Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பால் பாக்கெட் வினியோகத்தோடு பணம் தருவதை தடுக்க நடவடிக்கை: தேர்தல் தில்லுமுல்லுகளை கண்காணிக்க கமிஷன் அதிரடி

Posted:

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க விரும்பும் கட்சிகள், பால் பாக்கெட்டுடன் சேர்த்துக் கொடுப்பது உட்பட, 40 வழிகளில் பணம் பட்டுவாடா செய்யக் கூடும்' எனக் கருதும் தேர்தல் கமிஷன், அந்த தவறான முயற்சிகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.தமிழகத்தின், 39 தொகுதி களுக்கு, இம்மாதம் 24ல், தேர்தல் நடக்கவுள்ளது. பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முயற்சியில் சில அரசியல் கட்சிகள் ஈடுபடலாம் என, தேர்தல் கமிஷன் சந்தேகிக்கிறது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார் கூறியதாவது: 'ஓட்டுக்கு பணம் ...

காலையில் 'பஞ்சாயத்து'; மாலையில் தேர்தல் பிரசாரம்: அதிருப்தியாளர்களை சரிக்கட்ட கருணாநிதி புது 'டெக்னிக்'

Posted:

தி.மு.க., தலைவர், கருணாநிதி தன் இரண்டாவது கட்ட பிரசாரத்தை, வரும், 5ம் தேதி கோவையில் துவக்குகிறார். அன்று முதல் ஒவ்வொரு தொகுதியிலும், பிரசாரம் மேற்கொள்ளும் போது, காலையில், கட்சியின் அதிருப்தியாளர்களை அழைத்து, 'பஞ்சாயத்து' நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும்படி முடுக்கி விட உள்ளார். மாலையில், தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வேட்பாளர்கள் மாற்றப்படலாம்: லோக்சபா தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை, கருணாநிதி வெளியிடும் போது, சில வேட்பாளர்கள் ...

வைகோ வீட்டில் அல்வா, வடையை ருசித்த விஜயகாந்த்

Posted:

கலிங்கப்பட்டியில் உள்ள, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வீட்டிற்கு, நேற்று மாலை வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வைகோ தாயார் மாரியம்மாள் காலைத்தொட்டு வணங்கினார். தோசை, வடையை ருசித்து சாப்பிட்டார்.விருதுநகர் தொகுதியில், வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த விஜயகாந்த், நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள, வைகோ வீட்டிற்கு நேற்று மாலை, 4:05 மணிக்கு வந்தார். அவரை வீட்டு வாசலில் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன், மாலை அணிவித்து வரவேற்றார். விஜயகாந்த் கையை பிடித்து, வீட்டிற்குள் வைகோ அழைத்துச் சென்றார். அங்கு தாயார் மாரியம்மாள், மனைவி ரேணுகாதேவி, மகன் துரை ...

மகன் ராகுலுக்கு ரூ.9 லட்சம் கடன்: வேட்பு மனுவில் சோனியா தகவல்

Posted:

புதுடில்லி: உ.பி.,யின் ரேபரேலி தொகுதி யில் போட்டியிடும், காங்கிரஸ் தலைவர், சோனியாவின் சொத்து மதிப்பு, கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. தன் பெயரில் சொந்தமாக வாகனம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள சோனியா, மகன் ராகுலுக்கு, 9 லட்சம் ரூபாயை கடனாகக் கொடுத்துள்ளாராம்.வேட்பு மனு தாக்கல்: சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி., மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும், சோனியா, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த தன் சொத்து விவரம்:* அசையும் ...

ராகுலை பா.ஜ., - எம்.பி., வருண் பாராட்டியதால் சர்ச்சை: தேர்தல் நேரத்தில் பிரச்னையை ஏற்படுத்துவதாக புகார்

Posted:

புதுடில்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுலுக்கு, அவரின் சித்தப்பா மகனும், பா.ஜ., தலைவர்களில் ஒருவருமான வருண், பாராட்டு தெரிவித்துள்ளார். அதற்கு, ராகுல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதால், பா.ஜ.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இது போன்ற பேச்சுகள், பிரச்னையை ஏற்படுத்தும் என, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வருண் பின்வாங்கினார்.விமான விபத்து: காங்கிரசை சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவின் இளைய சகோதரர் சஞ்சய்; பல ஆண்டுகளுக்கு முன், விமான விபத்தில் இறந்து விட்டார். சஞ்சயின் மனைவி மேனகாவும் அவர் மகன் வருணும் ராஜிவ் ...

