Daily Thanthi |
- பணிந்தார் மம்தா; தேர்தல் கமிஷனின் உத்தரவின்படி அதிகாரிகளை மாற்ற மேற்குவங்க அரசு சம்மதம்
- கறுப்பு பெட்டியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிப்பு, சிக்னல் தொடர்ந்து கேட்கவில்லை - ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட்லீ 2–வது திருமணம் காதலியை மணந்தார்
- ஓட்டு சேகரிக்க சென்ற எம்.எல்.ஏ.வை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த பொதுமக்கள்
- அதிகாரிகள் இடமாற்றம் விவகாரம்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் மம்தா பானர்ஜி
- சரக்கு வாகனத்தில் கடத்திய 1,824 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்
- வரதட்சணை கொடுமை: பெண் உயிருடன் எரித்து கொலை; கணவர் கைது மேலும் 4 பேர் மீது வழக்கு
- கொளுத்தும் வெயிலில் நடிகை நக்மா பிரசாரம்
- சோமாலியாவில் ஐ.நா. ஆலோசகர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
- ரஜினியுடன் நடிக்கிறேன் சோனாக்ஷி சின்கா
| பணிந்தார் மம்தா; தேர்தல் கமிஷனின் உத்தரவின்படி அதிகாரிகளை மாற்ற மேற்குவங்க அரசு சம்மதம் Posted: 08 Apr 2014 09:03 AM PDT கொல்கத்தா, ஐந்து போலீஸ் சூப்பிரண்டுகள், ஒரு மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய கமிஷன் உத்தரவிட்டது. ஆனால் மாநில அரசு அதனை நிராகரித்துவிட்டது. தொடர்ந்து அரசு தேர்தல் ஆணையத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டது. தேர்தல் ஆணையம் அதிகாரிகளை மாற்ற இன்று பிற்பகல் 2:30 மணி வரையில் கால அவகாசம் வழங்கியது. இந்நிலையில் மேற்குவங்க அரசு தேர்தல் ஆணையம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. 8 அதிகாரிகளையும் மாற்றுவது தொடர்பான தேர்தல் ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேற்குவங்க அரசின் தலைமை செயலாளர் மாநில தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதினார். தேர்தல் கமிஷ்ன் நேற்று மேற்கண்ட அதிகாரிகளை நீக்க நேற்று உத்தரவு பிறபித்தது. மேலும், அவர்களுக்கு பதிலாக யாரை நியமிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் மாநில அரசுடன் ஆலோசிக்காமல் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அதிகாரிகளை நீக்கியும், மாற்று அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளது என்று தலைமை செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மாநில தலைமை செயலாளரின் இந்த கடிதத்தை தலைமை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். தேர்தல் கமிஷ்ன் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய அரசுக்கு நாளை காலை 10 மணி வரையில் கூடுதல் அவகாசம் வழங்கியது. தேர்தல் கமிஷன் தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க மூத்த அதிகாரிகளின் அவசர கூட்டத்திற்கு மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. தேர்தல் ஆணையத்திற்கு பணிந்த மம்தா கமிஷன் உத்தரவை ஏற்றுக் கொண்டார். தேர்தல் கமிஷனின் உத்தரவின்படி அதிகாரிகளை மற்ற மேற்குவங்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தேர்தல் முடிந்ததும் அதிகாரிகள் மீண்டும் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. image: News Group Category: |
| கறுப்பு பெட்டியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிப்பு, சிக்னல் தொடர்ந்து கேட்கவில்லை - ஆஸ்திரேலியா Posted: 08 Apr 2014 08:41 AM PDT பெர்த், மாயமான 'மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச் 370' விமானத்தின் கதி, ஒரு மாதமாகியும் இன்னும் உறுதிபடத் தெரியவில்லை. இந்த விமானத்தில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உள்பட 239 பேரது குடும்பங்களும், தங்கள் குடும்ப உறுப்பினரின் கதி தெரியாமல் கலங்கிப்போய் உள்ளனர். அந்த விமானம் கடந்த 8–ந் தேதி அதிகாலை 2.40 மணிக்கு நடுவானில் மாயமானபோது நடந்தது என்ன, விமானி அறையில் என்ன பேசப்பட்டது என்பதையெல்லாம் ஒலிப்பதிவு செய்துள்ள விமானத்தின் கறுப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. அதில் உள்ள பேட்டரி ஒரு மாத காலமே இயங்கும் என்பதால் அதன் ஆயுட்காலம் முடிந்துவிடக்கூடும். எனவே அந்த கறுப்பு பெட்டியை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய பெருங்கடல் பகுதியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டன. இந்நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியேறும் சமிக்ஞை(சிக்னல்) இந்திய பெருங்கடலின் தெற்குப் பகுதியில் தொடர்ந்து கிடைப்பதாக ஆஸ்திரேலிய விமானப்படை தெரிவித்தது. இதனையடுத்து தொடர்ந்து விமானத்தின் பாகங்களையும், கறுப்பு பெட்டியையும் தேடும் தீவிர முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்களோ, விமானத்தின் நொறுங்கிய பாகங்களோ இதுவரை கிடைக்காததால் விமானத்தின் கறுப்பு பெட்டியைத் தேடும் பணி 2 அதிநவீன