Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பாராளுமன்றத்துக்கு 5-வது கட்ட தேர்தல் 121 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது

Posted: 17 Apr 2014 12:48 PM PDT

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற சிறப்புக்குரிய நமது நாட்டில் பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.

ஐந்தாவது கட்ட தேர்தல்

முதல் கட்ட தேர்தல் கடந்த 7-ந் தேதி 6 தொகுதிகளிலும், இரண்டாவது கட்ட தேர்தல் 9-ந் தேதி 6 தொகுதிகளிலும், மூன்றாவது கட்ட தேர்தல் 10-ந்தேதி 91 தொகுதிகளிலும், நான்காவது கட்ட தேர்தல் 12-ந் தேதி 7 தொகுதிகளிலும் நடைபெற்றன.

ஐந்தாவது கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் பரவியுள்ள 121 தொகுதிகளில் நேற்று நடந்தது. மாநில வாரியாக தேர்தல் நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:-

பீகார்-7, சத்தீஷ்கார்-3, காஷ்மீர்-1, ஜார்கண்ட்-6, கர்நாடகம்-28, மத்திய பிரதேசம்-10, மராட்டியம்-19, மணிப்பூர்-1, ஒடிசா-11, ராஜஸ்தான்-20, உத்தரபிரதேசம்-11, மேற்கு வங்காளம்-4

1,769 வேட்பாளர்கள்

121 தொகுதிகளில் மொத்தம் 1,769 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றைய தேர்தலை சந்தித்த தலைவர்களில் முன்னாள் பிரதமர் தேவே கவுடா, ஆதார் அடையாள அட்டை அமைப்பின் முன்னாள் தலைவர் நந்தன் நிலேகனி, முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி, மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, ஸ்ரீகாந்த் ஜெனா, தேசியவாத காங். தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டு சுயேச்சையாக களம் இறங்கிய முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமி, பா.ஜனதா மூத்த தலைவர் அனந்த்குமார், நடிகர் சத்ருகன் சின்கா உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள்.

பீகார், சத்தீஷ்கார், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களில் நக்சலைட்டுக்கள் ஆதிக்கம் உள்ளதால் அந்த மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஓட்டுப்பதிவில் விறுவிறுப்பு

121 தொகுதிகளிலும், ஒடிசாவில் 77 சட்டசபை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் நேரம் ஆக ஆக ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது. மணிப்பூர் தவிர்த்து பிற இடங்களில் ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவு அடைந்தது. மணிப்பூரில் ஓட்டுப்பதிவு 4 மணிக்கு முடிந்தது. சிற்சில சம்பவங்களைத் தவிர்த்து பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது.

ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, ஜலவார் வாக்குச்சாவடியில் காலையிலேயே வந்து ஓட்டுப்பதிவு செய்தார். ஓட்டுப்பதிவு செய்து விட்டு நிருபர்களிடம் பேசிய அவர், "பாரதீய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும்" என கூறினார். ஒடிசாவில் தலைநகர் புவனேசுவரத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக், அசாம் கவர்னர் ஜே.பி. பட்நாயக் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பக்தியார்பூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். தலைநகர் பாட்னாவில் லாலு பிரசாத், மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி ஆகியோருடன் வந்து கால்நடை மருத்துவக்கல்லூரி ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.

திருநங்கைகள் ஆர்வம்

ஒடிசாவில் பூரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். கேந்திரப்பாரா மாவட்டத்தில் மின்னணு வாக்கு எந்திரத்தை சேதப்படுத்தியதாக காங்கிரஸ் தேர்தல் ஏஜெண்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். புவனேசுவரத்தில் 230 திருநங்கைகள் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.

மணிப்பூரில் லெய்மாராம் என்ற இடத்தில் உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

54 ஊழியர்களுக்கு பிடிவாரண்டு

மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடி கைப்பற்றுதல், கள்ள ஓட்டு, எதிர்க்கட்சியினர் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல் என புகார்களுக்கு மத்தியில் ஓட்டுப்பதிவு நடந்தது. கூச்பெஹார் பாராளுமன்ற தொகுதியில் குறைந்தது 3 சட்டசபை தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இடதுசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒடிசாவில் கேந்திரப்பாரா என்ற இடத்தில் தேர்தல் பணிகளை புறக்கணித்த அரசு ஊழியர்கள் 54 பேர் மீது ஜாமீனில் விடுவிக்க முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தென்கனால் என்ற இடத்தில் மின்னணு எந்திரம் பழுது என வாக்காளர்களிடம் தவறான தகவல் கூறி திருப்பி அனுப்பியதாக பா.ஜனதா தேர்தல் ஏஜெண்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் உள்ளூர் பிரச்சினைகளை காரணம் காட்டி வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

