Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நள்ளிரவில் பிரசாரம்: நடிகை ஜெயப்பிரதா மீது வழக்கு

Posted: 10 Apr 2014 11:09 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் இரவு 10 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் ராஷ்ட்டிரிய லோக் தளம் வேட்பாளராக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா நள்ளிரவில் ரகசியமாக பிரசாரம் கூட்டம் நடத்தினார். இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல் என்பதால் நடிகை ஜெயப்பிரதா

கேரளாவில் வாக்களிக்க சென்ற பெண்கள் உள்பட 10 பேர் பரிதாப சாவு

Posted: 10 Apr 2014 10:49 PM PDT

கேரள மாநிலத்தில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.

2 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் ரூ.1000 உதவி: ஜெகன்மோகன் ரெட்டி

Posted: 10 Apr 2014 10:45 PM PDT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் கூறியதாவது:– என் தந்தை ராஜசேகர ரெட்டி ஆட்சியின்போது முதியோர்கள், விதவைகளுக்கு மாதம்தோறும் ரூ.200 உதவித் தொகை வழங்கப்பட்டது. அவர் இறந்த பிறகு நடந்த காங்கிரஸ் ஆட்சியில் அந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டது. நான் சீமாந்திராவில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பேன். அப்போது அந்த உதவித் தொகை ரூ.200–ஐ ரூ.700 ஆக உயர்த்தி வழங்குவேன்.

ஒடிசாவில் இன்று சோனியா–மோடி ஒரே நாளில் பிரசாரம்

Posted: 10 Apr 2014 10:27 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். இன்று அவர் ஒடிசா மாநிலத்தில் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் இன்று விமானத்தில் புவனேஸ்வரம் சென்றார். ஒடிசாவில் மயூர்பஞ்ஜ் மற்றும் பாலாசூர் மாவட்டங்களில் 2 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசார கூட்டங்களில் சோனியாகாந்தி பேசி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மிசோரமில் ஒரே ஒரு தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

Posted: 10 Apr 2014 10:26 PM PDT

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அத்துடன் ஹிரங்துர்ஜோ சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெருகிறது. இந்த தேர்தல் வாக்குப்பதிவிற்காக 1,126 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 385 வாக்குச்சாவடிகள் கிராமப்புறத்தில் அமைந்துள்ளதால் வேட்பாளர்களை வாக்காளர்கள் எளிதில் அடையாளம் காணும்

நெல்லை, திருவனந்தபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில்

Posted: 10 Apr 2014 09:25 PM PDT

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருவனந்தபுரம்-சென்னை சென்டிரலுக்கு (வண்டி எண்: 06312) வரும் 23-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருவனந்தபுரத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.10 மணிக்கு சென்னை சென்டிரலை

மோடியை பிரதமராக பார்க்க விரும்பும் மனைவி யசோதா பென்

Posted: 10 Apr 2014 08:59 PM PDT

வதோதரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, வேட்புமனுவில் தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்று குறிப்பிட்டு உள்ளார். சிறுவயதிலேயே திருமணமான இவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில், தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்த யசோதா பென்னின் தம்பி கமலேஷ் மோடி, தனது அக்காள் யசோதா பென், கணவர்

மோடியின் 3டி பிரசாரம் இன்று நடக்கிறது

Posted: 10 Apr 2014 04:57 PM PDT

தேர்தல் நெருங்குவதால் நேரமின்மை காரணமாக பிரசாரத்தில் 3டி தொழில்நுட்பத்தை கையாள பா.ஜ.க. முடிவு செய்தது. அதன்படி, 7 ஆம் தேதி முதல் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3டி தொழில்நுட்பத்தில் தனது பிரசாரத்தை மேற்கொள்வதாக இருந்த நிலையில் சில தொழில்நுட்ப கோளாறுகளால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 3டி ஹாலோகிராபிக் தொழில்நுட்பம் மூலம் நரேந்திர மோடி இன்று பிரசாரம் செய்கிறார். மோடியின் பிரசாரத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் வகையில் புல்பூர் மக்களவை தொகுதியின் ஐஸ்வர்ஷரன்

முதல் முறையாக வேட்புமனுவில் மனைவி பெயரை குறிப்பிட்டார் மோடி

Posted: 10 Apr 2014 03:38 PM PDT

நரேந்திரமோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயரை முதல் முறையாக குறிப்பிட்டுள்ளார். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் இது என்றோ பகிரங்கமாக அறிவித்தது இல்லை. குஜராத் சட்டசபைக்கு கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டபோதுகூட அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அளித்த பிரமாண பத்திரத்தில் மனைவி பற்றிய பகுதியை நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார். ஆனால் சமீபத்தில், மோடி மணமானவர், அவருக்கு 17 வயதில் திருமணமானது, அவரது மனைவி யசோதா பென் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை என தகவல்கள் வெளியாகின.

பஞ்சாப் ரயில் பெட்டி தொழிற்சாலை சாதனை

Posted: 10 Apr 2014 03:16 PM PDT

ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை தாண்டி, அதிக அளவில், ரயில் இணைப்பு பெட்டிகளை உருவாக்கி, பஞ்சாப் கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை சாதனை படைத்து உள்ளது. இதுகுறித்து கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையின் செய்திதொடர்பாளர் விரேந்திரகுமார் விஜ் கூறுகையில்:- "ரயில்வே வாரியம், 2013-2014ம் ஆண்டில், 1,500 இணைப்பு பெட்டிகளை உருவாக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயித்தது. ஆனால், 1,701 இணைப்பு பெட்டிகளை உருவாக்கி, அந்த இலக்கை மிஞ்சியுள்ளது, கபுர்தலா ரயில்

காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியை நடத்த மக்கள் வாக்களிப்பார்கள்: மணிஷ் திவாரி

Posted: 10 Apr 2014 02:23 PM PDT

டெல்லியில் மூன்றாம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையிலும், ''காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியை நடத்த மக்கள் வாக்களிப்பார்கள்'' என காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தியாளர்கள் சந்திப்பில் மணிஷ் திவாரி கூறுகையில், ''தேர்தலின் போக்கை கண்காணித்து வருகிறோம். எங்களுடைய தொண்டர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் எங்கள் எல்லோரையும்

நாட்டின் வறுமைக்கு காங்கிரஸ்தான் காரணம்: ராஜ்நாத் சிங்

Posted: 10 Apr 2014 01:48 PM PDT

பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் 'நாட்டின் வறுமை நிலைக்கு காங்கிரஸ் அரசு தான் காரணம்' என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கோன் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் கூறுகையில்:- கடந்த 10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி உட்பட காங்கிரஸ் இந்த நாட்டை 55 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டன. ஆனால் இன்னும் உலக பொருளாதார வரைபடத்தில் இந்தியா ஒரு ஏழை நாடாகவே

தேர்தல் குறித்து டுவிட்டரில் 24 மணி நேரத்தில் 6.28 லட்சம் கருத்துக்கள் பதிவு

Posted: 10 Apr 2014 12:25 PM PDT

ஒருவர் தெரிவித்துள்ள பொதுவான கருத்துக்கள், குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ள, டுவிட்டர் இணையதளம் உதவுகிறது. ஒருவர் வெளியிடும் தகவல், ஒரே நேரத்தில், அவரை பின்தொடரும் அத்தனை பேருக்கும் சென்று சேரும். இத்தகவலை கம்ப்யூட்டர் வழியாகவோ, மொபைல் வழியாகவோ நாம் பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, ஒருவர் ஒரு தகவலை வெளியிட்டால், அது அவரைப் பின்தொடரும் (பாளோயர்கள்) அத்தனை பேருக்கும் சென்று சேரும். ஒருவரை எத்தனை பேர்

ஒடிசாவில் முதல்வர் தொகுதியில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

Posted: 10 Apr 2014 10:50 AM PDT

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் உள்ள ஒரு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். சிக்கிலி கிராமத்தில் உள்ள 560 வாக்காளர்கள் மாநில அரசு தங்களது கிராமத்தில் எந்தவித வளர்ச்சியும் செய்யவில்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். "கிராமத்தில் முறையான சாலை இணைப்பு இல்லாததால் ஆம்புலன்ஸ் அல்லது அவசர உதவி வாகனங்கள் கிராமத்திற்கு வரமுடியாது. நாங்கள் பலமுறை சாலை வசதி செய்து தரவேண்டும் என

பெண்கள் பாதுகாப்பு-வேலை வாய்ப்பு கேட்கும் முதல் முறை வாக்காளர்கள்

Posted: 10 Apr 2014 10:39 AM PDT

வேலை வாய்ப்புகள், பெண்களின் பாதுகாப்பு, சிறந்த பொருளாதார கொள்கைகள், சமூக ஒற்றுமை போன்றவை முக்கிய பிரச்சனைகள் என முதல் முறையாக வாக்களித்த அதிகமான வாக்களர்கள் கூறினர். 20 வயதான அஞ்சலி வாக்களித்த பிறகு கூறுகையில், "பெண்களின் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் உள்ளன. எங்களுக்கு முக்கிய பிரச்சனை வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆகும்" என்றார். சவுரவ் ஜனனா தெரிவிக்கையில், "டெல்லி மாணவர்கள் சில வகையான இட ஒதுக்கீட்டை டெல்லி பல்கலைக்கழகத்தில் பெற வேண்டும். அடுத்த

பதி தர்மத்தை மறந்தவரால் ராஜ தர்மத்தை நிறைவேற்ற முடியுமா?: காங்கிரஸ்

Posted: 10 Apr 2014 09:56 AM PDT

வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தனது வேட்புமனுவில் தனக்கு திருமணம் ஆனது பற்றி தெரிவித்திருந்தார். இதுவரை அவரை திருமணம் ஆகாதவர் என்று அறியப்பட்ட நிலையில், இந்த தகவல் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷோபா ஓஜா கூறுகையில், "ஒரு பெண்ணிற்கு கணவர் செய்யும் நியாயமான கடமைகளைக்கூட மோடி செய்யவில்லை. அப்பெண்ணிற்கு உரிய மதிப்பை அவர் கொடுக்கவில்லை. திருமணத்தின்போது தனது மனைவிக்கு கொடுத்த

பா.ஜனதா செயற்குழுவில் இருந்து ஜஸ்வந்த் சிங்கின் மகன் நீக்கம்

Posted: 10 Apr 2014 08:59 AM PDT

பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் காங்கிரசில் இருந்து பா.ஜனதா கட்சியில் இணைந்த சோனாராம் சவுத்ரிக்கு, ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மக்களவைத் தொகுதியில்

தூக்குத் தண்டனை விவகாரம்: முலாயம் கருத்திற்கு தலைவர்கள் கண்டனம்

Posted: 10 Apr 2014 08:46 AM PDT

மொராதாபாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், கற்பழிப்பு வழக்குகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இளைஞர்கள் இந்த வயதில் தவறு செய்வது இயற்கை என்றும் கூறினார். முலாயம்சிங்கின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோடியை எதிர்த்து முக்தர் அன்சாரி போட்டியில்லை

Posted: 10 Apr 2014 08:17 AM PDT

பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி மோடியை எதிர்த்து ராயை அறிவித்தபோது எதிர்க்கட்சிகள் மோடியை தோற்கடிக்கும் நோக்கில் வாக்குப்பிளவை தடுக்க தங்கள் வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டது.

ரத்தம் தோய்ந்த கரங்களை உடையவர் மோடி: திரிணாமுல் காங்கிரஸ்

Posted: 10 Apr 2014 08:08 AM PDT

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், " திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி வாக்கு வங்கி அரசியல் வைத்து நாடகம் ஆடுகிறார். அவரது இந்த சவால் மேற்கு வங்காளத்தில் எடுபடாது" என்று தெரிவித்திருந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™