மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 8–ந்தேதி முதல்–மந்திரியாக பதவி ஏற்பு: மோடிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு
- ஐதராபாத் விமான நிலையத்துக்கு என்.டி.ராமராவ் பெயர்: மத்திய மந்திரி
- தெலுங்கானாவில் புதிய ஆட்சி: சந்திரசேகர ராவுக்கு கவர்னர் அழைப்பு
- மீரட்டில் கடும் மின்வெட்டை கண்டித்து பா.ஜ.க போராட்டம்
- பிரதமர் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேர பாதுகாப்பு
- நரேந்திர மோடிக்கு சீன பிரதமர் லீ கியாங் வாழ்த்து
- சிவசேனா கட்சி ஒரு காகிதப்புலி: தேசியவாத காங்கிரஸ் கடும் தாக்கு
- உ.பி.யில் இரு பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசார் மீது வழக்கு
- லஞ்ச வழக்கில் டெல்லி முன்னாள் கவுன்சிலருக்கு 5 ஆண்டு சிறை
- கறுப்பு பண விவகாரம்: ஜூன் 4-ம்தேதி சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கூட்டம்
- மணிப்பூரில் பயங்கர குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
- வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை: வி.கே.சிங்
- மந்திரிசபையை விரிவுபடுத்த மோடி விருப்பம்: மேலும் 25 பேர் இடம்பெற வாய்ப்பு
- சகாரா நிறுவன சொத்துக்களை விற்பனை செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி
- ஏர்ஆசியா இந்தியா விமான சேவை ஜூன் 12 முதல் தொடக்கம்
- மந்திரிகளிடம் 100 நாள் செயல்திட்டத்தை கேட்ட பிரதமர் மோடி
- ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜிதசேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் விநியோகம்
- ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொன்ற டிக்கெட் பரிசோதகர்
- உ.பி. அரசு இணைய தளங்களை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்
- சூரத்தில் ஜவுளி குடோனில் தீ விபத்து: பல கோடி ஜவுளிகள் நாசம்
| 8–ந்தேதி முதல்–மந்திரியாக பதவி ஏற்பு: மோடிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு Posted: 29 May 2014 10:41 PM PDT தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு வருகிற ஜூன் மாதம் 8–ந்தேதி ஆந்திர முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா விஜயவாடாவுக்கும், குண்டூருக்கும் இடையில் உள்ள நாகார்ஜுனா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. |
| ஐதராபாத் விமான நிலையத்துக்கு என்.டி.ராமராவ் பெயர்: மத்திய மந்திரி Posted: 29 May 2014 10:25 PM PDT ஐதராபாத் சம்சாபாத்தில் உள்ள விமான நிலையம் தேசிய விமான நிலையமாக இருந்த போது அதற்கு என்.டி.ராமராவ் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பின்னர் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சம்சாபாத் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டது. |
| தெலுங்கானாவில் புதிய ஆட்சி: சந்திரசேகர ராவுக்கு கவர்னர் அழைப்பு Posted: 29 May 2014 09:00 PM PDT ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு நாட்டின் 29–வது மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 18–ந் தேதி நடந்த கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல் மந்திரியாக சந்திரசேகரராவ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில் சந்திர சேகரராவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் |
| மீரட்டில் கடும் மின்வெட்டை கண்டித்து பா.ஜ.க போராட்டம் Posted: 29 May 2014 05:11 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பா.ஜ.க வெற்றி பெற்ற பாராளுமன்ற தொகுதிகளில் கடும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக வாரணாசி மற்றும் மீரட் ஆகிய தொகுதிகளில் தினமும் சில மணி நேரங்கள் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மீரட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இதை கண்டித்து மீரட்டில் உள்ள பஸ்சிமான்ஜல் வித்யுத் வித்ரன் நிகாம் அலுவலகம் முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்ததற்கு மாறாக இரண்டு மணி நேரம் மட்டும் மின்சாரம் வழங்குவதற்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். |
| பிரதமர் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேர பாதுகாப்பு Posted: 29 May 2014 05:02 PM PDT நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மனைவி பெயர் ஜசோதா பென் என தெரிவித்திருந்தார். முதன்முறையாக தனது மனைவி பெயரை மோடி வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவு வெளியானவுடன் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு சாதாரண உடையில் துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும், அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் ஏதாவது உள்ளதா என எந்நேரமும் வாகனம் மூலம் |
| நரேந்திர மோடிக்கு சீன பிரதமர் லீ கியாங் வாழ்த்து Posted: 29 May 2014 02:02 PM PDT இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீன பிரதமர் லீ கியாங் ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்றதும் இந்திய தூதரகம் மூலமாக நரேந்திர மோடிக்கு வாழ்த்து அனுப்பினார். நேற்று சீன பிரதமர் லீ கியாங் தொலைபேசியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றமைக்காக மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் |
| சிவசேனா கட்சி ஒரு காகிதப்புலி: தேசியவாத காங்கிரஸ் கடும் தாக்கு Posted: 29 May 2014 01:33 PM PDT பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அக்கட்சி சார்பில் அமைச்சராக ஆனந்த் கீதே அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை ஒதுக்கப்பட்டது. ஆனந்த் கீதேவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை தொடர்பாக சிவசேனா கட்சி அதிருப்தி தெரிவித்ததுடன் அத்துறைக்கான பொறுப்பை ஏற்காமல் |
| உ.பி.யில் இரு பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசார் மீது வழக்கு Posted: 29 May 2014 11:51 AM PDT உத்தரப்பிரதேசத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இரண்டு மைனர் பெண்களை கும்பலாக சேர்ந்து கற்பழித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கா, தங்கைகளான அவர்களில் ஒருவருக்கு 14 வயதும் மற்றொருவருக்கு 15 வயதும் நடைபெறுகிறது. இந்த மைனர் பெண்களை கற்பழித்த பின் அவர்களை கொலை செய்து அங்குள்ள மாமரத்தில் அவர்களது உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். நேற்று மாலை காணாமல் போன தங்களது பெண்கள் தூக்கில் தொங்கியதை பார்த்து அவர்களது |
| லஞ்ச வழக்கில் டெல்லி முன்னாள் கவுன்சிலருக்கு 5 ஆண்டு சிறை Posted: 29 May 2014 08:39 AM PDT லஞ்சம் வாங்கிய வழக்கில் டெல்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2003ம் ஆண்டு ஆர்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த ஹிரன் டோகாஸ், ஒரு கடைக்காரரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சட்டவிரோதமாக கடை கட்டியிருப்பதாக கூறிய டோகாஸ், தனது |
| கறுப்பு பண விவகாரம்: ஜூன் 4-ம்தேதி சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் Posted: 29 May 2014 07:11 AM PDT நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பான வழக்குகளில் புலனாய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. |
| மணிப்பூரில் பயங்கர குண்டுவெடிப்பு: 2 பேர் பலி Posted: 29 May 2014 06:55 AM PDT மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் அருகில் இன்று மாலை குண்டுவெடித்தது. ஷிங்ஜாமெய் அருகே தீவிரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த வெடிகுண்டு, 5.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. |
| வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை: வி.கே.சிங் Posted: 29 May 2014 06:28 AM PDT வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை மந்திரி வி.கே.சிங் உறுதி அளித்துள்ளார். |
| மந்திரிசபையை விரிவுபடுத்த மோடி விருப்பம்: மேலும் 25 பேர் இடம்பெற வாய்ப்பு Posted: 29 May 2014 06:03 AM PDT நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தேர்தல் பிரசாரத்தின் போது தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் உண்டு என்று கூறியிருந்தார். அதன்படி மந்திரி பதவி வழங்கி கவுரவப்படுத்தினார். |
| சகாரா நிறுவன சொத்துக்களை விற்பனை செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி Posted: 29 May 2014 05:43 AM PDT முதலீட்டாளர்களின் பணத்தை திரும்ப அளிக்காதது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சகாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய், தனக்கு ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரூ.5 ஆயிரம் கோடியை ரொக்கமாகவும், ரூ.5 ஆயிரம் கோடிக்கு வங்கி உத்தரவாதமும் அளித்துவிட்டு ஜாமின் |
| ஏர்ஆசியா இந்தியா விமான சேவை ஜூன் 12 முதல் தொடக்கம் Posted: 29 May 2014 03:17 AM PDT மலேசியாவை தலைமையிடமாக கொண்ட ஏர்ஆசியா நிறுவனம் மலிவுக் கட்டண விமான சேவைக்கு புகழ் பெற்றதாகும். இந்நிறுவனம் டாடா மற்றும் டெல்ஸ்ட்ரா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் விமான சேவையை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதற்கு பயனும் கிடைத்தது. இதன்விளைவாக ஏர்ஆசியா நிறுவனம் வரும் ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து இந்தியாவில் தன் சேவையை தொடங்க |
| மந்திரிகளிடம் 100 நாள் செயல்திட்டத்தை கேட்ட பிரதமர் மோடி Posted: 29 May 2014 03:11 AM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கள் 100 நாட்களுக்கான செயல்திட்டங்களை தயாரித்து வழங்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். திறமையான நிர்வாகம், திட்டங்களை முறையாக அமல்படுத்துதல் மற்றும் மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூறினார். |
| ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜிதசேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் விநியோகம் Posted: 29 May 2014 02:52 AM PDT திருப்பதி கோவிலில் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் அதற்குரிய கட்டணம் செலுத்தி முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் முன்பதிவு செய்த இத்தகைய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் சில காரணங்களுக்காக ரத்து செய்கின்றனர். இவ்வாறு ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் |
| ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொன்ற டிக்கெட் பரிசோதகர் Posted: 29 May 2014 02:17 AM PDT ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக கிழே தள்ளியதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஜனதா எக்ஸ்பிரசில் பெண் ஒருவர் பொது பெட்டியில் பயணம் செய்வதற்கான முன்பதிவல்லாத டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் ஏறியுள்ளார். அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், ஏ.சி. பெட்டியில் ஏறக்கூடாது என்று அந்த பெண்ணிடம் தகராறு செய்தார். பின்னர் அந்த பெண்ணை வெளியில் தள்ளிவிட்டார். அந்த பெண் சுதாரிப்பதற்குள் கிழே விழுந்து விட்டார். கிழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். |
| உ.பி. அரசு இணைய தளங்களை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்ஸ் Posted: 29 May 2014 01:57 AM PDT உத்தரபிரதேச மாநில அரசின் 3 இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்ஸ் முடக்கினர். இந்த தகவலை உ.பி. அரசு வெளியிட்டுள்ளது. www.tajmahal.gov.in, www.agrafort.gov.in, www.fatehpursikri.gov.in ஆகிய 3 இணைய தளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளனர். ஆனால், இணைய தளத்தில் உள்ள தகவல்களை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. முதல் பக்கத்தை மாற்றி, அதில் தங்கள் நாட்டை புகழ்ந்து எழுதியுள்ளனர். தங்களை பாகிஸ்தான் இணைய வெளியின் பாதுகாப்பாளர் |
| சூரத்தில் ஜவுளி குடோனில் தீ விபத்து: பல கோடி ஜவுளிகள் நாசம் Posted: 29 May 2014 01:07 AM PDT குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்சிட் டவர் என்ற 17 மாடி கட்டிடத்தில் தனியாருக்கு சொந்தமான ஜவுளி குடோன் 4–வது மாடியில் செயல்பட்டு வந்தது. இங்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஜவுளிகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. இங்கு இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணியில் பிடித்த தீ மளமளவென்று பற்றி எரிந்து மற்ற தளங்களிலும் வேகமாக பரவியது. 17 மாடியிலும் தீப்பற்றி எரிந்தது. அந்தப் பகுதியே கரும் புகை மண்டலத்தில் மூழ்கியது. இதனால் சூரத்தில் பதட்டம் ஏற்பட்டது. சூரத்தின் பல பகுதிகளில் இருந்தும் 20–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |