Tamil Star |
- இலங்கைக்கு 4வது இடம்! உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் நாடு!!
- ஐ.நாவின் பொதுச்சபை உந்துசக்தி: சர்வதேச மனித உரிமைகள் அறிக்கை தாக்கல்!
- பத்திரிகை உதவி ஆசிரியரும் சிக்கினார்: கோத்தபாயவின் மனைவியின் புகைப்பட விவகாரம்!
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏற்பாடு! ஆபிரிக்கக் குடியரசிற்கு சமாதானப் படைகளை அனுப்புகிறது!!
- கல்லூரியிடம் 20.5-மில்லியன் டாலர்கள் கோரி மாணவர்கள் வழக்கு: கனடா- யோர்க் பல்கலைக்கழகம் திணறல்!
- சிறிலங்கா அரசின் தடைக்கு எதிராக தகுந்த நடவடிக்கை – கனடியத் தமிழர் பேரவை
- ‘மான் கராத்தே’ விற்கு எதிராக வழக்கு: குடிக்கிற படத்துக்கு வரிவிலக்கா?
- ஒருவழியா உறுதி செய்த சவுந்தர்யா! மே 9-ம் தேதி கோச்சடையானின் தாண்டவம் ஆரம்பம்!!
- குழந்தையின் தைரியமும்: நாயின் அறியாமையும்!
- பூனையின் விளையாட்டுதனம் பயத்தை ஏற்படுத்துமா!
- ஊடக தாக்குதலுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி: சந்திரிக்காவுக்கு எதிராக!
- Watchdog எச்சரிக்கை ! கனடா செய்தித் துறை CBC யில் 600 தொழிலாளர்கள் பதவியிழப்பு!!
- இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்
- உலர் திராட்சைகளை சாப்பிடுங்க: விளையாட்டு வீரர்களுக்கு டிப்ஸ்!
- மெயிலை திரும்பப் பெற வழிகள்: ஜிமெயிலை ஹேக் செய்துவிட்டால்!
- சந்தோஷத்தில் வடிவேலு! ஜெயா டிவி அழைப்பு…
- ஆண்ட்ரியாவுக்கு தமிழ்ப்பால் ஊட்டிய குரு கமல்!
- ஸ்ரீதிவ்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன் !
| இலங்கைக்கு 4வது இடம்! உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் நாடு!! Posted: 10 Apr 2014 11:09 PM PDT
உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் நபர்கள் இருக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் பிரஜைகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் செக்குடியரசு முதலாம் இடத்தை வகிக்கின்றது. இலங்கையைச் சேர்ந்த பிரஜைகள் அதிகளவில் மதுபமானம் அருந்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மைக் காலமாக இலங்கையில் மதுபான உற்பத்தியின் அளவும் உயர்வடைந்துள்ளன. போதைப் பொருளுக்கு முற்றுபுள்ளி என்ற அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் மதுபான பயன்பாடு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நாவின் பொதுச்சபை உந்துசக்தி: சர்வதேச மனித உரிமைகள் அறிக்கை தாக்கல்! Posted: 10 Apr 2014 10:57 PM PDT
சர்வதேச மனித உரிமைகள் அறிக்கைகளுக்கு கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மீளாய்வு திட்டத்தின் ஊடாக உந்துசக்தி கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுப்பு நாடுகள் தமது மனித உரிமை மீறல்களை மதித்து நடக்கின்றன என்பது குறித்து மீளாய்வு செய்து அதனை வலிமைப்படுத்தும் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கடந்த புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியது. இந்த யோசனையின்படி, ஜெனீவாவை தளமாகக் கொண்ட 10 இணக்க அமைப்புக்களை புதுப்பிப்பதே நோக்கமாக உள்ளது. இந்த இணக்க அமைப்புக்கள், உறுப்பு நாடுகள் சர்வதேச மாநாட்டு விழுமியங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றன. குறிப்பாக சித்திரவதைக்கு எதிராகவும் சிறுவர் உரிமைகள் தொடர்பாகவும் நாடுகள் எவ்வாறு நடந்துக்கொள்கின்றன என்பதை இந்த அமைப்புக்கள் மீளாய்வு செய்கின்றன. அதாவது இந்த அமைப்புக்கள், சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு திட்டத்தின் இதயங்களாக விளங்குகின்றன. இவை, உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் குறித்த உடனடியாகவே எச்சரிக்கைகளை விடுப்பது, மனித உரிமைகளுக்கான வழிமுறைகளை ஏற்படுத்துதல் போன்ற கடமைகளை கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த அமைப்புக்கள் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை சிவில் குழுக்கள், ஜெனீவாவின் அமர்வுகளில் பங்கேற்கும் அரசுகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை மையமாகக் கொண்ட முறையான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்படும். அத்துடன் இந்த அமைப்புக்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கான பரிந்துரைகளையும் வழங்கும் அதிகாரத்தை கொண்டிருக்கின்றன என்று நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த புதன்கிழமையன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனையின்படி ஜெனீவாவின் இணக்க அமைப்புக்களுக்கு தகவல்கள் மூலம் பங்களிப்பு செய்யும் தனிப்பட்டோர் மற்றும் குழுக்களுக்கு எதிராக செயற்படல், அச்சுறுத்தல் விடுத்தல், சிவில் குழுக்களின் தகவல் வழங்குதலை தடுத்தல் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தகவல்களை வழங்கும் மனித உரிமை காப்பாளர்களை நோக்காக கொண்டு அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் கண்டிக்கப்பட்டுள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பத்திரிகை உதவி ஆசிரியரும் சிக்கினார்: கோத்தபாயவின் மனைவியின் புகைப்பட விவகாரம்! Posted: 10 Apr 2014 10:46 PM PDT
பாதுகாப்பு செயலாளரின் மனைவி தொடர்பில் தமது பத்திகையில் படம் ஒன்றை பிரசுரித்தமை குறித்து லக்பிம பத்திரிகையின் உதவி ஆசிரியரும் நேற்று பாதுகாப்பு தரப்பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஏற்கனவே பத்திரிகையின் ஆசிரியர் சமன் வாக ஆராச்சியும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். சிவில் பாதுகாப்பு நிகழ்வு ஒன்றின்போது பாதுகாப்பு செயலாளரும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் அமர்ந்திருக்கும் படம் குறித்த பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்றும் ஒரு பெண் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கும் ஒரு ஆவணத்தை மையமாகக் கொண்டு அது போலி நாணயத்தாளா? என்ற தலைப்பை பத்திரிகை வெளியிட்டிருந்தது. இது தொடர்பிலேயே லக்பிக ஆசிரியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள லக்பிம பத்திரிகையின் ஆசிரியர் வாக ஆராயச்சி, தாம் படத்துக்கு கீழ் இருந்த தலைப்பை கவனிக்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்த படம் பிரசுரிக்கப்பட்டமைக்காக தாம் அடுத்த நாள் பிரசுரத்தில் மன்னிப்பு கோரியமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏற்பாடு! ஆபிரிக்கக் குடியரசிற்கு சமாதானப் படைகளை அனுப்புகிறது!! Posted: 10 Apr 2014 09:34 PM PDT
சில ஆண்டு காலமாக மத்திய ஆபிரிக்காப் பகுதியில் நெருக்கடிகள் அதிகதிர்திருக்கின்றன என்பதை அவ்வப்போது பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக இந்தப் பகுதியில் இனம் சம்பந்தமான பிரச்சினை தோன்றியுள்ளது. முஸ்லீம் மக்களுக்கும் கிறிஸத்தவ மக்களுக்குமிடையில் வன்முறைகள் வெடித்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது மத்திய ஆபிரிக்காவிற்குச் சமாதானப் படைகளை அனுப்புவதற்கு ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. குறிப்பாக 12,000 பலமிக்க துருப்புக்களை அனுப்புதவது என ஒருமித்த தீர்மானத்தை எடுத்துள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10,000 ஐக்கிய நாடுகளின் துருப்புக்களும், 1,800 பொலிஸ் அதிகாரிகளும் ஆபிரிக்க யூனியனைச் சேர்ந்த வீரர்கள் 5,000 பேரும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் எனத் தெரிகிறது. இவற்றைவிட 2000 பிரான்ஸ் நாட்டினது 2,000 துருப்புக்களும் ஐக்கிய நாடுகளின் படைகளுக்கு ஆதரவளிக்கும்வகையில் பங்காற்றவிருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆபிரிக்காவில் 2013ம் ஆண்டில் இருந்து நெருக்கடிகள் தோன்றியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக முஸ்லீம் கிளர்ச்சிக்காரர்கள் அதிகாரத்தை எடுத்து அங்கு ஒரு கொடுமையான ஆட்சியை நடாத்திவந்தார்கள். ஆனால் பின்பு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அந்த கிளர்ச்சிக்காரர்களின் ஆட்சி தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்த்தவ மக்களது வன்முறை தலைதூக்கியிருக்கின்றது. இந்த நிலையில் முஸ்லீம் மக்கள் பல ஆயிரக்கணக்கில் இடம்பெயருக்கின்ற கட்டத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது. இந்த நிலையில சாதாரண பொது மக்கள் பல மனித உரிமை மீறல்கள், தக்குதல்கள் போன்றவற்றை எதிர்நோக்கியிருக்கின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நெருக்கடி நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பினை வழங்குவதற்கும் ஐக்கிய நாடுகளின் துருப்புக்கள் தேவை என்பதனால் அவர்கள் அங்கு அனுப்புப்படவுள்ளனர். ஆனால் சமாதானத் துருப்புக்களும், பொலிஸ் அதிகாரிகளும் செப்டம்பர் 15ம் திகதிவரை பங்கெடுக்கமாட்டார்கள் எனவும் தெரியவருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கல்லூரியிடம் 20.5-மில்லியன் டாலர்கள் கோரி மாணவர்கள் வழக்கு: கனடா- யோர்க் பல்கலைக்கழகம் திணறல்! Posted: 10 Apr 2014 09:20 PM PDT
ரொறொன்ரோ- கடந்த மாதம் யோர்க் பல்கலைக்கழகத்தின் உள் இடம்பெற்ற சூட்டு சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இரு மாணவர்களும் அருகில் நின்ற சக மாணவர்கள் ஆறு பேர்களும் சேர்ந்து தங்களிற்கு ஏற்பட்ட கடுமையான சோதனைகள் காயங்களிற்காக பாடசாலைக்கு எதிராக 20.5-மில்லியன் டொலர்கள் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். வியாழக்கிழமை நடந்த செய்தியாளர்கள் மகாநாட்டில் சூடுபட்டு பாதிக்கப் பட்ட Qurratul "Annie " Ain Malik என்ற மாணவி தன் காலில் பதிந்த ஒரு தோட்டா இன்னமும் தனது காலில் இருக்கின்றதெனவும் மார்ச் மாதம் 6-ந் திகதி நடந்த சம்பவத்தின் பின்னர் பாடசாலைக்கு செல்ல பயமாக இருக்கின்றதெனவும் கூறியுள்ளார். "நான் யோர்க்கில் தனியாக இருண்ட பாதைவழியாக நடக்கவில்லை. யோர்க் பல்கலைக்கழக மையத்தில் எனது நண்பர்களுடன் இருந்தேன்." என இன்னமும் ஊன்று கோல்களுடன் நடமாடும் 19-வயது மாணவியான மாலிக் தெரிவித்துள்ளார். அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பாதிப்பு காரணமாக யோர்க்கைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மாணவர்களின் முக்கிய புகார்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தீயணைப்பு படையிரும் பொலிசாரும் வந்து நிலைமையை சமாளித்த பின்னரும் யோர்க் பாதுகாப்பு பிரிவினரை எங்கும் காண முடியவில்லை என கூறப்பட்டுள்ளது. எனக்கும் எனது நண்பர்களிற்கும் மட்டுமின்றி 50,000-ற்கும் மேற்பட்ட மாணவர்களின் பாதுகாப்பிற்கும் ஊறுவிளைவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட வலிக்கும் துன்பத்திற்குமாக மாலிக் 18-மில்லயன் டொலர்கள் நஷ்டஈடு கோரி பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இவரது சினேகிதியும் சகமாணவியுமான 20-வயதுடைய நம்ரா மாலிக் வெடித்து சிதறிய உலோகப் பொருட்களினால் காயப்பட்டுள்ளதால் ஏற்பட்ட வலி துன்பம் காரணமாக 1-மில்லியன் டொலர்கள் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஏனைய ஆறு மாணவர்களும் துப்பாக்கி பிரயோகம் நடந்த சமயம் அந்த இடத்தில் இருந்ததால் ஏற்பட்ட உளவியல் பிரச்சனைகளிற்காக வழக்கு தொடர்ந்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறிலங்கா அரசின் தடைக்கு எதிராக தகுந்த நடவடிக்கை – கனடியத் தமிழர் பேரவை Posted: 10 Apr 2014 08:18 PM PDT அண்மையில் சிறி லங்கா அரசு புலம்பெயர் தமிழரைக் குறிவைத்துச் செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பது குறித்துக் கனடிய அரசுக்கும் முக்கிய கட்சிகளுக்கும் சட்டம் மற்றும் காவற் துறை அதிகாரிகளுக்கும் கனடியத் தமிழர் பேரவை தனது கவலையையும் விசனத்தையும் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மாதம் ஐநாவின் மனிதவுரிமைக் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் பல நாடுகள் கொண்டு வந்த சிறி லங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாகக் கனடியத் தமிழர் பேரவையும் மற்றும் பல அமைப்புகளும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ‘மான் கராத்தே’ விற்கு எதிராக வழக்கு: குடிக்கிற படத்துக்கு வரிவிலக்கா? Posted: 10 Apr 2014 03:41 AM PDT
மது குடிப்பது போல சீன் வைத்துள்ள மான் கராத்தே' படத்துக்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான்கராத்தே படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்துள்ளது. ஆனால் இந்த வரிவிலக்கை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஐ. ஜெயசீலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: 'தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்குத் தமிழக அரசு கேளிக்கை வரிச் சலுகையை அளித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் வெளியான 'மான் கராத்தே' என்ற திரைப்படத்துக்கும் தமிழக அரசு கேளிக்கை வரிச் சலுகை அளித்துள்ளது. 'மான் கராத்தே' என்ற பெயர் தமிழ் பெயர் அல்ல. மேலும் அந்தப் படத்தில் ஆங்கில பாடலும் மதுபானம் உட்கொள்வதை ஊக்குவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆகவே இப்படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை அளிக்கப்பட்டது விதிமுறைகளுக்கு மாறானதாகும். எனவே 'மான் கராத்தே' படத்துக்கு அளிக்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 'மான் கராத்தே' படத்துக்கான கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி. பெருமாள் வாதிட்டார். இதனையடுத்து இந்த மனுதொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இம்மாதம் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒருவழியா உறுதி செய்த சவுந்தர்யா! மே 9-ம் தேதி கோச்சடையானின் தாண்டவம் ஆரம்பம்!! Posted: 10 Apr 2014 03:26 AM PDT
ரஜினியின் கோச்சடையான் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை சவுந்தர்யா ரஜினி மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் மே 9-ம் தேதி உலகம் முழுவதும் 9 மொழிகளில் 6000 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதன் மூலம், படம் எப்போது வரும் என்ற ரசிகர்களின் காத்திருப்புக்கும் சலிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோச்சடையான் படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முதல் முயற்சி... தொழில் நுட்ப ரீதியில் இந்தியர் யாரும் முயற்சித்திராத படம். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் 3டியில் உருவாகியுள்ள முதல் இந்தியப் படம் இது. இந்தப் படம் குறிப்பிட்ட தியேட்டர்களில் 3டியிலும், பிற தியேட்டர்களில் 2டியிலும் வெளியாகிறது. ரஜினி இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் தோன்றுகிறார். கோச்சடையான், ராணா, சேனா என்பதுதான் அவரது மூன்று வேடங்கள். மதுரை பாண்டிய மன்னர் பரம்பரைக் கதைதான் இந்தப் படம். ரஜினி ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் ஷோபனா நடித்துள்ளனர். சரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஆதி, ருக்மினி, நாகேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் அனிமேஷனில் வருகிறார்கள். ரஜினியின் ருத்ரதாண்டவ காட்சி அனிமேஷனில் இதுவரை இல்லாத புதிய முயற்சி என பாராட்டுப் பெற்றுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப் போய்விட்டது ரசிகர்களுக்கு சலிப்பை உண்டாக்கிவிட்டது. கடைசியாக ஏப்ரல் 11-ல் ரிலீஸ் என்றார்கள். பின்னர் மே 1-ல் ரிலீஸ் என்றார்கள். இப்போது மே 9-ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை சவுந்தர்யா ரஜினி மற்றும் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் உலகமெங்கும் 6000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதுவரை 4000 அரங்குகள் இந்தப் படத்துக்கு புக் செய்யப்பட்டுள்ளன. ஜப்பானில் மட்டும் 1000 அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டு, தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் 750 அரங்குகள் இதுவரை கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குழந்தையின் தைரியமும்: நாயின் அறியாமையும்! Posted: 10 Apr 2014 02:53 AM PDT |
| பூனையின் விளையாட்டுதனம் பயத்தை ஏற்படுத்துமா! Posted: 10 Apr 2014 02:40 AM PDT |
| ஊடக தாக்குதலுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி: சந்திரிக்காவுக்கு எதிராக! Posted: 10 Apr 2014 02:21 AM PDT
ஊடகங்கள் மூலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிரான தாக்குதல்களை தொடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவருக்கு நெருக்கமான அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தனக்கு நெருக்கமான அமைச்சர்களை அலரி மாளிகையை நேற்று முன்தினம் வரவழைத்த ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் அரசியலுக்கு வரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி எம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மறைமுகமாக தெரிவித்திருந்தார். இதனால் குழப்படைந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமான அமைச்சர்களான திலான் பெரேரா, மேர்வின் சில்வா, நிர்மல கொத்தலாவல, ரோஹித்த அபேகுணவர்தன, சரண குணவர்தன ஆகியோரை அழைத்து, முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊடகங்கள் மூலம் விமர்சன ரீதியான தாக்குதல்களை தொடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான ஊடக நடவடிக்கைளில, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசுடன் இணைந்து கொண்டவர்களையோ, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ஸ போன்றவர்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார். இதனடிப்படையில், புலம்பெயர் தமிழர்களின் தாளத்திற்கு ஆட்டம் போடும் ஐரோப்பிய நாடுகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை ஆட்சிக்கு கொண்டு வரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுமாறும் இதன் போது கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை, அமைச்சர் அழகபெரும வழங்கியதாக தெரியவருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Watchdog எச்சரிக்கை ! கனடா செய்தித் துறை CBC யில் 600 தொழிலாளர்கள் பதவியிழப்பு!! Posted: 10 Apr 2014 02:03 AM PDT
கனடியச் செய்தித் தாபனமாகிய CBC யில் கிட்டத்தட்ட 600 பேர்வரையில் வியாழக்கிழமை தமது பதவியை இழப்பார்கள் என Watchdog எச்சரிக்கை விடுத்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான உடனடிக் காரணம் யினது வரவுசெலவுத் திட்டத்தில் 130 மில்லியன் டாலர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது எனத் தெரியவருகிறது. CBC தாபனத்தின் ஒலிபரப்புச் சேவையின் தலைவர் தமது வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிட்டளவு நிதி துண்டுவிழுகின்றது என்பதன் விபரத்தை வியாழக்கிழமை தேசிய நகர மண்டபத்தில் தொழிலாளர்கள் மத்தியில் அறிவிப்பார் எனத் தெரியவருகிறது. 130 மில்லியனுக்கும் 150 மில்லியன் டாலர்களுக்குமிடையில் துண்டு விழுகின்றது எனவும் அவற்றை ஈடு செய்யத்தக்க வகையில் கிட்டத்தட்ட 600 தொழில்கள் வரையில் குறைக்கப்படும் என watchdog தெரிவித்திருக்கின்றது. இந்த எதிர்வு கூறல் சரியானதாக அமையுமானால் குறிப்பிட்ட தாபனத்தின் 7 சதவீதமான தொழிலாளர்கள் வேலையிழக்க வேண்டிய நிலையேற்படும் எனத் தெரிகிறது. CBC யினது ஆங்கில, மற்றும் பிரான்ஸ் மொழிகளில் இடம்பெறும் சேவையானது பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் விளையாட்டுத் துறைக்கான சேவையும் பாதிப்படைவதற்கு சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன என்ற கருத்தும் நிலவுவதாக ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது CBC யில் 6,9994 நிரந்தரப் பணியாளர்களும், 859 பதவிகள் ஒப்பந்த அடிப்படையிலும் கிட்டத்தட்ட 329 பதவிகள் தற்காலிக பதவிகளாகவும் காணப்படுகின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம் Posted: 10 Apr 2014 01:26 AM PDT
ஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும். குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது. சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. இதன் தாவரவியல் பெயர் Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. மருத்துவ பயன்கள்: சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும். விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும். சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும். 100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களின் உணவு மதிப்பீடு ஈரப்பதம்-70.5%, புரதம்-1.6%, கொழுப்பு-0.4%, மணிச்சத்து-0.9%, நார்ச்சத்து-3.1%, கால்சியம்-17மி.கி., பாஸ்பரஸ்-47மி.கி., இரும்புச்சத்து-4.31மி.கி., வைட்டமின் 'சி'-37மி.கி., வைட்டமின்'பி' காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து-23.5%.,கலோரி அளவு-10.4% ஆகும். பேன் தொல்லைக்கு சீதாப்பழத்தின் விதைகளை சிறிதளவு சீயக்காய் அறைக்கும் பொழுது சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர பேன்கள் நீங்கும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலர் திராட்சைகளை சாப்பிடுங்க: விளையாட்டு வீரர்களுக்கு டிப்ஸ்! Posted: 10 Apr 2014 01:01 AM PDT
உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. மேலும் பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவையான உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்கமளிக்க கூடிய உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக தொலைதூர ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றில் எண்டியூரன்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல்வலிமை மிக மிக அவசியம். தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றது. பொதுவாக தாக்குப்பிடிக்கத் தக்க உடல்வலிமையை பெறுவதற்காக போட்டியாளர்கள் பலவகையான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வது போட்டியாளர்கள் பலரும் செய்யக்கூடிய ஒன்று. ஆனால் அப்படியான செயற்கை இனிப்புக்களை மெல்வதை விட, இயற்கையான முறையிலேயே இப்படியான தாக்குப்பிடிக்கத்தக்க வலிமையை பெறமுடியும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதன் மூலம் விளயாட்டுப்போட்டிகளில் தேவைப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல் வலிமையை பெற முடியும் என்று இவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். உலர் திராட்சையை சாப்பிட்டவர்கள் ஒரு புறமும், தண்ணீர் மட்டும் குடித்து விட்டு செல்பவர்கள் ஒரு புறமும், வேறு சிலர் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் இனிப்புகளை சாப்பிட்டவர்கள் ஒரு புறமுமாக ஒடினார்கள். போட்டியின் இறுதியில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடியவர்களை விட, இனிப்புகளையும் உலர் திராட்சைகளையும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு நிமிட நேரம் முன்னதாக ஓடி முடித்தார்கள். இதிலிருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் இனிப்புக்களுக்கு சம்மாக உலர் திராட்சைகளும் நீடிக்கத்தக்க உடல் வலிமையை தருவதாக தெரிவித்திருக்கும் ஆய்வாளர்கள், உலர் திராட்சைகள், இயற்கையான ஊக்கசக்தியாக விளங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள். உலர் திராட்சைகளில் காணப்படும் அதிகமான பொட்டாஷியம் மற்றும் இரும்புசத்து, விளையாட்டு போட்டிகளுக்கு தேவைப்படும் நுண்ணிய சக்தியாக செயற்படுவதால் இவை போட்டியாளர்களுக்கு இயற்கையான ஊக்கமருந்தாக பயன்படுவதாகவும், செயற்கையான இனிப்புகளில் இருக்கும் கூடுதல் சர்க்கரை இதில் இல்லாமலிருப்பது கூடுதல் நன்மை பயக்கும் என்று சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மெயிலை திரும்பப் பெற வழிகள்: ஜிமெயிலை ஹேக் செய்துவிட்டால்! Posted: 10 Apr 2014 12:45 AM PDT
'ஹேக்' செய்யப்பட்ட மின் அஞ்சல் கணக்கை திரும்பப் பெற இரண்டு வழிகள் உள்ளன. 1. ஜிமெயில் கணக்கு தொடங்கியபோது உங்களுக்குச் சொந்தமான மற்றொரு மின் அஞ்சல் முகவரி கொடுத்திருந்தீர்களென்றால், Password Recovery வசதியைப் பயன்படுத்தலாம். பிறந்த தேதி, பின் கோடு போன்ற சில பெர்சனல் விவரங்கள் பொருத்தமாக இருப்பின், புதிய பாஸ்வேர்டுக்கான இணைப்பு அந்த மின் அஞ்சலுக்கு அனுப்பப்படும். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.. உங்களது ஜிமெயிலை ஹேக்கிங் செய்தவர், மாற்று மின் அஞ்சல் முகவரியையும் மாற்றியிருக்க வாய்ப்பு உண்டு. இது நடந்திருந்தால், அடுத்த வழியை முயற்சியுங்கள். 2. இந்தப் பிரச்னையை ரிப்போர்ட் செய்து, நிவர்த்தி செய்வதற்கென்றே கூகுள், வலைப்பக்கம் ஒன்றை வைத்திருக்கிறது. அதை பயன்படுத்திப் புகார் கொடுக்கலாம். பொதுவாக, அனைத்து நாட்டு சட்டங்களின்படியும் ஹேக்கிங், ஹைஜாக்கிங் போன்றவை சட்டமீறல்களே! என்றாலும், இதை ஆராய்ந்தறிந்து தண்டனை அளிப்பது மிக அரிது. மின் அஞ்சல் பாதுகாப்பு விஷயத்தில் 'வரும் முன் காப்போம்' பாலிசியே சிறந்தது. * ஜிமெயில் 2Step Authentication என்ற வசதியைக் கொடுக்கிறது. உங்களது மொபைல் எண்ணை ஜிமெயில் அக்கவுன்டுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். பிரச்னை ஏற்படும் போது, அந்த மொபைலிலேயே புதிய பாஸ்வேர்ட் பெற முடியும். மொபைல் எண் மாற்றினால், மறக்காமல் மெயிலிலும் அப்டேட் செய்துவிட வேண்டும். * ஜிமெயிலை கணினியில் இருந்து பயன்படுத்தும்போது, Account Activity என்ற லிங்க் கீழ்ப் பகுதியில் இருக்கும். அதை சொடுக்கினால், எந்த இடங்களில், எந்தெந்த சாதனங்களில் (கம்ப்யூட்டர், மொபைல், டேப்லட்) உங்களது ஜிமெயில் திறக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரியாத இடங்களில் இருந்து திறக்கப்பட்டிருந்தால், அவற்றில் இருந்து Sign Out செய்வதுடன், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றுவதும் நல்லது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சந்தோஷத்தில் வடிவேலு! ஜெயா டிவி அழைப்பு… Posted: 10 Apr 2014 12:34 AM PDT
சொல்லாம வந்துடுச்சே பொல்லாத நேரம் என்று புலம்பிக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவுக்கு, கடும் கோடையில் பன்னீர் குளியல் போட்ட சந்தோஷத்தில் திளைக்கிறார். மூன்றாண்டு வனவாசத்துக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளியாகும் படம் தெனாலிராமன். வரும் ஏப்ரல் 18-ம் படம் வெளிவரவுள்ள நிலையில் அந்தப் படத்துக்கு எதிராக சிலர் கோஷம் போட ஆரம்பித்து, வடிவேலுவுக்கு டென்ஷன் தந்தனர். நாம் தமிழர் சீமான்தான் இந்த இக்கட்டில் வடிவேலுவுக்கு உதவிக்கரம் நீட்டினார். இந்த நிலையில்தான் வடிவேலுவே எதிர்ப்பார்க்காத ஒரு இடத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அது ஆளும்கட்சியின் சேனலான ஜெயா டிவியிலிருந்து. ஆஹா.. வந்துடுச்சிய்யா விடிவு காலம் என குதூகலித்தவர், சேனல் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் ஸ்டுடியோவில் போய் நின்றுவிட்டார். வருகிறது தமிழ்ப் புத்தாண்டுக்காக ஜெயா டிவிக்கு சிறப்புப் பேட்டி வேண்டும் என்றதும், சந்தோஷமாக மனம் விட்டுப் பேசியிருக்கிறாராம். பேட்டியில் தாராளமாக அம்மாவின் புகழையும் பாடியுள்ளாராம். அம்மாவுக்கு என் நடிப்பு பிடிக்கும். திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் என் காமெடியைப் பார்த்து கைதட்டிச் சிரிச்சவுகளாச்சே அந்த மவராசி என புகழ்ந்து தள்ளியிருக்கிறாராம். ஹலோ.. யாரது வடிவேலு படத்துக்கு எதிரா கொடி பிடிக்கிறது!!This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆண்ட்ரியாவுக்கு தமிழ்ப்பால் ஊட்டிய குரு கமல்! Posted: 10 Apr 2014 12:00 AM PDT
ஏ.ஆர்.முருகதாஸின் பட்டறையில் இருந்து வந்தவர் சரவணன். எங்கேயும் எப்போதும் படம் மூலம் இயக்குனரான இவர், அடுத்து விக்ரம் பிரபுவைக் கொண்டு இவன் வேற மாதிரி என்ற படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இதனால் அடுத்தபடியாக அவர் இயக்கத்தில் நடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த சில முன்னணி ஹீரோக்கள் ஓட்டம் பிடித்து விட்டனர். அதனால், மறுபடியும் தனது முதல் பட நாயகன் ஜெய்யை வைத்தே தனது புதிய படத்தை தொடங்கியிருக்கிறார் சரவணன். அதேபோல் இந்த படத்தில் அஞ்சலியைத்தான் நடிக்க வைக்க நினைத்திருந்தாராம். ஆனால். அவரை தொடர்பு கொண்டபோது, இப்போது நான் கோடம்பாக்கத்துக்கு வந்தால் பல பஞ்சாயத்துக்களில் கைகட்டிநிற்க வேண்டியதிருக்கும். அதனால் என்னை விட்டு விடுங்கள் என்று நைசாக நழுவி விட்டாராம். அதனால், இப்போது விஸ்வரூபம் நாயகி ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆனால், ஆண்ட்ரியா நாயகி என்றதும் அதிர்ந்து போனாராம் ஜெய். காரணம், அவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது. ஆனால் ஆண்ட்ரியாவுக்கு ஆங்கிலம்தான் தெரியும். இதனால் எப்படி அவருடன் நடிப்பது என்று பயந்து போய் நின்றாராம் ஜெய். ஆனால், அதையடுத்து ஒரு சந்திப்பில் ஜெய்யைப்பார்த்த ஆண்ட்ரியா, சரளமாக தமிழ் பேசி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டாராம். அதைக்கேட்டு, நீ...நீங்க எப்படி இவ்ளோ நல்லா தமிழ் பேசுறீங்க ஆண்ட்ரியா? என்று கேட்டாராம் ஜெய். அதற்கு, நானாக, தானாக இப்படி பேசவில்லை. விஸ்வரூபம் படத்தில் நடித்தபோது கமல் சார் ஊட்டிய தமிழ்ப்பால்தான் இதற்கு காரணம். முதல் பாகத்தில் கொஞ்சம் விட்டு பிடித்தவர், இரண்டாம் பாகத்தில் கண்டிப்பாக தமிழில்தான் பேசி நடிக்க வேண்டும் என்று கழுத்தைப்பிடித்து விட்டார். அதனால், அவரிடமே தமிழை முறையாக பயிற்சி எடுத்து நடித்தேன். ஆக எனது தமிழ் ஆசிரியர் கமல் சார்தான் என்றாராம் ஆண்ட்ரியாThis posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்ரீதிவ்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன் ! Posted: 09 Apr 2014 11:49 PM PDT
விதார்த் நடித்த காட்டுமல்லி படத்துக்காக ஆந்திராவில் இருந்து தமிழுக்கு வந்தவர் ஸ்ரீதிவ்யா. ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கே வரவில்லை. அதன்பிறகு அவருக்கு கமிட்டான படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீதிவ்யா அந்த படத்தில் கிராமத்து அழகியாக வலம் வந்ததோடு, இயல்பாக நடித்து அதையடுத்து பல படங்களை கைப்பற்றியிருக்கிறார். இந்த நேரத்தில், எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் டாணா படம் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார் ஸ்ரீதிவ்யா. இதனால் எதிர்நீச்சல் படத்தில் நடித்த ப்ரியாஆனந்த், நந்திதா இருவரும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். காரணம், எதிர்நீச்சல் டீம் மீண்டும் இணையப்போகிறது என்ற செய்திகள் வெளியானபோது, அப்படியென்றால் தங்களுக்கும் இடமிருக்கிறது என்றுதான் இவர்கள் நினைத்திருந்தனர். ஆனால், இப்போது அப்படம் பற்றிய செய்திகள் வெளியானபோது அவர்கள் இருவரில் ஒருவர் பெயர்கூட இடம்பெறவில்லை. அதனால் இருவரையும் இப்போது கழட்டிவிட்டிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியையும் அதேசமயம் தங்கள் இடத்தை பிடித்துவிட்ட ஸ்ரீதிவ்யா மீது ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















