Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நாட்டில் சமூக சீரழிவுகள் ஏற்பட்டுள்ளது: ஜனாதிபதியிடம் முறையீடு!!

Posted: 21 Apr 2014 11:31 PM PDT

Mahinda-Rajapaksa

Mahinda-Rajapaksaநாட்டில் பாரியளவில் சமூக சீரழிவுகள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், கட்டம்பே ரஜோபராமா விஹாரையின் மாநாயக்கத் தேரர் கெப்பட்டியாகொட சிறிவிமல தேரர் முறைப்பாடு செய்துள்ளார். நாட்டின் வேறு எந்தத் தலைவரினாலும் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் முன்னொருபோதும் இல்லாத வகையில் நாட்டில் பாரியளவில் சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன. ஆளும், எதிர்க்கட்சியினரின் ஊழல் மோசடிகளினால் நாட்டில் சீரழிவுகள் இடம்பெற்றுள்ளன.அரசியல்வாதிகளுக்கு எவ்வித அடிப்படைத் தகைமையும் இல்லாமை பெரும் துர்ப்பாக்கிய நிலைமையேயாகும். பௌத்த சாசனத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியிருந்தார். இதேவேளை, மாநாயக்க தேரரின் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு செயற்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உரிய தகுதியுடையவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய முயற்சிக்கப்படும். வேறும் நாடுகளில் பட்டம் அல்லது முதுநிலைப்பட்டம் அரசியல்வாதிகளின் அடிப்படைத் தகுதியாக காணப்படுகின்றது. அரசியல் சாசன அடிப்படையில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் தீர்வு வழங்கப்பட முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கணீணி ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது! புலிகளின் மீளெழுச்சி பிரசுர அச்சடிப்பு விவகாரம்!!

Posted: 21 Apr 2014 11:19 PM PDT

Canada Thief

Canada Thiefவிடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தொடர்பில் பிரசுரங்களை அச்சிட்டதாக குற்றம் சுமத்தி கணணி ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆசிரியரிடம் இருந்து மடிக்கணணி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மானிப்பாய் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சியில் போலி ரப்பர் முத்திரைகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு இளைஞர்கள் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கெய்க்ஷ்டோன் குழாய்த்திட்டம் தாமதம்: தொழில் வாய்ப்புக்களை அழித்துவிட்ட அமெரிக்க ஒபாமா நிர்வாகம்!!

Posted: 21 Apr 2014 10:32 PM PDT

Keystone

Keystoneஒபாமா நிர்வாகமானது குழாய் அமைப்பதற்கான அனுமதியை வழங்காது தாமதப்படுத்தும் நடவடிக்கையானது பல்லாயிரக்கணக்கான உயர் வேதனம் பெறக்கூடிய தொழில் வாய்ப்புக்களை அழித்துவிட்டது என அமெரிக்கக் குழாய் அமைக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிசமான வேலைவாய்ப்புக்கள் கோடைகாலத்தில் கிடைத்திருக்கக் கூடிய சந்தர்ப்பத்தை ஒபாமா அரசினது தாமதத்தினால் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கின்றார்கள். Laborers' International Union of North America என அழைக்கப்படுகின்ற யூனியன் இவ்வாறு ஒhபாமா அரசு செய்கின்ற தாமதத்தை தைரியம் அற்ற செயல் எனவும் அரசினைக் குற்றம் சாட்டியுள்ளது எனத் தெரியவருகிறது. அமெரிக்க அரசானது தற்போது குறிப்பிட்ட குழாய்த்திட்டத்திற்கான அனுமதியைக் காலவரையின்றித் தாமதப்படும் எனத் தெரிவித்திருப்பதாகவும் தெரியவருகிறது. இதனால் Keystone குழாய்த்திட்ட அனுமதியானது அடுத்த வருடத்தின் ஆரம்பம்வரை பின் தள்ளிப் போடப்பட்டுவிட்டது எனத் தெரிகிறது. குறிப்பிட்ட குழாய்த்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் பலஆயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனவும் குறிப்பிட்ட திட்டம் நிறைவடையும்போது பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்புக்களும் கிடைப்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை இழந்திருக்கின்றோம் என பணியாளர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதுடன் தமது அதிருப்தியையும் தெரிவித்திருக்கின்றார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் பொருளாதார மந்தநிலை : கனடா பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்துமா?

