Tamil Star |
- ‘ராணா’ அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இயக்க ஆசைப்படும் சவுந்தர்யா!!
- ஏப்ரல் 25ஆம் தேதி மீண்டும் இணையும் திரிஷா-சிம்பு ஜோடி!!
- சோனாக்ஷி சின்ஹா மகிழ்ச்சி : என் தென்னிந்திய திரைப்பயணம் ரஜினியுடன் ஆரம்பமாகிறது!
- நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா!!
- வேடிக்கைப் பார்க்க வைக்கும் பெண்…. இவரைப் போல் உங்களால் வாழ முடியுமா?….
- பைக்கை எவ்வளவு சாமர்த்தியமா தள்ளிட்டு போறாருனு பாருங்களேன்……
- விளையாட்டில் ஏற்படும் விபரீதம் சகஜம் என்று எப்படி சொல்ல முடியும்?….
- பறவையின் புத்திசாலித்தனம்…!
- ஆசை ஏற்படுத்திய விளைவு…..
- சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி: செந்தூரனை பார்வையிட அவரது குடும்பத்துக்கு!!
- உலக பிரிவில் செர்பியாவுடன் இந்தியா மோதல்: டேவிஸ் கோப்பை டென்னிஸ்!
- ஐபிஎல் சவாலுக்கு ஆண்டர்சன் தயார்!!
- கொலையை நேரில் பார்த்த நாய்க்கு கோர்ட் சம்மன்: வழக்கில் சாட்சியாக சேர்ப்பு!!
- லக்ஸ்மன் கிரியல்ல கருத்து: ஐ.நா.வின் விசாரணைக்கு பங்கேற்று, உரியமுறையில் பதிலளிக்க வேண்டும்!
- நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தகவல்: புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களையே தடை செய்துள்ளோம்!!
- ஜே.வி.பி கருத்து: வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி உயர்வு!!
- கனடியத் தொழில்வழங்கும் முதலாளிகள் புகழாரம்! தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தின்கீழ் வந்தவர்கள் நல்ல தொழில் நெறிமுறை தெரிந்தவர்கள்!!
- பயணிகளின் பேக்கேஜ் பூட்டுக்களை உடைக்கும் – கனடா அரசாங்கம்!
- சத்துணவுத் திட்டத்திற்காக 10 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது: கனடாவில் ஒன்றாரியோ பிரியர் வைன் கத்லீன் பாடசாலை அறிவிப்பு!!
- லாவா ஐரிஸ் புரோ 20 ஸ்மார்ட்போன் ரூ.13.999 விலையில் அறிமுகம்!
| ‘ராணா’ அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இயக்க ஆசைப்படும் சவுந்தர்யா!! Posted: 08 Apr 2014 11:39 PM PDT
தனது அக்கா கணவரும், தேசிய விருது வாங்கிய நடிகருமான தனுஷை வைத்து படமொன்று இயக்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார் ரஜினியின் இளைய மகளும், கோச்சடையான் பட இயக்குநருமான சவுந்தர்யா. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்தவரான ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷின் மனைவி. இவர் தனது கணவர் தனுஷை வைத்து '3' என்ற படத்தை இயக்கினார். ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா, தனது தந்தையான ரஜினியை நடிக்க வைத்து 'கோச்சடையான்' என்ற 3டி படத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் சவுந்தர்யா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் செய்தியாளார்களைச் சந்தித்த சவுந்தர்யா, கோச்சடையானைத் தொடர்ந்து 'ராணா' படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம், சவுந்தர்யாவின் அடுத்த படமும் ரஜினியுடையது தான் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் திடீர் திருப்பமாக தனது ஆசை ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா. அதாவது தனது இயக்கத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என சவுந்தர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சவுந்தர்யா கூறுகையில், 'ராஞ்சனாவின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாபதியில் தனுஷின் நடிப்பை பார்த்து அசந்து விட்டேன். அற்புதமான நடிப்பு. குண்டன் கதாபாத்திரத்திற்கு தனுஷ் அப்படியே பொருந்திப் போயிருந்தார். இதனை அவரை நேரில் பார்த்தபோது கூறி நான் அவரைப் பாராட்டினேன்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஏப்ரல் 25ஆம் தேதி மீண்டும் இணையும் திரிஷா-சிம்பு ஜோடி!! Posted: 08 Apr 2014 11:29 PM PDT
வரும் ஏப்ரல் 25 அன்று இணைய உள்ளார்கள் திரிஷாவும்,சிம்புவும்.உடனே,யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம்.இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அன்றுதான் துவங்குகின்றது. சிம்புவும், த்ரிஷாவும் இணைந்து நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஷீட்டிங் வரும் ஏப்ரல் 25 முதல் தொடங்க உள்ளது. செல்வராகவன் இயக்கும் இப்படத்தில் தம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின் மீண்டும் ஜோடி சேருகின்றனர் சிம்பு மற்றும் திரிஷா. விண்ணைத்தாண்டி வருவாயாவில் மிக அழகான காதலை திரையில் வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்த ஜோடி. கிட்டதட்ட இளைஞர்கள் அனைவரும் அப்படத்தை 100 முறைக்கு மேலாவது பார்த்திருப்பீர்கள். அவர்கள் இருவரும் மீண்டும் இணையும் இந்த படமும் வசூலை குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இது ஒரு மென்மையானகாதல் கதை என இயக்குனரின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக தேர்தலுக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா நீண்ட இடைவெளிக்கு பின்பு ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவு மது அம்பட்.இரண்டாம் உலகம் வெற்றிக்குப் பின் செல்வராகவனின் இப்புதிய படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சோனாக்ஷி சின்ஹா மகிழ்ச்சி : என் தென்னிந்திய திரைப்பயணம் ரஜினியுடன் ஆரம்பமாகிறது! Posted: 08 Apr 2014 11:17 PM PDT
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் என் தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் சோனாக்ஷி சின்ஹா. 'கோச்சடையான்' படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ள படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு என்றும் அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்கா என இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாக சோனாக்ஷி சின்ஹா இந்தியில் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார். இவருக்கு வயது 27. தன்னை விட மிகவும் வயது குறைந்த சோனாக்ஷியுடன் நடிப்பதற்கு ரஜினி முதலில் தயக்கம் காட்டினார். ஆனால் ரஜினி - சோனாக்ஷி ஜோடியை நியாயப்படுத்துவது மாதிரி கதையில் சில மாறுதல்களை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் செய்த பிறகு ரஜினி சம்மதம் தெரிவிக்க, அதன் பிறகே சோனாக்ஷியிடம் பேசினார்களாம். அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து சோனாக்ஷி தனது ட்விட்டரில், "சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் படத்தின் மூலம் எனது தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவது மகிழ்ச்சியாக உள்ளது," என கூறியுள்ளார். பின்னர் மும்பையில் அளித்த பேட்டியில் இந்தப் படத்தில் தான் நடிப்பது குறித்து இப்படி கூறியிருந்தார்: "ஒரு வழியாக தென்னிந்திய மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். எனது முதல் படமே சிறந்த படமாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரஜினி சாருக்கு ஜோடியாக ஒரு நல்ல கதையில் நான் நடிக்க இருக்கிறேன். இப்படத்தினைத் தொடர்ந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா!! Posted: 08 Apr 2014 11:10 PM PDT
அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். 6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டிருந்தார். மனோரமாவின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டது. முழுமையாக சீரானதும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகும் அவர் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணம் அடைந்ததைத் தொடர்ந்து நேற்று வீடு திரும்பினார். திரையுலகினர் பலரும் அவரை நலம் விசாரித்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வேடிக்கைப் பார்க்க வைக்கும் பெண்…. இவரைப் போல் உங்களால் வாழ முடியுமா?…. Posted: 08 Apr 2014 10:49 PM PDT |
| பைக்கை எவ்வளவு சாமர்த்தியமா தள்ளிட்டு போறாருனு பாருங்களேன்…… Posted: 08 Apr 2014 10:41 PM PDT |
| விளையாட்டில் ஏற்படும் விபரீதம் சகஜம் என்று எப்படி சொல்ல முடியும்?…. Posted: 08 Apr 2014 10:28 PM PDT |
| Posted: 08 Apr 2014 10:13 PM PDT |
| Posted: 08 Apr 2014 10:03 PM PDT |
| சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி: செந்தூரனை பார்வையிட அவரது குடும்பத்துக்கு!! Posted: 08 Apr 2014 09:53 PM PDT
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈழ அகதி செந்தூரனை சந்திக்க அவரது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மேல் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறது. செந்தூரன் கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி முதல் தமது விடுதலைக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து வேலூர் அரச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அவரை பார்ப்பதற்கு அவரது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் செந்தூரனின் மனைவி மங்கையர்க்கரசி, சென்னை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை தமது கணவருக்கு சாதகமாக இந்த வழக்கினை மாற்றி எழுதுவதற்கு, சிறைச்சாலைகள் அதிகாரிகள் தம்மிடம் 2 லட்சம் ரூபாய்களை லஞ்சமாக கேட்டதாகவும், அதற்கு மறுத்ததால் அவருக்கு எதிராக வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பான வழக்கினை பதிவு செய்ததாகவும் தெரிவித்து, மங்கையர்க்கரசி தனி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு வாரங்களில் அறிக்கைப்படுத்த வேண்டும் என்றும், தமிழக காவல்துறை திணைக்களத்துக்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக பிரிவில் செர்பியாவுடன் இந்தியா மோதல்: டேவிஸ் கோப்பை டென்னிஸ்! Posted: 08 Apr 2014 08:11 PM PDT
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக பிரிவு பிளே ஆப் சுற்றில், இந்திய அணி பலம் வாய்ந்த செர்பிய அணியை எதிர்கொள்கிறது. தென் கொரிய அணியுடன் கடந்த வாரம் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் 2வது சுற்றில் (ஆசியா - ஓசனியா பிரிவு 1), 3-1 என்ற கணக்கில் அபாரமாக வென்ற இந்திய அணி, உலக பிரிவு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து, உலக பிரிவு பிளே ஆப் சுற்றில் இந்திய அணி பலம் வாய்ந்த செர்பிய அணியை எதிர்கொள்கிறது. இதற்கான அட்டவணை நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்த போட்டி டெல்லியில் செப்டம்பர் மாதம் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2011ல் இரு அணிகளும் மோதிய போட்டியில் செர்பியா 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. செர்பிய அணி சார்பில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் (2வது ரேங்க்) களமிறங்கும் வாய்ப்பு உள்ளதால், இந்த போட்டி டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரியாவுடன் நடந்த போட்டியின் ஒற்றையர் மற்றும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்த சோம்தேவ் தேவ்வர்மன், டெல்லியில் நடக்க உள்ள போட்டியில் ஜோகோவிச் சவாலை எதிர்கொள்ள உள்ளார். இரட்டையர் ஆட்டத்தில் போபண்ணாவுடன் இணைந்து அனுபவ வீரர் லியாண்டர் பயஸ் களமிறங்கவும் வாய்ப்பு உள்ளதால், இந்திய அணி செர்பியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக பிரிவு பிளே ஆப் சுற்றின் மற்ற ஆட்டங்களில் பிரேசில் - ஸ்பெயின், இஸ்ரேல் - அர்ஜென்டினா, அமெரிக்கா - ஸ்லோவகியா, ஆஸ்திரேலியா - உஸ்பெகிஸ்தான், நெதர்லாந்து - குரோஷியா அணிகள் மோதுகின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐபிஎல் சவாலுக்கு ஆண்டர்சன் தயார்!! Posted: 08 Apr 2014 08:04 PM PDT
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த நியூசிலாந்து அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன், ஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசன் போட்டியில் விளையாட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில், 'அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு எதுவும் இல்லை. காயம் விரைவாக குணமாகி வருகிறது. முழு உடல்தகுதியுடன் ஐபிஎல் 7வது சீசனில் நிச்சயமாக விளையாட முடியும் என நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்த ஆண்டர்சனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொலையை நேரில் பார்த்த நாய்க்கு கோர்ட் சம்மன்: வழக்கில் சாட்சியாக சேர்ப்பு!! Posted: 08 Apr 2014 07:58 PM PDT
கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் செல்லமாக வளர்த்த டாங்கோ என்றழைக்கப்படும் லேப்ரடார் இன நாய், கொலையை பார்த்துள்ளது. இதனால், கொலை வழக்கில் டாங்கோவை சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து கொலையாளியை அடையாளம் காட்டுவதற்காக நாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. சம்பவத்தன்று மர்ம ஆசாமி பேட்டால் அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அதனால் சந்தேகப்படும் நபரை பேட்டுடன் நாய்க்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினால், அது குரைத்து அடையாளம் காட்டும் என்று அரசு தரப்பினர் நம்பிக்கை தெரிவித்தனர். இதற்கு எதிர்தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், Ôகொலையாளியை நாய் அடையாளம் காட்டும் என்பது அறிவுக்கு புறம்பானது. நாய் வந்து குரைத்தாலோ அல்லது வாலாட்டி குழைந்தாலோ அது எனது கட்சிக்காரரை ஏற்றுக் கொண்டதாக எதை வைத்து சொல்வீர்கள்Õ என்று கேள்வி எழுப்பினார். எனினும், கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரை, கோர்ட்டில் நாய் முன்பு நிறுத்தினார். ஆனால், நாய்தான் குரைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஒரு வழக்கில் நாயை சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போதும் நாய் குறிப்பிட்ட நபரை அடையாளம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| லக்ஸ்மன் கிரியல்ல கருத்து: ஐ.நா.வின் விசாரணைக்கு பங்கேற்று, உரியமுறையில் பதிலளிக்க வேண்டும்! Posted: 08 Apr 2014 07:52 PM PDT
அரசாங்கம் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஜெனீவா தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். தீர்மானத்தின் ஊடாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடும். அரசாங்கம் இவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கத் தயாரா? விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு விசாரணைகளில் பங்கேற்காவிட்டால் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒருதலைபட்சமாக நிரூபிக்கப்படும். விசாரணைகளில் பங்கேற்க வேண்டும். குற்றச்சாட்டுக்களுக்கு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும். புலம்பெயர் அமைப்புக்களை பணம் அனுப்புமாறு அரசாங்கம் கோரியது தற்போது அந்தஅமைப்புக்களை தடை செய்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நகைப்பிற்குரியது என லக்ஸ்மன் கிரியல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தகவல்: புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களையே தடை செய்துள்ளோம்!! Posted: 08 Apr 2014 07:40 PM PDT
புலம்பெயர் அமைப்புக்களுக்கான தடை ஜனநாயக ரீதியானதல்ல என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களது அபிலாஷைகள் பற்றி பேசுவது பயங்கரவாதமாகுமா? இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் நல்லிணக்கத்தை மோசமாக பாதிக்கும். இடம்பெயர் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை. நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான பிரச்சினைகள் தடையாக அமைந்துள்ளன. வடக்கில் தொடர்ந்தும் திடீர் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கம் வடக்கில் இராணுவ பலத்தை அதிகரித்துள்ளது என அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களை மட்டுமே தடை செய்துள்ளோம் - அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களை மட்டுமே தடை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் சமூகத்தின் அனைத்து தமிழர்களும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படவில்லை என சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். அவ்வாறானர்கள் நாட்டுக்கு பணம் அனுப்பி வைக்கத் தடையில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் செயற்பட்டும் தரப்பினரையே அசராங்கம் தடை செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜே.வி.பி கருத்து: வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி உயர்வு!! Posted: 08 Apr 2014 07:30 PM PDT
வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி உயர்வடைந்துள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கின்றது.வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி உயர்வடைந்துள்ளது. போலியான புள்ளி விபரத் தகவல்களையே அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது. பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக அறிவித்த போதிலும், பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், இவை நம்பக் கூடிய வகையில் உள்ளதா? தனிநபர் வருமானம் இரண்டு டொலர்களுக்கும் குறைந்தவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தெகையின் 42 வீதமாகும். நாளுக்கு நாள் இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு அதிகரிக்கின்றது. ஜேம்ஸ் பாக்கருக்கு வரிச் சலுகை வழங்கும் அரசாங்கம் சாதாரண பொதுமக்களின் மீது பாரிய வரிச் சலுகைகளை சுமத்துகின்றது என குறிப்பிட்டார். மக்கள் நலனை கருத்திற் கொண்ட வரிக்கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும்: சிறிரங்கா மக்கள் நலனை கருத்திற் கொண்ட வரிக்கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே.சிறிரங்கா தெரிவித்துள்ளார். 2020ல் உலகில் உணவுப் பிரச்சினை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. விவசாய உற்பத்திகளுக்கான வரிகள் தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ட்ரக்ரர்களுக்கான வரிகளை அதிகரித்துள்ள அரசாங்கம் சொகுசு வாகனங்களுக்கான வரிகளை குறைத்துள்ளது. விவசாயிகளின் வாகனங்களுக்கே வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 08 Apr 2014 07:16 PM PDT
கனடாவில் தற்காலிகமாக தொழிலாளர் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் சிறந்த நெறி முறையைப் பின்பற்றுபவர்களாகக் காணப்படுகின்றனர் எனச் சில முதலாளிகள் தெரிவித்திருக்கின்றனர் எனத் தெரியவருகிறது. அண்மையில் சில தொழில்வாழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட திட்டத்தைத் துஸ்பிரயோகம் செய்தார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு சில நிறுவனங்களுக்குத் தற்காலிகமாக அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் கனடிய அரசு தடைவிதித்திருக்கின்றது. ஒரு சில தொழில் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை நிரந்தரமாகவும் விதிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது. அதே நேரம் கனடாவிலுள்ள சில தொழிலதிபர்கள் கூடுதலான செலவில் தாம் தற்காலிக தெரழிலாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கு விரும்புகின்றனர் என the Canadian Federation of Independent Business நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருக்கின்றரர் எனத் தெரியவருகிறது. இதற்கான காரணம் கனடியத் தொழிலாளர்களிலும் பார்க்க வெளிநாடுகளில் இருந்து வருகின்ற தற்காலிகப் பணியாளர்கள் திறமையான முறையில் கடமையாற்றுகின்றார்கள் என நம்புகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதே நேரம் குறிப்பிட்ட திட்டமானது சில தொழில் நிறுவனங்களினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றது என்பது கண்டறியப்பட்ட பின்பு கனடியத் தொழிலமைச்சர் தொழில் நிறுவனங்களில் தொழில்களுக்கு வெற்றிடங்கள் ஏற்படும் போது முதலில் கனடியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தொழில் நிறுவனங்களைக் கோரியிருக்கின்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயணிகளின் பேக்கேஜ் பூட்டுக்களை உடைக்கும் – கனடா அரசாங்கம்! Posted: 08 Apr 2014 07:08 PM PDT
ஒட்டாவா- சோதிக்கப்பட்ட தங்கள் பைகளை விமானநிலைய பாதுகாப்பு ஸ்கிரீனர்களால் உடைக்கப்படுவதை விமான பயணிகள் எவ்வாறு உணர்வார்கள் என்பதை கொன்சவேட்டிவ் அரசாங்கம் தெரிந்து கொள்ள விரும்புகின்றது. கனடா போக்குவரத்து, பைகளின் பூட்டு அல்லது சீல்- பிளாஸ்ரிக் சுற்று போன்றனவற்றை திறப்பதற்கு பாதுகாப்பு ஸ்கிரீனர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் திட்டம் சம்பந்தமான கருத்துக்களை கோருகின்றது. கனடிய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் சகல பைகளையும் விமானத்தில் ஏற்றவதற்கு முன்னர் பரிசோதனை செய்கின்றது. ஆணையத்தின் ஸ்கிரீனஸ் பூட்டப்படாத பைகனை திறந்து உள்ளடக்கங்களை பரிசோதனை செய்யலாம் அத்துடன் அச்சமயத்தில் பயணியின் பைக்குள் பை பரிசோதிக்கப்பட்டதென்பதை தெரிவிக்க அறிவித்தல் அட்டை ஒன்றை வைக்கலாம். எனினும் ஸ்கிரீனர்கள் பூட்டிய ஒரு பையை திறக்க கட்டாய படுத்த முடியாது. அவர்கள் தொடர்புடைய பயணிகளை கண்டுபிடிக்க விமான நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் விமான நிறுவன ஊழியர் பூட்டை திறக்க ஸ்கிரீனர் பையை பரிசோதிக்கலாம் அல்லது விமானநிலையத்தில் பை வைக்கப்படும் விமானத்தில் ஏற்றப்படமாட்டாது. கனடா போக்குவரத்து பொதுமக்களின் கருத்தை எதிர்வரும் திங்கள் கிழமை வரை எதிர்பார்க்கின்றது. அதிகாரிகளுக்கு புதிய அதிகாரம் கிடைக்கும் போது உடைக்கப்படும் பூட்டுகளிற்கு உரிய விலை பயணிகளிற்கு வழங்கப்பட மாட்டாது. பிளாஸ்டிக் சுற்று வெட்டப்பட்டால் பைகள் திரும்ப சுற்றப்பட மாட்டாதெனவும் கூறப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 08 Apr 2014 07:00 PM PDT
ஒன்றாரியோவின் பிரிமியராகவுள்ள வைன் கத்லீன் அவர்கள் ஒன்றாரியோவில் பாடசாலைகளில் சந்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 10 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாகக் கனடியன் பிறஸ் செய்தித்தாபனம் தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக ஒன்றாரியோவில லிபரல் மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்திற்காக 32 மில்லியன் டொலர்களை 3 வருடங்களுக்கு வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக 56,000 ற்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைவதற்கு வழி ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது. பாடசாலையில் சில மாணவர்கள் தாம் பாடசாலைக்கு வந்தவுடன் என்ன உணவு தமக்கு வழங்கப்படவுள்ளது எனவும கேட்டிருக்கின்றார்கள் எனவும் வைன் தெரிவித்திருக்கின்றார். தெரிவி;க்கப்பட்டுள்ளது. மேலும் வைன் உரையாற்றுகையில் மாணவர்களுக்குப் பசி இருக்குமாயின் அவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியாது என்பது நாம் அறிந்த உண்மையெனவும் தெரிவித்திருக்கின்றார். கத்லீன் வைன் தமது அரசாங்கமானது பாடசாலையில் சத்துணவு வழங்கல் திட்டத்தை மேலும் 340 எண்ணிக்கையிலான ஆரம்பப் பாடசாலை, உயர்பாடசாலைகள் என்பவற்றில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படுகின்றது எனத் தெரிவித்திருக்கின்றார். இத்தகைய திட்டத்திற்கு 32 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படவுள்ளன எனவும் இந்த நிதியானது 5 வருடத்திட்டம் எனவும் தெரியவருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| லாவா ஐரிஸ் புரோ 20 ஸ்மார்ட்போன் ரூ.13.999 விலையில் அறிமுகம்! Posted: 08 Apr 2014 09:27 AM PDT
லாவா நிறுவனம் அதன் ஐரிஸ் புரோ தொடர் வரிசையை விரிவடைந்து ஐரிஸ் புரோ 20 ஸ்மார்ட்போனை ரூ.13.999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு கைபேசி தயாரிப்பாளரான லாவா ஐரிஸ் புரோ 20 ஸ்மார்ட்போன் விரைவில் பல்வேறு ஆன்லைன் கடைகளில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஐரிஸ் புரோ 30 போன்று, லாவா ஐரிஸ் புரோ 20 இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) சாதனம் மற்றும் ஒரு மைக்ரோ சிம் உடன் இணைந்து, வழக்கமான சிம் அளவு ஆதரிக்கிறது. இதில் மென்பொருள் மேம்படுத்தல் பற்றி எந்த வார்த்தையும் இல்லை. இதில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகின்றது. இது 5 இன்ச் (540x960 பிக்சல்கள்) qHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் ஒன் கிளாஸ் சொல்யூஷன் (OGS) வருகிறது. லாவா ஐரிஸ் புரோ 20 ரேம் 1GB உடன் ஒரு 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது. ஐரிஸ் புரோ 20 microSD வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, வருகிறது. 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. ஐரிஸ் புரோ 20 இணைப்பு விருப்பங்கள், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3 ஜி, Wi-Fi,, மைக்ரோ-USB, மற்றும் ப்ளூடூத் உள்ளடக்கியுள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் ஒரு 2000mAh பேட்டரி திறன் உள்ளது. ஐரிஸ் புரோ 20 மெஷர்ஸ் 138x67.5x7.7mm மற்றும் 120 கிராம் எடையுள்ளதாக. இது டார்க் ப்ளூ வண்ணத்தில் கிடைக்கும். லாவா ஐரிஸ் புரோ 20 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 5 இன்ச் (540x960 பிக்சல்கள்) qHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்), இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), ரேம் 1GB, microSD வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3 ஜி, Wi-Fi, மைக்ரோ-USB, ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன், 2000mAh பேட்டரி, 120 கிராம் எடை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




















