Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதா? காங்., மீது நரேந்திர மோடி பாய்ச்சல்

Posted:

அலிகார் : ஓட்டு வங்கி அரசியலுக்காக, காங்கிரசும், சமாஜ்வாதியும், மதச்சார்பின்மை என்ற பெயரில், முஸ்லிம் மக்களை, தவறாக வழி நடத்துகின்றன,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.உ.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அலிகாரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று பேசினார்.அவர் பேசியதாவது:நாடு முழுவதும், முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும், 90 மாவட்டங்களில், 12 அம்ச வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியதாக, காங்., தலைவர் சோனியா, ...

பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது : காங்., துணை தலைவர் ராகுல் கொதிப்பு

Posted:

சிர்சா : ''ஊழலை எதிர்க்கும் விஷயத்தில், பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசினார்.அரியானாவில், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 10 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, வரும், 10ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று, அந்த கட்சியின் துணைத் தலைவர் ராகுல் பேசியதாவது:பா.ஜ., தலைவர்கள், ஊழலுக்கு எதிராக, மேடை தோறும் முழங்குகின்றனர். காங்., தலைமையிலான, மத்திய அரசு, ஊழலில் மூழ்கி விட்டதாக பிரசாரம் செய்கின்றனர். ஆனால், கர்நாடகாவில், ஊழல் செய்த, ...

விஜயகாந்த், வைகோவிற்கு எதிராக பிரசாரம்: பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புறப்படுகிறது அணி

Posted:

தேர்தல் களத்தில், விஜயகாந்தும், அவரின் மனைவி பிரேமலதாவும் தான், அ.தி.மு.க.,வையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த நிலையில், இதே பாணியில் ஆளும் கட்சியை மேடைகளில் வறுத்தெடுப்பவர், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ.பதிலடி கொடுக்கஇவர்கள் வீதி பிரசாரங்களிலும், மேடை பிரசாரங்களிலும் விமர்சித்து வருவது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அவர்களுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளார். அதனால், கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்களிடம், மூவரையும் விமர்சிக்கும்படி ...

வீடு வீடாக சென்று ஓட்டு கேளுங்க! தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்

Posted:

'வீடு வீடாக சென்று, அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, மக்களிடம் ஓட்டு கேளுங்கள்' என, கட்சி தொண்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழர்களையும், தமிழ் மண்ணையும், எம்.ஜி.ஆர்., தன் உயிரும், உடலுமாக மதித்தார். அவரது அரசியல் வாழ்வை, முன்னோடியாகக் கொண்டு வாழும், நான், உங்களை என் சொந்தங்களாக நினைக்கிறேன். நீங்கள் காட்டும் அன்பை விட உயர்வானது எனக்கு எதுவும் இல்லை.நாட்டிற்கு இழப்புஉங்கள் உயர்வுக்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் உழைப்பதை, ...

அம்மாடியோவ்...! கட்சிகள் எண்ணிக்கை 1,627

Posted:

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பின், 34 அரசியல் கட்சிகள் புதிதாக பதிவு செய்துள்ளன. இதையடுத்து, மொத்த கட்சிகளின் எண்ணிக்கை, 1,627 ஆகியுள்ளது.வரும், 16வது லோக்சபாவுக்கு எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான அறிவிப்பு, மார்ச் 5ல், வெளியிடப்பட்டது.தேர்தல் கமிஷன் கணக்குபடி, மார்ச் 10 வரை, நாட்டில் உள்ள பதிவுபெற்ற கட்சிகளின் எண்ணிக்கை, 1,593 ஆக இருந்தது. தேர்தல் அறிவிப்பு வந்ததும், பலருக்கும் அரசியல் ஆர்வம் அதிகரித்து, கட்சிகளை துவக்கி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்தனர். அந்த வகையில், மார்ச் 11 - மார்ச் 21 வரை, 24 கட்சிகள் பதிவு செய்தன. கடந்த ...

வேறு வீட்டுக்கு மாற பிரதமர் மன்மோகன் சிங் இப்போதே தயார்

Posted:

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, டில்லியில் உள்ள தன் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து மாறி, வேறு வீட்டுக்கு குடிபெயர முடிவு செய்துள்ளார்.ரேஸ்கோர்ஸ் சாலை: பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லம், டில்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ளது. பிரதமராக யார் இருந்தாலும், இந்த வீட்டில் தான் வசிப்பது வழக்கம். பிரதமர்களுக்காக கட்டப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வீடு இது.கடந்த 2004ல், மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்ற போது, அவருக்கு முன்னதாக பிரதமராக இருந்த வாஜ்பாய் இந்த ...

விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்: திருப்பூரில் கருணாநிதி பேச்சு

Posted:

திருப்பூர் : ''வெகுவிரைவில் பெரிய உண்மை, வெளிச்சத்துக்கு வரப்போகிறது. இதுவரை, யாரை அவதாரம் என்று நினைத்து வணங்கி கொண்டிருக்கிறார்களோ, அந்த அவதாரத்தின் 'மேக்கப்' கலையப்போகிறது,'' என்று, திருப்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், கருணாநிதி பேசினார்.தி.மு.க., வேட்பாளர்கள் ராஜா (நீலகிரி), கணேஷ்குமார் (கோவை), பழனிச்சாமி (பொள்ளாச்சி), செந்தில்நாதன் (திருப்பூர்), பவித்ரவள்ளி (ஈரோடு) ஆகியோரை ஆதரித்து, திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் அருகில் நடந்த பிரசார கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:திருப்பூர் மக்களை பார்ப்பதே, பெரும்பேறு. உங்கள்முன் ...

'ஜாமீனில் வெளிவந்த ராஜா தியாகி அல்ல' : ப.வேலுாரில் விஜயகாந்த் ஆவேசம்

Posted:

ப.வேலுார்:''ஜாமீனில் வெளியே வந்த ராஜா, ஒன்றும் தியாகி அல்ல,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக பேசினார்.நாமக்கல் லோக்சபா தொகுதியில், தே.மு.தி.க., சார்பில், வக்கீல் வேல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், ப.வேலுாரில் நேற்று பேசியதாவது:ப.வேலுாரில், வத்தலகுண்டுக்கு அடுத்தப்படியாக, வெற்றிலை சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது. ஆனால், அந்த விவசாயம் மேன்மையடைய மின்சாரம் இல்லை. மனுஷனுக்கு வியாதி வந்தால், மருத்துவமனைக்கு செல்வதுபோல், வெற்றிலை பயிருக்கு நோய் ஏற்பட்டால், மருத்துவம் பார்த்து ஆலோசனை சொல்ல, வெற்றிலை ஆராய்ச்சி ...

தே.ஜ., கூட்டணியில் மீண்டும் தெலுங்குதேசம்: நீண்ட இழுபறிக்கு பின் ஆந்திராவில் திருப்பம்

Posted:

ஐதராபாத் : பத்தாண்டுகளுக்கு பின், தெலுங்குதேசம் கட்சி, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பியுள்ளது. தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுவுக்கும், பா.ஜ., மூத்த தலைவர் பிரகாஷ் ஜாவடேகருக்கும் இடையே நடந்த பேச்சில், இரு கட்சிகளுக்கும் இடையே தேர்தல் உடன்பாடு நேற்று ஏற்பட்டது. ஆந்திராவில் ஏற்பட்ட இந்த கூட்டணி முடிவு, இரு தரப்பிற்கும் தேர்தல் ஆதாயத்தை தரும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் சந்திக்கும் ஆந்திராவில், வலுவான கூட்டணியை ஏற்படுத்த, பா.ஜ., தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. முதலில் ...

"தேவயானி விவகாரத்தை விடப்போவது இல்லை'

Posted:

புதுடில்லி: ""தேவயானி விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் வரை, அமெரிக்காவை தொடர்ந்து வற்புறுத்துவோம்,'' என, வெளியுறவு செயலர், சுஜாதா சிங் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்திய துணை தூதராக பணியாற்றிய தேவயானி, "விசா' மோசடி செய்தார் என தெரிவித்து, அமெரிக்க போலீசாரால், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். சாதாரண குற்றவாளிகள் போல் நடத்தப்பட்ட அவரிடம், ஆடைகளை களைந்தும், அமெரிக்க போலீசார் சோதனையிட்டனர். இந்த விவகாரத்தால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில், விரிசல் விழுந்தது. பின், 1.5 கோடி ரூபாய் ஜாமினில் தேவயானி ...

இந்தியாவில் 32 விடுதலை புலிகள் : இலங்கை அரசு தகவல்

Posted:

கொழும்பு: தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த, 32 பேர், இந்தியாவில் தங்கியுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. இலங்கையில், 30 ஆண்டுகளாக, ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே சண்டை நடந்தது; 2009ல் முடிவுற்றது. விடுதலை புலி தலைவர், பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து, விடுதலை புலிகள் பலர், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர்; பலர், வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.16 அமைப்புகள் : வெளிநாட்டிலிருந்து செயல்படும் விடுதலை புலிகள் உள்ளிட்ட, 16 தமிழ் அமைப்புகள், இலங்கையில், மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™