தர்சிங் தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் வழங்க முன்வந்ததாக அப்போதைய ராணுவ தளபதி வி.கே.சிங் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக, தங்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவு செய்யப்பட்ட ஆடியோ டேப்பையும் அவர் அளித்தார். இந்த லஞ்ச விவகாரம் |
| வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு Posted: 06 May 2014 08:49 PM PDT வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அதை நடைமுறையில் பராமரித்து வராத வாடிக்கையாளர்களின் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை சில வங்கிகள் பின்பற்றி வருகின்றன. இந்த நடைமுறையை ரத்து செய்து வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், "இனிமேல், பராமரிப்பில் இல்லாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லை என்று கூறி அபராதம் விதிப்பத |
| இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோடி Posted: 06 May 2014 08:37 PM PDT உத்தரபிரதேச மாநிலம் டுமாரியாகஞ்ச் தொகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியதாவது:- அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தால் தான் நாடு முன்னேற்ற பாதையில் செல்லும். இந்து, முஸ்லிம் மதங்களை சேர்ந்த அனைவரும் வேற்றுமைகளை மறந்து தொடர்ந்து சகோதரத்துவத்துடன் |
| சிறுபான்மை பள்ளிகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு பொருந்தாது: சுப்ரீம் கோர்ட் Posted: 06 May 2014 08:15 PM PDT சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களில் 25 சதவிகித இடஒதுக்கீடு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டாய கல்வி வழங்கும் சட்டத்தை மத்திய அரசு 2009-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன்படி, அனைத்து பள்ளிகளும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின, பொருளாதார ரீதியில் |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா?: சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு Posted: 06 May 2014 03:52 PM PDT ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரும் வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்குகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, மிருக நலவாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய |
| நாடாளுமன்றத்துக்கான 8 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது Posted: 06 May 2014 01:52 PM PDT நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இது வரை 7 கட்டங்களில் 438 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது 8 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில் உள்ள 25 தொகுதிகளுக்கும், பீகாரில் 7 தொகுதிகளுக்கும், இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு |
| எந்த வகையிலும் மம்தாவுடன் கூட்டணியில்லை: சி.பி.எம் Posted: 06 May 2014 12:58 PM PDT சி.பி.ஐ கட்சியின் மூத்த தலைவரான ஏ.பி.பரதன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில், மோடி பிரதமர் ஆவதை தடுக்கும் நோக்கில் மம்தாவுடன் கூட்டணிக்கு தயார் என்று கூறியிருந்தார். ஆனால் சி.பி.எம் கட்சியோ, "எந்த வகையிலும் மம்தாவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என கூறியுள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவரான ரூபா பக்சி இதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் ஒரு சர்வாதிகாரி, அதிகார மமதை கொண்டவர், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அவரை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும் என மற்றொரு சி.பி.எம். தலைவரான சூர்யா காந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார். |
| நிலம் கையகப்படுத்தும் முறை குஜராத்தில் பிரமாதம்: மத்திய வர்த்தக அமைச்சகம் Posted: 06 May 2014 12:30 PM PDT நிலம் கையகப்படுத்தும் முறை குஜராத்தில் பிரமாதமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வியாபாரத்திற்கான சூழல் முன்னேற, இதே முறையை மற்ற மாநிலங்களும் சிறிய மாற்றங்களுடன் செயல்படுத்தலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சகத்தின் "சிறந்த முறையில் மாற்றியமைக்கப்பட்ட மாநிலங்களின் வியாபார சூழல்" என்ற |
| மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்ததேவ் Posted: 06 May 2014 12:20 PM PDT நாட்டின் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடு பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மா.கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார். இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. ஆனால் நாங்கள் இது பேராபத்தை தரும் என கூறி வருகின்றோம். மோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு மக்களுக்கு என்ன |
| வேவு பார்த்ததற்கு நன்றி: உச்சநீதிமன்றத்தில் ஸ்நூப்கேட் பெண் தகவல் Posted: 06 May 2014 10:56 AM PDT கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவரை மோடி வேவு பார்த்ததாக பரவலாக பேசப்பட்டது. மோடியின் நம்பிக்கைகுரிய அமித் ஷா அப்பெண்ணை வேவு பார்க்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிடும் ஒலி நாடா ஆதாரம் கிடைத்ததை ஒட்டி, மோடி ஸ்நூப்கேட் நடவடிக்கையில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது. எனவே இது குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளோ, தேர்தல் முடிவுகள் வர இன்னும் சில நாட்களே உள்ளன. எனவே மோடி மீதான குற்றச்சாட்டிற்காக நீதிபதியை |
| பின் தங்கிய ஜாதி என்று மோடி கூறுவது அரசியல் விளையாட்டு: மாயாவதி Posted: 06 May 2014 10:01 AM PDT அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி தனது சகோதரரரான ராகுல் மற்றும் தாய் சோனியா ஆகியோருக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது அவர் மோடியை கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில் மோடி பிரசாரத்தின் போது கீழ்த்தரமாக பேசி வருவதாக பிரியங்கா குற்றம்சாட்டினார். ஆனால், பிரியங்கா கீழ்த்தரம் என்று கூறியதை, மோடி பின்தங்கிய ஜாதி என்று கூறி |
| கருவில் இருக்கும்போதே குழந்தையை ரூ.30 ஆயிரத்துக்கு விற்ற தம்பதியர் Posted: 06 May 2014 09:17 AM PDT மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபள்ளியில் வசித்துவரும் பிரத்யோத் என்பவர் ஒரு சிறு வணிகர் ஆவார். நான்கு வருடங்களுக்கு முன்னால் திருமணமான அவருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அவரது மனைவி ருமா மறுபடியும் கருத்தரித்தபோது மற்றொரு குழந்தை தேவையில்லை என்று பிரத்யோத் நினைத்தார். |
| எல்லைப் பகுதியில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு Posted: 06 May 2014 08:51 AM PDT பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. ஜம்முவில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் நேற்று இரவு 11.30 மணியில் இருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சிறிது நேரம் நடைபெற்றது. |
| மோடியின் பிரச்சாரத்தில் மேடை சரிந்து 3 பேர் படுகாயம் Posted: 06 May 2014 08:43 AM PDT உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நரேந்திர மோடியின் பிரச்சாரம் செய்தபோது மேடை சரிந்து விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். சாலம்பூர் தொகுதி ப.ஜனதா வேட்பாளர் ரவேத்ரா குஷ்வாகாவை ஆதரித்து சிக்கந்தர்பூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மோடி பேசினார். |
| பிரிவினை அரசியல் செய்வது காங்கிரஸ் தான்; மோடி அல்ல- ராகுல் காந்திக்கு ராஜ்நாத் பதிலடி Posted: 06 May 2014 08:17 AM PDT காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பா.ஜனதா கட்சி, பிரிவினை அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுத்த பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ்தான் அத்தகைய அரசியல் செய்வதாக கூறினார். |
| முல்லைப் பெரியாறு அணை வழக்கில் நாளை தீர்ப்பு Posted: 06 May 2014 06:37 AM PDT முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. தமிழகத்திற்கு பாசன வசதி அளிக்கும் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |