Tamil Star |
- 20 பேர் பரிதாப பலி: நைஜீரியாவில் மசூதி மீது சரமாரி துப்பாக்கி சூடு!
- 58 சதவீத வாக்கு பதிவு: தலிபான் மிரட்டலுக்கு அஞ்சாத ஆப்கன் அதிபர் தேர்தல் !!
- 6 நாட்களுக்குள் கண்டுபிடித்தே ஆக வேண்டும்! மாயமான விமான கருப்புப் பெட்டி!!
- கடலில் கருப்புப் பெட்டியின் சிக்னல் : அவசரமாக விரைந்த கப்பல்கள், விமானங்கள்!!
- இந்தியாவில் கைது செய்ய மும்முரம்! இலங்கையால் தடை செய்யப்பட்ட 32 பேர்!!
- எரிவாயு ஆலை குற்றச்சாட்டுக்களிலிருந்து யுடாக் பின்வாங்கமாட்டார்:கனடா- வின்னிடம் இருந்து அவதூறு நோட்டீஸ்!
- ஒன்ராறியோ மாகாணத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா? கனடா அடுத்த தேர்தல்!!
- கனடாவின் ரொறன்ரோ நகரசபைத் தேர்தல் ஒலிவியா சோ வாக்குறுதி :பள்ளி திட்டங்களை விரிவாக்குவேன்!
| 20 பேர் பரிதாப பலி: நைஜீரியாவில் மசூதி மீது சரமாரி துப்பாக்கி சூடு! Posted: 06 Apr 2014 11:16 PM PDT
வட கிழக்கு நைஜீரியாவில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நுழைந்து, அங்கு தொழுகை நடத்தி கொண்டிருந்த 20 பேரை சுட்டுக் கொன்றனர். வடகிழக்கு நைஜீரியாவில் யோப் மாநில தலைநகர் தமாதுருவுக்கு அருகில் உள்ள புனிகாரி கிராமத்தில் நேற்று காலை கிராமத்தினர் அங்குள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி ஏந்தி மசூதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் மக்கள் மீது சரமாரியாக சுட்டனர். இந்தத் தாக்குதலில் மசூதிக்குள் தொழுகை நடத்தி கொண்டிருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதற்கு முன்பு இதேபோல் பல முறை இஸ்லாமிய தீவிரவாதிகளால் துப்பாக்கி தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாத இயக்கத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதலில் இதுவரை 1,200 பேர் பலியாகி உள்ளனர். நைஜீரியாவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சமமாக உள்ள நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 58 சதவீத வாக்கு பதிவு: தலிபான் மிரட்டலுக்கு அஞ்சாத ஆப்கன் அதிபர் தேர்தல் !! Posted: 06 Apr 2014 11:09 PM PDT
ஆப்கானிஸ்தானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 58 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 13 ஆண்டுகளாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளை வெளியேற்றும் பணிகளில் தற்போதைய அதிபர் ஹமீத் கர்சாய் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று ஆப்கானிஸ்தானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முதல் முறையாக பெண்கள் உள்பட 4 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர். தேர்தலை புறக்கணிக்கும்படி தலிபான் தீவிரவாதிகள் கடும் மிரட்டல் விடுத்தனர். அதை மக்கள் அலட்சியப்படுத்தி ஆர்வமாக வாக்களித்தனர். ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் நேற்று பலத்த மழையும் பெய்தது. எனினும், வாக்கு சாவடிகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தனர். பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடிகளில் ஆர்வமாக வாக்களித்தனர். புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற தேர்தலில் 58 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன என்று ஆப்கன் தேர்தல் ஆணையர் அகமது யூசுப் நூரிஸ்தானி கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 6 நாட்களுக்குள் கண்டுபிடித்தே ஆக வேண்டும்! மாயமான விமான கருப்புப் பெட்டி!! Posted: 06 Apr 2014 11:00 PM PDT
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் இன்றுடன் முடிவதால் அதில் இருந்து வரும் ஒலியின் அளவு இன்று முதல் குறையும். 239 பேருடன் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் அது விபத்துக்குள்ளான ஒரு மாதம் தான் தாக்குப்பிடிக்கும். இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியின் அளவு இன்று முதல் குறையத் துவங்கி வரும் 12ம் தேதி முழுவதுமாக நின்றுவிடும். அதற்குள் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தாக வேண்டும். முன்னதாக கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை சீன கப்பலும், ஆஸ்திரேலிய கப்பலும் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கண்டறிந்தன. இதையடுத்து அந்த ஒலிகள் வந்த இரண்டு இடங்களிலும் தேடல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடலில் கருப்புப் பெட்டியின் சிக்னல் : அவசரமாக விரைந்த கப்பல்கள், விமானங்கள்!! Posted: 06 Apr 2014 10:53 PM PDT
இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடி வந்த சில கப்பல்கள் மற்றும் விமானங்கள் சீன கப்பல் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டுபிடித்த இடத்திற்கு சென்றுள்ளன. தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட சீன கப்பலான ஹைசுன் 01 கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை இரண்டு முறை கண்டறிந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்று வேறு இடத்தில் ஒரு வகையான ஒலியை கண்டறிந்தது. சீன கப்பல் கண்டறிந்த ஒலியின் அளவு கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியோடு ஒத்துப் போவதால் அது மாயமான விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடி வந்த சில கப்பல்கள் மற்றும் விமானங்கள் சீன கப்பல் ஒலியை கண்டறிந்த இடத்திற்கு இன்று சென்றுள்ளன. விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரி ஆயுள் வேறு இன்றுடன் முடிவதால் ஒலி வந்த இடத்தில் தேடல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவில் கைது செய்ய மும்முரம்! இலங்கையால் தடை செய்யப்பட்ட 32 பேர்!! Posted: 06 Apr 2014 10:45 PM PDT
தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் மற்றும் ஈழத் தமிழர் அமைப்பை சேர்ந்தோரில் 32 பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த போரானது 2009 இல் முடிவுற்றது. வெளிநாட்டிலிருந்து செயல்படும் விடுதலை புலிகள் உள்ளிட்ட 16 தமிழ் அமைப்புகள் இலங்கையில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறி விடுதலை புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உள்ளிட்ட 16 அமைப்புகளுக்கும் இவற்றின் நிர்வாகிகள் 422 பேருக்கும் இலங்கை அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்டோர் இலங்கைக்கு வந்தால் அவர்களை உடனடியாக கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 32 பேர் இருப்பதாகவும் இவர்களை கைது செய்ய சர்வதேச போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை தேசிய புலனாய்வுத் துறை தலைவர் கபிலா இதனைப்பற்றி கூறியபோது, " குளோபல் தமிழ் அமைப்பு, பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு ஆகிய பெயர்களில் செயல்படும் விடுதலை புலிகள் மற்றும் ஆதரவாளர்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசை அடிக்கடி சந்திக்கின்றனர். தென் ஆப்ரிக்க தலைவர் மண்டேலாவின் இறுதி சடங்கில் பங்கேற்க குளோபல் தமிழ் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும் படி வெளிநாட்டு அரசுகளை கேட்டுள்ளோம்"என்று தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Apr 2014 10:30 PM PDT
ரொறொன்ரோ- அவதூறு நோட்டீஸ் அனுப்பபட்ட பின்னரும் எரிவாயு ஆலைகள் மோசடி சம்பந்தப்பட்ட ஆவணங்களை அழித்த குற்றச்சாட்டு திட்டத்தின் பின்னால் முதல்வர் கத்லின் வின்னும் உள்ளார் என்ற குற்றச்சாட்டிலிருந்து பின்வாங்கமாட்டேன் என ரொறி தலைவர் டிம் யுடாக் கூறியுள்ளார். இரண்டு ஆலைகள் ரத்துச்செய்தமை சம்பந்தப்பட்ட ஊழல் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வின்னின் காரியாலத்தையே சாரும் என யுடாக் தெரிவித்துள்ளார். வின்னின் சூத்திரதாரத்திட்டத்தால் முதல்வரின் காரியாலயத்தில் இருந்த கணனியின் மூல சேமிப்புக்களை அழித்ததாக ரொறிஸ் அவர் மீது குற்றம் சாட்டிய பின்னர் அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவதூறு நோட்டீசால் தான் அமைதியாக மாட்டார் எனவும் Hudak கூறியதாக அறியப்படுகின்றது. இந்த அவதூறு நோட்டீஸ்கள் ஒன்ராறியோ புறோகிறசிவ் கட்சி, ஒன்ராறியோ பிசி நிதியம், மற்றும் ரொறி எம்பிபி லிசா மக்லியோட் ஆகியோர்க்கும் வழங்கப்பட்டுள்ளதாக வின்னின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோ மாகாணத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா? கனடா அடுத்த தேர்தல்!! Posted: 06 Apr 2014 10:18 PM PDT
மாகாண என்டிபி தலைவர் அன்ரியா ஹொவத் தான் அரசாங்கத்தை அகற்றும் அதிகாரத்தை கொண்டுள்ளார் என கூறப்படுகின்றது. "ஒன்ராறியோவில் இது எங்களிற்கு ஒரு கடினமான நேரம். இங்கு ஒரு எரிவாயு ஆலைகள் மோசடி உள்ளது. அதை விட மோசம் நிச்சயமாக அதனை மூடி மறைப்பது என The West Block உடனான நேர்காணலின் போது அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் கத்லின் வின் மோசடி சம்பந்தப் பட்ட அவரது அறிவிற்கெட்டிய முழு உண்மையையும் சொல்லவில்லை என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். டால்ரன் மக்கெயின்ரி காலத்தில் 2005- ல் ஒன்ராறியோவிற்கு மேலதிக மின்சாரம் தேவைப்பட்டது. லிபரல் கட்சியினர் எரிவாயு-எரிக்கும் மின்சார உற்பத்தி ஆலைகளை உருவாக்க தீர்மானித்தனர். அந்த நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகியது. ஆலைகள் கட்ட தீர்மானிக்கப்பட்ட பகதிகளில் வசித்த மக்கள் அப்பகுதியில் ஆலைகள் கட்டப்படுவதை விரும்பவில்லை. எனினும் மக்கெயின்ரியிற்கு அவர்களது வாக்குகள் தேவைப்பட்டது. அதனால் கட்டிட திட்டத்திற்கு 230-மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என கூறி திட்டமிடப்பட்ட கட்டுமான வேலைகளை ரத்துச்செய்தார். ஆனால் அவரது அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது. இதற்கிடையில் ஒன்ராறியோவின் ஆடிட்டர் ஜெனரல் இலக்கங்களை குறைத்து ஆலைத்திட்டத்தை மூடுவதற்கு கிட்டத்தட்ட 1.1-பில்லியன் டொலர்கள் செலவிற்கான அறிக்கையை கொண்டுவந்ததாகவும் அறியப்படுகின்றது. அதன்பின்னர் விரைவில் மக்கெயின்ரி பதவியில் இருந்து விலகினார். இவரைத் தொடர்ந்து பதவியில் வந்த வின் இந்த மூடிமறைத்தல் சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியாதென தொடர்ச்சியாக மறுத்துள்ளார் என கூறப்படுகின்றது. மூடிமறைப்புக்கள் சம்பந்தப்பட்ட ஆதாரங்களான மின்அஞ்சல்கள் மற்றும் hard drives போன்றனவற்றை அழித்தது சம்பந்தமாக ஒன்ராறியோ மாகாண பொலிசார் விசாரனையில் ஈடுபட்டு வருவதாகவும் அறியப்படுகின்றது. மக்கெயின்ரியின் முன்னாள் தலைமை ஊழியரும் விசாரிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவின் ரொறன்ரோ நகரசபைத் தேர்தல் ஒலிவியா சோ வாக்குறுதி :பள்ளி திட்டங்களை விரிவாக்குவேன்! Posted: 06 Apr 2014 10:09 PM PDT
கனடாவில் ரொறன்ரோ நகர சபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் போட்டியிடுகிள்ற Chow தான் பதவிக்கு வந்தால் afterschool திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவேன் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை மாலையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஒலிவியா சோ குறிப்பிட்ட திட்டத்தை மேலும் 40 இடங்களில் விஸ்தரிப்பேன் என வாக்குறுதியளித்திருப்பதாத் தெரியவருகிறது. அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்போது ஐந்து சிறூர்களுக்கு ஒருவர் என்ற வீதாசாரப்படிதான் afterschool திட்டத்தில் இணைந்து கொள்ளக் கூடிய நிலையிருக்கின்றது எனவும் அது போதுமானதாகவில்லையெனவும் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தன்னால் தரமான afterschool திட்டங்களை குழந்தைகளுக்கு வழங்க முடியும் எனவும் அத்துடன் பாதுகாப்பாக அது இயங்கவும் வழிவகுத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இவர் முன்பு கவுன்சிலராகப் பணியாற்றியபோது இவ்வாறான திட்டங்களுக்குப் பெரிதும் உதவியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். அப்போது $2.34 ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு அறவிடப்பட்டது எனவும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் அந்தத்திட்டங்களை விரிவாக்குவதற்கு கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு 3.2 மில்லியன் டாலர்கள் தேவையென நம்பப்படுகின்றது. ஆனால் ஒலிவியாவின் கருத்துப்படி அத்தகைய நிதியை தனிப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு வழியிருக்கின்றது எனத் தெரிகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