கப்பல்கள் மூலம் தொடர்ந்து நடந்து வருகிறது. விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து அவ்வப்போது சிக்னல் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் கப்பல்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் ஓசன் ஷீல்டுக்கு கிடைத்தது. தற்போது இந்த சிக்னல் போய்விட்டது. இது குறித்து விமானத்தின் கறுப்பு பெட்டியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஆங்குஸ் ஹவுஸ்டன் கூறுகையில், கடலின் அடிப்பகுதியில் இருந்து இதுவரை கிடைத்து வந்த அதிர்வு ஒலிகள் தற்போது கிடைக்கவில்லை. எனினும் விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும். கறுப்பு பெட்டியின் பேட்டரி விரைவில் காலாவதியாகி விடலாம் என்பதால் அதற்குள் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நம்பிக்கையுடன் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார். image: category:News Group Category: |
| ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட்லீ 2–வது திருமணம் காதலியை மணந்தார் Posted: 08 Apr 2014 08:26 AM PDT மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ. 37 வயதான பிரெட்லீ 2012–ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பிரெட்லீ 2006–ம் ஆண்டு எலிசபெத் கெம்ப் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதே ஆண்டில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு 'பிரிஸ்டோன்' என்று பெயர் சூட்டினர். ஆனால் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து 2009–ம் ஆண்டு கெம்ப்பிடம் இருந்து லீ விவாகரத்து பெற்றார். இதன் பின்னர் சிறிது காலம் கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய பிரெட்லீ, லானா ஆண்டர்சன் என்ற பெண்ணின் காதல் வலையில் விழுந்தார். இவர்கள் நெருங்கி பழகுவது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. இருவரும் ஒன்றாக கைகோர்த்து ஒரு விழாவில் முத்தமிட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரெட்லீ தனது காதலி 29 வயதான லானா ஆண்டர்சனை திருமணம் செய்து கொண்டது இப்போது தெரியவந்துள்ளது. சிட்னியின் சீபோர்த்தில் உள்ள அவரது புதிய வீட்டில் தனிப்பட்ட முறையில் நடந்த நிகழ்ச்சியில் நெருங்கியவர்களின் முன்னிலையில் பிரெட்லீ, லானாவை கரம் பிடித்தார். 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருந்த பிரெட்லீயை இந்த ஆண்டு எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging:News Group Category: |
| ஓட்டு சேகரிக்க சென்ற எம்.எல்.ஏ.வை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த பொதுமக்கள் Posted: 08 Apr 2014 08:17 AM PDT தாராபுரம், ஈரோடு பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வக்குமார சின்னையனை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பள்ளபாளையம் கிராமத்திற்கு பொன்னுசாமி எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர் களுடன் சென்றார். அப்போது பள்ளபாளையம் கிராமத்தை சிலர் கிராம எல்லையில் பொன்னுசாமி எம்.எல்.ஏ.வை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, எம்.எல்.ஏ.விடம் நல்லதங்காள் நீர்தேக்கத்தில் இருப்பு வைத்திருந்த தண்ணீரை திறந்து விட்டதால் எங்கள் ஊருக்கு ஓட்டுகேட்க வரக்கூடாது. மேலும் எங்கள் ஊரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திரும்பிச் செல்லுங்கள் என்றனர். இதனால் அந்த பகுதியில் ஓட்டு சேகரிக்க முடியாமல் பொன்னுசாமி எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்க ளுடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார். image: category:News Group Category: |
| அதிகாரிகள் இடமாற்றம் விவகாரம்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் மம்தா பானர்ஜி Posted: 08 Apr 2014 07:59 AM PDT கொல்கத்தா, ஐந்து போலீஸ் சூப்பிரண்டுகள், ஒரு மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் மேற்குவங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் மாநில அரசு அதனை நிராகரித்துவிட்டது. தொடர்ந்து அரசு தேர்தல் கமிஷனுடன் மோதல் போக்கை கடை பிடித்தது. இதனையடுத்து தேர்தல் கமிஷ்ன், அதிகாரிகளை மாற்ற இன்று பிற்பகல் 2:30 மணி வரையில் கால அவகாசம் வழங்கியது. இந்நிலையில் மேற்குவங்க அரசு தேர்தல் ஆணையம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியது. இந்நிலையில் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய அரசுக்கு நாளை காலை 10 மணி வரையில் தேர்தல் கமிஷ்ன் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க மூத்த அதிகாரிகளின் அவசர கூட்டத்திற்கு மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. image: News Group Category: |