'பாலாறு -- நேத்ராவதி நதிகளை இணைக்க பாடுபடுவோம்'

Posted:

வாணியம்பாடியில், வேலூர், திருவண்ணாமலை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசிய, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், "பாலாறு- - நேத்ராவதி நதிகளை இணைக்க பாடுபடுவோம்," என்றார்.வேலூர், திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் அப்துல் ரகுமான், அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து, வாணியம்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: ஜீவ நதியாக இருந்த பாலாறு, பல ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காண, கர்நாடகாவில் பாயும், நேத்ராவதி நதியை, 22 கிலோ மீட்டர் தூரமே உள்ள பாலாற்றில் இணைக்க பாடுபடுவோம். அதனால், பாலாறு, ...

வைகோவுக்கு 5 'வி': சிவகாசியில் விஜயகாந்த் பிரசாரம்

Posted:

சிவகாசி: "விருதுநகர், வைகோ, விஜயகாந்த், வெற்றி, வாழ்த்து, என ஐந்து 'வி' (தி) இருப்பதால், வைகோவை ஜாதி, மதம் பார்க்காமல் ஓட்டளித்து, வெற்றிபெற செய்யுங்கள்,"என, சிவகாசியில், வைகோவுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.சிவகாசி நாரணாபுரம் நான்கு முனை சந்திப்பு ரோட்டில், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வைகோவை ஆதரித்து, அவர் பேசியதாவது: காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் பேசுவதில், பெருமைபடுகிறேன். சொந்த செலவில், மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்ட வைகோவிற்கு, ஓட்டு சேகரிக்க வந்ததில், சந்தோஷப்படுகிறேன். எனக்கு அரசியலில் மூத்தவர் ...

மேட்டூர் புது அனல் மின் நிலையம் உற்பத்திக்கு ஆயத்தம்

Posted:

மேட்டூர்: கோடைகால மின்தேவையை சமாளிக்க, பழுதடைந்திருந்த மேட்டூர் புது அனல் மின் நிலையத்தில், உற்பத்திக்கான ஆயத்த பணி, நேற்று மாலை துவங்கியது.புது அனல் மின் நிலையம்: சேலம் மாவட்டம், மேட்டூரில், 3,550 கோடி ரூபாய் செலவில், 600 மெகாவாட் புது அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. சோதனை ஓட்டம் முடிந்து, கடந்த ஜன., 1ல், இந்நிலையத்தின் மின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணி, மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பாய்லர்களில் ஆயில் மற்றும் ஹைட்ரஜன் வாயு கசிவு உட்பட பல்வேறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, மார்ச் முதல் வாரம், மின் ...

விஜயகாந்த், பிரேமலதாவுக்கு தைலாபுரத்தில் விருந்து: ராமதாசை சமரசம் செய்ய அன்புமணி ஏற்பாடு

Posted:

பா.ம.க., நிறுவனர் ராமதாசை சமரசம் செய்ய, விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவை தைலாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்து, தடபுடல் விருந்து அளிக்க, தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த, தே.மு.தி.க.,வும், பா.ம.க.,வும் முதல் முறையாக, பா.ஜ., கூட்டணியில் இணைந்து உள்ளன. தேர்தலில் ஒரு கட்சி யின் வெற்றிக்கு, மற்றொரு கட்சி யின் ஆதரவு அவசியம் என்பதை, இவ்விரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் உணர்ந்து உள்ளனர். ஆனால், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க.,வுடன் அமைக்கப்பட்ட கூட்டணியை விரும்பாமல், வேண்டா வெறுப்பாக உள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பின், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™