ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அந்த ஒரு சீட்
- பெண்களுக்கு சமாதானம் !!
- நயந்தினி - ஒரு சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்டவள்!
- அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
- நிம்மதி
- குரு கீதை (2) !!
- தீபம்: சில குறிப்புகள்
- குங்குமம் வைப்பதன் நன்மைகள்!
- தியானத்தின் மூன்று படிகள் !!
- பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
- அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!
- விருந்தும் மருந்தும் மூன்று நாள்
- திரு ரமணீயன் ஐயா அவர்கள் இன்று முதல் ஈகரை நிர்வாகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்!
- காதலும், கல்யாணமும்
- ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?
- கை வைத்தியம்!
- தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன
- மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!
- Epub மின்னூல் தயாரிக்க எளிய வழி இருந்தால் கூறுங்கள்
- ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- இனியவனின் அறிமுகம்
- தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?
- கவிதையில் யாப்பு
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (20)
- மன அழுத்தம் குணமாக...
- இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.
- பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது
- சிங்கம்புணரியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை
- ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை
- 400 ஆண்டுகள் பழமையான பத்மநாபபுரம் அரண்மனைக்கு யுனெஸ்கோ விருது
- ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
- ஐதராபாத்தில் மதக்கலவரம்: 3 பேர் பலி
- உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்
- சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்!
- அவளுக்காய் என் கண்கள் தூங்க மறுக்கின்றன!!!
- மாய கண்ணனின் அறிமுகம்
- அலைகிறான் கருடன்...!! { ஹைக்கூ }.
| Posted: 15 May 2014 03:14 PM PDT நன்றி ,வதன நூல் ரமணியன் |
| Posted: 15 May 2014 02:02 PM PDT மனித குலம் தோன்றிய நாட்களிலிருந்து பெண்கள் ஆண்களால் கொடுமைக்குள்ளாவது வாடிக்கையாகவே இருக்கிறது பெண்கள் சமத்துவம் ; பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வுகள் ; ஆதரவுகள் பெருகியுள்ள இக்காலத்திலும் எதிர்பாராவிதமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் தாக்குதலுக்குள்ளாவது நடந்தேறி விடுகிறது எத்தனை விழிப்புணர்வுகள் போராட்டங்கள் ; அரசின் தண்டனைகள் என்று வந்தாலும் அதைப்பற்றிய அறிவு இல்லாமல் ; தாங்கள் போலிசிடம் மாட்டிக்கொள்வோம் ; தண்டனை நிச்சயம் உண்டு என்பதைப்பற்றிய தெளிவு இல்லாமல் சில இளைஞர்கள் பெண்ணை ... |
| நயந்தினி - ஒரு சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்டவள்! Posted: 15 May 2014 01:51 PM PDT அவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு மட்டுமில்ல எங்க ஊருல எல்லாருக்கும் அவனைப் பிடிக்கும். எனக்கும் அவனைப் பிடிச்சிருந்தது. என் வயசுல உள்ள எல்லாப் பொண்ணுங்களும் பெரிசானவுடனே அவனைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லுவாங்க. நானும் அப்படித்தான் சொல்லிக்கிட்டுத் திரிஞ்சேன். காதல்னா என்னன்னே எனக்குத் தெரியாது. ஆனா நான் அவனைக் காதலிச்சிருக்கேன். என் வயசுப் பொண்ணுங்க எல்லாரும் அவன்கிட்ட "நான் உன்னைத்தான் கட்டிக்குவேன்னு" சொல்லுவாங்க. அவன் சிரிப்பான். நானும் ஒருநாள் அவன்கிட்ட அப்படித்தான் ... |
| அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!! Posted: 15 May 2014 10:30 AM PDT 1. மோர்மோன் உள்ளாடைகள் மோர்மோன் கிறிஸ்துவ ஆலயத்தில் பல விந்தையான நடைமுறைகள் உள்ளது. அதில் ஒன்று தான் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிவது. அப்படி செய்வதால் அவர்கள் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். இடைக்காலத்தின் போது இந்த உள்ளாடைகள் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தது. அம்புகள் மற்றும் நேரடி தாக்குதல்களில் இருந்து அவர்களை இது காத்தது. 2.ஆகாய புதைப்பு இறந்த பின்னரும் கூட மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என சோரோஸ்ட்ரியன்கள் (பார்சி) நம்பினார்கள். அதனால் இறந்த ... |
| Posted: 15 May 2014 10:29 AM PDT பல நாள் நானும் நன்றாக யோசித்தேன் என்னடா வாழ்வென்று, நிம்மதி இல்லையே இதில் எங்கே போனால் கிட்டும் இந்த நிம்மதி, யாரும் சொல்லவில்லை எனக்கு!! வீட்டில் வாஸ்து சரியில்லை என்றான் ஒரு சாமியார், ஜாதகப்படி உனக்கு இன்னும் ஒரு வருடம் நிம்மதி இருக்காது என்றான் ஜோதிடன்!! உங்கள் பெயருக்கு சிகப்பு கல் வைத்த மோதிரம் நிம்மதி கொடுக்கும் என்றான் எண்ணியல் நிபுணன்!! பணம் போனதே தவிர நிம்மதி என்ற ஒன்று என்னிடம் வரவே இல்லை!! அன்றிரவு உறக்கத்தில் என்னைப்போல் ஒருவன் எதிரில் நிற்கிறான் ... |
| Posted: 15 May 2014 10:19 AM PDT https://archive.org/download/amala_2_201403/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88_2.mp3 (இங்கே சொடுக்கி கேட்டுக்கொண்டே படிக்கலாம் ) குரு கீதை (2) !! யுகபுருஷன் சிவன் பார்வதிக்கு உபதேசித்ததாவது : 1 . மகாதேவி ! சகல ஆனந்தத்தை அளிப்பதும் ; சகல சுகங்களை அருளுவதும் ; தூய அறிவையும் முக்தியையும் அளிப்பதுமான தியானத்தைப்பற்றி கூறுகிறேன் கேள் ! 2 . பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனை உணர்ந்து கொள்வாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் ... |
| Posted: 15 May 2014 10:19 AM PDT காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். தீபத்தை கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும். தெற்கு முகம் பார்த்து தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம். புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை, தீயசக்திகள், தொந்தரவுகள் அண்டாது. பஞ்சு திரி மங்களம் ... |
| Posted: 15 May 2014 10:11 AM PDT மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகின்ற. இவைமூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண்அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதகிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக்கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும். ... |
| Posted: 15 May 2014 10:08 AM PDT 1)தாரணை - மனதை ஒன்றின் மேல் குவிப்பது 2)பிரத்யகாரம் - அதனோடு ஒன்றி விடுவது ; லயிப்பது 3)சமாதி - தன்னிலையை மறந்து விடுவது தியானம் செய்வதை சாதனை என்பார்கள் அது ஒரு உழைப்பு அதை அனுதினமும் சில நிமிடங்கள் பயில வேண்டும் அப்படி நாம் பயிலுபோது நமக்கு பெயர் சாதகன் ஒரு முயற்சி அவ்வளவுதான் - சில நிமிடங்களே போதுமானது பழக பழக நேரமும் ஈடுபாடும் பலன்களும் கைகூடும் உடல்நிலையில் ஆரோக்கியம் மனதில் தெளிவு ஒரு சமாதனம் - சாந்தி ஆன்ம பலம் உண்டாகி அறிவில் ஒரு விழிப்பு - நுண்ணிய விசயங்களில் ... |
| பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Posted: 15 May 2014 10:02 AM PDT பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ... |
| அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Posted: 15 May 2014 09:59 AM PDT எதிர்பார்த்தபடியே பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கிவிட்டது அதிமுக. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மத்தியில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கின்ற நிலையில், ஜெயலலிதாவின் சிறந்த நண்பர் மோடி என்றும், அவர் பிரதமரானால் நெருக்கமான உறவு மலர வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அந்தர்பல்டி அரசியல் ஆட்டத்தை தொடங்கி வைத்துவிட்டது அதிமுக. வாக்குப்பதிவு பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகள், மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் ஆருடம் ... |
| விருந்தும் மருந்தும் மூன்று நாள் Posted: 15 May 2014 09:58 AM PDT ஒருவீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறோம் என்றால், காலையில் போய் விட்டு மாலைக்குள் திரும்பி விடுவது தான் மரியாதை. அங்கேயே ஒருவாரம், பத்துநாள் "டேரா' போடுவது என்பதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்துவராது. மீறி தங்கினால், தேவையற்ற கருத்து வேறுபாடுதான் வரும். பெற்றவர்கள் கூட, பிள்ளைகள் வீட்டில் குறைந்த நாள் தான் தங்க வேண்டிய சூழல் இருக்கிறது. விலைவாசி மற்றும் குடும்பச்சூழல் அப்படி! ஒரு கதையைக் கேளுங்க! ஒரு வாத்து முட்டைகளை குஞ்சு பொரித்தது. எப்படியோ, அன்னப்பறவையின் முட்டை ஒன்றும் அதனுள் கலந்து விட்டது. ... |
| திரு ரமணீயன் ஐயா அவர்கள் இன்று முதல் ஈகரை நிர்வாகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்! Posted: 15 May 2014 09:51 AM PDT ஈகரை தமிழ் களஞ்சியத்தின் தூணாக விளங்கும் திரு ரமணீயன் ஐயா அவர்களை ஈகரை நிர்வாகக் குழுவில் ஒருவராக நியமிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்! உங்களின் ஆசீர்வாதத்தால் இத்தளம் மேலும் பல சிறப்புக்களைப் பெறட்டும் ஐயா! |
| Posted: 15 May 2014 09:51 AM PDT திருமணம் என்ற ஒற்றை நிகழ்வு நம் மொத்த வாழ்வையும் புரட்டிப் போட்டது!! திருமணத்திற்கு முன்பு உன்னை மானே! தேனே !! என்றேன்! மகிழ்ந்தாய்! திருமணத்திற்கு பிறகு தினமும் கிடைக்கும் வசைபாடுகளில் நீ கொஞ்சம் வாடிப் போனாய்!! முன்போ உன் வருகைக்காய் மணிக்கணக்காக நாள் கணக்காக காத்திருந்தேன்! இப்போதோ நீ தாமதாமாய் காபி கொணர்ந்ததற்கு கூட கடிந்து கொள்கிறேன்! முன்போ நீ தொட்டுத் தந்தாள் தண்ணீரும் இனிக்கிறது என்றேன்! இப்போதோ சாம்பாரில் உப்புக் குறைந்ததற்காக உன்னை உதைக்கிறேன்! முன்போ உன் ... |
| ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி? Posted: 15 May 2014 09:45 AM PDT "ஆறு மனமே ஆறு" என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் தி...ரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான். ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ... |
| Posted: 15 May 2014 09:38 AM PDT ![]() |
| தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன Posted: 15 May 2014 09:36 AM PDT தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்.டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்! அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா ... |
| மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு! Posted: 15 May 2014 09:05 AM PDT சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான மலைச்சாமி, பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், 1999 ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அதிமுக எம்.பி.யானார். அந்த பதவிக்காலம் முடிவடைந்ததும், அதிமுகவில் சொல்லிக்கொள்ளும்படியான பொறுப்பில் ... |
| Epub மின்னூல் தயாரிக்க எளிய வழி இருந்தால் கூறுங்கள் Posted: 15 May 2014 09:04 AM PDT Epub (Electronic publication) மின்னூல் தயாரிக்க எளிய வழி இருந்தால் கூறுங்கள் உறவுகளே! |
| ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! Posted: 15 May 2014 08:48 AM PDT ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! முன்னறிவிப்பு செய்தன மழையின் வருகையை இடி மின்னல் ! விழிகள் பேசும்போது மௌனமாகின்றன இதழ்கள் ! கவிதைக்கு மட்டுமல்ல காதலிக்கும் இனிமை முரண் ! வீண் வேலை மரங்களை வீழ்த்திவிட்டு மழைக்கான பிராத்தனை ! செயற்கைச் செடிக்கும் தண்ணீர் ஊற்றினர் அழுக்கு நீக்க ! அறம் என்றால் என்ன என்றார் அரசியல்வாதி ! |
| ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! Posted: 15 May 2014 08:41 AM PDT ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! யாரும் உடைக்காமலே உடைந்தது வானவில் ! நேரம் இருப்பதில்லை வஞ்சகம் நினைக்க உழைப்பாளிக்கு ! குடிப்பவனின் உயிர் குடித்தது மது ! புகைபிடித்தல் உயிர்க்கு பகைபிடித்தல் ! துன்பமில்லை சொல்ல முடிந்ததை மட்டுமே நினைத்தால் ! கவனம் சிறிய கல் பெரிய விபத்து ! எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் சரி குடிமக்கள் ? இசையால் பயிர் வளர்கிறது மனிதன் ? இருப்பதில்லை காகத்தின் ஒற்றுமை மனிதர்களுக்கு ? கவனிக்கின்றன ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 15 May 2014 06:51 AM PDT ![]() |
