ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்
- புற்று நோய்க்கு 10 பேர் பலியான பகுதியில் மேலும் ஒருவர் திடீர் மரணம் - சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வு
- அய்யனார் வேண்டுதல் - சிறுகதை
- மாட்டின் கொம்பை பிடித்துப் போராடுவதை விடுத்து ஆதிக்கத்தை எதிர்த்து போராடுங்கள்
- ராஜபாளையத்தில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை
- வயலில் மறைந்திருந்த புதையல்
- உலகச் செய்திகள்!
- மது குடிப்பதால் 10 வினாடிகளுக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்
- இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை
- தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்
- இங்கிலாந்து உள்ளாட்சி தேர்தலில் தமிழர் போட்டி
- பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
- தொடர்ந்து அழுததால் பிறந்து 5 நாட்களான குழந்தையின் வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
- திரு ரமணீயன் ஐயா அவர்கள் இன்று முதல் ஈகரை நிர்வாகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்!
- இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை
- பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி அறிமுகப்படுத்திய நாள்: மே 14- 1796
- பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: மே 14- 1811
- காயம்படாத விளையாட்டை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்! - ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டும் தமிழறிஞர்
- மோடி அரசில் அங்கம் வகிக்குமா அதிமுக?
- மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
- மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம்
- முதுமையில் கை, கால் நடுங்குவது ஆபத்தா?
- இயற்கை வைத்தியக் குறிப்புகள்
- புற்றுநோய்: பயம் வேண்டாம்!
- EEGARAI FLASH NEWS
- XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்
- எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
- சிநேகம்-ஹைக்கூ
- சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
- கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
- மரங்களை காத்திடுவோம்
- தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
- அறுசுவை அரசு நடராஜன் புத்தகம் கிடைக்குமா ?
- சீத்தலை சாத்தனார்
- இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014
- குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...
- இளையராஜாவுக்கு ஈ மெயில்...!! { கவிதை }.
- 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
- காலில் "வடு' வந்த கதை!
- நிறங்கள்
| சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள் Posted: 13 May 2014 02:59 PM PDT மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும். தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். ... |
| Posted: 13 May 2014 02:54 PM PDT சேலம் : சேலத்தில் ஒரே பகுதியில் புற்று நோய்க்கு 10 பேர் இறந்த பகுதியில் சிறப்பு மருத்துவக்குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாநகராட்சி 50வது கோட்டத்தில் உள்ளது எஸ்.கே.கார்டன் பகுதி. இங்குள்ள புத்தூர் இட்டேரி ரோடு, கொடம்பக்காடு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் லட்சுமிஅம்மாள், லட்சுமி, அண்ணாமலைகவுண்டர், ஏழுமலை என்று 10க்கும் மேற்பட்டோர் புற்றுநோய்க்கு ... |
| Posted: 13 May 2014 02:49 PM PDT கிட்டத்தட்ட நாற்பது வருசமிருக்கும். அய்யனாரைப் பார்த்து… அம்மா, அப்பாவின் விடாப்பிடியான வற்புறுத்தலால் இந்தத் தடவை எப்படியும் அவரைப் பார்த்துவிடுவதென்று கிளம்பினேன். கானல் நீர் காட்டும் கரிசல் மண். கண்ணுக்கெட்டியது வரை சீமைக்கருவேல மரங்கள். பாதித் தோலுரித்த சாரைப்பாம்பு போல சிதிலமடைந்து கிடக்கும் சாலை. அதிலிருந்து பிரிந்து செல்லும் மாட்டு வண்டிப்பாதையின் முடிவில் தென்படும் சிறிய குளம். அதன் கரையில் பேய் பிடித்து தலைவிரித்தாடும் பெண்போல கிளைபரப்பிய ஆலமரங்கள்! தரையிலிருந்து நாலஞ்சடி ... |
| மாட்டின் கொம்பை பிடித்துப் போராடுவதை விடுத்து ஆதிக்கத்தை எதிர்த்து போராடுங்கள் Posted: 13 May 2014 02:47 PM PDT தமிழ்நாட்டு ஊடகங்களில் கடந்த இரு தினங்களாக ஜல்லிக்கட்டுக்குத் தடை என்ற செய்தி வந்துள்ளது. மிருகவதைத் தடுப்பு என்ற நோக்கில் இந்த தடை வந்திருக்கிறது. உணவுக்காக மாடுகளை வளர்க்கும் தொழிலை அங்கீகரித்திருந்த புத்தமத அசோகர் ஆண்ட நாடு இது. மிருகங்களை வதைக்கக்கூடாது என்ற போர்வையில் ஆடு, மாடு, கோழிகளை உண்ணக்கூடாது என்ற விஷம பிரச்சாரம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகிறது. அதேசமயம், உச்சநீதிமன்றம் இதுபோன்ற ஒருமுரட்டுத்தனமான – அறிவுக்கு வேலையற்ற ஒரு விளையாட்டைத் தடைசெய்ததை, தமிழர்கள் ... |
| ராஜபாளையத்தில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை Posted: 13 May 2014 02:43 PM PDT ராஜபாளையத்தில் அதிமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் பட்டப்பகலில், நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். ராஜபாளையம் நகர சபையில் 17–வது வார்டு அதிமுக கவுன்சிலராகவும், அதிமுக நகர இளைஞர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ராகுல் என்ற மகனும், அட்சயா என்ற மகளும் உள்ளனர். மீனாட்சிசுந்தரத்தின் அலுவலகம் பஞ்சு மார்க்கெட் அருகே உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் ... |
| Posted: 13 May 2014 02:42 PM PDT ஒரு ஊரில் வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 5 மகன்கள் இருந்தனர். இவர்கள் ஐவரும் சோம்பேறிகளாக இருந்ததை கண்டு கவலையடைந்த அவர் எப்படியாவது அவர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவத்தை உணரவைக்கவேண்டுமென முடிவு செய்தார். இந்த முயற்சியில் பலமுறை ஈடுபட்ட போதும் அந்த முதியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலபோக்கில் ஐந்து சகோதரர்களும் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டையிட்டும் கொண்டனர். இது அந்த முதியவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த, அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு ... |
| Posted: 13 May 2014 02:39 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| மது குடிப்பதால் 10 வினாடிகளுக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் Posted: 13 May 2014 02:37 PM PDT உலகெங்கும் அதிக அளவில் மது குடிப்பதால் 10 வினாடிகளுக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மதுபழக்கம் தொடர்பான உலக சுகாதார மையத்தின் இந்த புதிய அறிக்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிக அளவில் மது குடிதத்தால் 3.3 மில்லியன் மக்கள் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக மது அருந்துவதால், மது பழக்கத்திற்கு அடிமையாவதுடன் காசநோய், நிமோனியா போன்ற நோய்கள் பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் நிகழும் 20 மரணங்களில் ... |
| இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை Posted: 13 May 2014 02:35 PM PDT அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில், இணையப் பயன்பாட்டினைக் கண்காணித்து அவ்வப்போது தேவையான ... |
| தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் Posted: 13 May 2014 02:30 PM PDT தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கன்னடர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது:- கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு ... |
| இங்கிலாந்து உள்ளாட்சி தேர்தலில் தமிழர் போட்டி Posted: 13 May 2014 02:26 PM PDT லண்டன் : பிரிட்டனின் ஈஸ்ட்ஹாம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில், துரைமுருகன் கண்ணன் எனும் தமிழர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ளாட்சி தேர்தல், வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. மே முதல் வாரத்தில் நடைபெறுவதாக இந்த தேர்தல், வரும் 22ம் தேதி, ஐரோப்பிய பார்லிமென்ட் தேர்தலோடு சேர்த்து நடைபெற உள்ளது. லண்டன் பகுதியில் அமைந்துள்ள 32 தன்னாட்சி பெற்ற நகரங்கள், மொத்தமுள்ள 36 மெட்ரோபாலிடன் தன்னாட்சி பெற்ற நகரங்கள், 74 இரண்டாம் தர மாவட்ட நிர்வாகங்கள், 20 யூனிட்டரி நிர்வாகங்கள் மற்றும் ... |
| பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Posted: 13 May 2014 02:25 PM PDT பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ... |
| தொடர்ந்து அழுததால் பிறந்து 5 நாட்களான குழந்தையின் வாயில் டேப் ஒட்டிய நர்ஸ் Posted: 13 May 2014 02:23 PM PDT பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள செபு நகரில் உள்ள மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் குழந்தையின் வாயில் அங்குள்ள செவிலியர்கள் டேப் ஒட்டியதாக தந்தை புகார் கூறி உள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரேயன் நாவல் எனபவர் தனது பேஸ் புக் பதிவில் அவரது பிறந்து 5 நாட்களான தனது குழந்தையின் மேல் உதட்டில் இருந்து கன்னம் வரை ஒரு டேப் ஒட்டப்பட்ட படத்தை வெளியிட்டு உள்ளார்.மற்றொரு படத்தில் அந்த டேப் கன்னத்தில் உள்ளது. மேலும் தனது மனைவி அங்குள்ள செவிலியர்களிடம் குழந்தையின் ... |
| திரு ரமணீயன் ஐயா அவர்கள் இன்று முதல் ஈகரை நிர்வாகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்! Posted: 13 May 2014 02:22 PM PDT ஈகரை தமிழ் களஞ்சியத்தின் தூணாக விளங்கும் திரு ரமணீயன் ஐயா அவர்களை ஈகரை நிர்வாகக் குழுவில் ஒருவராக நியமிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்! உங்களின் ஆசீர்வாதத்தால் இத்தளம் மேலும் பல சிறப்புக்களைப் பெறட்டும் ஐயா! |
| இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை Posted: 13 May 2014 02:21 PM PDT ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் கடந்த வியாழக்கிழமை ரீனி யெங் என்ற பெண்ணுக்கு பிரசவ வலி காரணமாக சிட்னி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பிறந்த குழந்தையை பார்த்தவுடன் மருத்துவர்களும், நர்ஸ்களும் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு தலையுடனும் ஒரே உடலையும் கொண்டுள்ள அந்த பெண் குழந்தைஆரோக்கியமாக இருப்பதாகவும், இரண்டு தலையிலும் இரண்டு மூளைகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த குழந்தை இரட்டைக்குழந்தையாக உருவாகி பின்னர் டிப்ரோசோபுஸ் (diprosopus) என்ற நோயினால் ... |
| பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி அறிமுகப்படுத்திய நாள்: மே 14- 1796 Posted: 13 May 2014 02:18 PM PDT பெரியம்மை (Smallpox) மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத்தன்மை கொண்ட நோயாகும். இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர். V. minor கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20-ம் ... |
| பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: மே 14- 1811 Posted: 13 May 2014 02:17 PM PDT பராகுவே ஸ்பெயினிடம் இருந்து 1811-ம் அண்டு மே மாதம் 14-ந்தேி விடுதலை பெற்றது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1811 - பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. * 1861 - ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது. * 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர். * 1900 - கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின. * 1931 - சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் ... |
| காயம்படாத விளையாட்டை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்! - ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டும் தமிழறிஞர் Posted: 13 May 2014 02:14 PM PDT [noguest] தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துத் தீர்ப்பளித்து இருப்பதால், அதிர்ந்துபோய் இருக்கிறது தமிழகம். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் தமிழக கிராமத்தினர் இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு, கடந்த சில வருடங்களாகவே புளு கிராஸ் அமைப்பின் மூலமாகச் சோதனை வந்தது. ஜல்லிக்கட்டை தடைசெய்யக் கோரி அந்த அமைப்பினர் நீதிமன்றத்துக்குச் சென்றதால் சில கட்டுப்பாடுகளுடன் இதை நடத்திக்கொள்ள ... |
| மோடி அரசில் அங்கம் வகிக்குமா அதிமுக? Posted: 13 May 2014 02:10 PM PDT நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என பல்வேறு ஊடகங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றபோதிலும், அது உண்மையாகும்பட்சத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி அதிமுக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசு என்பது சாத்தியமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தொடங்கியபோது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 'நாளை நமதே...நாற்பதும் நமதே...!' ... |
| மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Posted: 13 May 2014 02:08 PM PDT கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ... |
| மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Posted: 13 May 2014 02:06 PM PDT பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலக ஊழியர்கள் எழுந்து நின்றபடி பிரியாவிடை கொடுத்தனர். நெகிழ்ச்சியான இந்த நிகழ்வின்போது, சிலரது விழிகளில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன. மே 17-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விடைபெறும் மன்மோகன் சிங்குக்கு இன்று பிரதமர் அலுவலக ஊழியர்கள் சுமார் 110 பேர், செளத் ப்ளாக்கில் பிரியாவிடை கொடுத்தனர். பிரதமர் பதவியை 10 ஆண்டு காலமாக வகிக்கும் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலகம் பிரியாவிடை வழங்கிய நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. பிரதமருக்கு ... |
| முதுமையில் கை, கால் நடுங்குவது ஆபத்தா? Posted: 13 May 2014 02:03 PM PDT முதுமையில் ஏற்படும் நோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகளைச் சொல்கிறார் முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன். வயதானவர்களுக்கு பொதுவாக மூன்று விதமான தொல்லைகள் ஏற்படும். முதுமையின் விளைவாக உண்டாகும் கண் புரை, காது கேளாமை, கைகளில் நடுக்கம், தோல் நிறம் மாறுதல், மலச்சிக்கல் போன்றவை. அடுத்ததாக, நடுத்தர வயதில் ஆரம்பித்த உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதயத் தாக்குதல் போன்றவை முதுமையில் தொடர்கின்றன. இதுதவிர உதறுவாதம் என்ற 'பார்கின்சன்ஸ்' நோய், மறதி, சிறுநீர் கசிவு, அடிக்கடி கீழே விழுதல், எலும்பு ... |
| Posted: 13 May 2014 02:01 PM PDT படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும். |
| Posted: 13 May 2014 01:58 PM PDT இந்தியா முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நோயின் காரணமாக நிகழும் இறப்புகளும் ஏராளம். நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும், அறியாமையுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம். பொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர்பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. பெரும்பாலும் பரம்பரையாக வருகிற புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணப்படுத்த ... |
| Posted: 13 May 2014 01:16 PM PDT சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி |
| XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள் Posted: 13 May 2014 01:15 PM PDT இரண்டு மூன்றுநாட்களாக இங்கு வரவில்லை அதற்கு உடல் நிலை ஒரு காரணமாக இருந்தது இருந்தாலும் கணினியை கைவிடவில்லை கணனியையில் புது மெபொருட்களை ஆராய்ந்த போது ஒருபுதிய மென்பொருள் கிடைத்தது; 'அதுஎன்மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இரவுபகலாக அதை ஆராய்ந்தேன் அதன்பயனாக தெரிந்தவற்றை இங்கே எழுதுகிறேன் அந்த மென்பொருள் XBMC இதை முன்கூட்டியே தெரிந்தவர்கள் இங்கு இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளலாம் இது ஒரு multimedia player போன்றது 'இலவசம் ஆனால் மிக பிரமிக்க வைத்தது. அற்புதம்!!! எமக்கு ... |
| எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி Posted: 13 May 2014 11:55 AM PDT அன்பர்கள் அனைவருக்கும் எனது நண்பகல் வணக்கங்கள் ! எனது பெயர் எஸ்.எஸ்.கந்தசாமி நான் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாநகரில் இருக்கும் காமராஜ் கல்லூரியில் இயற்பியல் துறையில் 33 ஆண்டுகள் பணி புரிந்து விட்டு 2001 ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு கணினியோடு இணைந்து வாழ்வு நடாத்துகிறேன் . எனது பொழுது போக்கு தமிழ்த் திரைப் படங்கள் தான் ! நமது குழாயில் '' KANDASAMY SEKKARAKUDI SUBBIAH PILLAI '' என்ற சேனலில் சுமார் 1500 பழைய தமிழ் திரைப் பட வீடியோப் பாடல்களைத் தரவேற்றி இருக்கிறேன் ... |
| Posted: 13 May 2014 10:58 AM PDT தடுத்து விட்டது வெள்ளை சட்டை குழந்தையின் சிநேகம். உயிர்த்தெழுந்தார் தேர்தல் தினத்தில் இறந்து போன தாத்தா. இடம் பொருள் ஏவல் நானும் பிற்பட்டவன்தான் பீகாரில் மோடி. சொல் பார்க்கலாம் இணையில்லா கவிதை அம்மா. |
| சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் Posted: 13 May 2014 10:40 AM PDT மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை ஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான். ஆனாலும் ... |
| Posted: 13 May 2014 10:09 AM PDT 100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள் கேழ்வரகில் 'மித்தியானைன்' என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த 'மித்தியானைன்' புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது. பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ ... |
| Posted: 13 May 2014 09:53 AM PDT [b]மரங்களை காத்திடுவோம் [/b] மனித இனம் மட்டுமே, மரங்களை வெட்டி, காகிதங்கள் தயாரித்து, இங்கிதமாய் எழுதிடுவோமதில் , மரங்களை காத்திடுவோம் என்று ! ரமணியன் |
| தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை ! Posted: 13 May 2014 08:45 AM PDT கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது:- கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது. தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய்மொழியை உயிரைவிட உயர்வாக நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை ... |
| அறுசுவை அரசு நடராஜன் புத்தகம் கிடைக்குமா ? Posted: 13 May 2014 08:44 AM PDT இந்த புத்தகத்தின் PDF கிடைக்குமா நண்பர்களே ! |
| Posted: 13 May 2014 08:32 AM PDT சீத்தலை சாத்தனார் . தமிழ்மீது ஆர்வம் மிகக்கொண்டு , தமிழை தவறாக மற்றவர்கள் உச்சரிக்கும் போதோ , எழுதும் போதோ , தன் தலையில் எழுத்தாணி கொண்டு குத்திக் கொள்வாராம் . அதனால் தலை முழுதும் சீழ் பிடித்து அவர் பெயரே சீத்தலை சாத்தனார் ஆகிவிட்டது. (அந்த காலத்திலும் தமிழை கொலை செய்தவர்கள் இருந்து இருக்கின்றனர் ). என் வேண்டுகோள் என்ன என்றால் , ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு , தமிழுக்கு துரோகம் செய்யலாமா? ஓரிரு நிமிடங்கள் செலவு செய்து தவறில்லா தமிழை எழுதமுடியுமே. சமிப காலத்தில் ... |
| இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 13-05-2014 Posted: 13 May 2014 08:00 AM PDT இன்று ஸ்ரீ நரஸிம்ஹ ஜெயந்தி. ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நரஸிம்ஹ அவதாரம் நாம் அறிந்ததே!. ஹிரண்ய கசிபு தனது மரணம் பற்றி பிரம்மாவிடம் கேட்ட வரத்தில், மனிதர்களாலும், தேவர்களாலும், மிருகங்களாலும்,பகலிலும், இரவிலும், விதானம் அமைந்த இல்லம் போன்ற அமைப்பின் உள்ளேயோ அல்லது வானம் பார்த்த பூமியிலோ,போர்ப் படைக்கலன்களாலோ மரணம் சம்பவிக்கக் கூடாது என்று கேட்கிறான். பிரம்மாவும் அவ்வாறான வரத்தை அளிக்கிறார். இதன் காரணமாகவே நரஸிம்ஹ அவதாரத்தில் மஹாவிஷ்ணு மனித ரூபமோ, தேவ ரூபமோ இன்றி கழுத்துக்கு ... |
| குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Posted: 13 May 2014 07:54 AM PDT நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... நாட்டுல நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... மோடி வரப்போறாராம் - பலர் அவர் மோதி விழப்போறாராம் விழப்போறாராம் முஸ்லிம் கிறித்தவங்களுக்கும் முழுபாதுகாப்பு தருவாராம் தருவாராம் மோடி சாரே மோடி சாரே எலங்கை மேட்டரையும் ஏழ மீனவர் மேட்டரையும் ஈசியா முடிக்கப்போறாராம் எல்லா ஊருக்கும் நல்லா கரண்ட்டு தரப்போறாராம் தரப்போறாராம் விருதுநகர்ல விஸ்வரூபம் எடுக்கப்போறவருக்கு ராணுவத்த கையில கொடுக்கப் போறாராம்-அவரு ராஜபக்சே வாயில ... |
| இளையராஜாவுக்கு ஈ மெயில்...!! { கவிதை }. Posted: 13 May 2014 06:28 AM PDT *. எங்கோ மின்னுகிறது? மழையில்லை இங்கே… * இளையராஜாவைப் பாராட்டி ஈ மெயில் அனுப்பியது குயில". * ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தையின் உதடெல்லாம் வெண்மை. * குடிநீர் விற்பனையில் உலக சாதனை. * பாதையில் போனவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள் சவ ஊர்வலம். |
| 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Posted: 13 May 2014 05:50 AM PDT அருவி கவிதை இலக்கிய காலாண்டிதழ் - ஆசிரியர் - காவனூர். ந. சீனிவாசன் நன்றி – அருவி இதழின் ஆசிரியருக்கும் கவிஞர்களுக்கும் அருவியின் இதழ் எண் 20 – ஹைக்கூ சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஹைக்கூக்களில் எனக்குப் பிடித்த மிகச் சிறந்த 100 ஹைக்கூக்களை மட்டும் இப்பகுதியில் தொகுத்திருக்கிறேன். இந்த ஹைக்கூக்களைப் படித்தால் நீங்களும் நிச்சயம் சிறந்த தமிழ் ஹைக்கூ கவிஞராகலாம் என்பது என் திடமான நம்பிக்கை. நீங்களும் மரபு, புது கவிதைகளையும் ஹைக்கூக் கவிதைகளையும் அருவி – க்கு அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சலில் ... |
| Posted: 13 May 2014 03:48 AM PDT சோழப் பேரரசு பல சிற்றரசுகளைக் கொண்டது. சிற்றரசர்கள் சோழனுக்குக் கப்பம் கட்டி அமைதியோடு வாழ்ந்து வந்தனர். சோழன் குறித்த நாளில் கப்பம் செலுத்தி அவன் திருவடியில் முடி தாழ்த்தி வணங்கினர். நேற்றும் இதுபோல் பல சிற்றரசர்கள் வந்தனர். இன்றும் பல மன்னர்கள் வணங்கித் திரை செலுத்தினர். சிற்றரசர்களின் முடிகள் உராய்ந்த காரணத்தால், மன்னர் மன்னனின் திருவடி புண்ணாகிவிட்டது. அப்புண் இன்னும் ஆறவில்லை. எனவே, சிற்றரசர்கள் பொறுமையாக வரிசையில் வந்து வணங்குங்கள் என்று அமைச்சர் கூறுவதாக புலவர் ஒருவர் பாடியுள்ளார். "நின்றீமின் ... |
| Posted: 13 May 2014 03:34 AM PDT கறுப்பு துக்கம், துயர அடையாளமுமல்ல வெள்ளை சுத்தம், சுக அடையாளமுமல்ல நிறங்கள் பார்வைக்கு அழகாக இருக்கட்டும் நிறங்களுக்கு பொருள் கற்பிக்க வேண்டாம் தன்னம்பிக்கை தான் எம் வலிகளைப் போக்கிட நல்ல மருந்து என்பேன்! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |