Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்!

Posted: 02 Apr 2014 03:20 PM PDT

பலகாலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும். அருகு, பதம், தூர்வை, மோகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு. இந்த தாவரம் ஏராளமான நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது . அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து ...

விரைவில் ஆப்பிளின் ஐபோன் 6!

Posted: 02 Apr 2014 03:18 PM PDT

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 6 ஐ எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது.இந்த ஐபோன் ஆனது 4.7 அங்குல அளவு மற்றும் 5.5 அங்குல அளவு என இரு ரகங்களில் வர இருக்கின்றது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய ஐபோன் தயாரிப்பிற்காக ஆப்பிள் நிறுவனம் ஜப்பானின் மின்னியல் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான 'ஷார்ப்' (Sharp) உடன் இணைந்துள்ளது.இதன் மூலம் ஐபோன் 6, Crystal Display Screens கொண்டதாக இருக்கும். மேலும் ...

கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்!

Posted: 02 Apr 2014 03:16 PM PDT

வரும் மே மாதம் 9 ஆம் தேதிக்குப் பிறகும் ஏர் ஏசியா மற்றும் ஏர் ஏசியா எக்ஸ் ஆகியவற்றின் இயக்கங்கள் குறைந்த கட்டண விமான நிலையத்திலேயே (Low cost carrier terminal – LCCT) தான் தொடரும் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரீன் ஓமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,"கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாங்கள் மாற்றம் செய்வோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தின் தயார் ...

உலகச் செய்திகள்!

Posted: 02 Apr 2014 02:01 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Posted: 02 Apr 2014 01:59 PM PDT

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ...

சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி

Posted: 02 Apr 2014 01:53 PM PDT

சிவகங்கை : சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் தனது வேட்பு மனுவில், தன்னிடம் ரூ.95,500, மனைவி குந்தவை நாச்சியாரிடம் ரூ.71,000, மகன்கள் மலர்மன்னன், குமணன் ஆகியோர் பெயரில் ரூ.78,000 கையிருப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பி.ஆர்.,செந்தில்நாதன் அசையும் சொத்து: கையிருப்பு ரூ.95,000, டெபாசிட் ரூ.11,58,198. எல்.ஐ.சி., பாலிசி ரூ.40,00,000. கடன் பாக்கி ரூ.9,88,477. ஹீரோஹோண்டா 2 - ரூ.80,000, இன்னோவா கார் ரூ.17,18,005. ஸ்கார்பியோ கார் ரூ.13,24,210. ரூ.11,28,000 ...

அ.தி.மு.க.,வின் கோடீஸ்வர வேட்பாளர்கள்

Posted: 02 Apr 2014 01:44 PM PDT

சென்னை : அ.தி.மு.க., வேட்பாளர்களில், பெரும்பாலானோர் கோடீஸ்வரர்கள் என்பது, வேட்பு மனு மூலம் தெரிய வந்துள்ளது. அதன் விபரம்: *தென் சென்னை வேட்பாளரான, முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் பெயரில், 35.64 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 2.51 கோடி ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 52.55 லட்சம் ரூபாய், அசையும் சொத்து உள்ளது. இவர் பெயரில், 96.71 லட்சம் ரூபாய், மனைவி பெயரில், 13.60 லட்சம் ரூபாய், கடன் உள்ளது. *வட சென்னை வேட்பாளர் வெங்கடேஷ்பாபு பெயரில், 13.75 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; ...

60 படங்கள்: 3 ஹிட்டு, 7 பாராட்டு, 7 ஏமாற்றம் - 2014 முதல் காலாண்டு ரிப்போர்ட்

Posted: 02 Apr 2014 01:40 PM PDT

தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டிற்கு 60 படங்கள் ரிலீசான காலம் உண்டு. இப்போது மார்ச் 31 வரைக்குமான முதல் காலாண்டிலேயே 60 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகி அசர வைத்திருக்கிறது. இதே ரீதியில் போனால் 2014ம் ஆண்டு 250 படங்களுக்கு மேல் ரிலீசாகி உலக சாதனை படைக்கும். முதல் காலாண்டில் வெளிவந்த 60 படங்களில் வீரம், கோலிசோடா, குக்கூ, தெகிடி படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து ஹிட்டாகி உள்ளது. ஜில்லாவை ஹிட் லிஸ்டில் சேர்த்தாலும் அந்தப் படம் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் சந்தோஷத்தைக் ...

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9-ல் வெளியாகிறது

Posted: 02 Apr 2014 01:30 PM PDT

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் தேதியுடன் தேர்வு முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை தேர்வுத்துறை இயக்கம் இன்று அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ...

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இந்தியா

Posted: 02 Apr 2014 01:27 PM PDT

ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், இலங்கையை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி கூடுதலாக ஐந்து புள்ளிகள் பெற்று 115 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா ஐந்து புள்ளிகள் குறைந்து 110 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு பின்தங்கியது. பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திர அஸ்வின் 6வது ...

தொகுதி நிலவரங்கள்

Posted: 02 Apr 2014 01:15 PM PDT

வேலைவாய்ப்புக்குத் துளியும் வழி இல்லாத மதுரை! # தொகுதியின் மிக முக்கியப் பிரச்சினை வேலைவாய்ப்பின்மை. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்துவிட்டுக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் மூன்று லட்சம். தொழிற்சாலைகளோ, பெரிய நிறுவனங்களோ இங்கே வரவில்லை. இதனால், மதுரையின் படித்த இளைஞர்கள் வேலை தேடி சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கோவை, திருப்பூர் என்று செல்கின்றனர். # படித்தவர்கள் வாழத் தகுதியற்ற ஊர்களில் ஒன்று மதுரை. செவிலியர்களில் ஆரம்பித்து, கல்லூரிப் பேராசிரியர்கள் வரை இங்கே உழைப்புக்கேற்ற ...

சாம்சங் நிறுவன தலைவர் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 02 Apr 2014 01:14 PM PDT

நிதி மோசடி வழக்கில், சாம்சங் நிறுவனத் தலைவர் லீ குன் ஹீ சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஜெசிஈ கன்சல்டன்சி நிறுவனம், சாம்சங் நிறுவனத் தலைவர் லீ குன் ஹீ மீது தொடர்ந்த பண மோசடி வழக்கில், நேரில் ஆஜராகாததால், அவருக்கு காசியாபாத் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதனை எதிர்த்து லீ குன் ஹீ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சி.கே.பிரசாத், பி.சி.கோஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் அளித்த ...

காங்கிரஸ்கார்... கவனிங்க சார்!

Posted: 02 Apr 2014 12:28 PM PDT

வரப்போகும் தேர்தலில் கூட்டணி சவாரி செய்ய முடியாமல் தனித்து விடப்பட்ட காங்கிரஸின் நிலை அந்தோ பரிதாபம். ஆகவே அவர்களுக்கு, வரும் தேர்தலில் பொழுதுபோக்க உருப்படியான டிப்ஸ்: தங்கள் கட்சி வேட்பாளர்கள் 40 பேரில் யாருக்கு டெபாசிட் தேறும் என்று பந்தயம் கட்டலாம். இப்படியான பந்தயம் காங்கிரஸ் வேட்பாளர்களையும் ஓரளவு உற்சாகப்படுத்தும்! காங்கிரஸ் கட்சி மீட்டிங்கிற்கு பிரியாணிக்குக்கூட கைதட்ட யாரும் வர மறுக்கும் சூழலில், காங்கிரஸ் வேட்பாளர்களின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு டிஜிட்டல் கைத்தட்டல் ...

25000 பதிவுகளைக் கடந்துள்ள ஈ-தலைவருக்கு வாழ்த்துகள்!

Posted: 02 Apr 2014 11:28 AM PDT



மப்பும் மந்தாரமுமாக 25000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரை தலைவர் ராஜசேகரனுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

30 வகை பொடிகள்

Posted: 02 Apr 2014 10:50 AM PDT

பருப்புப்பொடி தேவையானவை: துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ...

உறவுகளின் பாசத்தோடு சேர்ந்து ஏழாயிரம் மதிப்பீடுகளையும் அடைந்த நிறுவனர் சிவா அண்ணா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Posted: 02 Apr 2014 10:33 AM PDT

ஏழாயிரம் மதிப்பீடுகளுக்கு வாழ்த்துக்கள் அண்ணா....      

சகஸ்ர லிங்கம் சொல்லும் தத்துவம் என்ன ?

Posted: 02 Apr 2014 09:53 AM PDT

ஒரு லிங்கத்தில் ஆயிரம் லிங்கம் ! ஒரு லிங்கம் ஒரு பிரகிருதி - ஒரு நபர் ஆனால் அவரில் ஆயிரம் நபர்கள் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் ! லிங்கம் என்பது அருவம் + ரூபம் ! மனிதன் சரீரமான ரூபமாக இருந்தாலும் அவனுக்குள் அருபமாக இருந்து அவனை வாழவைப்பது உயிர் - ஆவி ! அருவமும் உருவமும் சேர்ந்தால் மட்டுமே வாழ்வு ! - ஒரு மனிதன் - ஒரு லிங்கம் ! ஒரு மனிதன் ஒரு செயலை செய்யும் போது அவன் மட்டுமே தனித்தவனாக அந்த செயலை செய்வதில்லை நல்ல செயல்களை செய்யும் போது அந்த மனிதனுடன் நற்செயல்களுக்கான ஆவி மண்டல சக்திகளும் ...

சின்னக்கண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted: 02 Apr 2014 09:31 AM PDT

சின்னக்கண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாளும் ஒரு "அழகின் அலை",அழகுற   அளிப்பது உனக்கு  கை வந்த  கலை   இரு திங்களாய்  ,இன்ப தேனை இருதயத்தில்  ஊற்றென எழுப்பி சௌந்தர்ய லஹிரியை சௌகரியமாய் புரிந்து  ரசித்திட, பழகு தமிழில் நூறை , வழங்க வந்த ஐம்பதே வாழ்த்துக்கள் உனக்கு, வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க. ரமணியன்

மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்!

Posted: 02 Apr 2014 09:21 AM PDT

ஒருமுறை வாழைத்தார் திருடியதாக ஒருவனைப் பிடித்து பாண்டியனார் முன்வந்து நிறுத்தினார்கள். அவனிடம், ""நீ ஏன் திருடினாய்... எத்தனை தார் திருடினாய்?'' என்று கேட்டார் பாண்டியனார். அதற்கு அந்தத் திருடன், ""ஐயா, பசிக்கொடுமை காரணமாகத் திருடிவிட்டேன். இனித் திருட மாட்டேன்'' என்று காலில் விழுந்து கதறினான். ""உன்னால் ஒரு நேரத்தில் எத்தனை தார் தூக்க முடியுமோ அதை எடுத்து வா'' என்று சொன்னார். வாழைத்தார் அடுக்கியிருந்த அறையில் இருந்து மூன்று தார்களைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தான் அவன். உடனே அவனிடம், ""இன்னும் ...

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Posted: 02 Apr 2014 09:13 AM PDT

ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ...

ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்

Posted: 02 Apr 2014 09:12 AM PDT

நீலகிரி: நீலகிரி தொகுதியில் 2 வது முறை எம்.பி.,யாக போட்டியிடும், முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா தனக்கு ரூ. 3 கோடியே 61 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர் சங்கரிடம் ராசா தனது வேட்பு மனுவை கொடுத்தார். இந்த மனுவில் அவர் காட்டியிருக்கும் சொத்து மதிப்பு விவரம் வருமாறு: அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ; ரூ. 3 கோடியே 61 லட்சம். கடன்- 33 லட்சம், செலுத்தப் படாமல் உள்ள வரி பாக்கி 25 லட்சம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அசையும் ...

பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை

Posted: 02 Apr 2014 09:09 AM PDT

பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
வாழ்த்திடுவோம்


இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்


ரமணியன்

நகைச்சுவை

Posted: 02 Apr 2014 09:06 AM PDT

1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு. சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்! வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு. சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன். 2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க? ராமு: தோலை உரிச்சுட்டாங்க... 3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற? மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு. 4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?'' மற்றவர்: என்னங்க ...