| Posted: 15 May 2014 06:43 AM PDT பெயர்: கிருஷ்ண சிவம் (சுருக்கமாக) சிவம் சொந்த ஊர்: தஞ்சை இப்போது வசிக்குமிடம் சென்னை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: தமிழ் இழைகளை தேடிக்கொண்டிருந்த போது வலையில் கிடைத்த பொக்கிஷம் பொழுதுபோக்கு: சினிமா, பாடல்கள், புத்தகம் முக்கியமாக வரலாறு மற்றும் அரசியல் தொழில்: வியாபாரி மேலும் என்னைப் பற்றி: நான் இளைஞனல்ல, முதியவனுமல்ல, வாழ்க்கை பாதையில் பாதி பயணித்து, கடமை முடிக்க மேலும் சில வருடங்களுக்காக காத்திருப்பவன். தமிழ் பிரியன், சிவாஜிகணேசனின் பரம ரசிகன். MSV யின் இசை சுசிலா TMS குரலுக்கு ... |
| தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன? Posted: 15 May 2014 05:44 AM PDT எனது தொடைகளுக்கு இடையில் மிகத் தீவிரமான அரிப்பு ஏற்பட்டு புண்ணாகிவிட்டது, இதற்கு தீர்வளியுங்கள்! |
| Posted: 15 May 2014 05:43 AM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 15 May 2014 05:21 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 15 May 2014 04:21 AM PDT மன அழுத்தம் இப்போது ஒரு நோயாகக் கருதப்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிக மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மன நெருக்கடி ஏன் ஏற்படுகிறது, வராமல் எப்படி தடுப்பது, வந்தால் என்ன வைத்தியம் செய்வது? ஓய்வில்லாத நெருக்கடியால்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண்களுக்கு பெரும்பாலும் வேலைச்சுமையால் இது ஏற்படுகிறது. தொழில் தோல்வியாலும் மனம் பாதிக்கும். மனைவியாலும் சிலருக்கு மனக் கவலை ஏற்படும். இதுவே மனநோயாக ஆகிவிடும். கணவன் - மனைவி உறவில் ஏற்படும் சிக்கலால் பெண்கள் மன நோயாளி ஆகின்றனர். இதை வெளியில் சொல்ல ... |
| இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு. Posted: 15 May 2014 04:14 AM PDT பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர். ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர். இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே ... |
| பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது Posted: 15 May 2014 03:52 AM PDT காந்தியின் மூத்த மகன் ஹரிலால் என்பவர் மதுவுக்கு அடிமையாகி, தந்தையின் அதிருப்திக்கு இலக்கானார். பிற்காலத்தில் அவரை தனது மகனே அல்ல என்று காந்தி தள்ளிவைத்ததாகவும், சட்டபூர்வமாக விடுதலைப் பத்திரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஹரிலால் குடிகாரராக மட்டுமல்லாது, பெண்பித்தராகவும் இருந்தார் என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது. அதிலும், பெற்ற மகளையே பெண்டாள துணிந்தவர் என்ற அதிர்ச்சி தகவல், தனது மகனுக்கு காந்தி எழுதிய கடிதத்தின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 'நாட்டின் விடுதலையை விட, உனது ... |
| சிங்கம்புணரியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை Posted: 15 May 2014 03:21 AM PDT [url= ]சாய்ந்த மரம்[/url] சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை சுமார் 1 மணி நேரம் மழை நீடித்தது. இதனால் மின்கம்பங்கள் மீது பல மரங்கள் சாய்ந்து விழுந்தது. நகரின் முக்கிய பகுதியில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டது தற்போது வரை இன்னும் சீரமைக்கப்படவில்லை மின்கம்பங்கள். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். |
| ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை Posted: 15 May 2014 02:57 AM PDT சென்னை: குளுகோஸ் கரைசல் என, நினைத்து, 'ஆசிட்' குடித்ததால், ஆறு ஆண்டுகளாக, சாப்பிட முடியாமல் தவித்த சிறுவனுக்கு, அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள், 13 அறுவை சிகிச்சைகள் செய்து குணப்படுத்தியுள்ளனர். குளுகோஸ் கரைசல்: சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அசோக் என்பவரின் மகன் பிரேம், 12. கடந்த 2008ல், தன், ஆறு வயதில், குளுகோஸ் கரைசல் என நினைத்து, வீட்டில் இருந்த ஆசிட்டை (சோடியம் ஹைட்ரோ குளோரைடு) குடித்தான். இரண்டு மாதமாக, இருமல், வலியுடன் பேச முடியாமல் அவதிப்பட்டான்; உடல் எடை, 22 கிலோவில் இருந்து, ... |
