Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இதயச்சுமைகளை இறக்கி வைக்கும் கிளியின் குத்தாட்டம்……

Posted: 20 Apr 2014 11:31 PM PDT

Dancing-parrot

Dancing-parrot

This posting includes an audio/video/photo media file: Download Now

நூலிழையில் உயிர் தப்பும் மனிதர்கள்….

Posted: 20 Apr 2014 11:24 PM PDT

Falling-Tree-Just-Misses-People-and-a-Police-Car

Falling-Tree-Just-Misses-People-and-a-Police-Car

This posting includes an audio/video/photo media file: Download Now

கூல் ட்ரிங்ஸ்-ல குளியல் போட்டால் எப்படியிருக்கும்?…..

Posted: 20 Apr 2014 11:21 PM PDT

mentos-coke-bath

mentos-coke-bath

This posting includes an audio/video/photo media file: Download Now

முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஊடக அறிக்கை!!

Posted: 20 Apr 2014 11:16 PM PDT

Fazl-Mosque

Fazl-Mosqueமுஸ்லிம் மக்கள் மிகவும் பொறுமையுடனும், மதிநுட்பத்துடனும் செயற்பட வேண்டிய தருணம் இதுவென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது. நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பௌத்த பீடங்களின் பீடாதிபதிகள் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளிக்கப்படும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை நீங்கி, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென பிரார்த்தனை செய்ய வேண்டும். முஸ்லிம் மக்கள் சமாதானத்திற்கும் ஐக்கியயத்திற்கும் முக்கியத்தும் அளிக்கும் ஓர் இன சமூகமாகும். புனித குர் ஆனை இழிவுபடுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு அண்மைக்காலமாக குற்றம் சுமத்தி வருகின்றது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வவுனியாவில் வர்த்தகர் கைது! வர்த்தகருக்குச் சொந்தமான வணிக நிறுவனத்தையும் காவல்துறையினர் சீல் வைப்பு!!

Posted: 20 Apr 2014 11:10 PM PDT

Lock

Lockவவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தகர் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரில் உள்ள இந்த வர்த்தகருக்குச் சொந்தமான வணிக நிறுவனத்தையும் காவல்துறையினர் முத்திரையிட்டு மூடியுள்ளனர். இந்த வர்த்தகரின் கைத்தொலைபேசியில் கனடா, இந்தியா, ஏனைய பல நாடுகளில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியுள்ளதாக  காவல்துறையினர் கூறியுள்ளனர். இவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அல்லது விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களினதாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுடன் தொடர்புகளை வைத்துள்ள மேலும் பல சந்தேக நபர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கிடைத்துள்ள தகவல்களின்படி கலாநிதி பட்டங்களை கொண்டிருக்காத பலர் உயர் கல்வியாளர் நிலைகளுக்கு தரமுயர்த்தப்பட்டிக்கின்றனர் என்று கல்வி சமூக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

பல்கலைக்கழக கல்வியாளர்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை!

Posted: 20 Apr 2014 11:03 PM PDT

Professors

Professorsஇலங்கையின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்களை சர்வதேச மட்டத்தில் தரமுயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக கல்வியாளர்கள் மத்தியில் சுற்றுநிருங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இந்த திட்டத்தை இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் வரவேற்றுள்ளது. இந்த சுற்றுநிருபங்கள் இந்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகின்றன. உதவி விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் ஆகியோர் கட்டாயமாக முதுமாணி அல்லது கலாநிதி பட்டயங்களை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி கல்வியாளர்கள் இலகுவாக பதவியுயர்வுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தநிலையில் தற்போதைய திட்டத்தின்படி கல்வியாளர் ஒருவர் கலாநிதி பட்டத்தை கொண்டிருக்காவிட்டால் அவர் உதவி விரிவுரையாளர் பதவிக்கே விண்ணப்பிக்க முடியும் அதேநேரம் அவர் குறைந்தது 10 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்க வேண்டும். இதேவேளை விரிவுரையாளர் ஒருவர் 15 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்க வேண்டும். சிரேஸ்ட விரிவுரையாளர் குறைந்தது 20 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. இதற்கிடையில் கிடைத்துள்ள தகவல்களின்படி கலாநிதி பட்டங்களை கொண்டிருக்காத பலர் உயர் கல்வியாளர் நிலைகளுக்கு தரமுயர்த்தப்பட்டிக்கின்றனர் என்று கல்வி சமூக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்க்கட்சிகளுக்கு நகைச்சுவையாக மாறியுள்ளது!

Posted: 20 Apr 2014 10:51 PM PDT

Rajabakshe

Rajabaksheஅரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்க்கட்சிகளுக்கு நகைச்சுவையாக மாற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சில தசாப்தங்களாக நாடு பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. நாட்டின் அனைத்து மக்களையும் சுபீட்சமடையச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும். ஆனால் எதிர்க்கட்சிகளின் குறுகிய நோக்கங்களுக்கு இடமளிக்க முடியாது. மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி பேசினால் வேலை செய்ய நேரமிருக்காது. அபிவிருத்தித் திட்டங்களை பிரச்சாரப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம், இந்த அரசாங்கத்திற்கு கிடையாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிராந்துரகோட்டே பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய உறவின் எதிர்காலமும்! சீனாவின் புரதான பட்டுவீதியும்!!

Posted: 20 Apr 2014 10:43 PM PDT

Maritim-silk-road

Maritim-silk-roadகடந்த வாரம் வெளிவந்த செய்தியொன்றில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு புரதான பட்டுவீதியை ஒத்த ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக சீனா முனைப்போடு செயற்படுவவும் இலங்கை அதற்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை ஈழத்தமிழர்களின் தலைமைகள் சீனா இலங்கையை விழுங்குகின்றது, இலங்கையால் இனி மீள முடியாது என்ற கருத்தை முன்வைக்கின்றன. எனவே இது குறித்த செய்தியை ஆராய்ந்து அறிந்து கொள்வதற்காக லங்காசிறி வானொலி கனடாவிலுள்ள ஆய்வாளர் திரு. சுதர்மா அவர்களை இணைத்திருந்தது. சீனா எப்போதெல்லாம் இந்தியாவை ஏமாற்ற வேண்டுமோ அப்போதெல்லாம் முன்நிறுத்தும் சமாதான அடையாளமும் இந்த வீதியே என்பதோடு இலங்கையை இனி இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது என்ற தகவல் உட்பட, சீனா தான் இந்து சமுத்திரத்தின் கதாநாயகன், இனி இந்தியாவால் சீனாவுடன் போர் தொடுக்கவே முடியாதபடியான தந்திரங்களை சீனா ஏற்படுத்தியுள்ளது என்பதோடு, எவ்வாறு இலங்கை, பர்மா, பங்களாதேஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சீனா தனது பிடிக்குள் கொண்டு வந்தது என்ற உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஆய்வு நிகழ்ச்சி இது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் வாயை திறக்க முடியாத நோயினால் பிறந்த உலகின் முதல் குழந்தை!

Posted: 20 Apr 2014 10:15 PM PDT

Baby

Babyகனடாவில் பிறந்த ஒரு குழந்தை ஒரு வருடமாக வாயை திறக்க முடியாத நோயினால் அவதிப்படுகிறது. அந்த குழந்தையின் தாடை அசையாததால் வாய் திறக்க முடியாமல் இருக்கின்றது. உலகில் இதுமாதிரியான ஒரு குறை இதுவரை எந்த குழந்தைக்கும் இருந்ததில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவில் ஒண்டோரியோவில் உள்ள தம்பதிகள் Andrew and Amy. இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தை ஒன்று பிறந்து பல மணிநேரங்கள் ஆகியும் அழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்த போது, குழந்தையின் தாடை அசையாமல் இருந்தது. எனவே அந்த குழந்தையால் தன்னுடைய வாயை திறக்க முடியவில்லை. கடந்த 10 மாதங்களில் உலகின் மிகச்சிறந்த மருத்துவர்கள் அனைவரும் இந்த குழந்தையை பரிசோதித்தனர். ஆனால் யாராலும் இந்த குழந்தையின் குறையை எப்படி நிவர்த்தி செய்வது என்ற ஆலோசனையை கூறமுடியவில்லை. குழந்தையின் பெற்றோரு இதற்கென தனியாக ஒரு இணையதளம் ஆரம்பித்து, இந்த குறையை சரிசெய்யக்கூடிய ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இணையதள உபயோகிப்பாளர்கள் மூலம் தங்களது குழந்தைக்கு நல்ல ஆலோசனைகள் கிடைக்கும் என இந்த தம்பதிகள் நம்புகின்றனர். ஒண்டோரியோவின் மருத்துவர் Dr J P Vaccani அவர்கள் கூறியபோது, உலகில் இம்மாதிரியான குறையுடன் இதுவரை எந்த குழந்தையும் பிறந்ததில்லை என்றும், இதுதான் முதல் குழந்தை என்றும் கூறியுள்ளார். இந்த குழந்தையின் குறையை நீக்க உலகில் உள்ள பெரிய பெரிய மருத்துவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Posted: 20 Apr 2014 12:17 AM PDT

kohli

kohliமும்பை அணிகளுக்கு இடையேயான 5-வது ஐ.பி.எல். லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் ஹசி, டாரே, ராயுடு, சர்மா, பொல்லார்டு, கோரி ஆண்டர்சன், ஹர்பஜன் சிங், மலிங்கா, பும்ரா, ஓஜா ஆகியோரும், பெங்களூர் அணியில் பார்த்தீவ் பட்டேல், மாட்டின்சன், கோலி, யுவராஜ் சிங், டி வில்லியர்ஸ், அல்பி மோர்கல், ராணா, ஸ்டார்க், டிண்டா, சாஹல், வருண் ஆரோன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். மும்பை அணியைச் சேர்ந்த ஹசி- டாரே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். ஹசி 16 ரன்னிலும், டாரே 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த ராயுடு நிதானமாக விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அதனால் மும்பை அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்தது. சர்மா (2). பொல்லார்டு (3), கோரி ஆண்டர்சன் (18), ஹர்பஜன் சிங் (8), ஜாகீர்கான் (0), மலிங்கா (2) ரன்களில் அவுட் ஆனார்கள். ராயுடு ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 35 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி தரப்பில் ஸ்டார்க், வருண் ஆரோன், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். பின்னர் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. ஆனால் அந்த அணி தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் மாட்டின்சன் 12 ரன்னிலும், கோலி மற்றும் யுவராஜ் ஆகியோர் டக் அவுட்டிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதனால் பெங்களூர் அணி 3.5 ஓவரில் 17 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. 4-வது விக்கெட்டுக்கு பார்த்தீப் பட்டேல்- டி வில்லியரஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் விக்கெட் இழக்காமலும் அதே சமயம் ரன் அடித்தும் விளையாடினர். இதனால் ரன் விகிதம் மெதுவாக உயர்ந்தது. 10 ஓவருக்குப்பின் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் பெங்களூர் அணி 17.3 ஓவரிலேயே 116 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பார்த்தீவ் பட்டேல் 57 ரன்னுடனும், டி வில்லியர்ஸ் 45 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ஜாகீர்கான் 2 விக்கெட்டும், மலிங்கா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Posted: 20 Apr 2014 12:15 AM PDT

delhi

delhiதுபாயில் இன்று ஐ.பி.எல். லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தாவும் டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர் காலிஸ் ஆட்டமிழந்நதார். அடுத்த ஓவரில் கேப்டன் காம்பிரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பாண்டேவும் உத்தப்பாவும் அதிரடியில் ஈடுபட்டனர். இதனால் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. 48 ரன்கள் குவித்த நிலையில் பாண்டே ஆட்டமிழந்நதார். அவரை தொடர்ந்து உத்தப்பாவும் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ஷகிப் அல்ஹசன் 30 ரன்கள் குவித்தார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அகர்வால் 26 ரன்னிலும் டெய்லர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், டுமினியும் அதிரடியில் இறங்கினர். கார்த்திக் 56 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த திவாரி 8 ரன்னிலும் நீசம் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனினும் டுமினி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டுமினி 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் குவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாவ்ரிங்கா, டேவிட் பெரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

Posted: 20 Apr 2014 12:14 AM PDT

federer

federerமான்ட் கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதியில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-1, 7-6 (3) என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் டேவிட் பெரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை பந்தாடினார். கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் வாவ்ரிங்கா-பெடரர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆன்டி பிளவர் வெளியே பீட்டர் மூர்ஸ் உள்ளே

Posted: 20 Apr 2014 12:12 AM PDT

peter

peterஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 0–5 என்ற கணக்கில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக அதன் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் (ஜிம்பாப்வே) பதவி விலகினார். ஒரு நாள் போட்டிக்கான அணிக்கு இங்கிலாந்தை சேர்ந்த ஆஷ்லே ஜிலேஸ் பயிற்சியாளராக செயல்பட்டார். இதற்கிடையே புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியது. பீட்டர் மூர்ஸ், ஜிலேஸ், மிக் நீவெல், மார்க் ராபின்சன், டிரெவர் பெய்லிஸ் உள்ளிட்டோரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேர்காணல் நடத்தியது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பீட்டர் மூர்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். 51 வயதான பீட்டர் மூர்ஸ் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் ஆவார். அது மட்டுமின்றி அவர் 2007–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை இங்கிலாந்தின் பயிற்சியாளராகவும் இருந்து இருக்கிறார். இங்கிலாந்து அணியின் மோசமான தோல்விகள், அப்போது கேப்டனாக இருந்த கெவின் பீட்டர்சனுடன் பகிரங்கமான மோதல் ஆகிய காரணங்களால் அப்போது கழற்றி விடப்பட்டார். இதைத் தொடர்ந்து லங்காஷைர் கவுண்டி அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிந்தார். கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் லங்காஷைர் அணி 2011–ம் ஆண்டு பட்டம் வென்றது. 77 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அந்த அணி இந்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதில் பீட்டர் மூர்சின் பங்களிப்பு மகத்தானது. இது தான் அவரை மீண்டும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் அரியணையில் உட்கார வைத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை ஹன்சிகா கையை பிடித்து இழுத்து ரகளை…

Posted: 19 Apr 2014 11:54 PM PDT

hansika

hansikaநடிகை ஹன்சிகா கையை பிடித்து இழுத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. இந்த படத்தில் ஜெயப்பிரதா மகன் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். இதன் பாடல் காட்சியொன்றை கோவா கடற்கரையில் படமாக்கினர். சித்தார்த்தும், ஹன்சிகாவும் ஆடிப்பாடுவது போல் இந்த காட்சியை எடுத்தனர். அப்போது படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் கூடினர். அவர்கள் ஹன்சிகாவை பார்த்து விசிலடித்தபடி நின்று கொண்டு இருந்தனர். திடீரென்று கூட்டத்தினர் ஹன்சிகாவிடம் நெருங்கி போய் ஆட்டோகிராப் கேட்டனர். சிலர் ஹன்சிகா கையை பிடித்து இழுத்து அத்துமீறினார்கள். அவர்கள் பிடியில் சிக்கி ஹன்சிகா தவித்தார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதறினார்கள். பாதுகாவலர்கள் விரைந்து போய் ஹன்சிகாவை முற்றுகையிட்ட கூட்டத்தினரை பிடித்து இழுத்தனர். ஹன்சிகாவை அவர்கள் பிடியில் இருந்து மீட்டார்கள். பின்னர் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தன்ர. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து ஹன்சிகா இன்னும் மீள வில்லை. ஏற்கனவே ஒரு முறை ரசிகர்களிடம் இது போல் சிக்கி ஹன்சிகா மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நீச்சல் உடையில் நடிகை தமன்னா?

Posted: 19 Apr 2014 11:53 PM PDT

thamanna

thamannaநடிகை தமன்னா கும்ஷகல் என்ற இந்திப் படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார். தமன்னாவுக்கு 24 வயது ஆகிறது. தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இரு மொழிகளிலும் கவர்ச்சிக்கு எல்லைக்கோடு வைத்து இருந்தார். முத்த காட்சியிலும் நீச்சல் உடையிலும் நடிக்க வில்லை. ஆனால் தற்போது முதல் தடவையாக இந்தி படத்தில் நீச்சல் உடையில் வருகிறார். சமீபத்தில் இந்தி, தெலுங்கு படங்களில் கலக்கும் இலியானா நீச்சல் உடையில் போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு படங்கள் குவிகிறதாம். இந்த போட்டியை சமாளிக்கவே தமன்னா நீச்சல் உடையில் நடிக்கிறாராம். படத்தின் இயக்குனர் சாஜித்கான் தயங்கியபடி நீச்சல் உடையில் நடிக்க முடியுமா என தமன்னாவிடம் கேட்டாராம். அவர் மறுப்பு சொல்லாமல் சம்மதம் தெரிவித்தாராம். இந்த படத்தில் சயீப் அலிகான், பிபாசாபாசு, ரிதேஷ் தேஷ்முக் போன்றோரும் நடிக்கின்றனர். இந்த படம் தமன்னாவுக்கு முக்கியத்துவமாக இருக்கும் என்கின்றனர். இதன் மூலம் இந்திப்பட மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ராஜா – அம்ரிதா திருமணம் சென்னையில் நடக்கிறது

Posted: 19 Apr 2014 11:52 PM PDT

raja-amirtha

raja-amirthaதமிழில் ஜெகன்மோகினி படத்தில் நமீதா ஜோடியாக நடித்தவர் ராஜா. கண்ணா படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக உள்ளார். ராஜாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மண மகள் பெயர் அம்ரிதா. இவர் கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள். ராஜா, அம்ரிதா திருமணம் வருகிற 25–ந்தேதி சென்னையில் நடக்கிறது. ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர். திருமணத்துக்கு பிறகு தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க போவதாக ராஜா அறிவித்து உள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் – சிம்பு தேவன் படத்தில் ஸ்ரீதேவி

Posted: 19 Apr 2014 11:50 PM PDT

sridevi

srideviவிஜய்யை வைத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ஸ்ரீதேவி. திருமணமாகி, இரு மகள்களைப் பெற்று, அவர்களும் திருமண வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார் ஸ்ரீதேவி. கடந்த ஆண்டு அவர் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் வெளியாகி, வசூல் ரீதியாகவும் பரவாயில்லை என பேசப்பட்டது. அந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் அஜீத் நடித்திருந்தார். அப்போது நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று கூறிவந்தார். ஆனால் இப்போது நல்ல வேடங்கள் என்றால் ஓகே எனக் கூறி வருகிறார். இந்தி தவிர புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ஸ்ரீதேவி. ஏற்கெனவே ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவி. அடுத்து அவர் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதில் அவருக்கு என்ன மாதிரியான வேடம் என்ற விவரம் வெளியாகவில்லை. இதற்கு முன் கமல் படத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் கேட்டபோது அவர் ஏதோ காரணங்களுக்காக மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™