| சரக்கு வாகனத்தில் கடத்திய 1,824 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் Posted: 08 Apr 2014 07:45 AM PDT தலைவாசல், வெளிமாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு போலி மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரை சுங்கச்சாவடியில் அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மற்றும் அதை பின்தொடர்ந்து வந்த கார் ஆகியவற்றை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால், அந்த 2 வாகனங்களும் நிற்காமல் சென்றது. உடனே போலீசார், அந்த வாகனங்களை பின்தொடர்ந்து ஜீப்பில் விரட்டிச்சென்றார்கள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க இந்த போலி மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அல்லது தேர்தலையட்டி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். image: category:Tagging:News Group Category: |
| வரதட்சணை கொடுமை: பெண் உயிருடன் எரித்து கொலை; கணவர் கைது மேலும் 4 பேர் மீது வழக்கு Posted: 08 Apr 2014 07:32 AM PDT சிக்மகளூர், கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். வரதட்சணை கொடுமை சிக்மகளூர் மாவட்டம் சக்கராயபட்டணா தாலுகாவை சேர்ந்தவர் மோகன்குமார்(வயது 25). இவருக்கும், ஹாசன் மாவட்டம் கெரேசாவே கிராமத்தை சேர்ந்த சிக்கேகவுடா மகள் பிந்துவுக்கும்(22) கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பிந்துவின் பெற்றோர் வரதட்சணையாக ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும், 10 பவுன் தங்க நகைகளும் மணமகன் வீட்டினரிடம் கொடுத்தனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மோகன்குமாரும், அவரது குடும்பத்தினரும் கூடுதலாக ரூ.1 லட்சம் பணத்தை வரதட்சணையாக வாங்கி வரும் படி பிந்துவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். உயிருடன் தீவைப்பு அதேபோல் நேற்று மோகன்குமாரும், அவரது குடும்பத்தினரும் கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி பிந்துவிடம் கூறியுள்ளனர். ஆனால் பிந்து வரதட்சணை வாங்கி வர முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன்குமார், அவரது குடும்பத்தினரும் பிந்து மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில் தீக்காயமடைந்த பிந்து அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பிந்துவை மீட்டு சிகிச்சைக்காக சிக்மகளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கணவர் கைது இந்த நிலையில் நேற்று மாலை பிந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கு தொடர்பாக சக்கராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். முன்னதாக பலியான பிந்து கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார், அவரது கணவர் மோகன் குமாரை கைது செய்தனர். மேலும் மோகன் குமார் தாய் புட்டகவுரம்மா, அக்கா பிரமிளா, தங்கைகள் பேபி, பாக்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். image: category:News Group Category: |
| கொளுத்தும் வெயிலில் நடிகை நக்மா பிரசாரம் Posted: 08 Apr 2014 07:18 AM PDT |
| சோமாலியாவில் ஐ.நா. ஆலோசகர்கள் 2 பேர் சுட்டுக்கொலை Posted: 08 Apr 2014 07:10 AM PDT பின்லேண்ட், சோமாலியா நாட்டில் உள்ள பின்லேண்ட் பகுதிக்கு கடும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கி வரும் 2 ஆலோசகர்கள் சென்றனர். கல்கயோ விமானநிலையத்தில் விமானத்தில் இருந்து அவர்கள் இறங்கியவுடன் அங்கிருந்த காவலர் ஒருவர் திடீரென இருவரையும் துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர், மற்றொருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இதுசம்பந்தமாக காவலரையும், அவரது கூட்டாளி ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். image: category:Tagging:News Group Category: |
| ரஜினியுடன் நடிக்கிறேன் சோனாக்ஷி சின்கா Posted: 08 Apr 2014 07:05 AM PDT மும்பை, 'கோச்சடையான்' படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் இணையதளங்களில் கலக்கி வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ள படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு என்றும் அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்கா என இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ரஜினியுடன் நடிக்கும் படத்தினால் தனது தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவதாக, இந்தி திரையுலகின் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்கா கூறியுள்ளார். இது தொடர்பாக சோனாக்ஷி சின்கா அளித்துள்ள பேட்டியில் "ஒரு வழியாக தென்னிந்திய மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். எனது முதல் படமே சிறந்த படமாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரஜினி சாருக்கு ஜோடியாக ஒரு நல்ல கதையில் நான் நடிக்க இருக்கிறேன். இப்படத்தினைத் தொடர்ந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