சிலியை குலுக்கியது நிலநடுக்கம்(8.2ரிக்.,) - 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Posted: 02 Apr 2014 08:09 AM PDT

சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியிருக்கும் இந்த நடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். தென்பசிபிக் கடல் ஒட்டிய சிலியின் இக்யூகியூ தீவு பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் இந்த நடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள் பெரும் பீதியுடன் வீதிகளுக்கு ...

ஈஸியா செய்யலாம் யோகா

Posted: 02 Apr 2014 07:42 AM PDT

தடாசனம் பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது கால்களை அரை அடி இடைவெளி விட்டு நிற்கவும். மெதுவாக குதிகால்களை உயர்த்தியபடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது. 10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும். இப்படி ஆறு முறை செய்யவும். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும். பலன்கள்: குதிகால் வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். கண்களுக்கு நல்லது. நினைவுத் திறன் அதிகரிக்கும். தொடர்ந்து செய்துவந்தால், உயரமாக வளரலாம். விரிக்சாசனம் பாய் ...

கணுக்கால் வலி குணமாக...!

Posted: 02 Apr 2014 07:40 AM PDT

தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும். மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது. கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை ...

ரூ.23 லட்சம் கோடி கருப்புப் பணம்! - மக்களவைத் தேர்தலையொட்டி ரகசியமாக திரும்புகிறது?

Posted: 02 Apr 2014 05:41 AM PDT

மக்களவைத் தேர்தலையொட்டி வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் நாடு திரும்பிவிட்டது என்று மும்பையில் உள்ள நிதி நிர்வாக நிபுணர்கள் கூறுகின்றனர். கருப்புப் பணம் இந்தியாவுக்குள் திரும்பி வருகிறது என்பதற்கு என்ன ஆதாரம் என்று அந்த வட்டாரங்களிடம் கேட்டபோது, பங்குச் சந்தையில் ஏற்படும் அர்த்தம் புரியாத எழுச்சி, ஹவாலா சந்தைகளில் காணப்படும் சுறுசுறுப்பு, தங்கக் கடத்தல் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் நாடு முழுக்க ஏற்பட்டுள்ள திடீர் சுறுசுறுப்பு ஆகியவைதான் ...

மு.முருகேஷ் கவிதைகள்

Posted: 02 Apr 2014 04:55 AM PDT

மழை இனிது - - உயிரின் அடிவேரையே அசைக்கிற காதலின் தீவிரத்தோடு கொட்டுகிறது மழை - பட்டாம்பூச்சி பார்க்க முடியா மரலற்ற செடிகளுடன் கூடிய மழைநாளின் ஈரச் சலிப்புகள் தொடர்ந்தாலும் உள்ளுக்குள் உணர முடிகிறது. - வெயியினும் மழை இனிது - ------------------------------------ - >மு.முருகேஷ் குழந்தைகள் ஊருக்குப் போய் விட்டன (கவிதைகள்)

கழுத்து வலி

Posted: 02 Apr 2014 04:37 AM PDT

நீண்ட நாள் கழுத்து வலி. மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை. மருந்துடன் இயற்கை முறையில் என்ன சாப்பிடலாம்?

Medical Term : Cervical Spondilitis

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 02 Apr 2014 04:11 AM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}

Posted: 02 Apr 2014 04:10 AM PDT

சிறுவர் புத்தகம் எழுதுங்கள்…!!{ சிறுவர் பாடல் } * சின்னச் சின்னக் குழந்தைகள் சிரித்து சிரித்துப் படிக்கணும் சிந்தனைக்கு விருந்தாகும் சித்திரப் புத்தகம் எழுதுங்கள் * குடும்ப உறவை வளர்த்திடும் பண்பு நெறிகள் பழகணும் மனஇயல்பைப் பேணிடும் உளவியல் புத்தகம் எழுதுங்கள். * அறிவியல் தகவல் தொழில்நுட்பம் கணினிக் கல்விக் கற்கணும் சிலிர்க்க வைக்கும் சாதனைகள் விளக்கும் புத்தகம் எழுதுங்கள் * அறிவை மெல்ல தூண்டிடும் விளையாட்டுக் கல்விப் படிக்கணும் ஆடிப்பாடிக் களி்க்க வைக்கும் மன வளர்ச்சிப் ...

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

Posted: 02 Apr 2014 03:04 AM PDT

1. அறம் செய விரும்பு 2. ஆறுவது சினம் 3. இயல்வது கரவேல் 4. ஈவது விலக்கேல் 5. உடையது விளம்பேல் 6. ஊக்கமது கைவிடேல் 7. எண் எழுத்து இகழேல் 8. ஏற்பது இகழ்ச்சி 9. ஐயம் இட்டு உண் 10. ஒப்புரவு ஒழுகு 11. ஓதுவது ஒழியேல் 12. ஒளவியம் பேசேல் 13. அகம் சுருக்கேல் 14. கண்டொன்று சொல்லேல் 15. ஙப் போல் வளை 16. சனி நீராடு 17. ஞயம்பட உரை 18. இடம்பட வீடு எடேல் 19. இணக்கம் அறிந்து இணங்கு 20. தந்தை தாய்ப் பேண் 21. நன்றி மறவேல் 22. பருவத்தே பயிர் செய் 23. மண் பறித்து உண்ணேல் ...

எனது கவிதைகள்

Posted: 02 Apr 2014 02:19 AM PDT

மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு

Posted: 01 Apr 2014 10:51 PM PDT

மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு. மலேசிய இந்தியர்கள் அதிருப்தி.

மலேசியாவிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு விசா வழங்கும் உரிமத்தை இந்திய தூதரகம் ஐவிஎஸ் குளோவல் சர்விஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இந்தியாவிற்கு செல்லும் விசாவிற்கு 10 விரல் கைரேகை பதிவுமுறையை நேற்று முதல் இந்நிறுவனம் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தக் கைரேகைப் பதிவு முறை மலேசிய இந்தியர்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்! மலேசிய தரிசனம்!

Posted: 01 Apr 2014 10:44 PM PDT

விளக்கின் அடியில் அவ்வளவாக வெளிச்சம் இருக்காது. அந்த விளக்கில் இருந்து சற்று தொலைவில்தான் அதன் ஒளி வெள்ளம் பாய்ந்து பிரகாசிக்கும். சாதாரண விளக்குக்கே இப்படியென்றால், ஞான விளக்குக்கு..? உலகுக்கே 'கீதை' என்னும் ஞான தீபத்தை ஏற்றி உயரே தூக்கிப்பிடித்த கீதாசார்யனுக்கு, கீதை தோன்றிய நம் நாட்டிலோ அல்லது உலகிலேயே வேறெங்குமோ இல்லாத அளவுக்கு, பிரமாண்டமானதொரு கீதோபதேச சிலையை மலேசியாவில் நிறுவி இருக்கிறார்கள். மலேசியா என்றதுமே, ஆகாயம் அளாவ நிற்கும் பத்துமலை முருகன்தான் நம் நினைவுக்கு வருவார். இப்போது ...

கோவை கோனியம்மன் கோயில்

Posted: 01 Apr 2014 10:41 PM PDT

நினைத்ததை நிறைவேற்றும் செவ்வரளி மாலை வழிபாடு! கோவை கோனியம்மன் கோயில் எங்கே இருக்கிறது? கோவை நகரில் அமர்ந்து, கொங்கு தேசத்துக்கே காவல் தெய்வமாக, வீரசொரூபிணியாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீகோனியம்மன். கோயம்புத்தூரில் இருந்து உக்கடம் செல்லும் வழியில், சுமார் 4 கி.மீ. தொலைவில், டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், ஆலயத்தை அடையலாம். ஸ்தல வரலாறு கொங்கு மண்டலத்தை கோவன் எனும் மன்னன் ஆட்சி செய்ததால், இந்தப் பகுதி கோவன்புத்தூர் எனும் பெயர் வந்தது. இதுவே, பின்னாளில் கோயம்புத்தூர் என மருவியது. ...

11 சிறப்புகள்...

Posted: 01 Apr 2014 10:36 PM PDT

பஞ்சாங்கக் குறிப்புகள்

Posted: 01 Apr 2014 10:30 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™