Tamil News | Online Tamil News |
- மோடியின் குற்றச்சாட்டுக்கு ஜெ., பதிலடி: 'குஜராத்தை விட தமிழகம் தான் மேல்'
- மீனவர் பிரச்னையில் 'அம்மாவும் மேடமும்': கன்னியாகுமரியில் மோடி கிண்டல்
- 'காலில் விழுந்தாவது ஓட்டு வாங்க வேண்டும்': தலைநகர் ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு உத்தரவு
- காசில்லாமல் காங்., வேட்பாளர்கள் கதறல்: பணம் கேட்டு சோனியாவுக்கு ஞானதேசிகன் கடிதம்
- 'தெனாலிராமன்' படம்: நடந்தது என்ன?
- முடிந்தது பாதி தேர்தல்: அசாம் தவிர்த்து வட கிழக்கு, கர்நாடகா, ஒடிசாவில் நிறைவு
- விஜயிடம் மோடி கொடுத்த உறுதிமொழி
- தி.மு.க., செல்வகணபதிக்கு எம்.பி., பதவி பறிபோகிறது: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் 2 ஆண்டு சிறை
- மோடியால் தமிழ் மக்களை காக்க முடியுமா? கருணாநிதி கேள்வி
| மோடியின் குற்றச்சாட்டுக்கு ஜெ., பதிலடி: 'குஜராத்தை விட தமிழகம் தான் மேல்' Posted: சென்னை: தர்மபுரியில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு, முதல்வர், ஜெயலலிதா பதில் அளித்தார். 'பல்வேறு துறைகளில், குஜராத்தை விட, தமிழகம் முன்னணியில் உள்ளது. காவிரியில், தமிழகத்திற்குரிய நீரை, எவ்வித தடையுமின்றி வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை, பா.ஜ., அளிக்கத் தயாரா?' என, முதல்வர் ஜெயலலிதா, கேள்வி எழுப்பி உள்ளார். இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, சூடான மோதல் துவங்கி உள்ளது.தமிழகத்தில், தேர்தல் பிரசாரம் துவக்கத்தில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி, ஒருவர் மீது ஒருவர் குற்றம் ... |
| மீனவர் பிரச்னையில் 'அம்மாவும் மேடமும்': கன்னியாகுமரியில் மோடி கிண்டல் Posted: நாகர்கோவில்: தமிழக மீனவர் பிரச்னையில், 'அம்மா' ஜெயலலிதா, 'மேடம்' சோனியாவையும்; மேடம், அம்மாவையும் குறை கூறுகின்றனர். இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க, மீனவர்கள் செத்து சுண்ணாம்பு ஆகிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான காற்று, வேகமாக அடிக்கிறது,'' என, கன்னியாகுமரியில் மோடி கூறினார்.கன்னியாகுமரி அருகே, அகஸ்தீஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், மோடி பேசியதாவது: கன்னியாகுமரி, தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டு மொத்த கருத்தின் உறைவிடமாக உள்ளது. கற்களில் சிலை அமைப்போர், நெசவாளர்கள் நிறைந்த மாவட்டம், கன்னியாகுமரி. கடல் ... |
| 'காலில் விழுந்தாவது ஓட்டு வாங்க வேண்டும்': தலைநகர் ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு உத்தரவு Posted: சென்னை: 'சென்னையில் உள்ள மூன்று தொகுதி களிலும், நமக்கு ஓட்டு குறைவாக கிடைக்கும் இடங்களில், அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு சிக்கல் ஏற்படும்' என, தலைமை நிர்வாகிகள் எச்சரித்து உள்ளதால், ஆளும் கட்சி கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த தலைநகர் சென்னையை, கடந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல் மூலம், தன் கோட்டையாக அ.தி.மு.க., மாற்றியது. தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், கோட்டையை அ.தி.மு.க., தக்க வைக்குமா, இழந்ததை தி.மு.க., மீண்டும் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு, அனைவர் மத்தியிலும் மேலோங்கி உள்ளது.நெருக்கடி: ... |
| காசில்லாமல் காங்., வேட்பாளர்கள் கதறல்: பணம் கேட்டு சோனியாவுக்கு ஞானதேசிகன் கடிதம் Posted: லோக்சபா தேர்தலில், பிரதான பணியான, பூத் கமிட்டிக்கு பணம் கொடுக்க முடியாமல், காங்கிரஸ் வேட்பாளர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். 'வேட்பாளர்களின் அடிப்படை செலவுக்கான, பணத்தையாவது கொடுத்து உதவ வேண்டும்' என, காங்., தலைவர் சோனியாவுக்கு, தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், 'பேக்ஸ்' மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளிலும், காங்., தனித்து போட்டியிடுகிறது. 'சீட்' கேட்டு விருப்ப மனு கொடுத்த போது, கோடிக்கணக்கில் செலவு செய்வோம் என, காங்கிரஸ் மேலிடத்திடம் உறுதி அளித்து, பலர் வேட்பாளர்கள் ஆகினர்.வேட்பாளர்கள் திணறல்: ஆனால், ... |
| 'தெனாலிராமன்' படம்: நடந்தது என்ன? Posted: கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன் ஆகியோரை தமிழர்கள் நன்கு அறிந்தவர்கள். கிருஷ்ண தேவராயரை மகாராஜாவாகவும், தெனாலிராமனை சிறந்த விகட கவியாகவும் போற்றுபவர்கள். அவர்களைப் பற்றி, நடிகர் வடிவேலு நடித்து, தமிழகத்தில் திரையிடப்பட உள்ள, 'தெனாலிராமன்' படம், வரலாற்றை திரித்துக் கூறுவதோடு, கொச்சைப்படுத்துவதாக உள்ளது என, பெரும் சர்ச்சை எழுந்தது.'படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்' என, தெலுங்கு மக்கள் பேரவை, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி ஆகிய அமைப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பால் வசந்தகுமார், சத்திய ... |
| முடிந்தது பாதி தேர்தல்: அசாம் தவிர்த்து வட கிழக்கு, கர்நாடகா, ஒடிசாவில் நிறைவு Posted: நாட்டின், 16வது லோக்சபாவுக்கான ஐந்தாம் கட்ட தேர்தல், 12 மாநிலங்களில் நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்ததை அடுத்து, லோக்சபாவின் பாதி தேர்தல் முடிவடைந்துள்ளது. 121 லோக்சபா தொகுதிகளில், நேற்று விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதையடுத்து, மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், பாதிக்கும் மேற்பட்ட, 230 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள, 313 தொகுதிகளுக்கு இம்மாதம் 24, 30 மற்றும் அடுத்த மாதம் 7, 12ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுக்கான நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும், 16வது லோக்சபாவை தேர்ந்தெடுக்கும் தேர்தல், இம்முறை ... |
| விஜயிடம் மோடி கொடுத்த உறுதிமொழி Posted: திராவிட கட்சிகள், அரசியலுக்காகவும், தங்கள் தோற்றத்தின் இயல்பினாலும், திரையுலகத்தினரிடம் நெருங்கிய உறவு கொண்டாடினாலும், தமிழக பா.ஜ., இதுவரை அவ்வாறு செய்தது இல்லை. ஆனால், அப்படி செய்தால் தான், தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டதோ என்னவோ, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் மோடி, கடந்த ஒரு வாரத்தில், இரண்டு நடிகர்களை சந்தித்துவிட்டார். கடந்த 13ம் தேதி, அவர், ரஜினியை சந்தித்த போது, ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரிக்கத்தான் வந்தார் என்றும், தேனீர் அருந்த வந்தார் என்றும் ரஜினி தரப்பில் கூறப்பட்டது. யார் நம்புவார்கள்?அடுத்தபடியாக, நேற்று ... |
| தி.மு.க., செல்வகணபதிக்கு எம்.பி., பதவி பறிபோகிறது: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் 2 ஆண்டு சிறை Posted: சென்னை: சுடுகாடுகளுக்கு கூரை அமைத்ததில், ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், தற்போதைய, தி.மு.க., எம்.பி.,யுமான செல்வகணபதி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் உட்பட, ஐந்து பேருக்கு, தலா, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை, சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால், செல்வகணபதியின் ராஜ்யசபா எம்.பி., பதவி பறிபோவது உறுதியாகிறது.கடந்த, 1991 - 96ல், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர், செல்வ கணபதி(தற்போது, தி.மு.க.,வில், ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்). ஊரக வளர்ச்சித் துறையின் ... |
| மோடியால் தமிழ் மக்களை காக்க முடியுமா? கருணாநிதி கேள்வி Posted: காஞ்சிபுரம்: ''தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை; தி.மு.க., அலைதான் வீசுகிறது. வடக்கிலிருந்து வருவதாக கூறப்படும் மோடி அலை தமிழக மக்களை காக்குமா?,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.காஞ்சிபுரத்தில் தி.மு.க., வேட்பாளர், செல்வத்தை ஆதரித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: இன்றைக்கு ஏதோ அலை வீசுவதாகச் சொல்கிறார்கள். அந்த அலையெல்லாம் நம் இயக்கத்தின் அலை. மோடி அலை என்கிறார்கள்; அது வடக்கிலிருந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். அந்த அலை தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காக்குமா? நேற்றைக்கு வந்த மோடி சொல்கிறார், அவரை சுற்றியிருக்கும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 18,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |