Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'தமிழகம் தான் தங்களுக்கு பாதுகாப்பான இடம் என, ஒட்டுமொத்த கொள்ளையர்களும் கூறி வருகின்றனர்'

Posted:

கருணாநிதியின் மகள் என்பதையும் தாண்டி, தனக்கென அரசியலில் தனி பாதையையும், தகுதியையும் வளர்த்துக் கொண்டவர், கனிமொழி. தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி.,யாக, தேசிய அரசியல் விவகாரங்களில், கட்சியின் கருத்தை பதிவு செய்யக் கூடியவராகவும் இப்போது வளர்ந்து நிற்கிறார். கட்சியின் நட்சத்திர பேச்சாளராக, பிரசார களமிறங்கியுள்ள அவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:* கோவையில் முதல் கட்ட பிரசாரத்தை துவங்கிய, தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'இது தான் என் கடைசி தேர்தல்' என்றும், 'தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், நீங்கள் உருப்பட மாட்டீர்கள்' என்றும் சாபம் ...

ஐ.நா.,வுடன் ஒத்துழைக்க இலங்கை மறுப்பு

Posted:

நியூயார்க்: 'இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடந்த, போர் குற்றம் குறித்து, ஐ.நா.வின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது' என, இலங்கை மறுத்துள்ளது.இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே, 2009ல் நடந்த, இறுதிக்கட்ட சண்டையின் போது, தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளன. 'இது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் தலைவர், நவநீதம் பிள்ளை, வலியுறுத்தி இருந்தார். கடந்த மாதம், சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனிவா நகரில், சர்வதேச மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், ...

தென் மாநில மின் தடையில் தமிழகம் முதலிடம்: மின் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிப்பு

Posted:

தென் மாநிலங்களில், தமிழகத்தில், அதிகளவில், மின் பற்றாக்குறை நிலவுவதால், பல மணி நேர, மின் தடை என்பது, தவிர்க்க முடியாததாக உள்ளது.தமிழகத்தில், மின் தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகம். இதனால், குடியிருப்புகளுக்கு, சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுகிறது. மேட்டூர், வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையங்களில், கூடுதல் மின்சாரம் கிடைத்ததால், ஓரளவிற்கு, மின் தடை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது, மீண்டும், இவற்றில் பழுது ஏற்பட்டுள்ளதால், மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.சில தினங்களாக, தென் மாநிலங்களில், தமிழகத்தில் தான், அதிகளவில் மின் பற்றாக்குறை ...

தேர்தல் கமிஷன் மிரட்டலுக்கு மம்தா பணிந்தார்: அதிகாரிகளை இடம் மாற்ற இறங்கி வந்தார்

Posted:

கோல்கட்டா : மேற்கு வங்க மாநில அதிகாரிகளை இடமாற்றும் விவகாரத்தில், பிடிவாதமாகவும், ஆவேசமாகவும் கருத்து தெரிவித்த, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, 'தேர்தலை ரத்து செய்வோம்' என, தேர்தல் கமிஷன் மிரட்டியதை அடுத்து பணிந்தார். அதிகாரிகளை மாற்றம் செய்யும் தேர்தல் கமிஷன் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 42 லோக்சபா தொகுதிகளுக்கு, இம்மாதம் 17ல் துவங்கி, மே 12 வரை, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் ஓரணியாகவும் ...

ம.தி.மு.க., - பா.ம.க.,வை வீழ்த்த காங்., புது தந்திரம்: ராஜிவுடன் உயிர் நீத்தவர்கள் குடும்பத்தை களமிறக்குகிறது

Posted:

லோக்சபா தேர்தலில், விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சிகளை வீழ்த்த, காங்., புது உத்தியை கையாள உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவுடன், உயர்நீத்தவர்களின் குடும்பத்தினரை, தேர்தல் பிரசாரத்தில் களமிறக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, இரண்டு வாகனங்களையும், அவர்களுக்கு வழங்குகிறது.முன்னாள் பிரதமர் ராஜிவ், கடந்த 1991, மே 21ம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக, ஸ்ரீபெரும்புதூர் வந்த போது, விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டால், படுகொலை செய்யப்பட்டார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, ராஜிவுடன், காவல் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் காங்., கட்சியினர் என, 17 பேர் ...

ஒரே மேடையில் கூட்டணி தலைவர்கள்: விஜயகாந்த் பகீரத முயற்சி நிறைவேறுமா?

Posted:

தே.ஜ., கூட்டணி பலத்தை காட்ட, அதில் இடம் பெற்றுள்ள அனைத்து தலைவர்களையும், ஒரே மேடையில் ஏற்றி, பிரசாரம் செய்ய வைக்க, விஜய காந்த் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார்.தமிழகத்தை பொறுத்தவரை, தே.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., முக்கிய பங்கு வகிக்கிறது. அக்கட்சிக்கு, 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ., எட்டு தொகுதியில் போட்டியிடுகிறது. பா.ம.க., எட்டு தொகுதியிலும், ம.தி.மு.க., ஏழு தொகுதியிலும், மற்ற கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். தே.மு.தி.க., ...

நீலகிரியில் நிறம் மாறிய தாமரை ஆதரிக்க போவது யாரை? பா.ஜ.,வில் கடும் குழப்பம்; விசாரணை நடத்த குழு அமைப்பு

Posted:

நீலகிரி பா.ஜ., வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், தேர்தல் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று விசாரணைக்கு வரும் நிலையில், அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில், தமிழக பா.ஜ., கட்சி கடும் குழப்பம் அடைந்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, மூன்று பேர் குழுவை, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமித்து உள்ளார்.படிவம் சமர்ப்பிக்கவில்லை: நீலகிரி பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குருமூர்த்தி, கடந்த, 3ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்தார். ...

சொல்பேச்சு கேட்காத மகன் வீட்டுக்கு நான் செல்வதா? அழகிரியின் சமாதான கொடியை நிராகரித்த கருணாநிதி

Posted:

தி.மு.க.,விலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரியின் வீட்டிற்கு, கருணாநிதியை அழைத்து வரவும், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கவும், தி.மு.க., விவசாய அணி மாநில செயலர் கே.பி.ராமலிங்கம் எம்.பி., மேற்கொண்ட முயற்சி, தோல்வியில் முடிந்துள்ளது. இதுதொடர்பாக, கருணாநிதியை ஈரோட்டில் சந்தித்த, ராமலிங்கத்திற்கு செம 'டோஸ்' விழுந்துள்ளது.கவர்ந்து வருகிறார்தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த, 5ம் தேதி முதல், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். பிரசார கூட்டங்களில் எல்லாம், 'இதுதான் தன் கடைசி தேர்தல்' என, உருக்கமாக பேசி, ...

'தி.மு.க.,வுக்கு சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும்': காங்கிரஸ் மீதும் முதல்வர் ஜெயலலிதா பாய்ச்சல்

Posted:

''மத்திய அரசின், தவறான பொருளாதார கொள்கையால், இந்திய பொருளாதாரமே சீரழிந்து விட்டது. மாநில அரசு மட்டுமே, தீர்க்க முடியாத பிரச்னைகளில், தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல், காங்., துரோகம் இழைத்து வருகிறது. காங்., ஆட்சியில் இருந்த ஊழலால், பல லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அனைத்து தொகுதிகளிலும், காங்கிரசை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும். தி.மு.க.,வுக்கு சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.அரக்கோணம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் அரியை ஆதரித்து, ராணிப்பேட்டை அடுத்த, அம்மூரில் நடந்த தேர்தல் ...

பயங்கரவாதிகளை வளர்க்கும் மாநிலமாகிவிட்டது சுற்றுலா பூமி கேரளா: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு

Posted:

திருவனந்தபுரம் : ''ஒரு காலத்தில், உலகின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்த கேரளா, தற்போது பயங்கரவாதத்தை வளர்க்கும் இடமாக மாறிவிட்டது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.கேரளாவில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, நாளை தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சி யின் பிரதமர் வேட்பாள ரும் குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, காசர்கோடு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில், நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர் ...

டில்லி தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவாலுக்கு அடி : கன்னத்தில் அறைந்தார் ஆட்டோ டிரைவர்

Posted:

புதுடில்லி : டில்லியில், வீதி வீதியாக பிரசாரம் செய்த, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மாலை அணிவித்த தொண்டர் ஒரு வர், திடீரென கன்னத்தில் அறைந்தார். அவரை, ஆம் ஆத்மி கட்சியினர் நைய புடைத்தனர். கெஜ்ரிவாலை தாக்கியவர் ஆட்டோ டிரை வர் எனவும், 'டில்லி முதல்வராக இருந்த போது, ஆட்டோ டிரைவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்வதாக கூறிய கெஜ்ரிவால் ஏமாற்றியதால் தாக்கினேன்' என, அந்த நபர் தெரிவித்துள்ளார்.டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக நாளை ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதையொட்டி, நேற்று இறுதிகட்ட பிரசாரம் நடந்தது. ஆம் ஆத்மி கட்சி ...

இன்று இரண்டாம் கட்ட தேர்தல்: 6 தொகுதிகளில் நடைபெறுகிறது

Posted:

இம்பால்: இன்று இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி, அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், இன்று தேர்தல் நடக்க உள்ளது;லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்ட தேர்தல், வட கிழக்கு மாநிலங்களான, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆறு தொகுதிகளில், நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல், ஆறு தொகுதிகளில் இன்று நடக்கிறது. வட கிழக்கு மாநிலங்களான, அருணாசல பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில், தலா, இரண்டு தொகுதிகளிலும், நாகாலாந்து, மணிப்பூர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™