Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேர்தலால் தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகரிப்பு அம்பலம்: 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை கிடுகிடு உயர்வு

Posted:

தமிழகத்தில், லோக்சபா தேர்தலையொட்டி, பணப்புழக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 'டாஸ்மாக்' கடைகளில், தினமும், 80 கோடி ரூபாய் மதிப்புக்கு மது வகைகள் விற்பனை நடப்பதன் மூலம், இது அம்பலமாகி உள்ளது.தமிழகத்தில், சென்னை உட்பட, ஐந்து மண்டலங்களில், 6,838 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், தினமும், சராசரியாக, 67 கோடி ரூபாய் அளவிற்கே, மதுபானங்கள் விற்பனையாகி வந்தன. தமிழகத்தில், வரும் 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின், தமிழக அரசியல் களத்தில், தி.மு.க., கூட்டணி, பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., - காங்., - கம்யூ., என, ஐந்து முனை போட்டி ...

சென்னையில் 4 மணி நேரம் மின்தடை? அரசு அனுமதிக்கு அதிகாரிகள் காத்திருப்பு

Posted:

மாநிலம் முழுவதும் உள்ள கடும் மின்தடையை தவிர்க்க, சென்னையில் மின்தடை நேரத்தை அதிகரிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது, சென்னையில், தினசரி, சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இதை, நான்கு மணி நேரமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், லோக்சபா தேர்தலை காரணம் காட்டி, தமிழக அரசின் உயர் அதிகாரிகள், இதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.தமிழகத்தில், கடந்த, 2007 - 08, 2008 - 09ல், பல பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்கின. இதனால், 1,000 மெகாவாட் கூடுதல் மின்சார தேவை ஏற்பட்டது. இதனால், ...

'குடும்ப தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி வந்தது எப்படி'

Posted:

கோவை: ''2ஜி ஒதுக்கீட்டில் எதுவும் நடக்கவில்லை என, கருணாநிதி கூறுகிறார். அப்படியானால், அவரது மனைவி, மகள் இயக்குனர்களாக இருந்த குடும்ப தொலைக்காட்சி கணக்கில், 214 கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது? யாருடைய கணக்கில் இருந்து வந்தது, ஏதற்காக கொடுத்தனர், ஏன் கொடுத்தனர்?'' என, கோவையில் நேற்று நடந்த பிரசாரத்தில், முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.நீலகிரி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஜெ., பேசியதாவது: அவிநாசி அத்திக்கடவு திட்டம், இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. இத்திட்டத்திற்காக, 30 லட்சம் ரூபாயில் மதிப்பீடு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ...

தேர்தல் கடமையை மறக்காமல் ஆற்றுங்கள்: தி.மு.க., தலைவர் கருணாநிதி 'அட்வைஸ்'

Posted:

மரக்காணம்: ''தமிழகத்தில், நாள்தோறும் உருவாகும் ஒவ்வொரு கட்சிகளும், தேர்தல் களத்தை வேட்டைக் காடாக கருதி நாடகங்கள் நடத்துகின்றன,'' என, கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் ஆரணி லோக்சபா தொகுதிகளின், தி.மு.க., வேட்பாளர்கள், முத்தையன், மணிமாறன், சிவானந்தம் ஆகியோரை ஆதரித்து, விழுப்புரம் மாவட்ட மரக்காணத்தில் நடந்த, தி.மு.க., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:தீர்மானிக்கும் சக்தி: தேர்தல் நாளில், உங்கள் கடமையை மறக்காமல் நீங்கள் ஆற்ற வேண்டும். வரும் ஐந்தாண்டுகள், நாட்டை யார் ஆள ...

