Tamil Star |
- சூர்யா நடிக்கும் அஞ்சான் பாட்ஷா கதையா!!
- கன்னட நடிகர் சுதீபுக்கு விஜய்யுடன் நடிக்க ரூ.6 கோடி சம்பளமா!!!
- இத்தாலியில் நடிகை ராணி முகர்ஜி காதலருடன் ரகசிய திருமணம்!!
- கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: கிளிநொச்சி மீள்குடியேற்றம் பற்றி மூடிமறைத்த தகவல்கள் !!
- சமாதான முயற்சியில் சிக்கல்! தென்னாபிரிக்கா மீது இலங்கை அரசுக்கு சந்தேகம்!!
- கொமர்ஷல் வங்கி சாதனை! ஒரே நாளில் ATM மூலம் 205 கோடி ரூபா வழங்கியது!!
- இலங்கையில் இவ்வருட பேஸ்புக் முறைகேடுகள்!
- வியர்வை சிக்கல் அவதிப்படும் கால்பந்து வீராங்கனை கெட்லின் !
- ஹெர்ப் கிரே கனடிய முன்னாள் துணைப் பிரதமர் மரணம்!
- கர்ப்பிணி பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்ய உத்தரவிட்ட ரஷ்ய எம்.பி!
- உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாம்!!
- ஆரோக்கியம் தரும் தர்பூசணி!
- சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்: மான் கராத்தேயில் தப்புத்தப்பா குத்துச் சண்டை!!
- அர்ஜுன் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியான "2 ஸ்டேட்ஸ்" 40 கோடி ஜாக்பாட் வசூல்!!
- இந்த ஹீரோவோட கிளைமேக்ஸ்ஸை பார்க்கனுமே?… செம ஷாக் ஆகிடுவீங்க!….
- குட்டி தனுஷின் அசத்தலான கொலைவெறி பாடல்…..
- தமிழ் பாடலைப் பாடி அசத்தும் லிதுவேனிய நாட்டுப் பெண்கள்…..
- தயவுசெய்து இதயம் பலவீனமானவர்கள் இந்த விபத்தை பார்க்காதீங்க!……
- சீன பங்குகள் திடீர் சரிவு!
- அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை மடக்குவது கடினம் : வாட்சன் கணிப்பு!
| சூர்யா நடிக்கும் அஞ்சான் பாட்ஷா கதையா!! Posted: 22 Apr 2014 05:16 AM PDT
ரஜினி நடித்த பாட்ஷா கதையைத்தான் சூர்யாவுக்கேற்ற மாதிரி மாற்றி அஞ்சானாக எடுக்கிறார் லிங்குசாமி என்று தகவல் வெளியாகியுள்ளது. லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் அஞ்சான். சூர்யா - சமந்தா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்டில் வெளியாகவிருக்கும் அஞ்சானின் கதை குறித்து மீடியா பரபரப்பு கிளப்ப ஆரம்பித்துள்ளது. லிங்குசாமிக்கு ரஜினியின் பாட்ஷா படம் மீது எப்போதும் தனி ஈர்ப்பு. பல மேடைகளில், பாட்ஷா மாதிரி ஒரு ஆக்க்ஷன் படம் பண்ணனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அஞ்சான் படத்தை சூர்யாவுக்கு ஒரு பாட்ஷா என்று சொல்லும் அளவுக்கு எடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட லிங்கு, கிட்டத்தட்ட பாட்ஷாவின் பாணியிலேயே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம். அதனால்தான் படத்தின் பெரும்பகுதியை மும்பையிலேயே வைத்து எடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கன்னட நடிகர் சுதீபுக்கு விஜய்யுடன் நடிக்க ரூ.6 கோடி சம்பளமா!!! Posted: 22 Apr 2014 05:09 AM PDT
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க கன்னட ஹீரோவான சுதீப்புக்கு ரூ. 6 கோடி சம்பளமாம். கன்னட படங்களின் மொத்த பட்ஜெட்டே சில கோடிகளைத் தாண்டாது. நடிகர், நடிகைகளுக்கு தமிழ், தெலுங்கு மாதிரி பெரிய சம்பளம் எல்லாம் தரப்படுவதில்லை. இந் நிலையில் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கத்தி படத்தின் தயாரிப்பாளர் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடியை வேறு சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார். இதனால் கத்தி படத்திற்கு கத்திக்குத்து விழும் என்று கிசுகிசுக்கிறார்கள். விஜய் கத்தியை முடித்துவிட்டு சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் மயிலு ஸ்ரீதேவியும் நடிக்கவிருக்கிறார். கன்னட முன்னணி ஹீரோவான சுதீப் சிம்புதேவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் விஜய் கதாபாத்திரம் போன்று முக்கியத்துவம் உள்ளதாம். சுதீப் நான் ஈ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புதேவன் படத்தில் நடிக்க சுதீப்பின் சம்பளம் ரூ. 6 கோடியாம். இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் கன்னட நடிகர் என்ற பெருமையை சுதீப் பெற்றுள்ளார். விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே அல்லது ஸ்ருதி ஹாஸனை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம். இடையே பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமானதாக வேறு செய்திகள் வந்தன. ஹீரோயின் யார் என்பதை சிம்பு தான் தெளிவுபடுத்த வேண்டும். சிம்புதேவன் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போதைக்கு விஜய் 58 என்று பெயர் வைத்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இத்தாலியில் நடிகை ராணி முகர்ஜி காதலருடன் ரகசிய திருமணம்!! Posted: 22 Apr 2014 05:04 AM PDT
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தனது காதலர் ஆதித்யா சோப்ராவை ரகசிசயமாக திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியும், மறைந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான யஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்யா சோப்ராவை காதலித்து வந்தார். ஆதித்யா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர். ஆதித்யாவும், ராணியும் காதலித்தது பாலிவுட் அறிந்த கதை. ஆதித்யாவும், ராணியும் தங்கள் காதலை பல ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தனர். அவர்களை பொறுத்த வரை தான் அது ரகசியம். ஆனால் பாலிவுட்டில் அனைவருக்கும் அவர்கள் விவகாரம் பற்றி தெரியும். யஷ் சோப்ரா மறைவுக்கு பிறந்த நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சத்ருகன் சின்ஹா மேடையில் பேசுகையில் ராணியை ராணி சோப்ரா என்று அழைத்தார். அது ராணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ராணியும், ஆதித்யாவும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாகவும் ராணியின் மார்க்கெட் பாதிக்காமல் இருக்க அதை வெளியே தெரிவிக்காமல் இருப்பதாகவும் பாலிவுட்டில் பேச்சு அடிபட்டது. ஆதித்யா, ராணி முகர்ஜி எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வார்களோ என்று பாலிவுட்டில் பலரும் கேட்கத் துவங்கிவிட்டனர். இத்தனை நாட்களாக இழுத்தடித்த ஆதித்யாவும், ராணியும் ஒருவழியாக நேற்று இரவு இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 22 Apr 2014 04:51 AM PDT
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் கிளி. கூட்டுறவு சபை மண்டபத்தில் இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், அலன்டீலன், வடமாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின் தவிசாளர் நாவை.குகராஜா, சபையின் உறுப்பினர்கள் பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என மாவட்ட அபிவிருத்தி வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் கலந்துகொண்டனர். மேற்படி கூட்டத்தில் மீள்குடியேற்றம் கல்வி உள்ளுராட்சி மருத்துவம் போன்ற துறைகள் பற்றிய கருத்துக்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில் நேரம் போதாமை காரணமாக நேர்த்தியான எந்த தீர்மானங்களும் இன்றி கூட்டம் நிறைவுபெற்றுள்ளது. இங்கு மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயப்பட்ட போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மூடிமறைத்து தகவல்களை வழங்கினார். பா.உறுப்பினர் சி.சிறீதரன் இரணைதீவு பரவிப்பாஞ்சான் போன்ற கிராமங்களின் மீள்குடியேற்றம் பற்றி வினாவிய போது இரணைதீவு மக்கள் மீள்குடியேறுவதற்கு தங்களிடம் இதுவரை கோரிக்கை விடவில்லையென அரசாங்க அதிபரால் சொல்லப்பட்டுள்ளது. இதேவேளை இது தொடர்பாக மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோரும் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கருத்துக்களை தெரிவித்தனர். இரணைதீவு கடற்படையினராலும் பரவிப்பாஞ்சான் இராணுவத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்படி கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியேறுவது தொடர்பில் அரசாங்க அதிபர் மற்றும் கரைச்சி பிரதேச செயலர், பூநகரி பிரதேச செயலர் ஆகியோர் அசமந்தப் போக்கில் இருப்பதான தோற்றம் காணப்பட்டது. அடுத்து மாவட்டத்தில் கல்வி நிலைமைகள் தொடர்பாக தன்னுடைய புள்ளிவிபரங்களையும் அடைவுகளையும் கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் சமர்ப்பித்த நிலையில் மாவட்டத்தின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி சபையில் கேள்வி எழுப்பப்பட்டது. கிராமப்புற பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், எனவே இது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்ட போதும் அது உடனடி சாத்தியமில்லையென கல்வி அதிகாரிகளும், அமைச்சரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அக்கராயன், ஜெயபுரம், முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி போன்றவற்றில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிறைவு செய்ய பா.உறுப்பினர்களான சி.சிறீதரன், மு.சந்திரகுமார் ஆகியோர் ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு வேதனங்கள் வழங்கி வருவதற்கு வலய கல்விப் பணிப்பாளர் நன்றி தெரிவித்தார். அத்தோடு மாவட்டத்தில் 95 ஆசிரியர்கள் சம்பள பட்டியலில் வேதனம் பெற்றுக்கொண்டு மாவட்டத்தில் கல்வி கற்பிக்காமல் வேறு மாவட்டங்களில் பிரசவம், பாலூட்டுதல், சுகயீனம் என காரணங்களை காட்டி இருப்பதாக கல்விப்பணிப்பாளர் முருகவேலால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல ஆசிரியர்கள் மிகவும் இலகுவாக அழகாக மருத்துவச் சான்றிதழை பெற்று இணைத்து பல்வேறு காரணங்களுக்காக விடுமுறை பெற்றுக் கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிராமப்புறப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவிவரும் அதேவேளை, கிளிநொச்சி நகரை அண்டி மிகவும் குறுகிய தூரத்துக்குள் இரண்டு பாடசாலைகளில் மேலதிக வகுப்பு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையை வழிநடத்தும் கல்விப் பணிமனைக்கு இதுவரையில் நிரந்தர காணி இல்லை என்ற உண்மை நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வெளிவந்துள்ளது. இதன்போது நிரந்தர காணி பற்றிய கேள்வி எழுப்பிய பா.உறுப்பினர் சி.சிறீதரன், இந்த கூட்டத்தில் கிளிநொச்சி வலய கல்விப்பணிமனைக்கு ஒரு நிரந்தர காணிபெற நடவடிக்கைக்கான தீர்மானத்தை இன்று எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் குருகுலராஜா கல்விப் பணிமனை அமைக்கக்கூடிய இடத்தில் இன்று வேறுவேறு நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு இப்போது கிளிநொச்சி அரச செயலகம் இயங்கிவரும் நிலம் வடமாகாணசபைக்கு சொந்தமானது எனவும், அதில் கிளிநொச்சி பொது நூலகம் மற்றும் விளையாட்டுத்துறைக்கான மண்டபங்களும் அமைக்க மாகாணசபை திட்டமிடுவதாக தெரிவித்த போதும் அந்த நிலத்தை முழுமையாக உடனடியாக தரமுடியாது எனவும், அதில் தொடர்ந்தும் அரச செயலகத்தின் சில பிரிவுகள் இயங்கும் எனவும் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.இதேவேளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானமின்றி அரசாங்க அதிபர் தனது சொந்த முடிவில் காணிகளை கைமாற்றுவது தொடர்பில் சபையில் விசனம் ஏற்பட்டது. உள்ளுராட்சி தொடர்பாக ஆராய்வின் போது கரைச்சி பிரதேசசபையால் நிர்வகிக்கப்படும் சந்தைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், வட்டக்கச்சி சந்தை இன்னும் திறக்கப்படவில்லை எனவும் வட்டக்கச்சியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீதி ஒன்று பிரதேசசபை உறுப்பினர் ஒருவரால் வேலை இடைநடுவில் நிறுத்தப்பட்டதாகவும் பா.உறுப்பினர் சந்திரகுமார் கருத்துத் தெரிவித்த போது இதற்கு அங்கு பிரசன்னமாகியிருந்த தவிசாளர் குகராஜா பதிலளித்தார். சபையை நடத்துவற்கு இடையில் இருக்கி;ன்ற இடையூறுகள் குறித்தும் கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் அசமந்தப் போக்குகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார். வட்டக்கச்சி சந்தை திறக்கப்படுவது ஏன்தாமதம் ஆகின்றது என்பதற்கான காரணங்களையும் பட்டியிலிட்டார். இதன்போது மாகாணசபை உறுப்பினர் தவநாதன் தவிசாளருடன் நாகரிகமற்ற வார்தைகளுடன் முரண்பட்டார். மேலும் வைத்தியர் குறைபாடுகள் போசாக்கின்மை, வேலையற்ற பட்டதாரிகள், கிளிநொச்சி தொழில் நுட்ப கல்லூரி எனபவை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சியின் தேசிய பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானம் தினமும் வெளியாரால் பல்வேறு நிகழ்வுகளுக்கு குறிப்பாக கல்வி நிலையை குலைக்கும் களியாட்ட நிகழ்வுகளிற்கு பயன்படுத்துவது குறித்து வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையால் கடுமையான கண்டனம் விடுக்கப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்பபடுமென இணைத்தலைமைகளால் உறுதி கூறப்பட்டுள்ளன. அந்தப் பயணத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடனான சந்திப்பின் போது தனது இலங்கைக்கான பயணத் திகதியை ரமபோஷா தெரிவித்திருந்தார். இப்போது இந்த விவகாரமே அரச தரப்பினரிடையே சிக்கலானதாக மாறியிருக்கிறது. இலங்கைக்கான பயணம் குறித்து அரசதரப்புக் குழு தென்னாபிரிக்கா சென்ற போது ரமபோஷா தெரிவித்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின்னரும், தனது பயணம் குறித்து அரசுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் பயணத் திகதிகள் குறித்து கூட்டமைப்பினரிடம் அவர் எடுத்துக் கூறியிருப்பது தமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்களில் அனுசரணைப் பணியாற்றி வந்த நோர்வேயும் பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்னர் முன்வைக்கப்பட்டன. இப்போது தென்னாபிரிக்காவும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதால் தான், முன்கூட்டியே அவர்களுடன் நெருக்கமாகப் பழகி விடயங்களைத் தெரிவிக்கிறார்களா? என்தே அரச தரப்பிரினரிடையே ஏற்பட்டுள்ள சந்தேகம். எனினும் இந்தச் சிக்கலைத் திறம்படக் கையாண்டு, திட்டமிட்டபடி ரமபோஷா இலங்கை வருவார் என்றும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சமாதான முயற்சியில் சிக்கல்! தென்னாபிரிக்கா மீது இலங்கை அரசுக்கு சந்தேகம்!! Posted: 22 Apr 2014 04:43 AM PDT
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது. தென்னாபிரிக்கா பக்கச் சார்பாக நடக்க முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் அரச தரப்பினரிடம் திடீரென ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைதி முயற்சிகளில் ஒரு மூன்றாம் தரப்பாக ஈடுபடுமாறு தென்னாபிரிக்காவுக்கு இலங்கை அரசே அழைப்பு விடுத்திருந்தது. கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு வந்திருந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து இது பற்றிப் பேசினார். அதன் பின்னர் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை தென்னாபிரிக்க அதிபர் நியமித்தார். அமைதி முயற்சிகளில் மிகுந்த அனுபவம் மிக்கவரும் அதிபர் சூமாவுக்கு நெருக்கமானவருமான சிறில் ரமபோஷா சிறப்புத் தூதராக நியமனம் பெற்றார். அவரது அழைப்பின் பேரில் இலங்கை அரசதரப்புக் குழு ஒன்று தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகியது. அந்த நாட்டின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்த அந்தக் குழு, இலங்கையின் நிலைமைகள் தொடர்பிலும் விளக்கியது. அந்தப் பயணத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடனான சந்திப்பின் போது தனது இலங்கைக்கான பயணத் திகதியை ரமபோஷா தெரிவித்திருந்தார். இப்போது இந்த விவகாரமே அரச தரப்பினரிடையே சிக்கலானதாக மாறியிருக்கிறது. இலங்கைக்கான பயணம் குறித்து அரசதரப்புக் குழு தென்னாபிரிக்கா சென்ற போது ரமபோஷா தெரிவித்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின்னரும், தனது பயணம் குறித்து அரசுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் பயணத் திகதிகள் குறித்து கூட்டமைப்பினரிடம் அவர் எடுத்துக் கூறியிருப்பது தமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்களில் அனுசரணைப் பணியாற்றி வந்த நோர்வேயும் பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்னர் முன்வைக்கப்பட்டன. இப்போது தென்னாபிரிக்காவும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதால் தான், முன்கூட்டியே அவர்களுடன் நெருக்கமாகப் பழகி விடயங்களைத் தெரிவிக்கிறார்களா? என்தே அரச தரப்பிரினரிடையே ஏற்பட்டுள்ள சந்தேகம். எனினும் இந்தச் சிக்கலைத் திறம்படக் கையாண்டு, திட்டமிட்டபடி ரமபோஷா இலங்கை வருவார் என்றும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொமர்ஷல் வங்கி சாதனை! ஒரே நாளில் ATM மூலம் 205 கோடி ரூபா வழங்கியது!! Posted: 22 Apr 2014 04:36 AM PDT
இலங்கையில் ATM அட்டை இயந்திரம் மூலம் ஒரே நாளில் அதிக பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கொமர்ஷல் வங்கி சாதனை படைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதுவருடப் பிறப்பை அண்மித்த காலப் பகுதியில் அதாவது ஏப்ரல் 11ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டும் நாடெங்கும் உள்ள தனது 585 ATM இயந்திரம் மூலம் 205 கோடி ரூபாவை தனது வாடிக்கையாளர்களுக்கு கொமர்ஷல் வங்கி வழங்கியிருக்கின்றது. இது ஒரே நாளில் அதிக தொகை என்ற அதே வங்கியின் கடந்த வருட (2013) சாதனையான 179 கோடி ரூபாவை விட அதிகமாகும். தமிழ் - சிங்கள புதுவருட காலத்தில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ம் திகதி வரையான பன்னிரண்டு நாட்களில் மட்டும் அந்த வங்கி ATM இயந்திரங்கள் மூலம் ஆயிரத்தி 543 கோடி 80 இலட்சம் ரூபாவை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் இவ்வருட பேஸ்புக் முறைகேடுகள்! Posted: 22 Apr 2014 04:24 AM PDT
இவ்வருடத்தில் முதல் நாள் நான்கு மாதங்களில் முகப்புத்தகம் தொடர்பாக 500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கணினி அவசர நடவடிக்கை பிரிவு கூறியது. பொய் விவரங்களை கொடுத்து தொடங்கப்பட்ட முகப்புத்தக கணக்குகள் பற்றியதாகவே கூடுதலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அப்பிரிவு குறிப்பிட்டது. முகப்பத்தக கணக்குகளினுள் புகுந்து தாக்குதல் மற்றும் முகப்பத்தகம் தொடர்பான பயமுறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகமாக பெண்கள் அல்லது இளஞ்சிறார்;களாக உள்ளனர். முகப்புத்தகம் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுக்களை போலிஸார் விசாரித்து வருகின்றனர். முகப்பத்தகங்களை பயன்படுத்துவோர், படங்களை தரவேற்றம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்தப் படங்களை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்புக்கள் உள்ளன அவசர பிரிவு கூறியது. பெண் பிள்ளைகளின் கணக்குகளில் நுழைந்து விபர்ங்களை மாற்றிவிடுதல், படங்களை எடுத்தல், போலி கணக்குகளை உருவாக்குதல், கப்பம் கேட்டு மிரட்டுதல் என பலவகையான முறைப்பாடுகள் கிடைப்பதாக அந்தப் பிரிவு மேலும் கூறியது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வியர்வை சிக்கல் அவதிப்படும் கால்பந்து வீராங்கனை கெட்லின் ! Posted: 22 Apr 2014 04:12 AM PDT
20 வயதான கெட்லின் மெக்கொமிஷ் எனும் இந்த யுவதி, டொலேடோ பல்கலைக்கழக மாணவியாவார். அப்பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் அவர் விளங்கினார். ஆனால், விளையாடும்போது வியர்வை ஏற்பட்டால் அது அவருக்கு அலர்ஜியாகிவிடுகிறதாம். அமெரிக்காவைச் சேர்ந்த இளம் கால்பந்தாட்ட வீராங்கனையொருவர் அவரின் சொந்த வியர்வையே அவருக்கு அல்ஜியை (ஒவ்வாமை) ஏற்படுத்தும் அபூர்வ கோளாறினால் அவதிப்படுகிறார். ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த அவர், கடந்த வருடம் தனது சொந்த ஊரில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் விளையாட்டு நிகழ்வொன்றில் பங்குபற்றத் தயாரானபோது, திடீரென மயங்கி விழந்தார். தொண்டை வீங்கியதால் பேசவும் முடியாமல் போனது. அவர் டொலேடோ பல்கலைக்கழத்தில் இணைந்த பின்னரும் இவ்வாறு பல தடவை மயங்கிவிழுந்தார். பெரும்பாலும் கால்பந்தாhட்ட மைதானத்துக்கு அருகிலேயே இவ்வாறு அவர் விழுந்தார். இதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. அண்மையில்தான் மெக்கோமிஷூக்கு அவரின் சொந்த வியர்வையே அலர்ஜியாக அமைகிறது என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலைமை காரணமாக அவர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, அமெரிக்க பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளின் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைக்கும் என்.சி.சி.ஏ. எனும் அமைப்பு தடைவிதித்துள்ளது. இதனால் தனது பல்கலைக்கழக அணியினருடன் பயிற்சிகளில் ஈடுபடுகின்றபோதிலும் போட்டிகளில் பங்குபற்ற முடியாதநிலையை எதிர்கொண்டுள்ளார். ஏனினும் கால்பந்தாட்டத்தில் தீவிர ஆர்வம் கொண்ட மெக்கோமிஷ், தற்போது தனது பழைய அணியொன்றின் கால்பந்தாட்ட பயிற்றுநராக செயற்பட ஆரம்பித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹெர்ப் கிரே கனடிய முன்னாள் துணைப் பிரதமர் மரணம்! Posted: 22 Apr 2014 02:54 AM PDT
கனடிய முன்னாள் துணைப் பிரதமராகப் பணியாற்றிய ஹெர்ப் கிரே என்பவர் தனது 82வது வயதில் மரணத்தைத் தழுவியிருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மிக நீண்டகாலமாகப் பராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்களில் ஒருவாராக விளங்கியிருக்கின்றார். Gray கிட்டதட்ட 4 சகாப்தங்களாப் மத்திய அரசியலில் பங்காற்றியிருக்கின்றார் எனத் தெரியவருகிறது. இவர் 1962ம் ஆண்டில் தனது 31வது வயதில் முதன் முதலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியதுடன் இவரது அரசியல் வாழ்வு தொடங்கியிருக்கின்றது எனத் தெரியவருகிறது. இவரைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுவதானால் இவர் 12 தடவைகள் தோல்வியைத் தழுவாமல் வின்சர் மேற்குப் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பெருமைக்குரியவராவர். 2000ம் ஆண்டில் நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் இவர் 20,000 வாக்குக்களைப் பெற்றுககொண்டார் எனவும் தெரிகிறது. இவர் பல தடவைகள் அமைச்சரவையில் பங்கெடுத்திருக்கின்றார். குறிப்பாக தேசிய வருவாய், நுகர்வோர் சம்பந்தமான துறைகளில் மந்திரி பதவிகளை வகித்திருக்கின்றார் எனத் தெரியவருகிறது. Gray 1997ம் ஆண்டில் துணைப்பிரதமராகப் பதவியேற்றுள்ளார் எனத் தெரியவருகிறது. இவரது நீண்டகால அரசியல் பயணமானது இவர் எவ்வளவிற்கு ஆழமாக அரசியல் துறையை விரும்பியிருக்கின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டாகவுள்ளது. இவர்அரசியலை மட்டுமல்ல ஒரு இசை விரும்பியும்கூட. திறமையாக பியானோ வாத்தியக் கருவியை வாசிக்கும் திறமை படைத்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்திருக்கின்றார் எனவம் தெரியவருகிறது. குறிப்பாக இருதயக் கோளாறு மட்டுமல்ல புற்று நோயாலும் பீடிக்கப்பட்டிருந்திருக்கின்றார் எனத் தெரியவருகிறது. இவர் 1996ம் ஆண்டளவில் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்து பின்பு radiation therapy மூலம் குணமடைந்திருக்கின்றார் எனவும் தெரியவருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கர்ப்பிணி பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்ய உத்தரவிட்ட ரஷ்ய எம்.பி! Posted: 22 Apr 2014 02:38 AM PDT
ரஷியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் ஆத்திரமடைந்த எம்.பி ஒருவர் தனது ஆதரவாளர்களை விட்டு அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யா லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான விளாடிமிர் ஜிரோனோஸ்கி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த செய்தியாளார் சந்திப்பில் 6 மாதம் கர்ப்பிணியான ரஷியா டுடே பத்திரிக்கையின் பெண் செய்தியாளர் ஸ்டெல்லா என்பவரும் கலந்து கொண்டார். அப்போது, 'ரஷியாவிற்கு எதிராக பொருளாதார தடை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ரஷியாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் பகுதியான கிழக்கு உக்ரேனுக்கு தடை விதிக்கப்படுமா?' என ஜிரோனோச்கியை நோக்கி கேள்வி எழுப்பினார் பெண் பத்திரிக்கையாளர். இதனால் ஆத்திரமடைந்த எம்.பி. ஜிரோனோஸ்கி தனது ஆதரவாளார்களை ஓடி சென்று பெண் செய்தியாளரை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார். தலைவர் பேச்சைத் தட்டாத அவரது உதவியாளர்களும் ஸ்டெல்லாவை கீழே தள்ளியுள்ளனர். இதனை பார்த்தும் மற்ற செய்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒருவழியாக எம்.பியின் ஆட்களிடமிருந்து ஸ்டெல்லா காப்பாற்றப் பட்டார். ஆயினும், இச்சம்பவத்தால் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப் பட்ட ஸ்டெல்லா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக எம்.பி.க்கு எதிராக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போவதாக ரஷ்யா டுடே செய்தித்தாள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எம்.பியின் இந்த அநாகரீகமான செயலுக்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாம்!! Posted: 22 Apr 2014 02:18 AM PDT
உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும். மேலும் அதிக எடை உள்ள பொருட் களை தூக்கினால் தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலி அல்லது சுளுக்கு ஏற்பட்டு பாடாய் படுத்திவிடும். ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த முழங்கால் மூட்டு என்பது தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும், முழங்கால் எலும்பின் மேல்பகுதியும் இணையும் இடமே முழங்கால் மூட்டு ஆகும். தொடை முழங்காலுக்கான முக்கிய 'ஜங்ஷன் இது. நமது உடலில் அமைந்திருக்கும் பெரிய மூட்டும் இதுதான். வயதாக வயதாக தொந்தரவு தரும் மூட்டும் இதுதான். தொப்பிபோல் தட்டுப்படுகிறதே அதுதான், knee cap (Patella) எனப்படும் மூட்டுச்சில்லு. முழங்கால் மூட்டின் முக்கிய பகுதிகள் இந்த மூட்டுச்சில்லுக்கு பின்னால்தான் இருக்கின்றன. தொடை எலும்பு கீழே செல்லச்செல்ல அகன்று தடித்து, கொண்டைபோல் இருக்கும். அதன் கீழ்ப்பகுதி முழுவதையும் குருத்தெலும்பு போர்த்தியுள்ளது. இந்த கொண்டைப் பகுதி இரண்டாகப் பிரிகிறது. அவற்றின் நடுவே உள்ள சற்று பள்ளமான பகுதியில்தான் மூட்டுச்சில்லு அமைந்து மேலும் கீழுமாய் அசைகிறது. முழங்கால் மூட்டின் உள்ளமைப்பு வித்தியாசமானது. பிணைப்பு நாண்களும் (cruciatel Ligament) மெனிஸ்கஸ் எனப்படும் குஷன்களும் இந்த மூட்டில் உள்ளன. மூட்டை சுற்றி மிக மிருதுவான எலும்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த மூட்டில் சைனோவியம் என்கிற மூட்டுச் சுரப்பிப் படலம் அதிகம் உள்ளது. அதனால் அதை சார்ந்த நோய்களும் மூட்டில் வர வாய்ப்புண்டு. சிறுநீரகத்தில் ஏதாவது தொற்றுநோய் ஏற்பட்டால் கூட இந்த மூட்டில் வீக்கம் ஏற்படலாம். அவ்வளவு ஏன், நம் ஈறுகளிலோ தொண்டையிலோ பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எதிர்கொள்ள உடல், 'காக்கும் எதிர்வினைப்பொருட்களை' (Antibodies) தோற்றுவிக்கும். அவை இந்த மூட்டில் வந்து தங்கி வலியை (reactive arthritis) ஏற்படுத்தும். நமது எலும்புக்கூட்டில் எலும்புகள் கூடி இருக்கிறதே அந்த இடம்தான் மூட்டுகள். அதில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்று இருவகை உண்டு. தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு. ஓடுகிறோம். விளையாடுகிறோம். வேலைகளைப் பார்க்கிறோம். இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது. இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு போன்றவை முக்கியமானவை. மூட்டுகளில் இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம். முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும். இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மூட்டுவலிக்கு முக்கியமான காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத் தான் தேய்மானம் என்கிறோம். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது. முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது. சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தடுக்கும் முறைகள்... 1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். 2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 4. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும். 5. இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். (இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்). இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது. 6. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும். உணவுப் பழக்கம் 1. வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும். 2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம். 3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும் தவிர்க்க வேண்டியவை காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 22 Apr 2014 01:32 AM PDT
கோடை பழமாக கருதப்படும் தர்பூசணி பழம் புத்துணர்ச்சியை மட்டும் தரக்கூடிய பழம் அல்ல. வெயில் காலத்தில், உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக இது கருதப்படுகிறது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரி செய்து கொள்ள முடியும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமணி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். இதய நோய்கள் மற்றும் புற்று நோய் ஆண்டியாக்ஸிடண்ட் விகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது. இது தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி. சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. 1 கப் தர்பூசணி பழத்தில் உள்ள சத்துகள் (152.00 கிராம்) வைட்டமின் சி 16.4% பேண்டோதெனிக் அமிலம் 6.8% தாமிரம் 6.6% பயோட்டின் 5% பொட்டாசியம் 4.8% வைட்டமின் ஏ 4.8% வைட்டமின் பி 14.1% உயிர்ச்சத்து பி 64.1% மெக்னீசியம் 3.8% தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், கார்போ ஹைட்ரேட் மற்றும் பைர் ஆகியவை உள்ளது. உடல் நலத்திற்கு ஊட்டசத்து வழங்க கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதை பழமாக வாங்கியும் அல்லது பழச்சாறாகவும் சாப்பிடலாம். 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போ ஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது. கொழுப்பை குறைக்கும்: கண்களை பராமரிக்க வைட்டமின் ஏவும், மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சி யின் உதவியுடன் செயல்படுகிறது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் மேம்படுத்தும். மேலும் தர்பூசணி சதை மற்றும் விதையும் பலன் தரக்கூடியது. தர்பூசணி விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது. நம் ஊரில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது. வயகரா: தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், 'ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே...!" என்று அங்கலாய்க்கும் தகவல் இது. தர்பூசணியில் உள்ள பைட்டோ - நியூட்ரின்ட்ஸ் என்ற சத்துக்கள் உடம்பை ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல் பகுதி அதாவது வெண்மை பகுதியில் தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம். இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது ஒரு வயாகரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்சபூணி பழத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது. இதய பாதுகாப்பு: தர்பூசணியில் அது போல் உள்ள `சீட்ரூலின்' என்ற சத்து பொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனான' எனும் வேதிப் பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்தம் ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். தர்பூசணியின் பயன்கள்: கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, இரும்பு சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்பு சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச் சிறந்த வைட்டமின் சி, வைட்டமின் ஏ இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு வைட்டமின் பி6ம், பி1ம் கணிப்புக்களான பொட்டாசியம் மாங்கனீசும் உண்டு. பழத்தின் சிவப்பு பகுதியை மட்டும் கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். சிறிது உப்பும், மிளகுத் தூளும் அதன் மீது தூவியும் சாப்பிடலாம். மிகவும் எளிமையாக புத்துணர்ச்சிநட்டும் பானமாகவும் தயாரிக்கலாம். விதை நீக்கப்பட்ட தர்பூசணித் துண்டுகளை, மிக்சியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓட விட்டு குளிர் பதனப்பெட்டியில் வைத்து பரிமாறலாம். விரும்பினால் சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்: மான் கராத்தேயில் தப்புத்தப்பா குத்துச் சண்டை!! Posted: 22 Apr 2014 01:22 AM PDT
மான் கராத்தே படத்தில் குத்துச் சண்டையை தப்புத் தப்பாக எடுத்து இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் விவரம்: நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். தற்போது குத்துச்சண்டை பயிற்சி குழு நடத்தி வருகிறேன். சமீபத்தில் திரைக்கு வந்துள்ள மான் கராத்தே படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் குத்துச்சண்டையை இழிவுபடுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தப்புத் தப்பாக இந்த விளையாட்டைக் காட்டியுள்ளனர். அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெறவில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல். எனவே மான் கராத்தே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மான் கராத்தே படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அர்ஜுன் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியான "2 ஸ்டேட்ஸ்" 40 கோடி ஜாக்பாட் வசூல்!! Posted: 22 Apr 2014 01:13 AM PDT
2014 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொடக்கமாக அர்ஜுன் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான "2 ஸ்டேட்ஸ்" படம் 40 கோடி ரூபாயை வசூலில் குவித்துள்ளது. ஜாக்பாட் அடித்துள்ள இந்த படத்தை சேத்தன் பகத்தின் அதிகமாக விற்பனையான "2 ஸ்டேட்ஸ்" புத்தகத்தை மையமாக வைத்து எடுத்துள்ளனர். இப்படத்தை கரண் ஜோகர் மற்றும் சாஜித் நதியாவாலா தயாரித்துள்ளனர். ஐபில் ஜுரத்திற்கு அடுத்ததாக மிகப்பெரிய வெற்றியாக இந்தப் படம் கருத்தப்படுகின்றது.அமெரிக்கா, கனடா என்று உலக அளவில் இப்படம் வசூல் மழையில் நனைந்துள்ளது. படம் வெளியான முதல் நாள் அன்றே கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை கல்லாப் பெட்டியில் நிரப்பியுள்ளது என்று சேத்தன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தை அபிஷேக் வர்மன் என்ற இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். வெளிநாடுகளிலும் படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். உலக அளவில் கிட்டத்தட்ட 2,400 திரைஅரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது.இந்தியாவில் 2,000 திரையரங்குகளிலும், மற்ற 30 நாடுகளில் 350 திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாகி உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த ஹீரோவோட கிளைமேக்ஸ்ஸை பார்க்கனுமே?… செம ஷாக் ஆகிடுவீங்க!…. Posted: 22 Apr 2014 12:59 AM PDT |
| குட்டி தனுஷின் அசத்தலான கொலைவெறி பாடல்….. Posted: 22 Apr 2014 12:50 AM PDT |
| தமிழ் பாடலைப் பாடி அசத்தும் லிதுவேனிய நாட்டுப் பெண்கள்….. Posted: 22 Apr 2014 12:45 AM PDT |
| தயவுசெய்து இதயம் பலவீனமானவர்கள் இந்த விபத்தை பார்க்காதீங்க!…… Posted: 22 Apr 2014 12:39 AM PDT |
| Posted: 22 Apr 2014 12:18 AM PDT
சீனாவில் முதல் நிலை முதலீட்டு பங்குகள் மூலம் நிதி திரட்டுவதற்கு 28 புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக வரைவு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பங்குகள் ஒரு சதவீதத்துக்கு மேல் சரிந்தன. ஷாங்காய் காம்போசிட் புள்ளி 1.5 சதவீதம் சரிந்து 2,065.53 புள்ளியிலும், ஷாங்காய் மற்றும் சென்சென் பட்டியலில் உள்ள நிறுவன பங்குகள் 1.7 சதவீதமும் சரிவு கண்டன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை மடக்குவது கடினம் : வாட்சன் கணிப்பு! Posted: 22 Apr 2014 12:10 AM PDT
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. சஞ்சு சாம்சன் 52 ரன் (34 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), ஷேன் வாட்சன் 50 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். இதைத் தொடர்ந்து, கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி மேக்ஸ்வெல் - மில்லர் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து வென்றது. மேக்ஸ்வெல் 89 ரன் விளாசினார் (45 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்). புஜாரா 40 ரன், டேவிட் மில்லர் 51 ரன் (19 பந்து, 6 சிக்சர்) எடுத்து ஆட்ட மிழக்காமல் இருந்தனர். பெரிய ஸ்கோர் அடித்தும் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது குறித்து ராயல்ஸ் கேப்டன் வாட்சன் கூறியதாவது: மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கிங்ஸ் லெவன் அணிக்காக அவரது பங்களிப்பு அற்புதமாக உள்ளது. தற்போது உள்ள பார்மில் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இதே போல அவர் தொடர்ந்து விளையாடினால் அந்த அணியை வீழ்த்துவது என்பது முடியாத காரியம். ஆனால், கிரிக்கெட் விளையாட்டில் அடுத்து என்ன நிகழும் என்று சொல்ல முடியாது. அடுத்த முறை பஞ்சாப் அணியை சந்திக்கும்போது மேக்ஸ்வெல் அதிரடியை எங்களால் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறேன். எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடினர்.எனினும், டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டம் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டது. இவ்வாறு வாட்சன் கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