Posted: 21 Apr 2014 10:17 PM PDT

Dollar

Dollarகனடிய டாலரின் பெறுமதியானது ஒரு சீரானதாகவில்லாமல் தழம்பிக்கொண்டிருக்கின்ற நிலையானது ஒரு பெரிய விடையமல்ல எனக் கனடியத் தொழிலதிபர்களில் அதிகமானோர் கருத்துத் தெரிவித்திருப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக Bank of Montreal செய்துகொண்ட ஒரு ஆய்வில் 54 சதவீதமான தொழிலதிபர்கள் டாலரின் பெறுமதியில் ஏற்படுகின்ற மாற்றம் பற்றிக் கவலை கொள்வதில்லையெனத் தெரிவித்திருக்கின்றார்கள். பொருளாதாரமானது மந்தகதியில் காணப்படுகின்றது. டாலரின் தடுமாற்றமானது தம்மை எந்தவகையிலும் பாதிக்கவில்லையெனத் தெரிவித்திருக்கின்றார்கள். குறிப்பிட்ட 54 சதவீதமான தொழிலதிபர்களும் கிட்டத்தட்ட சிறு தொழில்தாபனங்களின் உரிமையாளர்கள் எனத் தெரியவருகிறது. இவர்களின் நிறுவனங்கள்; குறைந்தளவு ஏறக்குறைய 50 பணியாளர்கள்வரையில் தொழில்புரியும் தாபனங்கள் எனத் தெரியவருகிறது. ஆனால் 55 சதவீதமான தொழிலதிபர்கள் குறிப்பிட்ட கருத்திற்கு எதிரான கருத்தினையும் தெரிவித்திருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. அதே நேரம் கனடிய டாலரில் ஏற்படுகின்ற மாற்றமானது தொழில்துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 27 சதவீதமான தொழிலதிபர்கள் டொலரின் பெறுமதி குறைவடைவதனால் தாம் தொழில்கள் மூலமாக அடைகின்ற நன்மைகள் குறைவடைகின்றன எனத் தெரிவித்திருக்கின்றனர். அதே நேரம் 18 சதவீதமான தொழிலதிபர்கள் கனடிய டாலர் தடுமாறிக்கொண்டிருக்கின்ற காலங்களில் தமது தொழில்கள் மிகவும் வீழ்ச்சியடைகின்றன என நம்புவதாத் தெரிவித்திருக்கின்றன. BMO தலமை பொருளியலாளர் Doug Porter ரின் கருத்துப்படி டாலரின் பெறுமதி வீழச்சியானது உற்பத்தியாளர்களுக்குச் சாதமாகவும் நுகர்வோருக்குப் பாதகமாகவும் அமைகின்றது எனத் தெரிவித்திருக்கின்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கலிபோர்னியாவில் இருந்து ஹவாயி வரை விமானத்தின் சக்கரங்களுக்கு அருகே அமர்ந்து பயணித்த பையன்!!

Posted: 21 Apr 2014 05:11 AM PDT

Hawai-Airlines

Hawai-Airlinesஅமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் அமர்ந்தவாறு 16 வயதுப் பையன் ஒருவன் திருட்டுத் தனமாக பயணம் செய்துள்ளான். உறையும் குளிரில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாயி வரை 5 மணி நேரப் பயணத்தை இந்தப் பையன் கடந்து வந்துள்ளதாக ஹவாயி காவல்துறையினர் தெரிவித்தனர். ஹவாயின் மோயி விமானநிலையத்தில் எந்தவிதமான அடையாள ஆவணங்களும் இன்றி இந்தப் பையன் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு துறை (FBI) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பசிபிக் சமுத்திரத்தைக் கடந்துவந்த பயணத்தில் வரும்வழியில் போதியதளவு பிராணவாயு (ஒக்ஷிஜன்) இல்லாமல் மயங்கியிருந்த அந்தப் பையனுக்கு விமானம் தரையிறங்கும்போது நினைவு திரும்பியுள்ளது. அவன் உயிருடன் இருக்கிறான் என்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் என்று ஹவாயி ஏர்லைன்ஸ் விமானசேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதுபற்றி பையனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

மலேசிய விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு: 166 பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன!!

Posted: 21 Apr 2014 04:55 AM PDT

Malasiya-Airlines

Malasiya-Airlinesமலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரகத்தை சேர்ந்த எம்.எச்.192 என்ற மலேசிய பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை தரையிறக்குவதற்கான கியர் இயங்காமையால் நடுவானில் சுமார் நான்கு மணிநேரம் வட்டமிட்டுகொண்டிருந்த மலேசிய விமானம் நீண்டநேர முயற்சியின் பின் எவ்விதமான பாதிப்புகளுமின்றி தரையிறக்கப்பட்டது என்று மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் பெங்களூருக்கு 166 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்தது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஏனைய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே அந்த விமானம் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி மிக கவனமாக தரையிறக்கப்பட்டது. எம்.எச்.370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமான நிலையில், மலேசிய விமானங்களில் இதுபோன்று அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலா தயாரித்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் வன்மம்!

Posted: 21 Apr 2014 04:24 AM PDT

Vijay-Sethupathi

Vijay-Sethupathiஅடுத்தடுத்து புதுப் படங்களில் ஒப்பந்தமாவதில் கவனம் செலுத்துகிறார் விஜய் சேதுபதி. கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் அவர். 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சூது கவ்வும்', இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த அவருக்கு, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் லேசான சறுக்கல். இதைத் தவிர 'வசந்தகுமாரன்', 'இடம் பொருள் ஏவல்', புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்போது பாலா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.   அந்த தகவல் வெளியான அடுத்த சில தினங்களில் அவரது அடுத்த புதுப்பட அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் படத்துக்குப் பெயர் வன்மம். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிப்பவர் கிருஷ்ணா. கழுகு படத்தில் நடித்தவர். இந்தப் படத்தை இயக்குபவர் ஜெய் கிருஷ்ணா. மறைந்த திரையுலக ஜாம்பவான் பி கலைமணியிடம் உதவியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி சுனைனா. தமன் இசையமைக்கிறார். பால பரணி ஒளிப்பதிவை செய்கிறார். இந்தப் படத்தின் கதை குறித்து ஜெய் கிருஷ்ணா நம்மிடம் கூறுகையில், "நாகர்கோவிலைச் சுற்றி நடக்கும் கதை இது. கதை என்று இதனைக் கூற முடியாது.. மனித உறவுகள்.. அவர்களின் உணர்வுகளைத்தான் இந்தப் படத்தில் பிரதானப்படுத்துகிறேன். விஜய் சேதுபதிதான் இந்தக் கதைக்கு பொருத்தமான கதை நாயகனாக இருப்பார் என இந்தக் கதையை யோசிக்கும்போதே தீர்மானித்தேன்," என்றார். கமல்ஹாஸன், கலைமணி போன்ற பெரிய இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர்களிடம் பணியாற்றியவர் ஜெய் கிருஷ்ணா. அந்த அனுபவங்களைப் பற்றிக் கூறுகையில், "கலைமணியிடம் இருந்ததே எனக்குப் பெரிய அனுபவம், தகுதி என்றுதான் கூற வேண்டும். எத்தனை எத்தனையோ வித்தியாசமான கதைகள் இருக்கின்றன.. இந்தப் படத்திலிருந்து என் பயணம் தொடங்குகிறது..." என்றார்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார் ஸ்ரீதிவ்யா!!

Posted: 21 Apr 2014 04:13 AM PDT

sri-divya

sri-divyaவருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன நடிகை ஸ்ரீதிவ்யா, அடுத்து விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். கிராமப் பிண்ணனியில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குகிறார் எஸ் எழில். தேசிங்கு ராஜாவுக்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது. இப்போது சிகரம் தொடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு, எழில் படத்துக்காக முற்றிலுமாக தன்னை மாற்றிக் கொள்ளவிருக்கிறாராம். விக்ரம் பிரபு நடித்த முதல் படம் கும்கியும் கிராமப் பின்னணியில் அமைந்ததுதான். இந்தப் படம் குறித்து இயக்குநர் எழில் கூறுகையில், "இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான காதல் படம். வழக்கமான கமர்ஷியல் விஷயங்களும் இந்தப் படத்தில் உண்டு. தஞ்சைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்குகிறோம். எம்எஸ் பாஸ்கரின் மகனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. மெல்லிசைக் கச்சேரி நடத்தும் எம்எஸ் பாஸ்கர் குழுவில் எதிர்பாராமல் பாடகராக நுழையும் விக்ரம் பிரபு, ஒரு பெண்ணில் காதலில் விழுகிறார்... ஆனால் அந்தப் பெண் ஒரு பெரிய பிரச்சினையில் இருக்கிறார்.. எனப் போகிறது கதை. அடுத்த மாதமே ஷூட்டிங் தொடங்கிவிடுவோம்," என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை வெளியிடும் உரிமையைப் ஈராஸ் நிறுவனம் பெற்றது!

Posted: 21 Apr 2014 04:08 AM PDT

EROS-International

EROS-Internationalகோச்சடையானுக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதுப் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றது ஈராஸ் நிறுவனம். லண்டனைச் சேர்ந்த ஈராஸ் நிறுவனம் தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இப்போது ரஜினி - தீபிகா நடிப்பில், சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில் வெளியாகவுள்ள கோச்சடையான் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை உலகமெங்கும் அய்ங்கரன் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடுகிறது. கோச்சடையானுக்குப் பிறகு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார் ரஜினி. இந்தப் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தை வெளியிடும் உரிமையை ஈராஸ் நிறுவனமே பெற்றுள்ளது. அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் - அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தையும் ஈராஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. படத்தைத் தயாரிப்பவர் ஏஎம் ரத்னம். விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படமான கத்தியை அய்ங்கரனும் லைக்கா புரொடக்ஷனும் தயாரிக்க, அதை வெளியிடும் உரிமை ஈராஸ் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிரீடம் படத்திற்கு பிறகு அஜீத் படத்தில் மீண்டும் விவேக்!

Posted: 21 Apr 2014 03:58 AM PDT

ajith-vivek

ajith-vivekஅஜீத்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார். கெளதம் மேனன் இயக்கத்தில், ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்கிறார். இதற்கு முன்பு கிரீடம் படத்தில் அஜித்-விவேக் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கிட்டதட்ட 13 வருடங்களுக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் விவேக் நடிக்கிறார். 2001-ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'மின்னலே' படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு கவுதம் மேனன், அஜீத்துடன் கைகோர்க்கிறார் விவேக்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வைட்டமின் ஏ சத்து உள்ள விளாம் பழம்!

Posted: 21 Apr 2014 01:32 AM PDT

elephantum

elephantumவிளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

This posting includes an audio/video/photo media file: Download Now

கல்லீரலை வலுவாக்கும் துளசி!

Posted: 21 Apr 2014 01:15 AM PDT

Thulsi-plant

Thulsi-plantகல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும். ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும். கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10-20 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்-4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும். முற்றிய நிலையில் இரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிடும். எலுமிச்சம்பழமும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை-மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுனஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும். இருதயமும் பலம் பெறும். சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது. ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமுடன் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாம்சங் கேலக்ஸி டேப் 3 10.1 டேப்லெட் நிறுவனத்தின் ஆன்லைன் கடையில் பட்டியல்

Posted: 21 Apr 2014 12:22 AM PDT

Samsung-Galaxy-Tab

Samsung-Galaxy-Tabசாம்சங் நிறுவனத்தின் இந்திய இ- ஸ்டோரில் அதன் கேலக்ஸி டேப் 3 10.1 டேப்லெட் ரூ.36.430 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி டேப் 8.0 உடன் இணைந்து கேலக்ஸி டேப் 3 10.1 டேப்லெட்டை அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி டேப் 3 10.1 டேப்லெட்டில் WXGA (1280x768) பிக்சல் தீர்மானம் கொண்ட 10.1 இன்ஞ் டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.  இதில் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2.2 இயங்குகின்றது. Wi-Fi, மட்டுமே, 3G மற்றும் LTE ஆகிய மூன்று வகைகளில் கேலக்ஸி டேப் 3 10.1 டேப்லெட் தொடங்கப்பட்டது. கடையில் பட்டியலிடப்பட்டுள்ள கேலக்ஸி டேப் 3 10.1 டேப்லெட்டில் ' Wi-Fi மட்டுமே '  என்று கூறியுள்ளது.  ஆனால் 3G பேண்டுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது, எனவே அது எந்த வேரியனட் என்று தெளிவான விவரம் இல்லை. டேப்லெட்டில் ரேம் 1GB உடன் இணைந்து 1.6GHz டூயல் கோர் இன்டெல் ஆட்டம் குளோவர் டிரெயில் + (Z2560) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு 3 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 1.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா வருகிறது. MicroSD அட்டை வழியாக 64GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடிக்கிய சேமிப்பு உள்ளது. கேலக்ஸி டேப் 3 10.1 டேப்லெட்டில் 6800mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி டேப் 3 10.1 டேப்லெட் குறிப்புகள்: WXGA (1280x768) பிக்சல் தீர்மானம் கொண்ட 10.1 இன்ஞ் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.6GHz டூயல் கோர் இன்டெல் ஆட்டம் குளோவர் டிரெயில் + (Z2560) பிராசசர், 3 மெகாபிக்சல் பின்புற கேமரா, 1.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, MicroSD அட்டை வழியாக 64GB வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடிக்கிய சேமிப்பு, ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2.2, 6800mAh பேட்டரி.

This posting includes an audio/video/photo media file: Download Now

8 பேர் பலி: மெக்சிகோ விமான விபத்து!

Posted: 21 Apr 2014 12:13 AM PDT

Air-crash

Air-crashவடக்கு மெக்சிகோவில் ஹாக்கர் 800 என்ற சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 8 பேரும் பலியானார்கள். மோசமான வானிலை காரணமாக வடக்கு மெக்சிகோவுக்கு அருகில் உள்ள சால்டிலோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முற்பட்ட போது அங்கிருந்த கிடங்கின் மேற்கூரையில் மோதியது. மோதிய வேகத்தில் விமானத்தின் எரிபொருள் பகுதி சேதமடைந்ததால் விமானம் வெடித்து சிதறியது. விபத்துக்குள்ளான விமானம் சுமார் 400 மீட்டர்கள் தூரம் வரை சிறு சிறு துண்டுகளாக தரையில் சிதறி விழுந்தது. அதில் பயணம் செய்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹாமில்டன் 3வது ஹாட்ரிக் வெற்றி! பார்முலா 1 கார் பந்தயம்!!

Posted: 21 Apr 2014 12:06 AM PDT

Lewis-Hamilton

Lewis-Hamiltonசீன கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் சாம்பியன்  பட்டம் வென்ற மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன், நடப்பு  சீசனில் தொடர்ச்சியாக 3வது வெற்றியைப் பதிவு செய்தார். ஷாங்காய்  நகரில் நேற்று நடந்த இப்போட்டியில் (மொத்தம் 54 சுற்றுகள்),  அபாரமாக செயல்பட்ட ஹாமில்டன் (1:33:28.338) முதலிடம் பிடித்து  அசத்தினார். ஏற்கனவே மலேசியா மற்றும் பஹ்ரைனில் நடந்த  பந்தயங்களில் வென்றிருந்த அவர் தொடர்ச்சியாக 3வது வெற்றியுடன்  ஹாட்ரிக் சாதனை படைத்தார். சக மெர்சிடிஸ் வீரர் நிகோ ராஸ்பெர்க் (+18.0 விநாடி) 2வது இடம்  பிடித்தார். பெராரி அணியின் பெர்னாண்டோ அலான்சோ (+23.6 வி.)  3வது இடமும், ரெட் புல் ரேசிங் - ரெனால்ட் அணி வீரர்கள்  ரிக்சியார்டோ, நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் முறையே  4வது மற்றும் 5வது இடங்களைப் பிடித்தனர். போர்ஸ் இந்தியா -  மெர்சிடிஸ் வீரர் நிகோ ஹல்கன்பெர்க் 6வதாக வந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரவி சாஸ்திரி நியமனம் : கிரிக்கெட் வாரிய விசாரணை குழு முடிவு!

Posted: 20 Apr 2014 11:53 PM PDT

Ravi-Shastri

Ravi-Shastriஐபிஎல் டி20 தொடரில் எழுந்துள்ள ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட  சர்ச்சை குறித்து விசாரணை நடத்த, இந்திய கிரிக்கெட் வாரியம்  சார்பில் 3 நபர் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்பாட் பிக்சிங் வழக்கு  தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, கிரிக்கெட் வாரியத்தின்  செயற்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. பிசிசிஐ தலைவர்  ஷிவ்லால் யாதவ் (பொறுப்பு) தலைமையில் நடந்த இந்த அவசர  கூட்டத்தில், முன்னாள் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரி, சிபிஐ முன்னாள்  இயக்குனர் ஆர்.கே.ராகவன், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி ஜே.என்.பட்டேல் ஆகியோர் அடங்கிய விசாரணைக்  குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ள விசாரணையின்போது,  இந்த 3 நபர் விசாரணைக் குழு தொடர்பான பரிந்துரையை கிரிக்கெட்  வாரியம் சமர்ப்பிக்க உள்ளது. அதை பரிசீலித்து உச்ச நீதிமன்றம் உரிய  உத்தரவுகளை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வம்பை விலைகொடுத்து வாங்கிட்டு இப்படி தலைதெறிக்க ஓடனுமா?……

Posted: 20 Apr 2014 11:41 PM PDT

Attack-feathery

Attack-feathery

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™