Tamil Star |
- பிலிப்பைன்ஸ் நாட்டுடன் இராணுவ ஒப்பந்த விவகாரம்: சீனா இராணுவத்திற்கு எதிரான நிகழ்வு அல்ல ஒபாமா கருத்து!
- கனடாவில் மென்பொருள் நிறுவனத்திற்கு 120 மில்லியன் டாலர்கள் மானியம்!
- மைக்ரோசொவ்ரின் இன்ரநெட் எக்ஸ்புளொரரில் குறைபாடு: அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!
- புதிய படத்துக்கு ’லிங்கா’ என்ற தலைப்பைத் தேர்வு செய்தாரா ரஜினி?
- இந்திய அமைப்பு சார்பில் தொழிலதிபர் நாராயண மூர்த்திக்கு உலக இந்தியர் விருது!
- இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதல்: அமெரிக்காவில் பயங்கரம்!
- கடுகின் மருத்துவத் தன்மை!
- இலந்தைப் பழத்தின் நன்மை!
- இன்டெக்ஸ் அக்வா குவெர்டி ஸ்மார்ட்போன் ரூ.4,990 விலையில் அறிமுகம்!
- விஜய்க்கு ஏற்றவாறு பஞ்ச் வசனங்கள் கத்தியில் நச்சென்று பஞ்ச் விடும் விஜய்!
- ரஜினி படத்தில் நடிக்க காத்திருக்கிறேன் சோனாக்ஷி அதிரடி!
- தேனீக்களில் ஆடையணிந்து தெருக்களில் உலாவரும் பெண்!!!
- மனிதர்களுக்கே சவால் விடும் இந்த நாயின் சாகசத்தை பாருங்க!
- மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 4வது தோல்வி: பேட்டிங்கில் மீண்டும் சொதப்பல்!
- ஸ்டட்கர்ட் நகரில் நடந்த போர்ஷே டென்னிஸ்: மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம்!
- மனித உரிமை மீறல் விவகாரம்: நான்கு ஆண்டுகள் இலங்கையை கண்காணிக்க ஐ.நா.சபை முடிவு!
- இந்தியாவை சேர்ந்த 2 பேர் சுட்டு கொலை! குவைத்தில் கோர சம்பவம்!!
- முன்னாள் போப் ஆண்டவர்கள் 2 பேருக்கு ஒரே நேரத்தில் நேற்று புனிதர் பட்டம் வழங்கி: வாடிகனில் சிறப்பு வழிபாடு!
- பௌத்த தர்மம் செய்ய கூடாது என்று கூறியுள்ளதை எனது அரசு செய்யாது: பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து!
- பொதுத் தேர்தலில் விளையாட்டுத் துப்பாக்கியை காட்டியே வென்றேன்: அமைச்சர் விஜிதமுனி சொய்சா
| Posted: 28 Apr 2014 11:55 PM PDT
அமெரிக்க அதிபரான ஒபாமா திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டுடனான இராணுவரீதியான ஒப்பந்தமொன்றில் கைசாதிட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த ஒப்பந்தத்தின் மூலமாக அமெரிக்க இராணுவத்தினது பிரசன்னமானது அதிகளவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடல்பிராந்தியங்களில் இருப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. ஆனால் இந்த உடன்படிக்கையானது சீனா தேசத்தினது வளர்ந்து வருகின்ற இராணுவத்திற்கு எதிரான நிகழ்வு அல்ல என ஒபாமா குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த ஒப்பந்தமானது 10 வருடகாலத்திற்கு நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக இந்த உடன்பாடு பிலிப்பைன்ஸ்சிற்கான ஒபாமாவின் முதலாவது வருகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவினுடைய பழைய நட்புப் பிரதேசம் எனவும் தெரியவருகிறது. குறிப்பிட்ட உடன்பாட்டின்படி ஒரு வலிமையான சுழற்சி முறையில் அமெரிக்க துருப்புக்கள், போர் விமானங்கள், கப்பல்கள் பங்காற்றவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவானது குறிப்பிட்ட சம்பவமானது இராணுவத்தினது சக்தியை அதிகரிப்பதற்கும், நீண்டகாலமாக சீனாவிற்கும் பிலிப்பைனிற்குமிடையில் நிலவி வந்த எல்லைத் தகராற்றினையும் மேலும் ஊக்குவிப்பதற்கு ஏதுவாகவிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றது. பிலிப்பைனின் இராணுவத் திறமையைக் கட்டியெழுப்பல், பயிற்சியளித்தல், இணைந்து செயல்படுதல், கடல்பாதுகாப்பு என்பவற்றை மேற்கொள்ளல் என்பன குறிப்பிட்ட ஒப்பந்தத்தினது முக்கியமான இலக்கு என ஒபாமா தெரிவித்திருகின்றார். அத்துடன் தமது இராணுவத்தினர் இந்தப் பகுதியில் தரித்திருந்தால் குறிப்பிட்ட பகுதியல் ஏதாவது இயற்கை அனர்த்தங்கள் நேருகின்றபோது துரிதமாகப் பணிபுரிய ஏதுவாக இருக்கும் எனவும் பத்திரி;கை மாநாடொன்றில் தெரிவித்திருக்கின்றார். மேலும் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்ட ஒப்பந்தமானது எந்த வகையிலும் சீனாவிற்கு எதிரான நிகழ்வு அல்லவெனவும் குறிப்பிட்ட கடல் பகுதிகளில் சர்வதேச விதிகள் மதிக்கப்படுகின்றனவா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவில் மென்பொருள் நிறுவனத்திற்கு 120 மில்லியன் டாலர்கள் மானியம்! Posted: 28 Apr 2014 11:44 PM PDT
கனடாவில் வாட்டலூர் பிரதேசத்தில் இயங்குகின்ற open Text என அழைக்கப்படுகின்ற மென்பொருள் software தயாரிக்கின்ற நிறுவனத்திற்கு 120 மில்லியன்டொலர்கள் மாகாண அரச மானியமாகக் கிடைத்திருக்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 120 மில்லியன் டொலர்கள் மானியமாகக் கிடைப்பதற்கு முக்கியகாரணம் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவேண்டும் என்பதே எனத் தெரியவருகிறது. குறிப்பாக 1.200 புதிய தொழில் வாய்ப்புக்கள் ஒன்றாரியோ மாகாணம் புராவும் உருவாக்குவதற்கு அரசு உதவியாக மானியம் வழங்கியுள்ளது எனத் தெரியவருகிறது. அத்துடன் ளழகவறயசந நிறுவனமானது தனது நடவடிக்கைகளை Waterloo Region, Toronto, Peterborough, Kingston, Ottawa. ஆகிய பகுதிகளுக்கு விஸ்திரிக்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மானியம் சம்பந்தமான அறிவிப்பினைக் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்றாரியோவின் பிரிமியரான வைன் கத்லீன் Open Text தலைமையகத்தில் வெளியிட்டிருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட Open Text நிறுவனமானது ஒன்றாரியோவில் தனது செயற்பாடுகளுக்காகவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும் 2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்குத் திட்டமிட்டிருக்கின்றது எனத் தெரிகிறது. ஆனால் இந்த ஒதுக்கீடானது கிட்டத்தட்ட வருகின்ற 7 வருடங்களுக்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட Open Text நிறுவனத்தில் புதிய தொழல் வாய்ப்புக்கள் போன்ற துறைசார்பாகத் தோற்றம் பெறவுள்ளன எனவும் அத்துடன் பெரும்பான்மையான இந்தப் பணிகள் வாட்டலூவில் ஏற்படும் எனவும் நிறுவனத்தின் பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறிப்பிட்ட அதிகாரி தமது இன்றைய உறுதிப்பாடு தொழில்நுட்பத் திறமையைப் பலப்படுத்துவதே எனவும் தெரிவித்திருக்கின்றார். 1991ம் ஆண்டில் 4 பணியாளர்களுடன் வாட்டலூவில் ஆரம்பிக்கப்பட்ட Open Text நிறுவனமானது இன்று கனடாவில் மிகப்பெரிய software நிறுவனமாகக் காட்சியளிப்பதுடன் 8,000 பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் சர்வதேசரீதியாகப் பணியாற்றி வருகின்றார்கள் எனத தெரியவருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மைக்ரோசொவ்ரின் இன்ரநெட் எக்ஸ்புளொரரில் குறைபாடு: அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை எச்சரிக்கை! Posted: 28 Apr 2014 10:57 PM PDT
மைக்ரோசொவ்ட் கம்பனி ஒரு பாதுகாப்பு குறைபாட்டை சரிப்படுத்த முயன்று கொண்டிருப்பதால் தற்போதைக்கு இணைய ஆய்வு தேடலுக்கு மைக்ரோசொவ்ரின் இன்ரநெட் எக்ஸ்புளொரர் சிறந்ததல்ல என கூறப்பட்டுள்ளது. இந்த குறைபாடு சரிப்படுத்தப்படும் வரை இன்ரநெட் பாவனையாளர்கள் மாற்று இணைய உலாவியை கருத்தில் கொள்ளுமாறு ஐக்கிய அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை பரிந்துரைக்கின்றது. இக்குறைபாடு பதிப்புக்கள் IE 6-11 வரையிலான பதிப்புக்களை பாதிக்கலாமெனவும் பாதிக்கப்பட்ட அமைப்பின் முழுமையான பாதிப்பிற்கும் வழிவகுக்கலாமெனவும் கணனி அவசர தயார் நிலை குழுவினர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இது ஒரு குறியீட்டு குறைபாடு பிரச்சனை என கூறப்படுகின்றது. அத்துடன் தீவிரமாக ஒரு தீர்வைக்காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய படத்துக்கு ’லிங்கா’ என்ற தலைப்பைத் தேர்வு செய்தாரா ரஜினி? Posted: 28 Apr 2014 09:07 AM PDT
சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்கு லிங்கா என்ற தலைப்பைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'கோச்சடையான்' ரிலீஸுக்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும் அனுஷ்காவும் நடிக்கின்றனர். பொன்.குமரன் கதை எழுத, ரத்னவேல் ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ஒரு பாடலைப் பதிவு செய்தும் கொடுத்துவிட்டார் ரஹ்மான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இந்தப் படத்துக்காக 10 தலைப்புகளை கே எஸ் ரவிக்குமார் எழுதி ரஜினியிடம் கொடுத்ததாகவும், அதில் லிங்கா என்ற தலைப்பை அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தலைப்பை தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டில் கே எஸ் ரவிக்கும் பதிவு செய்துள்ளாராம். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். மே 2 முதல் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்குகிறது. தொடர்ந்து 40 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடத்துகிறார்கள். ரஜினி - சோனாக்ஷி பங்கேற்கும் பாடல் காட்சியும் இங்கு வைத்து படமாக்கப்பட உள்ளது. ரஜினி பேரன் (தனுஷ் - ஐஸ்வர்யா மகன்) பெயர் லிங்கா. இந்தப் பெயரை தேர்வு செய்து சூட்டியவர் ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்திய அமைப்பு சார்பில் தொழிலதிபர் நாராயண மூர்த்திக்கு உலக இந்தியர் விருது! Posted: 28 Apr 2014 08:36 AM PDT
கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் நாராயண மூர்த்திக்கு உலக இந்தியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இவ்விருது கனடாவில் உள்ள இந்திய அமைப்பு சார்பில் நடந்தது.இந்நிகழ்ச்சியில் கனடா நிதியமைச்சர் ஜோ ஆலிவர் கலந்து கொண்டு விருது வழங்கினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதல்: அமெரிக்காவில் பயங்கரம்! Posted: 28 Apr 2014 08:26 AM PDT
சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவை ஒட்டி, ஒரு சிறிய விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இறங்குவதற்காக சிறிய ரக விமானங்கள் இரண்டு ஒரே நேரத்தில் வந்தன. அப்போது ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில், ஒரு விமானம் தட்டுத் தடுமாறி, விமான நிலையத்தில் தரையிறங்கியது. மற்றொரு விமானம் அருகில் உள்ள கடலில் விழுந்து, மூழ்கியது. வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் தரையிறங்கும் போது அந்தரத்திலேயே மோதிக் கொண்டன. இரண்டு விமானங்களிலும் தலா ஒருவர் பயணம் செய்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடுகின் மருத்துவத் தன்மை! Posted: 28 Apr 2014 05:01 AM PDT
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இத்தகைய சிறப்பு மிக்க கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பொதுவாக நாம் கடுகை சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்துகிறோம். அதாவது, நாம் சமைக்கும் சமையல் ஜீரணமாக அடிப்படையான கடுகை முதலில் போடுகிறோம். ஏன் என்றால் கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும். விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுத்து விஷம் வெளியேறும். தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும். கடுகை தூள் செய்து வெந்நீரில் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணமாக்கும். கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும். கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும். உடனடியாக விரைப்பு சீராகும். கடுகு, பூண்டு, வசம்பு, கருவாப்பட்டை, கழற்சிக்காய், கடுகு, ரோகிணி ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி இருவேளை வீதம் ஒரு வாரம் குடித்து வர வாதம், வாய்வு, குத்தல் பிரச்சினை குணமாகும். கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Apr 2014 04:54 AM PDT
இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி ப¦றும். எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு. கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இன்டெக்ஸ் அக்வா குவெர்டி ஸ்மார்ட்போன் ரூ.4,990 விலையில் அறிமுகம்! Posted: 28 Apr 2014 04:49 AM PDT
இன்டெக்ஸ் நிறுவனம் அதன் முதல் டச் ஸ்மார்ட்போனான அக்வா குவெர்டி ரூ.4,990 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போனில் 3G இணைப்பு கொண்டுள்ளது. இன்டெக்ஸ் அக்வா குவெர்டி ஸ்மார்ட்போனில் 3.5 இன்ச் HVGA (320x480 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் ஒரு physical குவெர்டி கீபோர்டு கொண்டு வருகிறது. இது இரட்டை சிம் சாதனம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) மற்றும் வழக்கமான சிம் அளவு ஆதரிக்கிறது. அக்வா குவெர்டி ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் இயங்கும். மற்றும் ரேம் 512MB உடன் இணைந்து 1.2GHz டூயல் கோர் செயலி ப்ராசசர் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோனில் ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. அக்வா குவெர்டி ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, இதில் அடங்கும். இணைப்பு விருப்பங்கள் 3 ஜி, GPRS / EDGE, ப்ளூடூத், Wi-Fi, மற்றும் மைக்ரோ-USB ஆகியவை அடங்கும். அக்வா குவெர்டி ஸ்மார்ட்ஃபோனில் ஒரு 1500mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. இன்டெக்ஸ் அக்வா குவெர்டி ஸ்மார்ட்போன் அம்சங்கள்: 3.5 இன்ச் HVGA (320x480 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, இரட்டை சிம் சாதனம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), ரேம் 512MB, 1.2GHz டூயல் கோர் செயலி ப்ராசசர், 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, 3 ஜி, GPRS / EDGE, ப்ளூடூத், Wi-Fi, மைக்ரோ-USB, ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன், 1500mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விஜய்க்கு ஏற்றவாறு பஞ்ச் வசனங்கள் கத்தியில் நச்சென்று பஞ்ச் விடும் விஜய்! Posted: 28 Apr 2014 03:16 AM PDT
கத்தி படத்தில் விஜய்க்கு ஏற்றவாறு பஞ்ச் வசனங்களை வைக்கிறாராம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். துப்பாக்கி படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ், விஜய் சேர்ந்து கத்தி படத்தில் பணியாற்றுகிறார்கள். படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடந்து வருகிறது. கத்தி படத்தின் தயாரிப்பாளர் தொடர்பாக சர்ச்சை எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் படத்தில் விஜய்யின் மாஸ் ஹீரோ ஸ்டேட்ஸுக்கு ஏற்றவாறு பஞ்ச் வசனங்கள் வைக்கிறாராம் முருகதாஸ். பஞ்ச் வசனங்களுக்கும் விஜய்க்கும் அண்மை காலமாக ஏழாம் பொருத்தமாக உள்ளது. அவர் பாட்டுக்கு படத்தில் ஏதாவது பஞ்ச் விட அது அவருக்கே திரும்பி வந்துவிடுகிறது. இந்நிலையில் கத்தி படத்தில் நச்சென்று பஞ்ச் வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கத்தி படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. படத்திற்கு 'கொலவெறி' புகழ் அனிருத் இசையமைத்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஜினி படத்தில் நடிக்க காத்திருக்கிறேன் சோனாக்ஷி அதிரடி! Posted: 28 Apr 2014 03:04 AM PDT
ரஜினி பட ஷூட்டிங் துவங்குவதற்காக நடிகை சோனாக்ஷி சின்ஹா காத்திருக்கிறாராம். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். ரஜினியின் ஸ்டைல் குருவான இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி. இது குறித்து சோனாக்ஷி கூறுகையில், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அது எனக்கு கிடைத்துள்ளது. மே மாதம் ஷூட்டிங் துவங்குவதற்காக காத்திருக்கிறேன். புது மொழி, புது மக்கள் மற்றும் புது துறையில் நடிக்கவிருக்கிறேன். இந்த படத்தை தமிழில் எடுக்கிறார்கள். இந்தியிலும் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார். இந்திய சர்வதேச விருது விழாவில் கலந்து கொண்ட சோனாக்ஷி ஓய்வு எடுக்க வெளிநாடு சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பியதும் ரஜினி படத்தில் நடிக்கிவிருக்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேனீக்களில் ஆடையணிந்து தெருக்களில் உலாவரும் பெண்!!! Posted: 28 Apr 2014 02:09 AM PDT |
| மனிதர்களுக்கே சவால் விடும் இந்த நாயின் சாகசத்தை பாருங்க! Posted: 28 Apr 2014 01:59 AM PDT |
| மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 4வது தோல்வி: பேட்டிங்கில் மீண்டும் சொதப்பல்! Posted: 28 Apr 2014 01:46 AM PDT
ஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசன் 16வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் பரிதாபமாக தோற்றது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, ஆதித்யா தாரே களமிறங்கினர். ரோகித் 4 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். தாரே 8 ரன் எடுத்து பார்னெல் வேகத்தில் டிகாக் வசம் பிடிபட்டார். கோரி ஆண்டர்சன் 13, ராயுடு 14, மைக்கேல் ஹஸி 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். மும்பை அணி 13.5 ஓவரில் 63 ரன் மட்டுமே எடுத்து 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஓரளவு தாக்குப்பிடித்த போலார்டு - கவுதம் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. கவுதம் 22 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்பஜன் 10 ரன் எடுத்த நிலையில், காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன் மட்டுமே எடுத்தது. போலார்டு 33 ரன் (30 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஜாகீர் கான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் உனத்காட் 2, நதீம், பார்னெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டிகாக், முரளி விஜய் இருவரும் துரத்தலை தொடங்கினர். டிகாக் 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய முரளி விஜய் 40 ரன் எடுத்து (34 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ரோகித் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். மலிங்கா வீசிய 16வது ஓவரில் டுமினி (19 ரன்), கார்த்திக் (2 ரன்) இருவரும் அடுத்தடுத்து வெளியேறினர். எனினும், உறுதியுடன் விளையாடிய கேப்டன் கெவின் பீட்டர்சன் - கேதார் ஜாதவ் ஜோடி வெற்றியை உறுதி செய்தது. டெல்லி அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து வென்றது. பீட்டர்சன் 26 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜாதவ் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணிக்கு இது 2வது வெற்றியாகும். நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 4வது தோல்வியை பதிவு செய்தது. டெல்லி வீரர் முரளி விஜய் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்டட்கர்ட் நகரில் நடந்த போர்ஷே டென்னிஸ்: மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம்! Posted: 28 Apr 2014 01:31 AM PDT
ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்த போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் செர்பியாவின் அனா இவானோவிச்சை வீழ்த்தினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனித உரிமை மீறல் விவகாரம்: நான்கு ஆண்டுகள் இலங்கையை கண்காணிக்க ஐ.நா.சபை முடிவு! Posted: 28 Apr 2014 12:45 AM PDT
இலங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அந்த நாட்டை 4 ஆண்டுகள் கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது. இலங்கையில் இறுதி கட்ட பேரின் போது அப்பாவி தமிழர்கள் கொத்து குண்டுகள் வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்தும் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தமிழக மீதான் இலங்கை ராணுவத்தினரின் அடக்கு முறையை உறுதி செய்து அதனை தடுத்து நிறுத்தும் படி அதிபர் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினார். அனால் அதனை இலங்கை மறுக்கவே ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் அந்த நாட்டுக்கு எதிராக பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்க தீர்மானம் கொண்டு வந்தது. இதனால் உலக நாடுகளின் நெருக்கடி இலங்கைக்கு அதிகரித்தது. இந்நிலையில் அந்நாட்டின் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஐக்கிய நாடுகள் சபையில் அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளார். அதில் இலங்கையை வரும் 4 ஆண்டுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், இந்த காலக்கட்டத்தில் அந்நாட்டில் அத்துமீறல் நடைபெற்றால் உலக நாடுகளின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். அவரின் அறிக்கையை அப்படியே ஏற்க ஐக்கிய நாடுகள் சபை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இலங்கைக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனிடையே நல்லிணக்க ஆணைய குழுவினரின் பரிந்துரையை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் கடும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என அந்நாட்டின் பொருளியல் நிபுணர்கள் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவை சேர்ந்த 2 பேர் சுட்டு கொலை! குவைத்தில் கோர சம்பவம்!! Posted: 28 Apr 2014 12:32 AM PDT
தனியார் நிறுவனத்தில் காவலாளிகளாக இருந்த இந்தியாவை சேர்ந்த 2 பேர் குவைத்தில் சுட்டு கொல்லப்பட்டனர். கேரளாவை சேர்ந்தவர்கள் முகமது ரஷித் ஜமாலுலாரி தாங்கல் (25) , ஷரங்காதரன் (55). குவைத்தில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணத்தை கலெக்ஷன் செய்யும் காவலர்களாக வேலை செய்தனர். நேற்று இருவரும் கலெக்ஷன் பணம் 46,238 அமெரிக்க டாலரை வாங்கிக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டிலிருந்து புறப்பட்டனர். அப்போது வெளியே முகமூடி அணிந்து காத்திருந்த 3 பேர் ஏ.கே 47 துப்பாக்கியால் இருவரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு, கையில் இருந்த அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்து தப்பியோடிவிட்டனர். இதில் இருவரும் இறந்தனர். அந்நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்திய தூதர் சுனில் ஜெயின், விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Apr 2014 12:24 AM PDT
வாடிகன் வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் போப் ஆண்டவர்கள் 2 பேருக்கு ஒரே நேரத்தில் நேற்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து இந்த விழாவில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வாடிகன் நகரத்தின் வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் போப்புகள் இருவருக்கு ஒரே நாளில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் பிரான்சிஸ் அறிவித்திருந்தார். வாழும் காலத்தில் அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய கத்தோலிக்க கிறிஸ்தவ மத குருமார்களுக்கு இத்தாலியில் உள்ள வாடிகன் 'புனிதர்Õ பட்டம் வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆட்சி மாற்றம், நோயிலிருந்து விடுதலை, ஏழ்மை மீட்சி போன்ற வியத்தகு செயல்களில் ஈடுபட்டு 2 அற்புதங்களை புரிந்த முன்னாள் போப்புகளில் சிலருக்கு புனிதர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 1958ம் ஆண்டில் இருந்து 1963 வரை போப்பாக இருந்த போப் 23வது ஜான் மற்றும் 1978ம் ஆண்டில் இருந்து 2005 வரை போப் பதவியை 27 ஆண்டுகள் வகித்த போப் இரண்டாம் ஜான்பால் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனால் வாடிகன் நகரமே விழா கோலம் பூண்டிருந்தது. நேற்று காலை நடைபெற்ற புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் போப்பாண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார். மறைந்த போப் ஆண்டவர்கள் 2ம் ஜான்பால், 23ம் ஜான் ஆகியோருக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்கினார். இதையொட்டி, வாடிகன் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில், முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக் கலந்து கொண்டார். 100 வெளிநாட்டு பிரதிநிதிகள், இத்தாலி அரசு பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். புனிதர் பட்டம் பெற்றவரின் பெயரால் உலகில் எந்த ஓர் இடத்திலும் ஆலயம் எழுப்பி அவருக்கு வணக்கம் செலுத்த கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Apr 2014 12:16 AM PDT
பௌத்த தர்மத்தில் செய்ய கூடாது என்று கூறியுள்ளதை, தமது அமைச்சு செய்யாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பௌத்த தர்மத்திற்கோ, ஏனைய மதங்களுக்கோ முரணான ஒன்றை அரசாங்கம் எப்போதும் செய்யாது. அப்படியான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வரை அப்படியான எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்க மாட்டார் எனவும் அமைச்சர் பசில் கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொதுத் தேர்தலில் விளையாட்டுத் துப்பாக்கியை காட்டியே வென்றேன்: அமைச்சர் விஜிதமுனி சொய்சா Posted: 27 Apr 2014 11:54 PM PDT
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விளையாட்டுத் துப்பாக்கியை காண்பித்தே தான் வெற்றிப் பெற்றதாக வனஜீவராசிகள் அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார். பிபில பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2001 ஆம் ஆண்டு எமது அரசாங்கம் தோல்வியடைந்த போதும் மொனராகலை மாவட்டத்தில் நாங்கள் வெற்றிப் பெற்றோம். அன்று 6 மாதங்கள் வரை என்னால் அரசாங்கத்தில் இருக்க முடியவில்லை. அப்போது என்னிடம் விளையாட்டுத் துப்பாக்கி போன்று ஒன்று இருந்தது. அதனை காட்டி அச்சுறுத்தியே தேர்தலில் வெற்றிப் பெற்றேன் என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