| 400 ஆண்டுகள் பழமையான பத்மநாபபுரம் அரண்மனைக்கு யுனெஸ்கோ விருது Posted: 15 May 2014 02:33 AM PDT நாகர்கோவில்: பத்மநாபபுரம் அரண்மனைக்கு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் இந்த அரண்மனையை பார்க்க உலக நாடுகளில் இருந்து வரும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 400 ஆண்டுகள் பழமையானது பத்மநாபபுரம் அரண்மனை. குமரி மாவட்டம் 1956 நவம்பர் மாதம் 1 ம்தேதி தமிழகத்துடன் இணைந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட போது பத்மநாபபுரம் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இங்கு தலைமையிடமாக கொண்டு திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி செய்த போது இந்த அரண்மனை கட்டப்பட்டது. ... |
| ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Posted: 15 May 2014 01:09 AM PDT அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே! கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்! |
| ஐதராபாத்தில் மதக்கலவரம்: 3 பேர் பலி Posted: 15 May 2014 12:43 AM PDT ஐதராபாத்தில் ஒரு மதத்தை சேர்ந்தவர்களின் கொடி எரிக்கப்பட்டதால் மதக்கலவரம் மூண்டது. அதில் மூன்று பேர் பலியானார்கள். மேலும் 10 காவலர்கள் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். ஐதராபாத் அருகேயுள்ள கிஷன்பாக் பகுதியில் ஒரு மதத்தை சார்ந்தவர்களின் கொடி எரிக்கப்பட்டதால் கலவரம் மூண்டது. கொடி எரிக்கப்பட்டது தெரிந்தவுடன் அந்த மதத்தை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர். அதில் சில இளைஞர்கள் அங்குள்ள வேறொரு மதத்தை சார்ந்தவர்களின் வீடுகளையும், வாகனங்களையும் தாக்கினர். இதில் அந்த பகுதி முழுவதும் போர்க்களம் ... |
| உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் Posted: 15 May 2014 12:40 AM PDT உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது. 4 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில் 27 மாடிகளை கொண்ட முகேஷ் அம்பானி தன்னுடைய வீட்டிற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மர்மத்தீவான 'அண்டிலியா' வின் பெயரை சூட்டியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 1 லிருந்து 2 பில்லியன் ... |
| சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! Posted: 15 May 2014 12:33 AM PDT சென்னை: சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், மாநகராட்சி சார்பில் அம்மா வாரச் சந்தை அமைக்கப்படும் என மேயர் சைதை துரைசாமி அறிவித்தார். அதன்படி இந்த வாரச்சந்தையை இன்னும் 2 மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாரச்சந்தை அமைக்க தேவையான இடங்களை தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. ... |
| அவளுக்காய் என் கண்கள் தூங்க மறுக்கின்றன!!! Posted: 15 May 2014 12:27 AM PDT பலர் உறங்கும் வேளை! நான் உறங்கவில்லை! பரீட்சைக்குப் படிக்கவா? பாடம் சொல்லித்தரவா? இல்லை என் விளிகள்! கனவிலும் உனைக்கான மறுப்பதால்! எனக்கு நீ என்றாய்! உனக்கு நான் என்றேன்! மடல் நிறைந்த வார்த்தைகள்! மதி மயங்கினோம்! கனவிலே சஞ்சரித்தோம்! கவலைகள் பல மறந்தோம்! தெய்வீக நட்பெனக் கொண்டேன்! ஏமாந்தேன்! உன் புத்தி பின் புத்தி உணர்ந்து கொண்டேன்! அன்புக்கு பகரமாய்! பல தந்தேன்! முத்தமும் கூட முகம் சிவந்தாய்! இதழ் கூட்டி நீயும் தந்தாய்! பைத்தியமானேன்! தற்காலிகம் என உணராதவனாய்! தொடர்பாடல் ... |
| Posted: 15 May 2014 12:20 AM PDT பெயர்: மாய கண்ணன் சொந்த ஊர்:மதராசபட்டினம் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணைய உலாவல் மூலம் பொழுதுபோக்கு:வலைபூ வாசிப்பு தொழில்:படித்து கொண்டிருக்கிறேன் மேலும் என்னைப் பற்றி: நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றிருப்பவன்,தமிழ் விரும்பி,மேலும் சொல்வதற்கில்லை. |
| அலைகிறான் கருடன்...!! { ஹைக்கூ }. Posted: 14 May 2014 11:49 PM PDT * எவற்றோடும் எவரிடமும் தொடர்பு கொள்கிறேன் டெலிபதியில் நினைத்த போது….! * அங்கு வாழ்கின்ற பல்லி வௌவால்களுக்குத் தெரியம்? கோயிலின் நூற்றாண்டு ரகசியம். * அடியும் முடியும் இன்னும் காணாமல் தேடித் தேடி அலைகிறான் கருடன். * தேவர்களுக்கு மனக் கலக்கம் என்ன நிகழுமோ வென்ற பயம்? நாரதன் வருகை அறியும் போதே….!. * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


]சாய்ந்த மரம்[/url]