'பசங்க கற்பழிக்கத் தான் செய்வர்' என்கிறார் முலாயம்: பெண் ஆதரவு சட்டங்களையும் மாற்ற வேண்டும் என குரல்

Posted:

மொராதாபாத்: ''ஆம்பள பசங்க என்றால், அப்படி இப்படி இருக்கத் தான் செய்வர்... அவ்வப்போது தப்பு தண்டா செஞ்சா தான் ஆம்பள... அதுக்காக அவங்களை பிடித்து தூக்குல போட்டு விடுவதா...'' என, கூறி, உத்தர பிரதேசத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அதிர்ச்சி: மேலும், ''பொம்பளை பிள்ளங்க, பசங்களுடன் நெருக்கமா பழகுறாங்க... பிடிக்காத போது, 'கற்பழிச்சுட்டாங்க...'ன்னு பொய் புகார் கொடுத்துடுறாங்க... எனவே, அவங்களுக்கு ஆதரவான சட்டங்களையும் மாத்தணும்,'' என, கூறி அவர் ...

காவலாளிகளும் திருடுவர்: கண்டுபிடித்தார் ராகுல்

Posted:

ஜெய்ப்பூர்: ''காவலாளிகளும் சில நேரங்களில் திருடுவர்; ஒருவரை நம்பி, இந்த நாட்டின் சாவியை ஒப்படைக்க முடியாது,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், ராஜஸ்தானில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடியை மறைமுகமாக சாடினார்.ராகுல் பேசியதாவது: 'இந்த நாட்டின் காவல்காரனாக இருந்து, நாட்டை முன்னேற்றுவேன்; வளங்களை காப்பாற்றுவேன்' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த நாட்டில் ஏராளமான காவலாளிகள் உள்ளனர்; ஒரு காவலாளியை நம்பி, நாட்டின் சாவியை ஒப்படைக்க முடியாது. 'பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பிற்காக ...

சொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள்

Posted:

புதுடில்லி: எப்போதும் இல்லாத வகையில், லோக்சபா தேர்தலில், பிரபல நிறுவனங்களின் தலைவர்கள், வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர். சில தொகுதிகளில், அரசியல் தலைவர்களை விட, நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்பு, மலைக்க வைக்கிறது.பணக்கார வேட்பாளர்: இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களிலேயே, பணக்கார வேட்பாளராக, முதலிடத்தில் திகழ்பவர், நந்தன் நிலேகனி. 'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தின், அமைப்பாளர்களில் ஒருவரான இவர், பெங்களூரு தெற்கு தொகுதியில், காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் மற்றும் இவரது மனைவியின் சொத்து ...

தி.மு.க., மா.செ.,க்கள் மீது குவியும் புகார்கள்: சாட்டையை சுழற்ற தயாராகும் ஸ்டாலின்

Posted:

தி.மு.க.,வில், மாவட்ட செயலர்கள் ஆதிக்கம் எல்லை தாண்டி விட்டதாக, பல மாவட்டங்களில் இருந்து, தி.மு.க., தலைமைக்கு, புகார் மனுக்கள் வரத் துவங்கி உள்ளன. தலைமைக்கு கட்டுப்பாடாத, குறுநில மன்னர்கள் போல, இவர்கள் செயல்படத் துவங்கி விட்டனர் என்று, அந்த மனுக்களில் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.பளிச்சென தெரியும்: அ.தி.மு.க.,வில், அமைச்சர்கள் துவங்கி, தொண்டர்கள் வரை, எல்லாரும் சட்டைப் பையில், முதல்வர் ஜெயலலிதா படத்தை வைத்திருப்பது வழக்கம். வெள்ளை நிறச் சட்டையில், பையில் இருக்கும் படம், வெளியே பளிச்சென தெரியும். அதை பார்த்ததும், தி.மு.க.,வினரும் படம் வைக்க ...

மம்தா முதல்வரான பிறகும் மேற்கு வங்கம் மாறவில்லை: தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பகிரங்க புகார்

Posted:

சிலிகுரி: ''மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறார்; இவர் ஆட்சிக்கு வந்தும், மாநிலத்தில் எவ்வித மாற்றம், வளர்ச்சி ஏற்படவில்லை,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு உள்ளது. இங்குள்ள சிலிகுரி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மோடி பேசியதாவது:சாப்பாடு ஜீரணம் ஆகாது: மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் பதவியேற்றதும், மாநிலத்தில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™