Tamil Star |
- முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்: ராஜபக்சே தொடர்பு!
- இப்படியொரு Love Scene-ஐ பார்த்திருக்கவே மாட்டீங்க!
- நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கால்கள்……
- 60ல் என் கணவரை காதலிக்கிறேன்- அவர் அசடு அல்ல!…..
- ஆள விட்டா போதும்டா சாமி பதவி விலகினார் ரஷித் லத்தீப்: சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என பேட்டி!
- சாய்னா தோல்வி: முதல் சுற்றிலேயே வெளீயேறீனார்!
- குண்டு வெடித்து 20 பேர் பலி: பாகிஸ்தான் மார்க்கெட்டில் பரபரப்பு!
- அமைச்சர் டிலான் கருத்து: மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல் பாகங்கள் விற்பனை?
- ஜனாதிபதி தேர்தல்? 2015ம் ஆண்டு முற்பகுதியில் தொடக்கம்!
- எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை பசில் ராஜபக்சே: அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களைக் கண்டு!
- UPAC தேடுதல் வேட்டை: கனடாவின் மொன்றியல் பகுதியில் ஊழல் எதிர்ப்பு!
- 5 வயது சிறுவனுக்கு! 50 டாலர்.. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை அதிர வைத்த சம்பவம்!!
- ஸ்காபுறோ ஆசிரியை கைது: சந்திக்க மறுத்த மாணவனை துன்புறுத்தியதால் பரபரப்பு!!
- சாய்பாபா கோவிலில் பூஜையுடன் அஜீத் படம் துவக்கம்!
- சத்ருகன் சின்ஹா மகிழ்ச்சி.. 'சினிமாவில் இது சகஜம்!'ரஜினி – சோனாக்ஷி ஜோடி…
- ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டது: கனடாவின் ஐசிசி 20- 20 உலக கிண்ண ஒளிபரப்பு நிறுவனம்!
- சர்க்கரை, கொலஸ்ட்ராலை குணப்படுத்தும் வெந்தயம்!!
- உடலுக்கு உற்சாகம் தரும் அமுத பானம் இளநீர்!
- நோக்கியா லுமியா 930, லுமியா 635, லுமியா 630 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!
- புதிய தகவல் – ஒரு வலைதளம் கூட 100 சதவிகிதம் பாதுகாப்பானது அல்ல!!
| முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்: ராஜபக்சே தொடர்பு! Posted: 09 Apr 2014 11:31 PM PDT
விஜய் படத்தைத் தயாரிக்கும் லைக்காமொபைல் நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் புதிய படமான கத்தி, படப்பிடிப்பிலிருக்கும் போதே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக ஐங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தியும், லைக்காமொபைல் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ் கரண் அல்லிராஜாவும் தயாரிக்கின்றனர். ஐங்கரன் கருணா ஏற்கெனவே விஜய்யை வைத்து வில்லு படம் எடுத்து தோற்றவர். இவருடன் இணைந்து இப்போது விஜய் படத்தைத் தயாரிக்கும் சுபாஷ்கரண் அல்லிராஜா, ராஜபக்சேவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஈழத் தமிழர்கள் அத்தனைப் பேரும் அறிந்த உண்மை இது. குறிப்பாக லண்டன், நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு லைக்காமொபைல் நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்கும் உள்ள தொடர்புகள் நன்கு தெரியும். (லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு?- கேமரூனின் அடுத்த அதிரடி) ராஜபக்சேவின் பேராதரவுடன்தான் லைக்காமொபைல் நிறுவனம், லண்டன் - கொழும்புவுக்கு லைக்கா ப்ளை விமான சேவையை நடத்திக் கொண்டுள்ளது. மேலும் ராஜபக்சேவின் மிக நெருங்கிய உறவினர் ஒருவர் லைக்கா மொபைல் நிறுவனத்தில் பெருமளவு பங்குதாரராக இருப்பதை மீடியாக்கள் அம்பலப்படுத்தியுள்ளன. லைக்கா ப்ளை நிறுவனம்தான் இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தெரிவு செய்யப்பட்ட கூட்டாளி நிறுவனமாகும். இந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்! அதுமட்டுமல்ல, கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்தின் டோரி கட்சிக்கு 420,000 பவுண்டுகளை நன்கொடையாக அளித்திருந்தது லைக்கா மொபைல் நிறுவனம். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ராஜபக்சேவுக்கும், இலங்கை அரசுக்கும் நெருக்கமான லைக்காமொபைல் நிறுவனத்திடமிருந்து எதற்காக இவ்வளவு பெரிய தொகையை இங்கிலாந்தின் ஆளும்கட்சி பெற வேண்டும்? என அந்நாட்டு எம்பி டாம் ப்ளெங்கின்ஸாப் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் டேவிட் கேமரூன், இந்த நன்கொடையை திருப்பித் தரப் போவதாக அறிவித்ததோடு, லைக்காமொபைலுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை விசாரிக்க குழு அமைக்கவும் உத்தரவிட்டது நினைவிருக்கலாம். அதுமட்டுமல்ல, இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு முதன்மை ஸ்பான்சராக இருந்தது இந்த லைக்காமொபைல் நிறுவனம்தான். இந்த நிறுவனத்துக்கு 'கோல்ட் ஸ்பான்சர்' எனும் பெரிய அந்தஸ்தை இலங்கை அரசு கொடுத்திருந்தது. ராஜபக்சேவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் இலங்கையில், அவரது அனுசரணை இல்லாமல் ஒரு தமிழரால் இத்தனை செல்வாக்குடன் இயங்க முடியுமா? சர்வதேச அளவில் மிக சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் பிரதமரே லைக்காமொபைல் - ராஜபக்சே நிதித் தொடர்புகள் என்ன? என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பிய பிறகும், ராஜபக்சேவுக்கும் லைக்காவுக்கும் சம்பந்தமே இல்லை என சென்னையில் ஒருவர் பிரஸ் மீட் வைத்து சொல்கிறார். அப்படியென்றால் தமிழ்ப் பத்திரிகைகள் அந்த அளவு விவரம் தெரியாதவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி என்பதற்கு நேற்று ஒரு லைவ் டெமோ காட்டியிருக்கிறார்கள் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!! This posting includes an audio/video/photo media file: Download Now |
| இப்படியொரு Love Scene-ஐ பார்த்திருக்கவே மாட்டீங்க! Posted: 09 Apr 2014 10:19 PM PDT |
| நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கால்கள்…… Posted: 09 Apr 2014 10:13 PM PDT |
| 60ல் என் கணவரை காதலிக்கிறேன்- அவர் அசடு அல்ல!….. Posted: 09 Apr 2014 10:03 PM PDT |
| ஆள விட்டா போதும்டா சாமி பதவி விலகினார் ரஷித் லத்தீப்: சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என பேட்டி! Posted: 09 Apr 2014 09:52 PM PDT
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவராக பதவியேற்ற ஒன்பதே நாளில் விலகுவதாக அறிவித்துள்ளார் ரஷித் லத்தீப். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக கடந்த 1ம் தேதி முறைப்படி பதவியேற்றார் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப். ஒரு மாதத்துக்கு முன்பே, இவரை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தேர்வு செய்திருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தனது பதவியிலிருந்து விலகினார் லத்தீப். இது குறித்து அவர் இமெயில் மூலமாக கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதில், 'எனக்கும் கிரிக்கெட் போர்டுக்கும் இடையே எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனாலும், பதவியை ஏற்கலாமா என்ற யோசனையிலேயே இருந்தேன். தேவையில்லாமல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. அதனால், எனக்கு வழங்கப்பட்ட பதவியை ஏற்கவில்லை' என கூறியுள்ளார். லத்தீப்பின் இந்த முடிவு குறித்து அந்நாட்டு மீடியாக்கள் பல்வேறு தகவல்களை கூறுகின்றன. பாகிஸ்தான் அணி தேர்வில் சில மாற்றங்களை செய்ய வேண்டுமென லத்தீப் கூறி உள்ளார். குறிப்பாக, அனுபவ வீரர்களான முகமது யூசுப், வாஸ்தி, சபீர் அகமது ஆகியோரை மீண்டும் அணியில் தேர்வு செய்ய வேண்டுமென விரும்பியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை கிரிக்கெட் போர்டு நிராகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்று கருதியதால் தான் லத்தீப் பதவி விலகியதாகவும் கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாய்னா தோல்வி: முதல் சுற்றிலேயே வெளீயேறீனார்! Posted: 09 Apr 2014 09:13 PM PDT
சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் முதல் சுற்றிலேயே சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரில் சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 8ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பானின் எரிகோ ஹிரோசை எதிர்த்து விளையாடினார். தன்னைவிட குறைவான ரேங்கிங்கில் உள்ள ஜப்பான் வீராங்கனையை சாய்னா எளிதில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாய்னா 21-16, 15-21, 11-21 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான துளசி 21-13, 21-16 என்ற நேர் செட்களில் நியூசிலாந்தின் அன்னா ரென்கினை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 2வது சுற்றில் இவர் உலகின் 2ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹியன் வாங்கை சந்திக்கிறார். இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 21-15 என்ற செட்களில் மலேசியாவின் முகமது ஆரிப்பையும், பிரனோய் 21-17, 14-21, 21-11 என்ற செட்களில் தாய்லாந்தின் சிட்திகோமையும் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குண்டு வெடித்து 20 பேர் பலி: பாகிஸ்தான் மார்க்கெட்டில் பரபரப்பு! Posted: 09 Apr 2014 08:46 PM PDT
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் காய்கறி மார்க்கெட்டில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், மார்க்கெட்டுக்கு வந்திருந்த அப்பாவி மக்கள் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக் குழுவினரின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாகிஸ்தான் போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாகிதான் தலிபான் தீவிரவாத கும்பல் செய்த நாசவேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமைச்சர் டிலான் கருத்து: மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல் பாகங்கள் விற்பனை? Posted: 09 Apr 2014 08:40 PM PDT
மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஏதெனும் விபத்துக்கள் அல்லது வேறும் காரணிகளினால் மூளை இறக்கும் நபர்களின் உடல் பாகங்கள் இவ்வாறு கொள்ளையிடப்படுகின்றன. உடல் பாகங்கள்; விற்பனை செய்யப்படுவது குறித்த தகல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் அதனை இன்னமும் சரியாக உறுதி செய்துகொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் இது தொடர்பான சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். மத்திய கிழக்கில் உயிரிழப்போரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தால் உள்நாட்டிலும் உயிரிழந்த நாட்டிலும் பிரேதப் பரிசோதனை நடாத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். குவைத்தில் 106 இலங்கையர் தடுத்து வைப்பு குவைத்தில் வேலை வாய்ப்புக் காகச் சென்று அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 160 இலங்கையர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொலை, கொள்ளை, மது அருந்துதல், முறைகேடான தொடர்பு போன்ற காரணங்களூடாக குவைத் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் கேட்ட வாய்மொழி மூல விடைக்கான கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பல்வேறுபட்ட காரணங்களுக்காக தாங்கள் தொழில் புரியும் இடத்தில் இருந்து வெளியேறி குவைத்திலுள்ள ஊழியர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அவர்களது தொழில் தருநரின் பொலிஸ் முறைப்பாட்டை ரத்துச் செய்தல் கைரேகை பதிவு செய்தல். வெளியேறுவதற்கான தற்காலிக அனுமதி பத்திரத்தை பெறல் போன்ற நடவடிக்கைகள் முடியும்வரை அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். இவ்வாறு பல்வேறுபட்ட தவறுகளுக்காக தண்டனை அனுபவிக்கும் இலங்கையர் தொடர்பாக ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவிலுள்ள அதிகாரிகள் செயற்பட்டு வருகிறார்கள். இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காகவும், தற்காலிக இடங்களில் தங்கியிருப்பவர்களை அழைத்து வருவதற்குமாக தற்காலிக அனுமதி பத்திரம். விமான பயண சீட்டு என்பவற்றை பெற்றுக்கொடுக்க பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பணியகம் எவ்வித காலதாமதமுமின்றி இதனை செய்து வருகிறது. அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக வெகு விரைவில் இவர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அமைச்சர் டிலான் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதி தேர்தல்? 2015ம் ஆண்டு முற்பகுதியில் தொடக்கம்! Posted: 09 Apr 2014 08:32 PM PDT
ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்த அரசுத் தலைமைப் பீடம் தீர்மானித்துவிட்டது. அரசுடன் நெருங்கிய வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதியாகத் தெரிவித்தாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 28ம் திகதி நடைபெற்ற தென்மாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிக்கச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அச்சமயம் தம்மைச் சந்தித்த செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என்று கோடிகாட்டியிருந்தார். அதன்படி 2016 நவம்பரில்தான் புதிய ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆரம்பமாகும், அப்போதுதான் தேர்தல் நடைபெறும் என்று பலரும் ஜனாதிபதியின் கருத்துக்கு அர்த்தம் கொடுத்தனர். ஆனால், அதற்கு மாறாக 2015 முற்பகுதியிலேயே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அதில் வென்றுவிட்டு, தற்போதைய பதவிக் காலத்தை 2015 நவம்பர் வரை தொடர்வது என்றும், அதன் பின்னர் அடுத்த பதவிக் காலத்தை சத்தியப் பிரமாணம் செய்து ஆரம்பிப்பது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருக்கின்றார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. முற்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு அத்தேர்தலில் அச்சமயம் பதவியில் இருப்பவரே மீண்டும் வெற்றி பெறுவாராயின் அப்படிக் காலம் தாழ்த்தி பதவிப் பிரமாணம் செய்யச் சட்டத்தில் இடமுண்டு என்கின்றன சட்டத்துறை வட்டாரங்கள். 2010 ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றியீட்டிய போதிலும், அந்த வெற்றிக்கான பதவியை 2010 நவம்பரிலேயே அவர் ஏற்றிருந்தார். அதன்படி அவரது தற்போதைய பதவிக்காலம் 2016 நவம்பரிலேயே முடிவடைகிறது. தற்போதைய சட்ட ஏற்பாடுகளின்படி, 2014 நவம்பருக்குப் பின்னர் எச்சமயத்திலும், முற்கூட்டியே, புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கு அவர் அழைப்பு விடுக்கலாம். அப்படி முற்கூட்டியே தேர்தல் அழைப்பு விடுக்கப்பட்டு, அதிலும் அவரே வெற்றியீட்டுவாராயின் அதற்கு அடுத்து வரும் நவம்பர் மாதம் வரை அவர் தற்போதைய பதவிக் காலத்தைத் தொடர முடியும். அதாவது, 2014 நவம்பருக்குப் பின்னர், 2015 நவம்பருக்கு முன்னதாக, ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு அவர் அழைப்பு விடுத்து, அதில் வெற்றி பெறுவாராயின், 2015 நவம்பர் வரை தற்போதைய பதவியில் தொடர்ந்துவிட்டு, 2015 நவம்பரில் இருந்து புதிய பதவிக் காலத்தை அவர் ஆரம்பிக்க முடியும். அதுவே அவரது திட்டம் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். இப்படி, 2016 நவம்பரில் நடத்த வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை இரண்டு ஆண்டுகள் முன்னதாக, 2014 நவம்பருக்குப் பின்னான ஒரு திகதியில் நடத்தி, அதில் வெற்றியீட்டினால் தற்போதைய பதவிக் காலத்தில் ஓர் ஆண்டை மட்டுமே அவர் இழப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு, நேரத்துடன் தேர்தலை நடத்தி அவரது அடுத்த பதவிக் காலத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறதாம். அதற்கு மூன்று காரணங்கள் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன. முதலாவது - நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்கள், ஆளுந்தரப்பின் செல்வாக்குச் சரியத் தொடங்கியிருப்பதை முதல் தடவையாகக் கோடி காட்டியிருக்கின்றன. விடுதலைப் புலிகள் மீதான வெற்றி என்ற பிரசாரம் ஐந்து வருடங்களுக்குப் பின்னரும் எடுபடுமா என்பது தெரியவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, மின்சாரக் கதிரையில் தன்னை இருத்தி, மரண தண்டனை தருவதற்கான சூழ்ச்சி நடக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசுத் தலைமை முன்னெடுத்த போதிலும் கூட அது இந்தத் தேர்தலில் செல்லுபடியாகவில்லை. ஆகவே சரிந்துவரும் செல்வாக்கு முற்றாக வீழ்ச்சியடைய முன்னர் அடுத்த பதவிக் காலத்துக்கான வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கணிப்பு. இரண்டாவது - எதிரணிகள் தற்போது சிதறிக் கிடக்கின்றன. ஜனாதிபதித் தேர்தல் ஒன்று விரைந்து நடத்தப்படுமானால் அதற்கு முன்னர் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கக் கூடிய இணக்கத்தை எதிர்க்கட்சிகள் எட்டுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. அதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்காமலேயே அதிரடியாகத் தேர்தலை அறிவித்து நடத்துவது ஆளும் தரப்பின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்ற மதிப்பீடு. மூன்றாவது - சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராகக் கட்டவிழும் நடவடிக்கைகளின் விளைவு சம்பந்தமானது. இலங்கை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணை நடைபெறப் போவது திண்ணம். அது உள்நாட்டில் இல்லாவிட்டாலும் வெளிநாட்டிலாவது நடக்கும். அப்படி நடைபெறும் போது தென்னிலங்கையில் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழும் தேசிய உணர்வலைகளைத் தமக்குச் சாதகமாக மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம். அதையும் மிக எச்சரிக்கையுடன்தான் ஆளும் தரப்பு கையாள விரும்புகிறது என்று தெரிகிறது. சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று கட்டவிழும் போது தேசிய உணர்வலைகள் தென்னிலங்கையில் ஆளும் தரப்புக்கு ஆதரவாகப் பீறிட்டு எழுந்தாலும் அத்தகைய பொறிமுறையின் இறுதிக் கட்டத்தில் இலங்கைக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் என்ற விளைவு உருவாகுமானால் அதன் பெறுபேறு தென்னிலங்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூறுவது இயலாத காரியம். சர்வதேசம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தென்னிலங்கையில் அரசுக்குப் பாதகமான கருத்தலைகளை ஏற்படுத்த மாட்டா என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியாது. அத்தோடு, மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலைப் புதிதாக நடத்தி மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்டுவதன் மூலம், இலங்கைக்கும் தமக்கும் எதிரான நடவடிக்கை எடுக்க விளையும் சர்வதேசத்துக்கு இலங்கையும் மக்களும் தமக்குப் பின்னால்தான் ஒன்று திரண்டு நிற்கிறார்கள் என்ற செய்தியை மிகத் தெளிவாகக் காட்ட முடியும் என்று கருதுகிறாராம் ஜனாதிபதி ராஜபக்ச. அதாவது சர்வதேச விசாரணை நடந்தாலும் அதன் பெறுபேறுகளை, அல்லது அதன் அடிப்படையிலான தீர்மானங்களை, சர்வதேசம் எடுக்க முன்னர் ஜனநாயகத் தேர்தல் ஒன்றின் மூலம் அதற்கு ஒரு பதிலடி நடவடிக்கையாகக் காட்ட ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த நினைக்கிறாராம். இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நவம்பருக்குப் பின்னர் அறிவித்து, அடுத்த ஆண்டு முற்பகுதியில் அதனை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தயாராகி விட்டார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தந்தன. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை பசில் ராஜபக்சே: அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களைக் கண்டு! Posted: 09 Apr 2014 08:28 PM PDT
இலங்கையின் அபிவிருத்திகளுக்காக பௌத்த மதகுருமார் உட்பட அனைத்து மதகுருமாரின் ஆசிகளையும் ஆலோசனைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பார்ப்பதாக பொருளாதாரத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், சுதந்திரத்துக்கு பின்னர் தற்போது நாடு அதீத அபிவிருத்திகளை அடைந்து வருவதாக குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் அபிவிருத்திகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. எனினும் அந்த கட்சிகளில் உள்ள பலர் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கண்டு பொறாமைப்படுகின்றனர். இந்தநிலையில் அண்மையில் மாகாணசபைகளில் அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியும் அதன் அபிவிருத்திகளை மையமாகக் கொண்டே கிடைத்தது என்று பசில் ராஜபக்ச குறிப்பிட்டார். மக்கள் இந்த அபிவிருத்திகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமையால் தாம் ஆட்சிக்கு வரமுடியாதிருக்கும் என்பதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் அபிவிருத்திகளை குறைக்கூறுகின்றன என்று பசில் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| UPAC தேடுதல் வேட்டை: கனடாவின் மொன்றியல் பகுதியில் ஊழல் எதிர்ப்பு! Posted: 09 Apr 2014 08:10 PM PDT
கனடாவில் மொன்றியல் பிராந்தியத்தில் UPAC என அழைக்கப்படுகின்ற ஊழல் எதிர்ப்புப்பிரிவு என்ற ஒரு அமைப்பானது தற்போது பலரைத் தேடி வலைவிரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.புதன்கிழமை நடைபெற்ற தேடுதலில் சிலர் சிக்கியியருப்பதாகத் CBC தகவல் தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக 90ற்கு மேற்பட்ட அதிகாரிகள் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல உயர்அதிகாரிகளைக் கைது செய்வதற்கான அனுமதியுடன் ஈடுபட்டிருக்கின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னை நாள் நகர சபை அதிகாரியாக விழங்கிய Tony Accurso என்பவர் பல்வேறுபட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் அத்துடன் வரிப்பணத்திலிலுந்து பல மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்திருக்கின்றார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் எனக் கனடியன் பிறஸ் செய்தித் தாபனம் தெரிவித்திருக்கின்றது. விசாரணையாளர்கள் உட்பட அந்த மாகாணத்தின் ஊழலுக்கெதிரான UPAC ன் குழவினரும் இணைந்து ரொனியினது வீட்டினை பரிசோதனை செய்திருக்கின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னைநாள் மொன்றியல் நகர் நிர்வாகக் குழவில் அங்கம் வகித்திருந்த பல உயர் அதிகாரிகளினது வீடுகளுகம் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன எனத் தெரிவிக்கப்படிருக்கின்றது. குறிப்பாக எந்த இடத்தில் தேடுதல் நடைபெற்றது என்பதை தேடுதலில் ஈடுபட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லையெனவும் தெரியவருகிறது. ஆனால் ரொனிக்கு சொந்தமான நிறுவனங்களில் குறிப்பிட்ட விசாரணைக் குழவினரால் விசாரணைகள் நடாத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. ஏற்கனவே நடந்த வரிப் பணச் சதியில் ரொணிக்கும் சம்பந்தம் இருக்கின்றது குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஆனால் அந்தக் குற்றங்கள் நீதிமன்றத்தினால் நிருபிக்கப்படவில்லை. ஆனால் அதன்பின்பு அவர் தனது கட்டுமானப் பணிகள் நடைபெற்ற நிறுவனத்தினை 2012ம் ஆண்டில் கைவிட்டுவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொணி குறிப்பிட்ட சில குற்றச் சாட்டுக்களிற்காக 2012ம் ஆண்டில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தவிர முன்னைநாள் director general னது வீட்டிற்குப் புதன்கிழமை குறிப்பிட்ட விசாரணைக் குழவினர் சென்ற போது குறிப்பிட்ட அதிகாரி வீட்டில் இல்லையெனவும் அவர் விடுமுறைக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கிடைத்துள்;ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொலிசார் குறிப்பிட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் மிகவும் தந்திரமானவகையில் சிந்தித்து செயலாற்றியிருக்கின்றார்கள் எனத் தாங்கள் நம்புவதாகத் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால் தாம் பெற்றுக்கொண்ட விபரங்களின்படி தமது பணியைச் செய்கின்றோம் எனவும் சகலதும் சரியான வழியில்தான் சென்றுகொண்டிருக்கின்றது எனவும் போலிசார் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 5 வயது சிறுவனுக்கு! 50 டாலர்.. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை அதிர வைத்த சம்பவம்!! Posted: 09 Apr 2014 03:47 AM PDT
முன்னணி கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் "எக்ஸ்பாக்ஸ்' விளையாட்டுக் கணக்கை பிறர் பயன்படுத்துவதைத் தடுக்கும் பாதுகாப்பு வளையத்தை ஐந்து வயது சிறுவன் ஒருவன் சாமர்த்தியமாக உடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளான். அமெரிக்காவின் சான் டைகோ நகரைச் சேர்ந்த கிறிஸ்டோஃப் வான் ஹùஸல் என்ற அந்தச் சிறுவன், கணினியில் தனது தந்தைக்குத் தெரியாமல் அவரது "எக்ஸ்பாக்ஸ்' கணக்கைத் திறக்க முயன்றுள்ளான். ஆனால், அதற்கான கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) இல்லாததால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலையில் விசைப்பலகையில் "ஸ்பேஸ்' விசையை சிலமுறை தட்டிவிட்டு பிறகு "என்டர்' விசையைத் தட்டியுள்ளான். தன்னிச்சையாக நிகழ்ந்த இந்தச் செயலால், எக்ஸ்பாக்ஸ் விளையாட்டுக்குள் நுழைய முடிந்ததை சாதுரியமாகப் புரிந்துகொண்ட சிறுவன், அந்த உத்தியைப் பயன்படுத்தி பல நாள்கள் தொடர்ந்து அதில் விளையாடியிருக்கிறான். மகனின் "திருவிளையாடலை' ஒருநாள் கவனித்துவிட்ட அவனது தந்தை, இந்த விவகாரத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த மென்பொருளின் பாதுகாப்பு வளைய வடிவாக்கத்தில் நேர்ந்திருந்த தவறைத் திருத்திக்கொண்ட அந்நிறுவனம், அதற்கு உதவிய அந்தச் சிறுவனுக்கு 50 டாலர் (ரூ.3000) அன்பளிப்பையும், ஓராண்டு முழுவதும் எக்ஸ்பாக்ஸ் விளையாடுவதற்கான இலவசக் கணக்கையும் வழங்கி கெளரவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்காபுறோ ஆசிரியை கைது: சந்திக்க மறுத்த மாணவனை துன்புறுத்தியதால் பரபரப்பு!! Posted: 09 Apr 2014 03:38 AM PDT
சந்திக்க விரும்பாத முன்னாள் மாணவரை தொடர்ந்து துன்புருத்திய குற்றத்தின் கீழ் துர்ஹம் பகுதி பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியை ஜெனிபர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். ஸ்காபுறோவைச் சேர்ந்த 40 வயதாகும் ஜெனிபர் குர்கா, பிக்கரிங் பைன் ரிட்ஜ் இடைநிலைப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பில் துர்ஹம் மாவட்ட பாடசாலை அமைப்பிடம் விசாரித்த போது கடந்த இலையுதிர்க் காலத்திலிருந்தே ஜெனிபர் அங்கு பணியாற்றவில்லை என்கின்றனர். சந்திக்க விரும்பாத முன்னாள் ஆண் மாணவர் ஒருவரை வலுக்கட்டாயமாக பலமுறை துன்புறுத்தியதாக ஆசிர்யை மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இவரை பொலிசார் பிக்கரிங்கில் கைது செய்த போதும் காரை நிறுத்தி விட்டு ஆண் மாணவரின் வீட்டினை கண்காணித்துக் கொண்டிருந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் மாணவரின் வீட்டிற்கு வெளியே தன் காரை ஆசிரியை நிறுத்தியது பிரச்சினையை உச்சத்திற்குக் கொண்டு சென்றதாக துர்ஹாம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தேவ் செல்பி கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிரியை ஜெனிபர் குர்கா, மாணவரையோ அவர் குடும்பத்தினரையோ தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது என்ம்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஏப்ரல் 29 அன்று ஒஷவா நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாய்பாபா கோவிலில் பூஜையுடன் அஜீத் படம் துவக்கம்! Posted: 09 Apr 2014 02:59 AM PDT
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது. அஜீத் குமார் கௌதம் மேனன் இணையும் படம் ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பட வேலைகள் துவங்கப்பட்டது. இப்போதைக்கு 'தல 55' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் துவக்க விழா பற்றி பார்ப்போம். பூஜையில் கலந்து கொண்ட கௌதம் மேனன் மற்றும் படத் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் ஆகியோர் சாய்பாபாவிடம் ஆசி பெற்றனர். 'தல 55' படத்தில் இரண்டு நாயகிகள். ஒரு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நாயகியாக த்ரிஷா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சத்ருகன் சின்ஹா மகிழ்ச்சி.. 'சினிமாவில் இது சகஜம்!'ரஜினி – சோனாக்ஷி ஜோடி… Posted: 09 Apr 2014 02:50 AM PDT
இளம் நாயகிகளுடன் சீனியர் நடிகைகள் நடிப்பது ஒரு பெரிய விஷயமில்லை. சினிமாவில் இது சகஜம், என சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் பாலிவுட்டின் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா. கமலுக்கு நோ சொன்னவர் இது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. காரணம், இதற்கு முன்பு கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் சோனாக்ஷி சின்ஹாதான். ஆனால் கடைசி நேரத்தில் கால்ஷீட்டை காரணம் காட்டி விலகிக் கொண்டார். ரஜினிக்கு தாராள கால்ஷீட் இப்போது ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக அறிந்தவுடனே, தாராளமாகக் கால்ஷீட்டை வழங்கியிருப்பதுடன், ரஜினியுடன் நடிப்பதன் மூலம் தன் தென்னிந்திய திரையுலகப் பயணத்தைத் தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார். குழந்தையாக ஓடித் திரிந்தவர் ரஜினியின் நெருங்கிய நண்பர் சத்ருகன் சின்ஹாவின் மகள்தான் இந்த சோனாக்ஷி. ரஜினியும் சத்ருகனும் அஸ்லி நக்லியில் இணைந்து நடித்த போது சோனாக்ஷி ஒரு குழந்தையாக அந்த செட்டில் ஓடித் திரிந்தவர். இப்போது வளர்ந்து முன்னணி நடிகையாகி ரஜினிக்கே ஜோடியாக சோனாக்ஷி நடிப்பது குறித்து தந்தை சத்ருகன் என்ன சொல்கிறார்? இதெல்லாம் சகஜமப்பா.. சோனாக்ஷிக்கு ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மிக விருப்பம். யாருக்குதான் அந்த விருப்பம் இருக்காது. இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் அவர். பல கோடி ரசிகர்கள். ரஜினி சார் தன்னைவிட மிக இளவயது நடிகைகளுடன் நடிப்பது ஒன்றும் புதிதில்லையே.. கரீனா நடிக்கலையா... மும்பை திரைத் துறையில் மூத்த நடிகர்களுடன் இளம் நடிகைகள் நடிப்பது சர்வசாதாரணம். கரிஷ்மா கபூரும் அக்ஷயும் நடித்துக் கொண்டிருந்த செட்டில் குழந்தையாக ஓடித் திரிந்த கரீனா கபூர், பின்னர் அக்ஷய்க்கு ஜோடியாக நடிக்கவில்லையா? சீனியரான அமிதாப்புக்கு ஜோடியாக 16 வயதே நிரம்பிய ஜியா கான் நடிக்கவில்லையா? கதையில் மாறுதல்கள் தன்னை விட வயதில் இரு மடங்கு மூத்த சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கனுடன் இதற்கு முன்பு நடித்தவர்தான் சோனாக்ஷி. சோனாக்ஷிக்கு இப்போது 27 வயதாகிறது. ரஜினி படத்தில் அவர் பாத்திரத்துக்கேற்ப கதையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார். பெருமைதான் மேலும் ரஜினியுடன் தன் மகள் நடிப்பது தனக்குப் பெருமையான விஷயமே என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன் ரஜினியுடன் சிறு குழந்தையாக நடித்த மீனா, பின்னர் அவருக்கு ஜோடியாக எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் நடித்தது நினைவிருக்கலாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டது: கனடாவின் ஐசிசி 20- 20 உலக கிண்ண ஒளிபரப்பு நிறுவனம்! Posted: 09 Apr 2014 01:10 AM PDT
2014 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கான விருது வழங்கும் நிகழ்வை ஒளிபரப்ப முடியாமைக்காகவே அந்த நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பை கோரியுள்ளது. இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்றதன் பின்னர் குறித்த நிறுவனம் தமது ஒளிபரப்பை நிறுத்தியது. அத்துடன் வேறு ஒரு நிகழ்ச்சி அந்த வேளையில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பில் ரசிகர்களிடம் இருந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து கருத்துரைத்த கனடாவின் ஸ்போட்ஸ்நெட் நிறுவன பேச்சாளர் செபஸ்டியன் காட்டியா, இந்த தவறு குறித்து தாம் ரசிகர்களிடம் மன்னிப்பை கோருவதாக தெரிவித்துள்ளார். எனினும் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை அவர் தெளிவாக்கவில்லை. ஐசிசி 20 - 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போட்ஸ் நிறுவனம் பொறுப்பேற்று நடத்தியது. இதனை 29 ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்தன. 1.8 பில்லியன் ரசிகர்கள் இந்த ஒளிபரப்பை கண்டுகளித்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்க்கரை, கொலஸ்ட்ராலை குணப்படுத்தும் வெந்தயம்!! Posted: 09 Apr 2014 12:56 AM PDT
ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம். வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும். இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும். வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம். சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடலுக்கு உற்சாகம் தரும் அமுத பானம் இளநீர்! Posted: 09 Apr 2014 12:38 AM PDT
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் எனப்பாடினார் திருமூலர். வாழ்க்கை வாழ்வதற்கு உண்ண உணவும், உடுத்த உடையும், வாழ இருப்பிடமும் அவசியம். இதில் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இருக்கவேண்டும்.நேரத்திற்கு ஏற்றவாறு உண்பது அவசியம். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடிகிறதா? என்றால் கேள்விக்குறிதான். பெருநகரங்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலை நேரங்களில் உணவை அவசர அவசரமாகவும், வெந்தும் வேகாமலும், சுவையோ அல்லது சுகாதாரத்தைப்பற்றியோ யோசிக்காமல் அரைகுறை வயிற்றுடன் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் அல்லது பள்ளிக்கு செல்வோரை நாம் காண்கிறோம். அதேபோல் மதிய நேரத்திலோ அல்லது இரவிலோ சரியான நேரத்திற்கு போதிய அளவு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. காரணம் அவர்கள் உணவுக்கு பதிலாக அடிக்கடி டீ, காபி, நொறுக்கு தீனி, பாஸ்ட்புட் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. இது நாளடைவில் பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது. இதன் விளைவு வயிற்றுப்புண் ஏற்பட்டு அல்சரில் கொண்டு சேர்க்கிறது. அல்சர் நமது உடலில் உள்ள சிறுகுடலில் ஏற்படும் பாதிப்பு. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்டநேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான திண்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது. அல்சர் இருந்தால் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைகள் ஏற்படும். வயிற்று புண் இருப்பவர்கள் சாக்லெட், குளிர்பானங்கள், மது, பெப்பர்மிட், காபி, கருப்பு தேனீர், ஆரஞ்சு, திராட்சை, பூண்டு, மிளகாய், பால் உணவுகள், காரம், வெங்காயம், தக்காளி விழுது, தக்காளி பொருட்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக கோதுமை, கோழி, மீன், பீன்ஸ், முட்டை, தயிர், அத்திப்பழம் உள்ளிட்டவற்றை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக சேர்த்து சாப்பிடலாம். அதேபோல் புளிப்பான பழங்கள் மற்றும் காரமான உணவுகளையும் தவிர்ப்பது அவசியம். இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிட தொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் காற்றுப்புகாத பைகளில் கட்டிவைத்தால் அவை அழுகிவிடும். எனவே அவற்றை உயிருள்ள உணவு என்கிறோம். அந்த உயிர்சத்துதான் நம் உடலில் உண்டாகும் அல்சர் போன்ற பிரச்னைகளை தடுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. அல்சரை போக்கும் சக்தி தேங்காய்க்கும் உண்டு. தேங்காயில் உள்ள நீர், இளங்காயாக இருக்கும்போது அதில் இருக்கும் மெல்லிய வழுவழுப்பான பொருள் நம் உடலில் உண்டாகும் நோயை தடுக்கும் இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதனை தினமும் காலை, மாலை என இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் சூட்டை தணிக்கும், கண்கள் குளிர்ச்சி பெறும், பட்டினி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு ஜீரணமாகவும், அஜீரண கோளாறு ஆகியவற்றை போக்குவதில் இளநீர்முக்கிய பங்கு வகிக்கிறது. இளநீரை தினமும் மதியநேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீரை வெளியேற்றுவதுடன், ரத்த சோகையை போக்குகிறது. எனவே நோயற்ற வாழ்க்கைக்கு உகந்த உணவை சரியான முறையில் சரியான அளவு சாப்பிட்டால் அல்சர் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். முடிந்தவரை காரமான மற்றும் பாஸ்ட்புட் மற்றும் நொறுக்கு தீனிகளை குறைத்துக்கொண்டால் அல்சருக்கு எளிதில் 'குட்-பை சொல்லலாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நோக்கியா லுமியா 930, லுமியா 635, லுமியா 630 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! Posted: 09 Apr 2014 12:17 AM PDT
புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கணினி எதிர் மென்பொருள் ஒன்று உலக அளவில் மிக முக்கியமான வலைத்தளங்களின் செய்திகளை திருட இணையதள திருடர்களுக்கு வழி வகுத்து வருகின்றது. கடந்த சில வருடங்களாக கணினி பயனாளிக்களுக்கு சவாலாக அமையும் இது போன்ற வைரஸ்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.இது பெரும் அச்சத்தை ஏற்படுத்து உள்ளது. இந்த அபாயத்தால் பயனாளிகளின் அந்தரங்க தகவல்கள் மற்றும் நிறுவனங்களின் செய்திகள் கூட எளிதாக திருடப்படும் நிலை உருவாகி வருகின்றது. இந்த புதிய பிழை ஆனது மிகக் கடுமையான சேதங்களை விளைவிக்க கூடியதாக கருதப்படுகின்றது.கூகுள் மற்றும் சில பாதுகாப்பு நிறுவனங்கள் இது போன்ற பிழையுள்ள மென்பொருள்களை கண்டறிய ஆலோசனை கூறியுள்ளன. இந்த அபாயகரமான மென்பொருள் மூலம் எப்படிப்பட்ட பாதுகாப்பு உடைய கணினியின் செய்திகளையும் சுலபமாக திருடிவிட முடியும்.முக்கியமாக இந்த வைரஸ் முதலில் "சர்வர்" கருவிகளைதான் பாதிக்கும். "ஏதேனும் ஒரு வலைதளம் இவ்வாறு பாதிப்படைந்திருந்தால் அதன்மூலம் நம்முடைய வங்கித் தகவல்கள், மற்றும் தனிப்பட்ட அனைத்து விசயங்களையும் இணையத் திருடர்கள் அறிந்து கொள்ள முடியும்" என்று கூறியுள்ளார் மைக்கேல் கோட், மென்பொருள் நிறுவன பாதுகாப்பு இயக்குனர். செரிஸ் எங்க் என்ற மென்பொருள் நிறுவன தலைவர் இது பற்று கூறியபோது, தோராயமாக உலக அளவில் 1000 இல் 100 வலைதளங்கள் மட்டுமே பாதுகாப்பு உடையதாக உள்ளன " என்று கூறியுள்ளார். யாகூ வலைதளம்தான் இருப்பதிலேயே வைரஸ்களால் மிக விரைவில் பாதிப்படைய கூடியதாக உள்ளது."இது போன்ற பாதிப்புற்ற வலைதளங்களை சீக்கிரமே சரி செய்வோம்"என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். நோக்கியா லுமியா 930, லுமியா 635, லுமியா 630 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் விண்டோஸ் தொலைபேசி 8.1 அடிப்படையாக கொண்ட லுமியா 930, லுமியா 635, லுமியா 630 ஆகிய மூன்று புதிய லுமியா ஸ்மார்ட்போன்களை நோக்கியா, அறிமுகப்படுத்தியுள்ளது. லுமியா 930, நோக்கியா புதிய தலைமை போன் ஆக உள்ளது, மற்ற இரண்டும் குறைந்த விலை கொண்ட லுமியா ஸ்மார்ட்போன்கள் ஆகும். லுமியா 630 இரண்டு வகைகளில் வருகிறது மற்றும் லுமியா 635 இரட்டை சிம் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். நோக்கியா Lumia 930 ஒரு 5 இன்ச் 1080p டிஸ்ப்ளே கொண்டுள்ளது. PureView கேமரா மற்றும் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் கொண்ட 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது. டூயல் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 2.2GHz ஸ்னாப்ட்ராகன் குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. நோக்கியா லுமியா 930 உலக அளவில் ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் ஜூன் மாதம் தொடங்கி $ 599 விலையில் கிடைக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. லுமியா 630 மற்றும் லுமியா 635 ஆகிய இரண்டுமே 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 5 மெகாபிக்சல் கேமரா மற்றும் ஒரு 1.2GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் ப்ராசசர் உள்ளது. லுமியா 635 இல் 4G LTE ஆதரிக்கும், லுமியா 630, ஒற்றை மற்றும் இரட்டை சிம் வகைகளில் வருகிறது. மற்றபடி சாதனங்கள் ஒரே அம்சங்களில் வரும். நோக்கியா லுமியா 630 மே மாதம் முதல் ஆசியா, இந்தியா / மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஒற்றை சிம் $ 159 விலையிலும், இரட்டை சிம் $ 169 விலையிலும் தொடங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா லுமியா 635 இந்த கோடையில் அமெரிக்க உட்பட, எல்லா இடங்களிலும் $ 189 விலையில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய தகவல் – ஒரு வலைதளம் கூட 100 சதவிகிதம் பாதுகாப்பானது அல்ல!! Posted: 08 Apr 2014 11:59 PM PDT
புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கணினி எதிர் மென்பொருள் ஒன்று உலக அளவில் மிக முக்கியமான வலைத்தளங்களின் செய்திகளை திருட இணையதள திருடர்களுக்கு வழி வகுத்து வருகின்றது. கடந்த சில வருடங்களாக கணினி பயனாளிக்களுக்கு சவாலாக அமையும் இது போன்ற வைரஸ்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.இது பெரும் அச்சத்தை ஏற்படுத்து உள்ளது. இந்த அபாயத்தால் பயனாளிகளின் அந்தரங்க தகவல்கள் மற்றும் நிறுவனங்களின் செய்திகள் கூட எளிதாக திருடப்படும் நிலை உருவாகி வருகின்றது. இந்த புதிய பிழை ஆனது மிகக் கடுமையான சேதங்களை விளைவிக்க கூடியதாக கருதப்படுகின்றது.கூகுள் மற்றும் சில பாதுகாப்பு நிறுவனங்கள் இது போன்ற பிழையுள்ள மென்பொருள்களை கண்டறிய ஆலோசனை கூறியுள்ளன. இந்த அபாயகரமான மென்பொருள் மூலம் எப்படிப்பட்ட பாதுகாப்பு உடைய கணினியின் செய்திகளையும் சுலபமாக திருடிவிட முடியும்.முக்கியமாக இந்த வைரஸ் முதலில் "சர்வர்" கருவிகளைதான் பாதிக்கும். "ஏதேனும் ஒரு வலைதளம் இவ்வாறு பாதிப்படைந்திருந்தால் அதன்மூலம் நம்முடைய வங்கித் தகவல்கள், மற்றும் தனிப்பட்ட அனைத்து விசயங்களையும் இணையத் திருடர்கள் அறிந்து கொள்ள முடியும்" என்று கூறியுள்ளார் மைக்கேல் கோட், மென்பொருள் நிறுவன பாதுகாப்பு இயக்குனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