கண்ணிவெடி தாக்குதல்

மத்தியபிரதேசத்தில் உள்ளூர் பிரச்சினைகள் காரணமாக புரிஷாப்பூர், நாயகான் பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

பிந்த் தொகுதியில் மொராலி என்ற இடத்தில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் கற்கள் வீசப்பட்டன. ராஜ்கார் என்ற இடத்தில் தேர்தல் ஏஜெண்டுகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

சத்தீஷ்காரில் கங்கார் தொகுதியில் தேர்தலை நடத்தி முடித்துவிட்டு தேர்தல் பணியாளர்களும், பாதுகாப்பு படையினரும் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்களைக் குறிவைத்து நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். ஆனால் அவர்கள் இதில் சிக்காமல் உயிர் தப்பினர்.

ஓட்டுப்பதிவு சதவீதம்

12 மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு சதவீதம் வருமாறு:-

பீகார்-56, சத்தீஷ்கார்-63.44, காஷ்மீர்-69, ஜார்கண்ட்-62, கர்நாடகம்-66, மத்தியபிரதேசம்-54.44, மராட்டியம்-61.89, மணிப்பூர்-74 ஒடிசா-70, ராஜஸ்தான்-63.25, உத்தரபிரதேசம்-56, மேற்குவங்காளம்-78.89

நேற்றைய தேர்தலுடன் சேர்த்து 5 கட்ட தேர்தலில் 231 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

மீதி 312 தொகுதிகள்

வரும் 24, 30, மே 7, மே 12 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக மீதமுள்ள 312 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கும். அன்று மாலையே மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் கடைக்குள் புகுந்து 2 வயது குழந்தை உடல் நசுங்கி சாவு

Posted: 17 Apr 2014 12:44 PM PDT

பெரியபாளையம்,

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறக ஓடிய கார் கடையில் புகுந்ததில் 2 வயது குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது.

கடையில் புகுந்த கார்

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியை அடுத்த மல்லியங்குப்பத்தை சேர்ந்தவர் அய்யப்பன். அவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு ரோகித் (வயது 2) என்ற ஆண் குழந்தை உள்ளது

விவசாயியான அய்யப்பன் தனது வீட்டின் முன் பகுதியில் சிறிய பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவரது கடையின் முன்னால் குழந்தை ரோகித் உட்கார்ந்து இருந்தான். முனியம்மாள் வீட்டின் உள்ளே இருந்தார். அப்போது அதே தெருவில் வசிக்கும் சரவணன் என்பவர் தனது காரை ஓட்டி வந்தார்.

அப்போது டிரைவர் சரவணனின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று தாறுமாறக ஓடிய கார் அய்யப்பனின் கடையில் புகுந்தது. அப்போது கடையின் முன் உட்கார்ந்திருந்த 2 வயது குழந்தை ரோகித் மீது கார் மோதியது.

உடல் நசுங்கி சாவு

காருக்கும் சுவருக்கும் இடையில் சிக்கிய ரோகித் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானான். இந்த விபத்து பற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். பொது மக்கள் திரண்டு வந்ததை கண்ட டிரைவர் சரவணன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

குழந்தை உடல் மீட்பு

இதுகுறித்த தகவல் அறிந்த ஆரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காரை கடையின் வாசலில் இருந்து வெளியே எடுத்தனர். அதன்பின், நசுங்கிய நிலையில் இருந்த ரோகித்தின் உடலையும் போலீசார் மீட்டனர். பின்னர் குழந்தையின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடிவருகிறார்கள்.

சோகம்

கர்ப்பிணியான முனியம்மாளுக்கு கடந்த வாரம் கருக்கலைந்த நிலையில் இருந்த குழந்தையும் வீட்டின் முன் நடந்த விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழ்நாட்டில் தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது காஞ்சீபுரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

Posted: 17 Apr 2014 12:43 PM PDT

காஞ்சீபுரம்,

தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று காஞ்சீபுரத்தில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.

கருணாநிதி பிரசாரம்

காஞ்சீபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் க.செல்வத்தை ஆதரித்து, காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா அரங்கம் அருகே நேற்று இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார்.

இந்த பிரசார கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:–

பொருளாதார வளர்ச்சி

அண்ணா தொடங்கிய தி.மு.க. ஆல விருட்சமாக தழைத்தோங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த தி.மு.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறைந்து உள்ளது.

ஜெயலலிதா அம்மையார் மதசார்பற்றவர் என்று கூறுகிறார். பாபர் மசூதி இடிப்பு கரசேவைக்கு ஆட்களை அனுப்பியவர் ஜெயலலிதா, பாபர் மசூதி இடத்தில் ராமருக்கு கோவில் கட்டாமல் இந்தியாவில் வேறு எங்கு கட்டுவது என்று கேட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதா மீது வருமான வரி துறை வழக்கு நிலுவையில் உள்ளது. 14 வருடமாக நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கு போல் வருமான வரி துறை வழக்கும் நிலுவையில் உள்ளது. நீதி அரசர் நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும். காலம் பதில்சொல்லும்,

அலை வீசவில்லை

தி.மு.க. என்றும் முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து இருக்கும். அ.தி.மு.க. ஆட்சியில், அமைதி என்று சொல்கிறார்கள், ஆனால் இந்த ஆண்டு, கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, வழிப்பறி அதிகமாக உள்ளது.

ஜெயலலிதா, சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் முறையாக கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தேர்தல் பிரசாரம் என்று கூறி வாய்தா வாங்குகின்றனர். உச்ச நீதிமன்றத்தையும், உயர் நீதிமன்றத்தையும் ஏமாற்றி வருகிறார்கள், நேற்று காலையில், ஜெயலலிதா வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அதே இடத்தில் அந்த நீதிபதி அதே பதவியில் வந்து விட்டார்.

தமிழ்நாட்டில் அலை வீசுகிறது என்று சொன்னார்கள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேலே, கீழே ஆகிய திசைகளை பார்த்தேன், எந்த அலையும் வீசவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. அலை மட்டும் தான் வீசுகிறது.

அழிக்கமுடியாது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கார் கம்பெனிகளை திறந்தோம். 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்று தந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் மற்றும் சிறு கம்பெனிகள் தான் திறந்து வருகின்றனர். தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. எனவே ஒற்றுமையாக இருந்து தி.மு.க. வேட்பாளர் செல்வத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், காஞ்சீபுரம் நகர செயலாளர் சி.வி.எம்.அ.சேகரன், அ.பொன்மொழி, சன் பிராண்ட் கே.ஆறுமுகம், வி.இராஜேந்திரன், வி.எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட திராவிடர் கழக செயலாளர் டி.ஏ.ஜி.அசோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நா.இந்திரா அம்பேத்கர் வளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் தாவுத், மனித நேய மக்கள் கட்சி செயலாளர் ஷாஜகான், புதிய தமிழகம் செயலாளர் பி.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் நகர தி.மு.க. செயலாளர் சி.வி.எம்.அ.சேகரன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் நன்றி கூறினார்.

முன்னதாக காஞ்சீபுரம் வந்த கருணாநிதி முதன் முதலாக அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு இருந்த அண்ணா சிலைக்கு கருணாநிதி மாலை அணிவித்து வணங்கினார்.

மரபணு மாற்றிய அமெரிக்க சோளம் சீனா ஏற்க மறுத்ததால் ரூ.18 ஆயிரம் கோடி இழப்பு

Posted: 17 Apr 2014 12:42 PM PDT

சிகாகோ,

சோளம் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா 3–ம் இடம் வகித்து வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் தேசிய விதையூட்ட கூட்டமைப்பு சார்பில், 2.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.18 ஆயிரம் கோடி) மதிப்புள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் சீனாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இதை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க சீனா மறுத்து விட்டது. இது அமெரிக்காவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

image: 

category:

News Group Category:

பாலாடைக்கட்டி தயாரிக்கும் பாலில் குளிக்கும் தொழிலாளர்கள்

Posted: 17 Apr 2014 12:35 PM PDT

ரஷியா

ரஷியாவில் சைபீரிய பகுதியான ஓம்ஸ்க் பகுதியில் உள்ள பாலாடைக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் செய்த காரியம், ரஷிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அத்தொழிற்சாலையில் பாலாடைக்கட்டி தயாரிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த பாலில் வெற்று மார்புடன் அவர்கள் குளிக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக வெளியானது. மக்கள் சாப்பிடும் பாலாடைக்கட்டி, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவது, இதன்மூலம் உறுதி ஆனது.

அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, அதுபற்றி ரஷிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அந்த தொழிற்சாலையின் மேலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும் என்றும் ரஷிய வட்டாரங்கள் தெரிவித்தன. அத்தொழிற்சாலை தயாரித்த பாலாடைக்கட்டிக்கு உணவு கண்காணிப்பகம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. தொழிற்சாலையை 40 நாட்களுக்கு மூட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 

category:

News Group Category:

தாம்பரத்தில் வியாபாரிகளிடம் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு மகளிர் அணியினர் வந்த வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் தடுத்ததால் பரபரப்பு

Posted: 17 Apr 2014 12:33 PM PDT

தாம்பரம்,

தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கொளுத்தும் வெயிலில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார். அப்போது மகளிர் அணியினர் வந்த வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து தாம்பரம் கடப்பேரி பகுதியில் அமைச்சர் சின்னையா வாக்கு சேகரித்தார். அதன்பிறகு தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கொளுத்தும் வெயிலில் கே.என்.ராமச்சந்திரன் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

தாம்பரம் நகரமன்ற தலைவர் ம.கரிகாலன், துணைத்தலைவர் கோபிநாதன், நகரமன்ற குழுத்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் மார்க்கெட் பாபு, ஜான்எட்வர்டு, அப்துல் மஜீத், சேலையூர் சங்கர் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் உடன் சென்றனர்.

மகளிர் அணியினர் வாகனம்

தாம்பரம் சண்முகம் சாலையில் வாக்கு கேட்டு வந்த அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 50–க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் 5 வாகனங்களில் அ.தி.மு.க. கொடிகளுடன் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், தேர்தல் விதிகளை மீறி வேட்பாளருடன் வாகனங்களில் கட்சி கொடி கட்டி செல்வதாக கூறி 5 வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, அதன் சாவிகளை எடுத்துக்கொண்டனர்.

இதனால் அ.தி.மு.க.வினருக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ''வாகனங்களில் வருவது வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்'' என தேர்தல் அதிகாரிகள் கூறினர். அதற்கு அ.தி.மு.க.வினர், ''தேர்தல் செலவு கணக்கில் சேர்த்து கொள்ளுங்கள்'' என்றனர்.

ஆனாலும் கட்சி கொடிகளை அகற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் உறுதியாக கூறி விட்டனர். இதையடுத்து வாகனங்களில் இருந்த அ.தி.மு.க. கொடிகளை அகற்றி விட்டு வெறும் வாகனங்களில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டி.கே.ஜோஷி ராஜினாமாவை தொடர்ந்து இந்திய கடற்படை புதிய தலைமை தளபதியாக தொவான் பதவி ஏற்றார்

Posted: 17 Apr 2014 12:11 PM PDT

புதுடெல்லி,

 இந்திய கடற்படை தலைமை தளபதியாக டி.கே.ஜோஷி பணி காலத்தில் கடந்த 10 மாதங்களில் 2 பெரிய விபத்துக்கள் உள்பட 14 விபத்துக்கள் நடந்தன.

 கடற்படையில் தொடர்ந்து நடந்து வந்த விபத்துக்களினால் அதிருப்தி அடைந்த டி.கே.ஜோஷி கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அவரது பணியிடம் கடந்த 2 மாதகாலமாக காலியாக இருந்து வந்தது. அவருக்கு பதிலாக அந்த பதவியை பொறுப்பு அதிகாரியாக 59 வயதான கடற்படை துணை தளபதி தொவான் வகித்து வந்தார்.

டெல்லி ஐ.என்.எஸ். போர்க்கப்பலின் கட்டளையிடும் கடற்படை முதன்மை அதிகாரியாக பணியாற்றி வந்த ரோபின் கே. தொவான் இந்திய கடற்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவர் 25 மாதங்கள் இந்த பணியில் நீடிப்பார்.

புதிய கடற்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள தொவான் கடற்படையில் முக்கிய பல பதவிகளை வகித்தவர் ஆவார். கடற்படையில் மிக சிறந்த அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

image: 

category:

News Group Category:

ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை 2 நாளில் ரூ.1 கோடியை தாண்டியது அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

Posted: 17 Apr 2014 12:00 PM PDT

புதுடெல்லி,

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடியையும், ராகுலையும் எதிர்த்து போட்டியிடும் தங்களுக்கு நிதியுதவி செய்யும்படி 2 நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த 2 நாளில் அவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் நிதியுதவி கிடைத்துள்ளது.

நேற்று முன்தினம் ரூ.80 லட்சமும், நேற்று ரூ.35 லட்சமும் நிதியுதவி கிடைத்துள்ளது. இந்த நிதி இந்தியாவில் இருந்தும், சிங்கப்பூர், அமெரிக்கா, பெல்ஜியம், ஓமன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இருந்தும் ஆம் ஆத்மியின் ஆதரவாளர்கள் வழங்கியிருக்கிறார்கள் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். மிக குறைந்த நிதியுதவியாக ரூ.10 ஒருவர் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

category:

News Group Category:

தமிழ்நாட்டில் தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது காஞ்சீபுரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

Posted: 17 Apr 2014 11:07 AM PDT

காஞ்சீபுரம்,

 தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று காஞ்சீபுரத்தில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.

கருணாநிதி பிரசாரம்

 காஞ்சீபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் க.செல்வத்தை ஆதரித்து, காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா அரங்கம் அருகே நேற்று இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார்.

இந்த பிரசார கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:–

பொருளாதார வளர்ச்சி

 அண்ணா தொடங்கிய தி.மு.க. ஆல விருட்சமாக தழைத்தோங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த தி.மு.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறைந்து உள்ளது.

ஜெயலலிதா அம்மையார் மதசார்பற்றவர் என்று கூறுகிறார். பாபர் மசூதி இடிப்பு கரசேவைக்கு ஆட்களை அனுப்பியவர் ஜெயலலிதா, பாபர் மசூதி இடத்தில் ராமருக்கு கோவில் கட்டாமல் இந்தியாவில் வேறு எங்கு கட்டுவது என்று கேட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதா மீது வருமான வரி துறை வழக்கு நிலுவையில் உள்ளது. 14 வருடமாக நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கு போல் வருமான வரி துறை வழக்கும் நிலுவையில் உள்ளது. நீதி அரசர் நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும். காலம் பதில்சொல்லும்,

அலை வீசவில்லை

 தி.மு.க. என்றும் முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து இருக்கும். அ.தி.மு.க. ஆட்சியில், அமைதி என்று சொல்கிறார்கள், ஆனால் இந்த ஆண்டு, கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, வழிப்பறி அதிகமாக உள்ளது.

ஜெயலலிதா, சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் முறையாக கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தேர்தல் பிரசாரம் என்று கூறி வாய்தா வாங்குகின்றனர். உச்ச நீதிமன்றத்தையும், உயர் நீதிமன்றத்தையும் ஏமாற்றி வருகிறார்கள், நேற்று காலையில், ஜெயலலிதா வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அதே இடத்தில் அந்த நீதிபதி அதே பதவியில் வந்து விட்டார்.

 தமிழ்நாட்டில் அலை வீசுகிறது என்று சொன்னார்கள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேலே, கீழே ஆகிய திசைகளை பார்த்தேன், எந்த அலையும் வீசவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. அலை மட்டும் தான் வீசுகிறது.

அழிக்கமுடியாது

 காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கார் கம்பெனிகளை திறந்தோம். 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்று தந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் மற்றும் சிறு கம்பெனிகள் தான் திறந்து வருகின்றனர். தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. எனவே ஒற்றுமையாக இருந்து தி.மு.க. வேட்பாளர் செல்வத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், காஞ்சீபுரம் நகர செயலாளர் சி.வி.எம்.அ.சேகரன், அ.பொன்மொழி, சன் பிராண்ட் கே.ஆறுமுகம், வி.இராஜேந்திரன், வி.எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட திராவிடர் கழக செயலாளர் டி.ஏ.ஜி.அசோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நா.இந்திரா அம்பேத்கர் வளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் தாவுத், மனித நேய மக்கள் கட்சி செயலாளர் ஷாஜகான், புதிய தமிழகம் செயலாளர் பி.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் நகர தி.மு.க. செயலாளர் சி.வி.எம்.அ.சேகரன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் நன்றி கூறினார்.

முன்னதாக காஞ்சீபுரம் வந்த கருணாநிதி முதன் முதலாக அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு இருந்த அண்ணா சிலைக்கு கருணாநிதி மாலை அணிவித்து வணங்கினார்.
 

category:

News Group Category:

கடந்த 2013–ஆம் ஆண்டில் 9.4% உயர்வு சோப்பு உள்ளிட்ட நுகர்பொருள்கள் ரூ.2.18 லட்சம் கோடிக்கு விற்பனை

Posted: 17 Apr 2014 10:59 AM PDT

மும்பை

கடந்த 2013–ஆம் ஆண்டில் பாக்கெட் கோதுமை மாவு, சோப்பு, பிஸ்கெட், சாக்லெட், சலவைத் தூள், ரீபைண்டு ஆயில் உள்ளிட்ட பல்வேறு நுகர்பொருள்களின் விற்பனை ரூ.2.18 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2012–ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் அந்த ஆண்டில் நுகர்பொருள் விற்பனை 18 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குளியல் மற்றும் சலவை சோப்புகள், சலவைத் தூள் விற்பனை மந்தமடைந்ததே இதற்கு காரணம் என நீல்சன் நிறுவனத்தின் அண்மைக் கால ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஐந்து முக்கிய பொருள்கள்

பிஸ்கெட், சோப்பு, சலவைத்தூள், ரீபைண்டு ஆயில் மற்றும் இனிப்பு, கார வகைகள் ஆகியவை நுகர்பொருள் துறையில் அதிகம் விற்பனையாகும் 5 முக்கிய பொருள்களாகும். 2012–ஆம் ஆண்டில் இந்த பொருள்களின் விற்பனை 15 முதல் 23 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் சென்ற ஆண்டில் 4 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றால் விலை மலிவான தயாரிப்புகளை நுகர்வோர் தேர்வு செய்தனர். இதனால் பல நிறுவனங்கள் தள்ளுபடி சலுகைகள் வழங்கியதால் விற்பனை அளவு அடிப்படையில் அதிகரித்துள்ளது. அதேசமயம், மதிப்பு அடிப்படையில் விற்பனை குறைந்துள்ளதாகவும் இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவின் முன்னணி பிஸ்கெட் நிறுவனமான பார்லே புராடக்ட்ஸ்–ஐ சேர்ந்த பி.கே.ராவ் கூறுகையில், ''நுகர்பொருள் துறையின் விற்பனை வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவிற்கு சோப்பும், சலவைத் தூளுமே முக்கிய காரணம். ஆஃபர்களும், தள்ளுபடி சலுகைகளும் நுகர்வோர் மனநிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை'' என்று தெரிவித்தார்.

சென்ற ஆண்டில் பிஸ்கெட் விற்பனை 7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. 2012–ஆம் ஆண்டை விட இது ஏறக்குறைய 14 சதவீதம் குறைவாகும். அதுபோல் சலவைத்தூள் விற்பனை வளர்ச்சி சரிபாதியாக குறைந்து 10 சதவீதமாக உள்ளது.

நிறுவனங்களின் சலுகைகள்

விற்பனை குறைந்ததால் இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் புராக்டர் அண்டு கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் விலை குறைப்பு சலுகைகளை அறிவித்தன. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியவில்லை. 2012–ல் 23 சதவீதம் உயர்ந்திருந்த குளியல் சோப்பு விற்பனை 2013–ஆம் ஆண்டில் 4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

''சென்ற ஆண்டில் நுகர்பொருள் துறையின் விற்பனை வளர்ச்சியை விஞ்சி கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் வளர்ச்சி இருந்தது. அந்த ஆண்டில் பொதுவாக சோப்புகள் பயன்பாடு பெரிய சரிவை சந்தித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவே இதற்கு முக்கிய காரணம்'' என்று கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விவேக் காம்பீர் கூறினார்.

முக்கிய நுகர்பொருள்களின் விற்பனை வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டில் தின்பண்டங்கள், பாக்கெட் கோதுமை மாவு மற்றும் அரிசி, சாக்லேட் விற்பனை 20 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. நிறுவனங்கள் இந்தப் பொருள்களின் நுகர்வை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் இது என்று கூறப்படுகிறது. காட்பரி இந்தியா போன்ற பெரிய நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளால் சாக்லேட் விற்பனை வளர்ச்சி 19 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கிராமங்களின் வளர்ச்சி

நீல்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் நுகர்பொருள்கள் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. 2013–ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் நுகர்பொருள் சந்தை 12.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சிறிய நகரங்களில் இச்சந்தை 10.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகிறது. இதனால் நகரங்களில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பல நவீன நுகர்பொருள்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரகப் பகுதிகளிலும் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளன.

18 மாதங்களுக்குப் பின்...

தேர்தலுக்குப் பின் நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை நிறுவன உலகில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர்ஸ், பார்லே புராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இனி வரும் மாதங்களில் சோப்பு மற்றும் பிஸ்கெட் வகைகளின் விற்பனை அமோகமாக இருக்கும் என நம்புகின்றன. எனினும் மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் 18 மாதங்களுக்குப் பிறகுதான் உண்மையான வளர்ச்சியை காண முடியும் என்றும், அதுவரை நுகர்பொருள் துறை மந்தமாகத்தான் இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™